• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

shakthinadhi

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 23, 2024
Messages
7
கள்வன் 1


சின்ன சின்ன பதம் வைத்து
கண்ணா நீ வா வா வா
மணிவண்ணா நீ வா வா வா

சின்ன சின்ன பதம் வைத்து
கண்ணா நீ வா வா வா
மணிவண்ணா நீ வா வா வா

வண்ண வண்ண உடை உடுத்தி
கண்ணா நீ வா வா வா
மணிவண்ணா நீ வா வா வா

சின்ன சின்ன பதம் வைத்து
கண்ணா நீ வா வா வா
மணிவண்ணா நீ வா வா வா

மனமுருக பாடி கொண்டிருந்த கார்குழலி கவனத்தை கலைக்கவே வந்து சேர்ந்தது அழகான குயில்களின் சங்கீதம். செவ்வாயினால் புன்னகை புரிந்தவள் கண்களை மூடியப்படியே குயிலின் கீதத்துடன் இவளது வீணையையும் மீட்டி பாட ஆரம்பித்தாள். மாலை வேலையில் விளக்கேற்றி விட்டு அவளது வீணையை மீட்டி கொண்டிருந்தாள். எவ்வளவு மணி நேரம் வீணையை மீட்டி இருப்பாள் என அவளுக்கே வெளிச்சம். திடீரென வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள். அழகூடாது அம்மா கடைசியாக எனக்கு சொல்லிவிட்டு போன தாரக மந்திரம் அழ வேண்டாம் அழவே வேண்டாம். அழுது மட்டும் என்ன ஆகி விட போகிறது. போனது போனதுதானே திரும்ப கிடைக்குமா? மனதார மனமுருக அவள் கண்ணணை வேண்டினாள். வரும் கண்ணீரை துடைத்து விட்டு எழுந்தாள்.

"குழலி... குழலி..." என வாசலுக்கு வெளியே சத்தம் மட்டும் வர யாரது என எண்ணியப்படியே வெளியே போனாள்.

"குழலி நாங்க எல்லாரும் திருவிழாவுக்கு போறோம். நீ வரலையா?" என்றாள் அவளின் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தேவகி.

"இல்ல தேவகி நீ போ நான் வரலை."

"இந்த ஊருக்கு வந்து முழுசா ஒரு வருஷம் ஆக போகுது. ஆனா நீ எங்கேயும் வர மாட்டேங்குற. மூணு வருஷமா இந்த ஊர்ல திருவிழான்னு எதுவும் இல்லாம இப்பத்தான் திருவிழா நடக்குது குழலி. வா போய் பார்க்கலாம். ரொம்ப சூப்பரா இருக்கும். நேரம் போறதே தெரியாது. வா போலாம்."

"நான் வரலை தேவகி. தாத்தா இங்க தனியா இருப்பாரே. அவரை பார்த்துக்கணும். டைமுக்கு மருந்து கொடுக்கணும்டி. நீ போ..." என சங்கடத்துடன் அவள் சொல்ல...

"ஏந்தாயி அதான் அந்த புள்ள இவ்ளோ சொல்லுதுல. நீயும் இந்த வீடே கதின்னு இருக்க. போ தாயி."

"இல்லை தாத்தா நான் போய்ட்டா உங்களை யார் பார்த்துப்பாங்க. பாலு சின்ன பையன் அவனை யாரு பார்த்துப்பாங்க."

"ஆமா அவன் பச்சை குழந்தை பாரு அவனுக்கு பதிமூணு வயசாச்சு. நீ போயிட்டு வா அவன் என்னை பார்த்துப்பான்" என்றவர் தொலைக்காட்சியை பார்த்து கொண்டிருந்த பாலு என அழைக்கப்படும் பாலகிருஷ்ணனை அழைத்தார். அவனும் கால்லை தாங்களாக ஊனிஊனியே மெல்லமாக வந்தான்.

கார்குழலியின் ஒரே தம்பி பாலு. அவளுக்கு உறவு என்று சொல்லி கொள்ள அம்மா, அப்பா, தாத்தா, பாலுவும் மட்டும்தான் உள்ளனர். குழலியின் அம்மா ஒரு வருடத்திற்கு முன் இறந்து விட... அவரது தந்தையான சுப்புராஜ்தான் இவர்கள் இருவரையும் அவரது ஊருக்கு அழைத்து வந்தார். குழலியும், பாலுவும் இந்த ஊருக்கு வந்து இத்தோடு பல மாதங்கள் கடந்திருக்க... இன்று திருவிழாவை பார்க்க அவளது தோழி அழைத்ததும் போகாமல் அவள் இருக்க காரணம் அவளது அம்மாதான். அங்கே போனால் கண்டிப்பாக தன் அம்மாவின் ஞாபகம் வரும். தேவை இல்லாத எண்ணங்கள் மனதை வாட்டும் என்னும் எண்ணத்தில்தான் அவள் வரவில்லை என முடிவெடுத்தாள்.

"இதோ வந்துட்டான் பாரு. நீ போய் திருவிழா பார்த்துட்டு வா. அவன் இருக்கான் ஒன்னும் பிரச்சனை இல்லை" என சொல்லி அழைத்து வைத்தார். குழலியும் சிறு சந்தோசத்துடன் அவ்விடத்தை விட்டு திருவிழாவை பார்க்க சென்றாள். பிடித்ததை வாங்கி மகிழ்ந்தாள். இருவர்களுடன் மற்றும் பல தோழிகள் வந்துவிட சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் போனது. இவர்கள் போகும் வழியெல்லாம் இளைஞர்களின் பட்டாளமும் பின்னாடியே போனது. கூட்டத்திற்கு பஞ்சம் இல்லை.

"ஏய் வள்ளி செய்தி தெரியுமாடி..."

"என்ன சேதி எனக்கு ஒன்னும் தெரியாதே மல்லி."

"குழலி உனக்கு தெரியுமா?"

"என்னடி அவளை போய் கேக்குற அவளே வீடே கதின்னு இருக்குறவ... அவளை போய் கேக்கற..." என்று தேவகி சொல்ல..

"ஹா... ஹா.. அதுவும் சரித்தான் புள்ள... உனக்கு குழலின்னு பேரு வச்சதுக்கு பதிலா இளவரசின்னு பேரு வச்சிருக்கலாம்."

"ஏண்டி" என தேவகி கேட்க...

"ஆமா பொறவு எந்நேரமும் வீட்டிலே இருக்கா... மொட்ட மாடிக்கு போனா அந்த பெரிய வீட்டையே வெறிச்சு வெறிச்சு பார்க்குறா... அவ்ளோதான் அவள் உலகமே..." என சொல்லி அவர்கள் அனைவரும் குழலியை கிண்டல் செய்ய...

"ஏய் போங்கடி என்னை ரொம்ப ஓட்டுரிங்க நான் போறேன்" என்று சொல்லி கொண்டு அவள் போக பார்க்க...

"அடியேய் நில்லு புள்ள நான் சொல்ல வந்த விஷயத்தை கேட்டுட்டு போ..."

"என்னடி..."

"ம்க்கும்... அதாக ஆகப்பட்டது செய்தி என்னவென்றால் ஒரு டிகிரி முடித்த பெண் பிள்ளைகள் நம் கிராமத்தில் யாரேனும் இருந்தால் நாளையே பெரிய வீட்டுக்கு வரவும். வேலை காத்திருக்கிறது. தோட்டத்து கணக்கு வழக்குகள் அனைத்தும் அவர்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட பட்டுள்ளது. படித்து முடித்த பெண்கள் யாராயினும் கண்டிப்பாக வரலாம். நிறைய சம்பளம், அங்கேயே தங்கி கொள்ள வசதிகள் இன்னும் பல வசதிகள் அங்கேயே கிடைக்கும். பின் குறிப்பு அவர்கள் எப்பொழுது வேண்டுமானாலும் போ என்று சொல்லிவிட்டால் உடனே சென்று விட வேண்டும். போகும் போது தாங்கள் எதிர் பார்க்க முடியாத அளவுக்கு பணம் கை நிறைய கொடுத்து திருப்பி அனுப்பப்படுவார்கள்."

செய்தியை கேட்ட அனைவவரும் "என்னடி இது புதுவிதமான வேலையா இருக்கு. கை நிறைய காசு, அங்கே தங்கிக்க இடம் இதெல்லாம் போட்டு தராங்களா... ச்சே... சூப்பர்டி ஆனா நாங்க யாருமே பத்தாவது தாண்டலையே... இதுல எங்கிட்டு போய் வேலை செய்ய... அடியேய் குழலி நீ பெரிய படிப்பு படிச்சவதான புள்ள போ புள்ள. உன் தாத்தாவும் பாவம் கூலி வேலைக்கு போய்தான உங்களை காப்பாத்துறாரு. நீயும் உன் தகுதிக்கு ஏத்த வேலை கிடைக்குதான்னு தேடிட்டே இருந்த. இப்போ நம்ம ஊர்லயே அதுவும் பெரிய வீட்டுலயே உனக்கு வேலை கிடைச்சுருக்கு புள்ள. உன் படிப்புக்கு கண்டிப்பா அங்க வேலை கிடைக்கும்" என்றாள் தேவகி.

"ம்..."

"என்னடி நான் இவ்ளோ பேசுறேன். நீ என்னமோ ம்னு மட்டும் சொல்ற."

"வேற என்ன சொல்லணும் சரி போறேன்."

"நீ வர வர சரி இல்ல புள்ள... ஒத்தை வார்த்தையிலே பதில் பேசுற..."

"ஏய் இல்லடி எனக்கு ரொம்ப சந்தோஷம் ஆகிடிச்சு. இனி எங்க கஷ்டமெல்லாம் தீர போகுதுல அந்த சந்தோஷத்துல எனக்கு பேச்சே வரலை அவ்ளோதான்... சரி ரொம்ப நேரம் ஆச்சுடி வீட்டுக்கு போலாமா அங்க பாலுவும், தாத்தாவும் தனியா இருப்பாங்க" என்று கவலை தோய்ந்த முகத்துடன் சொல்ல அவளும் சரி வா புள்ள போலாம். நீ பாரேன் உனக்குதான் அந்த வேலை கிடைக்கும்" என்றாள்.

"பாக்கலாம்டி..." என்று சொல்லியவள் இன்னும் பல விஷயங்கள் தோழிகள் இருவரும் பேசி சிரித்து கொண்டே வீட்டை அடைந்தனர்.

வீட்டிற்கு வந்ததும் விஷயத்தை சொன்னாள் கார்குழலி.

"சரிம்மா நீ தாராளமா போ... நமக்கும் இங்க கொஞ்சம் நிலைமை சரியில்ல" என்று சொல்லிவிட்டு இரவு உணவை சாப்பிட்டு அனைவரும் படுத்து விட்டனர்.

அதிகாலை நேரத்திலேயே எழுந்து விட்டாள் குழலி. மனம் முழுதும் இன்றைக்கு நமக்கு வேலை கிடைத்து விடுமா? எத்தனை பேர் இந்த வேலைக்காக வருவார்களோ தெரியவில்லையே. அவர்களையும் மீறி நாம் வந்து விடுவோமா என்று மனதில் ஆயிரம் எண்ணங்கள் ஓடி கொண்டிருக்க... கைகள் எப்போதும் போல வேலையை செய்து கொண்டிருந்தது.

"இன்னும் கிளம்பலையா?"என கேட்டு கொண்டே உள்ளே வந்தார் சுப்புராஜ்.

"ம்... புறப்பட்டுட்டேன் தாத்தா" என மல்லி சரத்தை எடுத்து தலையில் வைத்துக் கொண்டாள்.

"அப்படியே உன் அம்மாவை போல அழகா இருக்க. உன் அம்மாவும் இப்படித்தான் பருவ வயதில் இருபாள். அவ போராத காலம் காதலில் விழுந்து எல்லாம் போனது. வேலை செய்ய போகிறாய். நீயும் அந்நிலைக்கு வந்து விடாதே."

"தாத்தா என்ன பேசுறீங்க? நான்..."

"வேண்டாம் குழலி நான் உன்னை நம்புறேன் ஏமாத்திடாத..."

அதற்கு அவளாலும் ஒன்னும் பேச முடியாமல் போகவே.. "சரிங்க தாத்தா" என்று சொன்னவள் பாலுவிற்கு முத்தம் கொடுத்து விட்டு பல அறிவுரைகளையும் சொல்லிவிட்டு சென்று விட்டாள். போகும் அப்பெண்ணிற்கு தெரியாது. அன்றைக்கு அவள் வாழ்க்கையே மாற போகிறது என்று...

அரண்மனை போல காட்சி அளித்த அந்த பெரிய வீட்டை பார்க்கையில் குழலியின் கால்கள் கொஞ்சம் நடுங்கத்தான் செய்தது. நடுக்கம் கண்டாலும் அதை வெளியே காட்டி கொள்ளாமல் மெல்லமாக நடந்து வீட்டிற்குள் சென்றாள்.

"நீங்க?" என அங்கு வேலை செய்யும் ஒருவன் கேட்க... "இங்க வேலைக்கு ஆள் எடுக்கிறதா சொல்லி இருந்திங்க?"

"ஓ.. வாங்க அதோ மேல ரூம் இருக்கு அங்க வரண்டால சேர் போட்ருக்காங்க போங்க. உங்களை போல நிறைய பேர் வந்துருக்காங்க." என்று சொல்லிவிட்டு போய்விட்டான் அவன்.

அவளும் மேலே உள்ள இடத்திற்கு சென்று இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

கதவை "படிர்" என்று சாத்தி விட்டு வெளியே வந்தாள் ஒரு பெண்மணி. "ச்சை... போயும் போயும் இந்த வேலையை யாராவது செய்வாங்களா? என்ன ஜென்மங்களோ" என திட்டி விட்டு போனாள்.

அடுத்த ஐந்து நிமிடம் கழித்து "தூஊஊ.... இதெல்லாம் ஒரு வேலை. பார்க்கத்தான் பெரிய மனுஷங்க கொஞ்சம் கூட இங்கிதமே இல்லை."

இதற்கும் குழலி பே... பே... வென்று முழிக்க...

"இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சேனோ... கேட்க கூடாதது எல்லாம் கேட்க வேண்டியதா இருக்கு" என புலம்பிய படி ஒருவளும் அதன் பிறகு ஒருத்தி அழுதபடியும் போனாள்.

"அடுத்து நீங்கதான் உள்ள போங்க" என்றாள் குழலியை பார்த்து ஒருத்தி.

"ம்..." என சொல்லிவிட்டு குழலி உள்ளே செல்ல...

சிறிது நேரம் கழித்து அவளும் வெளியே வந்தாள் கோபமாக.... எதிரே இருந்த பெண்ணை பார்த்து முறைத்துவிட்டு எதுவும் பேசாமல் சென்று விட்டாள்.

மனம் குமுற... உள்ளம் பதற... கால்கள் இரண்டும் அதிர்ச்சியில் பின்னி கொள்ள... தலை சுற்ற... சாலையில் நடந்து கொண்டிருந்தாள். அதே நேரம் அவளுக்கு போன் வர அதை எடுத்து பேசியவள்....

"சொல்லுங்க தாத்தா..."

"குழலி நம்ம பாலுவுக்கு..."

"தாத்தா..."

"இதோ இப்போவே வரேன்.... ஆ... கண்டிப்பா வரேன்'' என சொன்னவள் வெகு வெசையாக... மீண்டும் அந்த பெரிய வீட்டிற்கு சென்றாள்.

"என்னமா இன்டர்வியூ முடிஞ்சது நாளைக்குதான் இனி நடத்துவாங்க போங்க போங்க..."

அவன் சொன்னதை கூட காதில் கேக்காமல் அவனை தள்ளி விட்டு போனாள்.

படிகளில் இறங்கி வந்து கொண்டிருந்தவன் எதிர் கொண்டான் குழலியை...

"சார்... நான் நீங்க சொன்ன வேலையை முடிச்சு கொடுக்கிறேன்."

அவன் விழிகள் இரண்டும் அவளை எளக்காரமாக பார்க்க.... "உன்னை எப்படி நம்புவது..."

"என் கர்ப்பையே உங்களுக்கு தரேன். இதைவிட பெரிய நம்பிக்கை வேறென்ன வேண்டும் உங்களுக்கு...."

கள்வன் தொடர்வான்.
 

shakthinadhi

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 23, 2024
Messages
7
ஹாய் பிரண்ட்ஸ் இப்பொழுது தான் இந்த தளத்தில் நான் கதை எழுதவே ஸ்டார்ட் பண்ணி இருக்கேன் என்னுடைய முதல் கதை புரியும் முன் பிரிந்து விடு என் கள்வனே இரண்டு அத்தியாயங்கள் போட்டு இருக்கிறேன். என்னுடைய கதையை படித்துவிட்டு எப்படி இருக்கிறது என்பதை விமர்சனம் பண்ணுங்க. நீ கொடுக்கும் ஒவ்வொரு கமெண்ட்ஸும் தான் எனக்கு அடுத்தடுத்த அத்தியாயங்களை எழுத வழிவகை செய்யும். அடுத்த கதைகளையும் எழுத செய்யும். நன்றி
 
Top