• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலே 29

Rithi

Well-known member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 31, 2021
Messages
670
அத்தியாயம் 29

"ஏண்டி இன்னுமா என் காதல் உனக்கு புரியல? இல்ல என் காதல் உனக்கு உணர்த்தலையா? சத்யா உனக்கு தான்! சத்யா வாழ்க்கைல மனைவின்னா அது நீ மட்டும் தான்னு முன்னாடியே உனக்கே தெரியும்.. ஆனால் எதுக்காக மறைக்குற? என்னை விடு... நீ? ஏன் நீ விரும்புறதை உனக்குள்ள வச்சுட்டு என்னையும் சேர்த்து கொல்ற?" எப்படியாவது அவள் காதலை தன்னிடம் தந்து விட மாட்டாளா என எண்ணி சத்யா பேசிக் கொண்டிருக்க, அவள் குனிந்தது குனிந்தே நின்றாள்.

மேலும் அவன் ஏதோ பேச வரும் முன் மது அவன் வாயை கைகளால் மூடியவள், "ப்ளீஸ் மாமா! என் காதல், அன்பு எல்லாம் உங்களுக்கு தெரியும். அதை சொல்ல எல்லாம் எனக்கு தெரியாது. அதை நானே பொத்தி வச்சுக்குறேன். கேட்காதீங்களேன்!" என கெஞ்சும் குரலில் அவள் கேட்க, அவளை பற்றி நன்கு அறிந்து, மணந்து கொண்ட கணவன் ஆயிட்றே! அவனும் அவள் விரும்பும் போது சொல்லட்டும் என எண்ணியவன் இனி அவளை தூர நிறுத்தி பார்ப்பதாயும் இல்லை. தன் கைக்குள்ளேயே வைத்து கொண்டான்.

"சும்மா பொறி பறக்குது!" அறைக்குள் வந்த தமிழை அவன் அறை வாங்கியதை கிண்டலாய் இவ்வாறு நித்தி சொல்ல,

'ஆரம்பிச்சுட்டா! உனக்காக என்னவெல்லாம் பொறுத்து போறேன். அம்மாகிட்ட கூட அடி வாங்குற அளவுக்கு கொண்டு வந்து விட்டுட்டு உனக்கு நக்கல் வேற! போடி பொம்பள ரவுடி!' என நினைத்தவன் கண்டு கொள்ளாதது போல அவன் வேலையை பார்த்தான் தமிழ்.

"ப்ப்பா! அத்தைம்மா செம்ம ஸ்ட்ரோங் தான் போல. கண்ணம் ரெண்டும் சும்மா பன்னு மாதிரி வீங்கிடுச்சி" நித்தி விடுவதாய் இல்லை. மீண்டும் மீண்டும் கலாய்க்க, பொறுத்தே போனான் தமிழ்.

"இதுக்கு தான் ஆழம் பார்த்து காலை வைக்கனும்னு சொல்லுவாங்க"

"ஹேய்! இப்ப உனக்கு என்ன டி வேணும்? பேசாமல் போய் படு" அம்மாவும் புரிந்து கொள்ளவில்லை இவளுக்கும் புரிய வைக்க முடியவில்லை என்று ஏற்கனவே இருந்த கடுப்பில் அவன் கூறினான்.

"டி யா? பல்லை பேத்துடுவேன்" ஒற்றை விரலை நீட்டி நித்தி சொல்ல, அன்று போலவே விரலை பிடித்து திருகினான்.

"டேய் விடு டா. விடு டா" நித்தி அலற,

"உன்னை விட வயசுல பெரியவன்… சரி அதை கூட விடு! உன்னை விட நான் எவ்வளவு உயரம் பார்த்தல்ல?" என்று இருவர் உயரத்தையும் கையில் ஏற்ற இறக்கமாக வைத்து காட்டி, "இந்த உயரத்தை கூட மதிக்காம நீ டா னு என்னை கூப்பிடலாம்! உன்னை டி னு கூப்பிட்டா பல்லை பேத்துடுவியா?" என்றவன் மெதுவாக அவள் விரலை விட்டான்.

"சொல்லு எதுக்காக இப்ப பழமொழி எல்லாம் சொன்ன?".

இதெல்லாம் ஒரு வலியா என்பது போல கையை உதறியவள், "பழமொழி சொன்னதுக்கு ரீசன் இருக்கு. சொல்றேன்! அதுக்கு முன்னாடி நீ சொல்லு! எதுக்காக என் வீட்டுக்கு போய் சீன் கிரியேட் பண்ணி எல்லாரையும் இன்வைட் பண்ணின? இப்படிலாம் பண்ணினா நீ பண்ணது தப்பு இல்லனு ஆய்டுமா?" என திமிராகவே நித்தி கேட்க, இவளுக்காக செய்ததை மதிக்காவிட்டாலும் இப்படி அவமானப்படுத்துபவளை என்னை செய்ய என கோபத்தோடு பார்த்து,

"நீ அழுது உன் பாவம் எனக்கு சேர்ந்துடுமே! அதான். என் நேரம்!" என தமிழும் அதே மிடுக்கோடு சொல்ல,

"சும்மா நடிக்காத! சரி விடு! இப்ப நீ வெளியில அசிங்கப்பட்டதை பார்த்தேன். பார்த்தல்ல! என் மாமாவை நீ பழி வாங்கணும்னு நினச்சா உன் அம்மாவே உனக்கு எதிரா நிக்குறாங்க. இதான் என் மாமா. இப்பாவது புரிஞ்சுக்கோ" என்றாள் பழமொழிக்கான அர்த்தத்தை.

"ஏண்டி உனக்கெல்லாம் ஒரு தடவை சொன்னால் புரியாதா? என்னடி சும்மா மாமா மாமானு.. அப்படி உனக்கு அவன் என்ன பண்ணிட்டான்னு மாமா மாமானு உருகுற? எனக்கு பண்ணிருக்கான்.. பெருசா பண்ணிருக்கான்.. எல்லாம் சேர்த்து அவனை 'வச்சு செய்யணும்னு தான்டி நினச்சேன்.. உன்னை யாரு டி என் கண்ணுல பட சொன்னா? உன்னால தான் என் அம்மா கூட நான் தப்பு பண்ணல மா, லவ் பண்ணேன்னு சொன்னா நம்ப மாட்றாங்க! உன்னை யாரு டி அவனுக்கு சொந்தமா பொறக்க சொன்னா? பொறந்தியே சும்மாவா இருக்க? வார்த்தைக்கு வார்த்தை என் மாமா என் மாமானு துடிக்குற? அவன் என்ன பண்ணினான் தெரியுமா? தெரியுமா? வேணாம் டி! என் வாயை கிளறாம போய்டு.. ச்சை நிம்மதி போய்டுமோனு உன்னை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தா.. மொத்தமா நிம்மதிய எடுக்கணும்னே வந்து சேர்ந்திருக்க!"

அவள் பேசியதிற்கும் இவன் பேசியதிற்கும் சம்மந்தம் இல்லை தான். ஆனால் அவன் மனதில் இருந்த ஆதங்கத்தை எல்லாம் கொட்டி இருந்தான். அவள் சொல்லாதே என்றாதற்காகவே வார்த்தைக்கு வார்த்தை டி என்றவன் இவ்வளவு நாளும் சொல்லி அழ யாரும் இல்லாமல் தனிமையில் புழுங்கியவன் கோபத்தில் பாதியை கொட்டினான்.

"என் அம்மா அடிச்சது உன் மாமா மேலே பாசத்துல இல்லை டி. என்னால அவனுக்கு எதுவும் ஆகிட்டா நான் ஜெயிலுக்கு போய்டுவேனோனு பயத்துல.. ரொம்ப ஆடாத!" என்றவன் அத்தோடு கிளம்பி வெளியே சென்றுவிட்டான்.

அவன் பேசி சென்றதில் நித்திக்கு குழப்பம் இருந்தாலும் ஏதோ ஒரு விதத்தில் சத்யா, தமிழ் வாழ்க்கையில் முன்னே இருந்திருக்கிறான் என்பது தெளிவானது.

'அப்படி என்ன நாற ப்ஃளாஸ்பேக் இவனுக்கும் மாமாக்கும் இருக்கும் நமக்கு தெரியாம? இனி அலர்ட்டா இரு நித்தி. உன்னோட முதல் வேலை தமிழ் பத்தி முழு டீடெயில்ஸ் கலெக்ட் பண்ணுறது தான். மாமா மேலே தப்பு இல்லனு இவனுக்கு நிரூபிக்கனும்' என நினைத்துக் கொண்டாள். இன்னும் கொஞ்சம் யோசித்திருந்தால் அவளுக்கே விடை கிடைத்திருக்குமோ என்னவோ!

முதல் வேலையாக சத்யா உதய் இருவரையும் கான்பெரன்ஸ் காலில் அழைத்தாள்.

"ஹலோ.. "

"ஹெலோ!"

"ஹலோ.."

"ஏய் எருமைங்களா! ஏன்டா லோ லோனு கத்துறீங்க? நான் தான் ரெண்டு பேரையும் கனக்ட் பண்ணேன்" என நித்தி சொல்ல, அந்த பக்கம் இருவரும் ஒரே போல தலையில் அடித்துக் கொண்டனர்.

"ஹேய் நித்தி! நிஜமா எனக்கு ஒரு விஷயம் புரியல. நீ அங்கே சந்தோசமா தான் இருக்கியா? இல்ல எங்களுக்காக அந்த மாதிரி நடிச்சுட்டு இருக்கியா?" என உதய் வருத்தத்துடன் கேட்க, சத்யா ஆமோதிப்பதாய் அமைதியாய் இருந்தான்.

"ஹாஹாஹா அட லூசு! நான் ஏன் டா நடிக்கணும்? நீ முதல்ல ஒன்னு தெரிஞ்சுக்கோ! இந்த நித்தி எங்கே இருக்கேனோ அந்த இடத்தில இருக்கவங்க தான் பயப்படனும், வருத்தப்படனும் ஓகே. நான் எப்பவும் போல தான் இருக்கேன். என்ன மாமா சரியா சொன்னேன்னா?" என சத்யாவிடம் கேட்க, அதுவரை இருந்த குழப்பம் நீங்கி உதய் நிம்மதி மூச்சு விட,

"சரியா சொன்ன டா நித்திமா" என்றான் சத்யா.

"ஐயோ நான் பேச வந்த மேட்டரே மறந்துடுவேன் போல" என்றவள்,

"டேய் உதய், சத்யா! நல்லா யோசிச்சு சொல்லுங்க! இந்த வளந்த மரம் காக்கி இருக்கான்ல அவன்கிட்ட நீங்கள் எனக்கு தெரியாமல் படிக்கும் போதோ இல்லை வெளியில் எங்கேயோ வச்சு பிரச்சனை பண்ணிங்களா? எதுவா இருந்தாலும் உண்மையை சொல்லி தொலைங்க டா" என்றாள்.

"ஏன் நித்தி திடிர்னு இப்படி கேட்குற? உனக்கே தெரியுமே? அன்னைக்கு மது கூட பேசினான்ல அப்ப தான் அவனை முதல்ல பார்த்தேன். அதுக்கு முன்ன அந்த மூஞ்சை பார்த்த ஞாபகம் இல்லை" என சத்யா சொல்ல,

"ஆமா நித்தி! நானும் பார்த்ததில்லை தான்" என்றான் உதய்.

"சரி விடுங்க! இப்ப நான் எதுக்கு கால் பண்ணேன்னா.." என இழுத்தவள் தமிழை லட்சுமி அடித்தது அவன் பேசிய டயலாக் அனைத்தையும் ஒன்று விடாமல் கூறினாள்.

"ஹேய் நான் என்னவோ சும்மா பார்த்தா தான் அவனுக்கு எங்களை புடிக்கலனு நினச்சேன். இவன் சத்யாவை பத்தி என்ன தெரியும்னு இவ்வளவு சீன் போட்டான் உன்கிட்ட?" என்றான் உதய்.

"நித்தி நிஜமாவா சொல்ற? ஐ கான்ட் பிலீவ் திஸ்" என சத்யா சொன்னதும்,

"அட ஆமா மாமா. ஆனால் நானா கேட்கல. ஆடு தானா தலையை குடுத்துட்டு போயிருக்கு" என்றாள்.

"ஏண்டி நீ சீரியஸாவே பேச மாட்டியா?" என பழைய உதய் பாஃர்முக்கு வர,

"அட போ டா! நான் ஏன் சீரியஸ் ஆகணும்? அவன் குடுத்த பில்டப்க்கு அவனோட ப்ஃளாஸ்பேக் மட்டும் மொக்கயா இருந்துச்சு! அவன் தான் சீரியஸா ஹாஸ்பிடல்ல கிடப்பான்" என்றாள்.

"சரி கூல் நித்தி! டேய் உதய் இதை இப்படியே விட்டால் சரி வராது. நம்ம சாமி அங்கிள் கான்ஸ்டபில் கிட்ட இவனை பத்தி விசாரிப்போம். தேவைபட்டால் டிடெக்டிவ் மூலமா இதை ஹண்ட்ல் பண்ணலாம்" என சத்யா ஒரு முடிவுக்கு வர,

"அய்யயோ அதுக்கு நிறைய செலவாகுமே? இந்த வளந்து கெட்டவனுக்காக நீங்க ஏன் செலவு செய்யணும்?" என நித்தி வேகமாக கூறினாள்.

"அடியேய் கஞ்சம்! உனக்கு ஒரு நல்லது பன்ற வரை நீ வாயே திறக்க கூடாது. இப்ப மாதிரியே அங்கே நடக்குறதை சரியா சொல்லு சரியா? என்றான் சத்யா.

"அப்புறம் நித்தி.." என உதய் தயங்க,

"என்ன டா தயங்குற? சொல்லு" என்றதும்,

"இல்லை நித்தி! எதுக்கும்.. அவன் சொன்னா மாதிரி அவன் உன்னை... லவ் பண்ணியிருக்க வாய்ப்பிருக்கானு நீ யோசியேன்... இல்லை அவனை வாட்ச் பண்ணு" என உதய் சொல்ல,

"அப்படியே இருந்தாலும் கடைசி நிமிசத்துல கல்யாணத்தை நிறுத்தி உன்னை அழ வச்ச அவனை சும்மா விட மாட்டேன்" என வேகமாக சொல்லிவிட்டு கட் செய்தாள் நித்தி.

உதய் சொல்லும் விஷயம் புரிந்தாலும் அதை சொல்லும் போது உதய் மனம் புண்பட்டிருக்குமோ என்ற எண்ணத்தில் அதற்கு மேல் பேச முடியாமல் கட் செய்தாள்.

சத்யா உதய் இருவரும் தீவிரமாக தமிழ் பற்றி அறிய போராட ஆரம்பிக்க, அதுவரை சும்மா இருந்தால் அது நித்தி இல்லையே!

நித்தியை திட்டிவிட்டு நேராக தமிழ் வந்த இடம் கடற்கரை. திருமணம் ஆகியும் அவளிடம் மனம் விட்டு பேச முடியவில்லை என்று ஏற்கனவே அவன் நொந்து போயிருக்க, அம்மாவும் புரிந்து கொள்ளாமல் அடித்தது வருத்தமாக இருந்தாலும் அதை தாங்கிக் கொண்டு இருந்தவனை நித்தி பேச்சின் மூலம் காயப்படுத்த, அவனும் பேசக் கூடாது என நினைத்ததை எல்லாம் தன்னை மறந்து பேசி விட்டான்.

வெகுநேரம் கடற்கரையில் கண் மூடி படுத்திருந்தவன் மனம் சற்று சமாதானம் அடைந்திருக்க நித்தியை திட்டி விட்டு வந்ததை எண்ணி வருந்தி வீட்டுக்கு செல்லும் போது மணி பதினோன்றுக்கு மேல் ஆனது.

அறைக் கதவை திறந்து உள்ளே வந்த தமிழ் தூங்கி கொண்டிருக்கும் நித்தியை சிறிது நேரம் நின்று பார்த்தான். சாதாரண பெண்ணாக இருந்திருந்தால் அவளுக்கு பிடித்த சத்யாவை திட்டியதற்கு அழுதிருப்பாள் இல்லை கோபமாக இருப்பாள் ஆனால் நித்தியை எந்த லிஸ்ட்டில் சேர்ப்பது என தெரியாமல் குழம்பி அவன் போலீஸ் மூளை கூட சூடாகிவிட பேசாமல் சென்று படுத்துக் கொண்டான்.

அடுத்த நாள் முதல் சத்யா வீட்டில் எல்லாருடைய எண்ணமும் நித்தி சந்தோசமாக இருப்பதால் இயல்பாக மாற தொடங்கியது. ஹனியின் குறும்பு தனத்தால் உதய் கூட ஹனியுடன் முன்பு போல ஏன் அதை விடவும் நன்றாக பேசத் தொடங்க, பார்வதியும் இவர்கள் வாழ்வு சீக்கிரமே மாறி விடும் என நினைத்து சந்தோசம் கொண்டார்.

தமிழ் வீட்டில் மட்டும் நித்தியை தவிர அனைவரும் வாடிய முகத்துடன் இருந்தனர். காலையில் எழுந்தது முதல் தமிழ் நித்தியை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். எப்போதும் போல நித்தி இப்போதும் அவனுக்கு குழப்பம் தான்.

நேத்து சத்யாவை அந்த வாங்கு வாங்குனேன்! இவ என்ன எந்த ரியாக்ஷனும் இல்லாம எப்போதும் போல இருக்கா? ஏதாவது பிளான் பண்ணிட்டாளா? எதுக்கும் அலர்ட்டா இருந்துக்குவோம்' என நினைத்து தமிழ் அவள் பக்கமே செல்லாமல் அவன் வேலையில் கவனமாக இருந்தான்.

தொடரும்..
 
Top