• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் - 17

Zeeraf

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 23, 2025
73
25
18
India
கண்ணீர் - 17

அடுத்த நாள் அவன் ஜாக்கிங் கூட செல்லவில்லை, அவன் தூங்கியதே இரண்டு மணி நேரங்கள் தான், இதில் எங்கே ஜாக்கிங் செல்வது, அவன் எழுந்த போது மணி ஒன்பதை காட்டி இருந்தது, அவன் வழக்கமாக இவ்வளவு தாமதமாகவெல்லாம் எழ மாட்டான், கோபமாக வந்தது,... 'எல்லாம் அவளால் தான், அவளை பழிவாங்க சமயம் பார்த்து நான் காத்திருந்தால், இப்படி என்னை கொல்லுறாளே, இல்ல ஆரவ் அவகிட்ட நீ மயங்க கூடாது, நீ ஸ்ட்ராங்கா இருந்தா தான் அவளை இந்த வீட்டை விட்டு துரத்த இயலும், உன்னோட உணர்வுகளை குழி தோண்டி புதைத்து விட்டு, அவளை என்ன செய்யலாம் என்ற திட்டத்தை போடு' என்று மனசாட்சி அவனை கண்டித்தது,...

அவன் குளியலறைக்கு நுழைய போன நேரம் அவன் போன் ஒலித்தது, எடுத்தவனுக்கு திரையில் தாயின் எண் வரவும், உடனே அழைப்பை ஏற்று "சொல்லுங்க மாம்" என்றான்,..

"எழுந்துட்டியா? என்னடா இன்னைக்கு ரொம்ப நேரம் தூங்கிட்டியா?" என்று அவர் விசாரிக்க,... "எஸ் மாம், நைட் லேட்டா தான் தூங்கினேன், கொஞ்சம் வொர்க் இருந்தது" என்று சொல்ல, அவருக்கு மகனை பற்றி தெரியாதா? எவ்வளவு வொர்க் இருந்தாலும் இப்படி தூங்குறவன் எல்லாம் இல்லை அவன் என்பதை அவர் நன்கு அறிவார், இருப்பினும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை "உன் ரூமுக்கு வந்தேன், நல்லா தூங்கிட்டு இருந்த," என்று சொல்ல,.. "எழுப்பி விட்டுட்டு போயிருக்கலாமே மாம்" என்றான்..

"நல்லா தூங்கிட்டு இருந்தடா, எழுப்பி விட மனசு வரல," என்று சொன்னவரோ,... "சரி நான் ஆபிஸ் வந்துட்டேன், அப்புறம் பேசுறேன்" என்று கூறி வைத்து விட, அவனும் ஒரு பெருமூச்சுடன் குளியலறைக்குள் நுழைந்து கொண்டான்,...

குளித்துவிட்டு வந்தவன், தயாராக இருந்த தனது உடைகளை எடுத்து அணிந்து கொண்டான்,.. 'அவளும் ரூம்க்கு வந்திருக்கா, அது கூட தெரியாம தான் தூங்கி இருக்கேன்' தன்னை தானே கடிந்து கொண்டு, கீழிறங்கி வர, வீடே அமைதியாக காணப்பட்டது,...

'எல்லாரும் எங்கே போயிட்டாங்க' என்று நினைத்தபடி சமையலறைக்குள் எட்டி பார்த்தவனுக்கு, அவனின் அழகு மனைவி கண்ணில் படவும் சும்மா இருப்பானா அவன், அவ்வளவு நேரம் அவளை பழிவாங்க திட்டம் தீட்டியவனுக்கு அவளை கண்டதும் அவன் எண்ணங்கள் எல்லாம் பனியாய் உருகிவிட்டன,..

அவள் சமையல் கட்டில் ஏதோ வேலை செய்துக்கொண்டிருந்தாள், சத்தமின்றி அவளின் பின்னால் வந்து நின்றவனுக்கோ, அவள் அருகாமை அவனின் உள்ளே புதைந்திருந்த தாப உணர்ச்சிகளை கிளறி எழ செய்ய, அவனிடமிருந்து உஷ்ண மூச்சு வெளியேறியது, அவன் சூடான மூச்சுக் காற்று அவளின் தோளில் பட, அதனை உணர்ந்து திடுக்கிட்டு உடனே திரும்பி பார்த்தவளுக்கு அவனை கண்டதும், விழிகளில் பதட்டம், அதே கணம் இவ்வளவு அருகில் அவனைப் பார்த்ததில் அவளது மூச்சும் தடுமாறியது,..

ஏற்கனவே அவனின் முத்தத்தினால் இரவு உறகத்தை தொலைத்திருந்தவளுக்கு, இப்போது மீண்டும் அவனை அருகே பார்த்ததில் பதட்டம் மட்டுமே, அவளது மிரண்ட விழிகளும், அவனின் தாபம் நிரம்பிய காந்த விழிகளும் சில வினாடிகள் மோத, அவன் உணர்ச்சிகள் இன்னும் கரைபுரண்டு ஓடியது, அவன் சிவந்த கண்கள் காமத்தோடு, அவளின் நடுக்கத்தை ரசித்தது, அவளின் ஒவ்வொரு சலனமும், அவனுக்குள் தீப்பிழம்புகளை கிளப்பியது,

அவள் பின்வாங்க முயன்ற அந்த நொடியில், அவளின் கையைப் பிடித்து தன் பக்கம் இழுத்தவன்.. "என்னடி பண்ண என்னை, எதுக்குடி என்னை இப்படி பண்ணுற" என்று கோபமாக கேட்க தான் நினைத்தான், ஆனால் குரல் குழைந்து தான் வந்தது,..

அவளோ அவன் என்ன கேட்கிறான் என்பது புரியாமலும், அவனின் நெருக்கத்தில் சிக்கி வார்த்தைகள் வெளிவராமலும் நின்றவளின் கண்கள் பதட்டத்தோடு நடுங்க, அவன் மனதோ காமமும் கோபமும் கலந்த புயலாய் கொந்தளித்தது…

அவனின் சூடாக மூச்சுக்காற்று அவளது மீது பட்டு தெறித்தது, அவள் சற்றே நடுங்கினாள். 'என்னை விட்டு தள்ளி போங்க…' என்று சொல்ல தான் நினைத்தாள், ஆனால் அந்தச் சொல் அவன் அருகாமையின் சுழலில் விழுங்கப்பட்டது...

அவனோ திடீரென்று அவளது தாடையை ஒற்றை கையால் பற்றி தன்னருகே இழுக்க, அவள் விழிகளோ விரிந்து கொண்டது, அவன் விழிகளோ மோகத் தீயில் எரிந்து கொண்டிருந்தது, அவள் முகவாயை பற்றியவன் அடுத்த கணமே, அவளின் உதடுகளின் மீது கொந்தளித்த புயலாய் மோதினான்,...

அவள் அதிர்ந்து உடனே கைகளால் அவனைத் தள்ள முயன்றாள், அவனைத் தள்ளவேண்டும் என்ற அவளின் போராட்டம், அவன் மார்பை குத்திய நடுங்கிய விரல்களில் தெரிந்தது, உதடுகளைச் சுருங்கச் செய்து, அந்த முத்தத்தை எதிர்க்க முயன்றாள், ஆனாலும் அவன் பிடி தளரவில்லை, அவனின் தீவிரம், அவளின் பலவீனத்தை மெதுவாக உடைந்து தகர்த்தெறிய, அவளின் சுவாசம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தடுமாறியது....

ஒரு கணத்தில், அவள் மனதில் ஓடிய எதிர்ப்பும் அச்சமும் குறைந்தது,
கண்ணீர் கலந்த மூச்சோடு தளர்ந்து போனவளுக்கு உடலின் சக்தியும் குறைந்து, எதிர்ப்பை தெரிவித்த கைகள் மெதுவாக அவன் மார்பில் விழுந்தன,...

அவளது சோர்ந்த உடல், அவன் தீவிர முத்தத்தின் சுழலில் அடங்கி போனது, எதிர்ப்பை விடுத்து, மூடிய விழிகளோடு அவன் உணர்ச்சிகளுக்கு சிறைபட்டவளாய் அவள் நிற்க, அவனின் மனமோ இன்னும் கொந்தளித்து எரிந்துகொண்டே தான் இருந்தது....

சில நிமிடங்கள் கடந்த பின் அவள் மூச்சைத் திணறித் திணறி எடுப்பதை உணர்ந்தவனோ, மெதுவாக அவள் இதழ்களிலிருந்து விலகி விடுதலை கொடுத்தான், ஆனால் அவளை நோக்கும் அவன் பார்வை, தாபத்தை இன்னும் அதிகரிக்க வைத்தது, உள்ளே எரியும் தாபத்தை அடக்கிக் கொண்டவனுக்கு, இது அது தீர்க்கும் இடம் இல்லை என்பதையும் உணர்ந்து கொண்டவனின் விழிகளில் அவளது மெல்லிய இதழ்களில் ரத்தம் கசிந்து கொண்டிருந்தது தெரிந்தது, அந்தக் காட்சியைப் பார்த்தவுடன், அவன் பின்னங்கேசத்தை கோதிக் கொண்டான், ஆழ்ந்த முத்தத்தின் தீவிரத்தில், அவன் பற்கள் அவள் உதட்டை பதம் பார்த்திருந்தது,

ஆனால் அவளோ அந்த வலியையும், ரத்தம் கசிவையும் கூட உணராமல், இன்னும் நடுக்கத்தோடு தான் நின்றுகொண்டிருந்தாள், அந்த நடுக்கம் வேதனையினாலா அல்லது அவனின் தீவிரத்தின் சுழலினாலா என்பது கூட அவளுக்கு புரியவில்லை…

"நைட் ஷார்ப்பா டென் ஃபிப்டிக்கு, என்னோட ரூம்ல இருக்கணும்" என்று தாழ்ந்த அதே சமயம் கட்டளையாய் ஒலிக்கும் குரலில் அவளின் காதருகில் குனிந்து சொன்னவன், அவளை ஒருமுறை ஆழ்ந்து பார்த்து விட்டு அவ்விடத்திலிருந்து சென்று விட, அவன் குரலில் நடப்பிற்கு வந்தவளோ, அதிர்ச்சியோடும், தன்னால் அடக்க முடியாத நடுக்கத்துடனும் போகும் அவன் முதுகை தான் வெறித்தாள்,...

அவன் கண்களை விட்டு மறையவும், அங்கேயே சுவரில் சாய்ந்து நின்று கொண்டவளுக்கு, இன்னும் தன்னுடைய இதழ்களில் அவன் தொடுதலின் சூடு எரிந்து கொண்டிருந்த உணர்வு தான், கைகளை மார்பின் மீது அழுத்திப் பிடித்தபடி மூச்சைச் சமநிலைப்படுத்த முயன்றாலும், அந்த நடுக்கம் மட்டும் அவளுக்கு குறையவில்லை,...

'ஏன் இப்படி பண்ணுறாரு, நைட் அவர் ரூமுக்கு வர சொல்றாரு, என்ன பண்ண போறாரு' என்று அவள் மனம் துடித்தது, அவளின் இதயத்தை ஏதோ ஒன்று கடுமையாக தட்டியது, அங்கிருந்து வெளியேற கால்களை அசைக்க முயன்றவளுக்கு, அவ்வளவு சுலபமாக அது முடியவில்லை, சுருண்டு நின்ற உடல் அவளை நகர விடாமல் சிறைபடுத்தி இருக்க, தளர்ந்து போய் அதே இடத்திலேயே சரிந்து அமர்ந்து விட்டாள்,...

மார்கெட்டிற்கு சென்றிருந்த கணேஷ் வீடு திரும்பினார், நித்திலா சமையலறையில் அமர்ந்திருப்பதை கண்டு "என்னாச்சுமா" என்று விசாரிக்க, அவர் குரலில் நடப்பிற்கு வந்தவள், தன்னை முடியுமளவிற்கு சமன்படுத்திக் கொண்டு எழுந்தவள்,... "ஒன்னுமில்லண்ணா" என்று முணுமுணுத்துவிட்டு அறையை நோக்கி நடந்து விட்டாள், போகும் அவளை பரிதாபமாக பார்த்தவர், 'பாவம் இந்த பொண்ணுக்கு என்ன பிரட்சனையோ தெரியல' தன்னுள் புலம்பிக் கொண்டு அவர் தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தார்,...

அன்றைய நாள் முழுவதும் நித்திலா சுயநினைவோடு இல்லை, அவளின் மனதை அவன் வார்த்தைகள் தான் சுரண்டி கொண்டே இருந்தது, 'நைட் அவர் என்ன செய்யப் போகிறார்?' அந்த அடங்காத பயம் அவளின் நரம்புகளை இறுக்கிப் பிணைத்து, உடலை நடுங்க வைத்தது, எதையும் சீராகச் செய்ய முடியாமல், சிறிய சத்தம் காதில் விழுந்தால் கூட திடுக்கிட்டு போனாள், மூச்சு சீரற்ற வேகத்தில் ஓடியது, இதயம் தன் சுவர்களை உடைத்து வெளிவரப்போவது போல துடித்தது...

சமையலறைக்குள் இருந்த போது பாத்திரங்களின் சத்தம் கூட அவளுக்கு அச்சமாய் தான் தோன்றியது, இரவு சாப்பாட்டு நேரத்தின் போது அவனை கண்டவுடன், முழு உடலும் சற்றே பின் வாங்கி நின்றது, மேசையருகே தன் இடத்தில் அமர்ந்திருந்தவன், ஆழமான பார்வையால் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்...
அந்த பார்வையால் நித்திலாவின் மனம் மேலும் நடுங்கிப் போனது...

"நித்திலா,.. நீயும் உட்கார்ந்து சாப்பிடு" என்றார் சித்ரா, "இல்ல மேடம் நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன்" என்று சொன்னவளோ சாப்பிடும் மனநிலையிலா இருந்தாள்,...

"நீ மட்டும் தனியா உட்கார்ந்து சாப்பிடுவியா, உட்காரு" என்று சித்ரா அழுத்தமாக சொல்லவும், அவளுக்கும் அதற்க்கு மேல் மறுக்க முடியவில்லை, மெல்ல அமர்ந்தவள், தட்டை எடுத்து தனக்கு உணவை பரிமாறிவிட்டு, ஒரு வாய் தான் எடுத்து வைத்திருப்பாள், உணவின் காரம் உதட்டில் பட்டவுடன் காந்தல் எடுக்க,... "ஷ்ஷ்" என்று வலியில் தன்னையும் அறியாமல் சத்தமிட்டிருக்க,.. "என்னாச்சு" என்று கேட்டார் சித்ரா,...

"ஒன்னுமில்ல மேடம், காரம் பட்டதும் உதட்டுல இருந்த காயம் காந்துது" என்று சொல்ல,... "உதட்டுல எப்படி காயம் வந்தது" சித்ராவின் கேள்வியில், அவளின் பார்வை அவளையும் அறியாமல் ஆரவ்வின் பக்கம் திரும்ப, அவனுமே அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான், அவனது ஆளை விழுங்கும் பார்வையில் சட்டென்று தலை குனிந்து கொண்டவள்,.. "என்னாச்சு நித்திலா, ஏன் டென்ஷனா இருக்க" அவளை கவனித்தபடி இருந்த சித்ரா வினவ,... "டென்ஷன்லாம் எதுவும் இல்லை மேடம், நான் நல்லா தான் இருக்கேன்" தெளிவான வார்த்தையில் இதழில் சிரிப்பை கொண்டு வந்தபடி சொன்னவளை கண்டு அவரும் நிம்மதியாக சாப்பிட தொடங்க, தன் பதட்டத்தை வெளிக்காட்டாமல் மறைத்தபடி இருந்தவளுக்கு தான், உணவு கூட தொண்டைக்குள் இறங்க மறுத்தது,...
 
  • Love
Reactions: shasri

shasri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 5, 2024
466
253
63
Tamilnadu
single kiss kay va avan innum paerusa plan pannitaan nithi 🤣🤣