"பியர்..பியர்..பியர்..ஐ டோண்ட் லய்க் இட்..ஐ எவொய்ட்.."
"ஓஓ உங்களுக்கு பிடிக்காது..!?"நாடியில் இரண்டு கையையையும் ஊன்றிய வண்ணம் திரூபன் கேட்டான்.
"யா..."என குடி போதையில் இருப்பவன் போல மண்டையை ஆட்டிய தீரா, "லிசின்" எனக் கூறி "பட் பியர் லய்க்ஸ் மீ...ஐ கான்ட் எவொய்ட் இட்" என கையை விரித்துக் காட்டிவிட்டு சிரித்துக் கொண்டே முன் இருந்த மதுக் குவளையை எடுக்கப் போக அதை தட்டிவிட்டது ஒரு வலிய கரம்.
அந்த கரத்துக்கு சொந்தக்காரனை முறைத்த தீரா, மீண்டும் பேரரை அழைத்து இன்னுமொன்றை ஆடர் செய்ய மற்றைய மூவரும் அவனை தீயாய் முறைத்தனர்.
அவர்களை கண்டு ஈஈஈ என இழித்தவனை பார்த்து மூவரும் காரித் துப்பினாலும் அங்கே ஒருவன் உள்ளுக்குள் உலையாய் கொதித்துக் கொண்டிருந்தானோ...!!?அவன் குவளையில் கொடுத்த அழுத்தத்தமே அதை பறைசாற்றியது..
பேரர் வந்து தந்ததும் "தெங்ஸு" என வேண்டுமென்றே குலறலுடன் கூறியவன் இப்போது வெகு கவனமாக மேசையில் வைப்பதை தவிர்த்து கையில் வாங்கிய உடனே வாயில் சரிக்க போக அதனை பறித்திருந்தான் ஆதித்ய தேவ்..
இவன் எங்கே இங்கேனு தானே பாக்குறீங்க..இந்த மூனு உதவாக்கரைடையும் ஃப்ரெண்ட் தான் அவன்.
அவனின் குலறலை வேண்டா வெறுப்பாக கேட்டுக்கொண்டிருந்த திரூபனோ அருகில் இருந்த அரவிந்தை பார்த்து "போதைல இருக்காறாமா.."என உதட்டை வளைத்து கிண்டலடிக்க தீரனோ "ஆமா..இப்போ தானே பியர் அதித்தேன்..அதேன், மப்பாக்கி விட்டுட்டு" என அதற்கும் குலறிய படி பதிலளிக்க "எதே..பியரடிச்சியா...?எங்க ஊது பார்ப்போம் "என அரவிந்த் முன்னே வர "ஹீ..ஹீ...அதான் மோந்து பார்த்தேன்ல..."என கூற இருவரும் தலையில் அடித் கொண்டனர்.
பின் ஆதித்யாவின் பக்கம் திரும்பி "டேய் டேய் ப்ளீஸ்டா...கொஞ்சமா கொஞ்சம் குடிக்கிறன்டா "என விளையாட்டை விட்டுவிட்டு தீரன் கெஞ்ச
"அறைஞ்சு பல்ல கலட்டி விட்டுறுவேன் வாய மூடிட்டு பேசாம இரு" என மதுக் குவளையை தன் கையில் வைத்துக்கொண்டு தராமல் இருந்தான் ஆதித்யா.
தேவ்வின் தொனி வேறுபாட்டை வைத்தே மற்றைய நண்பர்கள் பேசாமல் கப்பென வாயை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்க துடங்கிவிட்டனர்.
அவர்கள் வந்திருப்பதோ பிரபல பப் ஒன்றிற்கு..வருவது மட்டும் தான் மற்றப்படி சாப்பிடவோ குடிக்கவோ பெண்களுடன் நடனமாடுவதோ கிடையாது. கிடையாது என்பதை விட அனைத்தையும் செய்து விட்டு இவனிடம் யார் மல்லுக்கு நிற்பது என்ற நல்லெண்ணத்திலே நண்பர்கள் அமைதியாக வேடிக்கை மட்டும் பார்ப்பர்.
ஆதித்ய தேவ்விற்கு ட்ரிங் செய்யும் பழக்கமோ பெண்களுடன் கூத்தடிப்பதோ எதுவும் சுத்தமாக பிடிக்காது.ஆனால் மற்றவர்களின் சந்தோஷத்தில் ஓரெல்லைக்கு மேலே தலையிட மாட்டான்.அது போல மற்றவர்களையும் எல்லைக்கு மீறி தன்னை நெருங்கவும் விட மாட்டான்.அது அவன் குணம்..
அவனின் குணமறிந்தே நண்பர்களும் நடந்து கொள்ளுவர்.மற்றவர்களிடம் கோப முகத்தையே காட்டுபவன் நண்பர்களிடம் வெகுவாக அதனை தவிர்கவே நாடுவான்.இருந்தும் சில சமயங்களில் வெளிப்பட்டுவிடும். அன்று இவர்களுக்கு நரகத்தை காட்டி விட்டே மறு வேலையை தொடங்குவான்..
அவனின் கட்டுக்கடங்கா கோபம், ஆளுமை, திமிர் அதே போல அந்த சொட்டே சொட்டு பாசம் அனைத்தையும் பக்கத்தில் இருந்து பார்த்து வளர்த்தவர்கள் ஆகிற்றே..அதனால் அவர்களை அவனின் கோபம் பெரிதாக பாதித்தது இல்லை.ஒன்றுமட்டும் தான் அவனின் வேதம்..தன்னுடன் இருக்கும் போது மட்டுமாவது எல்லை மீறக்கூடாது என்பது அவனின் எழுதப்படாத சட்டம்.
இவனுக்குப் போய் நண்பனாக வாக்குப்பட்டு விட்டோமே என காலம் கடந்து தங்கள் விதியை நொந்து கொண்டனர் நண்பர்கள் மூவரும்.
அதில் திரூபன்,அரவிந்த் இருவரும் ஆதித்யா கூறினால் அதில் நலவிருக்கும் என கண்மூடித்தனமாக நம்புவார்கள் என்றால் இந்த தீரா இருக்கிறானே சரியான அரப்படித்த கழுதை...அவனுக்கு இவன் சொல்வதை கேட்கக் கூடாது என்றெல்லாம் இல்லை..வெண்ணெய்க்கு ஏதாவது ஒன்றை புதிதாக ட்ரை பண்ணுவதில் அத்தனை பிடித்தம்...அதற்காகவே டிசைன் டிசைனாக ஆதித்யாவிடம் வாங்கி கட்டுவான்.
"டேய்..குடிக்கத்தான் தரல, கொஞ்சம் சரி மோந்து பார்க்க தாடா" என அழாத குறையாக அவனிடமிருந்து கிண்ணத்தை பறிக்க முற்பட்டவனின் முதுகிலே சப்பென அடியொன்றை தேவ் போட.."க்ராதகா" என முதுகை வளைத்து நெளித்து தடவியவனை பார்த்து மற்றைய நண்பர்கள் சிரித்து வைத்தனர்...
"பரதேசிங்களா உங்களால தான்டா எல்லாம்... இவனுடைய குணம் தெரிஞ்சு இவனை கூட்டிட்டு வராதிங்கனு படிச்சு படிச்சு சொன்னேன்.கேட்டிங்களாடா பக்கி பயலுங்க.."என வசை பாட அது கேட்கக் கூடாதவனின் காதில் நன்றாக விழுந்து விட்டது.
ஆதித்யாவோ சேர்ட் கையை மேலே உயர்த்த திரூபன் மற்றும் அரவிந்துக்குள் அபாய ஒலிப்பு மணி அடிக்க மெல்ல எழுந்து எஸ் ஆகிவிட்டனர்.
அவர்கள் செல்வதை கவனித்த தீரா "என்ன இந்த எரும ரெண்டும் பொண்ணு பார்க்க வந்த மாதிரி பதுங்கி போவுதுங்க" என்று யோசனையுடன் திரும்பி தேவ்வை பார்த்தான். அவனின் முகத்தை வைத்தே கோபத்தின் எல்லையை கணித்தவனுக்கு அப்போது தான் தான் உலறிக் கொட்டியது உறைக்க திருதிருவென விழித்து விட்டு...சமாளிக்க துப்பில்லாமல் "தே..தேவ்வு...!!தம்பி தேவ்வு..!!கொஞ்சம் பின்னாடி பாரு" என்று கூறிக்கொண்டே ஓட்டம் பிடிக்க கப்பென பொத்தி பிடித்துக் கொண்டான் தீராவை...
கழுத்தை கை கொண்டு வளைத்த ஆதித்யா மண்டையில் கொட்டிக் கொண்டே..."என்ன சொன்ன...என்ன சொன்ன..?அப்போ நான் இல்லாம இங்க கூத்தடிக் வரீங்க போல" என்றவன் வலிக்க கொட்டவும்...
"டேய்..டேய் வலிக்குதுடா..எரும விடுடா" என விடுபட போறாட...
"சொல்லுடா நாயே..எத்தனை நாளா இந்த திருட்டுத் தனம் நடக்குது?" என வயிற்றில் குத்த குடல் வெளியே வந்துவிடும் போல் இருந்தது தீராவிற்கு
"டேய் சத்தியமா இல்லடா...ஒரு பேச்சுக்கு சொ..சொன்னேன்டா..உன்ன விட்டுட்டு வருவோமாடா மச்சி" என பால் வடியும் முகத்தை தேவ்விடம் காட்டி இளிக்க..
"இந்த நடிப்பை என்கிட்ட வச்சிக்காத...மூஞ்சிய பாரு பாடி சோடா மாதிரி" என கூறி இன்னுமொரு மொத்தை வழங்க தீராக்கு இடி கலங்கியது..
இவர்களை பற்றி அவனுக்குமே தெரியுமே.. இவனின்றி அவர்கள் இதுவரை ஓரிடம் கூட சென்றதில்லை...அப்படியே சென்றாலும் இவனிடம் கூறி விட்டு தான் செல்வார்கள்...இருந்தும் "இனி இப்படி செய்வ?" என தேவ் கேட்க "செய்யாத தப்பை இனியும் செய்ய மாட்டனு எப்படி சொல்லி புரிய வைப்பேன் இந்த காட்டெருமைக்கு" என தனியாக புலம்பிய தீராவிடம் "என்னடா பன்னி தனிய முனுமுனுக்குற?" என மறுபடியும் கையை ஓங்க அதற்குள் திரூபனும் அரவிந்தும் ஓடிவந்து ஆதித்யாவை பிடித்து இழுத்து எடுத்தனர்.
"காப்பாத்துங்கடா துரோகிங்களா...இன்னுங் கொஞ்சம் விட்டு இருந்திக்க எனக்கு பிரசவம் பார்த்து இருந்திருப்பான்...படுபாவி" என வயிற்றை தடவிக் கொண்டு மூச்சுவாங்கினான்..
"பார்த்தியா இவ்வளவு பட்டும் கொழுப்பு குறையல...விடுங்கடா இந்த இடியட்டை அடிச்சு கொல்லாம விட மாட்டேன்" என ஆதித்யா எகிற..
தீரா மீண்டும் இடக்காக பேசி வாங்கி கட்டுவதற்கு முன்பே "டேய் ஃபூல்.. எவ்வளவு பட்டாலும் திருந்தமாட்ட அப்படி தான..?வாய மூடிட்டு இரு..அவன் ஏதோ நல்ல மூட்ல இருக்கான் அதனால உன்னை சும்மா விட்டு வச்சு இருக்கிறான்" என திரூபன் கடிய "எதே..நல்ல மூடா...அப்போ இவ்வளவு நேரம் மொங்கினது என்னடா..?"என்றவன் அலறிக்கொண்டே ஓடிவிட்டான்..
ஓடும் அவனையே உதட்டில் உறைந்த புன்னகையுடன் பார்த்து நின்றனர் நண்பர்கள் மூவரும்..
இது தான் இவர்கள்..!! நால்வரும் சிறுவயதில் இருந்தே கூட்டு.. அரவிந்த் அமைதி என்றால் தீரா அடாவடி அப்பளம்...இவன் அடிக்கும் லூட்டிகளுக்கெல்லாம் ஆதித்ய தேவ்விடம் அடிவாங்கி சின்னாபின்னமாகி சிதறிப் போவான்...எப்போதும் இருவருக்கும் முட்டிக் கொண்டு தான் நிற்கும்..இவர்களின் சமாதானப் புறா தான் திரூபன். இவன் ஒரு லாயர்.
அரவிந்த் டாக்டராக இருக்க தீராவோ போலிஸ் அதிகாரியாக கடமை புரிகின்றான்...
...
இவர்கள் மூவரும் இப்படி சிரித்துக் கொண்டிருக்க பின்னாடி ஏதோ அரவம் கேட்டு முதலில் திரும்பியது என்னவோ தேவ் தான்...
அறைகுறை ஆடையில் கவர்ச்சியாக மேக்கப்பில் மினுமினுத்துக் கொண்டு நின்றிருந்தவளை பார்த்தவனின் உடல் இறுகியது...
அவனிடமிருந்து சத்தம் வராமல் இருக்க திரும்பிய அரவிந்த் மற்றும் திரூபனுக்கும் "இந்த ஏழரை மறுபடியும் என்ன இதுக்கு வந்திருக்குனு தெரியலையே.."என்றிருந்தது..
"ஹாஹாய் தேவ்.."என்றவளின் பேச்சில் தேவ் பற்களை நறுநறுவென கடித்தான்.
பின் இரண்டு கையையையும் பேண்ட் பாக்கெட்டினுள் இட்டு காலை அகற்றி நின்றவனின் தோரணை மனதில் கிலியை பரப்பினாலும் வெளியே பல்லைக் காட்டினாள் அகழ்யா...
அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தவன் அந்த மதி முகத்துடையாளுடன் இவளை ஒப்பிட்டுப் பார்த்தான். இகழ்ச்சியாய் உதட்டை குவித்து சிரித்து தன் பார்வையை திருப்பியவனை பார்த்து இப்போது பற்களை கடிப்பது இவள் முறையாயிற்று...
ஏன் அவளுடன் இவளை ஒப்பிட்டோம் என்பதை கூட அவன் உணர்ந்திருக்கவில்லை அக்கணம்...
உணரும் நேரம்...!!!?
...
"எப்படி இருக்க தேவ்...? பார்த்து ரொம்ப நாளாச்சு"
"அவன் எப்படி இருந்தா உனக்கென்ன..." இப்போது திரூபன் முந்திக் கொண்டு முன்னேற, அரவிந்த் அவனை தடுத்து பார்வையால் அமைதிப்படுத்தினான்.
"அவ தான் உன்னைய விட்டுட்டு ஓடி போய்டாளே..அவளை எதுக்கு இவ்வளவு நாளும் நெனச்சி உன் இளமையை தவிக்கவிடுற "என்றவள் அவனை இரசனையாக பார்க்க அவளின் பார்வையை உணர்ந்தாலும் அசையாது சிலை போல் நின்றிருந்தான் தேவ்.
ஆனால் உள்ளுக்குள் ஒரு பூகம்பமே வெடித்துக் கொண்டிருந்தது..கண் முன் பல காட்சிகள்...
"இவள.."என ஆத்திரத்தில் திரூபன் மீண்டும் முன்னேற அதற்குள் அங்கு வந்து சேர்ந்தான் தீரன்..
இவர்கள் இன்னும் வெளியே வராமல் இருக்க என்னவோ ஏதோ என வந்தவன் எதிரில் நின்றிருந்தவளை பார்த்து கொதித்தே விட்டான்..
"ஏய்ய்..நீ..."என அவனும் தன் பங்குக்கு அவளை முறைக்க "வாங்க ஏ.எஸ்.பி சார்...சௌக்கியமா...?"என அகழ்யா இதழோடிணைந்த நக்கல் தொனியில் கேட்க மூவருக்கும் மூக்கு விடைத்தது..
"ஆனா பாருங்க இவ்வளவு பெரிய போஸ்ட்ல இருந்தும் ஓடிப் போன உங்க பாசமலர் தங்கச்சிய கண்டுபுடிக்க துப்பில்லை..."என கூறி முடிப்பதற்குள் அவளது சங்குக் கழுத்து ஆடவனின் இறுகிய பிடியில்...
"இதுக்கு மேலே என்ன சரி பேசின, கொன்டு போட்றுவன் ஜாக்கிரதை..."
மற்ற மூவரும் ஏனையோர் தங்களை பார்த்து நிற்பதை பொருட்டு ஆதித்யாவை இழுக்க அவனின் பிடியோ இறுகியது..
தேவ்வின் ரௌத்தித்தில் இவ்வளவு நாளும் அவனை சீண்ட வேண்டும் என்ற அவளின் நினைப்பு ஆட்டம் கண்டது..
"ஹக்...வி..வி..விடு...லீ..வ்.."என அவளோ பிடியிலிருந்து போராட அவனின் பிடி தளருமா என்ன...?
நண்பர்கள் ஏதேதோ சொல்லி இழுத்ததெற்கெல்லாம் திரும்பி முறைக்க அந்தப் பார்வையில் அவர்களின் பிடி தளர்ந்தது..
"வட் டிட் யூ சே...?அவ ஓடிப் போனாளா..." என்றவன் அவளின் துடிப்பை ரசித்துக் கொண்டே "நீ வீட்ட விட்டு போக வச்ச..."எனக் கூற அவள் அதிர்ந்து விழித்தாள்..
"இவனுக்கெப்படி...!?"என அவள் ஷாக் ஆக அவளை உதறித் தள்ளியவன் தன் கட்சீஃபை எடுத்து உதறி கையை துடைத்துக் கொண்டே பேச அவனின் செயலில் அகழ்யாவின் முகம் கன்றிப் போனது..
"என்ட் வன் மோர் திங்...அவ ஒரு யூஸ்லெஸ் டிஸு...அவளை துரத்தி விட்டதே நான் தான்...நீயும் அவளும் எனக்கு இதோ இதப் போல தான்.."என கையை துடைத்த கட்சீஃபை கீழே விட்டெரிந்தவன் சுட்டிக் காட்டி விட்டு நடையைக் கட்டினான்..
அவமானத்தில் அகழ்யாவிற்கோ கண்களில் கண்ணீர் முட்ட முயன்று உள் இழுத்துக் கொண்டாள்...
அருகில் வாய் பார்த்து கொண்டு நின்றவர்கள், தேவ் சென்றவுடன் வந்து அவளை தூக்க கை கொடுக்க அவர்களை முறைத்து விட்டு எழுந்து சென்றாள்...
நண்பனின் பேச்சை பேசாமல் கேட்டுக் கொண்டு நின்றவர்களுக்கு அவனின் கடைசிப் பேச்சு தானும் கொஞ்சமும் பிடிக்கவில்லை...அதை வெளிக் காட்டினால் அகழ்யாவின் நிலை தான் தங்களுக்கும் என்று நினைத்து விட்டு, அவன் பின்னே சென்றனர்.
பல மாதங்கள் கழித்து அவள் பற்றிய பேச்சு..
தொடரும்...
தீரா.