• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் செய்யடா காந்தர்வா - 10

ஹரிணி அரவிந்தன்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 5, 2023
25
28
13
Manalmedu
"ருத்ரா…வா போகலாம்!! மழை வர மாதிரி இருக்கு…",


தேஜஸ் அவளின் பதிலை எதிர்பார்க்காமல் அவளைப் பிடித்து வேக வேகமாக இழுத்துக் கொண்டு நடந்தான்.


"அந்தப் பூவையாவது பறித்துக் கொண்டு வரேனே தேஜஸ்?",


ஆருத்ராவின் வேண்டுக் கோளை கண்டுக் கொள்ளாது நடந்தான் தேஜஸ்.


"இங்கே இன்னும் கொஞ்ச நேரத்தில் மழை வர வாய்ப்பு இருக்கு..அது வந்தால் நாம வந்தப் பாதை மறந்து விடும் ருத்ரா..",


என்ற அவனின் எச்சரிக்கையில் அவள் அவனோடு அந்த பூக்கள் நிறைந்த பகுதியை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.


"தேஜஸ்…இந்த நாளை என்னால் என் வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாது…,இங்கப் பாரேன், இப்போ உன் மேல் வர அந்த ஸ்மெல் இப்போ என் மேலேயும் வர ஆரம்பித்துட்டு…",


என்றவள் அவனை நெருங்கி வாசம் பிடித்து விட்டு தன் மேல் வாசம் பிடித்து விட்டு சிரிக்க, அவளையே ரசித்துப் பார்த்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான் அவன்.


"இந்த இடத்தின் பெயர் குத்ரேமுக், குதிரை முகத்தைப் போலவே இந்த முகடு இருப்பதால் இதை இப்படி சொல்லுவாங்க..",


"தேஜஸ்…..!!!!!",


அவன் சொல்லிக் கொண்டு இருக்க
அவள் அந்தப் பாறையின் மேல் நின்று
அவனின் பெயர் சொல்லி அழைத்து கத்தினாள். அதை அவன் ரசித்து சிரித்தான். அவளோ அவள் பெயரை அதுப் போல் கத்த சொன்னாள்..அவனோ முடியாது என்று சிரித்துக் கொண்டே மறுத்தான். அவள் வற்புறுத்தவே அவன் அவளின் பெயரை சொல்லிக் கூக்குரல் இட்டான்.


"ஆருத்ரா…..!!!!!!",


அவன் அழைத்தது நாலாப் பக்கமும் யட்சன் குரல் போல் மீண்டும் மீண்டும்
ஒலித்துக் கொண்டே இருக்க, அவள் ஆச்சிரியப்பட்டு அவனைப் பார்த்தாள்.


"இது என்ன நீ கூப்பிடும் போது மட்டும் இப்படி எதிரொலிக்குது?",


அவள் ஆச்சிரியப்பட்டு வினவ,


"இதற்கு பதில் நான் சொன்னால் நீ என்னோடு சகஜமாக பேசுவியா? பெண்ணே!!!"


அவன் மனதில் கேட்டுக் கொண்டு அப்படியே நின்றான். அவளோ உற்சாகமாக ஓடினாள்; தாவினாள்; மரங்களில் இருந்து பூக்களைப் பறித்து அவன் மேல் போட்டாள், அவன் கோட்டில் ஸ்டைலாக மாட்டி இருந்த கூலிங் கிளாசை எடுத்து தான் அணிந்துக் கொண்டு அவனைப் போலவே பாவனை செய்து பேசி சிரித்தாள்.


ஒரு வழியாக அவளுடன் தன் அரண்மனை போன்ற மாளிகைக்கு சென்று அவளுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தான்.


"இப்படிலாம் நான் என்னை மறந்து சந்தோஷமா இருந்தே இல்லை..தேஜஸ்..!!! அங்கே நான் அவங்களைப் பற்றி உண்மையை தெரிந்துக் கொண்டப் பின், அத்தை என்னை எங்கெல்லாம் தெரியுமா சூடு போட்டாங்க..கணவன் மட்டும் பார்க்க கூடிய பகுதிகள் அது..அதிலும் வெளியே எங்காவது சூடு போட்டால் தழும்பு தெரிந்து விடும்னு…ப்பா!! அதை எல்லாம் நினைத்துப் பார்க்கவே விரும்பல…இங்கே வந்து தான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தேஜஸ்…அதுவும் உன்னால்…",


அவள் சொல்ல, அவன் மனதில் அவளை செண்பக வள்ளியும் கல்யாணமும் நடத்திய விதங்கள் படமாக ஓடியதில்,அதை பார்த்துக் கொண்டு இருந்தவன் கண்கள் கோபத்தில் சிவந்தது.


"எனக்கு தூக்கம் வருது தேஜஸ்…",


கொட்டாவி விட்டுக் கொண்டே அவள் சொல்ல, அவன் புன்னகைத்துக் கொண்டே எழுந்தவன் சட்டென்று நினைவு வந்தவன் சொன்னான்.


"காலையில் நான் வர லேட்டாகும்…. தும்பு உன்னை அழைக்க வருவார்…"


"சீக்கிரமா வர முயற்சி பண்ணு தேஜஸ்..இங்கே நீ இல்லனா எனக்கு தான் பைத்தியம் பிடித்து விடும்…",


என்றவள் கண்கள் அவளை அறியாது தவிப்பைக் காட்ட, அதை ரசித்துக் கொண்டே அவன் சொன்னான்.


" சீக்கிரம் வந்து விடுவேன்…குட் நைட்…"


அவளுக்கு போர்வை போர்த்தி விட்டு அவன் நகர, எதையோ நினைத்துக் கொண்டு அவன் முகத்தையேப் பார்த்துக் கொண்டு இருந்த அவளின் விழிகள் சொக்க ஆரம்பித்து விட, அவள் உறங்க ஆரம்பிக்க அவனோ அதை உணர்ந்து நகர்ந்தான். அவன் முகம் இறுகியது. அவன் அந்த அறையை விட்டு வெளியே வந்ததும் அவனின் தோற்றம் வழக்கமான கந்தர்வ தோற்றத்திற்கு மாறியது. அவன் அப்படியே காற்றில் கலந்து மறைந்தான்.


"தேஜஸ்….!! நீ இப்படி செய்யக் கூடாது…!! கேவலம் ஒரு மானுட பெண்ணுக்காக இப்படி செய்து நீ தண்டனையை பெறாதே….நான் உன்னை கந்தர்வ லோகத்தில் இருந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கிறேன்…",


அந்த நடுநிசி இரவில் வேக வேகமாக காற்றில் முடி பறக்க கோபத்தோடு நடந்துக் கொண்டு இருந்த தேஜஸ் காதில் அந்தக் குரல் விழுந்துக் கொண்டு தான் இருந்தது. ஆனாலும் அவன் அதைப் பொருட்படுத்தாது. நடந்தான். ஒருவழியாக திங்கள் நாதர் கோயிலுக்கு அவன் வந்தப் போது அவன் வேகம் மட்டுப் பட்டது. கருவறையில் ஜொலித்துக் கொண்டு இருந்த ஈஸ்வரனைப் பார்த்ததும் அப்படியே அமர்ந்தான். அப்படி அவன் சம்மணமிட்டு அமர்ந்ததும் அதற்காகவே காத்து இருந்ததுப் போல் ஒரு வீணை அவன் மடியில் தோன்றியது.


"வேண்டாம்….வேண்டாம்!! தேஜஸ்..நீ தப்பு செய்துக் கொண்டு இருக்கிறாய்
..அதை மீட்டாதே…!! அவள் ரத்தமும் சதையும் உள்ள ஒரு மானுட பெண்! அவ்வளவு தான்..",


இம்முறை எச்சரிப்புக் குரல் இன்றி நேரடியாக அவன் முன் தோன்றி விட்டார் அவனது குரு பத்ரா.


"ஆனால் அவள் எனக்கு உயிர்…",


என்றவன் கண் மூடி வீணையை மீட்ட ஆரம்பித்து இனிய கீதம் பாட ஆரம்பித்து விட்டான்.


"இதற்கு உனக்கு தண்டனை காத்துக் கொண்டு இருக்கிறது தேஜஸ்….",


என்ற பத்ரா வருத்தம் நிரம்பிய முகத்தோடு மறைந்து விட்டார். அதைக் கண்டுக் கொள்ளாது தேஜஸ் அந்த சுகமான ராகத்தை பாடி முடித்தப் போது அங்கே கருவறையில் இருந்த திங்கள் நாதர் தலையில் வைத்து இருந்த பூ ஒன்று கீழே விழுந்து இருந்தது. அதைப் பார்த்தவன் முகத்தில் புன்னகையுடன் அந்த சிக்மகளூர் வனப்பகுதியின் எல்லையில் நின்றுக் கொண்டு இருந்தான். அவன் மனதில் மும்பையில் உள்ள ஆருத்ராவின் பங்களா தோன்றியது. அடுத்த நொடி ஆருத்ராவின் தோற்றத்துக்கு மாறியவன், மும்பையில் உள்ள அவள் பங்களாவின் வாசலில் நின்றுக் கொண்டு இருந்தான்.


"தேஜஸ்..!!! அங்கே நான் அவங்களைப் பற்றி உண்மையை தெரிந்துக் கொண்டப் பின், அத்தை என்னை எங்கெல்லாம் தெரியுமா சூடு போட்டாங்க..கணவன் மட்டும் பார்க்க கூடிய பகுதிகள் அது..அதிலும் வெளியே எங்காவது சூடு போட்டால் தழும்பு தெரிந்து விடும்னு…ப்பா!! அதை எல்லாம் நினைத்துப் பார்க்கவே விரும்பல…",


என்ற ஆருத்ராவின் குரல் அவன் மனதில் ஒலித்ததில், அவன் முகம் இறுகியது. அடுத்த நொடி அந்த பங்களாவின் உள்ளே படுக்கையறையில் உறங்கிக் கொண்டிருந்த செண்பக வள்ளி, கல்யாணம் முன் ஆருத்ரா தோற்றத்தில் முகத்தில் கோபத்தோடு நின்றுக் கொண்டு இருந்தான் தேஜஸ்.


- தொடரும்

Screenshot_20230105-192132_Gallery.jpg
 
  • Love
Reactions: Joss uby