• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காற்று - 06

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
81
63
18
Dindigul
காற்று - 06

“டேய் பைத்தியம் பிடிச்சிருக்காடா உனக்கு? என்ன காரியம் பண்ணிட்டு வந்து நிக்கிற? இப்படியெல்லாம் கட்டாயத்தாலி கட்டினா அவ உன்கூட எப்படி வாழ்வா? இது சட்டப்படி அஃபன்ஸ், ஆதி நீ இவன் மேல கம்ப்ளைன்ட் கொடு, மத்ததை நான் பார்த்துக்குறேன்.” என சுந்தரம் மகனைத் திட்டியபடி ஆதிராவிடம் பேச,

அவளோ அங்கிருந்த யாரையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.

அவளுக்கு புனிதாவின் முன் நிற்கக்கூட முடியவில்லை.

உடலெல்லாம் கூசியது. அழுதபடியே நின்றிருந்தாள்.

ஆனால் அங்கிருந்த மற்றவர்களுக்கோ அப்படியெல்லாம் இல்லை. ஒருவித நிம்மதி உண்டானது.

புனிதாவை இனி ஏகன் பார்த்துக் கொள்வான் என்று தோன்றியது. அதனால் யாரும் எதுவும் பேசவில்லை.

புனிதாவுமே இப்போது பேச முடியாத சூழலில் தான் இருந்தார். ஏகன் வீட்டு பெரியவர்களை மீறி எதுவும் செய்யமாட்டான் என்ற நம்பிக்கையில்தான் இவ்வளவு பேசியது.

ஆனால் அவனோ மொத்தமாக அந்த நம்பிக்கையத் தகர்த்தது மட்டுமல்லாமல் ஆதிரையின் கழுத்தில் தாலியையும் கட்டியிருந்தான்.

“எல்லாரும் சேர்ந்து என்னையும் என் பொண்ணையும் ஏமாத்திட்டீங்க இல்ல, உங்களை நம்பின பாவத்துக்கு எனக்கு இதெல்லாம் தேவைதான். இனி என் பொண்ணுக்கு நான் என்ன பதில் சொல்வேன்..” என அழுதபடியே புனிதா தன் நாடகத்தை ஆரம்பிக்க,

ஆதிக்கு தாள முடியாத வேதனை. அவளால் ஏகன் செய்ததை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

இத்தனை பேர் மத்தியில் தன்னை குற்றவாளியாக்கிவிட்டானே என்ற கோபமும் வேதனையும் ஒரு சேர தாக்க, தன் கழுத்தில் இருந்த தாலியை கழட்ட போக, அவ்வளவு நேரமும் அவளையேப் பார்த்துக்கொண்டிருந்த ஏகனுக்கு அவள் எண்ணம் புரிய,

“நம்ம ஊர்ல பொண்ணுங்க கழுத்துல இருந்து தாலியை எதுக்கு கழட்டுவாங்களோ, அது இப்போ இங்க நடக்கும்..” என்றவன், யாரும் என்ன என யோசிக்கும் முன்னே, அங்கிருந்த கத்தியை எடுத்து வேக வேகமாக தன் கையில் அடுத்தடுத்து கோடுகளை கிழிக்க ஆரம்பித்தான்.

அவனின் இந்தச் செயலை யாரும் எதிர்பார்க்கவில்லை. அமரன் “டேய் என்னடா பன்ற.?” என தம்பியின் கையைப் பிடிக்க, ஆன்டர்ஷன் அவனிடமிருந்த கத்தியைப் பிடுங்க, ஆனாலும் ஏகன் திமிறிக்கொண்டே இருந்தான். இரு ஆண்களாலும் அவனை சமாளிக்க முடியவில்லை.

எல்லோரும் அய்யோ அய்யோ என்று அழ ஆரம்பிக்க, ஏகனின் கையில் வழிந்த ரத்தத்தைப் பார்த்தபடியே அதிர்ந்து, அந்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்திருந்தாள் ஆதிரா.

பதட்டத்திலும், அதிர்ச்சியிலும் அனைவரும் ஏகனிடம் சென்றிருக்க, ஆதிரா விழுந்ததை யாரும் கவனிக்கவில்லை.

ஒருவழியாக ‘விடு விடு’ என திமிறிய ஏகனை பிடித்து, சமாளித்து, அவன் கைக்கு முதலுதவி செய்து கட்டைப் போட்டு முடிக்க, அப்போதுதான் ஏகனுக்கு ஆதிராவின் சத்தமே அங்கு இல்லையென்று புரிந்தது.

கோபத்தில் வெளியில் சென்றிருப்பாள் என நினைத்து சுற்றியும் பார்க்க, ஆனால் அவளோ சுருண்டு போய் கீழே விழுந்திருந்தாள்.

கீழே விழுந்து கிடந்தவளின் தலையில் இருந்து உதிரம் கோடாய் வழிந்து தேங்கிக் கொண்டிருந்தது.

அதைப் பார்த்த ஏகனுக்கு இதயம் தன் துடிப்பை நிறுத்தியது போலொரு உணர்வு.

“அம்மாடீ..” என அந்த அறையே அதிரும் அளவிற்கு கத்தியவன், தன்னைச் சுற்றி இருந்த அனைவரையும் தள்ளிவிட்டு அவளிடம் செல்ல, அப்போதுதான் அனைவருமே ஆதிராவை கவனித்தனர்.

“கடவுளே” என பாக்யா நெஞ்சில் அடித்துக் கொள்ள, “இன்னும் நான் என்ன என்ன பார்க்கனுமோ” என வேதவல்லியும் அழ, ஏகன் அவளைத் தூக்கி கட்டிலில் கிடத்தினான்.

“ஆன்ட்.. சீக்கிரம் வாடா, என்னனு பார். ஓவர் ப்ளீடிங்க் ஆகுது..” என பதட்டமாக கூற,

“முதல்ல நீ அவளைக் கீழ விடு..” என தம்பியை அதட்டிய அமரன், ஆதிராவின் கன்னத்தில் தட்டி “ஆதிமா ஆதிக்குட்டி.” என பதட்டமாக அழைக்க, கண் விழிக்கவில்லை பெண்.

கீழே விழுந்ததில் கட்டிலின் விழிம்பில் மோதியிருந்தாள், அது இரும்புக் கட்டில் வேறு, அதன் விழிம்பு நேர் கோடாக நெற்றியில் கிழித்திருந்தது.

ஆதிராவுக்கு முதலுதவி செய்தபடியே, அமரனிடம் “அத்தான் முதல்ல எல்லாரையும் வெளியேக் கூப்பிட்டு போங்க ப்ளீஸ்..” என்றான் ஆன்டர்சன்.

அமரனுக்கும் அதுவே சரியெனப்பட, “அம்மா நீங்க பாட்டியை கூப்பிட்டு வெளியே போங்க, உங்க பதட்டமும் அழுகையும் அவனை சரியா ட்ரீட்மென்ட் செய்ய விடாது, ப்பா நீங்க இப்படி வந்து உட்காருங்க, மாமா அத்தையை வெளியே அழைச்சிட்டு போங்க..” என அனைவரையும் வெளியே இருக்கச் சொன்னவன், ஏகனுக்கு மட்டும் ஒன்றும் சொல்லவில்லை.

சொன்னாலும் கேட்கமாட்டான் என்று தெரியும்.

அடுத்த அரை மணி நேரம் மிகுந்த பதட்டத்துடன் அமர்ந்திருந்தனர் அனைவரும்.

ஆதிராவுக்கு தலையில் இரண்டு தையல் போட வேண்டியதாகிப் போனது. தையலிட்டு கட்டைப் போட்டவன், அவளுக்கு உறக்கத்திற்கான ஊசியையும் செலுத்தினான்.

நிச்சயம் அவள் நன்றாக தூங்கி பலநாட்கள் ஆகியிருக்கும். இவர்கள் தூங்கவும் விடமாட்டார்கள் என்று உணர்ந்தவன், ஆதிக்கு ஸ்லீப்பிங்க் டோஸ் போட்டுவிட்டான்.

அது அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை. அனேகன் கவனித்தான் தான், ஆனால் அது வலிக்கான ஊசி என்று நினைத்துவிட்டான்.

க்ளவுசை கழட்டியபடியே வந்து அமரனுக்கு முன்னால் நின்றவன் “அத்தான் அவளுக்கு மயக்கம் தெளிய லேட்டாகும், ஒன் வீக்கா சரியா தூங்கல, சாப்பிடல. ஏற்கனவே பயங்கர ஸ்ட்ரெஸ்ல இருந்துருக்கா, இப்போ அடியும் பட்டதுனால மயக்கம் வந்துடுச்சு.” என்றதும்,

“எப்போ எழுந்துப்பா..” என பதட்டமாக அனேகன் கேட்க,

“வலிக்கும் சேர்த்து ஊசி போட்டுருக்கேன், சலைன் வேற போய்ட்டு இருக்கு. அவளை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம், அவளா எழுந்துக்குறது தான் நல்லது. அப்போதான் அவளுக்கு மைண்ட் ரெஃப்ரெஷ் ஆகும். இல்லைன்னா மறுபடியும் மயங்கி விழ வாய்ப்பிருக்கு..” என அனேகனின் கேள்விக்கு, அமரனிடம்தான் பதில் சொல்லிக் கொண்டிருந்தான் ஆன்டர்சன்.

ஆன்டர்சன் சொல்வதும் சரியெனத்தான்பட்டது அங்கிருந்தவர்களுக்கு. சிறுபெண் எத்தனை கஷ்டங்களை தாங்குவாள். சுந்தரத்திற்கு குற்றவுணர்ச்சி கொன்றது.

‘இத்தனை பேர் இருந்தும், அவளை விட்டு விட்டோமே’ என மனதுக்குள்ளே மருகிப் போனார்.

“அத்தான் அக்காவுக்கு என்ன சொல்லப்போறீங்க. ஆதியைப்பத்தி சொல்ல வேண்டாம்.. பயந்துப்பாங்க, உடனே இங்க வரனும்னு அழுது அடம் பிடிப்பாங்க” என்றதும்,

“ஆன்ட், நீ சர்ஜரிக்கு ரெடி செய்… ஆல்ரெடி ஃபிக்ஸ் பண்ண டைம்ல சர்ஜரி நடக்கட்டும்.” என்றவன்,

தன் தந்தையை நோக்கி, “உங்க விருப்பம்தானே நடந்துருக்கு, நீங்க சர்ஜரி முடிஞ்சு வெளிய வரும் போது உங்க ஆசை மருமக உங்க முன்னாடி இருப்பா..” என அவருக்கு சொன்னவன்,

“அமர் அண்ணிக்கிட்ட இப்போ எதுவும் சொல்ல வேண்டாம், அவங்க இங்க வரவும் வேண்டாம். நீ தர்சனை அவங்க கூட இருக்க சொல்லு, சர்ஜரி முடிஞ்சதும் நீ வீட்டுக்கு போ. வெளிய இருக்குறவங்ககிட்டயும் இதை சொல்லு. நான் ஆதி கூட இருக்கேன்..” என கடகடவென முடித்துவிட்டு, ஆதிராவின் அருகிலிருந்த ஸ்டூலில் அமர்ந்துவிட்டான்.

இதெல்லாம் கேட்ட ஆன்டர்சனுக்கு கடுப்புதான். ஆனால் அவன் சொல்வதும் சரியாக இருக்க, அமரனிடம் கண்ணைக் காட்டிவிட்டு சர்ஜரிக்கான வேலையை ஆரம்பித்தான்.

“அப்பா.. நீங்க ஒன்னும் யோசிக்காதீங்க. ஆதி இனி எங்கேயும் போகமாட்டா” என்றவன் ஏகனை காட்டி, “அவன் விடவும் மாட்டான். அதனால டென்சன் ஆகாம இருங்க. நீங்க விழிக்கும் போது அவ உங்க முன்னாடி இருப்பா..” என்றதும்,

“ரெண்டு நாள் போகட்டுமே கண்ணா, இங்க நடந்த கூத்துலயும், இருக்குற பதட்டத்துலயும் என்னால நிம்மதியா இந்த சர்ஜரிய செஞ்சுக்க முடியாது, என் பொண்ணு வரட்டும், அவ வந்து என்னை அனுப்பி வைக்கட்டும்..” என சுந்தரமும் கூற, மற்ற மூவருக்குமே அது சரியெனத்தான் பட்டது.

இருந்தாலும் அமரன் ஆண்டர்சனை பார்க்க, அவன் முகத்திலும் இது தான் சரி என்பது போலவே விடை கிடைக்க, சரியென்று விட்டான்.

“அத்தான் அப்போ மாமாவுக்கு ரூம் சேஞ் பண்ணிடலாம், வெளிய இருக்குற எல்லாரும் இங்க வரது சரியா இருக்காது. ஆதியும் தூங்கணும்” என்ற ஆண்டர்சனிடம்,

“சரி.. இங்க ரூம் சேஞ் பண்ண என்ன பார்மாலிட்டீஸ்ன்னு சொல்லு, நான் வெளிய போய் அவங்ககிட்ட பேசுறேன்..” என அமரனும் கூற, இருவரும் சுந்தரத்திடம் சொல்லிக்கொண்டு வெளியில் வந்தனர்.

இப்போது அறைக்குள் பேரமைதி. ஆண்கள் இருவருக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

மயக்கத்தில் இருப்பவள் இருவருக்கும் உயிருக்கும் மேலானவள்.

தந்தை மகன் இருவருக்கும் பிரச்சனை வந்ததே இவளை வைத்துதான்.

யார் என்ன பேசுவது, எப்படி ஆரம்பிப்பது என இருவருக்கும் நேரம் மௌனத்திலேயே கழிய, அதை முதலில் கலைத்தது அநேகன் தான்.

“நீங்க சொல்லும் போது நான் கேட்டிருக்கணும்” என்ற மகனின் கரகரத்த குரலில் அதிர்ந்து நிமிர்ந்தார் சுந்தரம்.

“அவ கூட போன்னு நீங்க சொல்லும் போது, நான் போயிருக்கணும். அவளை தனியா விட்டுருக்கக்கூடாது. எல்லார் முன்னாடியும் ஆதி என்னை வேண்டாம்ன்னு சொன்ன கோபத்துல நானும் அவளை வதைச்சிட்டேன்..” என்றவனின் உடல் அழுகையில் குலுங்கியது.

“டேய் கண்ணா என்னடா நீ.. டேய் தம்பி..” என்ற சுந்தரத்திற்கும் அழுகைதான்.

அன்று ஆதி கிளம்பும் போது, ஏகன் IPS தேர்வில் வெற்றி பெற்று, பயிற்சிக்காக காத்திருந்தான். எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வரலாம் என்ற நிலையில் தான் இருந்தது சூழல்.

அப்படி இருக்கும் போது வீட்டில் நடந்த பிரச்சனைகள், அதில் ஆதியும் வேண்டாம் என்று சொல்ல, அநேகனுக்கும் கோபம் தாறுமாறாக ஏறியிருந்தது.

அந்த நேரம் ஆதி கிளம்பவும் அவளுடன் போ என சுந்தரம் கூற, அவன் மறுக்க, அவர் கெஞ்ச என நேரம் செல்ல, ஒருக்கட்டத்தில் அநேகனுக்கும் போகலாம் என்ற எண்ணம் வர, சரியாக அப்போது ஆதி மறுக்க, குறைந்த கோபம் மீண்டும் தலைக்கேற, சரிதான் போடி என விட்டு விட்டான்.

இப்போது போயிருக்கலாமோ என்று தோன்றியது. கோபத்தில் சில மாதங்கள் கண்டுகொள்ளவில்லைதான், ஆனால் அதன்பிறகு அவளை தன் பார்வை வட்டத்தில்தான் வைத்திருந்தான்.
அவளை தனியாக விட்ட அந்த சில நாட்களில் எவ்வளவு கஷ்டப்பட்டாளோ என யோசிக்கும் போதே நெஞ்சல்லாம் ரணமாக வலித்தது.

இப்போது அவன் கோபமெல்லாம் எங்கோ, வெகு தூரமாக சென்றிருந்தது. தன்னவளை எப்படி இதிலிருந்து மீட்பது என்றுதான் யோசித்துக் கொண்டிருந்தான்.

வீட்டிலிருந்த ஒவ்வொருவரும் ஒருவாறு கஷ்டப்படுத்தினால், நானும் என் பங்கிற்கு அவளை வதைத்துவிட்டேனே.

இப்போது அவள் என்ன நினைக்கிறாள், அவள் மனதில் என்ன ஓடுகிறது என்று கூட அவனால அனுமானிக்க முடியவில்லை.

ஆனால் இனி அவளை எங்கும் தனியாக விடுவதில்லை என்பதில் உறுதியாக இருந்தான்.

இனியும் அந்த வீட்டில் தன்னவளை இருக்கச்சொல்லி கட்டாயப்படுத்த அவனால் முடியாது. அவளுக்கா என்று மனம் மாறி, அவர்களை ஏற்று அங்கு செல்கிறாளோ அப்போது இருவரும் சேர்ந்தே செல்லலாம் என முடிவெடுத்தவன், சாமியண்ணாவிற்கு அழைத்து தன் குவார்டசை சுத்தம் செய்து, வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி ரெடி செய்ய சொன்னான்.

மகனின் எண்ணம் சுந்தரத்திற்கும் புரிந்தது. அவன் செய்வதில் அவர் தலையிடவில்லை. தன் செல்லமகள் தங்களோடு இல்லாவிட்டாலும், ‘அவளுக்கு பிடித்தவனோடு நிம்மதியான ஒரு வாழ்க்கை வாழட்டும், அதை தூர இருந்தே ரசித்து கொள்ளலாம்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.

வயது மிக்கவர்தான், அனுபவங்கள் பல பார்த்தவர்தான். ஆனால் இந்த சூழலை எப்படி கையாள்வது என்று அவருக்கு தெரியவில்லை. அமைதியாக இருவரையும் பார்த்தபடியே அமர்ந்திருந்தார்.
அநேகனின் ஒரு கை ஓய்வில்லாமல் ஆதியின் தலையை வருடியபடியே இருந்தது. மற்றொரு கை அவன் கன்னத்தை துடைத்துக் கொண்டிருந்தது.

அவன் முகத்தில் தெரிந்த வேதனையும், அவன் அழுகிறான் என்ற நிஜமும் தந்தையான அவருக்கு அப்படியொரு வலியைக் கொடுத்தது.

‘ஏன் இந்த சிறுபிள்ளைகளுக்கு இத்தனை வலியைக் கொடுக்கிறாய் கடவுளே’ என கடவுளிடம் மன்றாடினார்.

இவர்கள் வாழ வேண்டியவர்கள், நான் வாழ்ந்து முடித்தவன். அவர்களுக்கான வலியையும் வேதனையையும் எனக்கு கொடு, அவர்களை விடு என கெஞ்சி கொண்டிருந்தார் பரம்பொருளான ஈசனிடம்.

யாருமில்லை தனக்கு யாருமில்லை என்று உறுபோட்டு கொண்டிருப்பவளை எப்படி அதிலிருந்து வெளிக்கொண்டு வருவது என்று தான் இருவருக்கும் யோசனை.

அனைவரையும் பதட்டத்திலும், பயத்திலும் வைத்திருந்த ஆதிரா எழுந்து என்ன முடிவு எடுப்பாள்.

பொறுத்திருந்து பார்ப்போம்.

நமக்கு பிடித்தவர்களை சரியான புரிதலோடு காதல் செய்ய கற்றுக் கொள்வதே உண்மையான காதல்!
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
அச்சோ ஆதிராவுக்கு அடி பட்ருச்சே 😔😔😔😔😔😔அவ எவ்வளவு மன அழுத்தத்தில இருந்திருப்பா இப்படி மயக்கம் போட்டு விழுகுற அளவுக்கு 😔😔😔
 
  • Like
Reactions: Sailajaa sundhar

Anusha Senthil

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2024
73
25
18
Coimbatore
ஆதிரா உண்மையிலேயே பாவம். இனிமேலாவது அவளுக்கு எல்லாம் நல்லதா நடக்கட்டும்.
ஏகனே அவளை நல்லா பார்த்துக்கோ
 
  • Like
Reactions: Sailajaa sundhar

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
81
63
18
Dindigul
அச்சோ ஆதிராவுக்கு அடி பட்ருச்சே 😔😔😔😔😔😔அவ எவ்வளவு மன அழுத்தத்தில இருந்திருப்பா இப்படி மயக்கம் போட்டு விழுகுற அளவுக்கு 😔😔😔

Thank u so much sis
 

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
81
63
18
Dindigul
ஆதிரா உண்மையிலேயே பாவம். இனிமேலாவது அவளுக்கு எல்லாம் நல்லதா நடக்கட்டும்.
ஏகனே அவளை நல்லா பார்த்துக்கோ
Thank u sis
 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
518
150
43
Dindugal
ஆதி எழுந்து என்ன முடிவு எடுப்பான்னு நினைக்கும் போதே பக்குன்னு இருக்கு.
ஏகன் செஞ்சது சரியா இருந்தாலும் ஆதி அதை ஏத்துக்கனுமே. இந்த புனிதாவும் என்ன செய்ய போகுதோ
 
  • Like
Reactions: Sailajaa sundhar

Vimala

Vaigai - Avid Readers (Novel Explorer)
Feb 10, 2023
104
44
28
Trichy
ஏகன் செஞ்சதை என்னால தப்புன்னு சொல்ல முடியல. அவங்க நியாயம் அவங்களுக்கு.
ஆதிக்கு எப்படி அவ அக்காவோட லைஃப் முக்கியமோ, அதே போல ஏகனுக்கு அவனோட லைப் முக்கியம் அடஹி எப்படி அவன் காம்ப்ரமைஸ் பண்ணிக்க முடியும்.
 
  • Like
Reactions: Sailajaa sundhar

Pavithra Shanmugam

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2024
31
13
8
Erode
இங்க தப்புன்னு ஆதி, ஆரா, ஏகன் தவிர்த்து எல்லாரு மேலயும் தப்பூ இருக்கு, அமர் ஏன் ஆராவை கல்யாணம் பண்ணான். அதனாலத்தான் இவ்ளோ பிரச்சினையும்
 
  • Like
Reactions: Sailajaa sundhar

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ஆதிரா, ஏகன் ரெண்டு பேருமே பாவம்..😢
அவங்க வாழ்க்கைய மத்தவங்க கையில எடுத்து விளையாடி இவங்களுக்கு தண்டனை குடுத்திருக்காங்க 🙄
 
  • Like
Reactions: Sailajaa sundhar

Mayuri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 2, 2024
36
11
8
Bangalore
ஆதி எழுந்து என்ன பண்ணுவாளோ? ஏகன் எப்படி சமாளிப்பானோ?
தர்ஷினி வந்து இன்னும் என்னென்ன டிராமா பண்ணப்போறாளோ?

Waiting for next epi sis 👍
 
  • Like
Reactions: Sailajaa sundhar

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
81
63
18
Dindigul
ஆதி எழுந்து என்ன முடிவு எடுப்பான்னு நினைக்கும் போதே பக்குன்னு இருக்கு.
ஏகன் செஞ்சது சரியா இருந்தாலும் ஆதி அதை ஏத்துக்கனுமே. இந்த புனிதாவும் என்ன செய்ய போகுதோ
நன்றி சிஸ்
 

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
81
63
18
Dindigul
ஏகன் செஞ்சதை என்னால தப்புன்னு சொல்ல முடியல. அவங்க நியாயம் அவங்களுக்கு.
ஆதிக்கு எப்படி அவ அக்காவோட லைஃப் முக்கியமோ, அதே போல ஏகனுக்கு அவனோட லைப் முக்கியம் அடஹி எப்படி அவன் காம்ப்ரமைஸ் பண்ணிக்க முடியும்.
மிக்க நன்றி சிஸ்
 

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
81
63
18
Dindigul
இங்க தப்புன்னு ஆதி, ஆரா, ஏகன் தவிர்த்து எல்லாரு மேலயும் தப்பூ இருக்கு, அமர் ஏன் ஆராவை கல்யாணம் பண்ணான். அதனாலத்தான் இவ்ளோ பிரச்சினையும்
னன்றி மா
 

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
81
63
18
Dindigul
ஆதிரா, ஏகன் ரெண்டு பேருமே பாவம்..😢
அவங்க வாழ்க்கைய மத்தவங்க கையில எடுத்து விளையாடி இவங்களுக்கு தண்டனை குடுத்திருக்காங்க 🙄
நன்றி சிஸ்
 

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
81
63
18
Dindigul
ஆதி எழுந்து என்ன பண்ணுவாளோ? ஏகன் எப்படி சமாளிப்பானோ?
தர்ஷினி வந்து இன்னும் என்னென்ன டிராமா பண்ணப்போறாளோ?

Waiting for next epi sis 👍
மிக்க நன்றி சிஸ்