கதைப்போமா
பகுதி -10
நடந்த நிகழ்வை நினைத்து சிரித்துக்கொண்டே , மீரா ஹாஸ்டலுக்கு செல்கிறாள்.
அங்கு ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த, தபால்கார பெண்ணிடம், தான் கையொப்பம் பெற்றுக் கொண்டு வந்த தாளை கொடுக்கிறாள்.
"ரொம்ப நன்றிங்க மேடம்..!" எனக்கு இப்போது சற்று பரவாயில்ல, நான் கிளம்புகிறேன் என்று தபால்கார பெண்மணி ஹாஸ்டலை விட்டு புறப்பட்டாள்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை, பெங்களூருக்கு புறப்படும் நேரம் வந்து விட, "வெங்கியோ".
மீரா ,நிஷா ,சுஜி, கதிர் ,ஆகிய
நான்கு பேருக்கும் போன் பண்ணி சரியாக "மாலை 7 மணிக்கு கல்லூரிக்கு வந்து விடவும் , நாம் இங்கிருந்து எட்டு மணிக்கு புறப்படலாம்" என்று மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறான்.
"வெங்கி " கூறியபடியே , அனைவரும் சரியான நேரத்திற்கு கல்லூரிக்கு வந்துவிட , கல்லூரியில் கார் தயார் நிலையில் நிற்கின்றது.
"வெங்கி " நிஷா சுஜி நீங்கள் இருவரும் மிடில் சீட்டில் அமர்ந்து கொள்ளுங்கள் என்று இருவரையும் கூறுகிறான்.
கதிர்," நீயும் , மேடமும் , பின்னாடி சீட்டில் அமர்ந்து கொள்ளுங்கள் ,என்று இருவரையும் கடைசி சீட்டுக்கு அனுப்பி விடுகிறான்.
நான் டிரைவர் பக்கத்தில் அமர்ந்து கொள்கிறேன். இரவு நேர பயணம் என்பதால் டிரைவரிடம் பேசிக் கொண்டே வந்தால் அவருக்கும் தூக்கம் வராமல் பொழுது போக்காக இருக்கும் என அவன் கூறியபடி அனைவரும் காரில் அமர்ந்து ஆயத்தமான பின்பு எட்டு மணிக்கு கல்லூரியை விட்டு புறப்படுகின்றனர்.
கிட்டத்தட்ட 3 மணி நேரம் பயணம் சிறப்பாக முடிய, 11 மணி அளவில் கதிர் சற்று வண்டியை நிறுத்துங்கள் என்று கூறி காரை விட்டு வேகமாக இறங்கி வெளியே நிற்கிறான்.
என்ன ஆச்சு கதிர் என்று வெங்கி கேட்க..
சார் ... லாஸ்ட் சீட்டு எனக்கு சரியா வரல வாமிட் வர்றது போல இருக்கு. நான் பிரண்ட்ல உக்கார்ந்துக்கவா??? ப்ளீஸ் சார் ....நீங்க லாஸ்ட் சீட்டுக்கு வாங்க என்று கதிர் லாஸ்ட் சீட்டிற்கு "வெங்கி" யை அனுப்பி விடுகிறான்.
காரில் ஏறி அமர்ந்தவுடன் டிரைவர், கதிரிடம் தம்பி உனக்கு தூக்கம் வந்தால் நீ தூங்கு பா. எனக்கு நைட்டு வண்டி ஓட்டி நிறைய சர்வீஸ் இருக்கு அதனால் கவலைப்படாமல் நீ தூங்கு பா என்று கூறியவுடன் "கதிர் " தன்னிலை மறந்து உறங்கி விடுகிறான்.
நேரம் சற்று போக ,போக மிடில் சீட்டில் இருந்த "நிஷா, சுஜி "இருவரும் பேசிக்கொண்டே "ஒருவர் மீது ஒருவர்" சாய்ந்து கொண்டு உறங்கி விடுகிறார்கள்.
இரவு நேர பயணம் காரில் இவர்களுக்கு ஏற்றது போல் பாடலும் ஒலித்திட,
"
"உதட்டில் துடிக்கும் வார்த்தை…
அது உலர்ந்து போனதோ…
உள்ளங்கள் துடிக்கும் ஓசை…
இசை ஆகாதோ…!
மங்கையிவள் வாய் திறந்தால்…
மல்லிகை பூ வாசம்…
ஓடையெல்லாம் பெண் பெயரை…
உச்சரித்தே பேசும்…
யார் இவர்கள் இரு பூங்குயில்கள்…
இளம் காதல் மான்கள்…
என்ன சத்தம் இந்த நேரம்…
குயிலின் ஒலியா…
என்ன சத்தம் இந்த நேரம்…
நதியின் ஒலியா…..!
இந்தப் பாடலைக் கேட்டு இருவரும், ஏதோ ஒரு நிலைக்கு சென்றிட,
ஹே...மீரா எப்போதும் ஏதாவது கலகலன்னு பேசிக்கிட்டே இருப்ப, இப்போ ஏன் சைலண்டா, வர என்று "வெங்கி "கேட்க??
பதில் ஏதும் கேட்காமல் மௌனம் காக்கின்றாள் "மீரா"
ஏய்....லூசு என் சைலன்ட்டாவே வர??
ஏதாவது பேசு பா.....
எப்பொழுதும் இரவு பொழுது உன்னோடு கதைச்சுட்டு சந்தோஷமா தூங்குவேன்,
இன்னைக்கு நீ என் பக்கத்துல இருக்க , என் கூட இருக்க, உன் கூட கதைச்சுக்கிட்டு இன்னிக்கி ஹாப்பியா தூங்கப் போறேன். என்றிட
இதற்கும் பதில் ஏதும் பேசாது மீரா அமைதியாக இருக்க,
ஏன் மீரா ?? அமைதியாக இருக்க என வெங்கி கேட்க
இந்த இரவு போல் ,என் வாழ்வில் வருகின்ற எல்லா இரவும் என் கூட உன்னால் கதைச்சுக்கிட்டே, தூங்க முடியுமா ??? என்று மீரா தன் உணர்வுகளை சட்டென்று கொட்டிவிடுகிறாள் வெங்கியிடம்.
சிறிது கூட சிந்திக்காமல் மீராவின் ஐந்து விரல்கள் இடுக்கில், தனது ஐந்து விரல்களையும் கோர்த்து இறுக்கி, பிடித்துக் கொள்ள, என்னவன் விரல்கள் பற்றியதால்,தன்னிலை மறந்து கண்களை மூடி அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்,
"தன் தோளில் சாய்ந்துக்கொண்ட, தன் காதல் தேவதையின் நெற்றியில் படர்ந்து கிடக்கும் கூந்தலை மெல்ல வருடி வெட்டு, இதமாக அவள் நெற்றியின் , மீது தன் இதழ் பதித்து முதல் முத்தம் வைத்து "லவ் யூ மீரா" என்றிட,
தோளில் சாய்ந்தபடியே, வெங்கியின் இடது கையை நன்றாக பிடித்து கொண்டு, "லவ் யூ டூ வெங்கி" என்கிறாள் வெட்கத்தோடு காதல் நாயகி.
"மன்னவனே உன் விழியால்…
பெண் விழியை மூடு…
ஆதரவாய் சாய்ந்து விட்டால்…
ஆரிராரோ பாடு…
ஆரிராரோ இவர் யார் எவரோ…
பதில் சொல்வார் யாரோ…!!
என்று பாடல் வரிகளோடு தன் நிலை மறந்து தான் போனார்கள்.
அந்த நேரம் பார்த்து சரியாக வங்கி தொலைபேசி சினுங்கிட ,ஒரு நிலைக்கு மீண்டும் வந்தனர் இருவரும்.
மீரா ரிலாக்ஸ் , பா என்னால நம்பவே முடியல, இந்த இரவு எனக்கான, இல்ல இல்ல , நமக்கான இரவு ஸ்டுடென்ட்ஸ் முழிச்சுக்க போறாங்க, நீயும் கொஞ்ச நேரம் தூங்கு காலையில அங்கு நிறைய வொர்க் இருக்கு டையார்ட் ஆயிடும் குட் நைட் என்று இருவரும் உறங்கி விட்டனர்.
அவர்கள் போட்டிகள் நடைபெறும் இடத்திற்கு சென்றனர் , போட்டிகள் இனிதே முடித்து , சற்றும் எதிர்பாராத நேரத்தில் முதல் நிலையில் வெற்றியும் பெற்றனர்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை வெங்கி உடனே முதல்வரு தகவல் தெரிவிக்கிறான்.
தகவல் அறிந்த முதல்வர், மகிழ்வோடு அனைவரையும் பாராட்டி வாழ்த்துகிறார்.
அனைவரும் கல்லூரிக்கு திரும்பிட புறப்பட்டனர்.
பெங்களூரில் இருந்து புறப்பட்டு சென்னையை நோக்கி பயணத்தை தொடர்கின்றனர்.
விடியற்காலை 4 மணி அளவில், சென்னைக்கு மிக அருகாமையில் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி டீ குடிப்பதற்காக அனைவரும் இறங்கினார்கள்.
அப்பொழுது மீரா ரெஸ்ட் ரூம் சென்று திரும்பி வரும்போது, பின்புறம் ஒரு வண்டி வேகமாக வந்து அவள் மீது இடித்து விட அந்த நேரத்தில் சுய கட்டுப்பாட்டை இழந்தவள், வண்டி இடித்த வேகத்தில் வேகமாக சுழன்று அருகில் கொட்டி கிடக்கும் ஜல்லியின் மீது விழுகிறாள்.
அவள் விழுந்த இடம் ரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓட, அதனை பார்த்து அனைவரும் அங்கிருந்து அலற வெங்கி ஓடி வந்து மீராவை தொட்டு தூக்கி,
"மீரா" என்று அலரிட,
சுய நினைவில் இருந்தவள் வெங்கி எண் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டு எனக்கு ஒன்னும் ஆகாது டா உன் கைல தான் நான் இருக்கேன் கண்டிப்பா நான் திரும்பி வருவேன் உன் கூட கதைப்பேன் என்று கூறிவிட்டு மயக்க நிலைக்கு செல்கிறாள்.
டீக்கடையில் அமர்ந்து , டீ குடித்துக் கொண்டிருந்த மாணவர், அலெக்ஸ் இதனை பார்த்து, பதறி அடித்து வேகமாக ஓடி வந்து ,
என்ன சார் பார்த்துக்கிட்டே இருக்கீங்க?? வாங்க உடனே ஹாஸ்பிடல் போலாம் என்று வெங்கியை அழைக்கிறான் அலெக்ஸ் .
மீராவை அள்ளி தூக்கி தன் காரில் போட்டுக்கொண்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள்.
மருத்துவர் மீராவை, பரிசோதனை செய்துவிட்டு அவளுக்கு தேவையான சிகிச்சை அளித்துவிட்டு, ஐ சி யு வார்டில் இருந்து வெளியே வருகிறார் மருத்துவர்.
வெளியே வந்த மருத்துவரிடம் பதட்டத்தோடு வெங்கியும், அலெக்ஸும் என்னாச்சு சார் என்று கேட்க??
ஐம் சோ சாரி ....!
மீராவின் ஒரு பார்வை போனது. விழுந்த வேகத்தில் ஜல்லிக்கல் விழித்திரையில் பட்டு கிழித்து விட்டது எனவே அவள் ஒரு கண் பார்வை இழந்து விட்டால் ஒரு கண் நன்றாக இருக்கிறது மற்றபடி சிறுசிறு காயங்கள் தான் இரண்டு நாட்களில் உடல் தேறிவிடும் என்று கூற இடிந்து போய் அமர்ந்தான் வெங்கி.
மறுநாள் காலை கல்லூரி திறந்தவுடன் அசெம்பிளி நடந்து கொண்டிருக்கும் பொழுது அலெக்ஸ் வேகமாக ஓடிவந்து, மைக்கை பிடுங்கி அனைவருக்கும் முக்கியமான செய்தி நமது அன்பிற்குரிய பேராசிரியர் மீரா அவர்களுக்கு நேற்று இரவு ஆக்சிடென்ட் ஆகிடுச்சு அதில் அவர் ஒரு கண் பார்வையை இழந்து விட்டார் மாணவர்கள் நான் நினைத்தால் அவருக்கு கண் ஏற்பாடு செய்ய முடியும் எப்படியாவது அலைந்து இன்று மாலை 3 மணிக்குள் அவருக்கு ஒரு கண் ஏற்பாடு செய்தால் ஆசிரியருக்கு மீண்டும் பார்வை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று பதறி அடித்து கூற,
அங்கு இருந்த அத்தனை மாணவர்களும் கையை உயர்த்தி என் கண்களை நான் தருகிறேன், நான் தருகிறேன் என்று அத்தனை குரல்கள் வந்திட, பதில் ஏதும் பேச முடியாமல் அலெக்ஸ் மருத்துவமனைக்கு செல்கிறான்.
அங்கு மருத்துவரிடம் தன் கண்களில் ஒரு கண்ணை எடுத்து மீராவிற்கு பொருத்தி விடுங்கள் நாங்கள் இருவரும் ஒரே கண் பார்வையில் இறுதிவரை உயிர் வாழ்ந்து விடுவோம் என்று வெங்கி மருத்துவரிடம் பேசிக் கொண்டிருக்க,
மிகவும் பதட்டமாக மூச்சிரைக்க ஓடி வந்த வார்டன் விஜயலட்சுமி, என்னாச்சுப்பா மீராவுக்கு என்று வெங்கியை பார்த்து கேட்க, அவனும் நடந்தத அனைத்தையும் எடுத்துக் கூற,
தன் கண்களை துடைத்துக் கொண்டு விஜி மருத்துவரிடம் சார் என்னுடைய கண்களை எடுத்துக் கொள்ளுங்கள்
இவர்கள் இருவரும் வாழ வேண்டிய பிள்ளைகள் நான் வாழ்ந்து முடித்தவன் எனக்கென்று என் வாழ்வில் யாரும் கிடையாது எனக்காக சொந்தம் என்று வந்தவள் என் மீரா, எனக்காக என் உயிரையே கொடுக்க நான் தயார் என் கண்களை எடுத்து அவளுக்கு பொருத்து என் உயிரை அவளோடு இறுதி வரைக்கும் வாழ வையுங்கள் சார் என்று தன் இரு கைகளையும் கூப்பி மண்டியிட்டு அழுது கொண்டு கேட்கிறாள் விஜி.
எஸ்... ஃபர்ஸ்ட் உங்களை நாங்க செக் பண்ணனும், பிறகு நாம் ஆபரேஷன் செய்து கொள்வோம் என்று கூறிவிட்டு விஜியை. சிகிச்சை அறைக்கு அழைத்துச் சென்று தேவையான டெஸ்டுகளை எடுத்துக்கொண்டு, ஆபரேஷன் செய்து விஜயின் ஒரு கண்ணை எடுத்து மீராவின் ஒரு கண்களில் பொருத்தி விட்டனர்.
நான்கு மணி நேரம் கழித்து, மீராவை கண் விழித்து பார்க்க சொல்கின்றனர்.
அவள் தன் கண்களை திறந்த உடன் முதலில் அவள் கண் முன்னால் வந்து நிற்கின்றான் மாணவன் "அலெக்ஸ்"
மீரா எதிர்பார்த்தது போல் அவன் தனது தலை முடிகளை அழகாக வெட்டிக்கொண்டு ஃபார்மல் சட்டைகள் போட்டுக் கொண்டு மீரா தன்னிடம் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாலும் அப்படியே அவள் கண்முன்னால் வந்து நிம்மதி அவளுக்கு பேரின்பம் தந்தது.
ஒரு மாணவனை திருத்துவது தான் ஒரு ஆசிரியருக்கு வெற்றி நான் வெற்றி அடைந்து விட்டேன் என்று கண் கலங்கிட,
என்ன நடந்தது எனக்கு என்று வெங்கியை பார்த்து கேட்க நடந்த அனைத்தையும் வெங்கி எடுத்துக் கூற,
என்னது எனது கண்கள் போய்விட்டதா இப்போது விஜி அம்மாவின் கண்கள் என்னிடம் இருக்கிறதா அப்போ அம்மா??? என்று அதிர்ச்சியோடு கேட்கிறாள்.
ஆமாம் ...! "மீரா" அத்தை அந்தப் பக்கத்து அறையில் தான் இருக்கிறார்கள். வா என்று பார்த்து வரலாம் என்று மீராவை வீல்சேரில் அமர வைத்து தள்ளி கொண்டு விஜயலட்சுமி அறைக்கு செல்கிறான். "வெங்கி."
அறைக்குள் நுழைந்த உடன் மீரா அம்மா என்று வேகமாக அழைத்திட, விஜி கருப்பு கண்ணாடி போட்டிருக்க,
தன் இரண்டு கைகளையும் கூப்பி மிரா, "என்ன தவம் செய்தேனோ..!!" தெரியவில்லை .
"உங்கள் உயிரால் என் உயிரை செதுக்கி தந்து விட்டீர்கள்".என்று கதறி அழுதிட,
மீரா...மா.... கண்ணுக்கு ,இப்பதான் ஆபரேஷன் செய்திருக்காங்க அழக்கூடாது ராஜாத்தி.. என்று விஜி சமாதானம் செய்து கொண்டிருக்கிறாள்
மீரா வை...
அந்த நேரம் பார்த்து சரியாக "மீராவின், "அப்பாவும், அம்மாவும்" அந்த அறைக்குள் நுழைந்திட விஜியை பார்த்து ஷாக்காக நிற்கின்றனர்.
வெங்கி வாங்க ஆன்ட்டி என்ன அப்படி பாக்கறீங்க இது தான் என்னோட அத்தை இவங்களோட கண்ணை தான் மீராவுக்கு பொருத்தி இருக்கிறோம் என்று வெங்கி பேச பேச,
விஜியின் அருகில் சென்று மீராவின் அம்மா தன் இரு கைகளையும் எடுத்து கும்பிட்டு,
உன் பொண்ணுக்கு நீயே உயிர கொடுத்துட்ட தாயி,
நீயே... உசுர கொடுத்திட்ட சாமி.....!
என்று கத்திக் கதறி அழுகின்றாள்.
விஜி அவளை சமாதானம் செய்து எழுந்திருங்கள் அதுதான் மீராவுக்கு ஒன்னும் ஆகவில்லையே, கண் திருஷ்டி என்று நினைத்துக் கொள்வோம். இனி எல்லாம் நன்மைக்கே என்று பேசிக் கொண்டிருந்தாலும் மீராவின் அம்மாவை எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே என்று விஜி யோசித்துக் கொண்டே இருக்க,
என்னை உங்களுக்கு தெரிகிறதா என்று மீராவின் அம்மா விஜய் பார்த்து கேட்க,
ஆமாம் எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே, ஆனால் எங்கு பார்த்தோம்னு நினைவு இல்லை என்று கூற,
தன் சேலை முந்தானியில் தன் கண்களை துடைத்துக் கொண்டு ,இதோ இந்த மீராவை மூன்று மாத குழந்தையாக, ரயிலில் என் கையில் கொடுத்து விட்டு சிட்டாக பறந்து போனீங்களேம்மா நினைவு இருக்கிறதா?? அந்த புண்ணியவதி நான் தான் என்னை நினைவில்லையா உங்களுக்கு என்று கேட்க,
என்னது மீரா நிஜமாகவே என்னுடைய பொண்ணுதானா என் பொண்ணு எனக்கு கிடைச்சிட்டாளா என்று சந்தோஷத்தில் அழுது தீர்க்கிறாள் விஜி
பிறகு நடந்த அனைத்தையும் மீராவின் அம்மா மீராவிடம் எடுத்துக் கூறுகிறாள்.
"எனக்கு இரண்டு அம்மா இருக்கின்றனர் இன்று மகிழ்வோடு இரண்டு அம்மாக்களையும், தன்னுடைய இரண்டு தோளின் மீது சாய்த்துக் கொள்கிறாள் மீரா....'"
மீரா தன்னுடைய தோளில் சாய்த்துக் கொண்டதும், விஜி மீராவை அனைத்து முகம் நிறைய முத்தத்தை தந்து தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறாள்.
பிறகு வெங்கியை அழைத்து மீரா தன்னுடைய அப்பா அம்மாவிற்கு அறிமுகம் செய்து தன்னுடைய திருமணத்திற்கு அனுமதியும் பெற்றுக் கொள்கிறாள்.
விஜியின் தம்பி மகன் என்பதால் மீராவின் அப்பா அம்மா இருவரும் முழு மனதோடு சம்மதித்தனர்.
மருத்துவமனையில் நர்ஸ் வந்து சத்தமிட மீராவை அவள் அறைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கோபமாக கூறவே,
சரி நீங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருங்கள். நான் போய் மீராவை அந்த அறையில் விட்டுவிட்டு உங்களுக்கு குடிப்பதற்கு ,ஏதாவது வாங்கிக் கொண்டு வருகிறேன் என்று "வெங்கி மீராவின்" வீலாச்சேரை தள்ளிக்கொண்டு அந்த அறைக்கு செல்கிறான்.
அறையில் மீராவை விட்டு விட்டு நீ ஏதாவது சாபிடுகிறாயா??மீரா என்று கேட்க,
கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தவள், இங்கே வா வெங்கி ,இங்கே வந்து உட்காரேன் என்று அழைக்க,
வெங்கி அவள் அருகில் வந்து அமர்கிறான்.
உன் மடியில் கொஞ்ச நேரம் தலைசாய்த்து கொள்கிறேன் என்று வெங்கியில் மடியில் படுத்துக் கொள்கிறாள் மீரா.
டேய்.....என்னடா இது.....! என்று வெங்கி அவளது தலையை வருடி விட்டு "லவ் யூ" மீரா என்று கூறுகிறான்.
உடனே எழுந்தவள், வெங்கி கண்களை உற்று நோக்கி, இப்போவாது உனக்கு புரியுதா??? என் கூட எதுக்கு கதைச்சிகிட்டே இருக்கணும்னு ???என்றிட
புரியுது....டி.....
நல்லாவே புரியுது டி பொண்டாட்டி......!
கதைப்போமா........ என்கிறான்,காதல் பார்வையோடு, "வெங்கி "..!
கதைப்போமே...!
சாகும் வரை கதைப்போமே....! என்கிறாள் மீரா.....!
" சலிக்காமல் களிப்போடு
கதைக்குமே இவர்களின்
காதல் மொழி"
சுபம்