• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காற்று - 07

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
81
63
18
Dindigul
காற்று -07

அமரன் வெளியில் வரும்போது பிரகாஷும் புனிதாவும் அங்கு இல்லை.

அவர்களை எப்படி சமாளிப்பது என்ற டென்சனில் வந்த அமரனுக்கு, அவர்கள் இல்லாததே மிகவும் நிம்மதியாக இருந்தது.

புனிதா என்ன பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார் என்று பயந்து கொண்டுதான், அமரன் வெளியில் வந்தது. அவர் இல்லை என்றதும் தன்னால் ஒரு ஆசுவாசம் அவனுக்குள்.

ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு தாயிடம் வந்தான் அமரன்.

நடந்து முடிந்ததை நினைத்து பாக்கியாவிற்கு மனமே ஆறவில்லை.

தன் தம்பி பிள்ளைகள் என்பதையும் தாண்டி அவருக்கும் அவர்கள் இருவருமே பிள்ளைகள்தான்.

பிரகாஷ் ஆரம்பத்தில் இருந்தே தனியாக இருந்ததால், தர்ஷினியும், தர்ஷனும் அவ்வளவாக பெரியவர்களிடம் ஒட்ட மாட்டர்கள்.

ஆனால் ஆராவும் ஆதியும் அப்படியில்லை. அவர்களது உலகமே இவர்கள்தான்.

பெண் பிள்ளைகள் இல்லாத தன் வீட்டில், தம்பி மகள்கள் இருவரும்தான், அந்த வீட்டின் மகாலட்சுமி என்று சுந்தரமும் பாக்யாவும் அடிக்கடி பேசிக் கொள்வார்கள்.

அப்படி வளர்த்த பிள்ளைகளை அவர்களே ஒதுக்குவார்கள் என்று கனவிலும் நினைக்கவில்லை.

அதிலும் அமரன் செய்த செயல் அந்த நேரத்தில் யாருக்கும் ஏற்புடையதாகவே இல்லை. ஆனால் அதற்காக அவன் செய்தது தவறு என்றும் அவர்கள் நினைக்கவில்லை.

கிட்டத்தட்ட பெரியவர்களின் எண்ணமும் அதுவாகத்தான் இருந்தது. ஆனால் பொறுமையாக செய்யலாம் என்று நினைத்திருந்ததனர்.

ஆராதனாவின் மனநிலை புரிந்து, சில காலம் காத்திருந்து செய்திருக்கலாம் என்றுதான் இப்போதும் அவர்கள் எண்ணம்.

பெரியவர்களிடம் பேசி பிரச்சினையை சுமூகமாக முடித்திருக்கலாம், மேலும் ஆதிராவும் அநேகனும் இதில் சிக்கி தவித்திருக்க மாட்டார்கள்.

புனிதாவும் தேவையில்லாமல் ஒரு பிரச்சனையை இழுத்து விட்டிருக்கமாட்டாள்.

அன்று அவள் ஆடிய ஆட்டத்தை இப்போதும் அவர்களால் மறக்க முடியவில்லை.

எங்கே அவளையும் அவள் பிள்ளைகளையும் ஒதுக்கி விடுவோமோ என்ற பயத்தில் அவள் செய்த செயல் குடும்பத்தையே பிரித்துவிட்டது.

இனியும் அவள் சும்மா இருப்பாள் என்று தோன்றவில்லை. நிச்சயம் அவள் வீட்டாட்களை வைத்து பிரச்சினை செய்வாள். பிள்ளைகளை இங்கே விடமாட்டாள். இப்படி ஏகப்பட்ட பிரச்சினைகளை செய்யத்தான் யோசிப்பாள். ஆனால் அதற்காக இனியும் ஆதியை விடும் எண்ணமில்லை யாருக்கும்.

அப்படியே பேசினாலும் அநேகனிடம் பேசிக்கொள்ளட்டும் என்றும் நினைத்துக் கொண்டார்.

அடுத்து வேதவல்லியை பற்றி சொல்லவே வேண்டாம். ஏற்கனவே பெற்றவர்களை இழந்து தவித்த பிள்ளைகளை, தாமும் வருத்திவிட்டோம் என்ற உண்மை அவரை கொல்லாமல் கொன்றது.

தன் மகனுக்கு தன்மேல் இருந்த நம்பிக்கையை கொன்றுவிட்டோம் என்ற எண்ணமே அவரைத் தூங்கவிடாமல் துரத்திக் கொண்டிருந்தது. அது இப்போதுதான் சமநிலை அடைந்திருந்தது.

இனி அவர்கள் பேத்தியை பேரன் பார்த்துக் கொள்வான் என்ற முடிவுக்கு வந்துவிட்டார். அதனால் அதுவரை மனதை அழுத்திய பாரம் மெல்ல விலகுவதை அவரே உணர்ந்தார்.

அதிலும் ஆதிரா அவர்களை விட்டு மொத்தமாக சென்றது, அந்த வயதான தம்பதிகளை மிகவும் கலவரப்படுத்தியிருந்தது.

எத்தனையோ முறை அவர்கள் கூப்பிட்டும், ஆராதனாவின் வாழ்க்கையை முன்னிறுத்தி வராமல் இருக்க, கடைசியாக சுந்தரத்தின் உடல்நிலையை காரணம் காட்டித்தான் வரவைக்க முடிந்தது.

ஒரு வழியாக ஆதிரா திரும்பி வந்தது எல்லோருக்குள்ளும் ஒருவித நிம்மதியை தோற்றுவித்தது.

அதோடு ஏகன் அவளை திருமணம் செய்தது எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சிதான், இனி அவள் தனியில்லை.

நல்லதோ கெட்டதோ இனி ஏகன் பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதி வந்திருந்தது.

பெண்கள் இருவரும் அவரவர் சிந்தனையில் இருக்க அவர்களுக்கு முன் அமரன் வந்து நின்றான்.

மகனை நிமிர்ந்து பார்த்த பாக்யாவிடம், உள்ளே நடந்ததை சொன்னவன் தந்தையின் முடிவையும் கூறி விட, சுந்தரத்தை மீறி இருவராலும் பேச முடியாது. அதனால் அமைதியாக கேட்டுக் கொண்டார்கள்.

அடுத்த அரைமணி நேரத்தில் சுந்தரத்திற்கு, பக்கத்தில் உள்ள மற்றொரு அறையையே ஏற்பாடு செய்திருந்தான் ஆண்டர்சன்.

தன் தாயை தந்தைக்கு உதவியாக அங்கேயே விட்டு விட்டு வேதவள்ளியை மட்டும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான் அமரன்.

சரியாக வீட்டிற்கு கிளம்பும் நேரம்தான், வீட்டில் மனைவி மட்டும் தனியாக இருப்பாள் என்ற எண்ணமே அமரனுக்கு வந்தது.

புனிதாவும் பிரகாஷும் இப்போது வீட்டிற்கு சென்றிருப்பார்கள், அவர்கள் சென்று அங்கு என்னென்ன பிரச்சனைகளை செய்து கொண்டிருக்கிறார்களோ என்ற பயம் வேறு அமரனை ஆட்டிப்படைத்தது.

புனிதா ஆராவிடம் என்னென்ன பேசுவாரோ என்று நினைக்கும் போதே கணவனாக அவனுக்கு உள்ளமெல்லாம் பதறியது.

அதனால் பாட்டியை அழைத்துக் கொண்டு வேகமாக வீட்டிற்கு கிளம்பினான்.

அவன் பயந்தது போல எல்லாம் வீட்டில் ஒன்றும் நடக்கவில்லை. அவர்கள் இருவரும் இன்னும் வீட்டிற்கே வரவில்லை.

தாத்தாவும் ஆராதனாவும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்க, அவர்கள் இயல்பாய் அமர்ந்திருப்பதை பார்த்தே, இருவருக்கும் ஹாஸ்பிடலில் நடந்தது எதுவும் தெரியவில்லை என்று புரிந்துகொண்டான்.

பாட்டியிடமும் ‘இப்போது எதையும் சொல்ல வேண்டாம்’ என முனுமுனுத்துவிட்டு, மனைவிக்கு அருகில் சென்று அமர்ந்தான்.

“என்ன அத்தான்.. இவ்ளோ டயர்டா இருக்கீங்க..” என மேல்மூச்சு வாங்க ஆரா கேட்க,

“ஒன்னுமில்லடா.. அப்பாவுக்கு பிபி ஹை ஆகிடுச்சுன்னு சர்ஜரியை ரெண்டு நாள் கழிச்சு வச்சிக்கலாம்னு சொல்லிட்டான் உன்தம்பி. ஆதிக்கும் ரொம்ப முக்கியமான ஒரு கேஸ், அவ ஃப்ரண்ட் கூப்பிட்டான்னு சென்னை கிளம்பிட்டா, அவளை ஃப்லைட் ஏத்திவிட்டுட்டு வர லேட்டாகிடுச்சு. அதான் டயர்ட்.” என நீளமாக பேச,

“என்னத்தான் சொல்றீங்க, மாமாவுக்கு இப்போ எப்படி இருக்கு, ஆதி ஏன் எங்கிட்ட சொல்லாம போயிட்டா, மறுபடியும் போயிட்டாளா? திரும்ப வரமாட்டாளா.? வரவே மாட்டாளா.?” என படபடவென கேட்க,

“ம்ச்.. ஆரா இப்படி எல்லாத்துக்கும் பதட்டப்படக்கூடாதுனு எத்தனை தடவை சொல்லிருக்கேன். அப்பாவுக்கு சர்ஜரி நடக்கும் போது ஆதி கண்டிப்பா இருப்பா, போதுமா. அவ ஃப்ரீயானதும் உனக்கு கால் பண்ணுவா, அதுவரைக்கும் பொறுமையா இரு. நீ அவளை தொந்தரவு பண்ணாதே, உன் டென்சனும் சேர்ந்துக்கும் அவளுக்கு.” என அமரன் மனைவிக்கு புரிய வைக்க,

“நிஜமாவே வந்துடுவாளா அத்தான்.” என நம்பிக்கையில்லாமல் மீண்டும் கேட்க, அந்த வார்த்தையில் இருந்த தவிப்பும், முகத்தில் இருந்த வலியும் கணவன் என்பவனை உயிருடன் கொன்றது.

“என்மேல நம்பிக்கை இல்லையா ஆராமா. இல்ல ஆதி மேல நம்பிக்கை இல்லையா.? நமக்காக இல்லைன்னாலும், அப்பாவுக்காக கண்டிப்பா ஆதி வந்துடுவா. நம்புடா” என மேலும் எடுத்துக்கூற, மனதே இல்லாமல் அதை நம்பியபடி தன்னறைக்கு சென்றாள் ஆராதனா.

அவள் நகரவும் ‘ஷப்பா’ என ஒரு பெருமூச்சை வெளியிட்டான் அமரன்.
வந்ததில் இருந்து மனைவியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த பெரியவருக்கு, பேரன் பேத்தியிடம் சொன்னது அத்தனையும் பொய் என புரிந்தது.

காரணம் வேதவல்லியின் முகத்தில் தெரிந்த பதட்டம்தான். ‘அப்படியென்றால் அங்கு என்ன நடந்திருக்கும், மீண்டும் ஆதிரா சென்றுவிட்டாளா.? சென்றே விட்டாளா? அய்யோ’ என்றானது அவருக்கு.

சில நிமிட அமைதிக்குப் பிறகு, ஆராவின் காதில் விழாதவாறு மருத்துவமனையில் நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டான் அமரன்.

அதைக்கேட்டதும் பெரியவருக்கு மனம் லேசாகிப் போனது. இனி தன் பேத்தி தங்களை விட்டு எங்கும் செல்லமாட்டாள் என்பதில் அவருக்கு அத்தனை நிம்மதி. உடலும் தளர்ந்து மனமும் இறகைப் போல லேசாகிப் போனது.

ஆனால் வேதவல்லியின் மனம் அப்படியில்லை. தன் சின்ன மருமகள அமைதியாக இருக்கக்கூடையவள் அல்ல, இப்போது ஏன் அமைதியாக இருக்கிறாள், ஏதோ பெரிதாக பிரச்சினை செய்யப்போகிறாளோ என மனமெல்லாம் பதைபதைத்தது.

“வேதா நீ பயந்துக்குற மாதிரி எல்லாம் எதுவும் நடக்காது. உன் மகன் அப்படியெல்லாம் விட்டுடமாட்டான். அதையும் இதையும் யோசிச்சு உடம்ப கெடுத்துக்காத, நான் ஓரெட்டு ஹாஸ்பிடல் போய் பார்த்துட்டு வரேன்.” என கிளம்ப பார்க்க,

“தாத்தா அதெல்லாம் வேண்டாம், எங்கேயும் போகவும் வேண்டாம். அத்தை எப்படியும் பிரச்சினை செய்வாங்க, அவங்க வீட்டு ஆளுங்களையும் கூப்பிட்டு வருவாங்க. அந்த நேரம் நீங்க இருந்தாதான் சரியா இருக்கும். சர்ஜரி அப்போ மட்டும் போனா போதும்.” என அமரன் சொல்லிக்கொண்டே எழுந்தான்.

“ஆராவுக்கு இந்த கூத்து எதுவும் இப்போ தெரிய வேண்டாம் பாட்டி, அப்படி தெரிஞ்சா அவளை சமாளிக்கிறது ரொம்பவே கஷ்டம். அதனால நான் அவளை ஆன்ட்ரசன் வீட்டுல ரெண்டு நாள் விட்டுட்டு வரேன். பாப்பாவை ஸ்கூல்ல இருந்து அப்படியே கூப்பிட்டு போறேன்..” எனவும்,

அந்த பெரியவருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. பேரன் சொல்வதும் சரிதான். நிறைமாத கர்ப்பவதியாக இருக்கும் பேத்தியின் உடல்நிலைதான் முக்கியம் என்பதால் அதற்கு சரியென்றுவிட்டார்.

பின் தன்னவளை தேடி சென்றவன், அங்கு பெரும் குழப்பத்துடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்தான். அவள் யோசிக்க ஆரம்பித்தாலே பிரச்சினைதான் என்பதை உணர்ந்தவன், “ஆரா.. ஆரா சீக்கிரம் கிளம்பு, ஏகனுக்கு ஆக்சிடெண்ட் ஆகிடுச்சாம். உன்னை ஆன்ட்ரசன் வீட்டுல விட்டுட்டு நான் கிளம்பனும்..” என அவசரம் அவசரமாக சொல்வது போல் சொல்ல, அவளுக்குள்ளும் பதட்டம் தொற்றிக்கொண்டது.

“என்னத்தான்.. ஏன் என்னாச்சு.. வீட்டுல எல்லாருக்கும் தெரியுமா.? எப்போ எப்படி.?” என வரிசையாக கேள்வி கேட்க,

“ம்ச் ஆரா எவ்வளவு கேள்வி கேட்குற, எனக்குமே என்னாச்சுன்னு தெரியாது. எதுவும் தெரியாம வீட்டுல இருக்கவங்ககிட்டயும் ஒன்னும் சொல்லமுடியாது. நீயும் யாருக்கும் சொல்ல வேண்டாம். நான் பார்த்துட்டு உனக்கு சொல்றேன். அதுவரைக்கும் அமைதியா இரு போதும்..” என கண்டிப்பாக சொல்ல, ஆராவும் பதட்டமாகவே தலையை ஆட்டினாள்.

“ஆனா அங்க ஏன் அத்தான். இங்க என்ன பிரச்சினை..” எனவும்,

“அம்மா ஹாஸ்பிடல்ல இருக்காங்க. மாமாவும் அத்தையும் ஊருக்கு போய்ட்டாங்க. நானும் அங்க என்ன நிலவரம்னு தெரியாம வர முடியாது. பாட்டியும் தாத்தாவும் உன்னை பார்த்துக்க முடியுமா? ஒரு எமர்ஜென்சின்னா என்ன செய்ய முடியும். அங்க போனா ஆன்டி எல்லாம் பார்த்துப்பாங்க. அவனும் கூட இருப்பான். நானும் நிம்மதியா இருப்பேன்..” என சோர்வாக முடிக்க,

அதன்பிறகு எதற்கும் கேள்வி கேட்கவில்லை ஆராதனா. தனக்கும், மகளுக்கும் தேவையானதை எடுத்துக்கொண்டு கணவனுடன் கிளம்பிவிட்டாள்.

உண்மையில் அமரனுக்கு மூச்சுவிடக்கூட நேரமில்லை. அவன் பயமெல்லாம் புனிதா என்ன பிரச்சினை செய்வாரோ என்றுதான்.

ஆதியும் ஏகனும் காயங்கள் இல்லாமல் இருந்திருந்தால் கூட, அவனால் சமாளித்திருக்க முடியும். இப்படி சுயநினைவே இல்லாமல் இருப்பவளைப்பற்றி பேசி, ஆராவை டென்சனாக்க அவன் தயாரில்லை. அவனுக்கு அவன் மனைவியும், குழந்தைகளும் மிக முக்கியம். அதனால்தான் ஆன்டர்சனிடம் பேசி ஆராவை அங்கு அழைத்து செல்கிறான்.

வீட்டு ஆட்கள் அனைவரும் புனிதா என்ன செய்வாரோ என்ற பயத்திலேயே இருக்க, அவரோ மருத்துவமனையில் இருந்து நேராக தன் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

பிரகாஷும் எவ்வளவோ எடுத்துக் கூறியும், பேசியும் எதற்கும் பதில் சொல்லவில்லை. அமைதியாகவே இருக்க, இப்போது மனைவியை நினைத்து அவருக்கும் பயம் வந்துவிட்டது.

பெரிய வீட்டிற்கு வந்த தர்சனுக்கு, வீட்டின் இந்த பேரமைதி வித்தியாசமாகப்பட்டது. ஆராவைத் தேடி செல்ல, அவள் இல்லை என்ற பதில் அவனுக்கு உவப்பாக இல்லை.

கண்டிப்பாக ஏதோ நடந்திருக்கிறது என உணர்ந்தவன், தங்கள் வீட்டிற்கு செல்ல, அவன் நினைத்தது சரிதான் என்பது போல பிரகாஷ் அனைத்தையும் மகனிடம் சொல்லிவிட்டார்.

கேட்டவனுக்கு அப்போதுதான் நிம்மதியே வந்தது. அதை வெளிக்காட்டாமல் தன் தாயிடம் சென்றவன் “ம்மா எல்லாரும் பேசுறாங்கன்னு நீங்களும் பேசக்கூடாது. எனக்கு ஒரு உண்மையை மட்டும் சொல்லுங்க. உங்களுக்கு நாங்க நிம்மதியா சந்தோசமா வாழ்ற வாழ்க்கை வேணுமா? இல்லை காலம் முழுக்க சண்டைபோட்டு நிம்மதியில்லா வாழ்ற வாழ்க்கை வேணுமா.?” என தர்சன் அழுத்தமாக கேட்க,

“டேய் என்னடா பேசுற.? நீங்க நல்லா இருந்தாதானே எங்களுக்கு சந்தோசம். நீங்க வாழுற வாழ்க்கையைப் பார்த்துதானே எங்க காலம் ஓடும்..” என பரிதவிப்பாக புனிதா கேட்க,

“ஏகன் அத்தானை அக்கா மேரேஜ் செஞ்சா அப்படியொரு வாழ்க்கையை வாழமாட்டா ம்மா. அவருக்கு ஆதிக்காவை தான் பிடிக்கும். அவளுக்கும் ஏகன் அத்தான்தான் உயிர். ஆனா தர்சினிக்கு அப்படி இல்லம்மா. ஆதி அக்காவை ஜெயிக்க அத்தானை கல்யாணம் செஞ்சிக்கிறேன்னு சொல்றா. இது எப்படி சரி. ரெண்டு பேரோட லைஃபை தட்டி பறிச்சு இவ எப்படிம்மா நிம்மதியா, சந்தோசமா வாழ முடியும்.” என மிக அழுத்தமாகவும், நிதானமாகவும் தர்சன் பேச,

அந்த உண்மையை ஜீரணிக்க முடியாமல் திணறிப்போனார் புனிதா. மகளின் இந்த கோபத்திற்கும், பழி வெறிக்கும் அவரும் ஒரு காரணம் தானே. மகனுக்கு என்ன பதில் சொல்ல என தெரியாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.

“ப்பா.. பார்த்துகோங்க. நான் கிளம்பறேன். அங்க பாட்டியும் தாத்தாவும் மட்டும்தான் இருக்காங்க. சீக்கிரம் சரியாகி அங்க வாங்க. ஆராக்கவை அத்தான் ஆன்ட் அண்ணா வீட்டுக்கு கூப்பிட்டு போயிட்டாங்க..” என்று நிறுத்தியவன், “அம்மாவுக்கு பயந்து..” என முடிக்க, புனிதாவிற்கு முகமே விழுந்துவிட்டது.

“என்னையும், தர்சினியையும் யாராவது இப்படி ட்ரீட் பண்ணா நீங்க சும்மா இருப்பீங்களா ம்மா, ஆனா அவங்களுக்கு நான் இருக்கேன், அவங்க ரெண்டு பேரும் என்னோட அக்காங்க. நான்தான் அவங்களை பார்த்துக்கனும், அந்த கடமை எனக்கு இருக்கு. இனியும் நீங்க அவங்க ரெண்டு பேரையும் வெறுத்தா, நான் உங்களை வெறுத்துடுவேன்.” என்றுவிட்டு வீட்டிலிருந்து வெளியேறிவிட்டான் தர்ஷன்.

மகன் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து இருவராலும் மீள முடியவில்லை. மிரட்டலுக்காக சொல்லவில்லை தர்சன். அவனுக்கு ஆராவும், ஆதியும் எவ்வளவு முக்கியம் என்று அவர்களுக்கே தெரியும். அப்படியிருக்க அவன் உண்மையாகத்தான் சொல்லி செல்கிறான் என்று புரியாதவர்கள் இல்லையே.

அடுத்து என்ன செய்வது என இருவரும் யோசிக்க ஆரம்பித்தனர்.




 

Anusha Senthil

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 1, 2024
73
25
18
Coimbatore
அமரன் இப்படி அவசரமா கல்யாணம் செஞ்சிருக்கான்னா கண்டிப்பா ஒரு ரீசன் இருக்கும்
அது என்னவா இருர்க்கும்
 
  • Like
Reactions: Sailajaa sundhar

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
518
150
43
Dindugal
தர்சன் மாஸ் பண்ணிட்டான்.
இந்த தர்ஷினி வந்து என்ன குதி குதிப்பாளோ
 
  • Like
Reactions: Sailajaa sundhar

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
அமரனோட பயம் நியாயமானது தானே... புனிதா வாய் எப்படி வேணா பேசும்.
தர்ஷினி என்ன ஆட்டம் ஆடுவாளோ?
தர்ஷன் சூப்பர்டா செல்லம் 😍
தம்பி தங்கக் கம்பிடா நீ 🤩
 
  • Like
Reactions: Sailajaa sundhar

Mayuri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 2, 2024
36
11
8
Bangalore
தர்ஷன் மாஸ்டா நீ ❤️
சூப்பரா செக் வெச்சிட்டடா உங்க அம்மாவுக்கு 😍
அப்படியே உன் தங்கச்சிக்கும் ஒரு செக் வை 😎
 
  • Like
Reactions: Sailajaa sundhar

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
81
63
18
Dindigul
அமரன் இப்படி அவசரமா கல்யாணம் செஞ்சிருக்கான்னா கண்டிப்பா ஒரு ரீசன் இருக்கும்
அது என்னவா இருர்க்கும்

Thank u sis
 

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
81
63
18
Dindigul
அமரனோட பயம் நியாயமானது தானே... புனிதா வாய் எப்படி வேணா பேசும்.
தர்ஷினி என்ன ஆட்டம் ஆடுவாளோ?
தர்ஷன் சூப்பர்டா செல்லம் 😍
தம்பி தங்கக் கம்பிடா நீ 🤩

Thank u sis
 

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
81
63
18
Dindigul
தர்ஷன் மாஸ்டா நீ ❤️
சூப்பரா செக் வெச்சிட்டடா உங்க அம்மாவுக்கு 😍
அப்படியே உன் தங்கச்சிக்கும் ஒரு செக் வை 😎

Thank u sis