• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் - 12

Zeeraf

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 23, 2025
73
25
18
India
கண்ணீர் - 12

அடுத்த நாள் நித்திலா எழும் போது காலை ஆறு ஐம்பதை காட்டியது, எழத் தோன்றாமல் படுக்கையிலேயே கிடந்தவளுக்கு மனமுழுக்க பயமும் வேதனையும் மட்டுமே, ஆரவ்வை பற்றி நினைத்தாலே அவள் தைரியமெல்லாம் எங்கோ காணாமல் போய் பயம் வந்து அப்பிக் கொள்கிறது, பயத்திலேயே தன் வாழ்க்கை கடக்க போகிறதா? நினைக்கும் போதே கலக்கமாக இருந்தது, மணி ஏழாகி விட்டதை உணர்த்தும் விதமாய், கடிகாரம் ஒலியெழுப்ப, அதற்கு மேல் படுத்தே கிடப்பது சரியில்லை என்பதை உணர்ந்து, எழுந்து கொண்டாள், அவள் மாற்றுவதற்கு வேறு உடை வேண்டும், சித்ராவிடம் தான் போய் கேட்க வேண்டும், எனவே,... சித்ராவை பார்க்க அறையிலிருந்து வெளி வந்தவளின் விழிகளில் பட்டது அறையின் ஓரத்தில் இருந்த ஒரு பெட்டி, அது அவள் வீட்டில் உள்ள பெட்டி என்பதை பார்த்ததும் அறிந்து கொண்டவள், அதனை திறந்து பார்த்தாள், அவள் உடைகள் இருந்தது,...

நேற்றே சித்ரா அவளது உடைகளை எடுத்து வர ஆளை அனுப்பி இருப்பதாக சொல்லியிருந்தது நினைவுக்கு வர, இது அவரது வேலை தான் என்பதை புரிந்து கொண்டவள், அதிலிருந்த ஒரு உடையை எடுத்துக் கொண்டு, குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள்...

குளித்துவிட்டு வந்தவள், தலையை உலர்த்தி, பின்னிவிட்டு அங்கிருந்த நிலைக் கண்ணாடியின் முன்பு வந்து நின்றாள், எப்போதும் போல் அணியும் சாதாரண காட்டன் சுடிதார் தான் அணிந்திருந்தாள், ஆனால் இதற்கு முன்பு பார்த்த தன் நிலைக்கும், இப்போது பார்க்கும் நிலைக்கும் நிறைய வித்தியாசம் இருப்பது போல் இருந்தது, அந்த வித்தியாசம் அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த மஞ்சள் கயிறினால் வந்தது என்பதும் அவளுக்கு புரிந்தது, அந்த கயிறு அவள் கழுத்தில் அதிக பாரத்தை கொடுக்கும் உணர்வு, அதனை கழட்டி எரிந்து விட்டு, எங்காவது ஓடிப் போய்விடலாமா எனும் ஆவேசம் வந்தது, அப்படி செய்தால் அது சித்ராவிற்கு செய்யும் துரோகமாக போய் விடுமே என்ற காரணத்திற்காக மட்டுமே மனதை சமாதான படுத்திக் கொண்டாள்,...

அடுத்து என்ன வேண்டுமென்றாலும் நடக்கட்டும், பார்த்துக் கொள்ளலாம் என்று திடமாக அவளால் இருக்க முடியவில்லை, இதற்கு முன்பு அவள் இவ்வளவு பயந்ததும் இல்லை, அவன் கையால் அவள் கழுத்தில் தாலி வாங்கிய நொடியிலிருந்து தான் அவள் தைரியமெல்லாம் எங்கோ காணாமல் போயிருந்தது, கரத்தில் தாலியை பற்றியபடி விழிகள் மூடி நின்றிருந்தவள், கதவு தட்டும் ஓசையில் தான் தெளிவடைந்தாள், ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு போய் கதவை திறந்தாள்,...

"சித்ராஅம்மா உங்களை வர சொன்னாங்கமா" என்றார் வாசலில் நின்றிருந்த கணேஷன்,.. "ம்ம்.. வரேன் அண்ணா" என்றவளோ,.. அவரது பின்னாலேயே சென்றாள், அவர் அடுக்கலை பக்கம் சென்று விட, இவள் ஹாலில் அமர்ந்திருந்த சித்ராவை நோக்கி சென்றாள்,...

"எப்படி இருக்க நித்திலா" என்று கேட்டவரோ அவளை ஆராயும் பார்வை பார்த்தார், இரவு அவள் சரியாக தூங்கினாளா? இல்லையா? என்ற கவலை அவருக்கும் இருந்தது...

"ம்ம்" என்று தலையசைத்தவளுக்கு, 'நான் நன்றாக இருக்கிறேன்' என்று கூற கூட வாய் வர மறுத்தது,..

"எனக்கு புரியுது நித்திலா, இந்த லைஃபை அக்சப்ட் பண்ண உனக்கு நிறைய டைம் தேவைப்படும் தான், எடுத்துக்கோ, உன் வீட்ல இருக்கிற போல இங்க இரு, இங்க உனக்கு யாராலும் எந்த பிரட்சனையும் வராது, அப்படியே வந்தாலும் என்கிட்ட சொல்லு, என்ன புரிந்ததா" அவர் கூற.. அவள் 'சரி' என்பதாய் தலையசைத்துக் கொண்டாள்...

"ஓகே... இப்போ வா சாப்பிடலாம்" என்று அவளை சாப்பிட அழைத்துச் சென்றார்,.. சாப்பாட்டுக்கு இடையில்,... "நான் ஆபிஸ் கிளம்புறேன் நித்திலா, நீ இப்போ ஆபிஸ் வர வேண்டாம், ஒன் வீக் போகட்டும்" என்றார்,..

அவளுக்கு இதை ஏற்றுக் கொள்ள இயலவில்லை, அலுவலகத்திற்கு சென்றாளாவது அவளால் நிம்மதியாக மூச்சு விட இயலும், இங்கே அவளுக்கு மூச்சு முட்டிக் கொண்டல்லவா இருக்கிறது,.. எனவே,.. "ஏன் மேடம், நானும் ஆபிஸ் வரேனே" என்றாள்,...

"இல்ல,.. இப்போ வேண்டாம், ஒரு வாரம் மட்டும் போகட்டும், இந்த திருமணம் எல்லாருக்கும் கண்டிப்பா அதிர்ச்சியை கொடுத்திருக்கும், இப்போ நீ வந்தா, தேவையில்லாத கேள்விகள் எல்லாம் உன்கிட்ட கேட்பாங்க, இந்த ஒருவாரத்துல நான் எல்லாத்தையும் சுமூகமாக்கிடுவேன், அப்புறம் நீ வா" அவர் கூற, அவளுக்கும் புரிய,... "சரி" என்று தலையசைத்துக் கொண்டாள்,..

"உனக்கு இங்க என்ன வேலை பண்ணனும்னு தோணுதோ செய், வேற விஷயத்துல கான்சன்ட்ரேட் பண்ணுனா, உன் மைண்ட்டும் ரிலேக்ஷா இருக்கும்" என்று கூற, அவள் அதற்கும் தலையை மட்டும் அசைத்துக் கொண்டாள்,...

சாப்பிட்டு முடித்ததும்,... "நான் கிளம்புறேன்," என்று கூறி அவர் சென்று விட,... இவளுக்கோ அவர் சென்றதும் பதட்டம்,... தனதறைக்கு வேகமாக நடந்தவள்,... "நித்திலா" எனும் குரலில் திரும்பினாள், வாசல் வரை சென்றிருந்த சித்ரா தான், அவளை அழைத்திருந்தார்,... அவள் 'என்ன' என்பது போல் பார்க்க,.. "ஆரவ் ஆபிஸ் போயிட்டான், அவன் வர நைட் ஆகும், ஸோ நீ ரூம்லயே இருக்க வேண்டிய அவசியம் இல்லை" என்ற தகவலை கூறிவிட்டு அவர் சென்றிருக்க நித்திலாவிற்கோ அவர் கொடுத்த தகவல் பெறும் நிம்மதியை தந்தது,..

அடுக்கலைக்குள் நுழைந்து கொண்டாள், கணேஷனுக்கு அவளும் சமையலில் உதவி செய்தாள், வேலையில் ஈடுபடும் நேரம் மட்டும் மனம் கொஞ்சம் அமைதியை உணர்ந்தது, மதியம் சித்ரா சாப்பிட வந்தார், நித்திலா தான் பரிமாறினாள்,... "நீயும் உட்காரு நித்திலா, சேர்ந்தே சாப்பிடலாம்" சித்ரா கூறி இருக்க,... "இல்ல மேடம்,.. நான் அப்புறம் சாப்பிட்டுகிறேன், நீங்க சாப்பிடுங்க" என்றாள்,...

"இன்னும் என்ன மேடம்,.. அத்தைன்னு கூப்பிட்டு பழகு" என்றார்...

அவளுக்கோ சட்டென்று அத்தை என்று அழைக்க சங்கடம்,... "ம்ம்" என்று தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாள்,...

அவர் உணவை முடித்துக் கொண்டு அலுவலகம் கிளம்பி விட்டார், நித்திலாவும் பேருக்கு கொஞ்சம் கொறித்து விட்டு, தனது அறைக்கு சென்று விட்டாள், மாலை வரை அறையில் தான் இருந்தாள், தனியாக இருந்தாலே பல யோசனைகள் அவளை சுழற்றி அடிக்கிறது, தூக்கமும் வரவில்லை, அறையை விட்டு வெளியே வந்தாள், கணேசன் டீ போட பாலை ப்ரிஜ்ஜிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தார், அவரருகில் சென்றவள்,.. "நான் டீ போடுறேன்ணா" என்றாள்,...

"உங்களுக்கு எதுக்குமா சிரமம் நானே போடுறேன்" அவர் கூற,... "ஐயோ அண்ணா டீ போடுறதுல என்ன சிரமம் இருக்க போகுது, ப்ளீஸ் நானே போடுறேன்" அவள் கெஞ்சலுடன் கேட்டிருக்க,... "சரிமா" என்று அவர் நகர்ந்து விட்டார், இரவு உணவிற்கான வேலையை அவர் கவனிக்க ஆரம்பித்தார்,...

"அண்ணா உங்களுக்கு டீ தரட்டுமா குடிப்பீங்களா" நித்திலா வினவ,... "இல்லமா எனக்கு வேணாம், சித்ரா மேடம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்திடுவாங்க, அவங்களுக்கு தினமும் டீ குடிக்கிற பழக்கம் இருக்கு, மேடத்துக்காக தான் நான் டீ போட வந்தேன்" என்று கூற,.. அவளும் "ஓ" என்று கேட்டுக் கொண்டாள்,...

ஆறு மணியளவில் சித்ராவும் வந்தார், களைப்போடு வந்தவரை "ஃபிரஷ் ஆகிட்டு வாங்க மேடம், நான் டீ எடுத்துட்டு வரேன்" என்றாள் நித்திலா,... "இந்த மேடம்னு சொல்றதை நீ விட மாட்டியா நித்திலா" என்றார் அவர் சிறு அதட்டலோடு,...

"டக்குனு கூப்பிட வரமாட்டேங்கிது மேடம், போக போக பழகிக்கிறேன்" என்று சொன்னவளிடம் சிறு புன்னகையுடன் நகர்ந்தவர், ஃபிரஷ் ஆகிவிட்டு வந்து நித்திலா தந்த டீயை பருகினார்...

"இன்னைக்கு ஆபிஸ்ல என்னாச்சு மேடம்" என்று கேட்டாள் சிறு நெருடலோடு, ஆரவ்விற்கும் தனக்கும் திருமணமான விஷயம் நிச்சயம் அலுவலகத்தில் கசிந்திருக்குமே, யாரும் எதுவும் கேட்டு இருப்பார்களோ என்ற கவலையில் தான் கேட்டாள்,...

"ஒன்னும் ஆகல நித்திலா, விஷயம் ஆபிஸ்ல உள்ளவங்களுக்கு தெரிஞ்சிடுச்சி தான், ஆனா என்கிட்ட நேரடியா வந்து கேட்கிற தைரியம் யாருக்கும் இல்லை, அதனால அவங்களுக்குள்ளே கிசுகிசுத்துகிட்டாங்க, கொஞ்ச நாள் இந்த விஷயம் தான் அவங்க வாய்க்கு அவல் மெல்லுற மாதிரி இருக்கும், வேற யாரை பத்தியாவது விஷயம் பரவவும் இதை மறந்து அதை பத்தி பேச ஆரம்பிச்சிடுவாங்க, இது தான் வழக்கமான உலக நடப்பு" என்று சொன்னவரோ,... "இதை பத்தி நீ யோசிக்காத, அடுத்த வாரத்துலருந்து நீ ஆபிஸ் வா," என்றார்..

"சரிங்க மேடம்" என்று சொன்னவளுக்கோ, 'அலுவலகத்தில் என்னை பற்றி என்னவெல்லாம் கேட்பார்களோ தெரியல, சில பேருக்கு பொறாமையாவும் இருக்கும், மேடமை கைக்குள்ள போட்டு அவங்க பையனை கட்டிக்கிட்டேன்னு கூட நினைச்சிருப்பாங்க, என் நிலமை யாருக்கும் தெரியாது, இங்க நான் சிங்கத்தோடே குகைல மாட்டிகிட்ட மான் மாதிரி ஒவ்வொரு நொடியும் பதட்டதோடு திரியிறேன், இதெல்லாம் எங்கே அவங்களுக்கு தெரிய போகுது,' என்று தன்னுள் புலம்பி கொண்டவளோ, சித்ரா தந்த டீக்கப்பை எடுத்து சென்று கொண்டுருந்த நேரம், புயல் போல் வீட்டினுள் நுழைந்திருந்தான் ஆரவ் விஜயன்,...

அவன் வந்த வேகத்தை கண்டு, பயத்தில் ஓடிசென்று,.. "மேடம் மேடம்" என்றவாறு அவள் சித்ராவின் அருகில் ஒளிய,... "என்னாச்சு நித்திலா" என்று புரியாமல் கேட்டவர்,... "இப்போ உங்களுக்கு சந்தோஷமாமா" என்று கேட்டபடி ஆத்திரத்தில் கத்த தொடங்கிய மகனின் வருகையை அப்போது தான் கவனித்தார்,..

அவனது சத்தமும், அவன் முகத்தில் தெரிந்த கோபமும், அவன் மிகவும் டென்ஷனில் வந்திருக்கிறான் என்பதை புரிய வைத்தது, நிதானமாக மகனை ஏறிட்டவர்,.. "என்னாச்சுப்பா, இப்போ என்ன பிரட்சனை உனக்கு" என்று வினவிட,... "இதோ இருக்காளே இவ தான் பிரட்சனை" அவரருகில் பயந்து போய் நின்றிருந்த நித்திலாவை வெறுப்பாய் பார்த்து மொழிந்தவன்,... "ஆஃபிஸ்குள்ள காலடி எடுத்து வச்சதிலிருந்து அத்தனை ஃபோன் கால்,

கல்யாணம் பண்ணிட்டடீங்கலாமே சொல்லவே இல்ல,

ஒரு இன்விடேஷன் கூட வைக்கல,

திடீர் கல்யாணமாமே,

பொண்ணு கூட நம்ம ஆபிஸ்ல வேலை பார்த்த எம்பிளாய்னு சொல்றாங்க,

லவ் மேரேஜா சார்,

நீங்க லவ்ல விழுவீங்கன்னு நாங்க எதிர்பார்க்கவே இல்ல,

உங்க அந்தஸ்துக்கு பெரிய இடத்துல கல்யாணம் பண்ணிருக்கலாமே, எதுக்கு சாதாரண எம்ப்ளாயை போய் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க,

எதுவும் தப்பு நடந்து போச்சானு
பார்க்கிற ஒவ்வொருத்தனும் கேட்கிறான், நான் என்னமா பதில் சொல்றது, அம்மாக்கு பயந்து கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொன்னா என்னை கேவலமா பார்க்க மாட்டாங்க, ச்சே என் வாழ்க்கையோடு சேர்த்து என் நிம்மதியையும் குழைச்சிட்டீங்கமா" என்ற விரக்தியுடன் சொல்லிவிட்டு சென்ற மகனை வருத்தத்துடன் பார்த்த சித்ரா ஒரு பெருமூச்சோடு சோபாவில் அமர, நித்திலாவோ நெற்றியில் கரம் வைத்தபடி அமர்ந்திருந்த சித்ராவை கவலையுடன் பார்த்தாள்,...
 
  • Sad
Reactions: shasri