கண்ணீர் - 33
நித்திலா சென்று விட்ட ஏமாற்றமும் வலியும் அவன் நெஞ்சை குத்திக் கொண்டிருந்தது, எத்தனை புயல்கள் மனதில் சுழன்றாலும், அவளை எப்படியாவது மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற தீர்மானம், அவனது ஒவ்வொரு நரம்பிலும் ஊர்ந்து கொண்டிருந்தது...
அந்த அவசரத்தில், கூட்டத்தின் நடுவே அவள் பெயரை சொல்லிக் கொண்டு தேடினான், "நித்திலா… நித்திலா…" என்று..
அவள் அவனோடு இருந்த வரைக்கும்,
ஒரு முறை கூட அவன் பெயரால் அழைத்ததே இல்லை, "ஏய்… வா… போ…" என்று குளிர்ச்சியாக கட்டளையிடும் பாணிதான் எப்போதும் இருந்தது...
ஆனால் இன்று அவளை இழந்து விட்ட பயம், அவளை மீண்டும் காண வேண்டும் என்ற துடிப்பு எல்லாம் சேர்ந்து அவனின் இதழ்களை அவளது பெயரை உச்சரிக்க வைத்தது...
அந்த ஒலி, அவன் இதயத்தின் ஆழத்தில் இருந்து வந்தது போல,
அவளது பெயரை ஒவ்வொரு முறை கூறியபோதும், அவன் கண்களில் கண்ணீர் பெருகியது...
'எத்தனை நாள் நீ அவளது பெயரை சொல்லாமல் இருந்திருப்பாய்
ஆனால் இன்று அந்த பெயரே உன் உயிர் மூச்சு போல ஆகிவிட்டது'…
என்று அவன் மனசாட்சி கூறியது,..
ஒவ்வொரு மூலையும் அவன் கண்கள் அவளைத் தேடின, ஆனால் அவள் எங்கும் இல்லை, மருத்துவமனை வாயில்வரை ஓடிப்போனவன்,
அங்கேயும் சிலரிடம் விசாரித்தான்,
"இப்போ தான் ஒரு பொண்ணு வந்தாங்க… கர்ப்பமாக இருந்தாங்க, எந்த பக்கம் போனாங்கன்னு தெரியுமா?" அவனது குரலில் பரிதாபமும் அவசரமும் கலந்திருந்தது....
"எங்களுக்கு தெரியாது, சார்."
"நாங்கள் பார்க்கலையே." இந்த மாதிரி பதில்கள் தான் அவனுக்கு வந்து சேர்ந்தது, அந்த பதில்கள் அவனது மனதை மேலும் உடைத்தது,
மருத்துவமனை முழுவதையும் சுற்றினான், ஒவ்வொரு அறையிலும் அவளது முகத்தைத் தேடினான்...
ஆனால் அவள் தான் அவன் கண்ணில் படவே இல்லை, அவளை மறைத்த வானம், அவளை ஒளித்த பூமி போல அந்த மருத்துவமனை அவனை வெறுமையோடு மட்டுமே பார்த்தது...
அவன் கைகள் நடுங்கின, இதயம் தாங்க முடியாமல் அழுந்தியது. 'அவள்தான்… நிச்சயம் அது அவள் தான்… ஆனால் ஏன் என்னிடம் இருந்து மறைந்துவிட்டாள்?' அந்த புலம்பல்களுடனே வீடு வந்து சேர்ந்தவனின் பார்வை சித்ராவைத் தான் தேடினது...
அவர் வழக்கம்போல் அமைதியாக சோபாவில் அமர்ந்து மேகஸீனை புரட்டிக் கொண்டிருந்தார், அவரது முன்னிலையில் வந்து நின்றவனோ,.. "நித்திலா கர்ப்பமா இருக்க விஷயம் தெரிஞ்சும் என்கிட்ட எப்படிம்மா உங்களுக்கு மறைக்க தோணுச்சு" அவன் வார்த்தைகள் துடித்தன, கண்கள் சிவந்து வழிந்தது..
அவரோ அவனை சலனம் இல்லா பார்வை பார்க்க, அவனோ,..
"எனக்கு என் மனைவியும், என் குழந்தையும் வேணும், இப்போதாவது சொல்லுங்க மாம்… அவ எங்கே இருக்கா?" என்றான்,...
அவன் விழிகளில் கண்ணீரின் தடங்கள், வார்த்தையில் கெஞ்சல்,
இதயத்தில் பேரார்வம் அவளை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று...
ஆனால் சித்ராவோ அப்போதும்
எந்த சலனமும் காட்டவில்லை,
அமைதியாக அவருடைய கண்கள் கீழே பார்த்துக் கொண்டிருந்தன, அந்த அமைதியே அவனது இதயத்தை மேலும் கிழித்தது...
மகனின் வார்த்தைகள் அவரது இருதயத்தைச் சிதற வைத்தாலும் அவர் நித்திலாவிற்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காகவே மௌனமாகி போனார்...
வீட்டை விட்டு வெளியேறிய நித்திலா, சித்ராவின் வற்புறுத்தலின் பெயரில் அவர் ஏற்பாடு செய்து கொடுத்த வீட்டில் தான் குடியேறினாள், மனதில் வலியும் வேதனையும் மூச்சை அடைக்கும் அளவிற்க்கு இருந்தாலும், இனி தன் வாழ்க்கையில் தான் மட்டும் தான் என்ற எண்ணத்தோடு வாழ நினைத்து விட்டாள், இப்போதும் சித்ராவிற்கு சுமையாக இருக்கிறோமே என்ற எண்ணம் அவளை போட்டு உருக்குலைத்தது,...
சிறிது நாட்கள் அவர் சொல்வது போல் இருந்துவிட்டு, பிறகு எப்படியாவது அவரை போராடி சம்மதித்து வைத்து கண்காணாத இடத்திற்கு போய்விட வேண்டும் என்று எண்ணினாள், ஆனால் அதற்குள்ளாகவே அவளது கர்ப்பசெய்தி அவளுக்கு தெரிய வந்தது, மிகவும் சந்தோசம் கொண்டாள், சித்ராவிடமும் பகிர்ந்து கொண்டாள்,..
அவரும் மிகவும் சந்தோசம் கொண்டவர் அவளை பார்க்கவும் வந்திருந்தார், அவளை பரிசோதனைக்காகவும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றவர், அனைத்தும் நலமாக இருப்பதை உறுதி படுத்திக் கொண்டு,.. "ஆரவ் கிட்ட இந்த விஷயத்தை சொல்லலாம் நித்திலா" என்றார்,..
அவளோ வேண்டாம் என்று முடிவாக மறுத்து விட்டாள், "இப்போ அவன் தன் தவறை உணர்ந்துட்டான், யாருக்காகவும் எதுக்காகவும் கெஞ்சாதவன் நீ எங்கே இருக்கன்னு கேட்டு என்கிட்ட கெஞ்சினான், அவனுக்கு உன் மேல நிறைய அன்பு இருக்கு நித்திலா" என்றார்,...
"நான் அன்னைக்கே சொன்னேன்ம்மா, அவருக்கு என் மேல இருக்கிறது வெறும் ஈர்ப்பு தான், உடம்பு சரியில்லாத நேரத்துல ஒரு நைட் நான் என்னோட ரூம்ல இருந்தா கூட என்னை தேடி ரூம்க்கு வந்திடுவாரு, அது அன்பால இல்ல, ஈர்ப்புனால, இதுக்கு மேல நான் பச்சையா சொல்ல விரும்பலம்மா, என்ன இருந்தாலும் நீங்க அவரோட அம்மாவா போயிட்டீங்களே" ஒரு பெருமூச்சுடன் நிறுத்தியவள்,.. மேலும்,... "நான் இனிமே அவர் லைஃப்ல நுழைய கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன்," என்று சொல்ல,.. அவரோ அதிர்வாய்,... "என்னால உன்னோட இந்த முடிவை அக்ஸப்ட் பண்ணிக்க முடியாது நித்திலா, இப்போ இன்னொரு உயிரும் வரப் போகுது, அந்த சின்ன உயிரை பத்தி யோசிச்சி முடிவெடு" என்றார் சற்றே கோபமாய்...
"என் குழந்தையை என்னால தனியா பார்த்துக்க முடியும்மா" அவள் சொல்ல,..."என் பேரப்பிள்ளை அப்பா இல்லாம வளர நான் அனுமதிக்க மாட்டேன், அவனுக்கு பாட்டியான நானும் இருக்கேன்" என்றார் முடிந்த மட்டும் கோபத்தை காட்டாமல்...
அவள் மௌணமாகி விட,... அவரோ,.. "நீ டைம் எடுத்துக்க, எவ்வளவு நாள் எடுக்கணும்னு தோணுதோ எடுத்துக்க, உனக்கு எப்போ அவனை மன்னிச்சு அவன் கூட வாழனும்னு தோணுதோ, அப்போ சேர்ந்து வாழு, இந்த விஷயத்துல நான் உன்னை கட்டாயப்படுத்த மாட்டேன்" என்று சொல்ல,.. "ஆனா அம்மா,.. அவருக்கு என் மேல அன்பு இல்ல" என்று திரும்ப திரும்ப இதையே சொன்னவளிடம்,... "சரி.. இல்லைனே வச்சிக்க, உனக்கு அவனோட அன்பு புரியிர நேரம் புரியட்டும், அது வரைக்கும் நீ அவன் கண்ணுல படாமலேயே இரு" என்றார்,...
"சரி,.. ஆனா நீங்க உங்க பையன் கிட்ட சொல்லிட மாட்டீங்களே" என்றாள் சந்தேகமாக,... "சொல்ல மாட்டேன்"அவர் சொல்ல,.. "சத்தியம் பண்ணி சொல்லுங்க" அவள் தன் கரத்தை நீட்டவும்,... "என் மேல நம்பிக்கை இல்லையா உனக்கு" என்றார்,...
"உங்க பையன் கண்டிப்பா என்னை தேடுவாறு, அவருக்கு நான் எவ்வளவு தேவைன்னு அவர் கூட இருந்த நேரம் புரிஞ்சிக்கிட்டிருக்கேன், பையன் மேல இருக்க பாசத்துல நீங்க சொன்னாலும் சொல்லுவீங்க, என்னால நம்ப முடியாது" என்று சொன்னவளை சின்னதாய் முறைத்து விட்டு சத்தியமும் செய்து கொடுத்தார்,.. அந்த சத்தியம் தான் அவரது நெஞ்சை சங்கிலி போலக் கட்டியிருந்தது....
மகனின் தவிப்பைக் கண்டும்,
'இங்கே தான் இருக்காள்' என்று சொல்வதற்கு அவரது நா எழவில்லை,..
அவர் விழிகள் கீழே தரையை தான் பார்த்துக்கொண்டே இருந்தன, தாயின் அந்த அமைதியே ஆரவுக்குக் கொடூரமான பதிலாக மாறியது,
"என் வேதனை கொஞ்சம் கூட உங்களை உருக்கலையாமா" என்று கேட்க, சித்ராவோ மகனின் நெஞ்சில் வெடிக்கும் அந்த வேதனையை
தன் இதயத்தில் உணர்ந்தபடியே
வெளியே எதையும் வெளிப்படுத்தாமல், அமைதியில் புதைந்து அமர்ந்திருந்தார்....
அவரின் அந்த அமைதி ஆரவ்விற்க்கு மறுப்பும் கோபமுமாக தோன்ற
சித்ராவிற்க்கோ அது ஒரு சத்தியத்தின் சுமையாக தான் இருந்தது,...
தாயின் அந்த அமைதி
மனம் வெடிப்பது போல வலித்தது அவனுக்கு, கண்களில் ஏற்கனவே சிதறி வழிந்த கண்ணீர், அவனது கேட்கப்படாத சொற்களின் ஓசையாய் சித்ராவின் காதில் விழுந்தாலும், அவரது உதடுகள் அசையவேவில்லை...
அந்த நிமிஷத்தில் தான் 'இங்கே நின்று கேட்டால் பதில் வராது, இவரிடம் கேட்பதற்கு பதில்
அவளை தேடிப் பிடிக்க வேண்டியது தான் தனது கடமை' என்று முடிவெடுத்தான்...
சோபாவில் அசையாமல் இருந்த தாயை ஒரு தடவை வேதனையோடு பார்த்தவன்,.. 'நீங்க சொல்லலைன்னா பரவாயில்லை,
நான் கண்டிப்பா என் நித்திலாவை தேடி கண்டுபிடிப்பேன்' என்று மனதில் சத்தியமிட்டவனின் விழிகள் புதிய தீக்கினத்தை பிரதிபலித்தது,..
அவள் இல்லாமல் வாழ முடியாது என்று ஏற்கனவே மனம் ஒப்புக் கொண்டிருந்ததால், அவளைத் தேடும் அந்தப் பாதையில் எத்தனை தடைகள் வந்தாலும் பின் வாங்கமாட்டேன்
என்று உறுதி கொண்டான்...
காரில் ஏறியவன் ஏற்கனவே தேடி களைத்து சலித்து விட்ட இடத்திலிருந்து மீண்டும் தேட ஆரம்பித்தான், எங்கே போயிருப்பாள், எந்த முகவரியில் இருப்பாள், எந்த தெருவில் வச்சிப்பாள் எதையாவது பிடிக்க வேண்டும் என்ற ஆவல் அவனது சிந்தனையை நிரப்பியது, அவள் நிச்சயம் உள்ளூரில் தான் இருக்கிறாள் என்பது மட்டும் இன்றைய நாளில் வெட்ட வெளிச்சமாகியது..
தனியாக தனது தேடலை ஆரம்பித்தான், நகரின் ஒவ்வொரு மூலையிலும் சுற்றி திரிந்தான், நித்திலா எங்கு போயிருப்பாள் என்று யோசிக்கையில், அவள் தனியாக எதையும் செய்யாதவள், புதிதாக எங்கும் அறிமுகம் இல்லாதவள்… அப்படியிருக்க அவள் எங்கே தங்கி இருப்பாள் என்ற கேள்வி அவனது உள்ளத்தைச் சிதறடித்தது, ஆரம்பத்திலேயே அவள் வீட்டிலும் அக்கம் பக்கத்திலுள்ளவர்களிடமும் விசாரித்து பார்த்து விட்டான், இன்று மீண்டும் சென்று விசாரித்தான், ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை,..
மருத்துவமனைக்குச் சென்றான்,
அவள் பெயரை பதிவு செய்திருப்பார்களா என்று
ரெஜிஸ்டர் எடுத்து அவனே பார்த்தான், ஆனால் அவள் பெயருக்கு அருகில் முழுமையற்ற முகவரி தான் போட்டு இருந்தது,..
அடுத்த நாள் காலை கோலாகலமாக இருந்த அவனுக்கு சந்தேகம் ஏற்பட்ட ஒரு சிறிய நகர்ப்பகுதியில் அவளின் முகம் எங்காவது தெரியுதா என்ற ஆர்வத்துடனே ஒவ்வொரு வீதியையும் சுற்றினான், பார்ப்பவர்களிடம் எல்லாம் அவளது புகைப்படத்தை காட்டி விசாரித்தான்,
அனைவரும் இல்லை என்ற தலையசைப்பை மட்டுமே தந்தனர்,..
நாள் முழுதும் தேடியும் சின்ன சுவடு கூட கிடைக்காததால் சோர்ந்து போய் காருக்குள் வந்து அமர்ந்தான், அந்த நொடி அவனது நெஞ்சு மிகக் கடுமையாக வலி கொடுத்தது, இருப்பினும் கண்டுபிடித்து விடுவேன் எனும் நம்பிக்கையும் இருந்தது,..
அடுத்த சில நாட்கள் அவனுக்கு அலுவலகமே மறந்து போனது,
ஒவ்வொரு நாளும் புதிய இடங்களில் தேடிக் கொண்டிருந்தான், சில சமயம் தவறான தகவல்களும் கிடைத்தன,
அவற்றையும் நம்பி அவசரமாக ஓடி சென்று, வெறும் விரக்தியுடன் திரும்பி வந்தான்...
ஒரு வாரம் முழுவதும் அவனது வாழ்க்கை வெறும் தேடலாகவே மாறியது, அந்த தேடலின் நடுவில் தான் மீண்டும் மருத்துவமனைக்கு வந்த போது ஒரு சுவடு கிடைத்தது...
அவள் சமீபத்தில் ஒரு மாதாந்திர சோதனைக்காக இங்கே வந்திருக்கிறாள் என்று ஒரு தாதி சொல்ல அவளது வார்த்தைகள்
ஆரவ்வின் இருளில் ஒரு விளக்கைப் போல ஒளிர்ந்தன, ஆனால்…
அந்த ஒளி எவ்வளவு வேகமாக வந்ததோ, அதே வேகத்தில் அணைந்துவிட்டது, ஆரவ் அங்கே நின்றவண்ணமே, தன் நெஞ்சை பிடித்துக் கொண்டு மூச்சு விட மறந்தவன் போலத் தடுமாறினான்,
நம்பிக்கை அந்த கணத்தில் வந்து
அதே கணத்தில் சிதறி போனது....