குமரியாள்-08
அங்கு திரையில் தெரியும் தன் வருங்கால மாமனாரின் உருவத்தைப் பார்த்த யாழினி அவரது கம்பீரமான தோற்றம் கண்டு இந்த கம்பீரம் தானே தன்னவனிடமும் உள்ளது என்று மனதோடு சிலாகித்துக் கொண்டாள்.
திரையில் அவள் கவனம் பதிந்த நேரம், அவளது கரத்தோடு கோர்த்துக் கொண்ட ஒரு கரம் தன் அழுத்தத்தினை கொடுத்தது.
அதில் உடல் சிலிர்க்கத் திரும்பியவள் அழகான புன்னகையுடன் தன்னைப் பார்த்து, கண்கள் சிமிட்டிய வேள்பாரியைக் கண்டு திடுக்கிட்டு எழுந்தாள்... ஆனால் கரங்கள் பிணைக்கப்பட்டே இருந்தன.
அவள் எழுந்ததில் பூமியும் சமுத்திராவும் திரும்பி, பாரியைக் கண்டு ஆச்சரியம் கொண்டனர்.
“ஹே பாஸ்.. நீங்க என்ன இங்க? உள்ள இருக்கலையா?” என்று பூமி கேட்க,
அவனைப் பார்த்து புன்னகைத்த வேள்பாரி, தன்னவளைப் பார்த்து கரத்தில் மேலும் அழுத்தம் கொடுத்தபடி, “இங்க இருக்கலாம்னு தான்” என்றான்.
அவன் செயலில் அகரயாழினியின் கண்கள் கலங்கி தழும்பி நின்றன.
இவற்றைக் கண்ட பூமியும் சமுத்திராவும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்ள,
அவர்கள் பார்க்கின்றனர், பொது இடம் என்றேதும் பார்க்காமல், “ப்..பாரி” என்று அவனை இறுக அணைத்துக் கொண்டாள் அகரயாழினி.
“ஹே..” என்று புன்னகையாய் அவளை அணைத்தவன் அவள் காதோரம், “அகரா.. பாப்பா.. எதுக்கு அழற?” என்று மெல்லொலியில் கேட்க,
“எ..எனக்காகவா?” என்றாள்.
‘அவன் உள்ளேயிருந்து தன் தந்தையோடு அமர்ந்து நடக்கும் நிகழ்வுகளைப் பார்க்க அத்தனை அனுமதியும் உண்டு. ஆனால் தான் தனியே இங்கு தவிப்போம் என்றுதானே தனக்காக வந்திருக்கின்றான்?’ என்ற எண்ணம் அவளை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உருக வைத்தது.
“பாப்பா… நான் அங்க இருந்து அப்பாவுக்கு எதுவும் உதவி செய்வதா இருந்தா அங்கயே இருந்திருப்பேன். அங்க சும்மா உட்கார்ந்து பார்க்கத்தான் போறேன். அதுக்கு உன்கூட உட்கார்ந்துகிட்டா உனக்கும் ஆறுதலா இருக்கும் எனக்கும் ஆறுதலா இருக்கும் இல்லையா? அதான் வந்துட்டேன்” என்று அவன் கூறவும்,
அழுதபடியே மேலும் அவனை இறுக அணைத்தவள், “நன்றிங்க” என்க,
“ப்ச்.. என்னதிது? உரிமைபட்டவங்கட்ட நன்றி சொல்வாங்களா?” என்றான்.
கண்ணீரைத் துடைத்தபடி நிமிர்ந்தவள், “நன்றி வாபஸ்” என்று கூற,
அவள் கன்னங்களைத் தன் கரங்களுக்குள் பொத்திக் கொண்டவன் அவள் நெற்றி முட்டி, “தட்ஸ் மை அகரா” என்றான்.
“ம்க்கும்.. ஹலோ.. நாங்களும் இருக்கோம்” என்று சமுத்திரா கேலி செய்ய,
“பூமி நீ இருந்தும் உன் பொண்டாட்டி இப்படி அடுத்த காதலர்களை வேடிக்கைப் பார்க்க விடலாமா?” என்று பாரி கேட்டான்.
அதில் சிரித்துக் கொண்ட அகரா அவர்களை நோக்க, பூமி தன் மனையாளை தோளோடு இருக்கி, “அவங்களை லவ் பண்ண விடுடி லட்டு” என்றான்.
அதில் அங்குள்ள அனைவருமே கலகலவென்று சிரித்துக் கொண்டனர். ஜோடி ஜோடியாக நால்வரும் அமர்ந்து கொள்ள, அங்கு வழக்கு பற்றிய விசாரணை துவங்கியது.
சங்கரநாராயணன் மற்றும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஃபிலிப்ஸ் என்பவர் அவரவர் வாதங்களை முன் வைத்துக் கொண்டிருந்தனர்.
“நிதிபதி அவர்களே. இந்த வழக்கை இவங்க தொடுத்திருப்பதே ஒரு முரணான விஷயம். கடலுக்கடியிலிருந்தும் பூமிக்கு அடியிலிருந்தும் எடுக்கப்படும் பொருட்களுக்குனு சில சட்டதிட்டங்கள் இருக்கு. அந்தப் பொருள் எந்த நாட்டின் எல்லைக்கு உட்பட்ட இடத்திலிருந்து எடுக்கப்பட்டதோ அந்த நாட்டிற்குதான் சொந்தம். இதுக்கு சான்றா வேறேதும் வேண்டாம். நம்ம அமேரிக்கா மஞ்சளுக்கு உரிமம் வாங்கி அதை நாங்க மீட்டதுக்கும் இந்த சட்டம் தான் காரணம். அப்படியிருக்க, எங்க எல்லைக்கு உட்பட்ட இடத்திலிருந்து தான் நாங்க இதை எடுத்திருக்கோம். இந்த பொருளுக்கான வரலாற்றில் அவங்களுக்கும் பங்கிருக்கு என்பதே அவங்க கருத்து. ஆனா ஒரு பொருளை வாங்க அவங்க நினைப்பதைப் போல் அதை விற்க எங்களுக்கும் விருப்பு வெறுப்பு உண்டு. இதை நாங்க விற்க விரும்பலை. அதுமட்டுமில்லாம அருங்காட்சியகத்தில் ஒரு பொருளை வைக்க பல விதிமுறைகள் இருக்கு. அதன்படி பார்க்கும்போது இது எங்கள் தமிழ்மொழி சார்ந்த வரலாறு. அதற்கு ஆதாரமா அந்த சிலையில் நாங்க சில தமிழ் வார்த்தைகளின் தடங்களைக் கண்டுபிடிச்சிருக்கோம்” என்று சங்கரநாராயணன் ஆங்கிலத்தில் கூற,
அவர் கூறிய தகவல் அங்குள்ளோருக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.
“அதற்கான ஆதாரங்களை உங்கக்கிட்ட சமர்ப்பிச்சு இருக்கேன் நீதிபதி அவர்களே” என்று அவர் கூற,
நீதிபதி அதனை பார்வையிட்டார்.
சிதிலமடைந்த அந்தச் சிலையின் படம், அதிலிருந்த சிதைந்தும் சிதையாமல் இருந்த பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட அச்சுப் பிரதியில் கிடைக்கப்பெற்ற சில தமிழ் எழுத்துக்கள் போன்றவற்றிற்கான சான்றுகள் அதில் இருந்தன.
“இது முழுக்க முழுக்க எங்கள் தமிழின் வரலாறு நீதிபதி ஐயா. ஏற்கனவே நான் குமரிக்கண்டத்திற்கும் தமிழ்மொழிக்கும் இருந்த பல இலக்கிய தொடர்புகளை சமர்ப்பித்திருக்கேன். அதை உறுதிப்படுத்தும் விதமா இந்த கல்லில் உள்ள ஆதாரமும் அமைந்திருக்கு. மேலும் குமரிக்கண்டத்தின் புகைப்படத்தை அவங்க அருங்காட்சியகத்தில் வைக்கணும்னு விருப்பப்பட்டா குமரிக்கண்டத்தின் வரலாறுகளாக நாங்க சட்டபூர்வமா வெளியிடும் வரலாற்றைத் தான் அவர்கள் குறிப்பிடணும். குமரிக்கண்டத்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் உள்ள தொடர்பாக அவர்கள் ஆதாரப்பூர்வமாக வைத்திருப்பவற்றை வேண்டுமானால் அதில் குறிப்பிட்டுக்கலாம். ஆனா உரிமத்திற்கான தொகையை அவங்க இந்தியாவுக்கு செழுத்தவேண்டும்” என்று கம்பீரமான குரலில் நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசியவர்,
“தமிழ்மொழி மிகவும் தொன்மமான மொழி. அதற்கான பெரும் சான்றே இந்தக் குமரிக்கண்டம் தான். அதனால இதுசார்ந்த அத்தனையும் தமிழ் மக்களுக்கே உரித்தானது. இதை நாங்க எந்த காரணம் கொண்டும் யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக்கொடுப்பதா இல்லை. இது எங்களுடைய உரிமை. அப்றம் நீங்க கேட்கலாம், இந்தியாவில் என்ன முற்றும் முழுசா தமிழ் பேசும் மக்களா இருக்காங்கன்னு ஆனா இந்தியாவில் ஆறு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தமிழ் பேசுறவங்க தான். இந்தியால 22 அதிகாரப்பூர்வமான மொழிகள் இருக்கு. ஆனா இந்தியா மொத்தம் 398 மொழிகளைக் கொண்ட நாடு. உங்க நாட்டில் ஹிந்தி மொழி பேசுபவர்கள் தானே அதிகம்னும். நீங்க சொல்லலாம். அது உண்மையும் கூட. ஆனா ஒரு பெருமைக்குறிய விஷயம் எங்க நாட்டில் தான் தமிழர்கள் எண்ணிக்கையும் அதிகம் என்பது. அதுமட்டுமில்ல எங்களுடைய தலைமை அருங்காட்சியகத்தை விட்டு நாங்களே தமிழர்கள் அதிகம் உள்ள தமிழ்நாட்டில் உள்ள அருங்காட்சியகத்தில் தான் இந்த கல்லை வைக்கப்போறோம். எங்க தமிழ்மொழியின் உரிமையை நாங்க விட்டுக்கொடுப்பதா இல்லை” என்று கம்பீரக் குரலில் தீர்க்கமாகக் கூறிவிட்டுத் தன் இருக்கையில் சென்று அமர்ந்தார்.
அங்கு காணொளி வாயிலாக இவற்றைக் கண்ட நால்வருக்கும் உடல் சிலிர்த்து உள்ளம் பூரித்தது.
தமிழ் மொழி தொன்மையானது, நம் தாய்மொழி என்பதையெல்லாம் தாண்டி தமிழ்நாட்டிலேயே தமிழுக்கு மதிப்பு குறைந்து கொண்டு வருகின்றது என்பது மறுக்க இயலாத கசப்பான உண்மையே. பல நாடுகளில் அவர்கள் தாய்மொழி தான் முதன்மை மொழியாக உள்ளது. பாடத் திட்டங்களில் கூட அவர்கள் நாட்டு மொழியே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தமிழ் மொழிக்கு அத்தகைய மதிப்பு இருப்பதில்லை.
ஆங்கில மொழியின் ஆதிக்கம் அதிகம் வளர்ந்துவிட்டது தான் காரணமா என்றால் அதுவும் காரணம் என்று வேண்டுமானால் கூறலாம். ஒரு மொழியின் ஆதிக்கம் அதை பேசும் மக்களன்றி யாரால் வளர்ந்துவிடப் போகிறது? நாம் அனுமதி கொடுக்கப் போனதால் தான் மொழி நம்மிடையே பரவியது. அதை காலம் கடந்த பின்பு புரிந்துகொண்டதனால் அதனை மாற்றவும் இயலுவதில்லை. ஆனால் இப்படியான சில சிறப்புகளைக் கொடுத்துத் தமிழ்தாயின் புண்பட்ட மனதை குளிர்விக்க இயலுமே? இத்தகைய கருத்தால் தான் சங்கரநாராயணன் வேண்டுகோளுக்கிணங்க அக்கல்லை தமிழகத்தில் வைக்க முடிவாயினர். அதையே தனது வாதத்திலும் அவர் பயன்படுத்தியிருக்க, அது செவ்வனே தன் வேலையைச் செய்தது.
அவரையடுத்து பிரதிவாதம் வைத்திட ஃபிலிப்ஸிடம் வார்த்தையில்லையா? வாக்கியமில்லையா? தைரியமில்லையா? என்பது அவருக்கே வெளிச்சம்.
நீதிமன்றத்தில் பெரும் அமைதியை காகித ஓசைகள் மட்டுமே உடைத்துக் கொண்டிருந்தது.
இங்கு மேஜையில் அமர்ந்திருந்த இரண்டு ஜோடிகளுக்கும் மனதில் மிகுந்த படபடப்பு.
“மாமா ரொம்ப கேஷுவலா இருக்காங்க. அவங்களுக்கு கொஞ்சம் கூட பதட்டமாவே இல்லையா?” என்று திரையில் சங்கரநாராயணன் முகத்தைப் பார்த்தபடி யாழினி வினவ,
“அப்பா எப்பவுமே சூப்பர் கூல் தான். எனக்கே ஆச்சரியமா இருக்கும் எப்படி இப்படி இருக்கார்னு” என்று வேள்பாரி கூறினான்.
“நிஜமாவே மாமா சூப்பர் கூல் தான். எனக்கு இப்பவே இதயம் வெளிய வர்ற அளவு வேகமா துடிக்குது” என்று அவள் பெருமூச்சு விட,
“பார்த்து பத்திரம்டா அகரா.. உசுரு முக்கியம்.. வெற்றிய கொண்டாடணுமே” என்று கூறினான்.
“அதுக்கு மட்டும்தானா?” என்று அவள் மெல்லொலியில் கேட்க,
“எங்களுக்கு எதுவும் கேட்கலைப்பா” என்று பூமி மற்றும் சமுத்திரா கூறி சிரித்தனர்.
சில நிமிடங்களுக்குப் பின் அங்கு நீதிபதியாக இருப்பவர், “வழக்கை விசாரித்த வரையில் ஆதரங்களும் ஆவணங்களும் இந்தியாவுக்கு ஆதரவாகவே உள்ளது. இது தமிழ் மக்களின் அடையாளத்தைச் சேர்ந்த பொருள் என்பதாலும், இது இந்திய அரசாங்கத்தின் உழைப்பு என்பதாலும் இக்கல்லானது இந்திய அரசாங்கத்திற்கே சொந்தம். எனவே இக்கல் இந்திய அருங்காட்சியகத்திலேயே வைக்கப்பட வேண்டும் என்று இந்நீதிமன்றம் தீர்ப்பளிக்கின்றது” என்று தனது கணீர் குரலில், நுனிநாக்கு ஆங்கிலத்தில் கூறி முடிக்க,
“ஏ…” என்ற பெரும் கூவலோடு நால்வரும் குதித்தெழுந்தனர்.
அவர்கள் இதயத்தை முட்டி மோதி காட்டாற்று வெள்ளமாய் கிளர்ந்தெழுந்த உவகையானது, கண்களை இன்பமாய் நிறைத்து, கன்னம் தீண்டி, தாண்டி தரைதொட்டு மோட்சம் பெற்றது.
எத்தனை பெரிய வெற்றி? சொல்லில் வடித்திடத்தான் இயலுமா இந்த சந்தோஷத்தை?
நால்வரும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துத் தங்கள் ஆர்ப்பரிப்பை வெளிபடுத்திக் கொண்டனர்.
நமது உரிமை நமக்கே நமக்காய்.
பிறந்ததும் பசியில் தவித்துக் கதறிய பிள்ளைக்கு தாய்மை பெருக தாய்ப்பால் ஊட்டிய அன்னையின் ஆத்மார்த்தமான மகிழ்வு அவர்களிடம்.
தங்கள் குழந்தையை ஈன்றெடுத்து கரம் நடுங்க கைகளில் ஏந்திவிட்ட பரவசம் அவர்களிடம்.
இன்னும் அவர்கள் உவகையை விளக்கிடத்தான் உவமையுண்டோ?
வேள்பாரியை இறுக அணைத்துக் கொண்ட யாழினி கண்களில் கண்ணீரும் இதழில் ஆத்ம திருப்தியை பறைசாற்ற புன்னகையுமாய் அவனைக் கண்டாள்.
“சந்தோஷமா?” என்று அவன் கேட்க,
“அபத்தமான கேள்வி” என்றாள்.
அதில் முறல்கள் மின்ன சிரித்தவன் அவள் கன்னம் பற்றி, “அழகு எதில் இருக்கு தெரியுமா அகரா?” என்று வினவ,
“என்னை உளமார ரசிக்கும் உங்க உயிர்ப்பான கண்களில் இருக்கு” என்றாள்.
மேலும் இதழ்கள் விரிய அழகாய் சிரித்தவன், “வெற்றிக்களிப்பில் மனமார சிரிக்கும் உன் புன்னகையில் இருக்கு” என்று கூற,
“ஒருத்தர் அழகை இன்னோருத்தர் ரசிக்கும் உங்கக் காதலில் இருக்கு” என்று சமுத்திராவும், “அடுத்தவர்களோட காதலில் உள்ள ஆத்ம நேசத்தை ரசிக்கும் உன் பாங்கில் இருக்கு” என்று பூமியும் தன்னவளைப் பார்த்து கூறினான்.
“ஆக அழகு எதில் தான் இருக்கு?” என்று யாழினி வினவ,
“நேசிக்கும் அத்தனையிலும் இருக்கு” என்று மூவரும் ஒன்றுபோல கூறினர்.
இதைவிட அழகிய காட்சிதான் தன் வாழ்வில் கிட்டிவிடுமா? என கண்ணீரை புறம் தள்ளி இமை சிமிட்டாது அக்காட்சியை விழி வழி அகத்தினுள் உள்வாங்கிக் கொண்டாள் பெண்.
அங்குள்ள அனைவர் மனதிலும் வெற்றியின் அழகு வீற்றிருந்து, உவகையின் அழகை பிரதிபலித்து, சந்தோஷமெனும் அழகை பரிசளித்தாள், கார்கோள் கொண்ட அழகிய குமரியாள்.
கார்கோள் கொண்ட குமரியாளை
மீட்டுவிடும் பணியில்,
பிரதிபலனாய் பெற்றுவிட்டேன்,
என் மையல் சுமக்கவுள்ள குமரியாளை!
-தொடரும்...
அத்தியாயம்-09

கார்கோள் கொண்ட குமரியாள் -09
குமரியாள்-09 அவர்கள் நால்வரும் அங்கு மிகுந்த உற்காசத்தோடும் சந்தோஷத்தோடும் நின்றிருக்க, வெற்றி வாகையை சூடிக் கொடுத்த சங்கரநாராயணன் அவ்விடம் வந்து சேர்ந்தார். அவரைக் கண்டதும் மிகுந்த மரியாதையோடு கைகூப்பிய சமுத்திரா தன் வணக்கத்தைத் தெரிவிக்க, தானும் புன்னகையோடு தன் வணக்கத்தைத் தெரிவித்தவர் மகன்...
vaigaitamilnovels.com
Last edited: