• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காதல் 35

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
அத்தியாயம் 35

மணி மூன்றை தொட்டுக் கொண்டிருக்க, கையில் கட்டியிருந்த கைகடிகாரத்தையும் வாசலையுமாய் பார்த்தபடி அந்த காபி ஷாப்பில் அமர்ந்திருந்தான் ராம்.

"அப்படி என்ன உடனே பேசற அளவுக்கு முக்கியமான விஷயம்?" என்றபடியே தான் அவன்முன் வந்து அமர்ந்தாள் கீர்த்தி.

"இது தான் உனக்கு மதியமா? ஒன் ஹவரா வெயிட் பண்றேன் கீர்த்தி" என்றான் முறைப்பாய் ராம்.

"ஒன் ஹவரா? சாரி சாரி! கொஞ்சம் வேலை வந்துடுச்சி.. நான் தான் உங்களுக்கு டெக்ஸ்ட் பண்ணினேனே.." என்று அவள் கூற,

"பார்த்தேன்!.." என்று இழுத்தவனை இப்போது கீர்த்தி முறைத்தாள்.

"சரி விடு! என்ன சாப்பிடற?" என்றவன் மெனுவை பார்க்க, மெல்லிய முறைப்புடன் சிரித்துக் கொண்டாள் கீர்த்தி.

இருவருக்குமாய் ஆர்டர் செய்தவன் அவள்புறம் திரும்ப, இப்பொழுதும் அதே புன்னகை.. அவனைக் கண்டால் மட்டும் வரும் புன்னகை, அவனை ரசிக்கும் புன்னகை அவள் முகத்தினில். இப்பொழுது அதனை அவனுமே ரசித்து பார்த்திருக்க,

"உங்ககிட்ட தான் கேட்டேன்.." என்று அவள் நியாபகப்படுத்தினாள்.

"என்ன கேட்ட?" என்றான் தெரியாதவனாய் நாடியினில் ஒரு கைவைத்து, மற்றொரு கைகளால் டேபிளில் தாளமிட்டபடி அவளைப் பார்த்து.

"கொஞ்ச நாளா நீங்க சரியே இல்லை.." அவள் சிணுங்க,

"டேஞ்சர் கீர்த்தி!" என்றவனை இவள் வித்யாசமாய் பார்க்க, வந்த காபியினை அவள்புறம் தள்ளியவன்,

"குடி பேசலாம்" என்றான்.

"என்ன டேஞ்சர்?" என்றபடி அவள் சிப் செய்ய,

"வேறென்ன! இந்த ஸ்மைல் தான்" என்று உடனே ஒத்துக்கொள்ளவும் இதயம் தாளம் தப்பியது அவளுக்கு.

"இதுதான் முக்கியமான விஷயமா?" முயன்று மறைத்து அவள் கேட்க,

"இதுவும்.." என்பவனை என்ன செய்ய?.

"கீர்த்தி! இஃப் சப்போஸ் எனக்கு வேற பொண்ணை அம்மா பார்த்திருந்தா நான் என்ன செஞ்சிருப்பேன்?" அவள் புன்னகையுடன் காபியை வாயில் வைத்த நேரம் ராம் இவ்வாறு கேட்டு வைக்க, ஒரு சில நொடி அமைதி அவளிடம். பின்,

"என்ன பண்ணியிருப்பிங்க? இந்நேரம் அந்த பொண்ணுகிட்ட கடலை போட்டுட்டு இருந்திருப்பிங்க!" என்றாள் இயல்பாய், விளையாடுகிறான் என்று தான் அவன் புன்னகை இவளுக்கு கூறியது.

அவள் சிரிப்பிலும் எந்த கலங்கமும் இல்லை. அவன் வலை விரிப்பதும் அவளுக்கு தெரியவில்லை.

தலையை மட்டும் எல்லா பக்கமுமாய் ஆட்டியவன் அதற்கும் மறுப்பு எதுவும் கூறாமல் இருக்க,

"நானும் ஹாயா இருந்திருப்பேன்" என்றாள் வேண்டுமென்றே!.

"ம்ம்ஹ்ம்ம்" என்று ஒற்றை புருவத்தை உயர்த்தியவன்,

"ஓகே! அப்ப அதே இஃப் சப்போஸ்... உனக்கு வீட்ல வேற மாப்பிள்ளை பார்திருந்தால் என்ன செஞ்சிருப்ப?" என்றவன் அவள் முகத்தை பார்க்காமல் பார்த்து காபியை உறிஞ்ச, சட்டென மாறி இருந்தது அவள் முகம்.

"என்ன பண்ணியிருப்பேன்? டைம் கேட்ருப்பேன்.. ஆர் இப்ப வேணாம்னு சொல்லியிருப்பேன்.. ஆர்.." என்று உடனே அவள் பேச,

"ஹ்ம்ம்! ஸோ வேண்டாம்னு ஏதோ ரீசன் சொல்லியிருப்ப.. ரைட்?" என்றான்.

"ப்ச்! இப்ப எதுக்கு நடக்காததை பேசிட்டு.." என்றவள் முகம் சலிப்பிற்கு சென்றதே இந்த பேச்சே அவளுக்கு பிடிக்கவில்லை என காட்ட, சிரித்தவனுக்கு இன்னும் அது சுவாரஸ்யமாய் இருந்தது.

"பேசணும் கீர்த்தி.. நான் இல்லாமல் அந்த இடத்துல வேற யாரும்னா நீ என்ன பண்ணியிருப்பனு தெரியணுமே" என்றவன் முகத்தை அவள் பார்த்திருந்தாலாவது எதாவது புரிந்திருக்குமோ என்னவோ. இப்போது கோபமே வந்திருந்தது.

"என்ன நீங்க? எவ்வளவு ஆசையா வந்தேன் தெரியுமா? மூடவுட் பண்ணிக்கிட்டு.." என்றபடி கோபமாய் அவள் எழுந்து நடக்க செல்ல, ஒரு அடி வைக்கும் முன்பே அவள் கைகளை பிடித்திருந்தான் ராம்.

அந்த நேரத்தில் அங்கே கூட்டம் அதிகம் இல்லாமல் இருக்க, அவள் கோபம் கொள்ளவும், அவன் அவளிடம் விளையாடவும், என பெரிதாய் தடை என்று எதுவும் இல்லை.

"ஓய் கீர்த்! இங்க என்னை பாரு" என்று அவன் கூறிய பின்பும் அவனைப் பார்க்காமல் அவள் எங்கோ பார்வையை வைத்திருக்க, இன்னும் கைகளை விடுவிக்கவில்லை அவன்.

"சரி இதை மட்டும் சொல்லிட்டு போ.. உனக்கு என்னை எப்ப இருந்து பிடிக்கும்?" என்று அவள் முகத்தை பார்த்து அவன் கேட்க, இப்பொழுது உடனே அவன் முகத்தை பார்த்திருந்தாள் கீர்த்தி.

கேட்டவன் முகம் பளிச்சென்று இருக்க, அவன் தெரிந்தே விளையாடுவதாயும் அவன் முகம் சொல்ல, அவன் கண்களைப் பார்த்து நின்றவள் இதயத்தின் லப்டப் அதிகமாய் கேட்டது.

"சொல்லு கீர்த்" என்றவன் கண்களும் என்ன என்று கேள்வி எழுப்ப,

"உங்களுக்கு தெரியுமா?" என்றாள் மற்றொரு கையினால் அவனை சுட்டிக்காட்டி, கண்களை விரித்து.

"தெரியாதே! தெரியவே தெரியாது!" என்று அவன் கூறுவதே தெரியும் என்பதை சொல்ல, இப்போது முறைப்புடன் கண்ணீருமாய் கீர்த்தி.

"ஏய்! என்ன நீ இதுக்கெல்லாம் அழுதிட்டு" என்று கண்ணீரை துடைத்துவிட்டவன் தன்னருகேயே அமரவைத்து அவள் தோள்களையும் அணைத்து அமர, கண்களை துடைத்தபடி அமர்ந்தாள்.

"இந்த தடியனுக்கு இருக்கு.. இன்னைக்கு அவனுக்கு என் கையால தான் விருந்து.." என்று கண்ணனை கோபமாய் கீர்த்தி பேசிக் கொண்டு இருக்க, இன்னும் கண்ணீர் வடிந்தது.

"கண்ணனை அப்புறம் பார்த்துக்கலாம்.. இப்ப என்னை பாரு.. என்னனு முழுசா சொல்லு" என்று கதை கேட்பவன் போல அவள்முன் முழுதாய் திரும்பி அமர்ந்திருந்தான் ராம்.

காதல்.. எந்த ஒரு வார்த்தை இனி வேண்டவே வேண்டாம் என நினைத்திருந்தானோ அதே வார்த்தையை கீர்த்தி கூறி கேட்க அவ்வளவு ஆசையாய் இருந்தான் ராம்.

நிச்சயம் இங்கே வருவதற்கு முன் வரை, அப்படி இருக்க வாய்ப்பே இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்தவனுக்கு, அப்படியே தான் என கீர்த்தியின் ஒவ்வொரு அசைவுகளும் கூறிவிட, என்னவோ பதின்ம வயதுக்கே வந்துவிட்டது போல ஒரு துள்ளாட்டம் அவனுள்.

"சொல்லு பா" அவன் மீண்டும் கேட்க,

"என்ன சொல்ல? தெரிஞ்சு தானே கேட்குறீங்க! அப்புறம் என்ன?" என்றவள் இன்னும் அவன் முகத்தை பார்க்கவில்லை.

"என்ன தெரியும்? நிஜமாவே எனக்கு எதுவும் தெரியாது கீர்த்.. உன் பிரண்ட் கொஞ்சமா உளறிட்டு போனான்.. அதுவும் அப்படி எல்லாம் இருக்க எனக்கு லக் இல்லனு தான் நினச்சேன்.. ஹ்ம்ம் நானும் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி தான் போல" என்று காலரை தூக்கிக் கொள்ள,

"ரொம்பத் தான்.. ப்ச்! நான் எப்படி எல்லாம் சொல்லணும் நினச்சேன் தெரியுமா! சரி இனி சொல்ல வேண்டாம்னு கூட நினச்சேன்.." கீர்த்தி கூற,

"நீ எதுவும் சொல்ல வேண்டாம்.. என்னை ஏன் பிடிக்கும்னு சொல்லு போதும்.. ஆனா அதுக்கு முன்னாடி நான் ஒன்னு சொல்லணும்" ராம் கூற, என்னவென பார்த்தாள்.

"இன்னும் கொஞ்சம் பெட்டர் பிளேஸ் பிளஸ் பெட்டர் டைம் இருந்திருக்கலாம் தான்..ஆனா இந்த நிமிஷம் சொல்லணும் தோணுது.." என்றவனை அவள் பார்திருக்க, அவள் கண்களைப் பார்த்தவன்,

"ஐ லவ் யூ கீர்த்தி! ஐ லவ் யூ ஃபிரம் பாட்டம் ஆப் மை ஹார்ட்!.. என்னை ரசிச்சு பாக்குற இந்த கண்களை நான் எப்பவும் பார்த்துட்டே இருக்கனும்.. என்னை நம்புற தானே?" அவன் கேட்க,

தன்னையே சமன் செய்ய போராடிக் கொண்டிருந்தாள் கீர்த்தி.

"அடிக்கடி ஃபிரீஸ் ஆகி என்னை படுத்துற" என்றவன் பேச்சில் அவள் தலையை உலுக்கிக் கொள்ள,

"தெளிஞ்சுடுச்சா! இப்ப சொல்லு" என்றான்.

"ஹயோ!" என்று டேபிளில் கை வைத்து கையில் தலையை வைத்துக் கொண்டாள்.

"சரி ஓகே சொல்ல வேண்டாம்.. வா போலாம்" என்று கைகளை ராம் நீட்ட,

"எங்கே?" என்றாள் அவனை நம்பாமல் சந்தேகமாய்.

"ஹாஹாஹா! உஷார் தான்.. எனக்கும் ஆசை தான் எங்கேயாச்சும் கூட்டிட்டு போனும்னு பட் அதுக்கு டைம் இப்ப வரலயே! ஸோ உன்னை வீட்ல விட்டுட்டு நானும் வீட்டுக்கு போறேன்"

"எது? அப்ப ஆபீஸ்?" - கீர்த்தி.

"லீவ் தான்.. நீ தான் இப்ப சொல்ல மாட்றியே! எப்பவும் போல நைட் நம்ம டைம்ல பேசிக்கலாம்" என்றவன் பேச்சில் மயக்கம் வராத குறை தான்.

"என்ன? ஓகே தானே?" ராம் கேட்க,

"இவ்வளவு நாளும் பேசாமலே டார்ச்சர் பண்ணீங்க.. இப்ப பேசியே டார்ச்சர் பண்றிங்க" முறைத்து அவள் கூற,

"நான் கேட்டதுக்கு பதில் இது இல்ல.." - ராம்.

"ப்ச்! சொல்லு சொல்லுனா! எதைனு நான் சொல்வேன்.." என்றவள் சிறு அமைதிக்கு பின்,

"ஆமா! காதலிச்சேன்.. பிடிக்கும்.. ரொம்ப பிடிக்கும்.. இந்த உம்முனா மூஞ்சை எப்படி தான் பிடிச்சதுன்னு எனக்கும் தான் தெரியல.. 'அம்மா! நான் நிஷாவை லவ் பண்றேன் மா' அப்படினு அத்தைகிட்ட வந்து சொன்னிங்க இல்ல? அன்னைக்கு தான் என்னை நானே ரியலைஸ் பண்ணினேன்.. பட் டூ லேட்.. மே பீ முன்னாடியே ரியலைஸ் பண்ணிருந்தாலும் நிச்சயமா உங்ககிட்ட வந்து பேசியிருக்க மாட்டேன்.. பிகாஸ் ஐ ஹேட் யூ" என்று கூறி அவனை அதிகமாய் முறைத்துப் பார்க்க, அவளின் புன்னகையையும் கடனாய் எடுத்து சிரித்து நின்றான் ராம்.

"இனி காலம் முழுக்க இதையே சொல்லி சிரிக்க போறீங்க.. அப்படி தானே? சிரிச்சுக்கோங்க.. எனக்கென்ன.. நான் ஒன்னும் உங்ககிட்ட வந்து ஐ லவ் யூனு கெஞ்சல.. நீங்க தான் ஃபர்ஸ்ட் ஐ லவ் யூ சொல்லி இருக்கீங்க.. அதையும் நியாபகம் வச்சுக்கோங்க"

நிச்சயம் இதனைக் கொண்டு தன்னை கிண்டல் செய்வான் என்று தான் இப்போது வரை நினைத்திருந்தாள் கீர்த்தி. அதனாலேயே இப்படி கூற,

"ஹ்ம்ம் சரி தானே! உன்னை எதாவது சொல்லிட முடியுமா? நான் தான்.... நானே தான் ப்ரொபோஸ் பண்ணினேன்.. போதுமா?" என்றான் அடக்கப்பட்ட புன்னகையுடன் ராம்.

"என்ன கிண்டலா?"

"ப்ச்! ஏன் முறைச்சுட்டே இருக்க? மறந்துட்டேன் பாரு.. நீ முறைக்குறதுக்கு அர்த்தம் என்னனு கண்ணா கேட்க சொன்னான்.. அது என்ன? அதையும் சொல்லிடு" ராம் கிண்டலாய் கேட்டாலும், மனம் முழுக்க இன்னும் அவளின் வார்த்தைகளில் தான் தத்தளித்துக் கொண்டிருந்தது.

"ஆமா பின்ன? நீங்க பாட்டுக்கு நிஷா, உஷான்னு ஊர் சுத்திட்டு வந்து என்கிட்ட மட்டும் மூஞ்சியை காட்டிட்டு நின்னா கடுப்பாகாதா?" அப்போதிருந்த அதே முறைப்பு இப்பொழுது அவள் முகத்தினில் தெரியவும் சத்தமிட்டு சிரித்தான் ராம்.

"கீர்த்தி! சீரியஸ்லி இவ்வளவு எல்லாம் நான் எக்ஸ்பெக்ட் பண்ணல.. உன்னோட காண்டு தான் என்னை இப்படி உன் முன்னாடி நிற்க வச்சிருக்கு போல.." இப்போது கீர்த்தியுமே சேர்ந்து சிரித்தாள்.

"நிஜம் தான்!.. நிறைய டைம் உங்க லவ் புட்டுக்கணும் ப்ரே பண்ணிருக்கேன்.. ஒவ்வொரு டைமும் கண்ணாகிட்ட மறைக்காமல் சொல்லி திட்டும் வாங்கிப்பேன்.. ஆனா அன்னைக்கு என்னை பஜார்ல விட்டுட்டு வந்திங்க இல்ல! அப்ப தான் செம்மயா திட்டிட்டான் ஸ்டுபிட்.. அப்புறம் தான் இந்த ரோசம் எல்லாம் வந்து உங்க பக்கமே திரும்ப கூடாதுனு இருந்தேன்.. ஆனா அதுக்குள்ள உங்களுக்கு அச்சிடேன்ட்.. உங்க கையோட சேர்த்து உங்க காதலும் புஸ்ஸு.." என்று சொல்லி கீர்த்தி கண் சிமிட்டி சிரிக்க, ராமும் மென்மையாய் சிரித்துப் பார்த்தான்.

"அப்புறம் நடந்ததெல்லாம் ட்ரீம் கம் ட்ரு மொமெண்ட் தான்.. வித் காட்ஸ் பிளெஸ்".

"என்ன அமைதியாகிட்டிங்க?" - கீர்த்தி.

"என்ன பேசுறதுன்னு தெரில.. உன்னை மிஸ் பண்ண பார்த்தேன்ல! பண்ணியிருந்தா..." அவன் எண்ணம் முகத்திலேயே தெரிய,

"பண்ணியிருந்தா.... அவ்வளவு தான்.. இதெல்லாம் தெரியாமலே போயிருக்கும்.. இப்படி பீல் பண்ணிட்டு இருந்திருக்க மாட்டிங்க.." என்று கீர்த்தி கூற, உண்மை தான் என்பதில் அமைதியானான் ராம்.

"ஏன் கீர்த்தி?"

"என்ன ஏன் கீர்த்தி?" - கீர்த்தி.

"எதுக்காக இப்படி? நான் உனக்காகனு எதுவுமே பண்ணல.. இன்னும் சொல்லணும்னா உன்னை நிறையவே கஷ்டப்படுத்திருக்கேன்.. அப்புறம் எப்படி இதெல்லாம்.. ஐ காண்ட்... எனக்கு இப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்குன்னு வார்த்தையால சொல்ல தெரியல.. ஆனா இதுக்கு எனக்கு தகுதினு ஒன்னு வேணுமே கீர்த்தி.." விளையாட்டை கைவிட்டு நிஜமாவாய் கேட்டான் ராம்.

"நான் என்ன ராம் பண்ணினேன்? காதல்ன்றது எப்ப எப்படி யாருக்குன்னு சொல்லிட்டு வராதே! அது ஏதோ காத்து வாக்குல உங்க மேல எனக்கு வந்திருக்கு.. அதுக்கு போய் எமோஷனல் ஆகி என்னென்னவோ பேசுறிங்க!" என்று கிண்டல் செய்தவள்,

"நானுமே உங்க அளவுக்கு சந்தோசமா இருக்கேன்னு சொன்னா நம்புவீங்களானு தெரியல.. இப்படி உங்க கூட தனியா.. பேசி, சிரிச்சு, டைம் ஸ்பென்ட் பண்ணி.. இனி உங்களோட தான் என்னோட லைஃப்.. இதெல்லாம் எனக்குன்னு நினைக்கவும் எப்படி இருக்கு தெரியுமா?" என்றாள் கீர்த்தியுமே.

"ஒரு கஷ்டத்துல இருந்து நான் வெளில வருவேன்னே நான் நினைக்கல கீர்த்தி.. அதுக்குள்ள என்னோட லைஃப் இது தான்னு நீ காட்டியிருக்க.. நிச்சயமா இனி நான் தோற்கமாட்டேன்.. என்னோட எப்பவும் நீ இருந்தா" என்றவன் கீர்த்தியின் கைகளை எப்பொழுதும் போல தனக்குள் வைத்துக் கொள்ள, அதனை கெட்டியாய் பிடித்துக் கொண்டாள் கீர்த்தி.

தொடரும்..
 

Apsareezbeena loganathan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
466
187
63
Coimbatore
கண்களில் மின்னும்
காதலை கண்ட பிறகும்
கீர்த்தியின் காதலை
கேட்ட பிறகும்
காதலில் உருகி தாங்கள்
காண்பது என்ன??
கனவா இல்லை நனவா ..... ராம்
கை அணைப்பில் கீர்த்தி_. இனி
காலமெல்லாம் காதல்.....
 
  • Love
Reactions: Rithi

Rithi

Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Jul 31, 2021
685
516
93
Chennai
கண்களில் மின்னும்
காதலை கண்ட பிறகும்
கீர்த்தியின் காதலை
கேட்ட பிறகும்
காதலில் உருகி தாங்கள்
காண்பது என்ன??
கனவா இல்லை நனவா ..... ராம்
கை அணைப்பில் கீர்த்தி_. இனி
காலமெல்லாம் காதல்.....
Nice pa