• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் - 30

Zeeraf

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 23, 2025
73
25
18
India
கண்ணீர் - 30

அடுத்த நாள் காலை, காய்ச்சல் குணமாகி இருந்ததால் ஆரவ் வழக்கம்போல புத்துணர்ச்சியுடன் காணப்பட்டான், வாயின் கசப்பினால் சாப்பிட தான் பிடிக்காமல் போனது,
சித்ராவின் கட்டளையால், காலையில் மட்டும் அலுவலகம் செல்லாமல் ஓய்வு எடுத்தான்...

நித்திலாவோ அவனுக்காக சாப்பாடு கொண்டு வந்து வைத்தபோது,
அவளது பார்வையில் தெரிந்த அக்கறையை அவனால் தவிர்க்க முடியவில்லை, அவளை நோக்கி எதுவும் சொல்லாமல் இருந்தாலும்,
அவளது அந்தச் சின்னச் சின்ன கவனிப்புகள் அவனது மனதில் எங்கோ பதிந்து கொண்டு தான் இருந்தது,..

நாட்கள் கடக்க, அவர்களின் வாழ்க்கை மெல்லிய மாற்றங்களைச் சந்தித்தது, முன்பு இடைவிடாமல் கோபத்துடன், வன்மையுடன் நடந்துகொண்டிருந்த ஆரவ்வின் நடைமுறை, இப்போது சற்று மென்மையடைந்திருந்தது,
நித்திலாவை நோக்கும் அவனது பார்வை முன்புபோல் கடினமாக இல்லாமல், சில சமயங்களில் சொல்ல முடியாத ஒரு உரிமை கலந்த அக்கறையை வெளிப்படுத்தியது...

அவனது ஒவ்வொரு சிறிய செயலையும் கவனித்துக் கொண்டிருந்த நித்திலாவிற்க்கு,
அந்தச் சின்ன மாற்றங்களே பெரும் அர்த்தம் கொண்டவையாகியது,
அவனது கண்கள் சில நேரங்களில் தன்னை தேடுவது, அவளது சிரிப்பை உற்று நோக்கும் விதம்,
இவை எல்லாம் நித்திலாவின் உள்ளத்தில் புது உணர்வுகளை விதைத்தன...

ஒவ்வொரு நாளும் அவள் உணர்ந்தாள், அவன் மீது தான் கொண்ட பாசம், இப்போது சாதாரண ஈர்ப்பை தாண்டி, உள்ளுக்குள் வேரூன்றி வளர்ந்து கொண்டிருக்கிறது என்று...

மெல்ல மெல்ல முளைக்கும் ஒரு சிறிய செடியைப் போல, அந்த அன்பு அவளுக்குள் பரவி கொண்டிருந்தது,
அது மிகச் சாமான்யமாகத் தொடங்கியிருந்தாலும், இப்போது அந்த உணர்வு, அவளின் ஒவ்வொரு எண்ணத்தையும், ஒவ்வொரு நடப்பையும் மாற்றி விட்டது...

அவன் சிரித்தால் அவள் மகிழ்ந்தாள்,
அவன் வருத்தப்பட்டால் அவளும் வருந்தினாள், அவனது சிறிய அக்கறை கூட அவளது மனதை பெரிதாக உருகச் செய்தது...

இப்படி போய்க் கொண்டிருந்த தினத்தில் தான் அன்று ஒரு நாள் தீபன் மற்றும் தனிஷாவின் கட்டாயத்தின் அழைப்பில் அவர்களின் வீட்டிற்கு வந்திருந்தான் ஆரவ் நித்திலாவோடு,...

நித்திலாவைக் கண்ட கணமே,... "ஸாரி நித்திலா... அன்னைக்கு சோனாலி அப்படி நடந்துப்பான்னு நாங்க நினைக்கவே இல்ல, உன்கிட்ட ஸாரி கேட்கனும்னு மனசு உறுத்திக்கிட்டே இருந்தது, வீட்டுக்கு வரவும் தைரியமில்ல, சித்ரா ஆண்ட்டிக்கு இந்த விஷயம் தெரிஞ்சா அவங்க எதிர்வினை எப்படி இருக்கும்னு எங்களுக்கு ரொம்ப நல்லாவே தெரியும், அதனால தான் ஆரவ்கிட்ட உன்னை வீட்டுக்கே அழைச்சிட்டு வர சொன்னேன், ஸாரி நித்திலா" என்று அவள் கரம் பற்றி மன்னிப்பு கேட்க, தீபனும்,... "ஸாரி'மா,.. மனசுல எதையும் வச்சுக்காத" என்று மன்னிப்பு கேட்டிருக்க, அவளுக்கு தான் சங்கடமாகி போனது,...

"இப்படியெல்லாம் ஸாரி கேட்டு என்னை சங்கடப் படுத்தாதீங்க, நீங்க என்ன பண்ணீங்க" என்று அவள் சொல்ல,... "இல்ல நித்திலா, எங்களுக்காக தானே நீ அன்னைக்கு பார்ட்டிக்கு வந்த, ஆரவ் என்னை நம்பி தான் உன்னை விட்டுட்டு போனான், ஆனா நான் தான் உன்னை தனியா விட்டுட்டு போயிட்டேன், அதனால தானே இப்படி நடந்தது" என்றாள் வருத்தத்துடன்,...

"ஐயோ ஏன் இப்படி சொல்றீங்க, அதோட அன்னைக்கு பெருசா ஒன்னும் நடக்கலையே, இப்படியெல்லாம் நீங்க என்னை சங்கடப்படுத்துவீங்கனு தெரிஞ்சா நான் இங்கே வந்தே இருக்க மாட்டேன், இதை விட்டுடலாமே ப்ளீஸ்" என்க, தனிஷாவும் அவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல், அவளிடம் மன்னிப்பு கேட்ட நிம்மதியோடு அவளோடு அமர்ந்து பல கதைகளை பேசத் தொடங்கினாள்,...

ஆரவ்வை பற்றி தான் நிறைய சொன்னாள், நித்திலா தான் இனிக்க இனிக்க கேட்டாள், தீபனும் தனிஷாவும் காதலித்து அவர்களின் குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்டதால் குடும்பத்தை விட்டு விலகி வாழ்கிறார்கள் எனும் விஷயத்தையும் தெரிந்து கொண்டாள், வினித் பிறந்த பிறகு பேரன் மீது உள்ள ஆசையில் இப்பொதெல்லாம் அவர்களின் பெற்றோர்கள் போய் வர ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதையும் தனிஷாவின் மூலம் தெரிந்து கொண்டாள்,...

"பேசிட்டு இருந்ததுல நான் உங்களுக்காக ரெடி பண்ணி வச்சிருந்த பாதாம் கீரை மறந்துட்டேன், இருங்க நான் எடுத்துட்டு வரேன்" என்று தனிஷா உள்ளே சென்று விட, அந்த இடத்தில் ஆரவ், நித்திலா தீபன், வினித் மட்டுமே இருந்தனர்,...

தீபனின் கையில் வினித் இருக்க, அந்த நேரம் பார்த்து தீபனின் போன் ஒலிக்கவும்,... "இவனை கொஞ்ச நேரம் சமாளி" என்று நண்பனிடம் மகனை கொடுத்து விட்டு, தீபன் எழுந்து சென்று விட, ஆரவ் குழந்தையை கொஞ்சத் தொடங்கி அவனோடு விளையாட ஆரம்பித்தான்...

அந்தச் சமயத்தில் அவனது இதழ்களில் தெரிந்த சிரிப்பு நித்திலா ஒருபோதும் பார்த்திராத விதமான சிரிப்பு, அவன் குழந்தையை கொஞ்சும் அழகே தனித்துவமாக தெரிந்தது அவளுக்கு, சமீப நாட்களாக அவளிடம் வன்மையை காட்டவில்லை என்றாலும் சிரித்து பேசியும் இருக்கவில்லையே, அவன் மீதான காதலை அவள் உணர ஆரம்பித்திருந்தாலும் அவனுக்கு தன் மீது காதல் இருக்கிறதா? அதனை உணர ஆரம்பித்து விட்டானா? என்ற விடை தான் அவளுக்கு கிடைக்கவில்லை,..

இப்பொதெல்லாம் அவனின் ஒவ்வொரு செயல்களையும் அவனுக்கே தெரியாமல் ரசிக்க ஆரம்பித்திருந்தாள், அவன் மீதுள்ள காதல் அவளை வெகுவாய் ஈர்த்து, அவனை அணு அணுவாய் ரசிக்க ஆரம்பித்திருந்தது, அவளது உள்ளத்தை மென்மையாக மாற்றியது,..

இப்போதும் தன்னை மறந்து, அவன் குழந்தையை கொஞ்சுவதை ரசிக்க தொடங்கியவள், அவனது பார்வை சட்டென்று தன் மீது விழவும் சற்று பதறித் தான் போனாள்,..

விழிகளை சுருக்கி அவளை கூர்மையாய் பார்த்தவனோ,.. புருவத்தை சிறிது உயர்த்தி, 'என்ன?' என்ற தோரணையில் வினவ,..
அவளும் தொண்டையை செருமிக் கண்டு,.. "ரொம்ப கியூட்டா இருக்கு," மெல்லிய குரலில் சொன்னாள்,..

"என்னது?" அவன் விழிகள் சுருங்க
"நீங்க தான்," என்று அவள் பதில் சொல்லவும், அவனின் விழிகள்
நொடியில் ஆழ்ந்து அவளையே ஊடுருவிப் பார்க்க ஆரம்பித்தன...

அந்த ஒரு பார்வையிலே, அவள் சொல்லாமல் விட்ட உணர்ச்சிகளைப் படித்து விடுவானோ என்ற பயத்தில்,
நித்திலா சற்றே நாணத்தில் முகத்தை குனிந்து கொண்டு, சங்கடத்தை மறைக்க முயன்றபடி, "நான் குட்டி பையனை சொன்னேன்…" என்று அவசரமாக சொன்னாள்...

அவள் சொல்வதைக் கவனித்தவனோ, விழிகளில் சற்றே தந்திரமான ஒளியுடன், "நம்பிட்டேன்…" என்று குறுஞ்சிரிப்ப்புடன் சொல்ல, அந்த சிரிப்பு அவளது உள்ளத்தை எங்கோ தட்ட, வெட்கத்தில் அவள் இன்னும் முகத்தைத் தாழ்த்திக்கொண்டாள்….

"என்னடா... படுத்தி எடுத்து இருப்பானே" என்று கேட்டபடி தீபன் வந்தமர,... "நோ..ஹீ இஸ் ஹாப்பி வித் மீ," என்று கூறி குழந்தையின் கன்னத்தில் ஆசையாக முத்தம் ஒன்றை வைத்து அவனை அணைத்து வைத்துக் கொண்டான்,..

அந்த தருணத்தில், நித்திலாவால் அவனை ரசித்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை, குழந்தையைத் தழுவியபடி அவனது முகத்தில் தெரிந்த அந்த புன்னகை
அவள் இதுவரை பார்த்திராதது....

அவர்களின் உரையாடல் ஓடிக்கொண்டிருக்க, நித்திலாவோ இடையிடையில் அவன் சிந்தும் புன்னகையை விடாமல் ரசித்துக் கொண்டே இருந்தாள், அவன் இதழ்களில் தெரிந்த அந்த சின்னச் சிரிப்பு அவளுக்குள் ஒரு விதச் சிலிர்ப்பை ஏற்படுத்தியது....

அவளது பார்வை நீண்ட நேரம் தன் மீது படர்ந்திருப்பதை உணர்ந்த ஆரவ், உரையாடல்கலுடன் ஓரவிழிகாளால் அவளை நோக்க,
அந்த ஓரக்கண் பார்வை நித்திலாவை சற்றே பதற வைத்தது, முகத்தை விலக்கிக் கொள்ள நினைத்தும் முடியவில்லை, அவனை ரசிப்பது அவளுக்கே தெரியாமல் பழக்கமாகி விட்டதல்லவா…! இன்று மாட்டிக் கொண்டாள்...

"தீபன் கொஞ்சம் இங்கே வறீங்களா ப்ளீஸ்" தனிஷா சமையலறையிலிருந்து குரல் கொடுக்க,... "இவளுக்கு வேற வேலையே இல்ல, இருடா வரேன்" ஆரவ்விடம் சொல்லி விட்டு, தீபன் நகர, நித்திலாவின் புறம் திரும்பியவனோ... "இவ்வளவு நேரமா என் முகத்துல என்ன பார்த்துட்டு இருந்த?" என்று குறுகிய குரலில் கேட்டான்....

அவனின் கேள்வியால் நித்திலாவின் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பித்தது, முகத்தில் வெட்கத்தின் சிவப்பு விரிந்து, கண்களைத் தாழ்த்திக் கொண்டவள்... "எ…எதுவும் இல்லை…" என்று தடுமாறினாள்..

ஆரவ்வோ புருவத்தை உயர்த்தி.. "நிஜமாவே எதுவும் இல்லையா" இன்னும் கூர்மையாய் வினவ,
அவனது குரலில் இருந்த அந்த சுருக்கமான உறுதியும் கிண்டலும், நித்திலாவை மேலும் வெட்கத்தில் ஆழ்த்த,.. "குட்டி பையன் ஏதோ சொல்றான்" என்று அவன் எண்ணத்தை குழந்தையின் பக்கம் மாற்றி விட்டவள், துடித்த இதயத்தில் கைவைத்து அழுத்திக் கொண்டாள்,...

கொஞ்ச நேரம் அங்கிருந்திருந்தவர்கள்,.. அவர்களின் உபசரிப்பை இன்முகமாய் ஏற்று கொண்டு, கிளம்பி இருந்தனர், காரில் அவள் தனியாக மாட்டவும்,... "இப்போ சொல்லு எதுக்கு என்னையே பார்த்த" என்றான்..

அந்த கேள்வி, அவனது ஆழ்ந்த பார்வை, இவை அனைத்தும் நித்திலாவை முற்றிலும் மெளனமாக்கிவிட. தப்பிக்கப் முடியாமல், முகத்தைத் தாழ்த்திக் கொண்டாள்...

அவளது நாணம் அவனுக்குப் புதிது இல்லை என்றாலும், அவளது இன்றைய நடவடிக்கை புதிது தானே, மெதுவாக அவள் தாடையை விரலால் தூக்கி, அவள் விழிகளைச் சந்திக்க வைத்தவன்,.. "இப்போ எதுக்கு இப்படி சிவந்து என்னை டெம்ப்ட் பண்ணுற, ஏன் பார்த்தேன்னு தானே கேட்டேன்"
என்றான்...

சில நொடிகள் அமைதியாக இருந்தவள், திடீரென்று தன்னம்பிக்கையை திரட்டி, அவனது கண்களை நேராகச் சந்தித்து
"எனக்கு உங்களை பிடிச்சிருக்கு… உங்க ஸ்மைல், உங்க ஸ்பீச் எல்லாம் அதான் உங்களைப் பார்த்தேன்" என்ற அவளது வார்த்தைகள், காற்றில் தொங்கிக் கொண்டிருந்த அமைதியை உடைத்தது....

ஒரு கணம் அவன் சற்று அதிர்ந்து போனாலும் பின் உதடுகளில் கேலி புன்னகையை கொண்டு வந்து... "எனக்கு தெரியும்… எல்லா பொண்ணுங்களும் இப்படி தான் சொல்லுவாங்க," அவனது வார்த்தைகள் கூர்மையான கத்தியாய் அவளது மனதில் பட்டு, முகத்தில் மலர்ந்திருந்த ஒளியை சட்டென்று வாட செய்திருந்தது....

அவளது வாடியை முகத்தைக் கண்டதும் குளிர்ந்த குரலில், "எப்போ என் லைஃபை விட்டு போறதா இருக்க?" என்று கேட்டான்...

அந்த கேள்வி, அவளது உள்ளத்தில் புயலை கிளப்பியது, விழிகளின் ஓரம் நனைந்த கண்ணீர் மெதுவாய் வழிந்தது, அவனை நேர் கொண்டு பார்த்தவள் நடுங்கிய குரலில்,
"நிஜமாலுமே… நான் போகணும்னு நீங்க எதிர்பார்க்கிறீங்களா?" என்று கேட்டாள்...

அவளது வேதனையைப் புறக்கணித்தவனோ, உதடுகளில் கடுமையான சிரிப்பை வரவழைத்து,..
"என்னால உன் கூட லைஃப்லாங் வாழ முடியாது… நீ கட்டிலுக்கு மட்டும் தான் எனக்கு சரிப்பட்டு வருவ" என்று கூறி அவள் மனதை சிதறடித்துவிட,
விழிகளை மூடி மௌனமாய் கண்ணீர் சிந்தியவளின் உள்ளம் உடைந்து போன உணர்வு தான், அவனிடம் எதிர்பார்த்த அன்பும், நம்பிக்கையும் காற்றில் கரைந்து மறைந்து விட்டது போலாகியது பெண்ணவளுக்கு...

 
  • Angry
Reactions: shasri