காதல் 07
இதோ திருமண நாளும் அழகாய் விடிந்திருந்தது. இப்போதுவரை ரஞ்சிதன் ரஞ்சினியிடம் பேசியிருக்கவில்லை. அதில் அவளுக்கோ ஏக கடுப்பு, தொட்டதுக்கெல்லாம் எண்ணெயில் போட்ட கடுகு போல் வெடித்துக்கொண்டே தான் இருந்தாள்.
சரியாக ரஞ்சிதன் கேட்டுக் கொண்டதற்கிணங்க ரதியும் நரேந்திரனும் அதிகாலையிலேயே மண்டபத்திற்கு வந்திருந்தனர்.
ரதி "நரேன் தம்பிக்கு ஃபோனப் போடு, இந்த கூட்டத்துல எப்படி கண்டு பிடிப்ப" என்க, நரேந்திரனும் ரஞ்சிதனுக்கு அழைத்திருந்தான்.
அடுத்த ஐந்து நிமிடத்தில் ரஞ்சிதன் அங்கே வந்திருந்தவன் "இங்கயே ஏன்மா நின்னுட்டீங்க உள்ள வந்திருக்கலாமே! சரி வாங்க" என்றவன் அவர்களுக்காக ஒத்துக்கப்பட்ட அறையை அவர்களுக்கு காண்பித்தான்.
"கொஞ்சம் இருங்கமா, இதோ
வந்திடுறேன்" என்றவன் வெளியே சென்று, திரும்பி வருகையில் அவன் கையில் ஒரு பை இருந்தது.
"நரேன் இதுல உனக்கும் அம்மாக்கும் டிரஸ் இருக்கு ரெடி ஆகிட்டு வாங்க எல்லாரையும் இன்ட்ரோ பண்ணி வைக்கிறேன்" என்றான்.
ரதியோ "எதுக்குப்பா இதெல்லாம்?" என்க, அவனோ "இன்னைக்கு நான் பண்ணுறதுக்கு எதிர்த்து எதுவும் பேசக்கூடாது நீங்க, எனக்காக என் ஆசைகக்காக வந்த உங்களுக்கு எந்தக் குறையும் வராம பார்த்துக்க வேண்டியது என்னோட பொறுப்பு, சீக்கிரம் ரெடி ஆகுங்க, ஒன்லி டென் மினிட்ஸ் தான் டைம்" என்று புன்னகைத்தபடி வெளியேறியவனின் கண்ணில் ஒரு துளி கண்ணீர் உருண்டோடியது. அதற்கான காரணங்கங்களும் அவனிடம் இருக்கத்தான் செய்தது.
____________________
அங்கே மணமகள் அறையில் அத்தனை அழகாய் அழகுப் பதுமையாய் தயாராகி கண்ணாடி முன்னே அமர்ந்திருந்தாள் ரஞ்சினி.
மணப்பெண்ணுக்குரிய நாணமும் அவளை சூழ்ந்து கொள்ளவே செய்தது.சற்று முன்னர் தான் தாயும் பாட்டியும் அவள் அழகை அத்தனை பெரிதாய் புகழ்ந்து தள்ளி இருக்க, அவள் முகமோ என்றுமில்லா வெட்கம் என்னும் போர்வையை சூடிக்கொண்டது.
தனியே அமர்ந்திருந்த ரஞ்சினியின் அருகில் வந்த அக்ஷயாவோ "ஐயோ இங்க தான, என் அக்கா இருக்குறதா அம்மா சொன்னாங்க. எங்க போய்ட்டா என் அக்கா?" என்று கேட்டு, வேண்டுமென்றே ரஞ்சினியின் அருகில் தேடுவதைப் போல் பாவனை செய்ய, அதில் மேலும் வெட்கம் கொண்ட ரஞ்சினியோ, "அக்ஷு, போதும் கலாய்ச்சது" என்றாள்.
"அடடே! என் ரஞ்சிக்காவா இது? குரல் வேற இவ்வளவு சாஃப்டா இருக்கே!" என்று பொய்யாய் ஆச்சரியம் காட்டியவள், "இந்த குரல்ல பேசுனா மாமா அடுத்த செக்கன்ட் பிளாட் தான் போ" என்று விடாமல் கேலி செய்துகொண்டே இருந்தாள்.
ரஞ்சிதனை எடுத்ததும் தன்னால் மீண்டும் வெட்கம் வந்து முகத்தை சூழ்ந்து கொள்ள, அதனை பார்த்தும் சும்மா இருப்பவளா அக்ஷயா. அதற்கும் ஒரு ரகளையை கூட்டி இருக்க, பொறுமை பறிபோனதில் ரஞ்சினியோ தங்கையை வெளியே தள்ளி கதவை அடைத்திருந்தாள்.
மீண்டும் கண்ணாடி முன்னே வந்தமர்ந்தவளுக்கு அவள் முகம் அவளுக்கே அத்தனை அழகாய் தெரிவதாய் ஒரு விம்பம்.
தனது தொலைபேசியை எழுதவள் தன்னை ஒரு சுயப்படம் ஒன்றை எடுத்துக்கொண்டவளோ அதனை அப்படியே அவன் எண்ணுக்கு அனுப்பி வைத்தாள் கூடவே "மீள முடியாம பாத்துக்குவேன்னு சொன்னா மட்டும் பத்தாது மிஸ்டர் மனிதகுல மாணிக்கம். கொஞ்சமாச்சும் பொண்டாட்டிய கவனிக்கணும். 'டோன்ட் ஜட்ஜ் தி புக் பை இட்ஸ் கவர்' எங்குறது உங்களுக்கு நல்லாவே பொருந்தும் போல. வாயில மட்டும் தான் ரொமான்ஸ் வருமோ" என்ற குறுஞ்செய்தியையும் சேர்த்து கோபத்தில் அனுப்பி இருந்தாள்.
அனுப்பிய சில வினாடிகளில் பார்க்கப்பட்ட அறிகுறியும் காட்டியது. ஆனால் பதில் வரவில்லை. அதில் வெட்கத்தில் சிவக்க வேண்டிய ரஞ்சினியின் முகம் கோபத்தில் சிவந்தது தான் மிச்சம்.
அதன் மேலும் எங்கே அவளது பொறுமை செல்லுபடியாக, அடுத்த நொடி அவனுக்கு அழைத்துவிட்டாள்.
முதல் ரிங்கிலேயே அத்தனை விரைவாக, அவளது அழைப்பை உயிர்பித்ததிலேயே, அவன் வேண்டுமென்றே தான் செய்கிறான் என்பது அவளுக்குத் தெரிந்தது.
"என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல?" என்று அத்தனை கோபமாக அவள் கேட்க, அந்த பக்கம் இருந்தவனோ புன்னகையுடன் "உன்னத்தான்னு சொன்னா ரொம்ப ட்ராமாட்டிக்கா இருக்குமே வேணும்னா பொண்டாட்டி நினைப்பாவே இருக்குனு சொல்லவா?" என்ற குரலில் தான் எத்தனை சாந்தம்.
அவளுக்கே அந்த குரலில், அத்தனை நேரம் இருந்த அவள் கோபம், அவளை விட்டுக் கலைவதாய் ஒரு உணர்வு.
முயன்று தான் அதனை இழுத்துப் பிடிக்க வேண்டி இருந்தது.
"ஆமாமா, பொண்டாட்டி நினைப்புல தினம் நூறு கால் ஆயிரம் மெசேஜ் எல்லாம் பன்னீங்கல்ல, சோ நீங்க அப்படி சொல்லலாம்" என்றாள் அவள் விடாமல். அத்தனை எளிதில் அவனை விடுவதாகவும் இல்லை.
"ரொம்ப தேடிட்ட போல, தேடலாம் தப்பில்ல, ஆனா நான் பேசினா சிலது உளற வேண்டி வரும், அப்பறம் என் கைக்குள்ள நீ வேணும்னு தோணும். உன்ன என்னவோ எல்லாம் பண்ண தோணும். ரொமான்ஸ் எப்படியெல்லாம் வரும்னு உனக்கே உனக்கா காட்டத் தோணும். இப்படி அந்த அவஸ்த்தை எல்லாம் அனுபவிச்சு ரொம்ப டையட் ஆகிட்டேன் சோ, கடந்த இந்தன நாளும் உன்னைவிட்டு தூரமா இருக்கத் தோணிச்சு.. ரொம்ப பசில இருக்கேன் ஆனாலும் உன்ன திருடி சாப்பிட தோணல, அதனால தான் இந்த கண்ணாம்பூச்சு ஆட்டம், இதோ உன் கூட பேசாம கடந்த ஒவ்வொரு நாளும் எனக்கு ஒவ்வொரு வருசமா தான் ஃபீலாச்சு. நவ் இட்ஸ் ஓவர்டி பொண்டாட்டி, இன்னும் ஒன்லி வன் அவர் தான் அப்பறம், மாமன் கைக்குள்ள காதல் பாடம் படிக்க ரெடியா இருந்துக்கோ" என்றவன் அவள் அடுத்து பேசுவதற்குள் அழைப்பை துண்டித்திருந்தான்.
ரஞ்சினியோ அவன் அழைப்பைத் தூண்டித்தது கூடத் தெரியாமல் அப்படியே காதில் தான் வைத்திருந்தாள். சுயத்துக்கு வரவே சிறிது நேரம் எடுத்திருந்தது.
தன் தொலைபேசியை நெற்றியில் முட்டிக்கொண்டவளோ "ஐயோ, ரொம்ப பேசுறாங்களே, என்னைக்கும் இல்லாத வெட்கம் வேற இன்னைக்கு வந்து தொலையிது. ஏதோ உளறனும் வேற சொன்னாங்களே என்னவா இருக்கும்?" என்று தனக்கு தானே பேசிக்கொண்டு யோசனையில் நின்றவள், கதவு தட்டப்படும் சத்தத்தில் சுயத்துக்கு வந்திருந்தாள்.
____________
அங்கே ரதி நரேன் இருவரின் வருகைக்காகவும் காத்திருந்த, ரஞ்சிதனுக்குத் தான் அவனது ரஞ்சினி அழைத்து பேசியிருந்தாள்.
அழைப்பை துண்டித்து, அவள் அனுப்பிய புகைப்படத்தை பார்வையிட்டவனோ "உனக்கு என்னோட காதல் புரியுமாடி பெப்பர் மின்ட்? பைத்தியக்காரத்தனம்னு ஏதும் நினைச்சிப்பியா? எல்லார்கிட்டயும் பெப்பர் போல காரம் எங்கிட்ட மட்டும் மின்ட் போல கொஞ்சமா ஆள அசரடிக்கிற ஸ்வீட். மொத்தத்துல இந்த பெப்பர் மின்ட் எனக்கே எனக்கு" என்று அவளது புகைப்படத்தை கிள்ளி கொஞ்சக் கொண்டிருக்க, அந்த நேரம் சரியாக நரேனும் ரதியும் அவன் கொடுத்த ஆடையணிந்து, அவனைத் தேடி வந்திருந்தனர்.
அதில் தொலைபேசியை அணைத்து கையில் எடுத்துக்கொண்டவனோ "வாவ் ரொம்ப அழகா இருக்கீங்க ரெண்டு பேரும்" என்றான் புன்னகையுடன்.
அதற்கு அவர்களும் பதிலுக்கு புன்னகைக்க, "ஓகே, ரதிமா எனக்கு நீங்க தான் தாலி எடுத்துக் கொடுக்கணும், மணமேடைய விட்டு எங்கயும் போய்டாதீங்க" என்று சொல்ல, நரேன் ரதி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ரஞ்சிதனோ "என்னாச்சு?" என்று இருவரையும் பார்க்க, ரதியோ "தம்பி அது சரியா வருமாப்பா? பொண்ணு வீட்டு காரங்க ஒத்துப்பாங்களா? ஏதாச்சும் பிரச்சனை வந்துட போகுதுப்பா வேணாமே" என்றார்.
"அதெல்லாம் எதுவுமே ஆகாது ரதிமா, நான் ஏற்கனவே அவங்க கிட்ட பேசிட்டேன். நீங்க எதுவும் யோசிக்க வேண்டாம். என் அம்மா இருந்திருந்தா அவங்க கையாள தான் தாலி எடுத்துக் கொடுத்திருப்பாங்க, இப்போ அவங்க இடத்துல உங்கள வெச்சிருக்கேன்மா எடுத்துக் கொடுக்க மாட்டீங்களா?" என்று ரஞ்சிதன் கேட்க, ரதியும் புன்னகையுடன் தலையசைத்திருந்தார்.
"ஓகே மா வாங்க, பொண்ணு வீட்டுக்காரங்கள இன்ரோ கொடுக்குறேன்" என்று முகத்தில் அத்தனை மகிழ்ச்சியுடன் அழைப்பவனிடம் மறுக்கவா முடியும், நரேனும் ரதியும் அவனை பின் தொடர்ந்தனர். வரப்போகும் அதிர்ச்சி அறியாமல்..
நேரே அவர்களுடன் ஒரு அறைக்குள் செல்ல, அங்கே மனோ ரஞ்சினியின் குடும்ப உறுப்பினர்கள், மனோரஞ்சினி உட்பட ஏழு பேரும் இருந்தனர்.
இவர்கள் உள்ளே நுழைய அவர்களது பார்வையும் இவர்களையே மொய்க்க, முதலில் நரேந்திரன் தான் யாரும் அறியாமல் அக்ஷயாவை பார்த்து கண் சிமிட்ட, அவளோ இவன் எப்படி இங்கு என்ற யோசனையுடன் அவனை பார்த்திருந்தாள்.
நரேந்திரனுக்கு கூட ரஞ்சிதன் திருமணம் செய்யவிருப்பது, அக்ஷயாவின் அக்காவை என்பது நேற்று தான் தெரிய வந்திருந்தது. அதனால் அவளை பார்த்து அவனுக்கு ஒன்று அதிர்ச்சி இருக்கவில்லை..
இவளுக்கு அதிர்ச்சி என்றால், அந்த வீட்டின் மூத்தவர்கள் அத்தனைபேரும் ஏன் ரதியும் கூட அதிர்ச்சியில் தான் நின்றிருந்தார்.
ரதிக்கு தன் குடும்பத்தை பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை அவர்களுக்கும் அப்படியே..
எத்தனை வருடங்களுக்கு பின்னனா சந்திப்பு, ரதிக்கோ குற்றவுணர்வு உயிரை வேரோடு பிடுங்கி எரிவதைப் போல் வலித்தது. செய்தது எத்தனை பெரிய பிழை என்பதைத் தான் அவர் வாழ்க்கை அவருக்கு கற்றுக் கொடுத்திருந்ததே!
கண்களில் இருந்து வெளியே குதிக்க தயாராய் இருந்த கண்ணீர் துளிகளை மிகவும் கடினப்பட்டு உள்ளிழுக்க வேண்டியிருந்தது.
அத்தனை வருட பிரிவின் வலியை வார்த்தையால் கோர்த்து விட முடியவில்லை போல, பேச்சே வரவில்லை..
ரஞ்சிதனோ ரவி வர்மனிடம் "மாமா இவங்க எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க. நான் நேத்தே உங்க கிட்ட சொல்லி இருந்தேனே, அது இவங்க தான். என் அம்மா ஸ்தானத்துல இருந்து இவங்க தான் எனக்கு தாலி எடுத்துக்கொடுத்து என் பக்கம் இந்த கல்யாணத்தை நடத்துவாங்க" என்று சொல்ல, சம்மதமாய் தலையசைத்த ரவி வர்மனுக்கும் தங்கையை பார்த்த மகிழ்ச்சி கண்களில் தெரிந்தது.
மோகனோ, ரதி பற்றிய எந்த தகவலும் வெளியே கசியவிட்டதில்லை.. வெளியே அழைத்துச் செல்வது கூட அரிதுதான். அதிலும் மற்றவர்கள் ரதியை உயர்வாக பேசுவதை கேட்ட நாளிலிருந்து வெளி உலகம் தடுக்கப் பட்டது போலானது.
ரதிக்கு அது ஒரு பெரியவிடயமாக தோணாமல் போனதால் அதனை கணக்கில் எடுக்காமல் விட்டது மோகனுக்கு வாய்ப்பாகிப் போனது.
இப்போது ரதி தன்னை விட்டு பிரிந்ததை கூட வெளியில் கசியாமல் பார்த்துக்கொள்ள மோகன் பெரிதாய் வேலை பார்க்க வேண்டி இருந்தது. வழக்கு நீதிமன்றத்திற்கு வரும் வரையாவது மறைக்க வேண்டும் என்பது தான் அவரது எண்ணம்.
அப்படி இருக்கையில் ரதியின் குடும்பத்துக்கு இந்த விஷயம் தெரியாமல் போனதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லையே!
இதோ ரதி தாலி எடுத்துக்கொடுக்க, ரஞ்சிதனின் திருமணம் அத்தனை பேரின் ஆசியுடன் நிறைவாய் முடிந்திருந்தது.
தாயின் முகத்தில் தெரிந்த சோகம் நரேந்திரனை யோசிக்க வைத்திருந்தது. தாயிடம் கேட்டும் பார்த்தான் அவர் எதுவுமில்லை என சாதிக்க, அவனால் அதற்கு மேல் என்ன செய்துவிட முடியும்.
ரதிக்கும் சரி அவள் குடும்பத்துக்கும் சரி பேச ஆயிரம் விடயம் இருந்தும் தொண்டையை தாண்டி வார்த்தை வரவில்லை. மௌனம் தான் ஆயுதமாகிப் போனது. அதற்கு நடக்கவிருக்கும் திருமணம் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்ற எண்ணமும் பெரிய காரணம் தான்.
ரதிக்கு இங்கிருந்து சென்றால் போதுமென்று ஆகிவிட்டது. தன் குடும்பத்துடன் மீண்டும் சேர வேண்டும் என்றெல்லாம் அவர் எண்ணத்திலேயே இல்லை.. அவருக்கு நிறைய யோசிக்க வேண்டியிருந்தது.
தாயோ தந்தையோ வந்து பேசிவிட்டால் தவிர்க்க முடியாது, திருமணச் சடங்குகள் முடியும் வரை பொறுமையாய் இருந்தார்.
இங்குள்ள சடங்கு முடிந்தது, அன்று மாலை அப்படியே அங்கேயே வரவேற்பும் திட்டமிடப் பட்டிருக்க, நிற்க கூட நேரம் இல்லாமல் எல்லாரும் பம்பரம் போல் தான் சுழல வேண்டி இருந்தது.
இதோ ஒருவழியாய் அதுவும் முடியும் தருவாயில் இருக்க, அடுத்து ரஞ்சிதனின் வீட்டில் தான் இரவு சடங்கு திட்டமிடப்பட்டிருந்தது.
ரஞ்சிதனிடம் வந்த ரதியோ "தம்பி நீங்க அங்க வீட்டுக்கு வரும் போது ஆர்த்தி எடுக்க ஒருத்தர் வேணும்ல. நானும் நரேனும் அங்க போய் எல்லா அரேஞ்மென்டும் பாக்குறோம் நீங்க வந்துடுங்க" என்க, அவனுக்கும் அது சரி எனப் பட்டதில் வீட்டு சாவியை அவரிடம் கொடுத்து அவனே வழியனுப்பி வைத்திருந்தான்.
போகும் ரதியையே ஏக்கத்துடன் பார்த்திருந்தது நான்கு கண்கள்.
அதன்பின் நேரம் மின்னல் வேகத்தில் தான் கடந்தது. மணமகன் மணமகள் இருவரையும் ரஞ்சிதனின் வீட்டில் விடுவதற்காக ரஞ்சினியின் குடும்பம் மொத்தமும் வந்திருந்தது.
ஆரத்தி எடுத்து மணமக்களை உள்ளே அழைத்து வந்த ரதி சிறிது நேரத்திலேயே, ரஞ்சிதனிடம் வந்தவர் "தம்பி நான் கீழ வீட்டுக்கு போறேன். நைட் சாப்பாட்டுக்கு இட்லி ஊத்தி ஹாட் பாக்ஸ்ல வெச்சிருக்கேன். கோழிக் குழம்பு தான். எல்லாரும் சாப்பிடுங்க அதிகமா தான் பண்ணி இருக்கேன். வேற ஏதாச்சும் வேணும்னா கூப்பிடுப்பா" என்றார்.
அவனோ அவரது கரத்தை பிடித்துக்கொண்டவன் "ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ராதிம்மா, இந்த நாளையும் உங்களையும் வாழ்க்கைல மறக்கவே மாட்டேன்" என்று உணர்ந்து சொல்ல, அவரும் அவன் கரத்தை ஆறுதலாக பற்றியவர், "அம்மாக்கு தேங்க்ஸ் சொல்லுவாங்களா யாரும்?" என்று கேட்க, அவனும் புன்னகையுடன் "ஓகே ரதிம்மா தேங்க்ஸ் வாபஸ் வாங்கிக்கிறேன்" என்க, அவரும் அங்கிருந்து கிளம்பியிருந்தார்.
அதன்பின் அவன் வீடே உணர்வு பரிமாற்றத்தில் தான் நிறைந்திருந்தது. அழுது ஆறுதல் சொல்லி, அறிவுரை சொல்லி என ரஞ்சினி மொத்தமும் அம்மா பாட்டியுடன் தான் இருந்தாள்.
நேரம் செல்ல, ரஞ்சிதன் தான் அனைவரையும் உணவுக்காக அழைத்திருந்தான். பெரியவர்கள் யாரும் எந்த மறுப்பும் சொல்லி இருக்கவில்லை.
அவர்கள் அறிவார்களே சமைத்தது ரதி என்பதை பிறகு எங்கணம் மறுக்க, அவர் ஆசையாய் சமைத்ததும் அவர்கள் உண்ண வேண்டும் என்று தானே!
பேசித்தான் சில உணர்வுகளை கடத்த வேண்டுமென்றில்லை, நேசம் கொண்ட உறவுகளை உணர்வுகளை உறவின் அருகாமையிலும் உணர்ந்து கொள்ளும்.
_______________________
அனைவரும் கிளம்பியிருக்க, அப்போது தான் ஜோடிகளுக்கு தனிமை கிடைத்திருந்தது.
வழியனுப்பவென்று சென்றவள் இன்னும் உள்ளே வரவில்லை என்பதை உணர்ந்தவன் எட்டிப் பார்க்க, ரஞ்சினியோ வாசலில் நின்றவாறே அவர்கள் சென்ற பின்னும் அந்த பாதையையே பார்த்திருந்தாள்.
அவள் உணர்வுகளும் அவனுக்கு புரியவே செய்தது. இத்தனை நாள் கூட இருந்த குடும்பதை ஒரு நாளில் பிரிவது அத்தனை சுலபமில்லை என்பதை அவன் அறிவான்.
ஆனால் அவளை எதற்கும் கவலைப்பட விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவன் கடமையல்லவா?
அவள் மனநிலையை மாற்ற எண்ணியவனோ பின்னாலிருந்தபடியே அவளை கையில் ஏந்திக் கொண்டு "என்னங்க மேடம் எங்கூட தனிய இருக்க பயமா இருக்கோ" என்று கேட்டபடியே அவளை அவர்கள் அறைக்கு தூக்கி வந்திருந்தான்.
அவன் எண்ணியது போல் அவள் மனநிலை கவலையிலிருந்து செல்லக் கோபத்துக்குத் தாவி இருந்தது.
"யாருக்கு பயம் எனக்கா? நான் கிரிமினல் லாயர்னு மறந்து போயிடிச்சு போல?" என்று அவளும் இடைக்காய் பேசினாள்.
"சரிங்க லாயர் மேடம், அப்போ எதுவா இருந்தாலும் தாங்குவீங்க அப்படி தான?" என்று உள்ளர்த்தத்துடன் வினவ, அது புரியாதவளும் "ஆமா எதையும் தாங்கும் இதயம்" என்று வீர வசனம் பேசினாள்.
அதில் இதழில் புன்னகையை அடக்கி அவளை இறக்கி விட்டவனோ, "அப்போ எனக்கு ஓகே தான், ஒரு என்பது கிலோ தாங்க ரெடியா?" என்க, முதலில் புரியாமல் "அதெல்லாம் அசால்ட்டா தாங்கு..." என்று முழுதாய் முடிக்க போனவளுக்கு அவன் கள்ளப் புன்னகையில் விடயம் புரிய முழித்தவளோ தன் கரத்தால் முகத்தை மூடிக்கொள்ள, அவன் சிரிப்பு சத்தமாய் அந்த அறையை நிறைத்தது.
கானல் தொடரும்.
இப்படிக்கு
உங்கள் பெப்பர் மின்ட் மிட்டாய்
(MK31)
Last edited: