• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காற்று - 08

Sailajaa sundhar

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 13, 2024
81
63
18
Dindigul
காற்று - 08

தர்ஷன் அடுத்து நேராக சென்றது மருத்துவமனைக்குத்தான். வந்தவன் ஆன்டர்சன் மூலம் நடந்த அனைத்தையும் தெரிந்து கொண்டான்.

“தர்ஷா இதெல்லாம் பார்க்கும்போது ஆதி இங்க வராமலே இருந்திருக்கலாம்னு தோனுது, அவ எத நினைச்சு பயந்தாளோ, அதுதான் இப்போ நடந்திருக்கு.” என்றான் ஆன்டர்ஷன் வருத்தமாக.

“ம்ம்.. பயந்து பயந்து எத்தனை நாள் ஒதுங்கி இருக்க முடியும் அண்ணா. ஆதிக்காவோட பயத்தைதான் அம்மா அவங்களுக்கு சாதகமா பயன்படுத்திக்கிறாங்க.” என்ற தர்ஷனுக்கு பழைய நினைவுகள்.

பழைய நினைவுகளில் தர்ஷன் கலங்குவதை உணர்ந்த ஆன்டர்சன், “விடு தர்ஷா.. இனி யார் நினைச்சாலும், ஏன் ஆதியே நினைச்சாலும் இங்க இருந்து போக முடியாது. சின்னத்தான் விடமாட்டார்.” என தர்ஷனை சமாதானம் செய்துவிட்டு,

“வா… ஆதி எழுந்துட்டாளான்னு பார்த்துட்டு வரலாம். ஏகன் அத்தான் அங்கேயே இருக்கார். அவருக்கும் ரெஸ்ட் வேனும். நீ இருந்தா அவர் ரெஸ்ட் எடுக்க ஓக்கே சொல்வார்..” என்றதும்,

தர்ஷனும் “சரிங்கண்ணா..” என, இருவரும் ஆதிராவின் அறைக்கு வந்தார்கள்.

ஆதி இன்னும் எழுந்திருக்கவில்லை. அவளின் இடது பக்கம் அமர்ந்திருந்த ஏகனுமே, அந்த பெட்டில் தலையை சாய்த்து நல்ல உறக்கத்தில் தான் இருந்தான்.

இருவரையும் பார்த்துவிட்டு, “என்ன செய்யலாம் அண்ணா, எழுப்பட்டுமா?” என தர்ஷன் கேட்க,

“ம்ம் அத்தானை மட்டும் எழுப்பு. ஆதி தூங்கட்டும்..” என ஆன்டர்சன் கூற,

தர்ஷனும் “அத்தான்.. அத்தான்.” என சத்தமே வராமல் மெல்ல உசுப்ப, ஏகனும் இரண்டாவது உசுப்பலில் விழித்துவிட்டான்.

அங்கு தர்ஷனைப் பார்த்து சிறிதாக புன்னகைத்தவன் “வா தர்ஷா எப்போ வந்த.?” என முகத்தை துடைத்தபடி கேட்க,

“இப்போதான் அத்தான். உங்களுக்கு ஓக்கேவா. அக்காவை எழுப்பலாமா.?” எனவும்,

“எனக்கு என்ன? நான் நல்லாத்தான் இருக்கேன். உன் அக்காவை எழுப்பலாமா வேண்டாமான்னு உன் அண்ணனைத்தான் கேட்கனும்” என்றான் அசட்டையாக.

ஏகனின் பேச்சு இருவருக்கும் குற்ற உணர்ச்சியை உண்டாக்க, “சாரித்தான்” என்றனர் இருவரும் ஒரு சேர.

“ம்ச்..” என்றவன், “அவளை எழுப்ப வேண்டாம், மர்னிங்க்ல இருந்து இங்கேயே இருக்கேன். டூ அவர்ஸ் நான் ஆஃபீஸ் போய்ட்டு வரேன். அதுவரை நீ இங்க இரு.” என தர்ஷனிடம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சாமி சார் உள்ளே வர,

“வாங்க சாமிண்ணா.. எல்லாம் ரெடியா.?” என்றதும்,

“எல்லாம் பக்கவா ரெடி சார், ஆனா.?” என அவர் இழுக்க,

“என்னாச்சு சாமிண்ணா..” என சற்றே கூர்மையாக கேட்க,

“சீரியஸா எல்லாம் இல்ல சார், நம்ம வெற்றி சார், அன்பு சார் எல்லாம் சேர்ந்து தான் வீட்டை ரெடி பண்ணிருக்காங்க. உங்களுக்கு நிறைய சர்ப்ரைஸ் வச்சிருக்காங்களாம், என்னையும் உங்ககிட்ட சொல்லக்கூடாது சொன்னாங்க, அப்புறம் நம்ம பாண்டிமீனா மேடம் வெளிய வெயிட் பண்றாங்க.” என சிறு சிரிப்புடன் கூச்சமாக கூற,

“ஓ.. காட். அதுக்குள்ள எப்படி எல்லாருக்கும் தெரிஞ்சது சாமிண்ணா. உங்க வேலையா.?” என அநேகனும் சிரிப்புடன் கேட்க,

“நீங்க பேசும் போது அவங்க ரெண்டு பேரும் என் பக்கத்துலதான் சார் இருந்தாங்க. ஃபர்ஸ்ட் நான் சொல்லல, அப்புறம்..” என்றவர், “பாண்டிமீனா மேடம் கண்டுபிடிச்சிட்டாங்க” என்றார் அசட்டு சிரிப்புடன்.

“சாமிண்ணா, இதென்ன சின்ன பசங்க மாதிரி, ஒரு ஹையர் பொசிஷன்ல இருந்துக்கிட்டு..” என அநேகன் ஆரம்பிக்கும் போதே,

“சாமிண்ணா எவ்ளோ நேரம் என்னை வெளிய வெயிட் பண்ண வைப்பீங்க, உங்க வெற்றி சார் கூட சேர்ந்து என்னை பழி வாங்குறீங்களா.” என படபடவென பேசியபடி பாண்டிமீனா உள்ளே வர, அநேகனுக்கு கோபமும் சிரிப்பும் ஒன்றாக வந்தது.

“என்ன மீனா இதெல்லாம்..” என அவன் ஆரம்பிக்கும் போதே

“பாஸ்.. பாஸ்.. அப்படியே நிறுத்திடாதீங்க, இவங்களை நீங்க திட்டுறதை கேட்க ஓடோடி வந்த என்னை ஏமாத்திடாதீங்க பாஸ், கமான் ஸ்டார்ட்..” என வெற்றியும், அவனுக்கு பின்னே அன்புவும் வர, அநேகனுக்கு எங்கே போய் முட்டிக்கொள்ள என்றே தெரியவில்லை.

“டேய் சின்னபசங்களாடா நீங்க எல்லாம்..” என கோபமாக கேட்பது போல் கேட்க,

“ஸார் உங்க கல்யாணம்தான் எங்களுக்கு செலப்ரேசனே. அதை வேண்டாம்னு சொல்வீங்களா? மீனா நீ வா நாம மேடத்தை பார்த்துட்டு வரலாம்.” என வெற்றி மனைவியை அழைத்துக்கொண்டு ஏகனை தாண்டி உள்ளே போக,

“ஸார் ஸார் அவ தூங்குறா.” என ஆன்டர்சன் தடுக்க, அதில் இருவரும் தயங்கி நிற்க,

“சும்மா பார்த்துட்டு வரட்டும்” என ஏகன் கூற, சரியென்பது போல் தலையசைத்தான் ஆன்டர்சன்.

“அப்புறம் அன்பு…” என அநேகன் ஆரம்பிக்க,

“பாஸ்.. போதும். இது ஆஃபிஸ் இல்ல, அங்கதான் எங்களை ட்ரில் வாங்குறீங்கன்னா, இங்கேயுமா.? சாமிண்ணா அந்த சாவியை கொடுத்துட்டு வாங்க, நாம கிளம்பலாம்.” என அன்பு அநேகனிடமிருந்து எஸ்கேப் ஆக, அங்கிருந்த அனைவருமே சிரித்துவிட்டனர்.

“எங்க பாஸ்.. எவ்வளவு பெரிய ரவுடிக்கெல்லாம் டஃப் கொடுப்பார் தெரியுமா.? அவரையே இந்த காதல் கையை கிழிக்க வச்சிடுச்சே..” என அன்பு போற போக்கில் அனேகனை வாரிவிட்டு போக, இப்போது பாண்டி மீனா பெரிதாக சிரித்தார்.

இவர்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த தர்சனுக்கும், ஆன்டர்சனுக்கும் அநேகனின் மற்றொரு பக்கம் தெரிந்தது.

இந்த மூன்றாண்டுகளில் இவர்கள் தான் அவனை உயிர்ப்புடன் வைத்திருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு புரிந்தது.

வெற்றியும், பாண்டிமீனாவும் வர, தர்ஷன் சென்று ஆதிராவின் அருகில் அமர்ந்துகொண்டான். அதைக் கவனித்த வெற்றி கிண்டலாக அனேகனை பார்க்க, “பாசமலர்..” என கண்ணைச் சிமிட்ட,

“அப்போ கவனமா இருக்கனும் பாஸ்..” என்ற வெற்றி, “சார் இனிமேலாவது உங்க கோபத்தை குறைங்க. நீங்க லவ் பண்ணதை பார்த்துதான், நாங்க லவ் பண்ணோம், எவ்வளவோ பிரச்சினை, எல்லாத்தையும் தாண்டி கல்யாணமும் பண்ணோம். விட்டுக்கொடுத்து போனாதான் சார் லைஃப் நிம்மதியா இருக்கும்,” என்றதும்,

“அதுவும் பொண்டாட்டிக்கிட்ட விட்டுக்கொடுத்து போறதுல தப்பே இல்ல சார்..” என மீனாவும் சொல்ல, ஏகன் பதிலேதும் சொல்லவில்லை..

அவர்கள் அனைவரும் கிளம்ப, ஆன்டர்சனிடம் “இனி ஆஃபிஸ்ல வேலை இல்லை, நான் வீட்டுக்கு போயிட்டு வரேன், வர வரைக்கும் ரெண்டு பேரும் இங்கேயே இருங்க..” என்றுவிட்டு வெளியில் கிளம்பிவிட்டான்.

“தர்ஷா.. நீ இரு நான் மாமாவை போய் பார்த்துட்டு வந்துடுறேன்..” என ஆன்டர்ஷனும் கிளம்பி விட,

தமக்கையின் அருகில் அமர்ந்திருந்த தர்ஷனுக்கு ஆதிராவை பார்க்க பார்க்க மனமே ஆறவில்லை.

எப்படியெல்லாம் சந்தோசமாக சிரித்து மகிழ்ந்து விளையாடி என இருந்தவள், இன்று யாருமே இல்லையென்று நினைத்து மனதை மொத்தமாக இறுக்கிக்கொண்டாளே, எப்படி இதிலிருந்து தமக்கையை மீட்பது என பெரும் யோசனை ஓடியது.

ஆதிராவின் இந்த நிலைக்கு அவனின் தாய்தான் காரணம் என்பது அவனுக்கு தெரியாமல் இல்லை.

ஆனால் பெரியவர்கள் இத்தனை பேர் இருக்கும் போது, அவர்களை மீறி அவன் என்ன செய்திட முடியும்.

இன்று தன் அன்னையிடம் பேசிவிட்டு வந்த வார்த்தைகள் அவரை யோசிக்க வைக்கும். யோசிப்பார். யோசித்து நல்ல முடிவுக்கு வருவார் என்று நம்பினான்.

தர்ஷினி மட்டுமே பிரச்சினை செய்வாள், அம்மா புரிந்து கொண்டால், அவர்களே தர்ஷினியே சமாளித்து விடுவார்கள் என்று பல யோசனை. என்ன ஆனாலும் இனி ஆதிராவை தனியாக விடுவதில்லை என முடிவெடுத்துவிட்டான்.

ஆராதனாவை ஆன்ட்ரசனின் வீட்டில் விட்டுவிட்டு மருத்துவமனைக்கு வந்தான் அமரன். அவன் வரும் நேரம்தான் சரியாக அநேகனும் வீட்டுக்கு கிளம்ப இருந்தான்.

“டேய் இப்போ எங்க கிளம்பிட்ட, இந்த கையை வச்சிட்டு எப்படி ட்ரைவ் பண்ணுவ, மறுபடியும் ப்ளீட் ஆகும்..” என அமரன் அவனிடமிருந்து சாவியை வாங்கிக்கொண்டு முறைக்க,

“ம்ச் கொடு அமர். நான் தாத்தாக்கிட்ட பேசனும். அதுக்காகத்தான் வீட்டுக்கு போறேன்..” என சலிப்பும் எரிச்சலுமாக பேச,

“சரி போகலாம், நானும் வரேன். அதுக்கு முன்னாடி நான் அப்பாவை பார்த்துட்டு வரேன். நீ வர்ரியா.?” என கேட்க,

“ம்ம்..” என்றவன் முன்னே நடக்க, ‘இவனோட’ என சலித்தவன் தம்பியின் பின்னே நடந்தான்.

சுந்தரத்தின் அறைக்குள் இருவரும் நுழைய, பாக்யா அழுதுகொண்டிருக்க, சுந்தரம் அவரைத் திட்டிக் கொண்டிருந்தார்.

தாய் அழுவதை பார்த்ததும், “என்னம்மா..” என அமரன் வேகமாக அவரிடம் செல்ல,

“எதுக்கு இப்போ அவங்களை திட்டிட்டு இருக்கீங்க. முடிஞ்சதை மறுபடியும் கிளறாதீங்க..” என அநேகனும் சொல்ல,

“வயசு ஏற ஏற அனுபவம் வரும்னு சொல்வாங்க, உன் அம்மாவுக்கும் பாட்டிக்கும் தலைகீழா போயிடுச்சு. எவ்வளவு பெரிய வேலையை செஞ்சிருக்காங்க.” என அப்போதும் விடாமல் பேசியவர்,

“இதோ எது நடக்ககூடாதுனு எல்லாரும் நினைச்சீங்களோ, அதையே உன் மகன் நடத்திட்டான். இனி என்ன செய்வீங்க? உன் தம்பி பொண்டாட்டி ‘அவ கழுத்துல இருக்குற தாலியை அத்து எறிங்க’ன்னு சொல்லுவா, அதையும் செய்வீங்க.. அப்படித்தானே..” என கோபம் கொஞ்சமும் குறையாமல் திட்ட, பாக்யாவின் அழுகை அதிகமாக,

“ப்ச், ப்பா. இனி இதை எப்பவும் பேச வேண்டாம் ப்ளீஸ். ஆதி எழுந்து என்ன சொல்லுவாளோ தெரில. புனிதா அத்தையும் என்ன செய்வாங்களோ.? இதுல நீங்களும் ஆரம்பிக்காதீங்க. கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் சரி செய்யலாம்..” என அநேகன் சொல்ல,

“ம்மா.. முதல்ல அழுகையை நிறுத்துங்க. அப்பா சர்ஜரி முடிஞ்சி வீட்டுக்கு வந்ததும் ஆராவுக்கு சீமந்தம் பண்ணிடலாம். முன்னதான் ஆயிரம் காரணம் சொன்னீங்க, இப்போ அதெல்லாம் சொல்ல முடியாதுதானே.” என தாயை ஒரு பார்வை பார்க்க, அதில் அவர் தன்னால் கணவனை பார்க்க, ‘உனக்கு இது தேவைதான்’ என்பது போல் சுந்தரம் அமைதியாக இருக்க,

“அமரா அப்போ இருந்த பிரச்சினையே வேறடா. ஃபங்க்ஷன் வச்சிருந்தாலும், ஆதி வந்துருக்க மாட்டா. ஆதி வரலன்னா ஆராவுக்கு எப்படி இருக்கும் சொல்லு, அதனாலத்தான்..” என இழுக்க, சட்டென்று ஏகன் வேறுபக்கம் திரும்பிவிட்டான்.

இதுவும் ஒரு காரணமே தவிர, இதுமட்டும் காரணம் இல்லையென்று அங்கு இருந்த நால்வருக்கும் தெரியும். அதனால பேச வந்ததை பாதியிலே நிறுத்திவிட்டார் பாக்யா.

“அம்மா.. என்ன காரணமோ இருக்கட்டும். அது முடிஞ்சி போச்சு, இனி அப்படி என்னால இருக்க முடியாது. இந்த மாசக்கடைசிதானே அவளுக்கு டேட். அதுக்கு முன்னாடியே வச்சிடலாம். எல்லாரையும் கூப்பிடலாம், அப்படியே இவங்க கல்யாணமும் எல்லாருக்கும் தெரியும், தெரியட்டும்.” என்று அமரனும் சொல்ல,

“அதுதான் ஆதி வந்துட்டாளே, அப்பாவை இனி அவ பார்த்துப்பா, நானும் இங்கதானே இருக்கேன். நீங்களும் பாட்டியும் ஃபங்க்ஷன் வேலையை பாருங்க.” என ஏகனும் கூற,

மகன்களின் திட்டமிடுதலை மலைப்பாக பார்த்த பாக்யா, இதெல்லாம் சரி வருமா என்பது போல் மீண்டும் கணவனை பார்க்க, ‘அதெல்லாம் சரியா பண்ணுவாங்க, நீங்க மத்த வேலையை பாருங்க, முதல்ல புனிதா வந்து பேசினா, அதுக்கு பதில் பேசி பழகு..” என சுந்தரம் மீண்டும் ஆரம்பிக்க,

“மாமா போதும், ஹார்ட் பேசன்ட் நீங்க. மறந்துட்டீங்களா.?” என்றபடியே ஆன்டர்சன் வர,

“ஆதிம்மா எப்படி இருக்கா கண்ணா.? முழிச்சிட்டாளா.?” என சுந்தரம் பதட்டமாக கேட்க,

“இன்னும் இல்ல மாமா. நல்ல தூக்கம். தூங்கி எழட்டும். அப்போதான் அவ ஸ்ட்ரெஸ் எல்லாம் குறைஞ்சு நார்மல் ஆவா.” என்றவன் அநேகனை பார்த்து, “அப்புறம் எப்படி மேடம், அவங்க சின்னத்தானை சமாளிக்கிறது..” என கிண்டலாக கேட்க, ஏகன் அவனை முறைக்க ஆரம்பித்துவிட்டான்.

“டேய் மறுபடியும் ஆரம்பிக்காதீங்கடா.” என்ற அமரன் பெற்றோரிடம் சொல்லிவிட்டு, தம்பியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.

இவர்கள் கிளம்பிய அரை மணி நேரத்தில் விழித்த ஆதிரா, தன் கையில் மாட்டியிருந்த வென்ஃப்லானை கழட்டி எறிந்துவிட்டு தர்சனிடம் கத்திக் கொண்டிருந்தாள்.
 

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ஆதி மக்கர் பண்ண ஆரம்பிச்சிட்டாளே?
இனி ஏகன் பாடு திண்டாட்டம் தான்.