பட்டென்று அவள் கைப்பிடித்து இழுத்து மீண்டும் இருக்கையில் அமர வைத்தாள் பூங்கொடி.
அவள் இழுத்து அமர வைத்த பின்பே சுற்றம் உணர்ந்தவள், வேகமாக பூவின் புறம் திரும்பி "காலைல நம்ம காப்பாத்துன மீசைக்காரன் டி" என்று கண்கள் மின்ன கூறினாள் இனியா.
தன் தோழியை ஒரு மார்கமாக பார்த்த பூங்கொடி "நம்ம இல்ல நீ " என்று அழுதத்துடன் கூற 'ஈஈஈ' என்று இளித்தாள் இனியா.முன்னே நின்றவனை பார்த்து முறைத்த பூவு "இவனால தான் என்னோட பாட்டில் போச்சு" என்று முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கூற, தலையிலேயே அடித்துக் கொண்டாள் இனியா.
"பரதேசி நானே அவருக்கு எங்கேயாவது அடி பட்டுருச்சோன்னு பார்த்துட்டு இருந்தால் இவளுக்கு பாட்டில் கவலை" என்றவள் சாவகாசமாக தன் கையில் இருந்த மீதி கடலை முட்டாய்யை வாயில் போட்டு மென்றுக் கொண்டிருந்தாள். இப்போது அவளுக்கு இருந்த தூக்கம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் சென்றிருந்தது விக்ரமின் வருகையால்...
இவ்வளவு நேரம் கடைசி இருக்கையில் அவர்கள் செய்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த விக்ரம் கண்டும் காணாதது போல் நின்றுக் கொண்டிருந்தான்.
ஆனால் மனமோ "சரியான தீனி மூட்டையா இருப்பா... முன்னாடி ஸ்டாப் இருகாங்க அவள் பாட்டுக்கு சாப்பிடுகிறாள்... தைரியம் தான்.." என்று எண்ணி மனதினுள்ளே புன்னகைத்தவன், அவள் ஏன் தன்னை கண்டவுடன் அதிர்ச்சி ஆனாள் என்றும் மனம் சிந்திக்க மறக்கவில்லை.ஆனால் விக்ரமுக்கு அவள் கண்களே அவளை காட்டிக் கொடுத்து விட, அவளை கண்டவுடன் மிகவும் பிடித்து விட்டது அவள் குழந்தை முகத்தை காண வேண்டும் போலவே கண்களும் மனமும் ஒருசேர ஏங்க 'என்ன டா இது புது பிரச்சனை' என்று நினைத்துக் கொண்டான் விக்ரம்.
இவ்வளவு மனப்போராட்டத்திலும் அவன், அந்த வகுப்பில் யார் யார் எப்படி இருக்கிறார்கள் அவர்களின் முக பாவனை என்ன என்பதை அவன் கண்கள் கவனித்துக் கொண்டே தான் இருந்தது.
அதற்குள் அந்த துறைத்தலைவர் அந்த வகுப்பில் இருந்த ஆசிரியரிடம் ஏதோ கூறி விட்டு விக்ரமின் புறம் திரும்பி "நீங்க பேசுங்க சார்" என்று விட்டு வெளியே சென்றார்.செல்லும் போது மொத்த வகுப்பையும் ஒரு முறை முறைத்து விட்டு தான் சென்றார். இவர் சென்ற பின்பு தங்களுக்கு ஒரு கச்சேரி இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தனர் மாணவர்கள்.ஏனெனில் 'ஒரு ஆசிரியர் வகுப்பின் உள்ளே நுழையும் போது எழுந்து வணக்கம் வைக்காததற்கு தான் முறைத்து விட்டு செல்கிறார்' என்று மாணவர்கள் நினைத்துக் கொண்டனர். ஆனால் அவரோ தன் துறையை சேர்ந்த ஒரு மாணவன் செய்யும் தவறால் தன் துறையில் உள்ள அனைவரின் மேலும் தவறான பேச்சு வந்து விழும் என்ற பயத்தில் அனைவரையும் முறைத்து விட்டு செல்கிறார்.
கடைசி இருக்கையில் பூவு "எதுக்கு டி ஹிட்லர் மொறச்சிட்டு போறா" என்று இனியாவிடம் கேட்க,
"திருந்திடுவோமாம்" என்று ராகமாக கூறினாள் இனியா.
"அப்படின்னு நினைக்கிற" என்று பூவு சந்தேகமாக கேட்க, 'இல்லை' என்று சிரிப்புடன் தோலை குலுக்கினாள். அதில் பூவும் சிரித்து அமைதியாகி விட்டாள்.
துறைத்தலைவர் சென்ற பின், அவர் பின்னேயே அந்த வகுப்பில் இருந்த ஆசிரியரும் சென்று விட, கம்பீரமாக கரும்பலகைக்கு கீழே இருந்த அந்த மேடையின் மேல் ஏரி நின்றான் விக்ரம்.
அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.சிலர் அவனை ஆர்வத்துடன் பார்க்க, சிலர் அவனை பயத்துடன் பார்க்க, சிலர் ஆர்வம் இல்லாமல் அவனை பார்க்க, அவர்கள் ஒவ்வொருவரையும் அமைதியாக பார்த்து விட்டு கடைசி இருக்கைக்கு சென்ற விக்ரம் பார்வையோ தன்னையே ரசனையுடன் பார்த்துக் கொண்டிருந்த இனியாவின் பார்வையை எதிர் கொண்டது.
அவள் சட்டென்று பார்வையை திருப்பி விட ஒரு வினாடி அவளை குழப்பத்துடன் பார்த்தவன் கண்கள் பின் புரிந்துக் கொண்டு வேறு புறம் திரும்பி விட்டது.ஆனால் அந்த கண்கள் அவன் மனதை மீண்டும் இம்சித்தது.அவனுடைய சாதாரண பார்வையை எதிர் கொண்ட இனியாவிற்கு தான் உள்ளுற ஏதோ செய்தது.
"குட் அப்டேர்நூன் (good afternoon every one ) எவெரி ஒன்" என்று ஆரம்பிக்க மாணவர்கள் அனைவரும் ஒரு சேர அவனுக்கு வணக்கம் வைத்தனர்.
"என்னோட நேம் விக்ரம ஆதித்யன்.நான் இன்னைக்கு ஏன் இங்க வந்திருக்கேன் அப்படின்னா...போதை பொருள் பத்தி சொல்ல வந்திருக்கேன்... எனக்கு உங்க காலேஜ்ல சில ஸ்டுடென்ட்ஸ் யூஸ் பண்றதா தகவல் வந்திருக்கு... ஆனால் உங்கள் முகத்தை பார்க்கும் போது எனக்கு அப்படி தோணவே இல்லை... இருந்தாலும் அதை எப்படி யூஸ் பண்றாங்கனும் எனக்கு வந்த தகவலை சொல்லி விடுகிறேன்.... நீங்களும் கவனமாக இருந்துக் கொள்ளுங்கள்... அப்படி யாராவது யூஸ் பண்றதை பார்த்தால் உடனே உங்கள் ஆசிரியரிடம் கூறி விடுங்கள்" என்றவன் மீண்டும் தொடர்ந்தான்.
"அவர்கள் கையில் சிகெரேட் மாதிரியாகவோ இல்லை சின்ன பண்டல் மாதிரி பவுடர்ராவோ கொண்டு வராங்கன்னு தகவல்....அந்த பாக்கெட் இங்க ரொம்ப இருக்குறதாவும் எங்களுக்கு தகவல் வந்துருக்கு... ஆனால் அதை அவர்கள் பயன் படுத்தும் விதம் என்ன என்று உங்களுக்கு தெரியுமா" என்று நிறுத்தியவன் அனைவரின் முகத்தையும் பார்த்து,
"வாட்டர் பாட்டில்ல தண்ணியோட கலந்து கொண்டு வராங்கலாம்... அது மட்டும் இல்லை அது இப்போது பெண்களும் பயன்படுத்துவதாக தகவலும் கிடைத்துள்ளது" என்று கூற,
பின்னால் அமர்ந்திருந்த பூவோ "எந்திருச்சு நிக்கவே வக்கில்லை இதுல ஒம்போது பொண்டாட்டி கேட்குதாம்" என்று சிறு கடுப்புடன் தன் பாட்டில் துளைந்ததை எண்ணி கூற, சட்டென்று அவள் வாய்யை தன் கைகளால் பொத்தினாள் இனியா.
"ஏய் லூசு கூமுட்டை.... வாய மூடு டி... கேட்டுற போது" என்று அவள் வாயை மூட பார்க்க, அந்த பக்கம் அமர்ந்திருந்த அவர்களது இன்னொரு தோழி தேவி வந்த சிரிப்பை மிகவும் கடினப்பட்டு அடக்கினாள்.
அவளுக்கு காலை நடந்த அனைத்தும் தெரியும். அதுமட்டுமில்லாமல் தன் தம்பிக்கு என்ன பதில் சொல்ல போகிறோம் என்று நினைத்து 'பாட்டில்...பாட்டில்' என்று காலையில் இருந்து பூ புலம்பிக் கொண்டிருந்ததை கண்டவள், இப்போது விக்ரம் பாட்டிலில் உள்ள தண்ணீரில் போதை மருந்தை கலந்து குடிக்கின்றனர் என்று கூற, அவளால் சும்மா இருக்க முடியாமல் பாட்டிளுக்கே வக்கில்லை இதில் எங்கிருந்து போதை பொருள் என்னும் பொருளில் அந்த வசனத்தை கூறினாள்.
இவர்கள் மூவரும் நடந்துக் கொண்டதை கவனித்து விட்ட விக்ரம் சிறு முறைப்புடன் இறுதி இருக்கையை பார்த்தான். அதில் பயம் கொண்ட இனியா அமைதியாக தலையை குனிந்துக் கொண்டு அமர்ந்து விட, பூ அப்போதும் ஏதோ யோசனையில் இருக்க, தேவி தான் மிகவும் கடினப்பட்டு சிரிப்பை அடக்கினாள்.
அதையும் கண்டு விட்ட விக்ரம் சிறு முறைப்புடன் "ஹே... லாஸ்ட் டெஸ்க் கிறீன் சுடி..." என்று அவள் உடையை சுட்டிக் காட்டி எழுந்திருக்கும் படி சைகை செய்ய, அவளோ "போச்சு மாட்டிக்கிட்டோம் டி" என்று முனுமுனுத்த படியே எழுந்து நின்றாள்.
"நான் காமெடி பண்ணலையே... நீங்க சிரிச்சிட்டே இருக்கீங்க... ஓகே என்னனு சொன்னா நாங்களும் சிரிப்போம்ல" என்று அவன் சாதாரணமாக கூறினாலும் அவளுக்கு மிரட்டும் படியாக இருக்க, பயத்துடன் "நத்திங் சார்" என்றாள்.
"பரவா இல்லை சொல்லுங்க... நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்" என்று அவன் கூறினாலும் அதில் நீ சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டளை தொக்கி நிற்க, திரும்பி ஒருமுறை இனியாவையும் பூவையும் பார்த்தவள் சிறு பெருமூச்சுடன்,
"சார் இன்னைக்கு காலையில் என் பிரண்ட் பஸ்ல வந்துட்டு இருக்கும் போது ஒரு போலீஸ் ஆபீசரை ஒருத்தன் வெட்ட வந்துருக்கான்... அப்போது அவசரத்திற்கு பக்கத்தில் இருந்தவளது வாட்டர் பாட்டில் எடுத்து தூக்கி எறிஞ்சிட்டா சார்...அது அவள் தம்பி ஓடது... அவன் திட்டுவான்னு காலைல இருந்து புலம்பிட்டே இருந்தாள்...இப்போது நீங்கள் வாட்டர் பாட்டில் போதை பொருள்னு சொன்னதும்...." என்று நிறுத்தியவள் சிரிப்பை கடினப்பட்டு அடக்கினாள்.
வகுப்பே அவள் என்ன சொல்ல போகிறாள் என்று எதிர்பார்ப்புடன் பார்க்க "கடுப்புல...எந்திரிச்சி நிக்கவே வக்கில்லை இதுல...." என்று அதற்கு மேல் கூற முடியாமல் நிறுத்தி விட, வகுப்பே கொல்லென்று சிரித்தது.பாவம் தேவிக்கு தெரியவில்லை காலையில் பாட்டிலில் அடி வாங்கியவன் இவன் தான் என்று...
"ஓகே சைலன்ஸ்..." என்றவனின் கணீர் குரலில் மொத்த வகுப்பும் அமைதியாகி விட, "மிஸ்... " என்று அலைத்து கேள்வியுடன் நிறுத்த,
அதை புரிந்து கொண்டவள் "தேவி பிரியதர்ஷினி சார்" என்றாள் தேவி.
"ஓ...மிஸ். தேவி பிரியதர்ஷினி... யாரு அந்த ரெண்டு பேருனு நான் தெரிஞ்சுக்கலாமா" என்று அமைதியாக கேட்டவனின் கண்கள் நிர்ச்சலமாக இருந்தது. ஆனால் மனமோ படபடத்து கொண்டே இருந்தது.
தேவி அருகில் இருந்தவரின் புறம் திரும்ப இருவரும் தேவியை முறைத்த வண்ணம் எழுந்து நின்றனர்.
"இவங்க ரெண்டு பேரும் தானா..." என்று அமைதியாக கேட்டாலும் குரலில் ஆர்வம் வர தான் செய்தது.
ஆம் என்பது போல் தலை அசைத்தாள் தேவி.அவனுக்கு இப்போது நன்றாக விளங்கி விட்டது.காலையில் தன்னை காக்க முயற்சித்தவள் அவள் தான் என்று.இனியாவின் கண்கள் காட்டிக் கொடுத்தாலும் சிறு குழப்பம் இருக்கத் தான் செய்தது அவனுக்கு.இப்போது அது தீர்ந்ததில் மனம் மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தது. தான் யாரை முதன் முதலில் பார்த்து ரசித்தோமோ அவளே தன் உயிரையும் காக்க முற்பட்டு உள்ளாள் என்பதை நினைத்தும்.
"ஓ...." என்றவன், இனியாவின் புறம் திரும்பி, "உங்க நேம் என்ன..." என்று நேரடியாகவே கேட்டு விட,
பயத்துடனும் தயக்கத்துடனும் "இ...இனியா சார்" என்றாள் குரலில் இனிமையுடன்.
அவளது பெயரை தன் மனதின் ஆழத்தில் சென்று பதித்து வைத்துக் கொண்டவன் மனமோ "ப்பா... பேரும் குரலும் ஒன்னு போல இருக்கு" என்று நினைத்துக் கொண்டு, அருகில் உள்ளவளை கேள்வியாக பார்த்தான், பயத்துடன் "பூங்கொடி சார்" என்றாள் பூவு.
"ஓ..." என்றவன், "மிஸ் இனியா" என்றவளை அழைக்க, அவன் வாய் மொழியில் தன் பெயரை கேட்டவள் இனிமையுடனே நிற்க,
"ஹெலோ மிஸ் இனியா..." என்று இம்முறை அழுத்தி அழைத்தான். சட்டென்று சுயம் வந்தவள் "சொல்லுங்க சார்" என்று கூற,
"உங்க டிபார்ட்மென்ட்ல ரேவதின்னு ஒரு மேம் இருப்பாங்க தெரியும் தானே" என்று கேள்வியுடன் கேட்க,
"ஆமாம் சார்" என்று தலையசைத்தாள் இனியா.
"போய் அவங்களை கூட்டிட்டு வரிங்களா" என்று கேட்க, சரி என்று தலை அசைத்தவள் ரேவதியை தேடி சென்றாள்.
இங்கு வகுப்பில் இருவரையும் அமர சொல்லியவன் மீண்டும் பேச ஆரம்பித்து விட்டான். இனியா சென்று விக்ரம் அழைப்பதாக கூறவும் வேகமாக விக்ரம் இருக்கும் வகுப்பை நோக்கி வந்தார் ரேவதி.
- காதலிக்க வருவான்