• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

shakthinadhi

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Apr 23, 2024
Messages
7
குழலி அவளுக்கு என்று இருக்கும் ஒரே தம்பியை காப்பாற்ற ரிஷி சொன்ன அனைத்து விஷயங்களுக்கும் கட்டுப்பட்டாள். அவள் வந்த விஷயம் வேற ஆனால் நடந்த விஷயம் வேற.... பல எண்ணங்கள் மனதில் ஓட இப்போதைக்கு நம் தம்பியை காப்பாற்ற வேண்டும் பிறகு நடப்பவை நடக்கட்டும் என மனதையிரியத்தை வரவைத்து கொடண்டு சம்மதம் தெரிவித்தாள். அவன் காட்டிய பத்திரத்தில் கையெழுத்தும் போட்டு கொடுத்தாள். அவள் அசரும் நேரத்தில் அவளின் இதழை கவ்வி இருந்தான். விழிகள் அகல அவனையே பார்த்துக் கொண்டிருந்தவள் அவனை தள்ளிவிட முயற்சி செய்தாள். ஆனால் முடியவில்லை. முடிந்த மட்டும் போராடி ரிஷியை தள்ளி விட்டாள். அவளின் தாக்குதலில் சற்று பின்னோக்கி நின்றவன் அவளை பார்க்க.... அவளோ கோபமாக பார்த்து கொண்டிருந்தாள்.

"ஏன் இப்படி பண்றிங்க? ஒரு பொண்ணுகிட்ட இப்படியா பிகேவ் பண்ணுவீங்க... சீஈ... முகத்தை வேறு பக்கம் திருப்பினாள். ரிஷி அவளை நெருங்கி வந்தான் திருப்பிய முகத்தை அழுத்தமாக பிடித்து தன் பக்கம் திருப்பி கொண்டான். அவளின் மூச்சு காற்றும், இதயம் துடிப்பதும் அவனுக்கு நன்றாக கேட்க... அவளை ஏதோ காணாத பொருளை பார்ப்பது போல பார்த்தான்.

"நீ எதுக்கு வந்த?" ரிஷி கேட்க....

"அ..." என பேபே வென முழித்தாள் பெண்ணவள்.

"சொல்லு எதுக்கு இங்க வந்த?" என்று ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தத்துடனும் நிதானமாகவும் வெளியே வர... இதோ இப்ப உன்னை கடித்து விடுவேன் பார் என்பது போல இருந்தது அவனது பேச்சு.

"அது... அது..."

"ம்... டெல் மீ..."

"அது உங்களுக்கு குழந்தை பெத்து குடுக்கணும். கையை எடுங்க வலிக்குது" என்றாள்.

"தெரியுதுல... அப்ப சும்மா இருந்தா எப்படி? அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்க வேண்டாமா? சொல்லு."

குழலிக்கோ என்ன பேசுவது என்றே தெரியவில்லை. அவன் சொல்வதும் உண்மைதான். அவள் குழந்தை பெத்து கொடுக்கத்தான வந்திருக்கிறாள். வந்த பிறகு என்னை அங்க தொடாதே இங்க தொடாதே என கேக்கவா முடியும். அப்படியே கேட்டாலும் அவன் சும்மா விடுவானா என்ன ரிஷிவேந்தன் எவனுக்கும் அஞ்சாதவன். பார்வையாலையே மற்றவர்களை எரித்து விடுவான். அவனிடம் எவரும் நிமிர்ந்து கூட பேச மாட்டார்கள்.
அப்படி பேசினாலும் ஒன்று இரண்டு வார்த்தைகளில் முடித்து விட்டு போய் விடுவார்கள்.

"சார் அது இப்பவேவா...'' அவளும்தான் என்ன செய்வாள் அவளின் தம்பி உயிருக்கு போராடி கொண்டிருக்கிறான். இங்கோ இவளை இப்பவே சரசம் ஆடலாம் வா என கேட்கிறான். அவளின் மன நிலையை புரிந்து கொள்ள இங்கே ஒருவரும் இல்லை.

"ஆமா..." என தோல்களை குலுக்கி சொன்னவன் சட்டை பட்டனை கழட்டினான். அவளின் புடவையை அவிழ்க்க போக...

"சார்ர்ர்ர்ர்...." என வீறிட்டு சத்தம் போட்டாள்.

"ஏய் என்னை டென்ஷன் பண்ணாத. உனக்கு இப்ப என்னடி பிரச்சனை. அதான் எல்லாத்துக்கும் ஒத்துக்கிட்டு கையெழுத்து போட்டியே அப்புறம் என்ன? ஓ... எனக்கு புருஞ்சுருச்சு.... பணம்தானே ஒரு நிமிஷம்... உன் போனை எடு" என்றான். அருகில் இருந்த தன் கை பையிக்குள் இருக்கும் போனை எடுத்தாள்.

"Msg பாக்ஸ் போய் பாரு" என்றான்.

அதில் சொலையாக இருபது லட்சம் அவளது அக்கொவ்ன்ட்டிற்கு பணம் இருக்க... அதிர்ச்சியுடன் அவனை பார்க்க...

"என்ன பார்க்கிற உன்னை மாதிரி ஆளுங்க பணம்னா பல்ல இழிச்சுருவிங்களே... நீ என்ன இப்படி ஷாக் ஆகி நிக்குற... ஓ... இப்பதான் இத்தனை பணத்தை பார்க்குறியோ... இருக்கலாம். சரி வா" என அவன் கட்டிலில் அமர... குழலியோ... திரு திருவென முழித்தாள்.

"சார்..."

"என்ன பணம் பத்தலையா?"

"அயோ இல்ல சார். உங்ககிட்ட ஒன்னு கேக்கணும்" என்று தயங்கியபடியே கேட்டாள் குழலி.

"என்ன சொல்லு?"

"அது என் தம்பி இப்ப ஹாஸ்ப்பிட்டல்ல இருக்கான் அவனுக்கு ஹார்ட்ல ஒரு பிரச்சனை. ஆப்ரேசன் பண்ணா சரி ஆகிடும்னு சொல்லிட்டாங்க. பணம் பத்து பலட்சம் ஆகுமுன்னு சொன்னாங்க. அதான் நான் நீங்க சொன்ன வேலைக்கு வந்துட்டேன்.. ஆனா இப்போ..."

"இப்போ...." என புருவம் தூக்கி ரிஷி கேட்க...

"நான் என் தம்பியை பார்க்கணும் சார் அவனுக்கு ஆப்ரேஷன் நடக்கும்வரை இருந்துட்டு வந்தறேன்" என ஒருவழியாக எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள் குழலி.

"ஓ... இப்ப தம்பியை பார்க்க போறேன்னு சொல்லுவ... அப்புறம் அவனை நல்லபடியா குணமாக்கிட்டு வீட்டுக்கு விட்டுட்டு வந்தறேன்னு சொல்லுவ... அப்புறம் இன்னும் கொஞ்ச நாள் கூடவே இருந்துட்டு வந்தறேன்னு சொல்லுவ... ஏய்..." என சீறினான். "என்னைய என்ன கேணப்பையன்னு நினைச்சியா... பணக்காரனாய் இருக்கான் எப்படியாவது இவனை ஏமாத்திரலாம்னு நினைக்கிறியோ... இங்க பாரு நீ எனக்கு குழந்தை பெத்து கொடுக்குற வரைக்கும் அண்ணன், தம்பி, அம்மா, அப்பா இப்படி ஏதாவது பினாத்திட்டு இருந்த... உன்னை சுட்டு கொலை பண்ணிட்டு போயிட்டே இருப்பேன்."

ரிஷியின் பேச்சு குழலிக்கு வலியையும், கோபத்தையும் கொடுக்க.... "என்ன சார் ரொம்பத்தான் மிரட்டுரிங்க? இங்க பண்றது ரொம்ப இல்லீகளான விஷயம் அது முதல்ல தெரியுமா உங்களுக்கு?"

"ஏய்... எது லீகள் எது இல்லீகலான விஷயம்னு எனக்கு தெரியும். அப்படி இருக்குறவ எதுக்குடி கையெழுத்து போட்ட... ஆரம்பத்துலயே போக வேண்டியதுதான..." என்றான்.

இந்த கேள்விக்கு அவளிடமும் பதில் இல்லை. ஆனாலும் அவளும் பேசாமல் இல்லை. "ஆமாம் கரெக்ட்டுதான். அதுக்காக என் தம்பியை கூடவா பார்க்க அலோ பண்ண மாட்டிங்க. எனக்குன்னு இருக்கும் ஒரே உறவு அவன்தான். அவனுக்காக நான் ஒரு... ஒரு நாள் இருக்க கூடாதா... இதே உங்க தம்பிக்கு இப்படி ஒரு நிலைமை வந்துருந்தா இப்படித்தான் பண்ணுவீங்களோ...." என வெடுக்கென்று கேட்டே விட்டாள் குழலி.

தன் முன் குரலை உயர்த்தி பேசுவதற்கு பல பேர் நடுங்குவார்கள். அப்படியிருக்க இந்த பொண்ணு என்னா பேச்சு பேசுது என்று நினைத்தான் ரிஷி. ஆழமாக அவளை கவனிக்க... கோதுமை நிறத்துக்கும் சற்று கூடுதலான நிறம். சாதாரண காட்டண் சீலையிலும் செப்பு சிலையாக இருந்தாள். பார்க்க பார்க்க திகட்டவில்லை அவனுக்கு. கண்கள் மேலிருந்து கீழ்வரை அவளை படம் பிடித்துக் கொண்டது. வட்டமான முகம் சிறு உப்பிய கன்னங்கள். கூர் நாசி.... செதுக்கி வைத்த உதடு... கழுத்தின் கீழே அணைக்க வா என எடுத்துக்காட்டும் எம்பிய மாங்கனிகள். அதற்கும் கீழே சிறியதாக தெரிந்த இடுப்பில் சொக்கி போனான். மொத்தமாக பெண்ணவளை ரசித்து பார்த்தான். அவன் பார்வை அவளுக்கு இம்சை செய்ய... மேற்கொண்டு என்ன பேச..
முன்பு பேசிய பேச்சுக்கே எந்த பதிலும் சொல்லாமல் இப்படி என்னை வெறிக்க வெறிக்க பார்க்கிறான். அடுத்து நான் பேச போனால் கடித்து குதறி விடுவானோ என்னவோ என அவள் திருதிரு வென முழிக்க... அவளை அளவெடுத்த ரிஷி அவள் தம்பி என்னும் சொல்லை கேட்டு சற்று நேரம் நிலை தடுமாறி போனான். நியாயமாக பார்த்தால் அவன் அவளை அடித்து இருக்க வேண்டும். நியாயமா அயோ சாரி அநியாயம். அது நான் சொல்ல வந்தது என்னவென்றால் வாசகர்களே! ரிஷியின் நியாயம். போதுமா... ஏன் அடிக்காமல் போனான் என அவனுக்கே தெரியவில்லை. ஆm அவன் தம்பியின் மீது ரிஷி அளவில்லாத பாசம் வைத்திருந்தான். அவன் வெளியூர் செல்லவே பிடிக்கவில்லை. ஆனாலும் பிரிய மனமில்லாமல் தன் தம்பியை விட்டு பிரிந்தான்.

"சரி போ... ஆனா அவனுக்கு ஆப்ரேஷன் முடிந்ததும் உடனே வந்து விட வேண்டும். இடையில் தம்பியை பார்க்க வேண்டும். அவனிடம் கொஞ்ச நேரம் பேச வேண்டும்னு சொன்ன அப்புறம் நல்லாருக்காது சொல்லிட்டேன். இன்னொரு விஷயம் உன் கூட இப்போ ரெண்டு பாடி கார்ட்ஸ் வருவாங்க. நீ அவங்க கிட்ட இருந்து ஓடவும் முடியாது. ஒழியவும் முடியாது... என் ஆட்கள் கேமரா மாதிரி வாட்ச் பண்ணிட்டே இருப்பாங்க."

"ரொம்ப தேங்க்ஸ் சார். நான் போயிட்டு வந்தறேன்" என்று சொல்ல... அவனோ கழட்டி போட்ட சட்டையை எடுத்து போட ஆரம்பித்திருந்தான். அவள் சென்ற பிறகு தன் உதடுகளை ஈரப்படுத்தி கொண்டவன். "ம்.... செம்ம கிஸ்.. ஏதோ தேன்மிட்டாயை கடித்து சாப்பிட்ட மாதிரி இருந்துச்சே.... சோ ஸ்வீட்.." என சப்பு கொட்டினான். அட பாவி அவள் ஸ்வீட் இல்லடா அவள் உன் வாழ்க்கைக்குள் அடி எடுத்து வைக்க போற முதல் எதிரிடா முட்டாள் என சொன்ன விதியின் வார்த்தைகள் அவன் காதுகளுக்கு கேட்காமல் போய்விட்டது.

கள்வன் தொடர்வான்.

ரொம்ப நாள் அடுத்த ud போடல... என்னங்க பண்றது சில சூழ்நிலை எழுத முடியாமல் போய் விடுகிறது. ஒரு ரெண்டு மாசத்துக்கு என் ud தினமும் வருமான்னு தெரில. பட் முடிஞ்ச அளவு தினம் மூணு கதைகல்ல ஏதாவது ஒரு கதையின் ud மட்டுமாவது போட முயற்சி பண்றேன்.
 
Top