• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கார்கோள் கொண்ட குமரியாள் -06

MK18

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
42
41
18
Tamil nadu
குமரியாள்-06

இன்று...

ஜெர்மனி விமான நிலையத்திலிருந்து தங்களது பயணப் பொதிகளைத் தள்ளிக் கொண்டு வெளியே வந்து சேர்ந்தனர் வேள்பாரி மற்றும் அகரயாழினி.

“ஏங்க அதோ வந்துட்டாங்க..” என்று சமுத்திரா குதூகலமாய் கூறிய குரலிலேயே அவளைப் பார்த்துவிட்ட இருவரும், ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டு அவர்களை நெருங்கினர்.

“யாழினி.. வா வா” என்று சமுத்திரா அவளைக் கட்டியணைக்க,

“வாங்க வாங்க பாஸ்.. வாம்மா” என்று இருவரிடும் கைக்குலுக்கினான், சமுத்திராவின் கணவன் பூமிநாதன்.


ஆம். நமது சமுத்திராவிற்கு சமீபமாகத்தான் அவளுடைய துறையிலேயே பணிபுரியும் பூமிநாதனுடன் திருமணம் முடிந்தது. தேன்நிலவுக்குத் திட்டம் போட்டே ஜெர்மனி கூட்டி வந்தவளைக் கண்டு பூமிக்கு சிரிப்பு தான்.

“என்கூட ஹனிமூன் கொண்டாட வந்ததைப் போல வந்துட்டு, அப்படியே ஃபயினல் ஹியரிங்க பார்க்க ப்ளான் போட்டுட்டல நீ?” என்று பூமி கேட்க,

“ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிச்சாச்சு தானே? ஹனிமூனுக்கு ஹனிமூனும் ஆச்சு, கூடவே கடைசி ஹியரிங்க பார்த்த மாதிரியும் ஆச்சு” என்று கூறி கண்ணடித்தாள்.

நால்வரும் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொண்டு தங்கள் சந்தோஷத்தைப் பரிமாறிக்கொள்ள, மகிழுந்தில் ஏறி தங்கும் விடுதியை அடைந்தனர்.

அகரயாழினியின் தோளிடித்த சமுத்திரா, “அப்றம் யாழி.. ஒரே ரூமா எடுத்திடலாமா இல்ல தனித்தனி ரூம் வேணுமா?” என்று கேலியாய் கேட்க,

“ஒரு ரூமே போதும் சமு” என்றாள்.

“அடிப்பாவி?” என்று சமு வாயில் கரம் வைக்க, “அந்த ஒரு ரூம்ல அவரும் உன்னவரும் தங்கட்டும். இன்னொரு ரூம்ல நீயும் நானும் இருந்துப்போம். என்ன சொல்ற?” என்று யாழினி கேட்டது முன்னே சென்றுகொண்டிருந்த ஆடவர்களுக்கும் அட்சரம் பிசகாமல் கேட்டது.

“அடியேய்.. கொன்னுபுடுவேன்.. உன்கூட தூங்கத்தான் நான் இவ்வளவு தூரம் அவர கூட்டிட்டு வந்தேனாக்கும்?” என்று சமுத்திரா பொங்க,

“அய்யோ.. மானத்த வாங்குறாளே” என்று வெட்கம் கொண்ட பூமிநாதன், “சமுத்ரா..” என்று அழைத்தான்.

தோழியைக் கண்டு நாக்கை மடித்து பத்திரம் காட்டி பொய்யாய் முறைத்துவிட்டு அவள் முன் செல்ல, வேள்பாரி பின் தங்கினான்.

“ஏன்டி இப்படி மானத்தை வாங்குற?” என்று பூமி கூற,

“ய்யோவ்.. அப்ப அவ கேட்குறதுக்கு உங்களுக்கு ஓகேவா?” என்றாள்.

“அவ உன் வாயைக் கிளறினா நீயும் சரியா வேலை செய்யுற..” என்று கூறிய கணவன் முகத்தின் சிவப்பைக் கண்டு சிரித்துக் கொண்டவள், “வெட்கமெல்லாம் பலமாதான் இருக்கு” என்றாள்.

அங்கு வேள்பாரி, “என்ன அகரா.. எத்தனை ரூம் புக் பண்ணட்டும்?” என்று நமட்டு சிரிப்போடு கேட்க,

“அதுசரி.. ஆசைதான்.‌.. ரெண்டு ரூம் சொல்லுங்க” என்றவள் சிறு இடைவெளிக்குப் பின், “நாமளும் அவங்களபோல வரும்போது ஒரு ரூம் சொல்லிக்கலாம்” என்று நாணச் சிரிப்போடு கூறிச் சென்றாள்.

இருவருக்கும் அறைகள் பதிவு செய்து கொண்டு வந்தவன், “வெட்டி செலவு தெரியுமா?” என்று கூற,

“அய்யோடா.. ரொம்ப வருத்தம் தான்” என்றபடி தனக்கான அறைச்சீட்டை வாங்கிச் சென்றாள்.

அவரவர் அறைக்குச் சென்று புத்துணர்ச்சி பெற்று உண்டு முடித்த அனைவரும் உறங்கச் சென்றனர்.

மறுநாள் காலை மிக மிக ரம்மியமாக விடிந்தது.

தனது அறையின் உப்பரிகையில் நின்றுகொண்டு மெல்ல மெல்ல கதிர் வீசி ஒளிபெரும் வானத்தை ரசித்து நின்றாள் பெண்.

நாளை காலை இந்நேரம் அவளிடம் எத்தகைய படபடப்பும், பதட்டமும் இருக்கும் என்பதை நினைக்கவே சற்று ஆயாசமாகத்தான் உணர்ந்தாள்.

நாளைதான் கடைசி விசாரணை. தீர்ப்பு அவர்கள் பக்கம்தான் என்றாலும் கூட அவளுக்கு ஏனோ மனதில் ஒரு படபடப்பு.

அறைக்கதவு தட்டப்படவும் தனது உறைநிலைக்கு விடுதலை கொடுத்தபடி சென்று கதவைத் திறந்தாள்.

அவள் நிர்மலமான முகம், நாணம், புன்னகை, உவகை என பல உணர்வுகளைப் பூசிக்கொள்ளும் நேரமதில் எதிரிலிருப்பவன் யாரென்ற விளக்கம் தான் அவசியமா?

“என்னடா ரொம்ப சோர்வா இருந்ததா?” என்று வேள்பாரி பரிவான குரலில் வினவ,

“ஹ்ம்.. கொஞ்சம்” என்றாள்.

“சரி சரி.. சீக்கிரம் போய் ரெடியாயிட்டு வா” என்று அவன் கூற,

“எதுக்கு? நாளைக்கு தானே ஹியரிங்?” என்று கேட்டாள்.

“நீயெல்லாம் சுத்த மக்கு மட சாம்பிராணி தான் தெரியுமா? வேலைனு வந்தா வேலையை மட்டுமே தான் பார்க்கணுமா என்ன? ஜெர்மனி வந்ததுக்கு சுற்றிப் பார்க்கணும்னு தோன்றலையாடி உனக்கு?” என்று கேட்டபடி சமுத்திரா வர,

“ஆமா ஆமா.. அனுபவசாலி பேசுறாங்க” என்று பூமி முனுமுனுத்தபடி வந்தான்.

அவர்களைக் கண்டு சிரித்துக் கொண்ட அகரயாழினி, “ஓகே ஓகே காய்ஸ்.. கொஞ்சம் நேரம்.. நீங்க எல்லாரும் போய் சாப்பிடுங்க.. நான் ரெடியாயிட்டு வரேன்” என்று கூற,

மூவரும் சரியென்றனர்.

சென்று குளித்து முடித்து உடையணிந்து தயாரானவள், கீழே வர, ஒரு இருக்கையில் ஆங்கில நாளிதழைப் புரட்டியபடி வேள்பாரி மட்டும் அமர்ந்திருந்தான்.

அவன் முன்னே வந்து அமர்ந்தவள், “அவங்க ரெண்டுபேரும் எங்க? நீங்க சாப்டீங்களா?” என்று கேட்க,

“ஹலோ மேடம்.. அவங்க ஒன்னும் நம்மளை போல கேஸ் விஷயமா மட்டும் வரலை. தேன்நிலவு கொண்டாட வந்திருக்காங்க. அவங்களையும் நமக்காக காத்திருக்க சொல்லி நம்மகூட சுற்ற சொல்றியா?” என்று கேட்டான், ‘மட்டும்’ என்ற சொல்லில் ஒரு கூடுதல் அழுத்தத்தோடு.

அதில் தன் கண்கள் சுருக்கி தன் நாக்கைக் கடித்துக் கொண்டு அசடு வழிந்தவள், “சரி சரி விடுங்க பாரி சார்.. நீங்க சாப்டாச்சா?” என்று கேட்க,

“உனக்கு தான் காத்துட்டு இருந்தேன். என்ன சாப்பிடலாம்?” என்று கேட்டான்.

“நீங்களே எதாவது சொல்லுங்க. எனக்கு ஜெர்மன் க்வூஸின் பழக்கமில்லை. எதும் விளைவுகள் இல்லாதபடி சொல்லுங்க” என்று அவள் கூற,

அங்குள்ள ஊழியரை அழைத்து, “Two Bauernfruhstruk, one brochen mit marmelade, one krapfen and two orangensaft (இரண்டு பார்ன்ஃப்ருஸ்டிரக், ஒரு ப்ரோகென் மிட் மெர்மலேட், ஒரு கார்ஃபென், இரண்டு ஆரெஞ்சென்சாஃப்ட்)” என்று கூறினான்.

அவரும் அனைத்தையும் குறித்துக் கொண்டு நகர, “நம்பி சாப்பிடலாமா? பெயரே வித்தியாசமா இருக்கு” என்று அவள் கேட்க,

“நம்பி சாப்பிடு.. பெருசா ஒன்னும் சொல்லிடலை, ஒரு பட்டர் ஜாம் பிரெட், ஒரு ஜாம் டோனட் அப்றய் ஸ்கிரம்பில்ட் எக், ரெண்டு ஆரஞ்சு ஜுஸ் தான் சொல்லிருக்கேன்” என்றான்.

“அதுசரி.. ரெண்டு இனிப்பு ரொட்டிக்கும், முட்டை பொடிமாசுக்கும் தான் இவ்வளவு அலம்பலா?” என்று அவள் சிரிக்காமல் கேட்க,

“ஆனாலும் உனக்கு வாய் ஜாஸ்திடி.. பேசாம நீ லாயருக்கு படிச்சிருக்கலாம்” என்று சிரித்தான்.

சிரிப்பும் பேச்சுமாக இருவரும் காலை உணவை உண்டு முடிக்க,

அறைக்குச் செல்லத் திரும்பியவள் கைபற்றி நிறுத்தியவன், “ஓய்.. எங்க போற? வா.. உன்கூட சேர்ந்து ஜெர்மனிய சுற்றிப் பார்க்க ஒரு பெரிய ப்ளானே வச்சிருக்கேன்” என்றான்.

“பாருடா.. வேலையா மட்டும் வந்திருக்குறதா குறிப்பிட்டீங்க?” என்று அழுத்திக் கேட்டவள், “நான் வரமாட்டேன்னு சொல்லிட்டா என்ன பண்ணுவீங்க?” என்றாள்.

“வரமாட்டேன்னு சொல்லுவியா?” என்று பாவம் போல் கேட்டவன் கண்டு வாய்விட்டு சிரித்தவள், “போலாமா?” என்க,

சிரித்தபடி அவள் கன்னம் கிள்ளியவன் அவளை அழைத்துக் கொண்டு சொன்றான்.

இருவருமாக முதலில் வந்தது ஹம்பர்க் சிட்டி ஹாலிற்கு தான். இது ஜெர்மனியில் ஹம்பர்க் நகரத்தில் உள்ள பெரும் பொது கட்டிடம். பொதுமக்களுக்கான கச்சேரி மற்றும் கண்காட்சி போன்ற நிகழ்வுகள் நிகழ்த்தப்படும் இடமான இது, பல வரலாற்றுக் கூறுகளை உள்ளடக்கிய கட்டடம் ஆகும்.

“வாவ்.. ரொம்ப அழகாருக்கு” என்று அகரயாழினி கூற,

“பாருடா. இதையெல்லாம் பார்த்துட்டு மாமல்லபுர கோவில்கள், சித்தன்னவாசல் ஓவியங்கள், தஞ்சை பெரிய கோவில் பெருமை, கீழடி அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம்னு நம்ம பெருமைகளை எடுத்துவிடுவனு பார்த்தேன்?” என்று வேள்பாரி கேட்டான்.

அவனை புருவங்கள் ஏற மிதப்பாய் ஒரு பார்வை பார்த்தவள், “உங்களுக்கு பாரதியார் தெரியும் தானே பாரி சார்?” என்க,

“என்ன கேள்வி இது? முண்டாசுக்கவியைத் தெரியாத ஆள் இருப்பாங்களா?” என்று கேட்டான்.

“ம்ம்.. அவர் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதானது வேறெங்கும் காணோம்னு ஒரு வரி சொல்லியிருக்கார். தெரியும் தானே?” என்று அவள் கேட்க,

“ஹ்ம்.. தெரியும்” என்று தோள்களைக் குலுக்கினான். அவனுக்கு அவள் என்ன குறிப்பிட வருகின்றாள் என்பது துளியும் விளங்கவில்லை என்பது அவனது நெறிந்த புருவங்கள் காட்டின்.

“அவரு சும்மா ஒன்னும் அந்த வரியை சொல்லிடலை. தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், வங்காளம், பிரெஞ்சு, அரபு உள்ளிட்ட 14 மொழிகள் தெரிஞ்சுகிட்டு தான் இதை சொன்னார். அதுமட்டுமில்ல.. அவர் தமிழை மட்டுமே கத்துக்கோங்கனு சொல்லவே இல்லை. எல்லா மொழியையும் பயின்று அதுல உள்ள அற்புதமான கருத்துக்களை நம்ம மொழியில மொழிபெயர்த்துக் கொடுங்கனு தான் சொன்னார். ஆயிரம் பேர் வந்தாலும் நம்ம அம்மா போல வராது தானே? அதுபோல தான் தமிழ் மொழியையும், தமிழ் பண்பாட்டையும் பார்த்தார். எதையுமே அவர் தாழ்வா நினைக்காதது தான் எல்லாத்தையும் அவர் கற்றுக்கொள்ள ஏதுவான முக்கிய பாங்கு. வேறு மொழியையோ, கலையோ பார்த்து பிரம்மிப்பது ஒன்னும் தப்பில்லையே? நம்ம ராஜராஜ சோழரை எடுத்துக்கோங்க.. இலங்கையில் அசரடிக்கும் உயரத்தில் இருந்த புத்த கோவில்களைப் பார்த்து ஈர்க்கப்பட்டு தான் பெரிய கோவிலையே கட்டினார். இதையெல்லாம் பார்த்து இதைவிட என் நாட்டு கலைகள் தான் உயர்ந்ததுனு கொடி தூக்கி என்ன செய்யப் போறேன்? ஒவ்வொரு கலைகளும் ஒருவித அழகு. அந்த அழகை ரசிச்சு கடந்து போறதில் என்ன இருக்கு?” என்று பெருமை பொங்க அவள் பேச,

அவளை வியந்து பார்த்தவன், “ஒரே ஒரு கேள்வி தான் கேட்டேன். ஆனா அதுக்கு எவ்வளவு பெரிய விளக்கம்? நீ பேசாம..” என்று முடிக்கும் முன், “லாயருக்கு படிச்சிருக்கலாம். அதானே?” என்றாள்.

அதில் வாய்விட்டு சிரித்தவன், “நிஜமாவே நீ ரொம்ப வித்தியாசமான பொண்ணு தெரியுமா?” என்று கூற,

“ஆஹாங்?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்திச் சிரித்தவள் அவனோடு அவ்விடத்தைச் சுற்றிப் பார்த்தாள்.

“இந்த கிரீன் கலர் கூரை ரொம்ப அழகாருக்குல?” என்று அவள் கூற,

கிளுக்கிச் சிரித்தவன், “அது கலர் பெயின்ட் இல்லடி தங்கம்” என்றான்.

“அப்றம்?” என்று அவள் புரியாமல் கேட்க,

“அது தாமிரத்தால ஆனது. அதான் காத்தும் தண்ணியும் பட்டு இப்படி பாசம் பிடிச்ச நிறத்துக்கு வத்திருக்கு” என்று கூறினான்.

“ஏ.. என்னபா? ஸ்டாச்சு ஆஃப் லிபர்டிக்கு நடந்த கதையா?” என்று யாழினி கேட்டு சிரிக்க,

“இயற்கையா நடந்த ஒரு அழகிய அலங்காரம்” என்றான்.

அதன் பிறகு இருவருமாய் ஹம்பர்க் அருங்காட்சியகம் சென்று பார்வையிட்டனர்.

அதையடுத்து ஒரு நல்ல உணவகத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டு இருவரும் வெளியே வர,

“ஹப்பா.. சூப்பர் சாப்பாடு. அடுத்து எங்க போறோம்?” என்று யாழினி கேட்டாள்.

“வா வா.. இந்த இடம் கண்டிப்பா உனக்குப் பிடிக்கும்” என்று உற்சாகமாய் கூறியவன் அவளைக் கூட்டிக் கொண்டு வந்தது ‘மினியேச்சர் வன்டர் லான்ட்' எனப்படும் ஹம்பர்கின் மிகப் பிரசித்திப் பெற்ற, உலக சாதனை பெற்ற இடத்திற்குத் தான்.

“ஹே.. என்னதிது” என்று உற்சாகமாய் கேட்டவள் முன் குட்டியான மற்றும் அழகான உலகம். நீண்ட பெரும் மாதிரி ரயில், ஏகப்பட்ட வீடுகள், விமான நிலையம், வாகன மாதிரிகள் என ஒரு குட்டி பொம்மை நகரமே அங்கு இருந்தது.

“அடடா.. டோரிமான் மட்டும் என்கூட இருந்திருந்தா ஸ்மால் லைட் வாங்கி குட்டியாகி இந்த உலகத்துக்குள்ள போய்ருப்பேன்” என்று அவள் குதூகலமாய் கூற,

அவள் குழந்தைத்தனத்தை மிக ரசனையாய் பார்த்து சிரித்தான்.

“அங்க பாருங்க பாரி சார்.. ரயில் மூவ் ஆகுது” என்று அவள் கைகாட்ட,

“இதுதான் மினியேச்சர் வர்ள்ட். கின்னஸ் சாதனை பெற்ற உலகத்திலுள்ள மிகப்பெரிய ரயில் மாடல்” என்றான்.

“எவ்ளோ கியூட்டா இருக்கு.. ரொம்ப குட்டியா, அழகா இருக்கு” என்று யாழினி குதூகலமாய் கூற,

“நான் தான் சொன்னேனே என் அகராக்கு இது ரொம்ப பிடிக்கும்னு” என்று கூறினான்.

அவன் கண்களை ஏறிட்டவள் அதில் கண்டதெல்லாம் தன்மீதான அவனது ரசனையைத் தான்.

“யாருமே என்கிட்ட என்னோட குழந்தைத்தனத்த அட்மைர் பண்ணதே இல்லை” என்று யாழினி கூற,

“ஏன்னா உன்னோட குழந்தைத்தனத்தை யாருமே பார்த்ததே இல்லை. வயதுக்கே உரித்தான பக்குவம் போல, எல்லாருக்குள்ளயும் அவங்களுக்கு ரொம்ப பிடிச்ச, சில்லறைத்தனமான குழந்தைத்தனம்னு ஒன்னு இருக்கத்தான் செய்யும். சமூகத்துக்கு பயந்தோ, வெட்கப்பட்டோ அதை காட்டிக்க மாட்டோம். ஆனா நமக்கு ரொம்ப நெருக்கமானவங்க கிட்டயோ இல்ல தனிமைலயோ அது வெளிப்படும். அப்படி அரிதா வெளிப்படும் அந்தக் குழந்தைத்தனம் பேரழகு” என்று ரசித்துக் கூறினான்.

அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையில் அச்சரம் பிசகாமல் அவள் உணர்ந்ததெல்லாம் அவள்மீது அவன் கொண்டிருக்கும் அபரிமிதமான காதல் தானே. கண்கள் கலங்கியது.

சிறு புன்னகையுடன் அதை சுண்டு விரலில் துடைத்துக் கொண்டவள் அவனோடு மீண்டும் அவ்விடத்தை ரசிக்கலானாள்.

மாலை ஒரு குளம்பிக் கடையில் ‘ஹாட் சாக்லேட்' உடன் சில தீனிகளை உண்டுவிட்டு இருள் சூழத் துவங்கிய நேரம் இருவருமா அந்த பூங்காவை அடைந்தனர்.

கிட்டதட்ட 116 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட அப்பூங்காவே Planten un Blomen (ப்ளான்டென் அன் ப்ளோமென்) எனப்படும் பூங்கா.

இப்பூங்காவில் நீர்-ஒளி கச்சேரியே மிகவும் பிரசித்திப் பெற்ற ஒன்று.

பல வடிவங்களில் பல வண்ணங்களில் நீர் நடனமாடும் வகையில் பாய்ச்சப்பட்டு சூழலுக்கும் நீரின் வேகத்திற்கும் ஏற்ப பாடல்கள் ஒலிக்கப்பட்டு மிகவும் அற்புதமாக நிகழும் நிகழ்வு அது.

“வாவ்… பாரி சார் ரொம்ப அழகாருக்கு” என்று கண்களில் ரசனை மின்ன அவள் கூற,

“எனக்கு இந்த வாட்டர் ஷோ ரொம்ப பிடிக்கும் அகரா. நம்ம பெங்களூர் பிருந்தாவன் டேம்லயும் இது நடக்கும்” என்று கூறினான்.

கண்ணுக்கு பெரும் விருந்தாய் அமைந்த அக்காட்சியை ரசித்துப் பார்த்த இருவரும் தங்களது இரவு உணவையும் முடித்துக் கொண்டு நேரமே விடுதி திரும்பினர்.

அப்போதே சமுத்திரா மற்றும் பூமியும் திரும்பியிருக்க, நால்வருமாக அன்று சுற்றிப்பார்த்த இடங்களைப் பற்றி அமர்ந்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

“நாளைக்குக் காலைல எத்தனை மணிக்கு போறோம் சார்?” என்று அகரயாழினி வினவ,

“என்ன யாழுமா.. பாஸ இன்னுமா சார்னு கூப்பிடுற நீ?” என்று பூமி கேட்டான்.

அதில் அவள் இதழ் கடித்து புன்னகைத்தபடி, “கூப்பிடுற நேரம் வரும்போது வாடா போடா கூட கூப்பிட்டுக்கலாம் அண்ணா” என்று கூற,

தன் மீசை நுனியை திருகிக் கொண்டு சிரித்த வேள்பாரி, “காலைல எட்டு போல தயாராகிடுங்க. கிளம்பிடலாம்” என்றான்.

அதன்படி அனைவரும் அவரவர் அறைக்குத் திரும்ப, தன் அறைவரை சென்ற அகரயாழினி, மெல்ல திரும்பிப் பார்த்தாள்.

தன் அறைவாசல் கதவில் ஒற்றை காலை ஊன்றி கரங்களைக் கட்டிக் கொண்டு சாய்ந்து நின்றுகொண்டு அவளையே பார்த்து நின்றிருத்தான் வேள்பாரி.

முதலில் திகைத்து பின் தடுமாறி நின்றாள், பாரியின் அகரா.

அவன் கண்களில் அழகான கள்ளத்தனம். அவள் கண்களில் அதை ரசிக்கும் பாவம்.

வேகமாக அவனிடம் வந்தவள் அவனை இறுக அணைத்துக் கொண்டு, “தேங்ஸ் ஃபார் தி டே” என்க,

அவளை மென்மையாய் அணைத்து அவள் தலைகோதியவன், “நானும் கூட இதை சொல்லலாம்.. ஆனா சொல்லமாட்டேன்.. இட்ஸ் மை டோகன் ஆஃப் லவ்” என்றான்.

“அப்ப நானும் வாபஸ் வாங்கிக்குறேன்..” என்றவள் அவனை நிமிர்ந்து பார்த்து, “உங்களை ரொம்ப காதலிக்குறேன்” என்று கிசுகிசுப்பான குரலில் கூற, மென்மையான புன்னகையோடு அவள் உச்சந்தலையில் மென்மையாய் முத்தம் பதித்தான், தன் நேசம் அவள் அடிமுதல் நுனிவரை பாய்ந்திடும் அழுத்தத்தோடு.

மீட்டுவிடும் நிலையில்

கார்கோள் கொண்ட குமரியாள்!

நான் மீட்டிய இசையாய்

என் அகம் நிறைந்த குமரியாள்!


-தொடரும்...


அத்தியாயம்-07

 
Last edited:

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ஜெர்மனியில அகரா பாரியோட எங்களையும் ஒரு ரவுண்ட் அடிக்க வெச்சிட்டீங்க 😍🤩
 
  • Love
Reactions: MK18

MK18

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
42
41
18
Tamil nadu
ஜெர்மனியில அகரா பாரியோட எங்களையும் ஒரு ரவுண்ட் அடிக்க வெச்சிட்டீங்க 😍🤩
😍😍😍😍 மிக்க நன்றி சிஸ் 🥰😍
 

MK18

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 29, 2023
42
41
18
Tamil nadu
Germany ya ivanga kuda seynthu naanum suthi pathutay
உங்களுக்கு ஜெர்மனியைக் காட்டியதில் எனக்கும் ரொம்ப சந்தோஷமா சிஸ் 🤗😍