கண்ணீர் - 13
'எல்லாம் என்னால தான், என்னால தான் மேடம்க்கு இப்போ இவ்வளவு வருத்தம், ஆரவ் சார் கோபம் கூட இப்போ நியாயமானதுன்னு தான் தோணுது, எல்லாம் என்னால தான்னு புரிஞ்சாலும் எதுவும் பண்ண முடியாத நிலைமையில தானே நான் இருக்கேன், யாருக்கும் தெரியாம வீட்டை விட்டு போயிடலாமானு தோணுது, ஆனா எனக்காக அவர் மகனையே கல்யாணம் பண்ணி கொடுத்த சித்ரா மேடத்தோட நம்பிக்கையை உடைச்சுட்டு போகவும் எனக்கு மனசு வரல, நான் என்ன தான் பண்ணுறது, கடவுளே ஏதாவது பண்ணுப்பா' என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டவள் அன்று இரவு தன் உறக்கத்தையும் தொலைத்திருந்தாள்,...
அடுத்த நாள் தன் காலை கடன்களை முடித்து விட்டு வந்தவள் சமையலறைக்குள் நுழைந்து கொண்டாள், கணேசன் இன்னும் வந்திருக்கவில்லை, உறக்கம் வராமல் படுத்திருப்பதற்க்கு பதில் சமையல் வேலைககளையாவது செய்யலாம் என்ற எண்ணத்தில் தான் வந்தாள்,..
அங்கு ஆரவிற்கும் உறக்கம் என்பதே இல்லை, மனதை அமைதிபடுத்திக் கொள்வதற்காக ஜாக்கிங் செல்ல முடிவெடுத்தவன், ஜாக்கிங் உடையுடன் கீழே வநத நேரம், டைனிங் டேபிளில் அமர்ந்து சாம்பாருக்காக காய் நறுக்கி கொண்டிருந்த நித்திலா பட, அவன் முகமோ கோபத்தில் கருத்து போனது,. 'அவளை கழுத்தை நெறித்து கொன்று விடலாமா' வன்மமாய் நினைத்தவன்,... 'இல்ல ஆரவ், புத்திசாலி தனமா நடந்துக்கோ, அவளே வீட்டை விட்டு ஓடுற அளவுக்கு அவளை வதைக்கனும்' உள்ளே ஒரு மிருகம் வேறு அவனை ஏற்றி விட, மெல்ல நடந்து அவளருகில் வந்தான்,...
அவன் வருவதை அறியாமல் பல யோசனைகளுடன், தன் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவள்,... "குட் மார்னிங் டியர்" எனும் குரலில் அடித்து பிடித்துக் கொண்டு எழுந்தாள்,.. பின்னே காதருகில் திடீரென்று ஒரு குரல் வந்தால் பதட்டம் தானே எழும், அவனது குரலை உணராதவளும் இல்லையே அவள்,...
அவனை பார்த்த அந்தக் கணம், நித்திலாவின் கை நடுகத்தால் கத்தியும் கீழே விழுந்தது, முகத்தில் ஒரு திடீர் பதட்டம் பரவியது, உதடுகள் சற்றே உலர்ந்து சுவாசம் தடைபட்ட உணர்வு, இதில் ஆரவ்வின் பார்வை வேறு தன்னை நிலைகுத்தி இருப்பதை கண்டவுடன், இரத்தமே உறைந்து போனதுபோல உணர்ந்தாள்,....
"ரொம்ப சந்தோசமா இருக்கியோ,.. ம்ம்.. இருக்க தானே வேணும், நீ ஆசைப்பட்ட வாழ்க்கை தானே இது" அவன் ஏளன பார்வையில் சொல்ல,.. "இ.. இல்ல சார்.. நான்" தந்தியடிக்கும் வார்தைகளுடன் ஏதோ சொல்ல வந்தவள்,.. "ஜஸ்ட் இனாஃப்" என்ற அவனது கர்ஜனை குரலில் உடல் தூக்கி போட, இரண்டடி பின்னால் நகர்ந்தாள்,...
"என்ன டியர் பயந்துட்டியா,.. சும்மா,.." உடனே முகத்தை மாற்றிக் கொண்டு புன்னகைத்தவன் "ஓகே நான் ஜாக்கிங் போயிட்டு வரேன், என்னோட காஸ்டியுமை அயர்ன் பண்ணி வச்சிடு ம்ம்" என்று சொல்லிவிட்டு அவன் கன்னத்தை வருடிவிட்டு வெளியேற அவள் தான் போகும் அவனை பூதத்தை பார்ப்பது போல் பார்த்து வைத்தாள், இயல்பாக தான் பேசினான், ஆனால் அவனது பேச்சில் மறைந்திருந்த ஆபத்தை, அவளது மனம் கூவி எச்சரித்தது, அந்தச் சிரிப்பும், அந்தக் குரலும் ஒருவித மிரட்டலாகவே அவள் உள்ளத்தில் பதிந்தது, அவன் வருடிய கன்னம் வேறு குறுகுறுத்துக் கொண்டே இருந்தது, அவன் சென்ற நேரங்கள் கடந்த பின்பும் பிரம்மை பிடித்தது போன்று அதே இடத்தில் சிலை போல் நின்றிருந்தவள்,.. "என்னமா நான் வரதுக்குள்ள நீங்களே வேலையை ஆரம்பிச்சிட்டீங்களா" என்ற கணேசனின் குரலில் தான் நிதான நிலைக்கே வந்தாள்,...
முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவள்,... "ஆ.. ஆமா அண்ணா" என்று சொல்லிவிட்டு, வேலையில் கவனமாக, அவள் மனம் தான் ஆரவ்வை பற்றியே மீண்டும் நினைக்க தொடங்கி இருந்தது, தாமதமாகவே அவன் சொல்லி விட்டு சென்ற வேலையும் நினைவு வர,.. "அண்ணா.. ஆ.. ஆரவ் சார் அவரோட ட்ரஸ்ஸை அயர்ன் பண்ணி வைக்க சொல்லிட்டு போனாரு, அதை கொஞ்சம் பண்ணிடுறீங்களா" என்றாள்,.. அவனறைக்கு செல்லவே அவளுக்கு பெரும் தயக்கம், போகும் அளவிற்கு அவளிடம் தைரியமும் இருக்கவில்லை,...
"அது ராமுவோட வேலையாச்சேமா, வாரத்திற்கு ஒரு முறை அவன் துணிகளை துவைச்சி இஸ்திரி பண்ணி முன்னாடியே தயார் படுத்தி வச்சிடுச்சிடுவான்மா" அவர் கூறவும்,.. "ஓ" என்றவளோ,... 'அப்போ எதுக்கு என்கிட்ட சொல்லிட்டு போனாரு' என்று நினைத்தபடி இருந்தாள்,...
நிமிடங்கள் கடக்க, சித்ராவும் வந்தவர்,.. "கணேஷ் காஃபி" என்று குரல் கொடுத்துவிட்டு செய்தி தாள்களை கையில் எடுத்தபடி அமர்ந்து கொள்ள, அவருக்கு காபி எடுத்து வந்ததோ நித்திலா தான்,...
தன்னிடம் காபி நீட்டியவளிடமிருந்து இன்முகமாய் பெற்றுக் கொண்டவர்,... "உட்காரு நித்திலா" என்று சொல்ல,... "இல்ல மேடம் உள்ளே வேலை இருக்கு" என்றாள் அவள்...
"வேலையா? உன்னை யாரு வேலை பார்க்க சொன்னது" அவர் சிறு அதட்டலோடு வினவ,... "நானா தான் பார்க்கிறேன் மேடம்" என்றாள்,...
"லிஷன் நித்திலா, உன்னுடைய மைண்ட் சேஞ்ச்காக கொஞ்சம் கொஞ்சம் பார்த்துக்க, எல்லா வேலைகளும் நீ தான் பண்ணனும்னு இல்ல, இங்கே அதுக்காக ஆட்கள் இருக்காங்க, புரியுதா?"
அவளும் "சரிங்க மேடம்" என்பதோடு முடித்துக் கொண்டாள்...
"சரி உட்காரு" என்றவரோ,... "நீ காஃபி குடிச்சியா" என்றார் அக்கறையாய்,.. "ஆமா மேடம்" அவள் பவ்யமாக சொல்ல,... "இந்த மேடத்தை நீ விடவே மாட்டியா நித்திலா, உன்கிட்ட எத்தனை தடவை தான் சொல்றது" இந்த முறை அவரிடமிருந்த சிறு எரிச்சல் எட்டி பார்க்க,... "தப்பா எடுத்துக்காதீங்க, எனக்கு கூப்பிட தோணும் போது கூப்பிடுறேனே" தயங்கி தயங்கி சொல்லவும் "என்னவோ பண்ணு" என்று அழுத்துக் கொண்டவரோ "குட் மார்னிங் மாம்" என்ற மகனின் குரலில் நிமிர்ந்தார்...
அப்போது தான் ஜாக்கிங் முடித்துவிட்டு வீட்டினுள் நுழைந்திருந்தான் ஆரவ், மகன் தன்னிடம் இயல்பாக காலை வணக்கம் வைத்ததில் சந்தோசம் கொண்டவர்,... "குட் மார்னிங் கண்ணா, ஜாக்கிங் போயிட்டு வரியாப்பா" என்றார் கனிவோடு..
"எஸ் மாம், ஐம் கெட்டிங் ரெடி ஃபார் ஆஃபிஸ்" என்றவன் மாடியேற, அவன் இவ்வளவு பேசியதே பெரிய விஷயம் என்று நினைத்தவர்... "நித்திலா" என்ற ஆரவ்வின் குரலில் நித்திலா பதட்டத்தோடு திரும்ப, சித்ராவின் விழிகளோ சுருங்கியது,...
"நான் சொன்ன வேலையை பண்ணியா" அவன் இயல்பான குரலில் தான் கேட்டான், ஆனால் அவள் தான் நடுங்கி போய் நின்றாள், கரங்களை பிசைந்தபடி நின்றவளோ. "அ… அது… ராம் அண்ணா பண்ணிருப்பதாக, கணேஷ் அண்ணா சொன்னார்" அவள் குரல் திக்கித் திக்கி தளர்ந்து வர அவனோ
"நான் உன்கிட்டதானே பண்ணி வைக்க சொல்லிட்டு போனேன்" என்றான் சிறு கடுமையுடன்,...
இவன் எதை பற்றி கேட்கிறான் என்பது புரியாத சித்ராவோ,... "அவ கிட்ட என்ன பண்ண சொன்ன ஆரவ்" என்று வினவ,... "அதை அவ கிட்டயே கேளுங்க" என்று சொல்லிவிட்டு.. "இனி இப்படி நடக்க கூடாது, நான் சொன்னா அதை நீ செய்து தான் ஆகணும்" அவனது எச்சரிக்கையுடன் கூடிய மிரட்டலில், அவளது தலை தன்னிச்சையாய் அசைந்தது...
"என்ன செய்ய சொன்னான் அவன்" சித்ரா நித்திலாவிடம் வினவ,.. "அது.. அவரோட ட்ரஸ்ஸை அயர்ன் பண்ணி வைக்க சொன்னாரு" அவள் மெல்லிய குரலில் கூற, அவரது புருவங்களோ முடிச்சிட்டது, மகனின் மனதில் என்ன இருக்கு என்பதையும் புரிந்து கொள்ள இயலவில்லை, அவன் இவ்வளவு இலகுவாக நித்திலாவிடம் பேசுவதும் சந்தேகத்தை கிளப்பியது, யோசனையுடன் அமர்ந்திருந்தவர்,.. "அம்மா சாப்பாடு ரெடி" என்ற கணேசனின் குரலில் தான் யோசனையிலிருந்து மீண்டார், இன்று ஒரு முக்கியமான வேலை இருந்ததால் அவர் சீக்கிரமே அலுவலகம் செல்ல வேண்டிய நிலை, அதனால் அவர் நேரமே சாப்பிட்டு கிளம்ப ஆயத்தமாகி கொண்டிருந்தார்,...
"நித்திலா நான் வரேன்மா, குடலை காய போடாம நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடு, இன்னைக்கு மதியம் சாப்பாட்டுக்கு நான் வரது கஷ்டம் தான்" என்று கூறி அவளிடம் விடைபெற்றுக் கொண்டிருந்த நேரம், ஆரவ்வும் டிப்ட்டாப்பாக தயாராகி வந்திருந்தான், அவனின் வருகையை கண்டதும் நித்திலாவிற்கு வழக்கம் போல் பதட்டம் பிடித்துக் கொள்ள, சித்ராவிற்கோ அவளின் இந்த பதட்டத்தை பெருமூச்சொன்று வெளிபட்டது,....
"சாப்பாடு எடுத்து வை" அவனின் உரிமையான அதே சமயம் கட்டளையுடன் கூடிய குரலில் அவள் உடல் தன்னையும் மீறி நடுங்கியது, தான் சொன்ன வேலையை செய்யாது கரங்களை பிசைந்தபடி அசையாது நின்றிருந்தவளை புருவம் சுருக்கி பார்த்தவன்,... "காது கேட்கலயா" என்று சாதரணமாக தான் கேட்டான், அப்போதும் அவள் உடலில் ஒருவித உதறல்,...
"அ.. அது" என்றவள் பதில் சொல்லும் முன்னரே,... "அதான் கணேஷ் இருக்காருலப்பா" என்று சித்ரா முந்திக் கொண்டு பதில் தந்தார், நித்திலாவின் பயம் புரிந்து, கொஞ்ச நாட்கள் அவள் இந்த வீட்டில் ஒட்டும் வரை அவளை தொந்திரவு செய்யாமல் இருப்பது நல்லது என்ற எண்ணம் அவருக்கு,...
ஆரவ்வோ தாயை அழுத்தமாக பார்த்தவன்,... "ஏன் இவ எடுத்து வைக்கிறதுக்கு என்ன மாம், என் பொண்டாட்டி தானே இவ," என்று வினவ,.. அவனது பொண்டாட்டி என்ற வார்த்தையில் சித்ராவின் நெற்றி சுருங்கியது,...
அவனோ மேலும்,... "நீங்க ஆஃபிஸ்க்கு கிளம்பிடீங்க தானே, நீங்க கிளம்புங்க, எனக்கும் டைமாகுது" என்று சொன்னவன்,... "நீ வா" என்று நித்திலா எதிர்பாரா நேரத்தில் அவளின் கரம் பற்றி அழைத்து செல்ல, அவனது பற்றுதலிலும், கூடவே தன்னை இழுத்து சென்றதிலும் அவள் தான் வெடவெடத்து போய் விட்டாள்,...
சித்ராவிற்கு அலுவலகம் செல்லும் எண்ணமே இல்லை, மகன் நித்திலாவை காயப்படுத்தி விடுவானோ என்ற கவலை, எனவே அவரும் டைனிங் ஹாலை நோக்கி நடக்க, தங்கள் பின்னாலேயே வந்த தாயை கூர்மையாய் துளைத்தவன்,.. "உங்க ப்ராப்ளம் தான் என்ன மாம்" என்றான், கோபம் இல்லாமல் தான் கேட்டான்,...
அவரோ நித்திலாவை பார்த்தவர், அவர் பார்வையிலே அவள் தவிப்பை புரிந்து கொண்டு,... "அவளுக்கு கொஞ்சம் டைம் கொடு ஆரவ்" என்றார்,...
"அவளை இப்போ நான் என்னமா பண்ணிட்டேன், ஃபுட் தானே செர்வ் பண்ண சொன்னேன், எதுக்காக நீங்க இவ்வளவு பதறி போறீங்க" என்று வினவ, அவரிடமோ பதிலில்லை,..
"அதான் கல்யாணம் பண்ணி வச்சிட்டீங்கள்ல, இனி நான் வாழ்ந்துகிறேன், தயவு செய்து நீங்க கிளம்புங்க" என்று கூறிட, அப்போது அவர் என்ன நினைத்தாரோ! நித்திலாவை ஒரு பார்வை பார்த்தவர், ஒரு நீண்ட நெடிய மூச்சுடன் அங்கிருந்து நகர்ந்து விட, நித்திலாவிற்கு தான் அவர் தனியே விட்டு சென்றதில் இதயம் எக்குத்தப்பாக எகிறி குதித்து, மனம் படபடவென்று அடித்துக் கொண்டது,..