கண்ணீர் - 26
"வெளியே போகணும் சீக்கிரம் ரெடியாகி வா" நித்திலாவிடம் தான் சொன்னான் ஆரவ், பதட்டத்துடன் திரும்பியவளுக்கோ இன்னைக்கும் அந்த கேவலமான இடத்துக்கு அழைச்சிட்டு போக போகிறாரா? என்ற பயம், அதனால்,.. "இ.. இல்ல நான் வரல" என்றாள் தயக்கத்தோடு,...
அவளை கூர்மையாக துளைத்தவனோ,.. "வா"ன்னு சொன்னா வா, எனக்கு எதிரா பேசுற வேலை வச்சிக்காத" கடுமையாக சொன்னான்,...
அவள் அசையாது அப்படியே நிற்க அவனுக்கோ ஆத்திரம், "இப்போ கிளம்பி வருவியா? மாட்டியா?" என்றான்,...
"இல்ல... என்னால அந்த மாதிரி இடத்துக்கு கண்டிப்பா வர முடியாது, எனக்கு ஏதாவது தண்டனை கொடுக்கணும்னு நினைச்சா வேறு மாதிரி கொடுங்க, ஏத்துகிறேன், ஆனா அந்த இடம் மட்டும் வேணாம் ப்ளீஸ் சார்" என்றாள் கெஞ்சலோடு...
அவளை அழுத்தமாய் பார்த்தவனோ அவள் விழிகளில் தெரிந்த பயத்தையும் பதட்டத்தையும் உணர்ந்தார் போல,... "என் ஃபிரண்ட் பையனுக்கு பர்த்டே அதுக்கு தான் போக போறோம்" மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டு அமைதியான குரலில் சொல்ல,.. 'ஓஹ்' என்று நினைத்துக் கொண்டவளுக்கு, 'உண்மையா தான் சொல்கிறாரா?' என்ற சந்தேகமும் வேறு, அவள் மனதின் கேள்வியை அவளது முகத்தை பார்த்து கணித்தவனுக்கு எரிச்சல் வர,.. "இப்போ நீ கிளம்பி வரியா? இல்ல நானே கிளப்பட்டுமா?" எள்ளலுடன் கேட்டவனிடம்,.. "இ.. இல்ல, நானே கிளம்பி வரேன்" என்றவளோ வேகமாக தனது அறை நோக்கி ஓடி விட்டாள்...
கொஞ்ச நேரத்தில் புடவை அணிந்து தயாராகி வந்தவள், எந்தவித முக பூச்சுக்களும் இல்லாமலேயே இயற்கை அழகில் ஜொலித்தாள், அவள் கைகளிலும் கழுத்திலும் காதிலும் சித்ரா அவளுக்காக வாங்கி கொடுத்த நகைகளை அணிந்திருந்தாள், சித்ரா ஏற்கனவே அவளிடம் சொல்லி இருக்கிறார் அல்லவா, வெளியே விஷேஷத்திற்க்கு எங்கேயாவது போனால் இந்த மாதிரி சிறு சிறு அணிகலன்கலாவது அணிந்து செல்ல வேண்டும் என்பதை, அதனை நினைவில் வைத்து அணிந்து வந்திருந்தாள், முடியை ஃப்ரீ ஹேர் விட்டிருந்தவள், பார்பதற்கு அழகு பதுமையாய் இருந்தாள்,...
தயாராகி தன் முன்னே வந்து நின்றவளை பார்வையால் கபளீகரம் செய்தவன் மூச்சை இழுத்து விட்டு தன் உணர்வுகளை அடக்கி கொண்டு அவளோடு கிளம்பினான், இருவரும் சித்ராவிடம் சொல்லி விட்டு தான் புறப்பட்டனர்....
சில நிமிட பயணத்திற்க்கு பின் விழா நடக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர், தீபன் வீட்டின் கார்டன் பகுதியில் தான் விழா ஏற்பாடு செய்திருந்தது, வீட்டின் முன்பகுதி விழா நடைபெறும் இடமாக அலங்கரிக்கப்பட்டிருந்தது, மாலைக்காற்றில் ஆடும் வண்ண விளக்குகள் முழு இடத்தையும் ஒரு மந்திர உலகம் போல ஒளிரச் செய்தது, மரங்களின் கிளைகளிலும், பாதை ஓரங்களிலும் சிறிய தங்க நிற லைட்டுகள் கொட்டியிருப்பது போல ஜொலித்துக் கொண்டிருந்தது....
மத்திய பகுதியில் அழகான மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் பிறந்தநாள் கேக் வைக்கப்பட்டு, அதைச் சுற்றி வட்டமாக மேசைகளும் நாற்காலிகளும் அடுக்கப்பட்டிருந்தது, ஒவ்வொரு மேசையிலும் மென்மையான வாசனை வீசும் மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன....
சற்று தூரத்தில் பெரிய ஸ்விம்மிங் பூல் ஒன்று இருந்தது, அதன் நீரில் வானவில் நிற விளக்குகள் பிரதிபலித்து மின்னிக் கொண்டிருந்தது, நீரின் மேல் மிதந்து கொண்டிருந்த சிறிய மலர் மெழுகுவர்த்திகள் கண்களை கவரும் அழகை தந்தன, அங்கு சில இளம் பெண்கள் மற்றும் ஆண்கள் கையில் பானக் குவளை வைத்துக் கொண்டு சிரித்தபடி உரையாடிக் கொண்டிருந்தனர்....
இசையின் மெதுவான ஒலி முழு இடத்தையும் நிறைத்திருந்தது, சிலர் டான்ஸ் ஃப்ளோரில் ஆடிக் கொண்டிருந்தனர், சிலர் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர், சுவையான உணவின் மணம் பரவி, விருந்தினர்கள் அனைவரையும் தன்னோடு இழுத்துச் செல்லும் மாதிரியாக இருந்தது அவ்விடம்....
அந்த இடத்தை கண்டதும் நித்திலாவின் கண்கள் ஆச்சரியத்தில் பெரிதாகியது, அந்த இடம் அவளுக்கு அழகாகவும் புதிதாகவும் இருந்தது, அதே சமயம், அவளுக்கு சிறிய பயமும், எதோ அந்நியமான இடத்தில் இருப்பது போல ஒருவித தயக்கமும் ஏற்பட்டது...
அவள் பயத்தை உணர்ந்தவன் பெருமூச்சோடு அவள் கரத்தினை பற்ற, அவனது திடீர் பற்றுதலில் அதிர்ந்து விழித்தாள் அவள்,.. "இப்போது எதுக்குடி முண்ட கண்ணை முழிச்சு பார்க்கிற, கையை தானே பிடிச்சேன்" என்று திட்டியவனோ,... "இங்கிருந்து போற வரைக்கும் என் பக்கத்திலேயே தான் இருக்கணும்" என்று கட்டளையோடு சொல்ல, அவளுக்கும் அதில் நிம்மதி, தலையை சம்மதமாக அசைத்துக் கொண்டாள்...
அதன்பின், அவர்களை கண்ட தீபனும் தனிஷாவும் அன்பாக வரவேற்றனர், நித்திலாவை பார்த்தவுடன் புன்னகையுடன் அவளது கையை பிடித்த தனிஷா "எப்படி இருக்க நித்திலா, ஐம் தனிஷா, இவர் என்னோட ஹஸ்பண்ட் தீபன், நாங்க ஆரவ் ஃபிரண்ட்ஸ்" என்று அன்பாக நலம் விசாரித்து தங்களையும் அறிமுகம் செய்து கொண்டாள், அதனோடு அவர்களின் ஒரு வயது மகன் வினித்தையும் அறிமுகம் செய்து வைத்தனர், பர்த்டே பாய்க்கு வாங்கி வந்த பரிசை கொடுத்த ஆரவ், நண்பனின் மகனை தூக்கி வைத்துக் கொண்டான், அந்த சிறு பிள்ளையை பார்த்ததும் நித்திலாவின் இதழ்களிலும் புன்னகை, "நீயும் தூக்கிக்க" என்று நித்திலாவின் கையிலும் குழந்தையை கொடுத்தாள் தனிஷா, தனிஷாவின் குரலில் இருந்த அன்பும், கண்களில் தெரிந்த சிரிப்பும் நித்திலாவின் பயத்தை சற்றே குறைத்திருக்க, மெதுவான புன்னகையுடன் அவளும் கொஞ்சம் பேச ஆரம்பித்திருந்தாள்,..
ஆரவ்வுடன் படித்த சில நண்பர்களும் கூட வந்திருந்தனர், ஜஸ்ட் அவர்களுக்கு ஒரு ஹாய் சொன்னவன், நித்திலாவை தனியே விட்டு நகரவே இல்லை, அந்த சமயம் அவனருகில் வந்த தீபன்.. "எல்லாரும் கூப்பிடுறாங்க, வரியா?" என்று அவன் தோளில் கை போட்டான்...
ஆரவ்வோ கண்களை சற்றே சுருக்கி,.. "இல்ல, நான் வரல," என்று மறுக்க,.. "டேய், ஏன் டா இப்படி? எப்பவுமே நீ தான் ஹைலைட், ஆனா இப்போ இப்படி சொன்னா என்ன அர்த்தம், பசங்கள்லாம் கிண்டல் பண்ணுறாங்க, பொண்டாட்டியை விட்டு நகரவே மாட்டான் போலயே அப்படின்னு" அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் ரகசியமாக சொன்னவன்,.. சற்று தொலைவில் நின்று சிலருடன் பேசிக் கொண்டிருந்த மனைவியை,
அழைத்து, நித்திலாவை கண்களால் சுட்டிக் காட்டி, 'கூடவே இரு' என்பது போல சைகை செய்துவிட்டு, நண்பனை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றுவிட்டான்....
சிறிது குழப்பமடைந்த நித்திலா, தனியாகிவிட்ட உணர்வோடு நிற்கவும், அதை கவனித்த தனிஷா உடனே அவளின் கையை மெதுவாகப் பற்றி, "சங்கடப்படாதே நித்திலா… இங்கே எல்லாரும் நம்ம ஃபிரண்ட்ஸ் தான், வா உனக்கு இன்ட்ரடியுஸ் பண்ணி வைக்கிறேன்" என்று அன்பாகச் சொல்லி அழைத்துச் சென்றாள்...
தனிஷாவின் குரலில் இருந்த நம்பிக்கை, நித்திலாவின் உள்ளத்திலிருந்த பதட்டத்தை மெதுவாகக் குறைத்தது, ஆரவ்வோ, தூரத்தில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தாலும், அவனது பார்வை இடையிடையே நித்திலாவை தான் தேடி வந்துகொண்டிருந்தது....
பார்ட்டி இன்னும் பரபரப்பாகி கொண்டிருந்தது, அந்த நேரத்தில் தான் சரியாக என்ட்ரி கொடுத்தாள் சோனாலி, அவளும் ஆரவ்வுடன் படித்தவள் தான், கல்லூரி நாட்களின் போது ஆரவ்வை ஒரு தலையாக காதலித்தவள், ஒரு கட்டத்தில் தன் காதலையும் அவனிடம் தெரியப்படுத்தி இருக்க, அவனுக்கு அவள் மீது காதல் உணர்வெல்லாம் வராததால் நாசுக்காக மறுத்துவிட்டான், ஆனால் சோனாலியால் தான் அவனின் மறுப்பை சட்டென்று ஏற்றுக்கொள்ள இயலவில்லை, மீண்டும் மீண்டும் அவனை நெருங்க முயற்சி செய்ய, அவனோ சற்று கோபத்துடனே எச்சரித்து இருந்தான், அதன் பிறகு அவன் வழியில் செல்லாமல் இருந்தாலும் அவனை விட்டுக் கொடுக்கும் எண்ணம் தான் இல்லை, ஆரவ்வின் மேனரிஷம் ஒரு பக்கம் அவளை ஈர்த்திருக்க, இன்னொரு பக்கம் அவனை திருமணம் செய்து கொண்டால் கோடீஸ்வரியாக வாழலாம் என்ற ஆசையும் இருந்தது, அதனால் எப்படியாவது அவனை அடைய வேண்டும் எனும் பிளானில் இருந்தவள் படிப்பு முடிந்த பிறகு தொழிலில் பிஸியாகி விட்டாள், பிஸியாகி போனாலும் ஆரவ்வை அவள் மறக்கவில்லை, கொஞ்ச காலம் ஆற போட்டு விட்டு மீண்டும் அவனிடம் பேச நினைத்திருந்தாள், அதற்குள்ளாகவே ஆரவ்வின் திருமணம் அவளின் தலையில் பேரிடியாய் வந்து விழுந்தது,...
மேக்கப், நவீன உடை, அழகு எல்லாவற்றிலும் மிளிர்ந்து வந்த அவளது கண்கள் நித்திலாவை பார்த்தவுடனேயே சிவந்து விட்டன, 'இவள்தானா…? இவளை தான் மேரேஜ் பண்ணிக்கிட்டானா ஆரவ்?' என்று உள்ளுக்குள் எரிந்தது....
அந்த நேரத்தில் தனிஷா, நித்திலாவை கூட்டத்திற்கு நடுவே அழைத்து வந்து, முகத்தில் புன்னகையோடு,"இந்தக் க்யூட்டான பொண்ணு யாரு தெரியுமா நித்திலா! ஆரவின் வொய்ஃப்" என்று அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைக்க, 'ஆரவ்வின் மனைவி' என்ற
அந்த வார்த்தை சோனாலியின் மனதில் அம்பாக பாய்ந்தது, முகம் புன்னகை போல இருந்தாலும், உள்ளுக்குள் கோபம் வெடித்துக் கொண்டிருந்தது...
'எனக்கு கிடைக்க வேண்டிய லைஃப் இன்னொருத்திக்கா இல்லை நான் விட மாட்டேன்' குரூரமாக நினைத்துக் கொண்டவளுக்கு நித்திலாவை ஏதாவது செய்ய வேண்டும் என்ற வன்மம் அதிகரித்தது,...
அந்த நேரம் பார்த்து வினித் பசிக்காக அழுக, நித்திலாவை நண்பர்களின் கூட்டத்தில் விட்டுவிட்டு, தனிஷா தன் மகனை கவனிக்க சென்றுவிட,
அந்த தருணத்தை பயன்படுத்திக் கொள்ள எண்ணிய சோனாலி நித்திலாவை நெருங்கினாள்,....
"ஹாய்.. நீ தான் ஆரவ்வின் மனைவியா?" என்று உதட்டில் பொய்யான புன்னகை பரவ அவளிடம் வினவ, நித்திலா புன்னகையோடு ஆம் என்ற தோரணையில் தலையசைத்தாள்....
"கொஞ்சம் வாங்களேன், பேசலாம்" அவள் ஸ்விம்மிங் பூல் பக்கம் நடக்க, நித்திலாவும் மறுக்க முடியாமல் அவளை நம்பி சென்றவள்,.. "ஆரவ் எப்போயும் பெஸ்ட்டா தான் டெசர்வ் பண்ணுவான், ஆனா அவனுக்கு கிடைத்தது என்ன தெரியுமா? ஒரு ஏழை பெண்ணு" சோனாலியின் வார்த்தைகளில் நேரடி அவமானம் இருந்தது. "இந்த மாதிரி கிளாமரும் க்ளாஸ்ஸும் இல்லாத, ஒரு சாதாரண பொண்ணு அவனுக்கு மேட்ச் ஆவாளா?" என்று கேலி கலந்த புன்னகையுடன் வினவ,..
நித்திலா திடுக்கிட்டாலும், தன்னுடைய தைரியத்தை இழக்காமல், "ஏழ்மை என் குற்றம் இல்ல, ஆனா நான் யாரையும் ஏமாற்றி எதையும் பெறல, பணம், அழகு எல்லாம் ஒருநாள் குறைஞ்சு போயிடும், ஆனா மனசு உண்மையாக இருந்தா அதுதான் வாழ்நாள் முழுக்க நிற்கும்" என்று அமைதியாக எதிர்த்து பேசினாள்....
அந்த வார்த்தைகள் சோனாலியின் கோபத்தை வெடிக்கச் செய்தது...
"என்னையே எதிர்த்து பேசுற அளவுக்கு உனக்கு தைரியமா" என்று குரல் உயர்த்தி கேட்க,.. "இது எதிர்த்து பேசுரதா எனக்கு தோணல, என் மனசுல பட்டத சொன்னேன்" நித்திலாவை அவளுக்கு பிடிக்கவே இல்லை, அதனால் அவள் பேசுவதும் பிடிக்கவில்லை, அவள் வார்த்தையை மீறி நித்திலா பேசிவிட்டாள் என்ற கோபம், அந்த கோபத்தில் அவளை ஏதாவது செய்ய வேண்டும் என்ற கொடூர எண்ணத்தில் அருகிலிருந்த ஸ்விம்மிங் பூலில் சிறிதும் யோசிக்காமல் தள்ளி விட்டுவிட, இதனை எதிர்பார்க்காத நித்திலாவோ "ஆஆஆ…" என்ற அலறலுடன் நீரினுள் விழுந்திருந்தாள், அவளின் சத்தத்தில் அங்கிருந்த சிலர் அதிர்ச்சி அடைய, தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த நித்திலா பயத்தோடு போராடிக் கொண்டிருந்தாள்...

Last edited: