• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலே 16

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 16

'இன்று அவளை எப்படி எதிர் கொள்ள? அவள் எப்படி தன்னை எதிர்கொள்வாள்? எப்போதும் போல பேசுவாளா? இல்லை மௌனமாய் நிற்பாளா?' நித்தி சம்மதம் தெரிந்து சந்தோசம் என்றாலும், பலவாறு யோசித்துக் கொண்டிருந்தான் உதய்.

கண்டிப்பா மௌனம்ன்றது நித்திகிட்ட இருக்காது என்று நினைத்த உதய்க்கு சிரிப்பு தான் வந்தது. பின் ஆபிஸ் கிளம்பி செல்ல, அவள் கல்லூரி வரவில்லை என சத்யா சொன்னதும் அப்போது மாலை இங்கே வருவதும் சந்தேகம் தான் என புரிந்து சிறிது வருத்தம் உண்டானது. ஆனாலும் நித்தி பற்றி அறிந்தவன் பின் அதை மறந்து வேலையில் ஆழ்ந்தான்.

நித்தி மதியம் வரை ஹனியுடன் சுற்றியவள் பின் ஹனியை வீட்டிற்கு அனுப்பிவிட்டு ஆபிஸ் வந்தாள். வந்தவள் யாரையும் பார்க்காமல் அவள் சீட்டில் அமர்ந்து வேலையைப் பார்த்து கொண்டிருந்தாள்.

மணி இரண்டு ஆகிவிட பசியும் வந்தது நித்திக்கு. 'இவனுங்க வேற சாப்பிட்டு முடிச்சிருப்பானுங்களே!' என நினைத்துக் கொண்டே சத்யா அறை கதவை திறக்க, அப்போது தான் சாப்பிட எடுத்து வைத்துக் கொண்டிருந்தான் உதய்.

"ஹேய் நீ எப்போ வந்த?" என உதய் கேட்க, "ஆங் கார்டு போட்டேன் நீயே டைம் பார்த்துக்கோ" என்றாள். உதயும் சிரித்துக் கொண்டே சத்யா கணினியில் அவள் வந்த நேரத்தை பார்க்க, 12.30 எனக் காட்டியது.

'இவ்வளவு நேரம் இங்கே தான் இருந்தாளா?' என நினைத்தவன், அவள் சாப்பிடும் வேகத்தில் அவள் பசி அறிந்து இன்னொரு உணவிற்கு வாட்ச்மேனிடம் ஆர்டர் கொடுத்தான்.

"என்னடா செம்ம பசி போல" என சத்யாவிடம் கேட்பது போல நித்தியை கலாய்க்க, "கண்ணு போடாத எரும" என்றவள், பின் ஏதோ ஞாபகம் வந்தவளாக, "ஸ்ஸ் சாரி மறந்துட்டேன்" என்றதும், ஏதோ சொல்ல போகிறாள் என இருவரும் ஆவலுடன் அவளைப் பார்க்க,

"கல்யாணத்துக்கு அப்புறம் சாப்பாட்டுக்கு அதிகம் செலவு ஆகுமேனு யோசிக்காத. அதை நான் பார்த்துக்கிறேன்" என்று சொல்ல சப்பென்று ஆனது இருவருக்கும்.

"அட எரும! உன்னை மாதிரி நான் கஞ்சம் பண்ண மாட்டேன். கல்யாணத்துக்கு அப்றம் ஒரே வாரத்தில் குண்டாக போற பாரு" என உதய் சொல்ல,

'அடேய் புதுசா கல்யாணம் பண்ண போறதுங்க இப்படியா சோத்துக்கு அடிச்சுக்கும்? டேய் மச்சி உதய்! நீ அவளை மாத்துவனு பார்த்தால் அவ உன்னை மாத்திடுவா போலயே' என நினைத்து தன் தலையிலே அடித்துக் கொண்டான் சத்யா.

"நித்தி நீ மதுக்கு கால் பண்ணி ஈவ்னிங் வர சொல்லிடு. நீ வரலைன்னு அவளையும் வர வேண்டாம்னு சொன்னேன்" என சொல்ல, அவளும் தலையாட்டிச் சென்றாள்.

"உதய்! அப்பா சீக்கிரம் கல்யாணத்தை வச்சுக்கலாம்னு பேசிட்டு இருந்தாங்க. உன் ரூட் கிளீயர் ஆனால் தான் அடுத்து என் ரூட்டை பார்க்கலாம்" என சத்யா சொல்ல, 'அது தானே எனக்கும் வேண்டும்' என நினைத்துக் கொண்டான் உதய்.

அடுத்து சில நாட்களில் கல்லூரி முடிந்து நித்தி, மது முழு நேரமாக ஆபிஸ் வர ஆரம்பித்தனர். இடையில் இடத்தை விற்றவன் சில இடைஞ்சல்களை கொடுக்க, அதற்கு உதய் நாமே பார்த்து கொள்ளலாம் என்றதற்கு குணசேகர் கேட்காமல் போலீசிடம் தான் சென்றார்.

தமிழ் தேடலில் இடம் விற்றவன் சிக்காமல் போக ஒரு வாரம் அதில் மூழ்கி அவனை தீவிரமாக தேடித்தான் உள்ளே அடைத்தான். இடையில் சத்யா வீட்டிற்கும் இரண்டு காவலர்களை காவலுக்கு அனுப்பி இருந்தான்.

ஆம்! சத்யா இடம் வாங்கியது சென்னையின் பிரபல ரவுடியின் கீழ் வேலை பார்க்கும் ஆளிடம். இப்போது தமிழ் அந்த இடத்தை சத்யாவிடம் ஒப்படைத்தது மட்டும் இல்லாமல் யாரெல்லாம் அவனிடம் வாங்கினார்களோ அவர்களையும் தேடி அறிந்து, மொத்த இடம் பணம் அனைத்தையும் திருப்பியதுடன் அவனை ஒரே வாரத்தில் ஜாமினில் வெளி வராதபடி உள்ளே தள்ளினான்.

இதை அறிந்த ரவுடி ஆணிவேரான குணசேகரை கண்டறிந்து, வங்கியில் அவனை சஸ்பென்ஸ் செய்யும் வேலையை செய்தான். தொடர்ந்து வீட்டு ஆட்களையும் குறி வைப்பதை அறிந்து தான் தமிழ் செக்யூரிட்டிக்கு என இரண்டு பேரை அனுப்பியது.

நித்தியின் திருமணம் தமிழை யோசிக்க வைத்தது. அதனால் பாதுகாப்பை அவன் அதிகப்படுத்தி, எதுவென்றாலும் உடனே அழைக்கும் படி குணசேகரனிடம் கூறினான்.

பத்து நாட்களில் நித்தி உதய் கல்யாணத்திற்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தது. நித்தி எளிதாக ஒவ்வொன்றும் தேர்வு செய்ய, அதில் கோபம் அடைந்த சத்யா நீ எதுவும் பண்ண வேண்டாம் என்றவன் அவளுக்கான அனைத்தையும் அவனே பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்தான்.

'நம் ராஜ தந்திரம் அனைத்தும் வீணாகிவிட்டதே' என்ற கடுப்பில் எதிலும் கலந்து கொல்லாமல் ஆபிஸ் செல்லத் தொடங்கினாள்.

அவளுக்கான் பட்டு புடவை, அழைப்பிதழ், என ஒவ்வொன்றும் சத்யாவின் தேர்வே. நித்தியின் கல்யாண புடவை போலவே மதுவுக்கும் ஒன்று வாங்கினான். அது அப்போதே கொடுக்க வேண்டாம் பின்னால் கொடுக்கலாம் என மறைத்தும் வைத்தான்.

தொடர்ந்து மூன்று நாட்களாக நித்தி ஆபீஸ் வரவில்லை என்றதும் சத்யாவிற்கு ஏதோ தவறு நடப்பதாக உள்ளுணர்வு சொல்லியது. முதல் நாள் நித்தியிடம் தலை வலி என்றாள். இரண்டாவது நாள் எதுவும் சொல்லவில்லை. சரி உடம்பு சரியில்லை என நினைத்துக் கொண்டனர். மூன்றாவது நாளும் வரவில்லை. மொபைல் சுவிட்ச் ஆப்.

இதற்கு மேல் தாமதிக்க கூடாது என்று சத்யா மதுவை பார்க்க போவதாக சொல்லி, நித்தியை தனியாக வீட்டுக்கு அனுப்பி தவறு செய்தான்.

சத்யா நேரே மது வீட்டிற்க்கு சென்றவன், உள்ளே செல்ல ஒரு நிமிடம் தயங்கினான். கண் முன் மது தோன்ற, கேட்டை திறந்து உள்ளே சென்றான். ஆனால் வீடு பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டில் விசாரிக்க, எல்லாரும் வடபழனி கோவில் சென்றிருப்பதாக கூறியவர் வேறு விபரம் தெரியவில்லை என்று கைவிரித்தார்.

அவளை பார்க்காமல் மனம் சமாதானம் அடையாது என்று தோன்ற, கூடவே ஏதோ அச்சமும் தோன்றியதால் உடனே வடபழனி கிளம்பியவனுக்கு உதய் மொபைலில் அழைத்தான்.

"என்ன டா வெளில போய்ட்டு வர்றதுக்குள்ள ரெண்டு பேரும் கிளம்பிட்டிங்க? எங்கே இருக்கீங்க? ஏன் சொல்லாமல் போன?"

"உதய்! மதுவை தேடி போறேன் டா. அவளை பாக்கணும்னு போல இருக்கு. ஏதோ தப்பாபடுது டா" என்று கூற, அவனை தனியே அனுப்ப யோசித்தவன் தானும் வருவதாக சொல்லி இணைந்து கொண்டான் உதய்.

"ஏன்டா டென்ஷனா இருக்க? கோவிலுக்கு தானே போயிருக்காங்க! அரை மணி நேரத்தில் பார்த்துடலாம். கூல் டா" என காரில் ஏறியதில் இருந்து சத்யாவை சமாதானப்படுத்திக் கொண்டு வர அவன் முகம் தான் தெளிந்தபாடில்லை.

"சரி விடு. நித்தி வீட்டுக்கு போய்ட்டாளா? கால் பண்ணியா?" என்க, அப்போது தான் நித்தி ஞாபகமே சத்யாவிற்கு வந்தது.

"சாரி டா" என்றதும் அவன் நிலை புரிந்து உதய்யே நித்திக்கு கால் செய்தான். ஆனால் எடுத்தது தமிழ்.

"ஹலோ நித்தி! வீட்டுக்கு போய்டியா?" உதய் கேட்க,

"நீங்க?.." என்ற ஆணின் குரலில் பதறினான் உதய்.

"ஹலோ நீங்க யாரு? நித்தி எங்கே?" என உதய் படபடக்க,

"அவங்க என்கூட தான் இருக்காங்க. நான் இன்ஸ்பெக்டர் தமிழ்" என்றான்.

"சார் என்னாச்சு எனி ப்ரோப்லேம்? நித்தி எப்படி இருக்கா? நான் உதய் சார்" என்று சொல்ல, புரிந்து கொண்டவன் உடனே வருமாறு கூற போனை பறித்த நித்தி,

"உதய் எங்கே இருக்க?" என்றாள்.

"நித்தி! உனக்கு என்னாச்சு? ஆர் யூ சேஃப்? நீ எங்க இருக்கனு சொல்லு நாங்க வர்றோம்" என்றதும், அவனுடன் சத்யா இருப்பதை புரிந்து கொண்டவள், அவர்கள் எங்கு போகிறார்கள் எனக் கேட்டு தானும் அங்கு வருவதாக கூறினாள். மறந்தும் நடந்ததை கூறவில்லை.

தமிழ் அவளை முறைத்தபடியே இருக்க கண்டு கொள்ளாதவள் செல்ல முற்பட, அதைத் தடுத்து அவளை கண்டு கொள்ளாமல் ஜீப்பில் அவளையும் அழைத்துக் கொண்டு சென்றான். சத்யாவிடம் அவளை சேர்த்துவிட்டு, அவனை நாலு கேள்வி கேட்கவே உடன் செல்கிறான்.

உதய் டென்ஷன் ஆனதும் காரை நிறுத்தி இருந்தான் சத்யா. அவள் எதுவும் கூறாமல் பேசினாலும் அவள் குரல் தெளிவாக இருந்ததால், உதய் கோவிலுக்கே செல்லுமாறு கூறினான் சத்யாவிடம்.

"உன் பேரு என்ன?" என தமிழ் நித்தியிடம் கேட்க,

"ஏன்? பேரு தெரிஞ்சு என்ன பண்ண போற?" என்றாள் அவள் வேடிக்கை பார்த்தவாறு.

"மரியாதைனா என்னனு உன் குடும்பத்துக்கே தெரியாதா?" கடுப்பாய் வந்தன தமிழ் வார்த்தைகள்.

"ஏய் குடும்பத்தை பத்தி தப்பா பேசுன பல்லை பேத்துடுவேன்" என ஒரு விரலை நீட்டி அவள் மிரட்ட, அதை பிடித்து வளைத்தான்.

"டேய் விடு டா வலிக்குது. மாமா.. மாமா"

"மரியாதை குடுத்து பேசணும்னு கூட சொல்லி தராத குடும்பத்தை பேசினால் கோபம் வேற வருதா? அடிச்சா அம்மானு தானே சொல்லனும் மாமானு சொல்ற? அவன்.. அந்த சத்யா தானே உன் மாமா? அதான்! அவன் கூட சேர்ந்து தான் அவனை மாதிரியே திமிரா திரியுற? அப்புறம் எப்படி அவனை விட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ண சம்மதிச்ச?" என கேட்க, ஏற்கனவே கட்டுப் போட்டிருந்த கையை, விரலை பிடித்து திருப்பியதால் வலியில் கண்ணீர் வந்தது.

"இதை கூட தாங்க முடியல. வாய் மட்டும் எட்டு ஊரை எட்டுது. உன்னை அப்புறமா பார்த்துக்குறேன்" என்று அவள் கையை விட்டு, காரை ஓட்டுவதில் முழு கவனத்தை செலுத்தினான்.

நித்தி சத்யாவிற்கு முன் வந்தாலும் கோவில் உள்ளே செல்லாமல் அவர்களுக்காக காத்திருந்தாள். தமிழை போக சொன்னாலும் அசையாமல் அவன் நிற்க, 'இரு இரு என் மாமாவை விட்டு அடிக்க சொல்றேன் உன்னை' என நினைத்துக் கொண்டு தள்ளி நின்றாள்.

காரில் இருந்து இறங்கிய இருவரும் நித்தி அருகே பதட்டத்துடன் ஓடினர். "நித்தி என்னாச்சு? இதென்ன கையில் கட்டு? எப்படி பட்டுச்சு?" என சத்யா நித்தி கைகளை தாங்கியவாறு கேட்க, அருகே உதய்யும் அதே படபடப்போடு நின்றான்.

"ஒன்னும் இல்லை மாமா. நான் யாருனு தெரியாம ஒருத்தன் என் செயின்ன குறி வச்சு ஓடி வந்தான். செயின்னை நான் புடிச்சி இழுத்தேன் அது கையில வெட்டுடிச்சி" என சாதரணமாக சொல்ல, இருவரும் அதுதான் நடந்தது என்பது போல அதிர்ச்சியாகி நின்றனர்.

தமிழும் அதிர்ச்சியில் நின்றாலும் அவன் சத்தியமாக இப்படி ஒரு பதிலை எதிர்பார்க்கவில்லை என்பது போல அவளைப் பார்த்து நின்றான்.

"ஹேய் நீ தெரிஞ்சி சொல்றியா இல்ல தெரியாமல் சொல்றியா?" என தமிழ் கோபமாய் கேட்க, அவன் ஒருமையில் பேசியதில் மூவருமே அவனை முறைத்தனர்.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
என்னடா நடக்குது இங்க????
என்ன ஆச்சு???
என்ன குழப்பம்...
எதுவும் புரியவில்லை.... ஆனா
எதுவோ தப்பா தோணுது????
என்னவா இருக்கும்???
எதையோ நித்தி மறைக்கிறளா??
 
  • Haha
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
என்னடா நடக்குது இங்க????
என்ன ஆச்சு???
என்ன குழப்பம்...
எதுவும் புரியவில்லை.... ஆனா
எதுவோ தப்பா தோணுது????
என்னவா இருக்கும்???
எதையோ நித்தி மறைக்கிறளா??
பார்ப்போம் sid