• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

காவல் - 01

Raja Sri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 9, 2024
6
2
3
Sattur, Virudhunagar District
அத்தியாயம்-1


" சஷ்டியை நோக்கச் சரவண பவனார்
சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி யாட.... "



என்று அந்த வீட்டில் காலை நேர பரபரப்பிலும் தன் அலைபேசியில் கந்த சஷ்டி கவசத்தை போட்டு விட்டு அதன் கூடையே பாடிய வண்ணம் வேலை செய்துக் கொண்டிருந்தார் அந்த வீட்டின் தலைவி பவானி. அமைதியும் சாந்தமும் நிறைந்த முகம். எப்போதும் யாருடனும் அதிகமாக பேச மாட்டார் ஆனால் பேசினால் அவர்களை தன் பக்கம் அந்த பேச்சே இழுத்து விடும்.


பாடிய வண்ணம் கையில் காபியோடு சென்று அங்கு பேப்பர் படித்துக் கொண்டிருந்த தன் கணவன் கணபதியிடம் கொடுத்தார் பவானி. அதை வாங்கி வைத்து விட்டு "வானி... பாப்பாவை எழுப்பி விடு டா காலேஜ் போகணும் எக்ஸாம் இருக்குனு சொன்னா" என்று தன் மனைவியிடம் தன் மகளை எழுப்ப கூற, அவர் தன் கணவனுக்கு பதில் கூறும் முன்,


"அப்பா நான் எழுந்துட்டேன்... படிச்சிட்டு இருக்கேன் பா" உள்ளே இருந்து குரல் கொடுத்தாள் அவர்களது ஒரே செல்ல பெண் இனியா. பெயருக்கு ஏற்ற வண்ணம் பழகுவதற்கு இனியவள் தான்.கோபம் என்றால் என்ன என்று கேட்கும் குணம் உடையவள்... தனக்கு மிகவும் பிடித்தவர்கள் என்ன சொன்னாலும் நம்புவால் அவர்களுக்காக தன் உயிரையே கொடுக்க கூட முன் வருவாள் அந்த அப்பாவி பெண்.


காலை எட்டு மணி வரை படித்தவள் அதன் பிறகு வேக வேகமாக கல்லூரி பேருந்தை பிடிக்க கிளம்பினாள். அவள் ஒரு முதுகலை வரலாறு மாணவி. அவள் நம் வரலாறு மற்றும் கலாச்சாரம் மீதும் மிகவும் நாட்டம் கொண்டவள்.அதனாலேயே வேறு படிப்பு படி என்று தந்தை கூறிய போதும் இது தான் படிப்பேன் என்று எடுத்து அதில் இளங்கலை முடித்து விட்டு முதுகலையின் இறுதி தேர்வுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறாள்.


தன் அறையில் இருந்து கிளம்பி வேகமாக கூடத்திற்கு வந்தவள் "அம்மா சாப்பாடு எடுத்து வைங்க மா லேட் ஆகிருச்சு" என்று வீடே அலறும் படி கத்திக் கொண்டிருந்தாள் இனியா.


"எதுக்கு டி இப்படி கத்துற வேகமா கிளம்பு...இந்தா உன்னோட டிபன் பாக்ஸ்" என்று அவள் கையில் கொடுத்தவர்,ஒரு தட்டில் நான்கு இட்லிகளை அடுக்கி அதில் கொஞ்சம் சாம்பார் கொஞ்சம் பொடி வைத்து அவாளிடம் நீட்டினார்.


அதை வாங்கியவள் நின்றுக் கொண்டே வேகமாக உண்டாள். இதையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் இன்னும் அந்த செய்தித்தாளுடன் தான் மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார் கணபதி.


அவளையே பார்த்துக் கொண்டிருந்தார் பவானி. நீளமான முழுக்கை வைத்த சிமெண்ட் நிற டாப்பும் வெள்ளை நிறத்தில் சிமெண்ட் வண்ண பூ போட்ட கால்சட்டையும், துப்பட்டாவும் போட்டிருந்தாள். எப்போதும் போல் எண்ணெய் தேய்த்து தன் நீளமான கூந்தலை பின்னி ஜடை போட்டு அதில் ஒரே ஒரு ரோசா பூவை வைத்திருந்தாள். முகத்தில் எந்த முகபூச்சும் இல்லாமல் வெறும் போட்டு மட்டும் வைத்து அதன் மேல் திருநீறு மட்டும் பூசி அன்றலர்ந்த மலர் போல் நின்றிருந்தாள். அவள் முகத்தில் உள்ள அழகே அவள் செவ்விதழுக்கு கீழே உள்ள சின்ன மச்சம் தான். பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும்.


உண்டு முடித்தவள் "பை மா... பை பா" என்று கத்திக் கொண்டே வீட்டை விட்டு வெளியேறி பேருந்து நிறுத்துமிடத்தை நோக்கி சென்றாள் இல்லை கிட்டத்தட்ட ஓடினாள்.


அவள் அங்கே செல்வதற்குள் நாம் அவளை பற்றி கண்டு விடுவோம்... அப்பா கணபதி அம்மா பவானி இருவருக்கும் ஒரே மகள் இனியா. கணபதி அஞ்சல் அலுவலராக இருந்து போன வருடம் தான் ஓய்வு பெற்றார். அம்மா இல்லத்தரசி. மூன்று பேர் மட்டும் கொண்ட குடும்பம் என்றாலும் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை... எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பர்.உண்பதற்கு செல்லம் உடுப்பதற்கு செல்லம் தப்பு செய்தால் அடி வெளுத்து விடுவார் கணபதி. இதுவரை அப்படி ஒரு நிலைமையில் இனியா வந்து நின்றதில்லை... இனிமேல் அவள் கையில் தான் உள்ளது.இவர்கள் இருவருக்கும் மகள் தான் உயிர் மகள் தன் உலகம். அவளுக்காக எதையும் செய்வர்.அவளுக்கும் அதே தான் தன்னுடைய முதல் நண்பர்கள் அவளது தாய் தந்தை தான்.எல்லா விசயத்தையுமே அவர்களிடம் கூறி விடுவாள்.பக்கத்து விட்டு பையனிடம் முட்டாய் திருடியதில் இருந்து கல்லூரியில் பிட் அடித்தது வரை அனைத்தும் அவர்களுக்கு அத்துப்பிடி.அவர்களிடம் கூற வில்லை என்றால் அவளுக்கு உறக்கமே வராது.அந்த அளவு தன் மகளுக்கு சுதந்திரம் கொடுத்திருந்தனர் அவளது பெற்றோர்.


வேகமாக பேருந்து நிறுத்துமிடத்திற்கு வந்த இனியா, அங்கு ஏற்கனவே தனக்காக பேருந்து நின்றுக் கொண்டிருப்பதை பார்த்து வேகமாக சென்று அதில் ஏறினாள்.


ஓட்டுனரிடம் "ரொம்ப தேங்க்ஸ் அண்ணா" என்றவள் தனக்காக காத்துக் கொண்டிருந்த தன் தோழி பூங்கொடி அருகில் சென்றாள்.இனியாவை கண்டு சிரித்த பூங்கொடி எப்போதும் போல் எழுந்து ஜன்னல் இருக்கையை அவளிடம் கொடுத்து விட்டு இனியாவின் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.


இனியாவிற்கு ஜன்னல் இருக்கையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே கல்லூரி செல்வது மிகவும் பிடிக்கும். அதனால் தான் வீட்டுக்கு அருகில் உள்ள கல்லூரியை விட்டு விட்டு 25 கிலோ மீட்டர் அப்பால் உள்ள கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். முதலில் தன் ஆசையை கூறும் போது எதிர்த்த குடும்பத்தினர் பின் அதை ஏற்றுக் கொண்டனர்.அதை தெரிந்து கொண்ட பூவும் அவளுக்காக விட்டு கொடுத்து விடுவாள்.


ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்த வண்ணம் வந்த இனியா ஒரு இடத்தில் கல்லூரி பேருந்து நிற்க அந்த இடத்தை பார்த்துக் கொண்டே உள்ளே அமர்ந்திருந்தாள். அப்போது தான் கவனித்தால் அவள் பேருந்துக்கு அருகில் நின்றிருந்த ஒரு போலீஸ் ஜீப்பையும் அதன் அருகில் கம்பீரமாக நின்று இரண்டு கல்லூரி மாணவர்களை திட்டிக் கொண்டிருந்த அந்த காவல் துறை அதிகாரியையும் தான்.


ஆறடி உயரத்தில் காவல் துறை உடையில் கண்ணில் தீட்சண்ணியத்துடன் எதிரில் நின்றவரை பார்வையாலேயே மிரட்டிக் கொண்டிருந்தான் அவன். அவன் முகத்திற்கும் அவன் வைத்திருந்த போலீஸ் சிகை அலங்காரத்திற்கும் ( hairstyle ) அவ்வளவு எடுப்பாக இருந்தது அதுவும் அவனது முகத்தில் இருந்த அந்த கட்டையான மீசை அவனை இன்னும் அழகாக காட்டியது அவள் கண்களுக்கு.


இனியா அவனது பார்வை அவன் கையை ஆட்டி ஆட்டி பேசும் விதம் அதில் அவன் கையில் அணிந்திருந்த காப்பும் சேர்ந்து ஆட என அனைத்தும் ரசித்துக் கொண்டே அவனுக்கு எதிரில் இருந்தவர்களை பார்க்க, அந்த இரண்டு கல்லூரி மாணவர்களின் கண்ணில் பயம் அப்பட்டமாக தெரிந்தது.அவன் சொல்வதற்கு எல்லாம் சரி சரி என்று மட்டும் தலை ஆட்டி கொண்டிருந்தனர் இருவரும்.அவன் பேசுவது இவளுக்கு கேட்க வில்லை என்றாலும் இறுதியில் அவன் சொன்ன "இனிமேல் ஒழுங்கா ஹெல்மெட் போட்டுட்டு வண்டி ஓட்டணும் சரியா" என்ற வாக்கியம் மட்டும் நன்றாக கேட்டது.


"ஓ ஹெல்மெட் கேஸ்ஸா...மீசைக்காரன் ரொம்ப டெர்ரெர் தான் போல" என்று நினைத்து சிரித்தாள். ஏனோ அவளுக்கு அவனை பார்த்ததும் பிடித்து விட்டது. அவனது செய்கை எதிரில் இருப்பவரை பயம் கொள்ளும் செய்யும் தோரணை என அனைத்தும் அவளுக்கு பிடித்தது பாவம் காரணம் தான் தெரியவில்லை.இன்னும் பேருந்து கிளம்பாமல் இருப்பதை கண்டு பூவிடம் என்னவென்று கேட்க,


"இந்த கயல் புள்ள இன்னும் வரல டி.. அவளுக்கு தான் வைட்டிங்" என்றாள்.


"ஓ சரி.... அவங்க அம்மாக்கு சாப்பாடு செஞ்சி வெச்சிட்டு வந்துட்டு இருப்பா" என்று கூறியவள் கயல் வருகிறாளா என்று ஜன்னல் பக்கம் திரும்ப, அந்நேரம் ஒருவன் அந்த மீசைகாரன்னை அறிவாலோடு வெட்ட வர ஒரு நொடி திட்டுகிட்டவள் அருகில் இருந்த பூவின் தண்ணீர் பாட்டிலை எடுத்து அவனை நோக்கி வீசி விட்டாள்.


அவன் சட்டென்று திரும்பி பேருந்தை பார்க்க, பின்னாடி என்று சைகை செய்தாள். அவன் திரும்பி பார்க்கும் போது அறிவால் அவன் கழுத்துக்கு நேராக வர சட்டென்று குனிந்து அதை தடுத்தவன் தன்னை வெட்ட வந்தவனை வயிற்றிலேயே ஓங்கி ஒரு மிதி மிதிதான். அதில் அவன் சுருண்டு கீழே விழுந்து விட, அருகில் இருந்த அவனோடு வந்த மற்ற காவல் அதிகாரிகள் அவனை தூக்கி ஜீபில் ஏற்றினர்.


அதற்குள் கயல் பேருந்தில் ஏறிவிட்ட படியால் அது நகர ஆரம்பித்து விட ஜன்னல் வழியாக அவனை பார்த்துக் கொண்டே சென்றாள்.


இங்கு அந்த மீசைக்காரன் என்று இனியாவால் செல்லப்பெயர் வைக்கப்பட்டவனோ அவள் செல்லும் அந்த பேருந்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.அவனுக்கு அவள் முகத்தை விட தனக்காக பதறும் அந்த கண்கள் அவனது ஆள் மனதில் போய் பதிந்து விட்டது.


"ஏய் ஏன் டி வாட்டர் பாட்டில் தூக்கி போட்ட... அது என் தம்பியோடது... அவனுக்கு தெரிஞ்சது என்ன கொன்னே போட்டுருவான்" என்று பாட்டில் போன சோகத்திலும் தன் தம்பியை எண்ணியும் பூ புலம்ப,


"அது....அந்த மீசைக்காரன ஒருத்தன் வெட்ட வந்தான் பூவு... அதான் அவசரத்துல உன்னோட பாட்டில தூக்கி போட்டேன்... என்னோடத நீயே வெச்சிக்கோ" என்று தன்னுடையதை அவளுக்கு கொடுத்து விட்டாள்.


இந்த சீன்ன எங்கேயோ பார்த்துருக்கோமே என்று யோசித்த பூ ஞாபகம் வந்தவளாய் "அதுக்கு நீ உன் டிபன் போக்ஸ் எடுத்து அடிச்சிருக்கணும் டி" என்று கடுப்புடன் கூற,


"எதே டிபன் போக்ஸ்ஸா... அப்பறம் மத்தியானம் நான் சோத்துக்கு என்ன பண்ணுவேன்... இது என்ன சாமி படமா விக்ரம் கொடுத்து விடுவாருன்னு நெனைக்கிறதுக்கு...அந்த மீசைக் காரன் யாருன்னு கூட தெரியல... அதான் வாட்டர் பாட்டில் வெச்சி அடிச்சேன்... காலேஜ்ல தண்ணீர் இருக்கும் அதை புடிச்சுக்கலாம்" என்று சாதாரமாக தோலை குலுக்க,


தலையில் அடித்துக் கொண்ட பூவு "அதுக்கு உன்னோடது யூஸ் பண்ணனும் டி" என்று கூற,


"விடு மச்சி உன்னோடதா இருந்தால் என்ன என்னோடதா இருந்தால் என்ன எல்லாம் நம்மலோடது தான்" என்று சிரிப்புடன் கூறினாள். அதை கேட்ட பூவு தான் தனக்கு வாய்த்த தோழியை எண்ணி தலையிலேயே அடித்துக் கொண்டாள்.


என்ன தான் வெளியே பேசி சிரித்தாலும் மனம் மட்டும் மிகவும் பட படப்பாக இருந்தது. அவனுக்கு எதுவும் ஆகி இருக்குமோ என்று.


- காதலிக்க வருவான் 💐💐💐