• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் 23

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
920
481
93
Tirupur

அத்தியாயம் - 23


23
கொஞ்சம் கூட சலனமில்லாமல் எப்பொழுதும் போல அலார மணி அடித்தால் எழுந்து சோம்பல் முறிக்கும் மனிதர்களை போல பறவைகளின் கீச்சிடும் குரலை கேட்டுக் கொண்டே விழி திறக்கத் தொடங்கியிருந்தது விடியல்.
யாரிடத்திலும் ஏற்றத் தாழ்வுகளை காட்டுவதில்லை அது,,, அனைவருக்குமான பொதுவுடைமையாய் எழுந்திரு தோழா!! விடிகிறது காலை என்றழைக்கிறது விடியல். தினமும் தன் வேலையை தானே தொடங்கி வைக்கிறது அது,,, எல்லாரிடமும் ஏதோவொரு தொடர்பு வைத்திருக்கத்தான் செய்கிறது. துக்கமோ, மகிழ்ச்சியோ அனைத்திலும் கலந்து கொண்டு ஆகப்பணியாற்றுதல் அதற்கு சிரமமாகப்படவில்லை..

அப்படியான விடியற்காலையில் எழுந்திருக்கலாமா? வேண்டாமா? என்ற அரைத் தூக்கத்தில் புரண்டு கொண்டிருந்தாள் ஆரணி. பக்கத்தில் கையில் ஒரு குச்சியுடன் அவளை எழுப்பிக் கொண்டிருந்தார் ரம்யா. சில பல நிமிடங்களாக மகளை எழுப்ப போராடிக் கொண்டிருக்கிறார்.

“ஆரு.. இப்போ எழுந்துக்கல நான் போய் உங்கப்பாவை அனுப்புவேன்..” என ரம்யா தன் கடைசி ஆயுதத்தை செயல்படுத்த, போர்த்தியிருந்த போர்வையைச் சுருட்டிக் கொண்டு எழுந்தமர்ந்திருந்தாள் மகள்.

“ம்மா..” எனப் பாவமாகப் பார்க்க, “நான் என்னடி பண்ணட்டும், உன் அப்பா ஸ்டடி ரூம் போய் ரொம்ப நேரமாச்சு..” எனவும்,

“ம்ம்.. இவரோட இதுதான் தொல்ல, தெரியாத்தனமா இவர்கிட்ட ஹெல்ப் கேட்டேன் பாரு என்ன சொல்லனும்,” எனப் புலம்பியவள் “மம்மி எனக்கு ஒரு டவுட், ஒரு கடமை தவறாத, கண்ணியமான காவலதிகாரிக்கு எப்படி இவ்வளவு நாள் லீவு கொடுக்குறாங்க இந்த டிபார்ட்மென்ட்ல..” எனத் தன் பெரும் சந்தேகத்தை கிண்டலாகக் கேட்க,

“எனக்குத் தெரியல, ஆனா உன் டாடி அங்கதான் இருக்கார், போய் அவருக்கிட்டயே கேளு..” என அவரும் பதிலுக்கு கிண்டலடிக்க,

“ம்மா வர வர உனக்கு ஹிட்லர் மேல இருக்குற பயமே போச்சு.. முன்னாடியெல்லாம் பேசவே அவ்வளவு யோசிப்பீங்க, இப்போ கிடைக்குற நேரமெல்லாம் பேசுறீங்க.. என்னதான் நடக்குது..” என தாயை ஒருமாதிரி பார்க்கவும்,

“ஆரு..” என பாண்டியனின் குரல் கேட்கவும் சரியாக இருக்க,

“எஸ்.. ப்பா வந்துட்டேன்..” என்று ஓடியிருந்தாள்.

“ஏய்.. ஆரு.. ஃப்ரெஷ் ஆகிட்டு போடி..” எனச் சொல்ல சொல்ல கேட்காமல் ஓடிவிட, “இப்பொ போன வேகத்துல அவ அப்பாக்கிட்ட நாலு வாங்கிட்டு வரப்போறா, வந்து இங்க பொலம்ப போறா..” என்றபடியே பெட்டை ஒதுக்க,

ரம்யா சொன்னதைப் போலவே போன வேகத்தில் வந்தவள் வாய்க்குள் முணுமுணுத்த படியே குளியலறைக்குள் நுழைந்திருந்தாள்.

புன்னகையுடன் மகளுக்கு ஃப்ளாஸ்க்கில் இருந்த டீயை கப்பில் விட்டவர், பால் ரஸ்க் பாக்கெட்டையும் வைத்துவிட்டு வெளியேற,

“ம்மா தேங்க்ஸ்..” என்று கத்தியபடியே வேகமாக கிளம்பி, ரஸ்கோடு காபியை விழுங்கிவிட்டு, மீண்டும் பரபரப்பாக ஸ்டடி ரூமை நோக்கி ஓடியிருந்தாள் ஆரணி.

விஷயம் ஒன்றுமில்லை, அன்றைய சம்பவத்திற்குப் பிறகு மிகவும் மன உளைச்சலில் இருந்தாள் பெண். இரண்டு நாட்களாக யாரிடமும் பேசவில்லை. குறிப்பாக ஆதித்யன், அப்பத்தா, அப்புச்சி மூவரிடமும் முகத்தைக் கூட காட்டவில்லை.

முதல்நாள் சிறுபிள்ளைக் கோபம் என்று நினைத்தவர்களுக்கு, அவள் அடுத்த நாளும் அதையே தொடரவும் பயமாகிவிட்டது. குருவம்மாவும் முத்துலிங்கமும் எவ்வளவோ கெஞ்சியும் ‘உங்க பேரன் தான உங்களுக்கு முக்கியம், அவர் இருக்கும் போது எதுக்கு எங்கிட்ட பேச வர்றீங்க’ என பட்டென்று சொல்லியவள் முகத்தைக் கூட பார்க்கவில்லை.

இவர்களுக்கே இந்த நிலை என்றால் ஆதியனுக்கு சொல்லவேத் தேவையில்லை. அவனை முற்றிலுமாக தவிர்த்திருந்தாள். அவன் பலமுறை இறங்கி வந்து சமாதானம் செய்ய முயற்சிக்க, பிடி கொடுக்கவில்லை ஆரணி.

அதில் கடுப்பானவன் “நான் சொல்றதப் புரிஞ்சிக்காம நீ இப்படியே ரியாக்ட் பண்ணிட்டு இரு, இந்த வெட்டிங்கே ரிகால் பன்றேன்..” எனக் கத்திவிட,

உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் “எனக்கு நோ பிராப்ளம், நீங்க என்னை லவ் பண்ணலன்னு எனக்குத் தெரியும், அதை உங்க வாயாலவும் கேட்டுட்டேன். அன்னைக்கு நீங்க உண்மையாதான் சொல்லிருக்கீங்க, நான் தான் லூசு போல உங்களை நம்பியிருக்கேன். உங்க அம்மாவுக்காகத்தான் இந்த வெட்டிங்குக்கு ஓக்கே சொன்னீங்கன்னு தெரியாத அளவுக்கு முட்டாள் இல்ல, இப்படி பிடிக்காம ஒன்னும் இந்த கல்யாணம் நடக்க வேண்டாம். நிறுத்திடுங்க..” என்றவள் அவனைத் திரும்பியும் பார்க்காமல் நடக்க ஆரம்பிக்க,

ஆரணியின் பேச்சில் திகைத்துப்போன ஆதி, நகர்ந்த அவளது கைகளைப் பிடித்து, “ஹேய் இடியட், நான் என்ன சொல்றேன், நீ என்ன பேசுற..” எனப் பல்லைக் கடித்தான்.

“நான் பேசுறது உங்களுக்கு லூசத்தனமா தெரிஞ்சா நான் என்ன செய்யட்டும்..” எனத் தன் கையைப் பிடித்திருந்தவனின் கரத்தை நிதானமாக விலக்கியவளின் குரலும் நிதானமாகவே வெளிவந்தது.

அதில் அவன் மேலும் திகைக்க, திருப்தியான ஒரு பார்வையை அவனை நோக்கி வீசிவிட்டு நகர்ந்துவிட்டாள்.

அன்று நிக்கியின் பெற்றோர் வந்து சில மணி நேரத்தில் பாண்டியன் உடனிருக்க முகுந்தன் ஆதன் நிக்கியைப் பற்றி பேச, சங்கருக்கு அதிர்ச்சியாக இருந்தது. குறும்புத்தனமாக, குழந்தைப் பிள்ளையாக சுற்றிக் கொண்டிருந்தவளுக்குள் காதலா.? அதிலும் இந்த ஒருவருடமாக மறைத்தாளா.? தன் பெண் இப்படி என்று அவர் யூகிக்கக் கூட இல்லை.

பெரியவர்கள் மட்டும் இருக்க, ஆரணியின் அறையில் மிகவும் பயத்தில் இருந்தாள் நிக்கி. அவளுக்குத் தந்தையைப் பற்றிய பயம் இல்லை. ஆனால் தாய் அவருக்கு இதிலெல்லாம் சுத்தமாக நம்பிக்கை இல்லை. இன்றைய காதலைத் தான் ஒவ்வொரு இடத்திலும் கடைப் பரப்புகிறார்களே, அதை நினைத்தாலே கோபம் சுள்ளென்று பிறக்கும். இப்போது மகளும் காதலிக்கிறாள் என்றதும் அந்த கோபம் அவள் மேல் திரும்பியது.

“நிகிதா..” என்ற அவரின் அழைப்பில் இருந்த அழுத்தமும், இறுக்கமும் எல்லோருக்கும் ஒரு பயத்தையும், படபடப்பையும் கொடுத்தது.

நிக்கிக்கும் அதே நிலைதான். பயத்தில் நடுங்கியவளை யாரும் அனுமானிக்கும் முன் நடுக்கூடத்தில் வைத்து ஓங்கி அறைந்திருந்தார்.

“ம்மா..” என்றவளை, “ஒரு வார்த்தைப் பேசக்கூடாது நீ.. உன்னைய பெத்ததுக்கு ஒரு கருங்கல்ல பெத்திருக்கலாம். என்ன பண்ணி வச்சிருக்கடி நீ, ஒத்த புள்ளன்னு செல்லம் கொடுத்து வளர்த்ததுக்கு, எங்களுக்கு நல்ல பேரு வாங்கி கொடுத்துட்ட, இனி நான் எப்படி என் அண்ணன் முகத்துல முழிப்பேன். அவருக்கிட்ட எப்படி நான் இதெல்லாம் சொல்லுவேன். சொல்லுடீ.. உனக்கு முன்னமே ஆகாஷுக்கும் உனக்கும் தான் கல்யாணம் செய்வோம்னு தெரியும் தான, அப்படி இருக்கும் போது இந்த காதல் கன்றாவியெல்லாம் எப்படி வந்துச்சு..” என ஆவேசமாகக் கத்தி, மகளை தொடர்ந்து அடிக்க, ரம்யாவும் பவித்ராவும் வந்து விலக்க, குருவம்மாள் அவளைத் தனக்குப் பின் இழுத்துக் கொண்டார்.

இதில் ஆதனுக்கும் ஆதித்யனுக்கும் எதுவும் பேச முடியாத நிலை. முன்னமே மகன்களிடம் முகுந்தன் எச்சரிந்திருந்தார், அவர்கள் பொண்ணை பெற்றவர்கள், என்ன செய்தாலும் அமைதியாக இருக்க வேண்டும் என்று. தந்தையின் பேச்சை மீற முடியாமலும், தன் உயிரானவள் தனக்கு முன்னே அடிவாங்குவதை காண முடியாமலும் தவித்துக் கொண்டிருந்தான் ஆதன்.

தாரணியைப் பிடித்த ரம்யா “என்ன நிக்கிம்மா இதெல்லாம், புள்ளையைப் போட்டு அடிச்சா எல்லாம் சரியாகிடுமா.? நாம பொறுமையா சொன்னா கேட்பா.?” என அவருக்கு சாதகமாக சொல்ல, பக்கத்தில் இருந்த பவித்ராவிற்கு திக்கென்றானது.

“இல்லைங்க ஆரும்மா.. நான் இவளை இப்படியா வளர்த்தேன். மனசே ஆறலைங்க, எங்க குடும்பம் பத்தி உங்களுக்குத்தான் தெரியுமே, இவ விஷயம் தெரிஞ்சா எல்லோரும் ரொம்ப அசிங்கமா பேசிடுவாங்க, நாளைக்கு எந்த விசேசத்துல தலைகாட்ட முடியும், இந்த மனுஷன் எப்படி வெளிய தெருவுக்கு போவார்..” என பேச, ஒரு அம்மாவாக தாரணி மகளைப் பற்றிய கவலையில் பேசுவதிலேயே அவரது பயமும் பதட்டமும் எல்லோருக்கும் புரிந்தது.

முத்துலிங்கம் தான் “குருவு முதல்ல எல்லாருக்கும் சாப்பிட கொடு, அப்புறம் எல்லாம் பொறுமையா பேசுவோம்..” என்று சத்தம் போட, பெரியவரின் அந்த சத்தத்திற்கு மதிப்பிருந்தது. அனைவரும் அவரவர் ரூமிற்குள் செல்ல,

தாரணியை பக்கத்திலிருந்த ஒரு அறைக்குள் அழைத்துச் சென்ற ரம்யா “ஏன் நிக்கிம்மா புள்ளையை இப்படி அடிச்சீட்டிங்க..” என ஆதங்கமாகக் கேட்க,

“அவ செஞ்ச வேலைக்கு கொஞ்ச முடியுமா சொல்லுங்க. காலம் எவ்வளவோ முன்னேறியிருக்கலாம், ஆனா நாம இன்னும் இந்த சமுதாயத்துக்குள்ள பயந்து பயந்து தானே வாழறோம். இப்படி ஒரு கன்றாவியோட வந்து நிப்பான்னு நான் நினைக்கவே இல்லை ஆரும்மா..” என ஆற்றாமையோடு புலம்ப

ஆருவை நினைத்து அவருக்குள்ளும் அதே எண்ணங்கள் தானே, ஆனால் வெளியில் புலம்ப முடியாது. மொத்த வீட்டினரும் ரம்யாவை வில்லியாக பார்ப்பார்கள். நடப்பது நடக்கட்டும் என்று தானே அமைதியாக இருக்கிறார். அவருக்கு கணவரின் நிம்மதி முக்கியம். அதற்காகத்தான் இவ்வளவு அமைதியாக இருக்கிறார். இப்போது தோழி புலம்பவும் தன் எண்ணத்தை மெல்ல ஊசியேற்றுவது போல் பொதுவில் சொல்லிவிட்டார். ஒரு வழியாக அவரை சமாதானம் செய்து உணவருந்த அழைத்து வர, அங்கு எல்லோருமே இருந்தனர்.

கணவரைப் பார்க்க, அவர் முகத்தில் இருந்த குழப்பம் போய் தெளிவு இருக்க, ஏதோ ஒரு முடிவு எடுத்துவிட்டது தெரிய, தாரணியும் சாப்பிட அமர்ந்துவிட்டார்.

அன்று இரவு மீண்டும் முகுந்தனும் பவித்ராவும் பேச்சை ஆரம்பிக்க, தாரணியோ “முதல்ல அவ படிப்பு முடியட்டும் பார்க்கலாம்.” எனப் பட்டென்று சொல்லிவிட, சட்டென்று அங்கு நிசப்தம் சூழ்ந்தது.

“தாரணி..” என்ற சங்கரின் கண்டிப்பான பேச்சில் வாயை மூடிக்கொள்ள, “எனக்கு இப்போ என்ன முடிவு எடுக்குரதுன்னு தெரியலைங்க, இதுல நாங்க மட்டும் சம்மந்தப் படல, இன்னொரு குடும்பமும் இருக்கு, நான் அவங்ககிட்டயும் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டு சொல்றேன். முடிவு எப்படி இருந்தாலும் ஏத்துக்க முயற்சி செய்ங்க. இதுனால ஒரு பிரச்சனைன்னா எங்களுக்கு முடியாது, அப்படி ஒருவேள எங்களுக்கு சரின்னு பட்டாலும் படிப்பு முடியட்டுங்க..” எனக் கொஞ்சம் தன்மையாக பேச,

“நீங்க இந்தளவுக்கு பேசினதே போதும், நீங்க பொறுமையா யோசிச்சு நிதானமா முடிவெடுங்க. அதுவரைக்கும் எங்க புள்ளையால உங்களுக்கு எந்த சிரமமும் இருக்காது..” என முகுந்தனும் பதில் சொல்ல,

“ரொம்ப நல்லதுங்க, அப்போ காலையில பொண்ணைக் கூப்பிட்டுட்டு கிளம்புறோம், இனியும் அவளை இங்க விடமுடியாதுங்க..” எனக் கொஞ்சம் கண்டிப்பாக,

யாரும் மறுக்க முடியாதளவிற்கு பேச, அவர் இந்தளவிற்கு இறங்கி வந்ததே போதுமென்று நினைத்து மற்ற யாரும் எந்த பதிலும் பேசவில்லை.

குருவம்மா தான் “என்னய்யா இப்படி சொல்லிட்ட இன்னும் ஒரு வாரம் தான்யா இருக்கு திருவிழாவுக்கு, முடிச்சிட்டு கையோட கூப்பிட்டு போயேன் யாரு தடுக்க போறா..” என வாஞ்சையாகச் சொல்ல,

“இல்லங்கம்மா உங்கள மீறி மறுத்துப் பேசுறேன்னு தப்பா நினைக்க வேண்டாம், நாங்க கிளம்புறோம்” என்று சொல்லவும் “அது இல்லையா..” என மீண்டும் குருவம்மா பேச வர,

“ம்மா.. சங்கரைக் கட்டாயப்படுத்தாதீங்க..” எனப் பாண்டியன் தாயின் பேச்சை நிறுத்த, அதற்கு பிறகு யாரும் எதுவும் பேசவில்லை.

அன்றைய இரவு உணவு மிகவும் அமைதியாகவே கழிந்தது. ஆண்கள் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சில மணி நேரம் பேசினார்கள், அதில் திருமணப் பேச்சு எங்கும் இல்லை. அதுவே சங்கருக்கு சற்று நிம்மதியாக இருந்து.

தாரணியோ மகளிடம் பேசவே இல்லை. ‘உனக்கு செல்லம் கொடுத்து வளர்த்தது எவ்வளவு பெரிய தப்புன்னு இப்போ புரியுது’ எனப் பார்க்கும் நேரமெல்லாம் பேசிக்கொண்டே இருக்க, நிக்கியின் குற்ற உணர்ச்சி அதிகரித்துக் கொண்டே சென்றது.

அதனால் அவள் ஆதனிடமிருந்து விலக ஆரம்பித்திருந்தாள். ஆதன் எவ்வளவோ முயன்றும் நிக்கி கொஞ்சமும் பிடி கொடுக்கவில்லை. அடுத்த நாள் காலை நிக்கியை அழைத்துக் கொண்டு சங்கர் குடும்பம் கிளம்பிவிட, முகுந்தனும் மகன்களை அழைத்துக் கொண்டு தேனி கிளம்பினார்.

“என்னய்யா இப்படி உடனே கிளம்புறீங்க..” என குருவம்மா பேரனைக் கேட்க,

“பாட்டி வீட்டு வேலையைப் பார்க்கனும் இல்ல. இன்னும் ஒரு வாரத்துல கிரகப்பிரவேசம் இருக்கு. பெருசா யாரையும் கூப்பிடலதான். ஆனா... எல்லாம் சரியா செய்யனும் இல்ல. அதோட நாங்க இங்க இருந்தா உங்க பேத்தி சரியாகமாட்டா. அவளை.. சரி செஞ்சு ஃபங்சனுக்கு கூட்டிட்டு வாங்க..” என ஆதியும் சொல்லிவிட, அவருக்கும் அதுதான் சரியெனப்பட்டது.

கிளம்பும் போது கூட ஆதி அவளிடம் பேச எத்தனிக்க,

அதற்கு வாய்ப்பே கொடுக்கவில்லை பெண். அவனும் பொறுத்து பொறுத்து பார்த்து விட்டு கோபத்துடன் கிளம்பிவிட்டான்.

அறைக்குள்ளே அடைந்து கிடந்த மகளை பார்த்த பெற்றவருக்கும் வருத்தம் தான். அவர்களும் அவளை பழையபடி மாற்ற முயற்சி செய்து கொண்டிருந்த நேரம், அவளது HOD அழைத்து ப்ராஜக்ட் ஒன்றை செய்து அனுப்பும் படி சொல்ல, அவளுக்கும் இப்போது மாற்றம் தேவையாக இருக்க, உடனே சரியென்றுவிட்டாள்.

படிப்பென்றால் பாண்டியனுக்கு அவ்வளவு விருப்பம். எப்போது வாசித்துக் கொண்டே தான் இருப்பார். ஆரணிக்கும் சிறுவயதில் இருந்தே அதைப் பழக்கியும் இருந்தார். அதனால் அவளுக்கும் அதில் தன்னைப்போல விருப்பம் வந்திருந்தது.

அவளுக்கு பாடத்தில் தேவையான சந்தேகங்கள், குழப்பங்கள் என அனைத்தையும் தீர்த்து வைக்கும் ஒரு என்சைக்ளோபீடியா தான் பாண்டியன்.

இப்போதும் ப்ராஜக்டிற்காக அவரது உதவியைத் தான் நாடியிருந்தாள்.

அதற்காகத்தான் விடிந்து விடியாத இந்த வேலையில் அவரது முன் போய் அமர்ந்திருந்தாள் ஆரணி.
 

CRVS2797

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 11, 2023
39
7
8
Ullagaram
பின்னே, எப்ப பார்த்தாலும் அது முன்னாடி 'நா காதலிக்கவே இல்லை'ன்னு சொல்லி, சொல்லி கடுப்பேத்துனா, அவ இப்படித்தான் ஆதியை வைச்சு செய்வா..!
ஒரு காதலாலத்தான், குடும்பமே பிரிஞ்சு சின்னாபின்னமானது.
இதுல, இதை தெரிஞ்குக்கிட்டே அடுத்த வாரிசுகளும் எப்படித்தான் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறாங்களோ..?
இதுல குழந்தை பொண்ணுங்களா அம்மா அப்பா சொல் பேச்சு, எல்லாத்துக்கும் அவங்க ரெண்டு பேரையே எதிர்பார்த்துக்கிட்டு
இருந்தவங்க எப்படித்தான், இந்த காதல் வந்தவுடனே தான் தோன்றித்தனமா, பக்கா சுயநலமா முடிவெடுக்கிறாங்களோ... தெரியலை..? கேட்டா... காதல் வந்துட்டாலே கொஞ்சம் சுயநலமா இருக்கணும்ன்னு உளறி வேற தொலைப்பாங்க. அதான் "காதல் கசக்குதய்யா" ன்னு டைட்டிலை வைச்சாங்களோ ரைட்டர் மேம்..
ஹ..ஹ..ஹ..!
😃😃😃
CRVS (or) CRVS 2797
 
  • Love
Reactions: Sampavi

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
251
158
43
Theni
Nallaa venum unakku.
epo paru antha pulaiye kindal pannitte irukkurathu
 

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
251
158
43
Theni
பின்னே, எப்ப பார்த்தாலும் அது முன்னாடி 'நா காதலிக்கவே இல்லை'ன்னு சொல்லி, சொல்லி கடுப்பேத்துனா, அவ இப்படித்தான் ஆதியை வைச்சு செய்வா..!
ஒரு காதலாலத்தான், குடும்பமே பிரிஞ்சு சின்னாபின்னமானது.
இதுல, இதை தெரிஞ்குக்கிட்டே அடுத்த வாரிசுகளும் எப்படித்தான் மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறாங்களோ..?
இதுல குழந்தை பொண்ணுங்களா அம்மா அப்பா சொல் பேச்சு, எல்லாத்துக்கும் அவங்க ரெண்டு பேரையே எதிர்பார்த்துக்கிட்டு
இருந்தவங்க எப்படித்தான், இந்த காதல் வந்தவுடனே தான் தோன்றித்தனமா, பக்கா சுயநலமா முடிவெடுக்கிறாங்களோ... தெரியலை..? கேட்டா... காதல் வந்துட்டாலே கொஞ்சம் சுயநலமா இருக்கணும்ன்னு உளறி வேற தொலைப்பாங்க. அதான் "காதல் கசக்குதய்யா" ன்னு டைட்டிலை வைச்சாங்களோ ரைட்டர் மேம்..
ஹ..ஹ..ஹ..!
😃😃😃
CRVS (or) CRVS 2797
Romba sariyaa sonneenka kkaa...
ivanai nalla suththa vidanum