கண்ணீர் - 35
வீட்டிற்க்கு வந்து சேர்ந்தவன், தன்னிடம் ஏதோ பேச வந்த தாயை ஏறெடுத்தும் பார்க்காமல் தனது அறைக்குள் நுழைந்து கொண்டான், சித்ராவிக்கோ அவன் கோபம் நியாயம் என்றே பட ஒரு பெருமூச்சுடன் வந்து அமர்ந்து கொண்டார், கோமலம் இரு நிமிடங்களுக்கு முன்பு தான் போன் செய்து நடந்த அனைத்தையும் சொல்லி இருந்தார் சித்ராவிடம்...
முதலில் ஆரவ் யார் என்பது தெரியாமல் போனாலும் ஆரவ் நித்திலாவின் உரையாடல்களை வைத்து அவன் யார் என்பதையும் அறிந்து கொண்டார், கோமலம் சித்ராவிற்கு விசுவாசமானர் என்றாலும் அவரின் மகனை எல்லாம் பார்த்ததில்லை, இன்று தான் அவனை நேரில் பார்த்திருந்தார்,...
நித்திலாவை அவன் கண்டுவிட்டான் என்ற நிம்மதி சித்ராவிற்கு நிறையவே இருந்தது, இனி அவன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இருந்தாலும், தன் மீதுள்ள மகனின் கோபத்தையும் வருத்தத்தையும் எப்படி தீர்க்க போகிறோம் என்ற கவலையும் போட்டு மனதை அழுத்தியது.,..
அன்றைய இரவு தான் வெகுநாட்களுக்கு பிறகு நிம்மதியாக உறங்கினான் ஆரவ், அடுத்த நாள் பல நாட்களாக சவரம் செய்யாத தாடியை சவரம் செய்து விட்டு பழைய ஆரவ்வாக அலுவலகம் சென்றான்...
நீண்ட நாட்களாகச் சோகத்திலும் சிதைவிலும் வாழ்ந்தவன், இன்று பழைய உறுதியையும் பழைய புன்னகையையும் மீண்டும் எடுத்து வைத்துக் கொண்டான்...
அலுவலகம் சென்று கொண்டிருந்தவனின் மனம் மனைவியை காண வேண்டும் என்று ஏக்கத்தில் துடித்தாலும், இவ்வளவு காலையிலேயே அவளை தொந்திரவு செய்ய மனமின்றி மனதை கட்டுபடுத்திக் கொண்டான்,..
அலுவலக மேசையின் மீது கோப்புகள் விரித்து வைத்திருந்தாலும், அவனது மனம் நித்திலாவின் எண்ணத்தில் தான் சுற்றிக்கொண்டிருந்தது, நேற்று அவளிடம் கெஞ்சிப் பார்த்தான், காலில் விழுந்தும் மன்னிப்பு கேட்டான், ஆனால் அதனால் எதுவும் பயன் இல்லை என்பதனை உணர்ந்து தான் சற்று குரலை உயர்த்தி பேசி இருந்தான்,...
'கெஞ்சினால் வேலைக்கு ஆகாது,
அவள் மசிய மாட்டாள், பழைய ஆரவ்வாக நான் மாறினால் தான் அவள் வருவாள், அதுதான் அவளை சமாளிக்கக் கூடிய வழி.' என்று உறுதியான முடிவொன்றை எடுத்தான், அவளை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர வேண்டும் என்றால், தனது சோர்வு, வருத்தம், கெஞ்சல் இவை எல்லாவற்றையும் தள்ளி விட்டு, உறுதியான மனிதனாக நிற்க வேண்டும் என்று அவன் தீர்மானித்தான்....
இதனை நினைத்தவுடன் அவன் முகத்தில் ஒரு வலிமையான உறுதியின் ஒளி தோன்றியது,
அவனது விழிகள் பழைய தீப்பொறியை மீண்டும் பெற்றன...
நேரம் முன்னோக்கி நகர்ந்துக் கொண்டிருந்தாலும், அவனுக்கோ ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகவே நீண்டது போல் இருந்தது, கடிகாரக் கூண்டு சுழன்ற ஒவ்வொரு நொடியும் அவனது இதயம் துடிக்கும் ஓசை சத்தமாகவே கேட்டது...
'இனி காத்திருக்க முடியாது, அவளை உடனே பார்க்கவேண்டும்' என்று மனதில் தீர்மானித்தவன், அலுவலக வேலைகளையும் மறந்து, காரின் சாவியை எடுத்துக் கொண்டு வேகமாக புறப்பட்டான், வண்டி சாலையில் பாய்ந்தாலும், அவனது மனம் முன்பே அவளிடம் சென்று விட்டது, சாலையின் ஒவ்வொரு வளைவுகளிலும், ஒவ்வொரு நிமிடத்திலும் அவளை காணப்போகின்றோம் என்ற எதிர்பார்ப்பில் அவனது இரத்தம் சூடாக ஓடியது....
'இன்னைக்கு என்னவெல்லாம் பேச போகிறாள்னு தெரியல, வீட்டுக்கு கூப்பிட்டா வருவாளா? நிச்சயம் வர மாட்டா? அவளுக்கு ரொம்பவும் அழுத்தம் கொடுக்க கூடாது, அதே சமயம் அவளை விட்டு இருக்கவும் முடியாது' என மனதிற்குள் உரைத்தபடி வந்தவனின் முகத்தில் யோசனையின் சாயல்,..
ஓரிரு நிமிடங்களில் வண்டி அந்த வீட்டின் முன் நின்றது, காரின் கதவை திறக்கும் நொடியிலேயே, அவனது இதயம் மிகுந்த சப்தமிட்டு துடித்தது,
கதவின் மறுபுறம் நித்திலா இருக்கிறாள் என்பதே அவனுக்கு ஒரு போரின் தொடக்கமாக இருந்தது...
காலிங் பெல்லை அழுத்தியவுடன் சற்று நேரத்தில் அவன் எதிர்பார்த்த நித்திலா வந்து கதவை திறக்கவில்லை, கோமலம் தான் நின்றிருந்தார், ஆரவ்வை கண்டதும்... "உள்ளே வாங்கப்பா" என்றார் இன்முகமாய்,..
அவனும் மென்புன்னகையுடன் உள்ளே வந்தவன்.. "நித்திலா எங்கே?" என கேட்க,.. "ரூம்ல தான் இருக்கு, நீங்க போய் பாருங்க" என்றார்,.. அவர்களுக்குள் என்ன பிரட்சனை என்று அவருக்கு தெரியாது, ஆனால் என்ன தவறு செய்திருந்தாலும் மனைவி காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் குணம் அனைவருக்கும் வந்து விடாது என்றே தோன்றியது அவருக்கு, அந்த ஒரு செயலில் ஆரவ்வின் மீது அவருக்கு நல்ல எண்ணம் உருவாகி இருக்க, சீக்கிரமே இவர்கள் ஒன்று சேர்ந்து விட வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டார்,..
கோமலத்திடம் நன்றி கூறி விட்டு அவரைத் தாண்டி நேராக அவர் காட்டிய அறைக்குள் நுழைந்தவனுக்கு அங்கிருந்த காட்சியே அவனை கொஞ்ச நேரம் நிறுத்தி விட்டது, நித்திலா படுக்கையில் பக்கவாட்டாக சாய்ந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்...
கர்ப்பத்தின் சோர்வும், இரவெல்லாம் தூங்காமல் தவித்த களைப்பும் அவளது முகத்தில் தெளிவாகப் படிந்திருந்தது, அதனால் தான் இன்று காலை பத்து மணியைத் தாண்டியும் தூங்கிக் கொண்டிருந்தாள்....
அவளை பார்த்தபடி சில நொடிகள் அசையாமல் நின்றான் அவன், அவளது முகத்தின் அமைதியும், சோர்வோடு கலந்த அந்த அழகும் அவனது கண்களைப் பிணைத்தது,
பின்னர் மெதுவாக அவன் பார்வை கீழிறங்கி, அவளது மேடிட்ட வயிற்றில் வந்து நின்றது....
அந்தக் கணம், அவனின் பார்வையில் பாசத்தின் நிழல் மட்டும் துளிர்த்தது
'நம்ம பாப்பா… நம்ம இருவரின் உயிர்…' என்று நினைக்கும் போதே மனம் உருகி மூச்சே அடங்கிப் போன உணர்வு தான் அவனுக்கு,...
அவளது வயிற்றை தொட்டு பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலோங்க,
மெல்லக் கைநீட்டி அவளது வயிற்றில் தன் கரத்தை வைத்தான், அந்த சூடான தொடுதலால், நித்திலா சட்டென்று விழித்துக் கொண்டு கண்களை பெரிதாக்கினாள்,
அவளது பார்வையில் பதட்டம், அதிர்ச்சி சிறிது பயம் கூட கலந்து இருந்தது...
அவளது பதட்டத்தை உணர்ந்தவன் கரத்தை பின்னே இழுத்துக் கொண்டு,.. "ஏய் நான் தான், எதுக்காக இவ்வளவு பதறுற" என்று கேட்க, அவனை கண்ட அதிர்ச்சியில்
உள்ளத்தில் ஓடும் கலக்கத்தை அடக்கிக்கொள்ள முடியாமல், "உங்களைப் பார்த்ததால தான்… இவ்வளவு பதட்டம்" என்று சொல்லவும், அவளை விழிகள் சுருங்க பார்த்தவன், அவள் எழுவதற்கு சிரமப்படவும்,... "ஐ வில் ஹெல்ப்" என்று சொல்லியபடி அருகில் வர. "நோ தேங்க்ஸ், எனக்கு எழுந்துக்க தெரியும்" என்று சொன்னவள், அவனது உதவி இல்லாமல் தான் எழுந்து கொண்டாள்..
அவளது மறுப்பில் அவன் விழிகள் சுருங்க அழுத்தமாக பார்க்க, அவளோ,... "எதுக்கு வந்தீங்க" என்றாள்,..
"நேத்து சொல்லிட்டு போனது மறந்து போச்சா, உன்னை அழைச்சிட்டு போக தான் வந்தேன்" அவன் சொல்ல, "நான் திரும்ப உங்க வீட்டுக்கு வருவேன்னு தோணுதா?" அவள் விழிகளைச் சுருக்கிக் கொண்டு, குரலில் கடுமையை நிரப்பி கேட்டாள்..
"வந்து தான் ஆகணும்," அவன் இடைவிடாமல் சொல்ல, அவளோ உதட்டை கடித்து, சற்று கிண்டலுடன், "ஃபோர்ஸ் பண்ணி என்னை அழைச்சிட்டு போனா தான் உண்டு… அது தான் உங்களுக்கு ரொம்ப நல்லாவே வருமே," என்றாள்...
அவனிடமோ பெருமூச்சு மட்டும் எழ "உன்னை ஃபோர்ஸ் பண்ணி அழைச்சிட்டு போகணும்னா, நேத்தைக்கே அழைச்சிட்டு போயிருப்பேன், உன்னோட சம்மதத்தோடு தான் வரணும்னு நான் எதிர்பார்க்கிறேன்" அவன் குரல் சற்றே தாழ்ந்தாலும் அழுத்தமாக இருந்தது....
"அது இந்த ஜென்மத்தில நடக்காதே," என்று அவள் கடும் சபதம்போல் சொல்ல, அவன் விழிகள் வலியோடு சுருங்கினாலும்,.. "இந்த ஜென்மம் முழுக்க கூட நான் போராட தயார் தான்" என்றான், அவள் கண்களில் ஆச்சரியம் மிளிர்ந்தது, நிறைய மாறிவிட்டான் என்பது புரிந்தது, மனமும், எண்ணங்களும் முன்பைவிட வேறுபட்டிருக்கிறதை எண்ணி ஒருவித நெகிழ்வு,..
ஆனாலும் அவனோடு சென்று சந்தோஷமான வாழ்க்கை வாழும் மனநிலை இல்லை அவளுக்கு, 'நீ கட்டிலுக்கு மட்டும் தான் சரிப்பட்டு வருவ' என்ற அந்த வார்த்தை தான் அவளின் உள்ளத்தை முழுக்கக் கிழித்திருந்தது, இப்போது அந்த வார்த்தையை நினைத்தாலும் இதயமே வெடித்து விடும் உணர்வு தான் அவளுக்கு....
அவள் முகத்தின் மூலம் அவள் கலக்கத்தை அறிந்தவன்,... "பழசை மறந்திடலாமே" மெதுவாக சொல்ல... "உடல் அனுபவிச்ச காயத்தை மறந்திடலாம், ஆனால் உள்ளம் பட்ட வலியையும் வேதனையையும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது" என்றாள், அவளது குரலில் தெரிந்த அந்த வேதனையும், அந்த சோர்வும், அவனது இதயத்தை நேருக்கு நேர் தாக்கியது...
விழிகளை மூடி சில நிமிடம் மௌனமாய் நின்றவன்,...உள்ளத்தில் கொந்தளிக்கும் வேதனையை தாங்கிக் கொண்டு,.. "என்னை என்ன தான் பண்ண சொல்ற" என்றான் வலி மிகுந்த குரலில்,...
"உங்களை நான் எதுவும் பண்ண சொல்லல, என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க அது போதும்" என்றான்,...
"அது மட்டும் கண்டிப்பா முடியாது" அழுத்தமாக சொன்னவன்,.. ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு,... "உன்னோட லைஃப் என்கூட தான், அதை நீ இல்ல, அந்த கடவுள் நினைச்சாலும் மாத்த முடியாது, உனக்கு பிடிக்குதோ பிடிக்கலையோ என் கூட தான் நீ வாழ்ந்தாகனும், இந்த விஷயத்துல உனக்கு வேற சாய்ஸ் இல்ல" என்றான்,....
"இப்போ கூட நீங்க அடக்குமுறைல தான் நடந்துகிறீங்க," அவள் மெதுகாக சொல்ல,... "ஏய் என்னை வேற என்னடி செய்ய சொல்ற, நீ பண்ணதை மறக்க முடியாது மன்னிக்க முடியாதுன்னு சொல்லிட்டு நீ போயிடுவ, நான் பைத்தியக்காரன் மாதிரி திரியனுமா" என்றான்
"உங்களை யாரு பைத்தியக்காரன் மாதிரி திரிய சொன்னது, இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு ஜம்முன்னு வாழ வேண்டியது தானே, எப்படி பார்த்தாலும் என்கூட பிடிக்காத கல்யாணம் தானே பண்ணிக்கிடீங்க, கூட இருந்தவரைக்கும் எப்படியெல்லாம் டார்ச்சர் பண்ணீங்க, என்னவெல்லாம் பேசுனீங்க, இப்போ என்ன திடீர்னு பாசம்" என்றாள் அடக்கப்பட்ட கோபத்துடன்,..
"நடந்ததை விட்டுத் தொலையேன், ஏன் அதை பத்தியே பேசிக்கிட்டு இருக்க, திடீர் பாசமெல்லாம் இல்ல, ஆரம்பத்துல இருந்தே இருந்தது தான் நான் தான் உணரல, அதை உணராம அரக்கதனமா நடந்துகிட்டதுனால தான் இப்போ இப்படியொரு நிலையில் நிற்கிறேன்" என்று வலி நிறைந்த விழிகளோடு சொன்னவனை கண்டு அவள் உள்ளம் கலங்கினாலும், அப்போதே அவனோடு சென்று வாழவும் மனம் இறங்கவில்லை...