• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் - 20

Zeeraf

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 23, 2025
73
25
18
India
கண்ணீர் - 20

அடுத்தடுத்த நாட்கள் வேகமாக ஓட, அன்று நித்திலாவிடம்,.. "இனிமேலிருந்து நீ ஆஃபிஸ்க்கு வா நித்திலா" என்றார் சித்ரா, கேட்ட அவளுக்கோ ஒரே சந்தோஷம், அவள் 'சரிங்க மேடம்' என்று கூறும் முன்னரே,.. "இப்போ ஏன்மா அவளை ஆஃபிஸ்க்கு வர சொல்றீங்க" என்று வந்த ஆரவ்வின் குரலில் அவளின் சந்தோசம் வடிந்து போன உணர்வு,..

அப்போது தான் அலுவலகத்திலிருந்து வீடு வந்து சேர்ந்தவனுக்கு தாயின் வார்த்தைகளை கேட்டு ஆத்திரம், அந்த கணமே அடக்க முடியாமல் கேட்டும் இருந்தான், சித்ராவோ,.. "வீட்லயே தானேப்பா இருக்கா, அதனால தான் வர சொன்னேன், அவளும் ஆஃபிஸ் வர தான் ஆசை படுறா" என்று சொல்ல,... "ஓஹோ" என்று அவளை அழுத்தமாய் பார்த்து வைக்க, அவளோ தலையை குனிந்து கொண்டாள்...

"ஓகே மாம், அவ ஆசைப்படுறானா வரட்டும், பட் **** பிரான்ச்க்கு வரட்டும், என்கூட வொர்க் பண்ணட்டும்" என்று வில்லத்தனமான சிரிப்புடன் சொல்ல, சித்ரா அவன் புன்னகையை கவனிக்கவில்லை என்றாலும் நித்திலா கவனித்தாள், அவளுக்கோ பதட்டம்,.. 'அவனுடன் அவன் ஆஃபிஸில் போய் வேலை செய்வதற்கு நான் வீட்டிலேயே இருந்து விடுவேனே' என்ற எண்ணம் தான் அவளுக்கு, எனவே அந்த நொடிய,... "நான் கொஞ்ச நாள் அப்புறம் ஆஃபிஸ் வரேன் மேடம், இப்போ எனக்கு வரதுக்கு மனசில்ல" என்று உடனடியாக மறுக்க, அவளை புரியாமல் நோக்கியவர்,... "ஏன் இப்படி சொல்ற, அன்னைக்கே நான் ஆஃபிஸ் வர வேண்டாம்னு சொல்லும் போது ரொம்ப ஃபீல் பண்ணியே" அவர் வினவ,.. "ஆமா மேடம், ஆனா இப்போ வேண்டாம்னு தோணுது, கொஞ்ச நாள் அப்புறம் நான் வரேனே" என்று சொல்லவும்,.. அவரும் யோசனையோடு,..."சரி உன் இஷ்டம்" என்று விட்டுவிட, ஆரவ்வும் ஒரு வெற்றி சிரிப்புடன் தன் வேலை முடிந்ததென தனது அறை நோக்கி நடந்து விட்டான்....

"வரதுக்கு உனக்கு இவ்வளவு நேரமா? இனிமே ஷார்ப்பா சொன்ன டைம்க்கு ரூம்குள்ள என்ட்ரி ஆகல, நான் மனுஷனா இருக்க மாட்டேன்" அறைக்குள் நுழைந்தவளை வாங்கு வாங்கென்று அவன் வாங்க,.. அவளோ அவனை வெறித்தவள்.. 'இப்போ மட்டும் மனுஷனாவா இருக்க' என்று மனதினுள்ளேயே கேட்டுக் கொண்டாள்,...

அவள் பார்வையின் மூலம் அவள் மனதை படித்தது போன்று அவன் முகம் கோபத்தில் கருக்க, அவளோ,... "இனிமே டைம்க்கு வந்திடறேன் சார்" என்று கூறி அவனை கொஞ்சம் சாந்தப்படுத்தி இருந்தாள்,...

"இந்த ட்ரஸ்ஸை போட்டுட்டு வா" என்றபடி அவள் முகத்திலேயே ஒரு பார்சலை தூக்கி எறிய, வலித்தாலும் பொறுத்துக் கொண்டு, அவன் தூக்கி போட்ட பார்சலை பிரித்து பார்த்தவள் அதனுள் இருந்த உடையை கண்டு முகத்தை சுழித்தாள், அதை உடை என்றெல்லாம் சொல்லி விட முடியாது, ஸ்லீவ்லெஸில் தொடை வரை இருக்கும் துணியாக தான் இருந்தது, அவள் அணியும் சுடிதார் டாப்பே முழங்கால் வரைக்கும் வரும், ஆனால் இதுவோ அதில் பாதி கூட இருக்கவில்லை,...

முகத்தை அஷ்டகோணலாக்கி அந்த உடையையே பாரத்துக் கொண்டிருந்தவளிடம்,.. "இவ்வளவு காஸ்ட்லியான ட்ரஸ்ஸை நீ பார்த்திருக்க மாட்டேன்னு எனக்கு தெரியும், இருந்தாலும் என்ன பண்ணுறது இதையெல்லாம் உனக்கு வாங்கி கொடுக்கனும்னு எனக்கு தலையெழுத்து" எரிச்சலுடன் அவன் சொல்ல,... அவளோ,... "இது காஸ்ட்லியா? கரித்துணி மாதிரி இருக்கு" என்று தன் மனதில் பட்டதை சொல்லி இருக்க, அவனுக்கோ ஆத்திரம்,...

"உன்னை சாவடிச்சிடுவேன்டி, பட்டுக்காடு உனக்கெல்லாம் எப்படிடி இதை பத்திலாம் தெரியும், பிச்சைக்கார குடும்பத்துல பிறந்தவ தானே நீயெல்லாம்" அவனின் கடைசி வார்த்தை அவளுக்கு கோபத்தை உண்டு பண்ணினாலும், அடக்கி கொள்ள வேண்டிய நிர்பந்தம் தான் அவளுக்கு,.....

ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு அவனை நோக்கியவள்,... "எனக்கு இந்த மாதிரி ட்ரஸ் எல்லாம் போட்டு பழக்கம் இல்ல சார், எனக்கு இது வேண்டாம்" என்றவாறு, அருகிலிருந்த மேஜையில் வைத்து விட, அந்த நொடியே அவளை நெருங்கி வந்திருந்தவன் அவளின் கைப்பிடியை பலமாகப் பிடித்து இழுத்தான்...

"என்னோட வார்த்தையை refuse பண்ணறதுக்கு உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்டி, இந்த வீட்டுக்குள்ள நான் வைக்கிறது தான் சட்டம், நான் சொன்னா நீ கேட்டு தான் ஆகணும், உனக்குப் பழக்கமா இல்லையா'ங்குறது எனக்கு முக்கியமில்லை, நான் சொன்னது நடந்தாகணும், இனி எதிர்த்து பேசுன கொன்னுடுவேன்" அவனது ஆவேசத்தில் பயந்து மிரண்டாலும், அவளால் அந்த உடையை கண்டிபாக அணிந்து கொள்ள முடியாது என்ற மனநிலை தான், எனவே,..
"ப்ளீஸ் சார்... என்னால முடியாது, இப்படி பண்ணாதீங்க" என்றவளின் குரல் கெஞ்சலிலும் நடுங்கி வந்தது,..

ஆனால் அவனோ கேலியாக உதட்டை வளைத்து, "என்கூட உடம்புல ட்ரஸ் இல்லாம கூட இருப்ப, ஆனா இந்த ட்ரஸ் போட மாட்ட, என்ன லாஜிக்டி இது" என்று வினவ, அவன் கேள்வியில் உடல் கூசி நின்றவளோ,.. "வியர் பண்ணிட்டு வா" என்றபடி தன் கையில் உடையை திணித்தவனை
கண்களில் கண்ணீர் பளபளக்க பார்த்தாள்,...

"இந்த கண்ணீர் இதை பார்க்கும் போது நான் ஃபீல் பண்ணுற சந்தோசம் இருக்கே" அவள் கண்ணில் வழிந்த கண்ணீரை சுண்டி விட்டபடி அவன் குரூர சிரிப்புடன் சொல்ல, அவளுக்கோ மேலும் கண்ணீர் வடிந்தது,...

"எதுக்காக என் மேல இவ்வளவு வன்மம், நீங்க சொல்றதை எல்லாம் கூட நான் செய்ய தானே செய்றேன்" தழுதழுத்த குரலில் அவள் கேட்க,.. அவனோ,.. "ஏன்'னு உனக்கு தெரியாதா? என்னோட லைஃபையே ஸ்பாயில் பண்ணிட்டடி நீ ****" அவன் சொன்ன கெட்ட வார்த்தையை கேட்டு அவளது காதே கருகி போய்விட்டது, இப்படியொரு வார்த்தையை எல்லாம் சொல்லி அவளை யாரும் திட்டியது கிடையாது, தாய் தந்தையோடு இருந்த வரைக்கும் செல்ல பிள்ளையாக தான் வளர்க்க பட்டாள், செல்வந்தர்கள் இல்லையென்றாலும் கஷ்டப்படும் குடும்பமும் இல்லை, அவள் தாய் தந்தைக்கு தேவதையாக இருந்த பெண்ணவள், சதியின் சூழ்ச்சியால் ஆரவ்விடம் மாட்டிக் கொண்டு படக்கூடாத துன்பத்தை எல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்,..

"ரொம்ப வலிக்குதோ, சரி உனக்கு நான் ரிலீஃப் தரேன், இந்த வீட்டை விட்டு போயிடுறியா?" என்று பக்குவமில்லாத சிரிப்புடன் அவன் சொல்ல, அவளோ தலையை உயர்த்தி அவனை நேராக நோக்கியவள்,..."இல்ல, நான் போயிட்டா சித்ரா மேடம் தலைகுனியிற நிலை வரும், கண்டிப்பா போக மாட்டேன்," என்று உறுதியுடன் சொன்னவுடன்,
அவனின் முகம் எரிச்சலில் மண்டியது,...

"போக மாட்டேனு எனக்கு எதிரா சொல்றதுக்கு உனக்கு அவ்வளவு தைரியமா?" என்று சத்தமிட்டு மேஜையை பளார் என்று தட்ட, அவளோ அசையாமல் தான் நின்று கொண்டிருந்தாள், அந்த அமைதி அவனுக்கு இன்னும் கோபத்தை ஏற்ற,
அவளின் கையை மிரட்டலோடு பற்றி வலுக்கட்டாயமாக அருகே இழுத்தவன்,.."சொசுகு வாழ்க்கை வாழனும்னு என் அம்மாவை நல்லா யூஸ் பண்ணிக்கிற இல்ல, கடைசியா கேட்கிறேன் வீட்டை விட்டு போக முடியுமா? முடியாதா?" என்று பற்களை கடித்தான்....

அவளோ, கண்ணீரை விழுங்கிக் கொண்டு, இன்னும் தைரியமாக,
"எனக்கு தாங்க முடியாத வலியைக் கொடுத்தாலும், இந்த வீட்டை விட்டு நான் போக மாட்டேன்," என்றாள்....

அவளின் அந்த பிடிவாத குரல் அவனுக்கு சவாலாக ஒலித்தது, அவனின் மூச்சே கடுமையாய் மாற, அந்த நொடி அவன் மனதில் ஒரே எண்ணம் மட்டுமே 'இவளை எந்த வழியிலாவது உடைக்கணும், அவள் உறுதியை நொறுக்கணும்'

சில நொடிகள் அமைதியாக அவளைப் பார்த்துக் கொண்டிருந்தவன் திடீரென்று ஒரு வஞ்சக சிரிப்பைச் சிரித்தான், அந்த சிரிப்பு அவளது ஈரக்கொலையையே நடுங்கச் செய்தது,...

"ஓகே... நீ போக வேண்டாம், ஆனா இங்க நான் சொல்ற மாதிரி தான் இருக்கணும், நான் சொன்னதை கேட்க்காம இருந்தா, உன்னை நசுக்கி நாயை மாதிரி ஆக்கிடுவேன்," என்று அவன் பற்களை கடித்து சொல்லி, மேஜையில் போட்டிருந்த அந்த குட்டி உடையைக் காட்டி,.. "அதை உடனே போட்டு வா," என்று வன்மையோடு கட்டளையிட்டான்....

அவள் அதிர்ச்சியோடு அவனை நோக்கி,.. "எனக்கு இந்த மாதிரி ட்ரஸ் போட்டு பழக்கம் இல்லைன்னு நான் சொல்லிட்டேன், கண்டிப்பா என்னால முடியாது" என்று மெளனமாக சொல்ல, அவன் கோபப்படாமல் சிரித்தான், அந்த சிரிப்பில்தான் அவளுக்கு வலியுண்டாகும் அச்சமே ஒலித்தது....

"இது தான் உன்னோட முதல் டாஸ்க், இந்த வீட்ல இருக்கணும்னா, நான் சொன்ன மாதிரி தான் போடணும், இல்லன்னா கதவைத் திறந்து போயிரு," என்று கொடூரமாக சத்தமிட்டான்....

தவிப்போடு அவனை பார்த்தவளுக்கு அவன் மனமிறங்க மாட்டான் என்பது அவனது பார்வையே சொல்லி விட, மெதுவாக அந்த உடையை கைகளில் எடுத்துக் கொண்டாள், அவளின் விரல்கள் நடுங்கின, முகத்தில் வெட்கமும் அவமானமும் கலந்த வலியுணர்வு தெரிந்தது....

"என்னடி? இன்னும் நிக்கறியா?" என்று அவன் திடீரென்று அவளின் தாடையைப் பிடித்து முகத்தை உயர்த்தியவன்..."சீக்கிரம் போ" என்று அவளை அப்படியே பின்னால் தள்ளி விட, கால்களை ஊன்றி விழாமல் நின்று விட்டவள், ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டுக் கொண்டு மெதுவாக உடை மாற்றும் அறையை நோக்கி நடந்தாள், அவனோ சாய்ந்து நின்று, குளிர்ச்சியான சிரிப்புடன் போகும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான் அவ்வளவு வன்மம் தெரிந்தது அவன் முகத்தில்,..

உள்ளம் முழுக்க அவமானத்துடன், கண்ணீரை அடக்கிக்கொண்டே அந்த குட்டி உடையை அணிந்து கொண்டாள் நித்திலா, அந்த உடை அவளது உடலை மறைக்கவில்லை, மாறாக, ஒவ்வொரு அசைவையும் வெளிக்காட்டும் அளவுக்கு கச்சிதமாக ஒட்டிக் கொண்டிருந்தது....

மெல்ல அடக்கப்பட்ட மூச்சுடன், தலையைக் குனிந்து கொண்டே அறைக்குள் வந்தாள், சோபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தவனுக்கு, அவள் வந்த சத்தம் கேட்கவும் கண்களை மேலே தூக்கினான்...

அவளை பார்த்த அந்த நொடி அவன் உதடுகளில் ஒரு கொடூரமான சிரிப்பு பரவியது... "வாவ்... ஸோ செ*ஸி இந்த ட்ரஸ்ல நீ எவ்வளவு ஹாட்டா இருக்க தெரியுமா?" என்று வார்த்தைகளால் குத்தினான்....

அவள் எதுவும் சொல்லாமல் தலையை மேலும் குனிந்து கொள்ள,
அவனோ தொடையை தட்டிக் கொண்டு எழுந்து வந்து மெதுவாக அவளை சுற்றி நடந்தான்....

"எல்லாம் போலி கண்ணீர், போலி பெருமை தான் இல்லையா உன்கிட்ட, என் அம்மாவை நீ தலைக்குனிய விடாம இருக்கிறதுகாக இந்த வீட்ல இருக்க போறியா, முதல்ல உன்னை நீ காப்பாத்திக்க, உன் நிலையைப் பாரு," அவள் காதருகே சென்று சிரித்தான்....

அவளின் கைகள் நடுங்கியது, அவளின் உதடுகள் ஏதோ சொல்ல முயன்றும், வார்த்தைகள் வரவில்லை, அவனோ அவளை அப்படியே நீண்ட நேரம் பார்த்தான், அந்த பார்வை உடலை மட்டும் பார்க்கும் பார்வை இல்லை, அவளை முழுக்க உடைத்து விடும் பார்வை....

"இப்படி ட்ரஸ் போட்டு நிற்கற உன்னை நான் என்னோட ஃபிரண்ட்ஸ் சர்க்கிள்ல காட்டினா, உன்னோட போலி மரியாதை நொடியிலே நசுங்கிடும், உங்களை மாதிரி ஆளுங்களுக்கு கூச்சம் மரியாதையெல்லாம் இருக்காது தானே" என்று வஞ்சகமாக கேட்க,
அவள் கண்கள் சிவந்து கண்ணீர் வழிந்தன, "சார்... தயவுசெய்து இப்படி சொல்லாதீங்க..." என்று குரலும் நடுங்கி வந்தது,..

சிரித்து அவளது தாடையை உயர்த்தி, அவள் விழிகளை நேராக பார்த்தவன்,
"இது தான் உன்னோட வாழ்க்கை, என் பொம்மையாக இருந்தால் மட்டுமே நீ இங்க இருக்க முடியும், இல்லைனா கதவை திறந்து வெளியே போயிரு, இப்போவும் உனக்கு சான்ஸ் தரேன்," என்று நிதானமான குரலில் அவன் சொல்ல,
அவள் ஒரு நிமிடம் அமைதியாக அவனை பார்த்தாள், அவனுடைய வார்த்தைகள் கத்தியாய் நெஞ்சை குத்தினாலும், "நீங்க உங்க கை பொம்மையா என்னை ஆட்டி வச்சாலும் கண்டிப்பா போக மாட்டேன், நான் போயிட்டா, சித்ரா மேடம் தலைகுனியுற நிலை வரும், அதுக்கெல்லாம் நான் காரணம் ஆக மாட்டேன்" தன் குரலை உறுதியோடு வைத்துக் கொண்டு சொன்னாள்...

அவள் விழிகளில் தெரிந்த அந்த உறுதி, அவன் எதிர்பார்த்ததை முறியடித்தது, அவன் நினைத்தது அவள் ஓடிப் போயிடுவாள் அவமானமடைந்து விலகுவாள் என்று, ஆனால் அவள் பின் வாங்க மறுத்து நின்றதால், அவனுடைய சிரிப்பு மெல்ல ஆத்திரக் கோபமாக மாறியது....
 
  • Angry
Reactions: shasri