• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் - 04

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
854
378
93
Tirupur

அத்தியாயம் - 4



4
“கண்ணா.. நல்லா யோசிச்சு தானே இந்த முடிவுக்கு வந்த..” என்று நூறாவது முறையாகக் கேட்டிருப்பார், பவித்ரா.
“ம்மா.. சீரியஸ்லி. ஒரு விஷயம் சொல்லு, நான் யோசிக்காம எந்த வேலையும் செய்வேன்னு உனக்குத் தோனுதா.. But Im very serious.. கண்டிப்பா போறேன்.” என்ற மகனிடம்,

“என்ன இது அபசகுணமா, போறேன் சொல்லாத, போயிட்டு வரேன் சொல்லு!” எனக் கடிந்தவர், “இல்ல கண்ணா ஆனாலும் அப்பா..” என இழுத்த அன்னையின் அருகில் அமர்ந்தான் ஆதித்யன்.

“அப்பா.. அப்பாவுக்கு என்ன.? அதெல்லாம் ஓகே சொல்லுவார். ஆக்சுவலி ஃபர்ஸ்ட் என் வேலையா போகனும்னு தான் நினைச்சேன்.

ஆனா, அன்னைக்கு நீ அப்செட்டா இருந்த பாரு, அப்போ தான் முடிவு பண்ணேன், அது மட்டும் என் வேலை இல்லை. இதுவும் என் வேலைதான்னு. உன்னோட நிம்மதியும், சந்தோசமும் எனக்கு எவ்வளவு முக்கியம்னு உனக்குத் தெரியுதாம்மா..? நீ எங்க முன்னாடி என்ன தான் சிரிச்சுப் பேசி சந்தோசமா இருந்தாலும், உள்ளுக்குள்ள அழறது எங்களுக்குத் தெரியாம இல்லை. அதை சரி செய்ய வேண்டியது மகனா என்னோட கடமையும் கூட, சரி செய்வேன். நம்புமா.? இதுக்காகன்னு நான் போகல, என்னோட வேலைக்காகப் போறேன். அந்த வேலையோட சேர்ந்து இந்த வேலையும் பார்க்குறேன் அவ்வளவு தான். நீ ஏன் இவ்வளவு டென்சன் ஆகுற.. விடு பார்த்துக்கலாம்..” எனத் தாயைத் தேற்றினான், ஆதி.

“அப்பா.. அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காது கண்ணா.. உன்னால இன்னும் பிரச்சனை ஆகிடப் போகுது. அங்க எல்லாரும் எங்க மேல ரொம்ப கோபமா இருப்பாங்க, அந்தக் கோபத்தை உன் மேல தான் காட்டுவாங்க. அது அப்பாவுக்கு சுத்தமாப் பிடிக்காது. அப்புறம் மறுபடியும் பிரச்சனையாகும். அதனால தான் சொல்றேன்..” என மேலும் தயங்கிய தாயைப் பார்த்து கனிவாகச் சிரித்தான் ஆதித்யன்.

“ம்மா.. உங்களோட பார்வையில, ஏன் என்னோட பார்வையில கூட நீங்க செஞ்சது தப்பு இல்லை தான். ஆனா பெத்து வளர்த்தவங்களுக்கு அப்படி இல்லை. ஆசையும் பாசமுமா வளர்த்தவங்களுக்கு, கல்யாணமும் செஞ்சு வைக்கத் தெரியாதா என்ன.? அப்படி உனக்கு பிடிக்காத மாப்பிள்ளையவா உனக்கு கட்டி வைக்கப் போறாங்க. எனக்கு அவங்களோட பார்வையில தப்பு இல்லன்னு தான் தோனுது.”

“நீங்க அங்க இருந்து வந்த பிறகு, இப்போ வரைக்கும் அங்க என்ன சூழ்நிலை, யாருக்கு என்ன பிரச்சனைன்னு போய் பார்க்கக் கூட இல்லை. ஏன் ஆரம்பத்துல நினைக்கக் கூட இல்லை. பயம்னு மட்டும் சொல்லாத, இது சுயநலம். வாழ்க்கையில தோத்துடுவோம்னு பயம், ஜெயிச்சிட்டு தான் அவங்க முன்னாடி போய் நிக்கனும்னு நினைச்சீங்க.”

“அது தப்பு இல்லை. காதலிச்சு கல்யாணம் செய்ற எல்லாருக்கும் முன்னாடி இருக்குற சவால் அது. ஆனா.. ஜெய்ச்ச பிறகும் ஏன் போகல, இது குற்ற உணர்ச்சி, இவ்வளவு நாள் போகாம விட்டுட்டோமேன்னு உனக்கு குற்ற உணர்ச்சி. இன்னும் அப்படியே இருந்தா, உங்களை மாதிரி ஒரு சுயநலம் பிடிச்ச ஆட்கள் யாரும் இல்லை.” எனக் கோபமாகப் பேச,

மகன் பேச்சில் இருந்த உண்மை உறைக்க, அமைதியாக இருந்தார், பவித்ரா.

தாயின் அமைதியும் அவனைச் சுட, “ம்மா.. சாரிம்மா, நான் உன்னைத் தப்பு சொல்லல, பொதுவா சொல்றேன். உன்னை வருத்தப்படுத்த சொல்லல, தப்பு செய்துட்டு அதுக்கு பயந்து ஒளிஞ்சிட்டு இருக்கக் கூடாது. தப்பு செய்யும் போது இருக்குற தைரியம், அதை எதிர் கொள்ளும் போதும் இருக்கனும். நான் உனக்கு சொல்லக் கூடாது தான். புரியுது. ஒரு ஃப்லோல வந்துடுச்சு, சாரிம்மா..” என்ற மகனின் தலையை வருடியவர்,

“ஐ கேன் அன்டர்ஸ்டேன்ட், கண்ணா..” எனப் பெருமூச்சு விட்டவர், மகன் வருத்தப் படுகிறான் என்பது புரிந்து, பேச்சை மாற்றும் வகையில் “கடைசில உன் அப்பாவை விரும்பினதையும், மேரேஜ் செய்ததையும் தப்புன்னு சொல்லிட்ட, நீ சொன்னது மட்டும் உன் அப்பாவுக்குத் தெரிஞ்சா..” என்றவர் கண்ணில் சிரிப்புடன் மகனைப் பார்க்க,

“ம்மா.. நோ நோ.. உன்கிட்ட இப்படி எல்லாம் பேசினேன்னு சொல்லிடாத, பிறகு உன் லவ் ஸ்டோரியை மறுபடியும் சொல்ல ஆரம்பிச்சி, என் காதுல ரத்தம் வர வச்சிடுவார்..” என ஆதி அலற, “போக்கிரி..” என அவன் தலையில் தட்டினார்.

“என்ன.. நான் இல்லாத போதே உங்க மாநாடு நடங்குது, வாட் ஹேப்பன்ட், சம்திங்க் ராங்க்..” என்றபடியே ஆதியின் அறைக்குள் நுழைந்தான் ஆதன்.

“புகழ் இல்லாம கூட குக் வித் கோமாளி ஓடும், பட் நீ இல்லாம இந்த வீட்டுல ஒன்னும் நடக்காது..” எனக் கிண்டலடித்த பவித்ராவை,

“ம்மா… இதுக்குத்தான் உன்னைப் பார்க்காத சொன்னேன், பார்த்தியா எனக்கே கௌன்டர் கொடுக்குற..” எனப் பதில் பேசியவனிடம்,

“ரியல்லி ஸ்ட்ரெஸ் பஸ்டர் ப்ரோக்ராம் கண்ணா.. எவ்வளவு சோகமா இருந்தாலும் ஒரு சீரிஸ் பார்த்தா போதும், வருத்தமெல்லாம் போய் வாய்விட்டு சிரிக்க வச்சுடுறாங்க..” என்ற தாயிடம்,

“ம்மா போதும், போதும் விட்டா குக் வித் கோமாளி ப்ரோக்ராமுக்கு ரசிகர் மன்றம் ஆரம்பிச்சு, அதுக்கு தலைவியே ஆகிடுவ போல..” எனக் கலாய்க்க ஆரம்பித்தான்.

“போடா திருட்டுப்பயலே..” என அவனைத் திட்டிவிட்டு,

“ஆதி வா சாப்பிட்டு வந்து எடுத்து வப்பியாம்..” என்ற பவித்ராவிடம்,

“ம்மா நானும் இங்க தான் இருக்கேன்” என்ற சின்ன மகனை,

“நீ இன்னுமா கொட்டிக்காம இருக்க” என்றவர் அவனைக் கணக்கிலே எடுத்துக் கொள்ளாமல் நகர்ந்து விட்டார்.

“ம்மா.. நீ என்னை ரொம்ப இன்சல்ட் பன்ற..” என்றவன், அண்ணனிடம் திரும்பி “என்ன ப்ரோ.. நான் வரும் போது பவி டார்லிங் ஓவர் சென்டியா உன்கிட்ட பேசிட்டு இருந்தாங்க..”

“அடேய் அடங்கவே மாட்டியா.. அவங்க டார்லிங் இதைக் கேட்கனும்.. உன்னை வச்சு செய்வார் பார்த்துக்கோ.” என தம்பியை மிரட்ட,

“அது எப்பவும் நடக்குறது தானே ப்ரோ, சொல்லு. என்னவாம் அம்மாவுக்கு.. ஏன் கொஞ்ச நாளா ரொம்ப டல்லடிக்குறாங்க..” எனவும்,

“வழக்கம் போல தான்டா, வீட்டு ஞாபகம், அவங்க அம்மாவைப் பார்க்கனும் போல இருக்காம். அப்பாக்கிட்ட சொல்ல பயம், அது தான் மூடவுட், இப்போ நான் தேனி போறேன்னு சொன்னதும் பயப்படுறாங்க. அவங்க என்னை எதுவும் செய்து விடுவாங்களோன்னு பயம் போல..” என்றான் ஆதித்யன்.

“ம்ம்.. இதுக்கு ஒரு முடிவு கட்டனும் ப்ரோ. நமக்கும் சொந்தம்னு யாரும் இல்லை. இல்லாம இருக்கிறது வேற, இருந்தும் இல்லாம இருக்குறது வேற, அதோட தப்பும் நம்ம பக்கம் இருக்கும் போது, அதற்கான முயற்சிகளும் நாம தானே எடுக்கனும். சீக்கிரம் சரி செய்யனும் ப்ரோ.”

“எஸ் ஆது.. எனக்கு என்னமோ அவங்க கோபம் எல்லாம் போயிருக்கும்னு தான் தோனுது. அம்மாவை மன்னிச்சு, ஏத்துக்குற அளவுக்கு வந்துருப்பாங்கன்னு தான் நினைக்கிறேன். எதுக்கும் ஒன்ஸ் போயிட்டு வந்துடுவோம். நம்ம நினைச்சது சரின்னா, ஊருக்குப் போய் எல்லாரையும் பார்த்துட்டு வரலாம். அப்போ தான், அம்மாவும் நார்மல் ஆவாங்க.”

“சரி, நீ போயிட்டு.. அங்க என்ன சிச்சுவேஷன் பார்த்துட்டு சொல்லு, வீக்கென்ட் நானும் ஜாயின் பன்றேன். என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்,” என்ற இளவளைப் பெருமையாகப் பார்த்தவன்,

“ஓகேடா.. கண்டிப்பா. இந்தப் பிரச்சனையை நாம ஒரு முடிவுக்கு கொண்டு வரோம், இப்போ வா. அம்மா திரும்பவும் தேடி வந்துடப் போறாங்க.” என்று தம்பியையும் அழைத்துக் கொண்டு நகர்ந்தான்.

ஆதித்யன் வேளாண் பயிர் பாதுகாப்புப் பிரிவில் முதுநிலை ஆய்வாளர். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளிற்கும் அவன் தேவை மிகவும் தேவை. ஒவ்வொரு பயிரும் அதற்கு ஏற்படும் பிரச்சனைகள், தேவையான பூச்சிக்கொல்லி மருந்துகள், விளை நிலங்களின் தரம் என அனைத்தையும் அவன் மேற்பார்வையில் தான் நடைபெறும்.

பல புது வகையான விவாசயத்தைக் கண்டு பிடித்து, அதற்காக அப்துல் கலாம் ஐயா அவர்களின் கையால் விருதும், பாரிசில் நடைபெற்ற இளம் விஞ்ஞானி விருதும் பெற்றிருக்கிறான். இப்போது தேனி மாவட்டத்தில் உள்ள வேளாண் கல்லூரியில் அவனை அழைத்திருக்கிறார்கள். ஏற்கனவே சில முறை அங்கே சென்றிருக்கிறான்.

அப்போதெல்லாம் தேனிக்கு என்று சொல்லிக் கொண்டு சென்றதில்லை, பவித்ரா பயந்து விடுவார் என்ற எண்ணம். ஆனால் இந்த முறை, தாயின் கண்ணீரைத் துடைக்க வேண்டும் என்ற உந்துதல், ஏன் வெறியே என்று கூடச் சொல்லலாம். இது தெரிந்தால் முகுந்தன் வேண்டாம் என்று சொல்லுவார். ஆனால் அவரிடம் சொல்லிப் புரிய வைத்து, கிளம்ப வேண்டும் என்று முடிவே செய்து விட்டான்.

அதனால் தான் வீட்டில் எல்லோரிடமும் சொன்னான். ஆதி நினைத்தைப் போல பவித்ரா மிகவும் பயந்தார். ஆனால் முகுந்தனோ அவன் நினைப்பிற்கு எதிர் பதமாக “ஓகே.. கேரியான்..” என்றவர், அவனது பயணத்தைப் பற்றித் தெரிந்து கொண்டார் அவ்வளவே.

தந்தையின் நடவடிக்கை ஒரு பக்கம் ஆச்சரியமாகவும், மறுபக்கம் ஏமாற்றமாகவும் இருந்தது. ஆனால் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் மகனுக்குத் தேவையானதை செய்து கொடுக்கத்தான் செய்தார்.

கணவரின் செயல் பவித்ராவிற்கு கோபத்தைத் தர, “ஏன் இப்படி இருக்கீங்க, அவனை போக வேண்டாம்னு சொல்லுங்க, எனக்குப் பயமா இருக்கு, அங்க என்ன நடந்தாலும் நமக்குத் தெரியாது. ப்ளீஸ் சொல்லுங்க..” எனவும்,

“பவி.. போதும். பயம் பயம்னு நம்ம வாழ்க்கை முடிஞ்சது போதும். அவன் ஏதோ ஒரு முடிவோட தான் கிளம்பியிருக்கான். நம்மக்கிட்ட சொல்லல, அவ்வளவுதான். சொல்ல நினைச்சா கண்டிப்பா சொல்லியிருப்பான். அவன் என்ன நினைக்கிறானோ செஞ்சிட்டு வரட்டும், ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டைப் போட வேண்டாம். போய் பார்த்துட்டு வரட்டும்..”

என்று முடிவாகச் சொல்லிவிட்டார்.

ஏர்போர்ட் வரை வந்த ஆதன், “ப்ரோ.. தேனில என்னோட ஃப்ரன்ட் ஒருத்தன்கிட்ட வீடு ஒன்னு பார்க்கச் சொன்னேன், இனி நமக்கு தேவைப்படும்னு நினைக்கிறேன். அவன் நம்பர் உனக்கு மெசேஜ் பன்றேன். உனக்கு டைம் கிடைக்கும் போது அவனை மீட் பண்ணிட்டு வா..” என்றதும்,

ஆதித்யனின் முகத்தில் ஒரு வசீகரப் புன்னகை அழகாக வந்தமர்ந்தது. அதுவே சொன்னது ‘நான் உனக்கு அண்ணன்டா என்று.’

ஆதியின் சிரிப்பைப் பார்த்த ஆதன்...

“ஓ மை காட்.. ப்ரோ யூ ஆர் சான்ஸ்லெஸ், சான்ஸ்லெஸ்ஸ் ப்ரோ.. சூப்பர்.. எப்போ வாங்கின, எப்படி.. அப்பாவுக்குத் தெரியுமா?” எனக் கேள்விகளாய் அடுக்க,

“கூல்.. கூல் மேன்.. த்ரி டேய்ஸ் ஆச்சு. இந்த மந்த் என்ட் அப்பா அம்மா வெட்டிங்க் அன்னிவெர்சரி வருது தானே, அதுக்குள்ள ப்ராப்ளம்ஸ் எல்லாம் ஓரளவுக்கு சரி செஞ்சு, அந்தப் புது வீட்டை கிஃப்ட் பண்ணலாம்னு இருக்கேன். உனக்கும் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு இருந்தேன். பட்..” எனச் சிரிக்க,

“வாவ் மேன்.. வாட் எ கிரேட் ஐடியா.. சூப்பர் ப்ரோ நீ கலக்கு, அப்போ நான் கண்டிப்பா வீக்கென்ட் வரேன், அங்க ஜாலி பண்ணுவோம்..” என்று குதுகலமான தம்பியை அணைத்து விடை பெற்றவன், விமானத்தை நோக்கி நடந்தான்.

இதோ இன்று இரண்டு மணிக்கு மதுரை ப்ளைட். அங்கிருந்து தேனி பயணம்.. இதற்கு முந்தைய பயணங்களில் இல்லாத ஒரு பரவசம் இந்தப் பயணத்தில் ஆதித்யனுக்கு உண்டானது.

பாவையவளைப் பார்க்கப் போகும் பரவசமா என்ன.? அடுத்த மூன்று மணி நேரத்தில் மதுரைக்கு வந்தவன், அங்கிருந்து ஒரு கால் டேக்சி வைத்து தேனியில், அவன் புக் செய்திருந்த ஹோட்டல் அறைக்கு வந்து சேர மாலை ஐந்தாகியது.

அறைக்குள் வந்ததும் வீட்டுக்கும், தன் வேலை சார்ந்த அதிகாரி நந்தனுக்கும் அழைத்து, வந்து விட்டதைக் கூறியவன், ஒரு குளியலைப் போட்டுவிட்டு, அடுத்து என்ன செய்யலாம் என யோசிக்க ஆரம்பித்தான்.

அவனுக்கு கிளம்புவதற்கு முன் முகுந்தன் பேசியது மனக்கண்ணில் வந்து போனது. அப்பாவும் பாவம் தான். அவரோட பார்வையில அவரோட எண்ணங்கள் சரிதான்.

பாண்டியன் மாமா மட்டும் இறங்கிவிட்டால் அனைத்தும் சரியாகி விடும். அதற்கான திட்டங்களை மனதில் வகுக்க ஆரம்பித்தான், ஆரணியின் ஆதித்யன்.

சில கோபங்கள்

சில வெறுப்புகள்

சில எரிச்சல்கள்

சிறிது நேர விலகல்கள் எல்லாம்

இயலாமையின் வெளிப்பாடு.

ஏதொவொரு எதிர்பார்ப்பு

எதிர்பாராமல் நடக்கும் எதிர்வினை.

எதுவும் உன் மீதல்ல.

கூர்ந்து கவனி, ‘உன் மீது அல்ல'.

தூய நேசங்கொண்ட

உன் காதலின் மீது அல்ல..

என் மீது

என் ஆசை மீது

என் சுயநலம் மீது தான்

என் கோவமும் வெறுப்புமே தவிர

உன் மீது அல்லவே அல்ல..

எதிர்பாராவிதமாக

நான் கூறிய சொற்கள்

உன்னை காயப்படுத்தியது

உண்மைதான்.

‘இல்லாமையின்' இயலாமையால்

வாய் தவறி வந்தவை அது.

எதுவும் என் சொற்கள் அல்ல..

என் வழி வந்த உளறல்கள்.

மனித மனம் எதுவும்

ஒரே சீரான நிலையில் இருப்பதில்லை.

எப்போது வெகுண்டெழும்

எப்போது அமைதியடையும்

என்று எவருக்கும் இங்கு தெரியாது.

அதற்காக என்னை உடனடியாக

மன்னித்து விடு

என்றெல்லாம் கேட்கவில்லை.

எதற்கும் ஒரு இடைவெளி

தேவைப்படுகின்றது.

சாலையோர வேகத்தடை போல..

மிதமாக செல்வது தான்

இருவருக்கும் நல்லது.

உடனடியாக வந்து சேர்ந்துவிடாதே..

ஓரிரு நாட்கள் எடுத்துக் கொள்.

தவிக்க விடு; பேசாதே

ஏங்க வை; தேட விடு

எனக்கு நானே பேச விடு..

நீ இல்லையென்றால்

நானென்ன ஆவேன்

என்று எண்ண விடு

உடனடி மருந்து தந்து

காயத்தை ஆறப்படுத்தி விடாதே

அழவிடு;

விரல்களை தந்து வருட விட்டு

என் கோபங்களை ஏற்றுக்கொள்ளாதே.

சிறிது காலத்திற்கு தள்ளி நில்

அதுவே எனக்கான தண்டனை..!
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
66
37
18
Tirupur
சூப்பர் 🤩
ஆதி அழகா பவி குடும்பத்தோட மனநிலையை சொல்லிட்டான். கூடவே இவங்க செய்த தவறையும் சுட்டிக் காட்டிட்டான் 👌