• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கண்ணீர் - 31

Zeeraf

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 23, 2025
73
25
18
India
கண்ணீர் - 31

வீட்டிற்கு வந்ததும் தனது அறைக்குள் நுழைந்து கொண்டாள் நித்திலா, கண்ணீர் நிற்காமல் வடிந்தது, அவன் கூறிய அந்த கடுமையான வார்த்தைகள் நித்திலாவின் உள்ளத்தையே சிதைத்து விட்டன, 'நீ கட்டிலுக்கு மட்டும் தான் சரிப்பட்டு வருவ…' அந்த வார்த்தைகள் அவளது காதுகளில் மீண்டும் மீண்டும் ஒலித்துக் கொண்டிருந்தது, அவனின் மீது நம்பிக்கை வைத்திருந்தாள், அவனது சிரிப்பு, அக்கறை, சிறிய அசைவுகள் எல்லாவற்றையும் மனதில் சேமித்து வைத்திருந்தாள், ஆனால் இப்போது அவனது கண்களில் தன்னுடைய மதிப்பு சாம்பலாகி விட்டதை உணர்ந்து கதறி அழுதாள்...

'ஏன் இப்படிச் சொன்னார்? உண்மையிலேயே அவர் மனதில் எனக்கு இடம் இல்லையா? நான் நினைச்சது எல்லாம் என் கற்பனைதானா? என்னை வெறும் உடல் சுகத்துக்காக மட்டும் தான் யூஸ் பண்ணிக்கிட்டாரா?' என்ற கேள்விகள் உருண்டோட,.. 'எப்படி பார்த்தாலும் உன்னை பிடிக்காம தானே கல்யாணம் பண்ணிக்கிட்டாரு, ஆரம்பத்திலிருந்து உன்னை அவர் வீட்டை விட்டு வெளியே தான் போக சொல்றாரு, இதை மறந்துட்டு எப்படி நீ அவரும் உன்னை நேசிக்கிறதா? ஏத்துகிட்டதா நினைக்கலாம்' உள்ளே ஒரு குரல் பேசியது,..

ஏனோ அவளால் இதை ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை, படுக்கையில் முகம் புதைத்து அழுதாள், அந்த அழுகை, வெறும் கண்ணீராக மட்டும் அல்ல, உடைந்த நம்பிக்கையின் வலியாகவும் கலந்து இருந்தது...

எவ்வளவு நேரம் அழுதிருப்பாளோ அது அவளுக்கு மட்டுமே வெளிச்சம், அழுகையை நிறுத்தி விட்டு நிதானமாக யோசித்தாள், 'பிடிக்காதவருடன் இருந்து அவருக்கு பாரமாக இருப்பதற்குப் பதிலாக,
விலகிப்போகலாமே' அந்த எண்ணம் அவளை வலிக்க வைத்தாலும்,
இதுவே ஒரே வழியாக தோன்றியது..

மெல்ல படுக்கையிலிருந்து எழுந்து கண்ணீரைத் துடைத்தவளின் முகம் சோர்ந்திருந்தாலும், கண்களில் சற்றே உறுதி தெரிந்தது, ஒரு பெண்ணாக தன்னுடைய மதிப்பை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக உணர்ந்தாள்...

அறையை விட்டு வெளியேறி நேராக சித்ராவின் அறை நோக்கி தான் சென்றாள், அன்று விடுமுறை நாள் என்பதால் சித்ரா வீட்டில் தான் இருந்தார், மெதுவாக அடிகளை எடுத்து வைத்து சித்ராவின் அறைக்கதவை தட்ட,.. அவரோ,.. "கதவு திறந்து தான் இருக்கு" என்று சொல்லவும், அவளும் உள் நுழைந்தாள்..

நித்திலாவை அவர் பார்த்தவுடன், "நித்திலா… என்னாச்சு? முகம் ஏன் வாடி இருக்கு?" அவள் சரியாக இல்லை என்பதை சட்டென்று கண்டுபிடித்து விட்டார் அவள் முகத்தை கணித்தே, அவரின் அந்த ஒரு கேள்வியே நித்திலாவின் மனதை மேலும் உருக்கி விட, ஏனோ அதற்கு மேல் முடியாமல் அவள் சித்ராவை கட்டித்தழுவி, கதறி விட்டாள்,..

அவளது அழுகையை கண்டு பதறி போனவரோ,... "என்னமா என்னாச்சு" என்று பதட்டத்தோடு வினவ, மூச்சை உள்ளிழுத்து அழுகையை கட்டுக்குள் கொண்டு வந்து, அவரை விட்டு பிரிந்தவள்,.. "நான் உங்களை மேடம்னு கூப்பிடுறதுல, என் கிட்ட நிறைய முறை கோபப்பட்டிருகிங்க…
அத்தைன்னு கூப்பிடு'ன்னு பலமுறை சொல்லியும், நான் தோணும் போது கூப்பிடுறேன்னு சொல்லி மறுத்துகிட்டே வந்தேன்.

அதுக்குக் காரணம்… எனக்கே ஒரு மாதிரி இருந்தது, உங்களை அத்தை'ன்னு கூப்பிட நான் தகுதியானவள் தானான்னு
மனசுக்குள்ள உறுத்தல் இருந்தது" என்று சொல்லியவளின் குரல் நடுங்க, அவரோ அவளது கன்னத்தை வருடியடி "மடச்சியாடி நீ… எப்படி நீ அப்படி நினைக்கலாம், நீ ஆரவ் பொண்டாட்டியா ஆகுறதுக்கு முன்னாடில இருந்தே என் மகளா தான்டி உன்னை கவனிச்சேன், அப்போவே அப்படி நினைச்சேன்னா என் பையனோட மனைவியா இந்த வீட்டுக்குள்ள காலடி எடுத்து வச்ச பிறகு உன்னை என் மனசில எந்த இடத்துல வச்சிருப்பேன்னு நினைச்சி பாரு, உனக்கு தகுதி கிடையாதுன்னு நீயே நினைச்சுக்கிட்டு இருக்கியே தவிர, எங்களுக்கு நீ அப்படி இல்ல, பணம் பெரிய விஷயம் இல்லை நித்திலா, குணம் தான் முக்கியம், அது உன்கிட்ட நிறைய இருக்கு" என்று மென்மையாகச் சொன்னார்...

சித்ராவின் வார்த்தைகள் நித்திலாவின் உள்ளத்தில் ஆழமாக பதிந்து உறுதியான ஆறுதலை ஊற்றியது, அவளது கண்கள் சற்று மெலிதாகி, கண்ணீர் வழிந்தவாறே சிரிக்க முயன்றவள்,... "எனக்கு உங்களை அத்தைன்னு கூப்பிடுறதை விட அம்மான்னு கூப்பிட தான் ஆசை, நான் உங்களை அம்மான்னு கூப்பிடலாமா?" என்றாள்,..

அவளது குரலில் இருந்த ஏக்கமும்
உள்ளத்தில் இருந்த பேராசையும் சித்ராவிற்கு புரிய, முகத்தில் பரவிய பாசமான சிரிப்போடு அவளது தலையை மெல்ல வருடி, "அதை நீ கேட்கணுமா நித்திலா? என் மகள் என்னை அம்மான்னு கூப்பிடுறதை நான் மறுப்பேனா?" என்றார் மகிழ்ச்சியோடு...

அவரின் அந்த வார்த்தைகளே நித்திலாவின் உள்ளத்தை உருகியது,
கண்ணீர் வழிந்தது… ஆனால் அந்தக் கண்ணீர் துக்கத்தினால் வந்தது இல்லை, மனநிறைவின் கண்ணீராய் ஒளிந்தது...

அவள் மெல்ல தலையை சித்ராவின் மார்பில் சாய்த்தபடி, "அம்மா…" என்று சொல்ல, சித்ரா இருகரங்களாலும் அவளை மென்மையாக அணைத்துக் கொண்டார், அவரது அன்பான அணைப்பில் அவளது மனதில் ஆறுதல் பரவத் தொடங்கி நிம்மதியும் பாதுகாப்பும் நிறைந்த உணர்வை தந்தது அவளுக்கு,...

அவருக்கோ அவள் எதற்காக அப்படி அழுதாள் என்ற கேள்வி தொக்கி நின்றிருந்தது, கேட்காமலும் இருக்க முடியவில்லை, அவள் மனதில் அப்படி என்ன வேதனை இருக்கு என்பதை அறிந்து கொள்ளும் நோக்கில்,.."ஏன் அப்படி அழுத நித்திலா" என்று வினவ.. மெல்ல அவரிடமிருந்து விலகியவள்,... "அழ தோணுச்சு'மா" என்று சொல்லிவிட்டு,... "நான் ஒன்னு சொல்லுவேன், கோபப்படாம கேட்பீங்களாம்மா" என்றாள்,...

"என்ன கேட்க போற நீ" என்றவரின் புருவங்களோ முடிச்சிட்டது, சில நொடிகள் மௌனம் காத்தவள் பின்,...
மெல்லிய குரலில், "அம்மா… நான் இங்கிருந்து… இந்த.. வீட்டை விட்டு போகலாம்னு நினைக்கிறேன்…" என்று சொல்ல, அந்தச் சொற்கள் சித்ராவின் இதயத்தையே குத்தியது...

"என்ன சொல்றே நித்திலா?" என்று அதிர்வாக கேட்டவரின் முகத்தில் கோபத்தின் சாயலும் தெரிந்தது,...

"இனி என்னால இங்கே இருக்க முடியாது'ம்மா" அவள் தழுதழுத்த குரலில் சொல்ல,... "ஏன்? எதுக்காக இருக்க முடியாது, ஆரவ் ஏதாவது சொன்னானா? அதுக்காகவா இந்த முடிவை எடுத்த" என்று வினவ
அவளோ கண்ணீர் விட்டபடி,.. "அவருக்கு என்னை பிடிக்கல, இதுக்கு மேலயும் அவருக்கு பாரமா இருக்க எனக்கு விருப்பம் இல்ல, தயவு செய்து என்னை போக விடுங்க" கை கூப்பி வேண்டியபடி
கேட்டவளை கோபமாக ஏறிட்டவர்,..
"எப்படி நீ இந்த முடிவுக்கு வரலாம் நித்திலா" சற்றேபிஉயர்ந்த குரலில் கேட்டு அவள் தோளை அழுத்தமாகப் பற்றியவர்,.. "நீ இங்கிருந்து போக கூடாது, உன்னை நான் போகவும் விடமாட்டேன், இது உன் வீடு, உன் இடம், ஆரவ் கோபத்துல என்ன வேணும்னாலும் சொல்லி இருக்கட்டும், அதுக்காக நீ வீட்ட விட்டு போவியா? என்ன முட்டாள் தனமான முடிவு இது" என்று ஆதங்கமாக கேட்டவர்,... "அவன்கிட்ட நான் பேசுறேன்" என்றார்,...

"இல்ல,.. இதுக்கு மேல பேசுறதுக்கு எதுவும் இல்ல, என்னை விட்டுடுங்க, நான் போயிடுறேன், இதுக்கு மேல நான் இங்கே இருந்தன்னா மைண்ட் அப்சட்ல நான் சூசைட் பண்ணிக்குவேன், அதனால உங்களுக்கு தான் பிரட்சனைம்மா, என்னால உங்களுக்கு எந்தவித பிரட்சனையும் வர கூடாதுன்னு நான் நினைக்கிறேன்" என்று கண்ணீர் விட்டு சொன்னவளை அதிர்ந்து பார்த்தவரோ, அவள் மனநிலை மோசமாக இருப்பதை உணர்ந்தார்,..

அவள் தற்கொலை வரைக்கும் யோசிக்கிறாள் என்றால் ஆரவ்வால் அவள் எத்தனை தூரம் பாதிக்கபட்டிருப்பாள் என்பது அக்கணம் புரிந்தது, அவள் வாழ்கையை காப்பாற்றுவதாக எண்ணி, தானே அவளை பாலும் கிணத்தில் தள்ளி விட்டிட்டேனோ என்று எண்ணி தவித்துப் போனவர்,..
"முதல்ல உட்காரு, தண்ணியை குடி" அவளை ஆசுவாசபடுத்திவிட்டு, அவளது கரத்தை பற்றி நிதானமாக பார்த்தவர்,... "ஆரவ்வை உனக்கு பிடிக்கலயா நித்திலா, அவன்கூட உனக்கு வாழ இஷ்டமில்லையா?" என்று கேட்டார்,...

கலங்கிய விழிகளுடன் அவரை ஏறிட்டவளோ,... "ரொம்ப பிடிக்கும், அவரை மனசார நேசிக்கிறேன், அவர் கூட ரொம்ப வருஷம் சந்தோஷமா வாழனும்னு எனக்கு ஆசை" என்று சொன்னவளை குழப்பமாய் பார்த்தவர்,... "அப்புறம் ஏன் போக நினைக்கிறமா" என்றார்,...

"எனக்கு அவரை பிடிச்ச மாதிரி அவருக்கு என்னை பிடிக்கலமா, கொஞ்ச நாளா அவர் என் மேல காட்டுன, அன்பு, பரிவையெல்லாம் நினைச்சு அவரும் என்னை நேசிக்கிறாருன்னு நினைச்சேன், ஆனா அது உண்மையில்ல, அவர் என்னைக்கும் என்னை ஏத்துக்க மாட்டாருன்னு இன்னைக்கி புரிஞ்சிடுச்சு, அதனால தான் அவர் கூட பாரமா இருக்க விரும்பாம போக முடிவெடுத்துட்டேன், அவர் சந்தோசமா இருக்கட்டும்மா, இதுக்கு அப்புறம் அவருக்கு பிடிச்ச மாதிரியான வாழ்க்கையை வாழட்டுமே, எனக்காக அவர் விருப்பத்தை மீறி அவருக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க, நீங்க இப்படி செய்திருக்க கூடாதும்மா, உண்மையிலேயே அவர் தான் பாவம், நான் அவருக்கு சூட்டாகவே மாட்டேன், தயவு செய்து என்னை எங்கேயாவது கண்காணாத இடத்துக்கு அனுப்பி வச்சிடுச்சிங்க, ப்ளீஸ்மா" என்று அவரது காலிலேயே விழுந்து விட்டாள் நித்திலா,...

அவளை எழுப்பி அமர வைத்தவர்,.."நீ அவசரப்படுறியோன்னு தோணுது நித்திலா, அவனுக்கு உன் மேல அன்பு இருக்கு, அவன் கண்ணுல நான் பார்த்திருக்கேன்" என்றார்..

"அது அன்பு இல்ல, வெறும் ஈர்ப்பு, நான் கருப்பு தோலாகவும், அழகு கம்மியாகவும் இருந்திருந்தா அந்த ஈர்ப்பு கூட அவருக்கு என் மேல வந்திருக்காது, எனக்கு இதுல சின்ன சந்தோஷம், குறைந்த பட்சம் என் மேல ஈர்ப்பாவது வந்ததேன்னு" என்றாள்,..

"வீட்டை விட்டு போய் என்ன பண்ணுவ"

"நீங்க கொடுத்த படிப்பு இருக்கு, நான் வாழ்ந்துடுவேன்ம்மா" என்றாள் உறுதியாக..

"இல்ல.. என்னால உன்னை ஒரேடியாக விட முடியாது, நீ போகணும்னு முடிவெடுத்துட்ட, சரி போ, அவனை விட்டு பிரிந்து வாழு, உன்னோட இந்த பிரிவு அவன் மனசுல தாக்கத்தை கொண்டு வரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு, என் பையனை பத்தி நன்கு தெரிந்ததால சொல்றேன், நிச்சயம் அவனுக்கும் உன் மேல காதல் இருக்கு, பார்க்கலாம் இதுக்கு அப்புறமாவது அவன் வெளியே கொண்டு வரானான்னு" என்று அவர் ஆழ்ந்த மூச்சை விட்டு சொல்லிட,.. அவளுக்கும் அதில் சிறு நம்பிக்கை இருந்தாலும், இன்று அவன் சொன்ன வார்த்தையின் தாக்கத்தை நினைத்தவுடனே அப்படி இருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றியது, மேலும் அவர் தன்னை போக அனுமதி தந்ததே பெரிய விஷயம் என்று நினைத்தவள், அந்த கணமே தனது உடைகளை பேக் செய்ய சென்றுருந்தாள்...
 
  • Love
Reactions: shasri