கண்ணீர் - 36
மருத்துவரின் பரிந்துரையின்படி கடற்கரையில் வாக்கிங் செய்து கொண்டிருந்தாள் நித்திலா, காற்றின் உவர்ப்பு வாசனையும், அலைகளின் இசையும் அவளது மனதை சற்று இலகுவாக்கிக் கொண்டிருந்தது, அந்த நேரத்தில்தான் திடீரென அவள் அருகே ஒரு குரல்.. "ஹாய்!"
திரும்பி பார்த்தவளின் விழிகளில் ஆரவ்வை கண்டு சற்றே அதிர்ச்சி... அடுத்த கணமே. "இங்க எதுக்கு வந்தீங்க?" என்றாள் கடின குரலில்...
ஆரவ்வோ சிரிப்பை சற்றே குறைத்துக் கொண்டு, சீராக.. "ஏன் வரக்கூடாதா?" என்று எதிர்கேள்வி கேட்டவன், அவளருகில் நின்றிருந்த கோமலத்திடம் திரும்பி,.. "நீங்க ஏமா கஷ்டப்படுறீங்க, நீங்க போய் கொஞ்ச நேரம் உட்காருங்க, நான் தான் வந்துட்டேன்ல," என்று சொல்ல, கோமலமும் சின்ன புன்னகையுடன் தலை அசைத்து, சற்று முன்னே இருந்த பெஞ்சில் சென்று அமர்ந்துவிட்டார்...
நித்திலாவோ சற்றே கசப்புடன்,.. "என்னால உங்க கூடலாம் வாக் பண்ண முடியாது, நானும் போறேன்" என்று திரும்பி செல்ல முயன்றவளை,
அவளது கைப்பிடியை மெதுவாக பிடித்து நிறுத்திய ஆரவ், "ஓவரா பண்ணாம வா," என்றான்...
அவளது முகத்தில் இன்னும் பிடிவாதம் தெரிந்தாலும், கரம் பிடித்து அவன் தொட்ட சின்ன வெப்பமே அவள் மனதை அசையாமல் போக வைத்திருந்தது,...
இருவரும் அமைதியாக நடந்து கொண்டிருந்தனர், வெயில் கண்ணைக் கூச, தனது கூலிங் கிளாஸை எடுத்து அணிந்து கொண்டான் ஆரவ், அந்த நேரத்தில், அவர்களை கடந்து சென்ற சில இளம்பெண்கள், அவனை ஒருமுறை தலையை திருப்பிப் பார்த்துவிட்டு, ரசித்து சிரித்தபடி சென்றார்கள்....
அதை கவனித்த நித்திலாவின் நெஞ்சுக்குள் சின்னக் கடுப்பு...
"இப்போ எதுக்கு கூலிங் கிளாஸ்?" என்று கேட்க, "வெயிலா இருக்கு அதான்," என்றான் அவன் சாந்தமாக..
"நாங்களுமே வெயில்ல தானே வர்றோம்… அப்புறம் என்ன?" அவள் சின்ன முறைப்புடன் வினவ,... அவள் கோபத்தை கவனித்து சிரித்துவிட்டு, எந்த வார்த்தையுமின்றி கூலிங் கிளாஸை கழற்றி, சட்டையின் திறந்திருந்த காலரில் தொங்கவிட்டான்,..
அதை கண்டவளோ "ஏன்… உள்ளே பாக்கெட்டுல வைக்க முடியாதா? இப்படி தொங்க விட்டுட்டு தான் வரணுமா?" கடிந்து வினவ.,.. "நீ ரொம்ப பண்ணுற," என்று சொன்னவனோ கண்ணாடியை எடுத்து பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டான்,..
அந்த நேரத்தில், அவர்களை கடந்து சென்ற ஒரு இளம்பெண் அவனை நோக்கி சிரித்தபடி கையை அசைத்து, "ஹாய்!" என்று சொல்ல, ஆரவ்வும் சற்று மரியாதையோடு "ஹாய்!" என்றான்...
அதைக் கண்ட நித்திலாவின் முகத்தில் மறைக்க முடியாத கோபம்..
"யாரு அது?" என்று கேட்டாள் கூர்மையாக...
"தெரியாது," என்று அவன் தோள்களை குலுக்க.. "தெரியாதவங்களுக்கு நீங்க ஹாய் சொல்லணுமா?" என்றாள் கண்ணை சுருக்கி...
அவன் சிரித்தவாறே, "அந்த பொண்ணு முதல்ல சொன்னுச்சு… அதான் நானும் சொன்னேன்," என்றான் இயல்பாக...
அதற்குள் நித்திலாவின் பொறுமை பிளந்து போனது, அவனை கடிந்து பார்த்தவள், "கொஞ்சம் என்னை விட்டு தள்ளியே வாங்க!" என்று கோபத்தோடு சொல்லிவிட்டு, விரைவாக முன்னால் நடந்துச்சென்றாள்....
அவன் இதழ்களுக்குள் மெல்லிய புன்னகை, அதே நேரம் அவளது பொஸஸிவ் அவனை மயிலிறகாகவும் வருடியது,...
கால்களை முன்னால் எடுத்து வைத்து அவள் தோள்கள் உரச அவளோடு நடந்தவன்,... "பேரன்பு இருந்தா தான் இந்த பொஸ்ஸசிவ்னஸ்லாம் வருமாம்" என்று சொல்ல,.. "எனக்கு ஒன்னும் பொஸஸிவ் இல்ல," என்று வெடுக்கென்று சொன்னவளுக்கு, அவன் சொன்ன வார்த்தை கௌரவ்வை நினைவு படுத்த அவனை ஆச்சரியமாய் திரும்பி பார்த்தாள், அவனோ அவள் பார்வைக்கான பதிலாய்,.. "கௌரவ் கிட்ட பேசினேன்" என்று கண்சிமிட்டி சொல்ல,... அவளிடமோ ஒரு பெருமூச்சு, அதே சமயம் அவன் மீது பொஸஸிவ் ஆனதும் ஆச்சரியமாய் இருந்தது, 'நானும் கொஞ்சம் மாறிட்டேன்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள்...
கொஞ்ச நேரம் நடந்ததும், நித்திலாவிற்கு மூச்சு வாங்கத் தொடங்கியது. கால்கள் வலித்து, முகத்தில் சோர்வு தெரிய, "அம்மா எங்கே போயிட்டாங்க…" என்று வாய்விட்டே முணுமுணுத்தபடி, கோமலத்தைத் தேடி பார்வையை சுழற்றினாள்....
"என்னாச்சு?" என்று அவன் கவலையோடு கேட்க, "இதுக்கு மேல என்னால நடக்க முடியாது… நான் வீட்டுக்குப் போகணும்… அம்மாவையும் காணோம்…" சோர்வான குரலில் சொன்னவள் திரும்பி வந்த பாதையை நோக்கி நடக்க முயன்றாள்...
"அதான் நான் இருக்கேன்ல… நான் அழைச்சிட்டு போறேன்," என்று மென்மையாக அவன் சொல்ல,.. "இல்ல… வேண்டாம்… நோ தேங்க்ஸ்," என்ற அவளை முறைத்தவன், அவள் நடக்க முடியாமல் தடுமாறுவதைக் கண்டு, அவள் சிரமத்தை உணர்ந்து, எதை பற்றியும் யோசிக்காமல் அவளை கரங்களில் அள்ளி தூக்கிக்கொண்டான்...
அவன் செயலில் அவளது விழிகள் அதிர்ச்சியில் பெரிதாக விரிந்து.. "என்ன பண்ணுறீங்க?… இறக்கிவிடுங்க… எல்லாரும் பார்க்கிறாங்க!" சங்கடமாய் அவள் சொல்ல, அவனோ அமைதியாக முன்னே பார்த்துக்கொண்டே நடந்தவன்,.. "பார்க்கட்டுமே… நான் உன் புருஷன் தானே… என் பொண்டாட்டி கஷ்டப்படுறதை என்னால பார்த்துக்கிட்டு இருக்க முடியாது," என்று சொன்ன அவன் குரலில் நெகிழ்ச்சி கலந்த உறுதி இருந்தது...
அவன் வார்த்தைகள் அவளது இதயத்தை உருகச் செய்தாலும், பொதுஇடத்தில் அனைவரும் பார்க்கும்படி அவன் தன்னை தூக்கிக்கொண்டு நடப்பது அவளுக்குள் வெட்கத்தையும் சங்கடத்தையும் ஒருசேர எழச் செய்தது... 'எல்லோரும் என்ன நினைப்பாங்களோ…' என்ற உள்சங்கடத்துடனே, அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்....
*************
"ஆரவ்" தாயின் குரலில் மாடிப்படியை நோக்கி நின்றவனின் நடை நின்றதே தவிர, திரும்பி அவரின் முகத்தை அவன் பார்க்கவில்லை, அவருக்கோ வருத்தம்,... "என்கிட்ட பேச மாட்டியாடா?" என்றார் ஏக்கத்துடன்,...
"பேசுரத்துக்கு ஒன்னும் இல்ல" அவன் குரல் உயர்ந்து வரவில்லை, ஆனாலும் அந்த வார்த்தைகள் அம்புபோல் அவன் தாயின் இதயத்தை குத்தின..
அந்த கணம் இருவருக்குமிடையே கனமான மௌனம், சித்ராவின் கண்கள் வலியில் சிவக்க,, "ரொம்ப வலிக்குதுடா நீ பேசாம இருக்கிறது" என்றார் குரலில் துடிப்புடன்..
அவன் சில நொடிகள் அமைதியாக நின்றான், மனதில் எழுந்த கோபம், ஏமாற்றம், வருத்தம் எல்லாம் கலந்து, குரல் சற்றே நடுங்கியது... "எனக்கும் தான் வலிக்குது மாம், நான் எவ்வளவு கெஞ்சினேன்… நித்திலா எங்கே இருக்கான்னு எத்தனை முறை கேட்டேன், ஆனா கடைசி வரைக்கும் நீங்க… கல் மனசாவே இருந்துட்டீங்களே மாம்" அவன் குரல் வலியால் கனமாகியது...
மேலும் மூச்சை இழுத்து பிடித்தபடி.. "அந்தக் கஷ்டத்தை அந்த வேதனையை என்னால இன்னும் ஜீரணிக்க முடியல, இதை எல்லாம் மறக்க எனக்கு டைம் வேணும், அது வரைக்கும்… என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க… ப்ளீஸ்" என்று சொன்னவன், ஒருமுறை கூட தாயின் முகத்தைப் பார்க்காமல் படிகளை ஏறிச் சென்றான், சித்ராவின் கண்களில் அவரையும் அறியாமல் நீர் பெருக, இடிந்து போய் அமர்ந்துவிட்டார்,...
**********
தனது அறையின் ஜன்னலருகே அமர்ந்திருந்தாள் நித்திலா, கரத்தினை தாடையில் வைத்தபடி வெளியில் பார்த்துக் கொண்டிருந்தவளின் எண்ணமெல்லாம் ஆரவ்வை பற்றி தான் இருந்தது, அவனின் மாற்றம் அவளுள் நெகிழ்வை விதைத்திருந்தாலும், 'இவரை நான் அதிகம் ஏங்க விடுகிறேனோ?' என்ற கேள்வி மனதை வாட்டியது...
இன்று சித்ரா அவளிடம் பேசினார், 'சீக்கிரம் என் மகன் கூட சேருற வழியை பாரு நித்திலா, அவன் ரொம்ப கஷ்டப்பட்டுட்டான்' என்று சொன்னவரின் குரலில் அதிகளவு சோர்வு தெரிந்தது, அவள் என்னவென்று விசாரிக்க, அவரும் தன் மனபாரத்தை அவளிடம் கொட்டி இருந்தார், அவளின் மனமோ கனத்து போனது, 'சித்ரா அம்மா இவ்வளவு கலங்கி பேசி நான் பார்த்ததே இல்ல, எல்லாம் என்னால தான்' என்று நினைத்தவளுக்கு மனமெல்லாம் இன்னும் வலித்தது,..
ஆரவ்வின் மீது கோபம் எதுவும் இல்லை, ஆனால், சட்டென்று அவனது வீட்டுக்குள் நுழைந்து வாழும் துணிவும் அவளுக்கு வரவில்லை? ஏன் என்று புரியாமல் தான் அதனை பற்றி ஆழமாக யோசித்துக் கொண்டிருந்தாள் நித்திலா,...
அந்த நேரம் "என்ன ஆழ்ந்த யோசனை?" பரிச்சயமான அந்த குரலில் திடுக்கிட்டு திரும்பியவள்,
கதவின் அருகில் நின்றிருந்த ஆரவ்வை 'இவர் எப்போ வந்தாரு' என்று விழிகள் சுருக்கி பார்த்துவிட்டு, "ஒன்னுமில்ல" என்று தலையாட்ட,... அவள் மனம் அறிய தெரியாதவன் இல்லையே அவன்,..
இருப்பினும் எதை பற்றியும் கேட்காமல்,.. "உனக்காக உனக்கு பிடிச்ச ஸ்வீட் வாங்கிட்டு வந்திருக்கேன்" என்று கூறி, குலோப்ஜாமுனை பிரித்து அவளிடம் நீட்ட, அவளுக்கோ ஆச்சரியமாக இருந்தாலும்,... "எனக்கு இதெல்லாம் பிடிக்காது" என்றாள்,..
"இல்லையே நீ இப்போலாம் ஸ்வீட் தான் அதிகமா விரும்பி சாப்பிடுறன்னு கோமலம் அம்மா சொன்னாங்களே" அவன் சொல்ல,.. "ஆமா,.. ஆனா எனக்கு இப்போ வேண்டாம்" என்றாள்,..
"ஏன் நான் வாங்கிட்டு வந்ததுனாலயா" அவன் வினவ,.. "ஆமா'ன்னே வச்சுக்கோங்க" அவள் சொல்லவும்,.. அவனும் பெரிதாக கவலை கொள்ளாமல் "வேணாம்னா போ" தோள்களை குலுக்கிவிட்டு பிரித்து அவனே அதனை சாப்பிட தொடங்கினான்,...
"எனக்கு குலோப்ஜாமுன்னா ரொம்ப பிடிக்கும்" என்று கூறி, ரசிச்சு ருசித்து சாப்பிடுவதை கண்டு அவளையும் அறியாமல் அவளுக்கு வாய் ஊறியது,.. 'ச்சே எப்படி பார்க்க வச்சு சாப்பிடுறாரு பாரு' புலம்பிக் கொண்டவளோ,.. "அந்த பக்கம் போய் சாப்பிடுங்க, இல்லைனா உங்களுக்கு தான் வயிறு வலிக்கும்" என்றாள்,...
"அக்கறைக்கு தேங்க்ஸ்" என்றவனோ,... "இன்னும் ஒன்னு தான் இருக்கு, வேணுமா வேணாமா" என்று வினவ,.. அப்போதும் வீம்பாக "தேவை இல்லை"என்று சொன்னவளிடம்.. "எனக்கு என்னமோ என் பேபிக்கு வேணும்னு தோணுது, உனக்கு வேண்டாம்னா போ, என் பேபி சாப்பிடட்டும்" என்று கூறி, அவள் தாடையை பற்றி அவள் வாய்க்குள் குலோப்ஜாமுன் உருண்டை ஒற்றை திணித்திருக்க, இதனை எதிர்பார்க்காதவள், துப்பவும் மனமில்லாமல் கடித்து சாப்பிட்டு விட்டு,... "எதுக்கு இப்படி பண்ணீங்க" என்று எகிறினாள்,..
குலோப்ஜாமுனின் சுவை இன்னும் வேண்டும் என்று நாக்கு ஆசை பட்டாலும் கோபப்பட வேண்டிய நிலையில் தான் இப்போது அவள் இருந்தாள்...
"என் பேபிக்காக தான்" அவன் சொல்ல,.. "இன்னொரு தடவை இப்படி பண்ணீங்க எனக்கு கெட்ட கோபம் வரும்" என்று கோபமாக சொன்னவளை ஆழ்ந்து பார்த்தவன்,... "நார்மல் கோபத்துலயே அழகா தான் இருக்க, கெட்ட கோபம் வேற உனக்கு வருமா, அதுல எப்படி இருப்பன்னு பார்க்கவும் ஆர்வமா இருக்கு" என்று சொன்னவனை, முறைக்க கூட முடியாமல் தடுமாறியவளுக்கு அவளையும் மீறி கன்னங்கள் சிவந்து விட்டது,...

Last edited: