• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காற்று - 05

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
81
63
18
Dindigul
காற்று - 05

அனைப்பில் இருந்து திமிறியவளை வலுக்கட்டாயமாக பிடித்து இறுக்கியவன், “ஏய் இப்போ மட்டும் நீ அமைதியா இருக்கல, நான் என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது” என ஆதிராவிடம் பல்லைக் கடித்து கூறியவன் தந்தையை நேராக பார்த்தான்.

அனேகனை போலவே அவரும் மகனை நேராக பார்த்தார், பின் மகனின் அனைப்பில் இருந்தவளிடம் ஒரு நொடி பார்வையை வீசியவர் மகனிடம், “என்ன இது..?” என்றார் வார்த்தையில் இல்லாமல் பார்வையில்.

“என்ன அண்ணா இது, இங்க என்ன நடக்குது? நாம என்ன பேசினோம், ஏகன் என்ன செய்றான் பாருங்க. இதுக்குத்தான் இவளை இங்க வரச் சொல்ல வேண்டாம்னு சொன்னேன். யாரும் கேட்கல. இப்போ என் பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க வந்துட்டா.?” என அதற்குள் புனிதா ஆத்திரத்தில் கத்த ஆரம்பித்தார்.

“போதும் நிறுத்து புனிதா.. என்ன பேசிட்டு இருக்க நீ.? யார் யார் வாழ்க்கையை கெடுக்குறது. நீயும் உன் பொண்ணும் தான் அவ வாழ்க்கையை கெடுத்து வச்சிருக்கீங்க. அது தெரிஞ்சும் எப்படி கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பேசுற..” என பிரகாஷ் மனைவியை அடக்க முயல,

“நான் எப்போ தர்ஷினியை கல்யாணம் பன்னிக்குறேன்னு சொன்னேன், உங்ககிட்ட சொன்னவங்க யாரோ அவங்களை கேளுங்க.” என்றான் ஏகன் புனிதாவைப் பார்த்து அலட்சியமாக.

“ஏகன் நீ சும்மா இரு, நான் பேசுறேன்..” என பாக்யா பதட்டத்தில் ஆரம்பிக்க,

“போதும் நீங்க பேசி நான் பட்ட கஷ்டம் எல்லாம், இனி இங்க இருக்குற உங்க பேச்சையும் சரி,” என அனைவரையும் சுற்றி ஒரு பார்வை பார்த்தவன், பின் தன் அனைப்பில் இன்னும் திமிறியபடி இருந்த ஆதிராவையும் காட்டி “ஏன் இவ பேச்சையும் கூட நான் கேட்க போறது இல்ல. எல்லாருக்கும் என்னை பார்த்தா கேனையன் மாதிரி இருக்கா, இல்ல ஆளாளுக்கு உதைச்சு விளையாடுற பந்து மாதிரி இருக்கா, ஹான்! இனி என்னைப் பத்தின முடிவை நானே எடுத்துக்குறேன் நீங்க யாரும் எனக்காக யோசிச்சு, பேசி உங்க நேரத்தை செலவழிக்க வேண்டாம்..” என்றவன், ஆதிராவை இழுத்துக்கொண்டு போய் தந்தையின் முன் நின்றான்.

ஏதோ தவறாக நடக்க போகிறது என்பதை உணர்ந்த புனிதா, ஏகனிடம் பேசி பிரயோஜனம் இல்லை என்று புரிந்து “ஏய் உனக்கெல்லாம் கொஞ்சம் கூட அறிவே இருக்காதா.? அன்னைக்கு எங்கிட்ட அவ்வளவு தூரம் பேசின, நான் போய்டுறேன், இங்க வரமாட்டேன், சின்னத்தான் எனக்கு வேணாம், என் அக்காவை வாழ விடுங்க, அது இதுன்னு வீராப்பா பேசிட்டு, இன்னைக்கு எல்லாரும் கூப்பிட்டதும் ஓடிவந்துருக்க, உனக்கு வெட்கமாவே இல்லையா. ச்சே என்ன பொண்ணு நீ, சொன்னா சொன்ன சொல்லை காப்பத்தனும், அப்படியில்லன்னா சொல்லிருக்கவே கூடாது.. உன்ன நம்பி என் பொண்ணு மனசுல ஆசையை வளர்த்துட்டேன், இப்போ அவளுக்கு நான் என்ன பதில் சொல்வேன். உன்னால அவன் இல்லாம இருக்க முடியாதுன்னா சொல்லி தொலையறதுக்கு என்ன.? என்ன வளர்ப்பு இதெல்லாம்..” என முடிக்கும் முன்னே பிரகாஷ் புனிதாவை ஓங்கி ஒரு அறை அறைந்திருந்தார்.

அதற்குள் ஏகனிடமிருந்து வலுக்கட்டாயமாக திமிறி வெளியில் வந்தவள், ஏகனை பார்த்து ஆத்திரமாக முறைத்து, பின் அழுகையும் ஆயாசாமுமாக எல்லோரையும் பார்த்துவிட்டு விறிவிறுவென வெளியில் சென்றுவிட்டாள். அவளுக்குப் பின்னே ஆன்டர்ஷனும் கோபமாக சென்றுவிட்டான்.

“ஹேய் ஏய் நில்லுடி, நில்லுடி..” என கத்தியபடி அவள் பின்னே போக இருந்த ஏகன், பின் ஆத்திரமாக புனிதாவை பார்த்து “இதுவரைக்கும் உங்கமேல எனக்கு வருத்தம் மட்டும்தான் இருந்தது, ஏதோ பொண்ணு மேல இருக்குற பாசம், நாங்க உங்களை அப்படியே ஒதுக்கிடுவோம்னு பயம் அதனாலத்தான் இதெல்லாம் பண்றீங்கன்னு நினைச்சேன். அதனால உங்கமேல கோபம் இருந்தது இல்லை. ஆனா இப்போ இந்த நிமிஷம் அவளை அழ வச்சதுக்கு உங்களை கொல்ற அளவுக்கு கோபம் வருது. என்ன ஜென்மம் நீங்க எல்லாம். உங்க பொண்ணுக்கு இப்படி ஒரு நிலைமை வந்தா என்ன செய்வீங்க… ச்சே உங்ககிட்ட பேசக்கூட எனக்கு பிடிக்கல..” என்றவன் கோபத்தை அடக்கிக் கொண்டு தந்தையைப் பார்த்து, “நான் இப்போ ஆதியைக் கூப்பிட்டு வருவேன், எனக்கும் அவளுக்கும் இப்போ இங்க கல்யாணம் நடக்கனும். யார் எதிர்த்தாலும், பேசினாலும் எனக்கு கவலை இல்லை. நீங்க பார்த்துகோங்க. அவ்ளோதான்..” எனக் கட்டளையாக சொன்னவன் தவிப்புடன் நின்றிருந்த தாயையும் பாட்டியையும் பார்த்து அவர்களுக்கு முன்பு வந்து நின்றான்.

“நீங்க ரெண்டு பேரும் இவ்வளவு சுயநலம் பிடிச்சவங்கன்னு என்னால நினைச்சுக்கூட பார்க்க முடியல,” என ஆயாசமாக சொன்னவன் “ஏன்ம்மா எனக்கு சின்ன வயசுல இருந்தே ஆதியை மட்டும் தான் பிடிக்கும்னு உங்களுக்கு தெரியாது அப்படித்தானே” என்றவன், பின் “ஏன் பாட்டி ஆதிக்கு என்மேல தான் விருப்பம் இருக்குன்னு உங்களுக்கும் தெரியாது அப்படித்தானே.” என இருவரையும் பார்த்து நக்கலாக கேட்டான்.

அந்த பேச்சில் இருவரும் குற்றவுணர்ச்சியுடன் அவனைப் பார்க்க, “ப்ப்ச்ச் தப்பே செய்யாம நாலு வருஷம் தண்டனை அனுபவிச்சிட்டு வந்துருக்கா, இந்த பாவத்தை எங்க போய் தொலைப்பீங்க, மேல இருந்து அத்தையும் மாமாவும் பார்த்துட்டு தான் இருப்பாங்க. அவளுக்கு நீங்க செஞ்சதெல்லாம் பார்த்து எவ்வளவு வேதனை அடைஞ்சிருப்பாங்கன்னு யோசிங்க..” என்றவன் இருவரின் முகமும் வேதனையில் கசங்குவதைக் கண்டு, “ஷிட்” என தலையை இருபக்கமும் ஆட்டி ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு, அமரனிடம் கண்ணைக் காட்டிவிட்டு விறுவிறுவென வெளியில் சென்றுவிட்டான்.

“என்ன இது, எதுக்கு என்னை இப்போ அடிச்சீங்க, நான் என்ன தப்பா கேட்டேன். ஆரம்பத்துல இருந்து செஞ்சதெல்லாம் இவங்க,” என மற்ற இரு பெண்களையும் காட்டி கூறி, “இப்போ நான் கேட்டா மட்டும் ஏன் வாயை மூடிட்டு இருக்காங்க…” என புனிதா ஆங்காரமாக கத்த,

“அத்தை, அப்போ இருந்த சூழல் வேற, இப்போ இருக்குற சூழல் வேற, அதை முதல்ல புரிஞ்சிகோங்க. அப்புறம் நீங்க நினைக்கிற மாதிரி நான் ஆதியையும், ஏகன் தர்ஷினியையும் கல்யாணம் செய்திருக்க மட்டோம். எங்களை கேட்காம, எங்க விருப்பம் என்னனு தெரியாம பெரியவங்களா ஒரு முடிவு எடுத்தா அதுக்கு நாங்க எப்படி பொறுப்பாக முடியும்.”

“ஏன்னா எனக்கு ஆதி குழந்தை மாதிரி, அவளுக்கு சின்ன வயசுல இருந்தே ஏகன் தான் விருப்பம்ன்னு எனக்கு தெரியும். நான் ஆராவை கல்யாணம் செய்துக்காம இருந்திருந்தாலும் ஆதியை செஞ்சிருக்கமாட்டேன். அதேமாதிரி ஏகனும் ஆதியை விட்டுட்டு தர்ஷினியை கல்யாணம் செய்திருக்கமாட்டான். இதுக்கு மேல உங்களுக்கு விளக்கம் கொடுக்க முடியாது. இனி நீங்க என்ன செய்யனுமோ செய்ங்க..” என சலிப்பாக முடித்துவிட்டான் அமரன்.

“எதுக்கு இப்போ இந்த பேச்செல்லாம், அத்தையும் அண்ணியும் நமக்கு வாக்கு கொடுத்துருக்காங்க, அதை காப்பாத்த வேண்டியது அவங்கதான். அப்படி நடக்கலன்னா அடுத்து என்ன நடக்கும்னு அவங்களுக்கே தெரியும். எல்லாம் யோசிச்சு செஞ்சா சரி..” என இன்னும் தன்னை முறைத்துக் கொண்டிருந்த கணவனை பார்த்து ஆத்திரமாக பேசினார் புனிதா.

‘ஏய் வாயை மூடுறியா இல்ல இன்னும் வேணுமா.?” என பிரகாஷ் மீண்டும் கையை ஓங்கிக் கொண்டு வர,

“பிரகாஷ் போதும். இது என்ன சந்தக்கடையா ஆளாளுக்கு கத்திட்டு இருக்க, கொஞ்சம் அமைதியா இரு. நான் பேசுறேன்.” என அவரை அடக்கிவிட்டு, “அம்மா புனிதா நான் கொஞ்சம் பேசட்டுமா..?” என மெல்ல ஆரம்பித்தார் சுந்தரம்.

மாமியாரிடம் கூட வயது வித்தியாசம் பார்க்காமல் எதிர்த்து பேசும் புனிதா சுந்தரத்திடம் மட்டும் வாயைத் திறப்பதே இல்லை. இப்போதும் அப்படியே அதனால் தலையை மட்டும் ஆட்ட,

“ஏன்மா… இந்த வார்த்தையை நான் கேட்கக்கூடாதுனு நினைக்கிறேன். ஏன் தெரியுமா உன் மனசாட்சியே உன்னை பலமுறை கேட்டுருக்கும். ஆனா உனக்கு புரிஞ்ச மாதிரி தெரியலையே. இல்ல புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கிறியா.?” என அழுத்தமாக கேட்க, புனிதாவால் பதில் சொல்லவே முடியவில்லை.

“என்ன அண்ணா இப்படியெல்லாம் பேசுறீங்க..” என புனிதா திணற,

“ஏன் மாமா இதெல்லாம்..” என பிரகாஷும் குற்றவுனர்ச்சியில் கேட்க

“இல்லம்மா நிஜமாத்தான் கேட்குறேன், யோசிச்சுப் பார்த்தா உனக்கே புரியும். பாஸ்கரும் அகிலாவும் இருந்த இடத்துல நீங்க ரெண்டு பேரும் இருந்திருந்தா, உங்க பிள்ளைங்கள பாஸ்கர் இப்படி விட்டுருப்பான்னு நினைக்கிறியா, ஏன் பிரகாஷ் நீ அப்படித்தான் நினைக்கிறியா..? என இருவரிடமும் கேட்க,

“இல்ல மாமா, அண்ணா கண்டிப்பா அப்படியெல்லாம் செஞ்சிருக்க மாட்டார், அண்ணி அப்படி யோசிக்கக்கூட மாட்டாங்க..” என பிரகாஷ் பட்டென்று பதில் சொல்ல,

“அப்போ நீங்க மட்டும் ஏன் அப்படி நினைச்சீங்க, நீங்க நினைச்சதும் இல்லாமல் பிள்ளைங்க மனசுலையும் அந்த எண்ணத்தை வளர்த்து வச்சிருக்கீங்க. தர்ஷினி யார் கூடவாவது அன்பா அக்கறையா பழகுறாளா சொல்லு. இதெல்லாம் யார் தப்பு..”

“அண்ணா போதும், நீங்க பேச்சை மாத்துறீங்க..” என புனிதா இடையில் புகுந்து பேச,

“என்ன பேச்சை மாத்துறாங்க, ஆராவுக்கு நடந்தது உன் பொண்ணுக்கும் நடந்திருந்தா என்ன செஞ்சிருப்ப சொல்லு..” என காட்டாமாக கேட்க,

“அவளை மாதிரி என் பொண்ணு ஒன்னும் ராசி கெட்டவ இல்ல. அவ ராசிதான் கல்யாணம் ஆன மூணாவது நாளே ஒரே நேரத்துல, பெத்தவங்களை புருஷனை முழுங்கிட்டு வந்து நின்னா.” என புனிதா நாக்கில் நரம்பில்லாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் பேச,

“போதும் நிறுத்துங்க,” என அந்த இடமே அதிரும் அளவிற்கு கர்ஜித்தான் அமரன். அவன் உடல் இறுக்கமும், கண்களின் சிவப்பும், முறுக்கிய கைகளும் அவன் கோபத்தை சொல்லாமல் சொல்ல, புனிதாவிற்கு பயத்தில் உடல் வெடவெடத்தது.

வேகமாக அவருக்கு முன்னே வந்து நின்றவன் “போதும் இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசக்கூடாது. அப்புறம் பெரியவங்க, மரியாதை கொடுக்கனும்னு கூட நான் யோசிக்கமாட்டேன். முதல்ல என் பொண்டாட்டியைப் பத்தி பேசுற தகுதி உங்களுக்கு இருக்கா? இல்ல. இல்லவே இல்ல. அவ ஒன்னும் புருஷன் இல்லாதவ இல்ல. அவளுக்கு புருஷனா, ஒட்டுமொத்த சொந்தமா நான் இருக்கேன்.”

“இவங்க யாரும் வேண்டாம் நான் போதும் அவளுக்கு. இதுக்கு மேல இந்த பேச்சு எப்பவும் இருக்கக்கூடாது. உங்களுக்கு எல்லாம் மனசுல ஈரமே இல்லையா.? அவளும் உங்க பொண்ணு மாதிரிதானே, எப்படி கொஞ்சமும் இரக்கமே இல்லாம வாயில வந்ததை எல்லாம் பேசுறீங்க” என கோபத்தில் கத்த, இப்போது யாரும் சுதாரிக்கும் முன்னே மனைவியை மீண்டும் ஓங்கி அறைந்திருந்தார் பிரகாஷ்.

புனிதா பேசியதில் அதிர்ச்சியில் இருந்த அனைவரும், பிரகாஷ் அவரை அறைந்ததில் தான் நிதானத்திற்கு வந்திருந்தார்கள்.
“கிளம்பு போகலாம். இனி இந்த இடத்துக்கோ, இல்ல இந்த குடும்பத்துக்கோ நீ தேவையே இல்லாத ஆள், கிளம்பு..” என கர்ஜிக்க,

“கொஞ்ச நேரம் எல்லாரும் அமைதியா இருக்கீங்களா..” என சுந்தரம் அதட்டலிட, அந்த சத்தத்தில் அனைவரும் அமைதியாகிவிட

“தப்புத்தான் என் மனைவியும், என் அக்காவும் செஞ்சது தப்புத்தான். ஆம்பளைங்க நாங்க எல்லோரும் குத்துக்கல்லாட்டம் உயிரோட இருக்கும் போது எங்ககிட்ட கேட்காம ஒரு முடிவெடுத்து, அதை உனக்கு வாக்கா கொடுத்தது எல்லாம் தப்புத்தான். இப்போ என்ன செய்யலாம்னு நீ நினைக்கிற..” என மிக மிக நிதானமாக புனிதாவிடம் கேட்க,

“அண்ணா.. நீங்க எல்லாரும் பிரச்சினையை திசை திருப்புறீங்க, எல்லாம் பேசி ஒரு முடிவுக்கு வந்த பிறகு, மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறீங்க.” என புனிதா கோபத்தில் எரிச்சலாக சொல்ல,

“இல்லம்மா நீ நினைக்கிற மாதிரி இல்ல, எனக்கு நம்ம புள்ளைங்க ஆறு பேரும் ஒன்னுதான். நான் தர்ஷினி வேற, ஆதி வேறன்னு நினைச்சது இல்ல. உனக்கு புரியுதா.?” அமைதியாக எடுத்து சொல்ல,

“இதெல்லாம் நான் நம்புவேன்னு நினைக்கிறீங்களா, சுத்தப்
பொய், உங்களுக்கு எப்பவும் அந்த ஆதிதான் முக்கியம். அவளை மாதிரி என் பொண்ணை நீங்க பார்த்துக்கிட்டது இல்லை. அதை நான் நிறைய இடத்துல கவனிச்சிருக்கேன். இல்லன்னு சொல்லாதீங்க நம்புறதுக்கு நான் ஒன்னும் சின்னபுள்ள இல்லை..”

“இல்லதான், எனக்கு தர்ஷியும் ஆதியும் வேற வேற தான். ஏன்னா அவ எனக்கு அம்மா. என் அம்மா ஸ்தானம் அவளுக்கு. என் உலகம் அவ. அந்த இடத்தை தர்ஷியால பிடிக்க முடியாது..” என சுந்தரம் அழுத்தமாகவும், நிதானமாகவும் சொல்ல, அதேநேரம் கதவைத் தள்ளிக்கொண்டு ஆதிராவை இழுத்துக்கொண்டு வந்தான் அனேகன்.

“டேய் என்னடா பண்ற, முதல்ல அவளை விடு” என ஏகனிடமிருந்து ஆதிராவை தன்பக்கம் இழுத்த அமரன், தம்பியை முறைக்க, “எங்கிட்ட முறைச்சு ஒரு பிரயோஜனமும் இல்ல” என தோளைக் குலுக்கியவன், தந்தையிடம் போய் நின்றுகொண்டான்.

அதற்குள் ஆதிராவிடம் தெரிந்த வித்தியாசத்தில் “என்னடா பண்ணி வச்சிருக்க..” என அமரன் ஆயாசமாக கேட்க,

“ம்ம்ம் பார்த்தா தெரியல, இந்த கூட்டத்தை பார்த்து மறுபடியும் இவ ஓடி போயிடக்கூடாதுனு தாலி கட்டியிருக்கேன், கல்யாணம் செய்துருக்கேன்..” என படு கூலாக சொல்ல, ‘என்ன’ என அப்போதுதான் அழுது கொண்டிருந்த ஆதிராவையும், அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் தாலியையும் பார்த்து அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
சுந்தரம் முன்னாடி கல்யாணம் நடக்கும்னு பார்த்தா ஏகன் ஆதிய கல்யாணம் பண்ணி இழுத்துகிட்டு வாரான் 🙄🙄🙄🙄🙄
 
  • Like
Reactions: Sampavi

Kalaivani shankar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2024
62
24
8
Karur
அடப்பாவி கல்யாணமே பண்ணியட்டான், இவன் வேண்டாம் ன்னு சொன்னோம் 🙄
 
  • Like
Reactions: Sampavi

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
518
150
43
Dindugal
டேய் ஏகா நீ சூப்பர் டா, இப்படித்தான் இருக்கணும்
 
  • Like
Reactions: Sampavi

Anusha Senthil

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2024
73
25
18
Coimbatore
அப்பாடா இப்போ தான் நிம்மதியா இருக்கு.
கல்யாணமே முடிஞ்சது
 
  • Like
Reactions: Sampavi

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 10, 2023
104
44
28
Trichy
ஏகன் சார் நீங்க போலீஸ், திருட்டு கல்யாணம் செஞ்சுருக்கீங்க 🙄
 
  • Like
Reactions: Sampavi

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
255
144
43
Theni
என்னடா செலவே இல்லாம கல்யாணம் பண்ணிட்ட😳
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அதிரடியா கல்யாணம் பண்ணிட்டு வந்து ஆராவ லாக் பண்ணிட்டானே... 🙄

இனி தர்ஷினி என்ன ஆட்டம் ஆடுவாளோ?