அத்தியாயம் 10
'ஸ்ஸ் மைண்ட் வாய்ஸ்னு நினச்சு சத்தமா பேசிட்டோமே' என நினைத்து கொண்டு திரும்பி மதுவை பார்க்க, அதுவரை சிரிப்பை கண்ட்ரோல் செய்தவள் அவன் அவளை பார்த்து திரும்பவும் முகத்தை மாற்றி முறைத்துக் கொண்டு இருந்தாள்.
"ஹிஹிஹி சாரி.. நாய் கூட சின்ன கன்பியூசன்.." என அவன் திருட்டு முழியுடன் சொல்ல, மதுவுடன் நித்தியும் சிரித்துவிட்டாள்.
“என்னடா இது நம்ம பொழப்பு நாய் பொழப்பா இருக்கே" என்று நொந்தவாறே அவர்களை ட்ராப் செய்துவிட்டு ஆபிஸ் வந்து சேர்ந்தான்.
அவன் வரவும், அவனுக்கு பின்னால் உதயும் வந்து நின்றான். "என்ன டா பியூஸ் போன பல்பு மாதிரி இருக்கு மூஞ்சி?" என உதய் கேட்க,
"ம்ம் எனக்கு எப்படா பிரைட்டா இருந்துச்சு?" என சொல்லி சிரித்தவாறே உள்ளே சென்றவன், காரில் நடந்ததை சொல்ல உதயும் சிரித்தான். பின் ஹனி கூறியதை அவன் சத்யாவிடம் சொல்ல, "ஓஹ்" என்றவன் "இதுவும் நல்லதுக்கு தான்டா. ஒவ்வொருத்தரையா நம்ம வழிக்கு கொண்டு வரலாம்" என்றவாரே கணினியை ஆன் செய்து அமர்ந்தான்.
நேரம் அதன் போக்கில் செல்ல 4 மணிக்கெல்லாம் நித்தியும் மதுவும் ஆபிஸ் வந்தனர். பின் அவர்களுக்கான வேலையை உதய் சொல்லி கொடுக்க இருவரும் கவனமாக கேட்டுக் கொண்டனர்.
"வர்றேன் அண்ணா, அண்ணி பை" என்றவன் "ஹேய் டெவில் வெளில வாடி நான் கிளம்புறேன்" என இனியா கத்தியதில்,
"ஸ்ஸ்ஸ் எப்பா கொஞ்ச நாள் வீடு நிம்மதியா இருக்கும்" என்றவாறு வெளியே வந்தாள் ஹனி.
"தோ பாரு. நைட் ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணி முழிச்சு படிக்காதே. டைம்க்கு சாப்பிடு" என அவள் இரவு வெகு நேரம் முழித்து படிப்பதை பார்த்ததால் இனியா ஹனிக்கு அறிவுரை வழங்க, அனைவரும் அவர்களை புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தனர்.
"எங்களுக்கு தெரியும். நீ கிளம்பு" என கூறினாலும் ஹனிக்கும் அவன் கிளம்புவது கவலையாக தான் இருந்தது. "பார்த்து போ. போயிட்டு போன் பண்ணு" என அவள் சொல்ல சிரிப்புடன் கிளம்பினான் இனியன்.
அடுத்த 1 வாரத்தில் நித்தியின் கல்லூரியில் இருந்தே இன்னும் நான்கு பேரை நித்தி, மது மூலம் செலக்ட் செய்து அவர்களும் மாலை நேரம் வேலைக்கு வந்தனர். இன்டெர்வியூ வந்தவர்களில் விஜய் மற்றும் பூஜா என்ற இருவரையும் செலக்ட் செய்து ஆபிஸ் ஒரு அமைப்பிற்கு வந்திருந்தது.
முதல் மாதம் இறுதியில் அனைவரும் சந்தோசமாகவே கொண்டாடினர். ப்ராஜெக்ட் இன்னும் அதிக அளவில் வரவில்லை என்றாலும் இருக்கும் ப்ராஜெக்ட்டை வெற்றிகரமாக்க அனைவரும் முழுமுயற்சியுடன் செயல்பட்டனர்.
இளைஞர்கள் இருக்கும் இடத்தில் கொண்டாட்டத்திற்கு பஞ்சம் இருக்குமா? அதே நிலைதான் அவர்கள் ஆபீஸ்லும். ஒவ்வொரு நாளும் விரும்பியே சென்று நேரத்தை பொன்னாக செலவிட்டனர்.
அன்று சம்பளம் தருவதற்காக சத்யா உதய் தலைமையில் மீட்டிங் நடைபெற்றது. அனைவருக்கும் முதல் மாதம் என்பதால் கையில் பணமாக கொடுப்பதாக கூறியவன் அடுத்த மாதத்தில் இருந்து அக்கௌன்ட்டிற்கு அனுப்புவதாகவும் கூறி வழங்கினர்.
அது கல்லூரி கடைசி வருடம் என்பதால் இறுதி செமஸ்டர் ப்ராஜெக்ட் ஒர்க்கில் மட்டும் செல்ல, இவர்கள் ஆபிஸ் செல்லும் நேரமும் அதிகமானது. அனைவரும் திறமையுடன் சுறுசுறுப்பும் உடையவர்களாக இருந்ததால் சற்று சிரமமாக இருந்தாலும் இரு பக்கமும் நன்றாகவே அட்ஜஸ்ட் செய்தனர்.
ஆபிஸ் தொடங்கி மூன்று மாதங்கள் முடிந்த நிலையில் சத்யா ஆபிஸ்ற்காக வாங்கியிருந்த அந்த இடத்தின் மேல் இன்னொருவர் உரிமை கொண்டாடி போலிசில் புகார் கொடுத்திருந்தார்.
இதை அறிந்து சத்யாவிற்கு கோபம் வந்தாலும் உதய் பொறுமையுடன் அவனை அழைத்துக் கொண்டு ஸ்டேஷன் சென்றான். வழியில் தந்தையிடம் சத்யா கூற, அவரும் வருவதாக கூறினார்.
"பொறுக்கி நாயே பொண்ணுங்கன்னா உனக்கு விளையாட்டா போச்சா?" என்றவன் அவனின் கையை பிடித்து திருக, அதை பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் நாவறண்டது.
"சாமி அண்ணா இவனுக்கு தண்ணீர் கூட குடுக்க கூடாது. இவனை யார் பார்க்க வந்தாலும் விடாதீங்க" என்றவன் அவன் மேல் இருந்த ஆத்திரத்தை டேபிள் மேலும் காட்டி குத்தியவன் பின் மனதை ஒருநிலைபடுத்தினான்.
'தமிழரசன் ஐபிஎஸ்' என்ற பெயர் இப்போது தான் சென்னையில் எல்லா இடங்களிலும் கேட்டுக்கொண்டிருக்கிறது. அவன் பொறுப்பெடுத்த 6 மாத காலத்தில், பெண்களின் பாதுகாப்பிற்காக பல நன்மைகளை செய்தும், பெண்களுக்கு தொந்தரவு கொடுப்பவனுக்கு சரியான தண்டனையும் கொடுத்து சென்னையில் தனக்கென தனி பெயரை உருவாக்கிக் கொண்டிருந்தான்.
சத்யா உதய் ஸ்டேஷன் வர, அவர்களுக்கு முன் வந்து வெளியே காத்துக் கொண்டிருந்தார் குணசேகரன்.
"லாயர் பார்த்தியா? என்ன சொன்னாங்க?" என குணா கேட்க,
"பேசிட்டோம் பெரியப்பா. கம்பளைண்ட் குடுத்துருக்கான் பட் இன்னும் நமக்கு ப்ராப்பேர் நியூஸ் வரலை. நம்ம சாமி அங்கிள் தான் கால் பண்ணி சொன்னங்க. அதான் அந்த இன்ஸ்பெக்டர்கிட்ட பேசி சரி பண்ணிடலாம்னு உங்களை வர சொன்னோம். லாயர்கூட பேசி பாருங்க.. சரி வரலைனா வரேன்னு சொன்னாங்க. இவன் வேற கத்துறான்" என சத்யாவை முறைக்க அவனும் கோபத்தில் முறைத்தான்.
"எப்படி பா கை நீட்டி காசு வாங்கிட்டு இப்படி பண்றாங்க. நம்மகிட்ட தான் டாக்குமெண்ட் கூட இருக்கு. அவனை சும்மா விட மாட்டேன்" என சத்யா கோபமாக பேச,
"இப்படி கோபப்பட்டா நீ உள்ளே வர வேண்டாம். உதய் நீ வா நாம போய் பேசலாம்" என குணா சொல்ல, பல்லைக் கடித்துக் கொண்டு அவனும் அவர்களுடன் சென்றான். உள்ளே வந்தவர்களை பார்த்த தமிழ் அவர்களை எதிர்பார்க்கவில்லை என்பதாய் பார்த்தவன் பின் முகத்தை மாற்றிக் கொண்டான்.
குணசேகரன் தான் முதலில் பேச ஆரம்பித்தார். "ஹலோ சார், ஐம் குணசேகரன்" என ஆரம்பித்து அவர் வேலை பார்க்கும் இடம், வந்ததன் நோக்கம் கூற இன்னும் அந்த கேஸ் பற்றி அவன் பார்வைக்கு ஏதும் வராததால் சற்று சிந்தித்தவன் பின் சாமியை பார்த்தான்.
உள்ளே வரும்போதே அங்கு இருந்தவனை கண்டு கொண்டான் உதய். "இவனா? இவன் போலீசா?" என்ற யோசனையோடு வந்தவன் பின் குணா பேசுவதை கேட்க ஆரம்பித்தான்.
சத்யாவும் இவர்கள் பேசுவதை தான் கேட்டு கொண்டிருந்தான். ஆனால் அவனுக்கு அந்த போலீசை பார்த்தது போல எல்லாம் ஞாபகம் இல்லை.
"சாமி அண்ணா" என்ற குரலுக்கு அவன் முன் வந்து நின்றார் அந்த கான்ஸ்டபிள் அறுபது வயது முதியவர்.
"என்ன கேஸ்? ஏன் என்கிட்ட சொல்லலை?" என அவன் கேட்க,
"இல்லை சார் காலையில் தான் கம்பளைண்ட் குடுத்தாங்க. நீங்க வெளியே போயிருந்திங்க. இவங்களை நல்லா தெரியும் சார். பெரிய வீட்டு ஆளுங்க. அதான் தகவல் சொன்னேன்" என அவர் இழுத்தார்.
அந்த ஏரியாவில் குணசேகரன் வீட்டை தெரியாதவர்கள் யாரும் இல்லை. பெரிய வீடு என்பது அவர்களின் வீட்டின் அடையாளம். அவரை முறைத்தவன் எதுவும் சொல்லாமல், குணாவிடம் திரும்பினான்.
"அந்த இடம் உங்களோடதுனு என்ன சாட்சி?" என அவன் கேட்க, அவன் முன் டாக்குமெண்டை நீட்டினான் சத்யா.
இது ஜெராக்ஸ் இது ஒரிஜினல் என நீட்ட, அதை வாங்கிப் பார்த்தவன், "ஒரிஜினல் மாதிரியே டூப்ளிகேட் ரெடி பண்றது ரொம்ப ஈசி. எனிவே கம்பளைண்ட் குடுத்த ஆள் வரணும்" என சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவனும் வந்தான்.
"சார் என்கிட்ட இருக்குறது தான் ஒரிஜினல் டாக்குமெண்ட்" என அவனும் நீட்ட, சத்யா கோபத்தைக் கட்டுப்படுத்தி நின்றான்.
இரண்டையும் வாங்கி பார்த்தவன் வேறொரு கணக்கில் இருந்தான். "வந்துட்டானுங்க பேப்பறை தூக்கிட்டு.." என கம்பளைண்ட் கொடுத்தவன் பேச,
"டேய் மரியாதையா பேசு!" என சத்யா தன் அப்பாவை கூறுவதை தாங்க முடியாமல் கத்த,
"அடுத்தவன் இடத்தை பறிக்கவனுக்கு மரியாதை ஒன்னு தான்.." என பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் சட்டையை பிடித்தான் சத்யா.
"டேய்.. சத்யா.." உதய், குணா இருவரும் ஒரே நேரத்தில் அழைக்க,
"ஸ்டாப் இட் "என கத்தினான் தமிழ்.
"இது ஸ்டேஷன். ஹேய்! அதான் கம்பளைண்ட் குடுத்துட்டல்ல போ! ஆக்ஷன் எடுத்துட்டு கூப்பிடுவேன்" என அவனை விரட்டியவன்,
"உனக்கு என்ன ஹீரோனு நினைப்பா? போலீஸ் முன்னாடியே சட்டையை பிடிக்கிற?" என சத்யாவையும் சேர்த்து திட்டினான்.
உதய் ஆறுதலாக சத்யா கையை பிடிக்க அதை உதறியவன், 'என் நேரம் இவன்கிட்ட எல்லாம் பேச்சு வாங்க வேண்டியிருக்கு' என நினைத்து கொண்டு அமைதியாக நின்றான் சத்யா.
"சார் இதுல வேற ஏதோ பிரச்சனை இருக்கு. இந்த இடம் யார்கிட்ட இருந்து வாங்குனீங்களோ அங்கே தான் பிரச்சனைனு நினைக்கிறன். நான் பேசிட்டு கூப்பிடுறேன்" என குணாவிடம் தமிழ் சொல்ல அவரும் நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்தார்.
"உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது டா. அதான் பேசிட்டு இருக்கோம்ல" என குணாவும் அவர் பங்கிற்கு திட்ட, உதய் அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தான்.
"டேய்.." என ஆரம்பிக்கவும், சத்யா "ஏன் உன் பங்குக்கு நீயும் திட்டணுமா?" என கோபமாக சத்யா கேட்க,
"ஹேய் லூசு. ஏன்டா இவ்வளவு கோபம். அந்த இன்ஸ்பெக்டர் யார்னு தெரியுதா உனக்கு?" என்றான்.
"ம்ம் அதான் சொன்னானே! அவனுக்கும் பெரிய ஹீரோனு நினைப்பு!" என சத்யா திட்ட,
"என்ன டா பொறாமையா" என சிரித்து கொண்டே உதய் கேட்க, அவன் முறைத்ததும் "சரி விடு. அன்னைக்கு நித்தியும் நானும் வரும் போது பார்த்தோம்னு சொன்னேன்ல அது இவன் தான்" என உதய் சொல்ல சத்யாவிற்கு ஞாபகம் வரவில்லை.
"ப்ச் மதுகூட ரோட்ல பேசிட்டு நின்னான்னு சொன்னியே ஞாபகம் இருக்கா?" என மீண்டும் உதய் ஞாபகப்படுத்த, "அவனா?" என்றான்.
"ஆமா டா. இப்போ கூட நம்ம ரெண்டு பேரையும் அவன் பார்த்ததில ஏதோ வித்யாசம் தெரிஞ்சது. முதல்ல உள்ளே போய் நாமே கேட்கலாம்" என சத்யாவை அழைத்து கொண்டு மீண்டும் உள்ளே சென்றான்.
என்கிட்ட கேட்காம எப்படி அவங்களை வர சொல்லலாம் என சாமியை திட்டிக் கொண்டிருந்த தமிழ் இவர்களைப் பார்த்ததும் என்ன என்றவாறு பார்த்தான். அவனிடம் மருந்துக்கு கூட சிரிப்போ, சிநேக பாவமோ இல்லை.
"சார் நாம இதுக்கு முன்னாடி மீட் பண்ணி இருக்கோமா?" என உதய் கேட்க, சுருங்கிய கண்களோடு அவர்களை பார்த்தவன் பின் தெளிந்து இல்லை என தலையை மட்டும் அசைத்தான்.
'பெரிய இவன் வாயை திறக்க மாட்டான்!' என சத்யா நினைத்துக் கொண்டு நிற்க, தமிழும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
"ஓஹ் ஓகே சார். சாரி போர் தி டிஸ்டர்ப்" என கூறி உதய் சத்யாவுடன் வெளியேறினான்.

தொடரும்..