• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதலே 3

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 3

மஞ்சு பார்வதி இருவரும் அடிக்கடி சந்தித்து கொள்வர் எப்போதும். இருவர் வீட்டிலும் எதிர்ப்பு இருக்காது. ராஜம்மாள் பேச்சை யாரும் பெரிதாக எடுத்து கொள்வது இல்லை.

கணவர் இறந்த பின் சில மாதங்கள் பிறகு வழக்கம் போல பார்வதி மஞ்சு வீட்டிற்கு வரவும் மஞ்சு பார்வதி வீட்டிற்கு செல்வதும் தொடர்ந்தது. குணசேகரன் பார்வதியையும் நம் வீட்டு அருகில் வீடு எடுத்து தங்க சொல்லலாம் என சொல்ல மஞ்சு அதற்கு கேட்கவில்லை.

பார்வதி கணவன், குணசேகரன் போல நல்லவர் தான். பெயரோடு செல்வமும் சேர்த்தவர். அவர் வாங்கிய இடத்தில் வீடு கட்டி அங்கேயே இருந்தார் பார்வதி மகன் உதய்யுடன்.

கல்லூரி முடித்த பின் அன்னையுடன் ஒருநாள் உதய், மஞ்சு வீட்டிற்கு வர, அன்று தான் ராஜம்மாள் பேச்சு எல்லை மீறியது. எப்போதும் ஓல்ட் லேடி என்று கிண்டல் செய்துவிட்டு கடந்து செல்பவன் தன் தாயை தவறாக பேசியது பொறுக்காமல் பதிலுக்கு பேசிவிட்டு சென்றது தான்.

அதன் பின் தந்தை வாழ்ந்த வீட்டில் ஆறு மாதம் இருந்தவர்கள் சத்யாவின் சிலபல யோசனைகளுக்கு பின் அதை ஆராய்ந்து அவர்களின் சென்னை வீட்டிற்கு வந்துள்ளனர்.

சத்யா இதனை யோசித்துக் கொண்டிருக்க, உதய் அவன் காதில், "ஏன்டா இன்னும் விஷயத்தை யார்கிட்டயும் சொல்லலையா?" என்றான்.

"ஹ்ம்ம் ஆமாம் டா. இன்னைக்கும் சொல்றதா பிளான் எதுவும் பண்ணலை. க்ளைன்ட் பார்க்க தான் உன்கூட கிளம்பினேன். நித்தி என்கூட வரவும் தான் ஏன் இன்னைக்கே இவங்ககிட்ட முதலில் சொல்லகூடாதுனு தோணிச்சு.அதான் உன்னையும் இங்கே வர சொன்னேன்" என்றான் சத்யா.

"ஒகே சொல்லிடலாமா?" என சத்தமாக உதய் கேட்க, சிரிப்புடன் தலை அசைத்தான் சத்யா.

"என்ன டா! என்ன திருட்டுத்தனம் பண்ணின? மாமாவையும் உன்கூட கூட்டு சேர்த்துட்டியா?" என நித்தி கேட்க,

"அம்மா தாயே! கொஞ்ச நேரம் அமைதியா இரு. நாங்களே சொல்றோம்" என்றவன் சத்யாவிடம் கண்ணசைக்க, என்ன என ஆர்வத்துடன் பார்த்தாள் நித்தி.

சத்யா, "எல்லாருக்கும் குட் நியூஸ் நித்தி. நானும் உதயும் புதுசா நம்மோட ஆபிஸ் ஸ்டார்ட் பண்ண போறோம்" என்று கூற நித்தி சந்தோசத்தில் செய்வது அறியாது திக்கு முக்காடி போனாள்.

"வாவ் கங்கிராட்ஸ் கைஸ்! நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா! இதை ஏன்டா முதல்லேயே சொல்லல? ஐயோ மாமா கலக்கிட்டீங்க போங்க. கையக் கொடுங்க மாமா. ஓஹ் அதுக்குத்தான் ட்ரீட்டா?" என உதயிடமும் சத்யாவிடமும் மாற்றி மாற்றி பேசியவள் சந்தோசத்தில் வானுக்கும் மண்ணுக்கும் குதித்தாள்.

பின்னே இது சத்யாவின் பல வருட கனவு ஆயிற்றே!

"வீட்டில எல்லாருக்கும் சொல்லிட்டீங்களா மாமா? தனியா பிஸ்னஸ்னா நிறைய பணம் தேவைப்படுமே எப்படி சமாளிச்சிங்க மாமா" நித்தி கேட்க,

"இல்ல நித்தி! வீட்டில எல்லாருக்கும் இனி தான் சொல்லணும். முதல்ல உங்ககிட்ட தான் சொல்றோம். அண்ட் பிசினஸ் லோன் சங்சன் ஆயிடுச்சு. அப்பாவும் ஹெல்ப் பண்றேனு சொல்லியிருக்காங்க. சோ நோ ப்ராப்ளம்" என்று கூறி சத்யா மதுவை பார்க்க, நித்தி மகிழ்வதை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவள் பின் உதயிடம் திரும்பி "கங்கிராட்ஸ் அண்ணா" என்றவள், சத்யாவை நோக்கி சிறு புன்னகையுடன் "கங்கிராட்ஸ்" என்றாள்.

இருவரும் அதனை சிறு தலையசைப்புடனும் புன்னகையுடனும் ஏற்றுக்கொண்டனர்.

இது அவர்களின் குடும்ப விஷயம் இதற்கு ஏன் நித்தி நம்மை அழைத்தால் என மது நித்தியை மனதுக்குள் திட்டினாள். ஆனால் அவளுக்கு தெரியாமல் இல்லை சத்யா முதலில் இதை தெரியப்படுத்த விரும்பியது மதுவிடம் தான் என்று.

பின் உதயை நோக்கிய நித்தி "சார் நீங்க எவ்ளோ உங்க ஷேர் போடுறீங்க? இல்ல ஓசியில மங்களம் பாடுறிங்களா?" என விளையாட்டாய் கேட்க,

"ஹலோ மேடம் நாங்களும் எங்க ஷேரை போட்டு இருக்கோம். நாங்க ரெண்டு பேருமே பார்ட்னர்ஸ் தான் இந்த பிஸினஸில" என்றான்.

பின் அனைவருக்கும் காலை உணவை ஆர்டர் செய்ய சத்யா பேரரை அழைக்க, நித்தி அவசரமாக "மாமா மாமா ப்ளீஸ் மாமா! நம்ம வீட்டில் போய் எல்லார்கிட்டயும் இந்த சந்தோசத்தை ஷேர் பண்ணிட்டு சாப்பிடலாம். இங்க வேண்டாம் மாமா! ப்ளீஸ்!" என்றாள் பயத்துடன்.

"ஐய்ய! டேய் இவ இன்னும் மாறலையா டா? சரியான கஞ்ச பிசினாரியா இருக்கிறா?" என்ற உதயை முறைத்தவள் மீண்டும் பேசும் முன், "நித்தி! இது எங்க சந்தோஷம். அதை உங்களோட ஷேர் பண்ணிக்க இங்க வந்திருக்கோம். சரியா! நாங்க சொல்றத நீ கேட்கணும்" என்றான் சத்யா கட்டளையாய்.

அவள் பாவமாக முழிக்க, மது "நான் கிளம்புறேன் நித்தி. ப்ளீஸ் எனக்கு இங்க கம்ஃபர்டபிலா இல்ல" என நித்தி காதுக்குள் சொல்ல, அவளை முறைத்தாள் நித்தி.

"ஏன்டி இங்க என்ன சிங்கம் புலியா இருக்கு? நான் தான் இருக்குறேன் இல்ல? பேசாம இரு! நானே எவ்வளவு செலவாகும்னு கவலையில் இருக்கேன்! நீ வேற படுத்தாதடி" என்றாள் நித்தி.

காலை உணவை எளிதாக அனைவருக்கும் பிடித்ததாக சத்யாவே ஆர்டர் செய்ய, திருப்தியாக உண்டனர் நித்தியை தவிர அனைவரும். சாப்பிட்டு முடித்து பில் வரும்வரை பதட்டத்துடன் தான் இருந்தாள் நித்தி.

மதுவும் கூட விரும்பியே சாப்பிட்டாள். அவளுக்கு பிடித்த பூரியும் சென்னாவும் கொடுக்க, மறுப்பின்றி வாங்கி கொண்டாள் மது. அவனுக்கு எப்படி தெரியும் என்று யோசிக்கவில்லை. அவளுக்கு தான் தெரியுமே தன்னை பற்றி அவன் முழுதாய் அறிந்து தான் இந்த விளையாட்டை தொடர்கிறான் என்று. ஆனால் இப்போது அவற்றை நினைக்காமல் பூரி மட்டுமே கண்ணுக்கு தெரிய, மற்றவை பின்னுக்கு போனது.

பில் டேபிள் மேல் பேரர் வைக்க சத்யா உதய் இருவரும் அதை நோக்கி கை நீட்ட, அவர்களுக்கு முன் கையில் எடுத்தாள் நித்தி. பில்லை பார்த்தவள் கீழ் உதட்டை வெளியே கொண்டு வந்து அப்பாவி போல அதை நீட்ட, வாங்கிய உதய் அருகில் இருந்த டேபிள் மேல் தலையை முட்டிக் கொண்டான்.

சத்யாவிற்கும் மதுவிற்கும் விஷயம் புரிந்துவிட சிரிப்பை அடக்கிக் கொண்டு உதயை பார்க்க, "இவளை வீட்டில வளக்குறீங்களா? இல்லை காட்டுல இருந்து வந்தாளா டா?" என்றவன் தொடர்ந்து,

"வெறும் 400 ரூபாய் பில்லுக்கு உன் அத்தை மக அலம்பல் தாங்க முடியல டா!" என சத்தமாக கூறியவன், "இவளை நான் வச்சி மேய்க்கணும்னு வேற கடவுள் என் தலையில் எழுதியிருக்கான்" என முணுமுணுத்துக் கொண்டான்.

"அட எரும! வெறும் ரெண்டு பாக்கெட் மாவு வாங்கி கொடுத்திருந்தா போதும்! என் அத்தை அதை வச்சி ஊருக்கே சமைச்சி போட்ருப்பாங்க. 4 பூரி, கொஞ்சம் மசாலா தோசை, 1 ஆனியன் தோசை, கொஞ்சம் மினி தோசைனு சாப்பிட்டதுக்கு இவ்வளவு பணம் தெண்டமா செலவு பண்றீங்க!" என நித்தி கோபமாக கூற, அவளை திருத்த முடியாது என்று தெரிந்து அனைவரும் அமைதியாகிவிட,

உதய் மட்டும் 'என்ன இவ! அவ சாப்டதுக்கு மட்டும் கணக்கு சொல்றா?' என மனதுள் நினைத்தவன் அதை கேட்கும் தைரியம் இன்றி பில் பணத்தை எடுக்க போக, சத்யா அந்த பில்லைப் பறித்து கொண்டு உள்ளே பணத்தை சொருகி கீழே வைத்துவிட்டு அனைவருடனும் வெளியேறினான்.

வரப் போகிற மனைவி பற்றி அனைவருக்கும் கனவு இருக்கும். ஆனால் உதய் மட்டும் நித்தியை பார்த்து அதன் மூலம் கனவை வளர்த்து கொள்வான். இப்போது அவள் கூறிய "எருமை"யும் அந்த கனவில் சேர்ந்து கொண்டது.

நித்தியின் தைரியமான பேச்சும், எதை கண்டும் பயம் கொள்ளாத கண்களும் அவனுக்கு மிகவும் பிடிக்கும். வெளியே கஞ்சம் என்று அவளை திட்டினாலும் அதற்கான காரணம் சத்யா மூலம் அறிந்தவன் அதையும் ரசிக்கவே செய்தான். ஆனால் வெளிக்காட்டமாட்டான். அவளை சீண்டிக் கோபப்பட வைப்பதில் அலாதி இன்பம் அவனுக்கு.

வெளி வந்ததும் நேரமானதால் மது கிளம்பினாள். நித்தியை வீட்டில் விட்டுவிட்டு சத்யா உதய் இருவரும் வேலையை முடித்துவிட்டு வந்தனர்.

உதய் வாசலில் நின்று ஒரு நொடி யோசிக்க, சத்யா பார்த்த பார்வையில் தன் சிந்தனையை மாற்றிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

'இவன் ஜென்மத்துக்கும் இந்த வீட்டு பக்கம் வரமாட்டான்னு பார்த்தால் அதுக்குள்ளே வந்து நிக்குறானே' என நினைத்தபடி ஹாலில் அவனை முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார் ராஜம்மாள்.

"ஹாய் ஓல்ட் லேடி! எப்படி இருக்கீங்க? இவனுக்கு எல்லாம் சூடு சொரணைய்யே இல்லையானு தானே நினைக்குறீங்க? சத்தியாமா எனக்கு அதெல்லாம் இல்லை பா!" என்றவன் அவர் பதில் பேசும் முன் சமையல் அறைக்குள் சென்றான். சத்யா எதுவும் பேசாமல் தன் அறைக்கு சென்றான்.

சமையல் அறையில் தன் கண்ணை பின் இருந்து மூடி இருப்பது யார் என்று அறிய அந்த கைகளை தொட்டார் மஞ்சு. உடனே தெரிந்து கொண்டார் அது தன் வளர்ப்பு மகன் என்று. எதுவும் பேசாமல் நிற்க, அவர் கண்களில் கண்ணீர் வந்து அவன் கையை நனைத்ததும்,

"ஐயோ மஞ்சும்மா ஏன் அழுறீங்க? நான் வந்தது பிடிக்கலையா?" என்று கேட்க, அவனை செல்லமாக அடித்தவர்,

"ஏன்டா இப்படி பண்ணின? யாரோ எதுவோ சொன்னா, என்னை மறந்துட்டு நீயும் உன் அம்மாவும் என்னை விட்டுட்டு பொய்டுவீங்கல்ல?" என்று அழுதார்.

"சாரி மஞ்சும்மா! இனி எங்கேயும் போக மாட்டோம். அம்மா நாளைக்கு உங்களை கோவிலுக்கு வர சொன்னாங்க. அவங்ககிட்ட பஞ்சாயத்து வச்சிக்கோங்க. என்னை இப்போ மன்னிச்சிடுங்க ப்ளீஸ்" என்று கெஞ்ச அவரும் கொஞ்சிக் கொண்டார்.

மஞ்சுவையும் அவரின் வீட்டார்களையும் ராஜம்மாளிற்கு எப்போதுமே பிடிக்காது. குணசேகரனை எதிர்த்து எதுவும் பேச முடியாமல் அமைதியாக இருந்தாலும் அவர் இல்லாத நேரம் எதாவது பேசி அவர்களை காயப்படுத்துவார். நித்தியும் குணசேகரனை போலவே அதட்டி அவரை அந்த இடத்தில் இருந்து கிளப்பிவிடுவாள்.

"வந்ததும் என் அத்தையை அழ வச்சிட்டல்ல?" என்ற குரலில் மஞ்சுவும் உதயும் திரும்ப, நித்தி அவனை முறைத்துக் கொண்டு நின்றாள்.

அவளை பார்த்து சிரித்த மஞ்சு, "சத்யா நேத்து உதய்யை பார்க்க போறேன்னு சொல்லும் போதே தெரியும். உன்னை இங்க எப்படியும் அவன் கூட்டிட்டு வந்துடுவான்னு. அதான் உனக்கு பிடிச்ச சாப்பாடு எல்லாம் செஞ்சு வச்சிருக்கேன். போய் உக்காரு எடுத்துட்டு வரேன்" என்றார் உதயிடம்.

"அத்தை எனக்கும் பசிக்குது" என்றவளிடம், "எல்லார்க்கும் சேர்த்தே எடுத்துட்டு வரேன். நீ போய் சத்யாவை சாப்பிட கூட்டிட்டு வா" என்றார்.

கூப்பிடும் முன் அங்கு ஆஜர் ஆனான் சத்யா. அனைவரும் சாப்பிட அமர, குணசேகரன் இல்லை என்ற தைரியத்தில், "யார் வீட்டு சொத்துல இப்படி கண்டவனுக்கு..." என்று ராஜம்மாள் தொடங்கவும் அவசரமாக மாடியில் இருந்து பத்மா இறங்க, அதற்குள்

"ஏய்ய்ய் கிழவி! ஏதாச்சும் பேசி என்கிட்ட வாங்கி கட்டிக்காதே! ஏற்கனவே உன்மேல செம காண்டுல இருக்கேன். பேசாமல் போய்டு" என்று நித்தி கூற,

"நான் ஏண்டீ போகணும். வாசல்ல நின்னு சாப்பிட வேண்டியவன் எல்லாம் வீட்டுக்குள்ளே இருந்து சாப்பிடும் போது" என்று அவர் உதயை பார்க்க, அவர் இப்படித்தான் என்று தெரிந்தாலும் அவமானமாக உணர்ந்தான் உதய்.

தொடரும்..
 
  • Like
Reactions: Lakshmi murugan

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
வயசானா இந்த பாட்டிக்கு
வாய் என்ன தேள் கொடுக்கா.....
வரம்பு மீறி பேசுது.....
😡😡😡🤬🤬🤬🤬
 
  • Sad
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
வயசானா இந்த பாட்டிக்கு
வாய் என்ன தேள் கொடுக்கா.....
வரம்பு மீறி பேசுது.....
😡😡😡🤬🤬🤬🤬
நசுக்கி தூக்கி போடுடலாம்