• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கர்வம் 6

Dheera

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 17, 2023
234
238
43
SriLanka
சிகிச்சையின் முடிவில் கண்விழித்தவளை மன அழுத்தம் தான் இந்த மயக்கத்திற்கு காரணம் என கூறி இருக்க கவலையுடன் மீண்டும் ஆச்சிரமத்திற்கு அழைத்து வந்திருந்தனர்.

மயக்கத்தில் இருந்ததால் ஆதித்யாவின் பேச்சுக்கள் அவள் செவியை தீண்டாமல் போய் விட்டது விதியின் விளையாட்டாகிப் போனது. இல்லாவிட்டால் பிற்காலத்தில் அவன் தனக்காக வலிகளை பொறுத்துப் போக வேண்டி இருப்பதை தடுத்திருப்பாளோ...

...

மீண்டும் சென்னை வந்தவனை வர்ஷினியின் நினைவே சுற்றி வந்து கொண்டிருந்தது.

ஏன் மயங்கினாள்..!? இப்போது எப்படி இருக்கிறாளோ? இறுதியாக ஏன் தவிப்புடன் வெளியில் ஏதோ போல் ஓடி வந்தாள்? சரியாக சாப்பிடுகிறாளா!? ஏன் இத்தனை மாற்றம் அவள் உடலிலும் மொழியிலும்!? இறுதியாக தான் பார்த்த போது நன்றாகத்தானே இருந்தாள். இந்த ஆறு மாதங்களுக்குள் என்னானது..? என பல கேள்விக்கணைகளால் சுற்றி வளைக்கப்பட்டான் ஆதித்ய தேவ்.

தான் தானா அவளுக்காக இரங்கி சென்றேன்..!? ஒரு வேளை தன்னை அவள் பக்கம் ஈர்த்து மீண்டும் தன் வாழ்வினுள் நுழைய நினைக்கிறாளோ என்று அவனின் சாத்தான் மனம் இறுதியாக தறிகெட்டு சிந்திக்க கோபமும் ஆற்றாமையும் தலைவலிக்க செய்தது.

நாட்காலியில் அமர்ந்து தலையை கைகளால் தாங்கிக் கொண்டு அமர்ந்தவனின் உள்ளம் நிலையில்லாமல் தவித்தது.. எதனால்..!?என தனக்குள்ளே கேட்டுக் கொண்டவன் நெஞ்சை தடவி விட்டான். வேலை, பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்டு சுற்றி திரிந்தவனுக்கு தனக்கு தேவையானவை தன் அருகிலே இருந்தாலும் ஏனோ மனதில் வெறுமை குடி கொண்டிருந்தது. அதனை அவனும் உணர்ந்து தான் இருந்தான். ஆனால் இவளை பார்த்த மாத்திரத்தில் அந்த நொடி நேரம் தன் உள்ளம் சாந்தமானதை எண்ணி வியக்கத்தான் செய்தானே ஒழிய அதற்கான காரணத்தை ஆராய முற்படவில்லை.

அவளை பழிவாங்க நினைத்து ஏதேதோ செய்து விட்டு வந்தாலும் மனம் ஏனோ தவித்தது.

இறுதியாக பெருமூச்சு விட்டவன் அவள் வரவுக்காக காத்திருந்தான்.

தனக்குள் இருக்கும் ஏதோ ஒன்றை வெளிக்கொணர அவன் சோதனையாக இதை செய்ய துணிந்து கடைசியில் அதுவே அவனை சோதிக்க போவதை யார் இவனுக்கு கூறி புரிய வைப்பார்..

...


வழமை போல நாட்கள் நகர்ந்தோட அவள் பள்ளிக் கூடம் செல்லும் நாளும் வந்தது.

ஆனால் அங்கு சென்றவளுக்கு தான் இடியாக அவளது வேலை போய்விட்டது என்ற செய்தி வந்து விழுந்தது.

நியாயம் கேட்டும் ஏதேதோ காரணம் சொல்லி அவளை இனி கற்பிக்க வர வேண்டாம் என்றும் அவ்விடத்துக்கு வேறொருவரை பணியில் அமர்த்தி விட்டதாகவும் கூறி இவளை அனுப்பி வைத்து விட்டனர்.

அந்த பள்ளிக்கூடத்தில் தற்காலிகமாகவே அவள் பணி செய்து கொண்டிருந்தாள். அதனால் வேறெதுவும் கேட்க முடியாமல் வந்து விட்டாள்.

திடீரென தன் வேலை பரிபோனதை நினைத்து யோசனையில் வந்தவளை வழி மறித்து பெரியவர் ஆச்சிரமம் கூட்டிச் செல்ல அவள் யோசனையில் வருவதை கண்டவரோ "என்னமா..ஏன் ஒரு மாதிரி இருக்கிற..?"

"இல்லப்பா.. திடீர்னு இப்படி வேலையை விட்டு தூக்குவாங்கனு நான் எதிர்பார்க்கைல்ல.. வேற வேலைக்கு நான் எங்க போக?" என உதட்டை வளைத்தவளை பார்த்து சிரித்தவர் ஒரு அப்லிகேஷன் கொடுத்து அங்கே வேலைக்கு ஆள் சேர்ப்பதாகவும் அங்கே நிச்சயம் அவளுக்கு வேலை கிடைக்கும் என நம்பிக்கை ஊட்டியவர் அந்த காகிதத்தை கொடுக்க மனம் பூராகவும் சந்தோஷத்தில் வாங்கி முகவரியை பார்த்தவளுக்கு மயக்கம் வராத குறை தான்.

மீண்டும் சென்னையா என்று தான் மண்டையில் ஓடியது. அப்பட்டமாக நடுங்கியது பொன்மேனி. அவளின் மாற்றத்தை கவனியாதவரோ அது ஆதித்ய தேவ்வின் கம்பனி தான் என்று கூறி இருக்கவில்லை. அவர்களின் ஊடல் அவருக்கு தெரியாதே.தெரிந்திருந்தால் அவளை அந்த திமிர் பிடித்தவனின் கூட்டுக்குள் அனுப்பி இருக்கமாட்டாரோ என்னவோ..

அவளுக்கு ஆதித்ய தேவ்வின் வசதி மட்டும் தான் தெரியுமே தவிர அவனின் கம்பனி பெயரோ, விலாசமோ ஏன் அவனின் பெயரை தவிர ஒன்றுமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஏனோ மனம் போகாதே என முரண்பட்டது. அதை அவரிடம் கூற வர முன் அவரோ நல்ல வாய்ப்பை தவர விட மனசில்லாமல் அவளை வழி அனுப்பி வைக்க ஆக வேண்டிய வேலையை பார்க்க சென்று விட்டார்.

அவரின் சந்தோஷத்தை குழப்ப மனம் வராதவள் மனமே இல்லாமல் தனக்கு வலியை தந்த சென்னையை நோக்கி மீண்டும் பயணப்பட்டாள்.

...


இது அனைத்தும் அவன் வேலை தான் என யாருக்கும் தெரியாது விக்ரம் உட்பட. தன் பலத்தின் மூலம் அவளின் வேலை பறித்ததும் அவனே, அதேபோல் தன்னிடம் வேலை பார்க்க இடம் உண்டு என பெரியவர் மனதை கலைத்ததும் அவனே..

அவன் நல்ல நேரமோ என்னவோ அந்த பெரியவர் ஆதித்யாவின் பெயரை கூறி இருக்கவில்லை. அதே போல அவளும் இன்டர்நெட் வசதி இருந்தும் அந்த கம்பனி பற்றி தகவலை திரட்ட முற்படவில்லை.

இந்தத் தடவை விதியின் விளையாட்டில் சிக்கப் போவது அவளா..??அல்லது அவனா??



***


அவள் வர சம்மதித்து விட்டதாக பெரியவர் மூலம் அறிந்து கொண்டவன் ஏதோ சாதித்து விட்டது போல் தன்னுள் சிரித்துக் கொண்டான்.

ஆறு மாதங்களுக்கு முன்பு அவளை ஏன் விரட்டினோம் என்பதை நினைவில் வைத்திருக்கிறானா இல்லையா என்பது தெரியவில்லை. ஏதோ ஒன்றுக்காக அவளை தன்னருகில் இருத்த அவா கொண்டான் ஆடவன்.

தன் ஆபிஸில் இருந்து இரவு சற்று முன்னதாகவே வீட்டுக்கு கிளம்பி விட்டான்.

வந்தவன் நேராக தன் தாயின் அறைக்கு சென்று அவரை பார்க்க அவரோ சாப்பிட்டு விட்டு நேரகாலத்துடனே உறக்கத்தின் வழி சென்றிருந்தார்.

அவரின் நெற்றியில் முத்தமிட்டவன் " மாம்..ஸீ இஸ் பெக்.. கூடிய சீக்கிரம் உங்களிடம் அழைத்து வருகிறேன்" என ஏதோ உந்துதலில் கூறிவிட்டு பின் தன் தலையில் மானசீகமாக தட்டிக் கொண்டே எழும்பி சென்றான்.

என்றுமில்லாத புத்துணர்ச்சி அவனை ஆட்கொண்டிருந்தது.

அவன் கொடுத்த தீ வினைகளை அவனுக்கு கொடுக்க அவள் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தாள்.


...


அப்படி இப்படி என இதோ ஹைதராபாதில் இருந்து சென்னை நோக்கி புறப்பட இருக்கின்ற புகையிரதத்தில் ஏறி அமர்ந்து விட்டாள்.

சென்னை அவளுக்கு புதிதல்ல. ஆனால் இந்த ரணங்களுக்குப் பிறகும் ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் செல்லும் அவள் தான் புதியவள். பெரியவருக்கு வேலை இருந்ததால் அவர் வர முடியாமல் போய்விட்டது.தனியாகவே தன் பயணத்தை தொடர்ந்தாள்.

தன் கழுத்தில் கிடந்த கறுப்பு மாலையை கையால் இறுகப் பற்றியவளின் உள்ளமோ கலங்கிப் போய் இருந்தது. உதடு துடிக்க அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. தனியாக அமர்ந்திருந்ததால் கண்ணீர் வெளியே வர தடை இருக்கவில்லை.கிட்டத்தட்ட பதின்மூன்று மணித்தியாலப் பயணம். காலை ஏழு மணிக்கெல்லாம் பயணத்தை ஆரம்பித்தால் தான் இரவு ஒன்பது மணிக்காவது சென்று சேர முடியும். அங்கே அவளின் வரவிற்காகவே ஏற்கனவே ஆள் நின்று கொண்டிருந்தது.

மௌனமாக கண்ணீர் வடித்தவளின் சிந்தனையோ ஆறு மாதங்களுக்கு முன் நடந்த தன் வாழ்வின் கசப்பான பக்கங்களை புரட்டலானது...


***


ஆறு மாதங்களுக்கு முன்


இந்தியா என்றாலே சென்னை தானே எமக்கு முதலில் நினைவில் வந்து போவது. சென்னையின் மக்கள் தொகை பெரும்பான்மை தமிழ்.மக்கள்தொகையில் ஐந்தில் நான்கு பங்கு இந்துக்கள்; முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஜைனர்கள் எஞ்சியவர்கள். தமிழ் மிகவும் பொதுவான மொழி, மேலும் பல வல்லுநர்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள். மக்கள் தொகையில் பத்தில் ஒரு பங்கினர் தெலுங்கு பேசுகிறார்கள்; சில வகை ஹிந்துஸ்தானி பேசுபவர்கள் சற்று குறைவாகவே பேசுவார்கள். மக்களுக்கு பஞ்சமே இல்லாத நாட்டில் ட்ராஃபிக் இல்லாமல் இருந்தால் தான் அதிசயம்.

அந்த அதிகாலை வேலையிலே மக்கள் திரல், பாதையில் சுட்டெரிக்கும் வெயிலில் எப்போடா பச்சை சமிக்ஞை விழும் என வழி மேல் விழி வைத்து காத்திருந்தனர்.

இன்னொரு பக்கமோ தெருக் கடைகளில் ஆங்காங்கே ஜனங்கள் சுட சுட தீனி பண்டங்களை வாங்குவதும், சிலர் கொறித்தும் கொறிக்காமலும் அறக்கப் பறக்க பேரூந்துக்காக ஓடுவதும் என பரபரப்பாக இருந்த நகரத்தில் தான் அவளும் தன் மஞ்சள் சுடிதாரின் துப்பட்டா காற்றில் பறக்க லேசாக விரிந்து கிடந்த தன் கூந்தலை காதுக்குப் பின் சொருகிக் கொண்டு காதில் போட்டிருந்த கம்மல் நடனம் ஆட தன் பாதத்தை பூமியில் பதித்த வண்ணம் ஓடி வந்தாள் காலேஜ் செல்லும் பஸ்ஸில் ஏறிக் கொள்வதற்காக.

"ஏய்..பார்த்துடி.." என்ற தன் உயிர் தோழியின் பேச்சைக் கூட காதில் வாங்காமல் மூச்சு வாங்க இறுதி பஸ்ஸும் போய் விடுமோ என்ற அச்சத்தில் வேகமாக வந்தவள் அந்தா மோதி இருந்தாள் ஆடவனின் இருசக்கர வண்டியில்...

ஏ..ஏய்..என வண்டியை ஒடித்து திருப்பியவன் ப்ரேக் போட்டு நிப்பாட்டி விட்டு கொலைவெறியுடன் வந்தான் வர்ஷினி நிற்கும் இடத்திற்கு.

அவன் வேறு யாருமில்லை. விக்ரம் தான். கோபத்தில் அவளை நெருங்கி வருவதை உணராதவளோ அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தாள்.

அவன் மட்டும் கொஞ்சம் சுதாரித்து வண்டியை திருப்பி இருக்காவிட்டால் அங்கே அவள் அடிபட்டு வீழ்வது நிச்சயம்.

"ஹேய் இடியட்.. இப்படி தான் சுத்திமுத்தி பார்க்காம வருவியா..? ரோட்ல விழுந்து சாவுறதுக்கு உனக்கு என் வண்டி தான் கிடச்சிச்சா..? நொன்சன்ஸ்.. "என தன்போக்கில் தன் பல்லவியை தொடங்க அப்போது தான் அவள் அருகில் நெருங்கி வந்த யாத்தனாவிற்கு அவனின் ஏச்சு தெல்லத் தெளிவாக கேட்டது. "அச்சச்சோ இவள பற்றி தெரியாம இவர் வேற வாயை கொடுக்கிறாரே.." என மனதில் அலறிக்கொண்டே நண்பியை பார்க்க அவள் இன்னும் இவ்வுலகத்திற்கு வந்தபாடில்லை...

"அடியேய் வர்ஷினி.."என காற்றிற்கும் கேட்காத குரலில் யாத்தனா அழைக்க அருகில் நின்ற விக்ரம் அப்போது தான் யாத்தனாவை கவனித்தான். பரவாயில்லையே பார்க்க சுமாரா தான் இருக்கா என நினைத்தவன் பின் தன் எண்ணப் போக்கை நினைத்து மண்டையில் தட்டி விட்டுவிட்டு அவளிடம் "ஏன் இன்னும் கொஞ்சம் மொல்ல பேசுறது.. ஆளும் மண்டையும்.."என கடுப்படித்தான்.

அவனின் பேச்சில் அவளுக்கு முறைக்க மட்டுமே முடிந்தது. யாத்தனா இயற்கையிலே அமைதியான சுபாவம் கொண்டவள். யாரிடமும் அளவுக்கு அதிகமாக பேச்சை வளர்க்க மாட்டாள்.

"இந்த ஈபில் டவருக்கு இவ தான் சரி" என நினைத்தவள் வர்ஷினி யை உலுக்க அப்போது தான் சுயத்தை அடைந்தாள் பெண்ணவள்.

தன் முட்டை விழிகளை உருட்டி விக்ரமை பார்க்க அவனுக்குமே சிரிப்பு வந்து விட்டது. இருந்தும் தன்னிலையை இழுத்துப் பிடித்துக் கொண்டவன்.. "ஓஓ இன்னும் கொஞ்சம் கண்ணை நல்லா உருட்டு .. கண்ணை எங்க பின்னாடி வச்சிட்டா வர்ற.." என கேட்க அவனை முறைத்தவளை கண்டு "என்ன முறைப்பு.. வண்டில வந்து மோதினதும் இல்லாமல் முறைக்க வேற செய்றியா..?"என்றவன் அவள் அருகில் வர அதற்கிடையில் வந்த யாத்தனா "சார்..சார்..ஏதோ தெரியாமல் வந்துட்டா..ப்ளீஸ் விட்டுடுங்க" என்று உண்மையாகவே நண்பிக்காக கெஞ்சினாள்.

வர்ஷினி மேல் தான் முழுத் தவறும் என அவளுக்கும் தெரியும். அது மட்டுமில்லாமல் விக்ரமின் முறைப்பு வேறு அவளுக்கு திகிலை ஏற்படுத்தியது.

"அது..அந்தப் பயம் இருக்கனும்.." என அவன் முடிக்கும் முன்பே "ஹேய் என்னடி இந்த ஈபில் டவர்ட போய் மன்னிப்பெல்லாம் கேக்குற.." என்கவும் "ஏதே ஈபில் டவரா..?"என பல்லை நறுநறுத்த விக்ரமிடமிற்கும் வர்ஷினிக்கும் இடையில் புகுந்த யாத்தனா "அடியே வர்ஷூ..அத தாண்டி நானும் மனசுல நெனச்சேன்.. ஆள்ட ஹைட்ட பாரு கொக்கு மாதிரி.." என இருவரும் மாறி மாறி முனுமுனுத்து சிரிக்க கடுப்பான விக்ரம்"என்னங்கடி லந்தா.. வண்டில வந்து ராங்கா மோதினதும் இல்லாமல் கிண்டல் வேற செய்றிங்களா...? "என கூறி கை சட்டையை மடித்து மேலே உயர்த்த உண்மையிலே பயந்து விட்டாள் யாத்தனா.

அப்படியே வர்ஷினியின் பின் ஒழிய அவளை எட்டிப் பார்த்து விட்டு மீண்டும் இவள் பக்கம் திரும்பிய விக்ரமிடம் "டேய்..ஆமாண்டா நான் தான் வந்து வேணும்னே விழுந்தேன்..அதுக்கிப்போ என்ன செய்ய போற..?" என அடங்காமல் வாயடித்த வர்ஷினியை அடிக்க கட்டை கிடைக்காதா என்ற நிலையில் விக்ரம்.

"என்னது டாவா..?" என்றவன் அவளை நோக்கி கையை ஓங்க "அடிடா பார்க்கலாம் " என நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு முன்னேறியவளைப் பார்த்து, ஏதோ ஒரு வேகத்தில் கையை ஓங்கியவன் அதிர்ந்து அப்படியே கையை பின்னே இழுத்துக் கொண்டான்.

ஏளன சிரிப்புடன் வர்ஷினியோ " அட..இவ்ளோ தான் உன் வீராப்பா? " என அவனின் தன்மானத்தை சீண்டி விட, இதுவரையில் பெண் சாவகாசம் ஒட்டியிராத விக்ரமோ " அ..அப்படி இல்லை.. பெண்ணை கண்டா பேயை கண்ட மாதிரி அங்கே நிற்காம ஓடி விடனும்னு அம்மா சொல்லி இருக்கிறாங்க" என்றவனை பார்த்து நண்பிகள் இருவரும் கலுக்கென சிரிக்க, அவள் சுதாரிக்கும் முன்பே அவளின் கையை மடக்கி பிடித்தவன் "ஆனால் நீ பொண்ணில்லடி பிசாசு" என முறுக்கியவனிடம் "டேய் விடுடா.. பொறுக்கி.." என்கவும் இன்னும் வலிக்கச் செய்தவன் "யாருடி பொறுக்கி..நீ தாண்டி லேடி ரவுடி.." என கூற நடப்பதை புரியாமல் பார்த்து அதிர்ந்து நின்ற யாத்தனா விக்ரமை விலக்க முற்பட அவன் முறைத்த முறைப்பில் கப்சிப் ஆகி ஒதுங்கி நிற்க வேண்டியதாகிற்று.

இவர்களின் கூத்து தெருவோரத்தில் சற்று தள்ளி நடந்ததால் யாரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை.

அதற்கிடையில் பஸ் ஓட்டுனரோ வழமையாக நிற்கும் இவர்களை கண்டு நிறுத்த, விக்ரமோ பார்வையாலே போகும் படி சைகை செய்ய அதுவும் கடந்து சென்றது.

"அச்சச்சோ பஸ்.." என யாத்தனாவும்

"இருந்த கடைசி பஸ்ஸும் போச்சா.." என வர்ஷினியும் கவலையுடன் நின்றது சில வினாடிகள் தான். அதற்கிடையே அனைத்து கோபமும் வந்து விக்ரம் மேல் பாய "சனியனே..எல்லாம் உன்னால தான்..விடுடா கைய..வலிக்குது" என கூறி முகம் சுணங்க ஏனோ விக்ரமிற்கு ஒரு மாதிரி ஆனது. உடனே கையை விட்டவன் பழிக்கு பழி வாங்கியாச்சு என்றெண்ணி எதுவும் நடவாதது போல வண்டியை ஸ்டாட் செய்ய, சுதாரித்து ஓடி வந்த வர்ஷினி அவன் கையிற்குள் புகுந்து வண்டி சாவியை எடுத்து விட்டாள்.

"ஏய் சாவியை கொடுடி.." என பறிக்க அவளோ அவனுக்கு போங்கு காட்டிக் கொண்டிருந்தாள். "ஏய் இப்போ கொடுக்க போறியா இல்லையாடி..?" என்கவும் "முடியாது போடா..மரியாதையா காலேஜ் போக ஆட்டோ பிடிச்சு தா..இல்லை சாவி கிடைக்காது மாமோய்.." என கூறி திரும்பி நடக்க இவர்களின் சம்பாசனத்தை பயத்துடன் பார்த்து கொண்டு நின்றிருந்தாள் யாத்தானா.

"எதே ஆட்டோவா.. நீ யாருடி எனக்கு..போடி.." என கூற "அப்போ சாவியும் இல்லை போடா.." என அவள் முன்னே நடக்க ஆபிஸிற்கு நேரமாவதை உணர்ந்த விக்ரம் வேறு வழியின்றி ஆட்டோ ஒன்றை கை காட்டி நிப்பாட்டி அவர்களை ஏறச் சொல்ல அவளோ சிரித்துக் கொண்டே அவன் முன் கீயை ஆட்ட வெடுக்கென பறித்துக் கொண்டவன் அவளை முறைத்துக் கொண்டே ஆட்டோ ட்ரைவரிடம் அவன் நம்பரை வாங்கி விட்டு விலாசத்தை அவளிடம் கேட்டு அவனிடம் கூறியவன் பணத்தை கொடுத்து பாதுகாப்புடனே அவர்களை அனுப்பி வைத்தான். இது அனைத்தும் முறைத்துக் கொண்டே...

அவனின் இந்த செயல் யாத்தனாவை கவர்ந்தது என்றால் யாரென்றே தெரியாத தங்களுக்கு உதவும் அவனின் நல்ல குணத்தை நொடியில் உணர்ந்து கொண்ட வர்ஷினி "வரேன்டா அண்ணா.." என பல்லை இளித்துக் காட்ட "நீ வரவே தேவையில்லை. என்ன மேக்குடி நீ..? போய்டு வா.." என வழியனுப்பி வைக்க "சோ சுவீட்.." என கொஞ்சி விட்டே இடத்தை காலி செய்தாள் இப்போதிருக்கும் பேச்சுக்கே பஞ்சப் பட்டவள் போல் இருக்கும் கதாநாயகி.

அவளின் சிரிப்பில் தானாக அவன் இதழ்கள் விரிந்து கொண்டன. நடந்த கலேபரத்தை அசை போட்டவன் "ராட்சசி.." என சிரித்துக் கொண்டே தன் பைக்கில் ஏறி புறப்பட்டுவிட்டான்.

விதி வசத்தால் மீண்டும் சந்திக்க போவது அறியாமல் மூவுள்ளமும் பிரிந்து சென்றது.

தொடரும்...


தீரா.
 
  • Like
Reactions: Lakshmi murugan