“நோ..ப்ளீஸ் விட்டுடு...நா..நான் எந்த தப்பும் செய்யல்ல..”
எதிரில் முகத்தை கட்சீஃப் கொண்டு மறைத்திருந்தவன் துப்பாக்கியை தூக்க “ஏ..ஏய் துப்பாக்கியை கீழ போடு...அ..அப்பா..அப்பா என் அப்பாவுக்கு தெரிஞ்சா என்னாகும் தெரியுமா...?” என்று அங்கே உதடு கிழிந்து இரத்தம் சொட்டச் சொட்ட மரத்தில் கட்டப்பட்டிருந்தவன் பயத்துடன் ஆரம்பித்து மிரட்ட நினைத்து தோற்றுப் போய் கெஞ்ச, அந்த முகமூடிக்காரனோ கொஞ்சம் கூட இரக்கம் என்பதை கண்ணில் காட்டாது “அப்பாவா...!!ஹா..ஹா..அந்த நொப்பாட்ட சொல்ல நீ உயிரோட இருந்தால் தானே” என தலை சரித்து அவன் கூறிய விதத்திலே அங்கே கட்டப்பட்டிருந்தவனுக்கு தெரிந்துவிட்டது இனி தன் உயிர் இந்த உடலில் இருக்கப் போவதில்லை என்பது.
“ஏய் தேவ்.. இதுக்கெல்லாம் நீ..நீ அனுபவிப்படா...உ.. உன்னை நிம்மதியா வாழ விடமாட்டேன் டா” என அகங்காரமாய் கத்த “அதுக்கு முதல்ல நிம்மதியாய் நீ போய் சேரு..பின்னாலயே உங்கொப்பனையும் அனுப்பி வைக்கிறேன்” என தேவ் என்பவன் கூறி துப்பாக்கி முனையை ஆராய, இவனுக்கு முகத்தில் உயிர்ப்பயம் அப்பட்டமாய்...!!
அந்த தேவ்வோ கொஞ்சமும் தாமதியாது துப்பாக்கியை லோட் செய்து சரியாக எதிரில் இருந்தவனின் இடது பக்க மார்பை குறிபார்த்து சுட, பட் பட் என தோட்டாக்கள் அவனின் இதயத் தசையை கிழித்துக்கொண்டு சென்றன.
ஹக்க்..என்ற சத்தம் மட்டுமே அந்த வனம் சார்ந்த பகுதியை நிறைத்திருந்தது...அது ஓர் நகர்புறத்துக்கு சற்று தள்ளி இருக்கும் காட்டுப் பள்ளத்தாக்கு.
ஆறடிக்கு சற்று குறைவான உயரத்தில் இருந்தவன் சரிந்து சருகுகள் நிறைந்த தரையில் வீழ,பாவம் ஒன்று உயிர் நீத்த சந்தோஷத்தில் பறவைகள் கீச் என ஒலியெழுப்பிக் கொண்டு அவ்விடத்தை விட்டு கலைந்து பறந்தன..
பரிதாபம் என்னவென்றால், இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்தவனுக்காக உச்சுக் கொட்டக் கூட அங்கு ஒர் ஈ காக்கா இல்லை..
ஆனால் தாக்கியவனின் பசை போட்டது போல ஒட்டியிருந்த உதடு ஒரு கணம் புன்னகையில் விரிந்தது...அது எதற்காக..??இதோ சாய்ந்து உயிரற்று கிடப்பவனுக்காகவா..??இல்லவே இல்லை...தோட்டா சத்தத்தில் கூட வந்திருந்த ஒருவன் பயந்து அநியாயமாக மயங்கி மட்டையாகிக் கிடந்ததால்...ஹா..ஹா...
***
“ஆஆஆ...நான் திரும்ப திரும்ப சொல்றேன் ஏன் உங்களுக்கு புரியமாட்டங்குது மாம்...ஐ கான்ட் டூ எனிதிங் யூ சே...” என்றவன் அத்துடன் விடாமல் கோபத்தில் தொலைபேசியை தரையில் ஓங்கி அடித்து நொருக்கி இருந்தான்.
“பன்னிரண்டாவது ஃபோன்...” வட போச்சே என்ற ரீதியில் பக்கத்தில் விக்கித்துப் போய் நின்றவன் மனதில் எண்ணிக்கொண்டான்...
...
“எனிதிங் இஸூஷ்...?!”அவன் தன் காலடியை பூமியில் ஆணித்தரமாக பதித்த வண்ணம் நடந்து கொண்டே தன் பி.ஏ விடம் வினவினான்..
“நத்திங் சார்..எவ்ரிதிங் பெர்பெக்ட்..”
அந்த பெர்பெக்ட் என்ற ஒற்றை வார்த்தையில் அவன் நடை தடைபட்டு நின்றது ஓர் நிமிடம் தான். பின் தனக்காக காத்திருந்த காரில் ஏறி புறப்பட்டுவிட்டான்.
இவனுக்கு தான் மூச்சு நின்று வந்தது..
“ப்பாஹ்.. இவருக்கு பக்கத்துல நிக்கிறதும் நெருப்புக்கு பக்கத்துல போய் சட்டை இல்லாமல் நிக்கிறதும் ஒன்னு தான்டா..என்னா வெப்பு...”என்று வாய்விட்டே புலம்பியவன் கையில் வைத்திருந்த கோப்பினாலே காற்று வீசிக்கொண்டு இடத்தை காலி செய்தான்...அவன் அந்த சூரியப்பிறவியின் பி.ஏ, விக்ரம்.
***
அடுத்த நாள் காலை மற்றவர்களுக்கு எப்படியோ அந்த சுட்டெரிக்கும் பார்வையில் பிறரை வீழ்த்துபவனுக்கு அமோகமாக புலர்ந்தது...
தூங்கி எழுந்து உடற்பயிற்சி செய்து விட்டு குளித்து வந்தவன் இடையில் டவளை கட்டிக்கொண்டு கண்ணாடியின் முன் நின்றான்.
அவன் ஆதித்ய தேவ்..பெயருக்கு ஏற்றது போல தேவ பிறவி எடுத்து வந்திருப்பவன்.ஆறரடிக்கு சற்றும் குறையாத உயரம்,பச்சை நரம்புகள் தெரியுமளவிற்கு பாதாம் நிறமானவன்,பரந்த நெற்றி!! அதில் அவனைப் போலவே அடங்க மறுத்து நடனமாடும் முடிக் கற்றைகள்,கூர்மையான கண்கள் அதில் என்றும் குடிகொண்டிருக்கும் திமிர். நாசியின் நுனியோ ஊசியோ என ஒருவரை நின்று யோசிக்க வைத்துவிடும்,அதன் கீழ் எப்போதும் அழுந்த ஒட்டிக் காணப்படும் அதரங்கள்...சிரிப்பு என்றால் என்ன விலை என்று கேட்பான் போலும்...ஆனால் அது தான் அவன் கம்பீரத்துக்கழகு. ட்ரிம் செய்யப்பட்ட தாடியுடன் ஒட்டிக் காணப்படும் கன்னம்,எப்போதும் உடற்பயிற்சி செய்து பேணப்பட்ட உடல் கட்டு,ஒட்டிய வயிறு,அகன்ற தோள்..மொத்தத்துல மாடல் மாதிரி இருக்கும் ஆணழகன்..
அங்கே அவனுக்காக அழகாக வீற்றிருந்தன மாற்றுத் துணிகள்...அவன் நேர்த்தி இது தான் என்பதை பறைசாற்றுவதாக அழுத்தி இருந்த துணிகளில் ஒரு கசங்கள் ரேகைகள் தானும் இல்லை...அதனை பார்த்தவனின் பார்வையில் இருந்தது கவலையா..?பழிவாங்கும் வெறியா..?அவனுக்கு மட்டுமே தெரியும்..
வெள்ளை சேட்டிற்கு சாம்பல் நிற பேண்ட் மற்றும் ப்ளசர் அணிந்து டக் இன் செய்து கொண்டே ஃபோனை எடுத்து அழைத்திருந்தான் தன் பி.ஏ விக்ரமிற்கு..
டை முதற்கொண்டு ட்ரைவர் ஷூ வரை அணிந்து கண்ணாடியில் தன் சிகையை கோதிவிட்டவனை பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்...
அந்த அரண்மனைக்கே அரசனானவன் வழமை போல ஒரு கையை பேண்ட் பாக்கெட்டினுள் விட்டவாறு மற்றைய கையால் சிகையை கோதிபடி படிகளில் இறங்கி வர அவனுக்காக சாப்பாடு வித விதமாக டைனிங் டேபிளில் வீற்றிருந்தன..ஆனால் அவை அனைத்தும் அவனைக் கவரவில்லை..ஏன்,அதன் வாசணை கூட அவனை சுண்டி இழுக்கவில்லை..மாறாக அவன் அங்கிருந்த பெண்மணியிடம் கேட்டது எல்லாம் ஒன்றே ஒன்று தான்.. “மாம் சாப்பிட்டாங்களா..?” என்பதே..
அவனுக்குமே தெரியும் அவனின்றி அவரின் அணு கூட அசையாதென்பது..இருந்தும் ஒரு ஃபோமாலிட்டிக்காக கேட்டு வைத்தான்.
அந்தப் வேலைக்கார பெண்ணோ “இல்லை” என பவ்வியமாக கூற திரும்பினான் தன் தாயிருக்கும் அறையை நோக்கி...
எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டே ஆதித்ய தேவ்வை அழைத்த பெண் உணவுத் தட்டை நீட்ட எதுவும் பேசாது வாங்கிக் கொண்டு நடையை துரிதப் படுத்தினான்..
படுக்கையில் சாய்ந்தவாறு கண்களை மூடிய வண்ணம் இருந்தார் அவனின் தாய் அமரா..!!
அவரின் விழிகள் மட்டும் தான் மூடி இருக்கின்றன என்பதை அறிந்தவன் அவன் ஒருவனாயிற்றே..
அருகில் அமர்ந்து “மாம்...” என அழைத்தவனின் குரலில் தான் எத்தனை மென்மை..இவனின் இந்த அவதாரம் புதிது..
மெல்ல கண்ணை திறந்தார் அமரா..
அவரை பார்த்து புன்னகைத்தவனுக்கு பதிலுக்கு தானும் அவர் உதட்டை அசைக்கவில்லை..அது வலித்தாலும் முகத்தில் எதையும் காட்டாது “மாம்.. ஃபுட்..” என நீட்ட அவர் முகத்தை திருப்பிக் கொண்டார்.
எத்தனை வருடங்கள் தவித்திருப்பார் இவன் இப்படி மாற வேண்டும் என..அப்போதில்லாமல் இப்போது வந்து தன் பாசத்தை கொட்டித் தீர்த்தால் அவரும் என்ன தான் செய்வார்..காலம் கடந்த ஞானம் என்றும் பயனற்றது..
இது வழமையாக நடப்பது தானே என்றெண்ணியவன் ஒரு கவலத்தை எடுத்து அவர் முன் நீட்ட என்ன அதிசயம்!! அவர் வாயை திறந்து வாங்கிக் கொண்டார்..அதில் சிரிப்பில் இவன் உதடுகள் விரிந்தாலும் உர்ரென இருந்தான்.
யாருக்காக மறைத்தானோ அவருமே அவனின் அடக்கப்பட்ட புன்னகையை கண்டு கொண்டார்....முகத்தை சுழித்த அமராவோ “இங்க யாரும் யாருக்காகவும் அவங்கட சிரிப்பை அடக்க வேண்டிய அவசியமில்லை” என்றவர் திரும்ப, “மாம்..!!?” என்றவன் போலியாக அவரை முறைத்து வைத்தான்..
அவரோ இன்னுமே வாயை திறவாமல் இருக்க “ஓகே..ஓகே..லீவ் இட்..ப்ளீஸ் ஈட்..” என்றவனின் கெஞ்சல் கொஞ்சல் எல்லாம் இவரிடம் மட்டும் தான்..வெளியில் இவனின் பரிமாணமே வேறு..
பத்து மாதம் சுமந்தவளுக்கு தெரியாதா தன் மகவைப் பற்றி. இருந்தும் அவனை விட்டுப் பிடிப்பதே சாலச் சிறந்தது என இன்னும் அவனிடம் தன் கோப முகத்தையே காட்டி வருகிறார் அமரா..
உணவை ஊட்டி விட்டு அதிலே கை கழுவியவன் தாய்க்கு முத்தம் கொடுத்து விடை பெற்றான்.
அந்த முத்தத்திற்காகவே அவன் முகம் பார்த்து அவர் ஆசையாக விழித்திருப்பார்...ஆனால் எதனையும் வெளிக்காட்டமாட்டார்.இது தான் சிங்கத்தை பெற்ற சீமாட்டியின் பாசம்..அதனை அவன் காலம் கடந்து உணர்ந்திருந்தான்..!!
...
ப்ரேக்கிங் நியூஸ் என திரையில் மின்ன பரபரப்புடன் அனைவரும் அந்த பக்கத்திற்குள் தலையை நுழைத்துவிட்டனர்...டிவி, ஃபேஸ்புக்,டிவிட்டர் என அனைத்து வலைத்தளத்திங்களிலும் அது தான் இன்று தலைப்புச் செய்தி..
மர்மமான முறையில் ஒருவர் ***காட்டுப் பள்ளத்தாக்கில் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கிறார்...
முகம் சிதைந்த நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.யாரென அடையாளம் காண முடியவில்லை.கொலை செய்ததற்கான எந்தத் தடையங்களும் இல்லை. கொலையாளியை கண்டுபிடிக்க பொலிசார் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.சம்பவம் தொடர்பான விசாரணைக்காக விசேட காவல்துறை அதிகாரிகள் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.மேலதிக செய்திகளை அடுத்து வரும் மணித்தியாலங்களில் எதிர்பாருங்கள்...என்றதுடன் செய்தி முடிவடைந்திருந்தது..
செய்தியை செவியுற்றவர்களுக்கும் மனதில் பயம் கவ்விக் கொண்டது..அந்த முறையில் அந்த நபர் கொலை செய்யப்பட்டிருந்தார்..
பொலிசாருக்குமே அழைப்புகளுக்கு மேல் தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருந்தன..மண்டையை பிய்த்துக்கொண்டு அவர்களும் ஒரு தடயம் கிடைக்காதா என்ற நிலையில்...!!
அதேநேரம் ஆதித்ய தேவ்வும் ஆபிஸில் அதை தான் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனின் முகத்தில் எந்த வித உணர்ச்சிகளோ இல்லை...விரலால் நெற்றியை நீவி விட்டவன் இன்டர்கிராமில் அழைத்துவிட்டான் விக்ரமை.
"எக்கியூஸ் மீ சார்" என விக்ரம் குரல் கொடுக்க "கம் இன்" என்ற ஆளுமையான குரலில் விக்ரமுமே ஒரு கணம் நெஞ்சை நிமிர்த்தினான்.
அது தான் ஆதித்ய தேவ். உலகம் போற்றும் முதன்மை தொழிலதிபன்... வெளிநாடுகள் வரை தங்கள் கிளையை பரப்பிவிட்டிருந்தான்.
ஏ.டி கம்பனி, ஏ.டி ஹோட்டல்ஸ், ஏ.டி தனியார் மருத்துவமனை, ஏ.டி கார்மன்ஸ், ஏ.டி ஜவுளிக்கடை, ஏ.டி ஜுவல்லர்ஸ் என இந்த ஏ.டி பதிக்கப்படாத கட்டிடங்கள் தான் உண்டோ!! எனும் அளவுக்கு உலகளவில் அவன் பெயர் வியாபித்துக் கிடந்தது.
பொறாமை நிறைந்த உலகிலே இந்த இருபத்தேழு வயதில் அத்தனை எதிரிகளையும் தன் வளர்ச்சியின் மூலம் சம்பாதித்திருந்தான். அவன் கால் தடம் படாத நாடில்லை.வளர்ச்சி..!! வளர்ச்சி..!! வளர்ச்சி..!!அதன் மூலம் அவன் சேர்த்துக் கொண்டதெல்லாம் எதிரிகள் மட்டும் தான்..இவனை தாக்க எந்நேரமும் எதிரிகள் கண்ணில் எண்ணெய் விட்டு கழுகாய் காத்திருக்க அவனோ கூலாக உலகை சுற்றி வந்து கொண்டிருந்தான். இவன் எதிரிகளை கண்டு பயப்படும் ரகம் அல்ல.அவர்களின் கண்களிலே விரலை விட்டு ஆட்டி வைத்து விடுவான்.
ஏழு பரம்பரை வெட்டியாக இருந்து உண்ணும் அளவுக்கு சொத்து இருந்தாலும் தனக்கென ஓர் தனி இராச்சியத்தை பிடிக்க வேண்டும் என வெறும் நான்கே வருடங்களில் சம்பாதித்தவை தான் இந்த ஏ.கே இன்டஸ்ரி..அப்போ இவனுக்கு இந்த திமிர் இருப்பதில் தவறில்லை தானே..
இவன் அவன் தந்தையைப் போல கோபக்காரன் தான்.ஆனால் கெட்டவன் எல்லாம் இல்லை.ஏதோ தன் வழியில் குறுக்கிடுபவர்களின் குருத்தெலும்பை மட்டும் உடைத்துவிடுவான்...அவ்வளவே...
தீமையிலும் நன்மை இருப்பது போல தன் தாயின் குணமும் அவனுள் மறைந்து புதைந்து தான் கிடக்கின்றன. அவ்வப்போது அதுவும் வெளிப்படுவதால் இதோ நம் வாசகர்களைப் போல உதவிகள் செய்வதன் மூலம் பல நல்லுள்ளங்களையும் சம்பாதித்து வைத்துத் தான் இருக்கின்றான்.
நீ சிதைத்துவிட்ட விதை விருட்சமாக மாறி விட்டது..!!
என் கிளை கொண்டு உன்னை வேருடன் சாய்ப்பேன்..!!
இன்றிலிருந்து உன் வாழ்நாளை எண்ணிக் கொள்..!!
இப்படிக்கு தேவன்..!!?
இவன் யார்...?இவனின் பல முகங்களுக்கு பின் மறைந்திருக்கும் மர்மம் என்ன...??
தொடரும்...
தீரா.

Last edited: