அத்தியாயம் 22
"ராம்?" என்று உதடுகள் அழைக்க, கண்கள் விர்ந்து இருக்க, அமர்ந்திருந்த இடத்தில் இருந்து எழ கூட தோன்றாமல் அதிர்ந்து அமர்ந்திருந்தாள் கீர்த்தி.
அவளின் அதிர்ச்சியை நன்றாய் உணர முடிந்தது ராமிற்குமே! அதற்கு அவள் அமர்ந்திருந்த விதமும் உதவியது எனலாம்.
"ண்ணா! நான் சொல்லிட்டேன்.. ஆனா கீர்த்தி நம்பலை.. இனி நீங்க தான் பார்த்துக்கணும்" என்று சொல்லி தான் அனுப்பி இருந்தான் கண்ணன்.
அதில் இதழ்களுக்குள் சிரித்தவன் அவளருகே வந்து நிற்க, அப்போதும் பார்த்தது பார்த்தபடி தான் அமர்ந்திருந்தாள்.
"கீர்த்தி!" அருகில் கேட்ட குரல் என்றோ, ராம் குரல் என்றோ உடனே உறக்கத்தில் இருந்து விழிப்பவள் போல விழித்தவள் அதன்பின் தான் வேகமாய் எழுந்தாள்.
"ராம்... அத்தான்..." என்று அவள் தடுமாற, அதில் இன்னும் அதிகமாய் சிரிப்பு வர மீண்டும் அடக்கமாய் சிரித்து வைத்தான்.
கீர்த்தி இன்னும் அவன் வந்து நின்றதையே நம்பாமல் இருக்க, இதில் அவன் சிரிப்பது எல்லாம் கனவில் கூட சாத்தியம் இல்லை என்பதால் மயக்கம் வராத குறை தான்.
"மாமா?" என்று கண்களால் அவன் தேட, அதில் மொத்தமாய் தெளிந்தவள்,
"வீட்ல இல்ல" என்றாள். இப்போதும் கண்ணன் சொன்னதை எல்லாம் நம்பவில்லை.. ஆனால் இப்படி கண்முன் வந்து எதிர்பாராமல் நிற்பது தான் ஆச்சர்யம்.
"ஓஹ்!" என்றவன் "உட்காரு" என்று சொல்லி அவனும் சோஃபாவின் கடைசியில் அமர, குழம்பிப் போனவள் மறுமுனையில் அமர்ந்தாள்.
"கண்ணா என்ன சொன்னான்?" என்று ராம் கேட்க, அவன் பேசுவதே இவளுக்கு புதிதாய் இருந்தது. முயன்று வரவழைத்த சாதாரண குரலில் பேசினாள் எனலாம்.
"ஒன்னும் சொல்லலயே! அப்பா வர லேட்டாகும்..எதாவது சொல்லனுமா?" என்று கீர்த்தி நேராய் கேட்க, அவளை நிமிர்ந்து பார்த்தவன்,
"இன்னும் நீ கண்ணா சொன்னதை நம்பலைனு நினைக்குறேன்" என்று அவள் கண்களைப் பார்த்து சொல்ல, மீண்டும் கண்கள் தானாய் விரிந்து கொண்டது.
"அப்பா, அம்மா, மாமா எல்லாரும் நம்ம மேரேஜ் பத்தி தான் பேசினாங்க" என்று சொல்ல, இம்முறை தான் கண்ணன் விளையாடவில்லை என்பதையே நம்பியிருந்தாள்.
"ஃபர்ஸ்ட் நான் சொல்லிடுறேன்.." என்ற ராம் அனைத்தையும் கூற நினைக்க,
"வேண்டாம்.. எனக்கு எல்லாம் தெரியும்" என்றாள் சரியாகிவிட்ட குரலில்.
"என்ன தெரியும்?" அவன் கேட்க,
"கண்ணா சொல்லியிருக்கான்.. ஆனா இது சரியா வராது.. இப்பனு இல்லை எப்பவும்" உடனே அவள் சொல்லிவிட, சில நொடிகள் அவள் முகத்தை பார்த்தவாறு இருந்தான் ராம்.
"வெல்! நான் அம்மாகிட்ட சொன்னேன்.. உன் முடிவு எதுவா இருந்தாலும் எனக்கு ஓகேன்னு.. ஸோ ஓகே.. ஆனா ஏன்னு தெரிஞ்சுக்கலாமா?" என்று ராம் கேட்க,
'அட்வான்டேஜ் எடுத்துக்காத' என்ற கண்ணனின் குரல் கேட்டது.அதில் அமைதியாய் நின்றாள்.
அப்படி இல்லையென்றாலும் ஏதோ ஒன்று அவன் பேசாத போது இல்லாதது இப்போது தோன்றியது.
தான் நினைத்தது நினைக்காத நேரத்தில் கைவரத் தயாராய் இருந்தும் ஏற்றுக் கொள்ள ஏதோ ஒன்று தடுத்தது.
"ஐ திங்க் உன் பிரண்ட் இருந்தா உனக்கு கம்ஃபார்டபிளா இருக்கும் நினைக்குறேன்.." ராம் சொல்ல,
"இல்ல.. தேவை இல்ல.. ஆனா இது சரி வராது.." என்றாள் முடிவாய்.
"எனக்கு எந்த ப்ரோப்லேமும் இல்ல.. ஆனா ஏன்னு தெரிஞ்சுக்க தோணுது" என்ற ராம்,
"கண்ணா என்ன சொன்னான்னு தெரில.. அவனுக்குமே பெருசா இதுல இன்ட்ரெஸ்ட் இல்லைனு எனக்கு தெரியும்.. என்னோட பாஸ்ட் லைஃப் கூட ரீசனா இருக்கலாம்" என்றதும்,
"நோ நோ! அதெல்லாம் இல்ல.. நான் அதெல்லாம் எதுவும் நினைக்கவே இல்ல.. நான் நம்மளோட.. நான், நீங்கனு நம்ம ரெண்டு பேர் கேரக்டர் வச்சு தான் சொல்றேன்" என்று கீர்த்தி சொல்ல,
"ஹ்ம்ம்" என்றான். இருவரும் சில நிமிடங்கள் அமைதியாய் அமர்ந்திருக்க,
"எனக்கு என்னவோ நமக்குள்ள தான் நல்லா செட் ஆகும்னு தோணுது" என்றான் அந்த அமைதியை கிழித்து சட்டென்று.
"என்ன?" ராமா பேசியது என்று நம்ப முடியாமல் கீர்த்தி விழிக்க,
"தோணுது... அவ்வளவு தான்.. உன்னோட ரீசன் என்னனு சொல்லு.. முடிஞ்சா மாத்திக்கலாம்" என்ற ராம்,
"ஜஸ்ட் அ மினிட்" என்றுவிட்டு மொபைலை எடுத்து எதுவோ செய்ய, அடுத்த நிமிடம் வந்து நின்றான் கண்ணன்.
ராமிற்கு கீர்த்தியை பிடித்தது என்பதை விட வீட்டில் அனைவருக்கும் பிடிக்கும் என்பது பெரிதாய் தெரிந்தது. இவனுமே கீர்த்தியை நன்கு அறிவான்.. இவ்வளவு நாள் மூளை ஏற்று கொள்ள மறுத்ததும் இன்று புரிந்தது.
"பேசிட்டியா?" என்று கண்ணன் கண்களால் கேட்க, இவள் அவனை முறைக்க,
"கண்ணா! நீ கீர்த்திக்கு வெல் விஷர் தானே? எனக்கு கீர்த்தி நோ சொல்லிட்டா.." என்று ராம் சொல்ல,
'அப்படியா?' என்று பார்த்தான் அவளை. எதற்கும் அவள் பதில் கூறாமல் இருக்க,
"நான் அக்ஸப்ட் பண்ணிக்குறேன்.. பட் ஏன்னு கேட்டா பதில் சொல்ல மாட்றா.. நீ இருந்தா சொல்லுவானு தான் கூப்பிட்டேன்" என்று சொல்ல,
"இவன் என்ன பெரிய மஸ்கிட்டோவா? இவன்கிட்ட நான் சொல்றதுக்கு? நான் பொதுவாவே சொல்றேன்" என்று மீண்டும் கீர்த்தி சொல்ல,
"நான் பொதுவா கேட்கலயே உன்கிட்ட தான் கேட்குறேன்.." என்ற ராமை கண்ணணுமே புரியாமல் பார்த்தான்.
எப்படி என்றாலும் ஏற்று கொள்கிறேன் என்றவன் இப்படி துருவி துருவி கேட்கிறானே என்றும் இப்படி பேசுவது ராம் தானா என்றும் கண்ணன் பார்க்க,
"உன்கிட்டயும் தான் சொல்றேன் கண்ணா! எனக்கு கீர்த்தி தான் செட் ஆகும்னு தோணுது.. எதனால கீர்த்தி வேணாம்னு சொல்றானு கேட்டு சொல்லு.. நான் போயிடுறேன்" என்று அமர்த்தலாக ராம் சொல்ல,
"ண்ணா! நீ தானா பேசுற?" என்றான் கண்ணன். அதில் ராம் கண் சிமிட்டி சிரிக்க,
"அய்யோ!" என்று சிரித்த கண்ணன்,
"கீர்த்தி ஏன்னு சொல்லேன்?" என்றான்.
"ப்ச்! டேய் என்ன விளையாடுறீங்களா? ஏன்.. ஏன்னா? உனக்கு தெரியாதா? ஏன் எல்லாரும் எப்பவும் என்கிட்டயே விளையாடுறீங்க.." கோபமாய் அவள் சொல்ல,
"அப்ப உனக்கு தெரியும்.. அப்படி தானே?" என்று கண்ணனை ராம் கேட்டான்.
நிஜமாய் இவளிடம் பேச வரும்வரை ராம் நினைத்தது, சரி என்றாலும் இல்லை என்றாலும் உடனே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தான்.
கீர்த்தியிடம் இவ்வளவு நாள் பேசியிராத போதும் இன்று பேசிய போதும் ஏதோ உந்துதலில் அவன் பேசிக் கொண்டே இருக்க, அதை கண்ணனும் கண்கூடாக பார்க்க, இங்கே கீர்த்தி தான் சொதப்பிக் கொண்டிருந்தாள்.
"அய்யோ ண்ணா! இது உளறது.. ஒரு நிமிஷம்" என்ற கண்ணன்,
"ஏய்! எனக்கு என்ன தெரியும்? உன்னை தெளிவா பேச தான் சொன்னேன்.. இப்படி உளற சொல்லல" என்றான் கீர்த்தியிடம்.
"அதான் வேண்டாம்னு சொல்றேன்ல.. அப்புறம் என்ன" என்றே கீர்த்தி நிற்க,
"கண்ணா! இங்கே வர்ற வரைக்கும் நான் நினைச்சது வேற.. ஏன்னு கேட்காத எனக்கும் தெரியல.. எனக்கு கீர்த்தி தான் ஓகே.. வேற யாரும் வேண்டாம்.. கீர்த்திக்கும் அப்படி தோணுற வரை நான் வெயிட் பண்றேன்" என்றவன்,
"அதுக்காக டார்ச்சர் எல்லாம் பண்ண மாட்டேன்" என்றுவிட்டு வாசலுக்கு போக,
"ண்ணா! எதுவா இருந்தாலும் இப்பவே பேசி அம்மாக்கு ஒரு முடிவை சொல்லுங்க.. அம்மா ரொம்ப ஈகரா இருக்காங்க" என்றான் கண்ணன்.
"அப்படி உடனே முடிவு பண்ண முடியாது கண்ணா.. ஏற்கனவே சட்டுன்னு ஒரு முடிவை எடுத்து இவ்வளவு நாள் நான் மெண்டலி அஃபெக்ட் ஆகியிருந்தேன்.. ஸோ இப்பவும் அதே தப்பை நான் செய்ய விரும்பல.. பார்க்கலாம்.. முடிஞ்சா கீர்த்திக்கு ஏன் என்னை புடிக்கலனு கேட்டு வா" என்று சொல்லி செல்ல,
"கீர்த்திக்கு உன்னை புடிக்கலையா? எல்லாம் என் நேரம்" என எண்ணிக் கொண்டவன்,
"என்னம்மா நீ இப்படி பண்றியேமா" என்று கீர்த்தியிடம் கூற, மீண்டும் முறைக்கவே செய்தாள்.
"அப்புறம் என் காலுல ஆணி எல்லாம் இல்லை.. இதையும் சொல்லிடு" என்று சொல்லி செல்ல,
"இது என்ன கோட் வேர்டு?" என்று கண்ணன் கேட்டவன்,
"என்ன கீர்த்தி சொல்லிட்டு போறான்? எனக்கே டவுட்டா இருக்கு இது ராம் தானானு" என்றும் சொல்ல, இப்போது நன்றாய் கண்ணனை முறைத்து நின்றாள்.
"என்ன எதுக்கு டி முறைச்சுட்டு நிக்குற? அவன் சொல்லிட்டு போனது கேட்டுச்சு தானே? பதில் சொல்லு" கண்ணன் கேட்க,
"என்னத்த சொல்ல? இப்ப ஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்தாங்க எல்லாரும்? நீ யார்கிட்ட என்ன உளறுன?" கீர்த்தி பதில் கேள்வி கேட்க,
"எனக்கென்ன வேண்டுதலா? நான் யார்கிட்டயும் எதுவும் சொல்லல கீர்த்தி.. நிஜமாவே அம்மாக்கு முன்னாடி இருந்தே ஒரு தாட் உன்னை ராம்க்கு கல்யாணம் பண்ணனும்னு.. உன்கிட்ட சொன்னா நீ பீல் பண்ணுவன்னு தான் நான் சொல்லல.. அப்ப அவன் தான் சொதப்பினான்.. இப்ப நீ" என்று கண்ணன் சொல்ல,
"நீ தானே அட்வான்டேஜ் எடுத்துக்காதனு சொன்ன? இப்ப என்னவோ என்னை சொல்ற?" என்றாள்.
"ஹேய் நீ எப்ப இருந்து இப்படி எல்லாத்தையும் சீரியஸா எடுத்துக்க பழகின? எல்லாத்தையும் விடு.. உனக்கு ராம்னா புடிக்கும்" என்றவன் அவள் எதுவோ சொல்ல வரவும்,
"ஸ்டாப் நான்சென்ஸ் டாக்கிங் கீர்த்தி! ஐ நோவ்!" என்றவன்,
"உனக்கு ராம்னா புடிக்கும் எனக்கு நல்லாவே தெரியும்.. இப்ப அவனே நீ தான் வேணும்னு சொல்றான்" என்று கண்ணன் சொல்ல,
"உன் அண்ணா ஒன்னும் லவ் பண்ணி வேணும்னு சொல்லல.. ஏதோ பிளான் பன்றான்" என்று சொல்ல,
"ப்ளனா? எதுவா இருந்தாலும் அவனுக்கு உன்னை புடிச்சிருக்கு.. அவன் பேசினதுல தெரிஞ்சது.. இதுக்கு தான் ஒருத்தர்கிட்ட பேசி பழகணும் சொல்றது.. கண்டதே கோலம்னு இருந்தவன் இப்ப தான் திருந்தி வர்றான்.." என்று கண்ணன் சொல்ல,
"ஹ்ம்ம்! அப்படி திருந்தி புடிச்சி வந்தா..... பாக்கலாம்.. உன் அண்ணா என்ன பன்றாங்கனு" என்று சொல்ல, அவன் புரியாமல் பார்க்க,
"வெயிட் பன்றேன்னு சொல்லிட்டு தானே போச்சு? அதான் சொல்றேன்.. எவ்வளவு நாள்னு பார்க்கலாம்" என்று சொல்ல, அவள் பேச்சினில் ஒரு துள்ளலைக் கண்டான் கண்ணன்.
"அடிப்பாவி! இவ்வளவு சீனும் அவனை உன் பின்னாடி சுத்த வைக்கவா?" என வாய் பிளந்து கேட்க,
"பின்ன! எவ்வளவு நாள் அழ வச்சாங்க? சுத்தட்டும்" என்றவள் முகத்தில் புன்னகை.
"ஓஹ்! நீ அப்படி வர்றியா? ச்ச! இதுக்கு தான் இந்த பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியலைன்றது.." என்றவன்,
"அம்மாகிட்ட இப்ப என்ன சொல்லட்டும்?" என்றான்.
"நானே சொல்றேன்" என்றாள் கீர்த்தி ஏதோ நினைத்தபடி.
தொடரும்..