காற்று - 10
“தர்ஷி நீ என்ன பேசிட்டு இருக்க.. உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா இல்லையா?” என்ற ஆனந்தியிடம்,
“ஆமா அறிவே இல்லை. அப்படி வளர்த்தது நீங்கதான். என்னை குறை சொல்லி பிரயோஜனம் இல்ல. எனக்கு ஏகன் அத்தான்தான் வேணும்..” என நின்ற நிலையிலேயே நின்றாள் தர்ஷினி.
எவ்வளவோ பேசிப்பார்த்தும் தர்ஷினி கேட்பதாகவே இல்லை. இப்போது என்ன செய்வது என்று ஆனந்திக்கும் தெரியவில்லை. மகளிடம் சொன்னால் தன்னை பேயோட்டி விடுவாள் என்று புரிய, தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டார்.
நிஷாந்திடம் இதை எப்படி சொல்லி புரிய வைக்க என்றும் தெரியவில்லை.
வேறுவழியே இல்லாமல் ஏகனுக்கு அழைத்தார். முதலில் இரண்டு முறை அழைத்து அவன் எடுக்கவில்லை. சண்டையிடதான் அழைக்கிறேன் என்று ஏகன் நினைத்திருப்பான் என்று அவருக்கு புரிந்தது.
மீண்டும் ஒருமுறை முயற்சிக்கலாம் என்று ஏகனுக்கு அழைக்க, இந்தமுறை போனை எடுத்தான்.
எடுத்தவன் “பாட்டி.. என்னாச்சு? தர்ஷிக்கு எதுவும் பிரச்சினையா.?” என்று பதட்டமாக கேட்க, ஆனந்தியின் முகத்தில் குற்றவுணர்ச்சி உண்டாகிவிட்டது.
“அது அதெல்லாம் இல்லப்பா..” என்று நிஷாந்த் பற்றி பேசி, இப்போது தர்ஷி பேசியதையும் கூறிவிட்டு அழ ஆரம்பித்தார்.
“அவ சொன்னமாதிரி எல்லாத்துக்கும் நாங்கதான் காரணம். தேவையில்லாம அவ மனசுல ஆசையை வளர்த்துவிட்டோம், இப்போ என்ன செய்றது, அவளை எப்படி சரி செய்றது ஒன்னும் புரியல..” என்றார் அழுகையூடே.
“பாட்டி அழாதீங்க ப்ளீஸ். அதெல்லாம் சரி பண்ணிடலாம். அவளுக்கு கொஞ்சம் கோபம். பேசினா புரிஞ்சிப்பா.. இப்போ வீட்டுலதானே இருக்கா. நீங்க எப்படியாவது பெரிய வீட்டுக்கு கூப்பிட்டு வாங்க. அங்க வச்சு நான் பேசுறேன். பேசினா புரிஞ்சிப்பா.” என்றான் விளக்கமாக.
“சரி ஏகா.. நான் அவளை எதாவது சொல்லி கூப்பிட்டு வந்துடுறேன். அவ மனசை எப்படியாவது மாத்தி விடு. உனக்கு புண்ணியமா போகும்..” என்றவர் கண்ணைத் துடைத்துவிட்டு போனை வைக்க,
‘செய்றது எல்லாம் இவங்க செஞ்சிட்டு, அதை சரிசெய்ய நான் வேனுமாம்.. ஊப்ஸ்’ என்று தலையை வேகமாக இருபக்கமும் ஆட்டி தன்னை சமன்செய்தான்.
“என்னாச்சு அத்தான்..” என்ற தர்ஷனிடம், “உன் அக்காளுங்க ரெண்டு பேரும் என்னை வச்சு செய்றாளுங்கடா..” என புலம்பியவன் ஆனந்தி பாட்டி கூறியதை கூற,
“ஓ..” என்றவன் “ஆனா தர்ஷிக்கு உங்க மேல லவ்வெல்லாம் இல்லத்தான்..” என்று இழுத்தான் தர்ஷன்.
“டேய்.. நீ வேற ஏண்டா நேரம் காலம் தெரியாம காமெடி பண்ணிட்டு.. இப்ப நீ பேசினதை மட்டும், இந்தோ இங்க படுத்துருக்காளே இந்த மகாராணி கேட்கனும், நம்ம முடியை பிடிச்சு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டிடுவா..” என்றவன்,
“ஏண்டா தர்ஷா எனக்கு ஒரு டவுட் உன் அக்காளுங்க ரெண்டு பேரும் போட்டி போடுற அளவுக்கு நான் அழகா இருக்கேனா.. காலையில் கூட கண்ணாடி பார்த்தேன், அப்படி ஒன்னும் தெரியலையே..” என யோசனையாக கேட்க,
“அத்தான்.. அதை இப்போவே பேசனும்னு இல்லையே. அப்புறமா ஆதிக்காக்கிட்ட கேட்கலாம்ல..” என திணற,
“ஆமா அப்படியே உன் ஆதிக்கா சொல்லிட்டாலும், எத்தனை வருசம் ஆனாலும் அவளா சொல்லமாட்டாடா. இப்படி ஒரு ரசனையே இல்லாதவளை எப்படித்தான் நான் லவ் பண்ணேன்னு எனக்கே தெரி…” என்ற ஏகனின் பேச்சு பாதியில் நிற்க அவனை முறைத்தபடி தர்சனிடம் கையை நீட்டினாள் ஆதிரா.
‘ஏண்டா இப்படி’ என்பது போல் தர்ஷனை பார்த்தவன், ஆதிரா நீட்டிய கையை வேகமாக வந்து பிடித்துக்கொண்டான்.
‘தட்டி விடுவாளோ’ என்று தர்ஷன் பார்க்க, வாகாக அவன் கையைப் பிடித்து மெதுவாக எழுந்து அமர்ந்தாள்.
அமர்ந்த பின்னும் கூட அந்த கையை விடவில்லை, காயம்பட்ட கையை பார்த்து விசும்ப ஆரம்பித்தாள்.
மெதுவாக ஆரம்பித்த விசும்பல் மெல்ல மெல்ல கூடி கதறலாக மாறியது.
“ஹேய் ஆதிம்மா ஒன்னுமில்லடி.. இங்க பாரு ஒன்னும் இல்ல. சின்ன காயம்தான். அதான் ட்ரெஸ்ஸிங்க் பண்ணிருக்கே. சொன்னா கேளு குட்டிம்மா. ப்ளீஸ்டி..” என்ற ஏகனின் கண்ணிலும் நீர் வழிய ஆரம்பித்தது.
அவளை அப்படியே தோளோடு அனைத்துக்கொண்டவன், “சொன்னா கேட்கனும் என் தங்கம்தான.. ம்ம்ம் எல்லாம் சரியாகிடும். இனி எல்லாம் நான் பார்த்துப்பேன். ம்ம் சரியா அழக்கூடாது.” என்றவன் தர்ஷனிடம் “தண்ணி கொடு தர்ஷா..” என்று கேட்க அவனும் வேகமாக நீரை எடுத்துக்கொடுக்க, தன்மேல் சாய்த்தபடியே அவளுக்கு பருகக் கொடுத்தான்.
“அத்தான் நீங்க வீட்டுக்கு போகலையா.? அமர் அத்தான் கூட போறேன்னு சொன்னீங்க.?” என கேட்க
“போகலாம்னு தான் யோசிச்சேன். இவளை விட்டுட்டு எங்க போக.? ஆதி முழிக்காம எனக்கு ஒன்னுமே ஓடாது. அதான் அமரை மட்டும் அனுப்பிட்டு வந்துட்டேன்..” என விளக்கம் கொடுக்கும் போதுதான் ஏகனின் போன் மீண்டும் அடித்தது.
யாரென்று பார்க்க, புனிதா என வரவும் மூவருக்குமே ஒவ்வொரு உணர்வு தோன்றியது.
இப்போதும் இரண்டு முறை அழைத்தும் எடுக்கவில்லை ஏகன். ஆதிதான் “எடுத்து என்னனு கேளுங்கத்தான். பேசாம விட்டா இன்னும்தான் கோபம் வரும்..” என்று எடுக்க சொல்ல,
“எனக்கு பேசுறதுல ஒரு பிரச்சினையும் இல்ல அம்மு, ஆனா அவங்க உன்னை திட்டி சாபம் கொடுக்குறமாதிரி பேசினா, அப்புறம் நானும் பேசுவேன். தேவையில்லாம எதுக்கு பிரச்சினை.” என ஏகன் விளக்கம் கொடுக்க,
“ம்ம் அடுத்த டைம் கூப்பிட்டா எடுங்க. என்ன சொல்றாங்கன்னு கேளுங்க. நம்ம மேலையும் தப்பிருக்கு..” என முணுமுணுக்க,
“டேய் இவளுக்கு எதுவும் அவார்ட் கொடுக்கலாமா.?” என எரிச்சலாக கேட்டுக்கொண்டு இருக்கும் போதே மீண்டும் புனிதா அழைத்தார்.
இப்போது மூவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, “எடுங்க அத்தான்” என ஆதிரா கட்டாயப்படுத்த, வேறுவழியில்லாமல் எடுத்தவன் அவர் பேசியதில் சற்று குழம்பி பின் சீரானான்.
அவரிடம் “சரிங்கத்த… நான் பேசி பார்க்குறேன்..” என யோசனையாக வைத்தான்.
தர்ஷனும் ஆதிராவும் அவனையே பார்க்க, “ச்ச்.. தர்ஷினிதான்!” என்றவன் “அத்தைக்கு கூப்பிட்டு பயங்கரமா சண்டை போட்டு இருப்பா போல, ஏகனத்தானே தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணமாட்டேன், அப்படி ஏதாவது பேச்சு நடந்தா நான் சூசைட் பண்ணிக்குவேன்னு சொல்லி மிரட்டி இருக்கா, அங்க பெரிய வீட்ல எல்லாரும் பயத்துல இருக்காங்க..” என பிரச்சனையை மேலோட்டமாக சொல்ல, ஆதிராவின் முகம் மீண்டும் இருளடைய தொடங்கியது.
“நான்.. நான்.. நாம இப்போ என்ன பண்றது.?” என்ன திக்கி திணறிய, அவளை பார்க்கவே பாவமாக இருந்தது இருவருக்கும்.
ஆதிராவின் நடுக்கமும் பயமும் ஏகனுக்கு மீண்டும் கோபத்தை வர வைத்தது. அவன் ஆதிராவை முறைக்க ஆரம்பிக்க, தர்ஷன் தான் “அக்கா அதுதான் எந்த பிரச்சனை வந்தாலும் அத்தான் பார்த்துக்கிறேன்னு சொல்லி இருக்காரு இல்ல, நீ கொஞ்சம் அமைதியா இரு. எதுக்கெடுத்தாலும் இப்படி பயந்து சாவாத. இனி நீ எந்த முடிவு எடுத்தாலும் அத்தானையும் யோசித்துதான் எடுக்கணும். நீ தப்பா எடுக்குற எல்லா முடிவுலயும் பாதிகப்படப் போறது நீ மட்டும் இல்ல அத்தானும் தான் அதனால நல்லா யோசிச்சு முடிவெடு..” என தெளிவாக கூற,
“இவ நடுமண்டையில ஏறுற மாதிரி சொல்லு தர்ஷா..” என எரிச்சலாக கத்தியவன், “இங்க பாருடி நீ இழுத்து விடுற ஒவ்வொரு பிரச்சனைக்கும் நான் பொறுமையா பதில் சொல்லிட்டு இருக்கமாட்டேன். எது வந்தாலும் நான் பாத்துக்குறேன். முதல்ல என்னை நம்பு நான் பார்த்துக்குவேன்னு நம்பு. பிரச்சனையை பார்த்து பயந்து ஓடுறத நிறுத்து..” என ஏகன் எரிச்சலாக கூறிக் கொண்டிருக்கும்போதே கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் ஆண்டர்சன்.
ஆண்டர்சன் பார்க்கும் போது ஏகன் ஆதிராவை திட்டிக் கொண்டிருப்பது போல தெரிய, “என்ன என்னத்தான்? என்ன ஆச்சு ஆதி?” என வேகமாக ஆதிராவிடம் வர,
“டேய் சத்தியமா முடியலடா உங்களோட..?” என இருவரையும் சலிப்பாக பார்த்தான் ஏகன்.
அதில் ஆதிராவும் தர்ஷனும் சிரித்து விட, ஆண்டர்சன் குழப்பமாக இருவரையும் பார்த்து “என்ன தர்ஷா?” என்றான்.
“அண்ணா என்ன நடந்ததுன்னு தெரியாம நீங்க இவளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க. அத்தான் ஆதிக்காவை மந்திரிச்சிட்டு இருந்தார்.” என சிரிக்க,
“ஓ அவ்வளவுதானா? நான் கூட பயந்துட்டேன்.” என்று அமர்ந்த குரலில் கூறியவன் ஆதிராவின் அடுத்த பக்கம் போய் அமர்ந்தான்.
“ஆர் யூ ஓகே ஆதி..” என மென்மையாக கேட்க, “ம்ம்ம்” என்று மட்டும் தலையை ஆட்டினாள் பெண்.
“சீரியஸ்லி நான் என்ன பேசணும், சொல்லனும்னு எனக்கு தெரியல ஆதி. ஆரம்பத்திலேயே நான் சொன்னேன் அத்தான் பாத்துப்பாங்க, நீ கொஞ்சம் பொறுமையா இருன்னு சொன்னேன். ஆனா நீ ஆரா அக்காவுக்காக போயிட்ட. இதனால எத்தனை பேருக்கு பிரச்சனை பாரு. ஆரா அக்காவுக்காக போன சரி. ஆனா அக்கா மட்டும் நிம்மதியா இருந்தாங்களா? ஏன் ஆதிமா இவ்வளவு பிடிவாதமா இருந்துட்ட..?” என ஆண்டர்சன் வருத்தமாக கேட்டான்.
நண்பனுக்கு என்ன பதில் சொல்வது என்று ஆதிராவுக்கு தெரியவில்லை அவள் செய்தது இப்போது வரைக்குமே சரிதான். அவரவர் பார்க்கும் பார்வையை பொறுத்தே சரி தவறு என முடிவாகும். அவள் பார்வையில் அவள் செய்தது சரியே. இதை இப்போது இவர்களிடம் கூறினால் கண்டிப்பாக மூவரும் தன்னை ஒரு வழி செய்து விடுவார்கள் என்று புரிய அமைதியாக கணவனைப் பார்த்தாள்.
மனையாளின் பார்வையில் இருந்த பொருளை அவனைத் தவிர வேறு யாரால் புரிந்து கொள்ள முடியும். அணைப்பில் இருந்தவளை மேலும் இறுக்கி அணைத்தவன் “விடுடா அந்த நேரத்துல அவளுக்கு அதுதான் சரின்னு பட்டிருக்கு, அவ முடிவை நாம தப்புன்னு சொல்ல முடியாதே. அந்த நேரம் சூழ்நிலையில் யாராயிருந்தாலும், ஆதி எடுத்த முடிவதான் எடுத்திருப்பாங்க. விடுங்க விடுங்க இனி இப்படி எல்லாம் நடக்காம பாத்துக்கலாம்..” என ஜாலியாகவே சமாளிக்க.
“அண்ணா இவங்க ஆரம்பிச்சிட்டாங்க, இனி நாமெல்லாம் இவங்க கண்ணுக்கு தெரியவே மாட்டோம்.” என தர்ஷன் ஆண்டர்சனிடம் கிண்டலடிக்க,
“தர்ஷா நான் சொல்ல நினைச்சேன் நீ சொல்லிட்டடா..” என சிரித்தவன் “நல்லா சேர்ந்தீங்க ரெண்டு பேரும், உங்க ரெண்டு பேரால எங்களுக்கு தான் டென்ஷன் தலைவலி எல்லாம்..” என செல்லமாகவே சலித்துக் கொண்டான் ஆண்டர்சன்.
அதில் நால்வருமே சிரித்துக் கொள்ள, “டேய் நான் ஆதியை வீட்டுக்கு கூப்பிட்டு போறேன், இவளை முழுசா பார்த்தா தான் எல்லாரும் நிம்மதியா இருப்பாங்க.. அப்பாவை கொஞ்சம் பாத்துக்கடா” என ஆண்டர்சனிடம் பொறுப்பை கொடுத்தவன், தர்ஷாவையும் ஆதியையும் அழைத்துக் கொண்டு வீடு நோக்கி புறப்பட்டான்.
தர்ஷன் காரை ஓட்ட இருவரும் பின்னிருக்கையில் அமர்ந்து கொண்டனர்.
“அத்தான் உங்க ஜீப் இங்கேயே இருக்கு?” என தர்ஷன் ஞாபகப்படுத்த,
“அது ஒன்னும் பிரச்சனை இல்ல தர்ஷா, டிரைவர் கிட்ட சொன்னா வீட்டுல கொண்டு வந்து விட்டுடுவார்..” என்றவன் ஆதியை தன் மேல் சாய்த்துக் கொண்டான்.
எங்கோ காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து, ஓய்ந்து போய் தன் வீடு திரும்பும் போது உண்டாகும் நிம்மதியை வார்த்தைகளால் வரையறுக்க முடியாது அல்லவா.
அப்படித்தான் இருந்தது இப்போது ஆதிராவின் நிலையும்.
வீட்டில் என்ன நடக்குமோ என்று பயம் ஒரு பக்கம் இருந்தாலும், நடக்கவே நடக்காது என்று தனக்குள்ளே போராடிக் கொண்டிருந்த, அவளின் ஏகன் அத்தானுடனான திருமணம் நடந்தே விட்டது.
அந்த நிகழ்வில் இருந்து இன்னும் ஆதிரா வெளிவரவில்லை.
அவனுடனான திருமணத்தை துளித்துளியாய் அவள் ரசிக்க வேண்டும். ஏகாந்தமாய் அவர்கள் வாழ்க்கை அமைய வேண்டும் என்று அவளுக்குள்ளும் பேராசைகள் உண்டு. இனிவரும் காலத்தில் அதை தன் கணவன் நிறைவேற்றுவான் என்ற நம்பிக்கையும் உண்டானது பெண்ணவளுக்கு.
தன் மேல் சாய்ந்து இருந்தவளின் தலையை ஏகன் மென்மையாக வருடிவிட,
ஆதியும் ஏகனின் காயம் பட்ட கையை, தனக்குள் பிடித்து மெல்லமாக தடவிவிட்டுக் கொண்டே வந்தாள்.
இவர்கள் இருவரையும் கண்ணாடி வழியாக பார்த்த தர்ஷனுக்கு நிம்மதி பெருமூச்சு தானாக வந்தது.
தர்ஷனின் இந்த நிம்மதியை நிலைக்க விடுவாளா தர்ஷி.?