கண்ணீர் - 27
நித்திலாவை தனியா விட்டு வந்திருந்தாலும் அவ்வப்போது அவளை கண்காணித்துக் கொண்டிருந்த ஆரவிற்க்கு திடீரென்று ஒரு முக்கியமான கால் வரவும் அதில் கொஞ்சம் பிஸியாகி விட்டான், ஆனாலும் அப்போதும் அவன் பார்வை நித்திலாவை தான் வட்டமிட்டுக் கொண்டிருந்தது, சோனாலி அவளிடம் ஏதோ தனியாக பேசிக் கொண்டிருப்பதையும் கவனித்தான், ஆனால் அதையெல்லாம் அவன் பெரிதாக நினைக்கவில்லை, சாதரண உரையாடல் என்று நினைத்தான், ஆனால் அடுத்த நிமிடம் நடந்தது அவனது கற்பனைக்கே அப்பாற்பட்டதாய் இருந்தது, சோனாலி நித்திலாவை பூலினுள் தள்ளி விடவும், ஒரு கணம் கூட யோசிக்காமல் ஓடி வந்தவன், தன் கோட்டை கழட்டி வீசிவிட்டு, பூலுக்குள் குதித்திருந்தான், நீரின் அடியில் தத்தளித்துக் கொண்டிருந்த நித்திலாவை, தனது பலம் கொண்ட கரங்களால் சுற்றிப் பிடித்து, மேலே இழுத்து கொண்டு வந்தான்,...
தண்ணீரின் மேற்பரப்பை உடைத்து வெளிவந்த அந்த நொடி, நித்திலாவின் மூச்சுத் திணறலுடன் கூடிய பயமும், ஆரவ்வின் துடிக்கும் இதயத் துடிப்பும் ஒன்றாக கலந்தது...
அவளைத் தன் கரங்களில் சுமந்தபடி, பூலை விட்டு வெளியே வந்தவன், நடுங்கிக் கொண்டிருந்தவளின் கன்னம் பற்றி, "ஏய் ஆர் யூ ஓகே" படப்படப்பான குரலில் வினவ, இது நாள் வரை அவனுடைய கோபமான அதட்டிய குரலையும் கட்டளையிடும் குரலையும் மட்டுமே கேட்டு பழகி போனவளுக்கு, அந்த நிமிடம் அவன் குரலில் சுழன்ற அச்சமும் அக்கறையும் புதிதாய் இருந்தது, அவன் விழிகளில் தெரிந்த தவிப்பு, பயம், அவளது உள்ளத்தில் ஒரு வித வெப்பமாகப் பரவி, இதயத்தை பூரிக்க வைத்தது,.. 'இவருக்கு என் மேல அக்கறை கூட இருக்கா?' என்ற உணர்ச்சி கண்களில் நீர் பவழம் போல சுரந்து வந்தது, அந்த நிமிடம் சொற்கள் கூட வாரவில்லை, உதடுகள் சிறிது நடுங்க, "ம்ம்ம்…" என்ற தலையசைப்பை மட்டும் தந்தாள் அவனுக்கு,...
நித்திலா நலமாக இருக்கிறாள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவுடன், ஆரவ்வின் உள்ளே எரிந்துகொண்டிருந்த கோபம் வெடிக்க, ஒரு நொடி கூட யோசிக்காமல், புயல்போல் நடந்து வந்து சோனாலியை நெருங்கி இருந்தவன் அவளது கன்னத்தில் இடியென தன் கை விரல்களை பதித்து இருந்தான்,...
"என் மனைவி மேல கை வைக்க உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்?" என்ற அவன் குரல் அதிர்ந்து ஒலித்தது, அங்கிருந்த அனைவரும் அச்சத்துடன் நின்று பார்த்தனர், நித்திலாவோ ஒரு கணம் அசைவற்று போய் நின்று அவனைப் பார்த்தாள்...
அவளது இதயம் அந்த வார்த்தைகளை கேட்கும் போதே வலுவாக துடித்தது, 'என் மனைவி…' என்ற அந்த சொற்றொடர் அவள் உள்ளம் முழுவதையும் நிரப்பியது, அவன் குரலில் இருந்த கொந்தளிப்பு அவளை அச்சப்படுத்தவில்லை, மாறாக, அவன் அவளை 'மனைவி' என்று அனைவரின் முன்னும் உரிமையோடு சொன்னதை எண்ணி, மனம் பூரித்து ஒரு புதுமையான நெருக்கம் அவளை தழுவி கண்ணில் தன்னிச்சையாக நீர் தேங்கியது....
அவளுக்காக கோபம் கொள்கிறான், அவளுக்காக அவனுடன் படித்த பெண்ணின் மீது கை நீட்டி இருக்கிறான், நினைக்கும் போதே நித்திலாவின் மனம் ரெக்கையின்றி பறந்து, உள்ளம் ஒரு இனிய அதிர்வோடு நெகிழ்ந்தது.,...
இதுவரை அவளுக்கு எண்ணற்ற காயங்களை கொடுத்தவன் தான் இன்று அவளுக்காக துடிக்கிறான் நினைக்க நினைக்க நித்திலாவின் உள்ளம் வியப்பிலும் பூரிப்பிலும் நனைந்து போனது,...
ஆரவ்வின் கண்களோ ரத்தமென சிவந்திருந்தது, அவன் குரலில் இருந்த அந்தக் கொடூரமான கோபத்தைப் பார்த்த சோனாலியின் முகம் வெண்மை படிந்து பயத்தால் நடுங்கியது....
அவனோ பற்களை கடித்தபடி, "சே ஸாரி டூ மை வொய்ஃப் ரைட் நவ்" என்று கட்டளையிட்டான், அவன் பார்வையின் தீவிரத்தைத் தாங்க முடியாமல், சோனாலி நடுங்கிய குரலில், "ஸா.. ஸாரி" என்று தலையை குனிந்தபடி நித்திலாவிடம் மன்னிப்பு கேட்டாள்,...
ஆரவ்வோ அவளை அனலாய் முறைத்து விட்டு தன்னுடைய கோட்டை எடுத்து ஈரத்தில் நடுங்கிக் கொண்டிருந்த நித்திலாவை தன் போர்த்தியவன், அவளை தன் கரங்களில் அள்ளி தூக்கிக் கொண்டு, ஒரு நொடி கூட தாமதிக்காமல் அங்கிருந்து காரை நோக்கி சென்றிருந்தான்,...
காருக்குள் அமர்ந்திருந்த நித்திலாவின் உடல் முழுவதும் ஈரமாய் இருந்ததினால், குளிரின் தாக்கத்தில் நடுங்கிக் கொண்டிருந்தாள், வண்டியை எடுக்க போனவனுக்கோ அவள் நடுக்கத்தை கண்டு அவனையும் அறியாமல் கவலை உண்டானது...
"என்னடி பண்ணுது, ஏன் இப்படி நடுங்குற" என்றவனின் குரலில் அப்பட்டமான கவலை தெரிய, அதனை உணர்ந்தவளுக்கு அந்த குளிர் நடுக்கத்திலும் இதழ்களில் மெல்லிய புன்னகை,...
"பைத்தியம் உன்னை தான் கேட்கிறேன்" அவளது புன்னகையை கண்டு கடுப்பானவனோ, அவள் உள்ளங்கையை பற்றி பரபரவென்று சூடு பறக்க தேய்த்து விட்டான்...
அவன் விழிகளில் அக்கறையும் தவிப்பும் தெளிவாக தெரிந்தது,
அவனின் உண்மையான அன்பும் அக்கறையும் அவள் உள்ளத்தை பரவசத்தால் நிரப்பியது....
அந்த பரவசத்தை முழுமையாக அனுபவிக்க முடியாமல் குளிரில் நடுங்கிய உடல் அவளை பெரிதாய் சோதிக்க, விழிகள் மூடி மெதுவாய் அவனது தோளில் சாய்ந்து கொண்டவளின் சுவாசம் வேகமாய் இருந்தது, சோர்வால் தன்னை கட்டுப்படுத்த முடியாமல் அவன் மீது விழுந்தவளை பார்த்தவனுக்கு சிறிது பயம் வந்தது, அவள் உடல் நடுங்குவதையும் உணர்ந்தவன், உள்ளுக்குள் கலங்கினான்,..
அந்த கலக்கம் அவனுக்கு புதிதாக இருந்தாலும், அதனை பற்றி பெரிதாக யோசிக்காமல்,
தனது வலிமையான கரங்களால்
அவளை நெருக்கமாக தழுவிக் கொண்டான் அவனது மார்பின் சூடு அவளின் குளிரை சுருட்டிக்கொண்டு போகும் என்ற நம்பிக்கையோடு,...
'நான் இருக்கேன்… பயப்படாத…' என்று சொல்ல வந்த
வார்த்தைகளை சொல்லாமல் அவன் விழுங்கிக் கொள்ள, ஆனால் அந்த வார்த்தையற்ற அணைப்பே
நித்திலாவிற்க்கு போதுமானதாக இருந்தது, அவளது உதடுகளில் ஒரு சிறிய புன்னகை முளைத்தது,...
அவளின் நடுக்கத்தை அடக்க அவன் விரித்த அணைப்பில், அவனின் இதயத்தில் அடங்கிக் கிடந்த உணர்வுகள் மெதுவாக மேலெழத் தொடங்கின, அவளது மூச்சு காற்று அவன் கழுத்தைத் தொட்ட நிமிடமே
மனம் கட்டுப்பாட்டை இழக்க, சற்றும் தயக்கமின்றி அவள் இதழ்களைக் கவ்விக் கொண்டான்....
அதிர்ச்சியுடன் விழிகளைத் திறந்த நித்திலாவிற்க்கு, அந்த கவ்வலில் இருந்த உரிமையும் பேராசையும்
விளக்கம் கேட்க முடியாத உணர்ச்சியாய் பாய்ந்தது, மறுக்காமல், தன் விருப்பத்தோடு அவனது ஆசையை எதிரொலிக்க
அதே தீவிரத்தோடு தன் உதடுகளை ஒப்படைத்தாள், இதுநாள் வரை அவன் முத்தத்திற்கு அடங்கி மட்டுமே போயிருந்தவள், இன்று அவனுக்கு சரிசமமாக அவனுக்கு ஈடாக முத்தமிட்டாள், அவளின் எதிர்வினை அவனது உள்ளத்தையே உலுக்கியது, சற்றே விரிந்த அவன் கண்கள் அடுத்த நொடியே பூரிப்பில் உருகி, அவளது இதழ்களிலேயே குடியேறின, இருவருக்கும் விலகும் மனநிலை இல்லாமல் ஒருவரை ஒருவர் சுவாசித்தபடி முத்தத்தில் ஆட்கொள்ள, நிமிடங்கள் நொடிகளாகக் கரைந்தது, அது ஒரு சாதாரண முத்தமல்ல, நெடியும், ஆழமுமாய், இதுவரை சொல்லப்படாத உணர்ச்சிகளின் மொழிபெயர்ப்பு போலிருந்தது, இருவரின் இதயங்களும் அதே ராகத்தில் ஒன்றாய் துடித்தது....
சற்றே சுயம் வந்து, அந்த முத்தத்திற்கு முடிவு கொண்டு வந்தது ஆரவ் தான், அவன் விலகியவுடன், அவன் கண்களில் எரிந்துகொண்டிருந்த தீவிரம் இன்னும் குறையாமல் நித்திலாவைத் தேடிக் கொண்டே இருந்தது, அந்த பார்வையைச் சந்திக்க முடியாமல், நாணம் கலந்த புன்னகையுடன் அவள் முகத்தை விலக்கி, ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டாள், அவளின் அந்த நாணம் அவனுக்குள் ஒரு வித பூரிப்பைத் தந்து உணர்வுகளை கிளிர்ந்த்தெழ செய்தது,...
இருப்பினும் இது தன் உணர்வுகளை வெளிக்கொணரும் இடம் இல்லை என்பதனை உணர்ந்து, தன் விரல்கள் கொண்டு ஈரமான கேசத்தினை மெதுவாகக் கோதியபடி, ஆழ்ந்த மூச்சை இழுத்தான், சில நொடிகள் கண்களை மூடி, மனதை அடக்கிக் கொண்டவன், பிறகு சாவியைத் திருப்பி காரை ஸ்டார்ட் செய்தான்....
காரை ஓட்டிக்கொண்டிருந்த அவனின் உள்ளம் இன்னும் சில நிமிடங்களுக்கு முன் நடந்த முத்தத்தில் தான் உருகியிருந்தது.
அவளது இதழ்களின் ஈரமும்,
அவள் தானாகவே அவனுக்கு கொடுத்த அந்த எதிர்வினையும்,
அவனது மனதை சுவாசத்தை அடைக்கும்படி இருந்தது,..
நித்திலா அவன் பக்கவாட்டில் அமர்ந்திருந்தாலும், அவனது விழிகளில் தெரிந்த அந்த மாற்றத்தை உணர்ந்தும் அமைதியாகவே வந்தாள், ஸ்டியரிங் வீலை பற்றியிருந்த அவன் கரங்கள் லேசாகத் துடித்ததையும் அவள் கவனித்தாள், இருவரின் மனதிலும் உணர்ச்சிகள் பொங்கி எழுந்தாலும், காருக்குள் நீண்ட அமைதியே நிலவியது....
சாலையை நோக்கி ஓட்டிக் கொண்டிருந்தவன் உள்ளுக்குள்...
'இவள் முத்தம்… என்னை பைத்தியமாக்கிடும் போல இருக்கே… எல்லாருக்கும் இப்படித்தான் இருக்குமா? இல்ல எனக்கு மட்டும் தான் இப்படியா?' அவன் சிந்தனைக்கும், அவனது சுவாசத்தின் வேகத்துக்கும் இடையே ஓர் போராட்டமே நடந்துகொண்டிருந்தது,
நித்திலாவோ அவனது அமைதியை நுண்ணிய சைகைகளில் உணர்ந்து, அவளும் எதுவும் சொல்லாமல் பக்கவாட்டில் சாய்ந்து கொண்டு வந்தாள்,...

Last edited: