கண்ணீர் - 11
கணேஷன் தந்துவிட்டு போன சாப்பாட்டை மேஜையில் வைத்தவளுக்கு சாப்பிடும் மனநிலை கொஞ்சமும் இருக்கவில்லை, அவளும் வந்து படுத்துவிட்டாள், நேற்று அவள் இருந்த நிலை என்ன? இப்போது இருக்கும் நிலை என்ன? சில மணி நேரத்தில் அவள் வாழ்க்கை எப்படி மாறி போய் இருக்கிறது, நினைக்க நினைக்க அழுகை தான் வந்தது, தன் திருமணத்திற்கு பிறகாவது சித்ராவை தொந்திரவு செய்ய கூடாது என்ற எண்ணத்தில் இருந்தவளுக்கு, நடந்த சம்பவத்தை ஜீரணிக்கவே முடியவில்லை, கண்ணீர் வடிந்தது, அவளால் இப்போது அழ மட்டும் தானே முடியும், தன் வேதனையையும் வலியையும் எப்படி போக்கிக் கொள்வது என்று தெரியவில்லை, அதனால் அழுது தான் தன் மனவேதனையை குறைத்துக் கொண்டாள்,...
அழுது களைத்து போனவள், அவளையும் அறியாமல் தூக்கத்தை தழுவினாள், அடித்து போட்டது போல் உறங்கியவள் எழும் போது மணி இரவு ஒன்பதை காட்டியது, மணியை பார்த்த பின்னால் அவளுக்கு அதிர்ச்சி, 'இவ்வளவு நேரம் தூங்கிவிட்டேனா' எனும் முணங்களுடன் எழுந்து முகம் கழுவி வந்தவளுக்கு, டேபிளின் மீதிருந்த சாப்பாடு கண்ணில் பட, மேலே மூடியிருந்த தட்டை விலக்கி அதனை திறந்தாள், சாப்பாடு வீணாகி விட்டதை அதிலிருந்து வெளிப்பட்ட வாடை எடுத்துரைக்க, அவளுக்கு வருத்தமாக இருந்தது, அவள் சாப்பாட்டை வீணடிக்க மாட்டாள், வறுமையில் வளர்ந்தவளுக்கு சாப்பாட்டின் அருமை நன்றாகவே தெரியும், இன்று, தான் சாப்பாட்டை வீணாக்கியதை எண்ணி மிகுந்த வருத்தம், தன் மீதே கோபம், பிறகு அதனை கையில் எடுத்துக் கொண்டு பெரிய தயக்கத்துடன் அறைக்கதவை திறந்து வெளியே மெல்லமாய் எட்டி பார்த்தாள், மயான அமைதியாக இருந்தது,...
சாப்பாட்டை கொட்டி விட்டு வரலாம் எனும் நோக்கில் கிச்சனை நோக்கி நடந்தாள், அவள் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் அவ்வளவு பயம், ஆரவ் வந்து விடுவானோ எனும் பயம், அவள் அங்கிருந்த குப்பை தொட்டியில், சாப்பாட்டை கொட்டிவிட்டு, தட்டை சிங்கில் கழுவிக்கொண்டிருந்த நேரம்,... "சாப்டியா நித்திலா" எனும் குரலில் திரும்பினாள்,
சித்ரா தான் நின்று கொண்டிருந்தார், அவரும் அப்போது தான் தூங்கி எழுந்து வந்திருந்தார், தூங்கி எழுந்த பிறகு மனதும் உடலும் புத்துணர்வாகிய உணர்வு அவருக்கு, அவரும் காலையில் இருந்து எதுவும் சாப்பிடாததால் பசி வயிற்றை கிள்ள, சாப்பிடுவதற்காக டைனிங் அறைக்கு வந்தவர், நித்திலா கிச்சனில் நின்றிருப்தை கவனித்து, அவளருகில் வந்து விசாரித்திருந்தார்,..
"இல்ல மேடம்,.." என்று சொன்னவளிடம்,... "வா சாப்பிடலாம்" என்று கூறி டைனிங் அறைக்கு நடந்தார் சித்ரா,.. "இல்ல மேடம், எனக்கு பசிக்கல" என்றவளை சோர்வுடன் நோக்கியவர்,... "நீயும் என்னை வருத்த படுத்தாத நித்திலா ப்ளீஸ்" என்று இறைஞ்சலுடன் கேட்டுக் கொள்ள, அவளுக்கு ஒரு மாதிரியாகி விட, அதற்கு மேல் மறுத்து பேசாமல் டைனிங் டேபிளில் வந்து அமர்ந்து விட்டாள்,..
கணேசன் இரவு உணவை ஹாட்பேக்கில் வைத்து விட்டு கிளம்பியிருந்தார், இருவரும் ஆளுக்கொரு தட்டில் போட்டு தங்கள் இரவு உணவை முடித்துக் கொண்டனர், சாப்பிட்டு முடிக்கும் வரை இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை, சித்ராவிற்கு மகன் என்ன செய்கிறானோ என்ற கவலை இருந்தாலும், அவனை போய் தொந்திரவு செய்யவில்லை, அவருக்கு சுகர் இருப்பதால் சாப்பிடாமல் இருக்க முடியாது, பகல் சாப்பிடாமல் இருந்ததற்கே தலை சுற்ற ஆரம்பித்து விட்டது, எனவே அவர் தன் உடலை வருத்திக் கொள்ள விரும்பாமல் தான் சாப்பிட வந்திருந்தார்,...
உணவுண்டு முடித்ததும்,.. "நான் ரூமுக்கு போறேன் நித்திலா" என்று கூறி சித்ரா மீண்டும் அறைக்கே சென்று விட்டார், அவர் இன்னமும் இயல்பான மனநிலைக்கு திரும்பவில்லை, மகனின் சம்மதத்தையும் மீறி அவனை வற்புறுத்தி மிரட்டி இந்த கல்யாணத்தை செய்து முடித்திருக்கிறார், மனம் நெருட தான் செய்தது, அவரும் வேண்டுமென்று எதுவும் செய்யவில்லையே, வேறு வழியின்றி தானே செய்தார்,
மகன் இதனை ஏற்றுக்கொள்ளும் வரையில் அவரால் நிம்மதியாக இருக்க முடியாது, அவர் மகனும் இதனை அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்றுக் கொள்ள மாட்டான் எனும் நிதர்சனமும் உரைத்தது, இதற்கு பிறகு நடக்கும் அனைத்தும் கடவுள் விட்ட வழி என்று அவனே மனம் மாறும் வரைக்கும் அவனை தொந்திரவு செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்து விட்டார்..
சித்ரா சென்றதும் நித்திலாவிற்கு வெளியே இருக்கவே பயமாக இருந்தது, அதனால் அவளும் தனக்கு கொடுத்த அறைக்கே திரும்பி விட்டாள், நன்றாக உறங்கி விட்டதால் உறக்கமும் வராது, எனவே ஜன்னலில் வெளியே தெரிந்த நிலவினை பார்த்துக் கொண்டிருந்தாள், ஏதாவது வேலை இருந்தாளாவது செய்து கொண்டிருக்கலாம், வேலையும் இருக்கவில்லை,
கணேஷன் வழக்கம் போல் இரவு உணவை முடித்து விட்டு, தன் வீட்டிற்கு புறப்பட்டிருந்தார், அவரும் நடந்ததை வைத்து நடப்பை யூகித்து விட்டார், ஆனால் வெளியே எதுவும் காட்டிக் கொள்ளவில்லை, அந்த வீட்டில் என்ன நடந்தாலும் அவர் கண்டும் காணாமல் இருந்து விடுவார், இன்றும் அப்படி தான் நடப்பை புரிந்து கொண்டவருக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், தான் பாட்டிற்கு இருந்து விட்டார்,...
நித்திலாவிற்க்கு அடுத்து தன் வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்பதை நினைக்கும் போதே அவ்வளவு பயமாக இருந்தது, சித்ரா அவளுக்கு தூணாக இருந்தாலும் ஆரவ்வை பற்றின பயம் அவள் உடலை நடுங்க வைத்தது என்னவோ உண்மை தான், தன் எதிர்காலத்தை
எண்ணி பீதியடைந்தவளுக்கு திடீரென்று தொண்டை வறண்டு இருமல் வர, தொண்டையை பிடித்துக் கொண்டு இருமியவளுக்கு தண்ணீர் தேவையாக இருந்தது, அவ்வறையில் தண்ணீர் இல்லாததால் அவள் சமையலறைக்கு தான் சென்றாக வேண்டும்,
எனவே தண்ணீர் குடித்து வரலாம் என்று அறைக்கதவை திறந்து வெளியேறியவள் டைனிங் ஹாலை தாண்டி தான் சமையலறைக்கு செல்ல வேண்டும், அவள் அறையிலிருந்து ஒரு வளைவு போல் இருக்கும் இடத்தை கடந்து சில அடிகள் நடந்தாலே டைனிங் அறையை சற்று தொலைவிலிருந்தே பார்க்க முடியும், அவள் தன் அறையின் வளைவை கடந்த கணமே அவள் கால்கள் ஸ்விட்ச் போட்டது போல் நின்று விட்டது டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆரவ்வை கண்டு,...
அவனை கண்டதுமே அவளுக்கு கண் விழிகளெல்லாம் பிதுங்கி விட்டது, அவனை கண்ட அதிர்ச்சியில் ஒருகணம் அதிர்ந்து நின்றவள், மறுகணமே தன்னை சமன்செய்து கொண்டு வந்த வழியே தன் அறைக்கு ஓடி விட்டாள்,...
இங்கு அவள் வந்ததை அறியாமல் தன் வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தான் ஆரவ், காலையில் நடந்த திருமணத்தால் மிகவும் ஆக்ரோஷத்தில் கண் மண் தெரியாமல் நடந்து கொண்டவன், தாய் தன்னிடம் வந்து பேசிவிட்டு புறப்பட்டதும், தன்னையும் அறியாமல் தூங்கி போயிருந்தான்,
அப்போது தூங்கியவன், ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தான் விழித்தான், அவனால் நடந்ததை இன்னமும் ஜீரணிக்க முடியவில்லை, தாயின் மீது கோபம் எழுந்தாலும் அவனால் அவர் மீது கோபத்தையும் காட்ட முடியவில்லை, அவனால் நித்திலாவை ஒரு போதும் தன் மனைவியாக ஏற்றுக் கொள்ளவும் இயலாது, எனவே ஒரு மணி நேரம் ஆழ்ந்து யோசித்தவன் அவளை வீட்டை விட்டு விரட்ட வேண்டும் என்ற முடிவை எடுத்தான்,...
சித்ராவை எதிர்த்து அவனால் அவளை விரட்டியடிக்க முடியாது, ஆனால் அவளே முன் வந்து வெளியே போனால் சித்ராவால் தடுக்க முடியாது என்றே தோன்றியது,.. 'நான் கொடுக்கும் டார்ச்சரில் அவள் அம்மா கிட்ட கூட சொல்லாம ஓட போறா, ஓட வைக்க போறேன்' என்று வில்லத்தனமான சிரிப்பொன்றை வெளியிட்டவனுக்கு, மனதிலிருந்த கோபமும் கவலையும் குறைந்த உணர்வு, மனம் ஒரு நிலைக்கு திரும்பிய பிறகு தான் வயிறு பசியில் கத்திக் கொண்டிருந்ததையும் உணர்ந்தான், அவனுக்கு பசியில் வாட அவசியம் என்ன வந்தது, எனவே சாப்பிட வந்து விட்டான், சாப்பிடும் நேரத்தில் கூட அவளை எப்படியெல்லாம் டார்ச்சர் செய்யலாம் என்பதை பற்றி தான் அசை போட்டுக் கொண்டிருந்தான்,...
ஆரவ்வை கண்ட பயத்தில் தனது அறைக்குள் வந்து புகுந்து கொண்டவளோ, மறக்காமல் தாழ்ப்பாளையும் போட்டுக் கொண்டாள், சித்ராவும் வேறு அறையில் இருக்க, தனியாக அவனிடம் மாட்டிக் கொண்டால் நிச்சயம் தனக்கு சங்கு தான் என்பது அவளுக்கு புரியாமல் இருக்குமா என்ன?
முகமெல்லாம் வியர்த்து வடிந்தது, அவனை கண்டதும் ஒருவித பதட்டம் அவளை போட்டு ஆட்டுவித்தது, ஒரு நாளிலேயே இப்படியென்றால் இனி வரும் தினங்களில் யாவும் எப்படி அவனிடமிருந்து தப்பிக்க போகிறோம் என்ற பயம் அவள் முதுகை சில்லிட செய்தது,..'மேடம் இருக்காங்க, அவங்க இருக்கும் போது எனக்கு என்ன பயம்' என்று அவள் தன்னை தானே தேற்றிக் கொண்டாலும், அவள் பயத்தை அவளால் அடக்க முடியவில்லை, அழுகையும் வந்தது, தப்பிக்க முடியாத காட்டில் சிக்கிக் கொண்டது போல் இருந்தது, தலகாணியை இறுக அணைத்துக் கொண்டு, உடலை குறுக்கி படுத்துக் கொண்டவளின் நிலையோ பார்க்க பரிதாபமாக இருந்தது,
ஏன் இவளுக்கு இப்படியொரு நிலை?? அழகான குருவி கூட்டிற்குள் தன் தாய் தந்தையுடன் வாழ்ந்து கொண்டிருந்த சிறு பெண்ணுக்கு ஏன் இப்படியெல்லாம் நடக்க வேண்டும், நடந்த விபத்தில் அவளது தாயோ தந்தையோ ஒருவர் மீண்டு வந்திருந்தாளாவது அவள் வாழ்க்கை வேறு விதமாக அமைந்திருக்குமே, சித்ரா அவளுக்கு படிப்பு, பணம், வேலையெல்லாம் கொடுத்து பத்திரமாக பார்த்துக் கொண்டாலும், அவள் தாய் தந்தை இருந்திருந்தால் அவள் வாழ்க்கை அழகாக நிம்மதியாக இருந்திருக்குமே, இப்போது நடந்த திருமணம் போல் நடந்திருந்தாலும் கூட அவளுக்கு பக்க பலமாக அவள் தாயோ தந்தையோ இருந்திருப்பார்களே, யாரும் இல்லா அநாதையாய் கிடந்து பயந்து தவிக்கும் இந்த சிறு பெண்ணுக்கு ஆறுதலான துணை இருந்திருக்குமே, இதற்கு தான் சொல்வார்களோ சிறு வயதில் தாய் தந்தையை இழப்பது நரக வேதனைக்கு சமம் என்று, இனி நித்திலாவின் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்க போகிறது? ஆரவ்வின் துன்புறுத்தலை தாங்க இயலாமல் பெண்ணவள் வீட்டை விட்டு வெளியேறுவாளா? அல்லது அனைத்தையும் தாங்கிக்கொண்டு அவன் காலடியில் விழுந்து கிடப்பாளா? இல்லை அவனை எதிர்த்து அவனோடு சரிசமமாய் நிற்க போகிறாளா? இனி வரும் அத்தியாயங்களில் காணலாம்,...