• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

குலத்தொழில் 10final

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
குலத்தொழில் 10

கைலாசத்தின் இடைத்தரகர் தொழில் நன்றாகவே சென்றது.. அவரின் வருமானம் முன்பை விட இரண்டு மடங்காக ஆனது..

வீட்டின் தரம் உயர்ந்தது… இந்திராவை பச்சையப்பாஸ் மகளிர் கல்லூரியில் பிகாம் சேர்த்தார்… அம்முக்குட்டி 9 ஆம் வகுப்பில் உள்ளாள்… சில மாதங்களுக்கு முன்பு சின்ன அம்மு பெரிய அம்முவாக ப்ரோமோஷன் வாங்கினாள்…

அது ஒரு பெரும் கூத்து லட்சுமிக்கு.. மிகவும் நொந்து போய் விட்டார்.. விட்டால் அழும் நிலையில் இருந்தவரை இந்திரா தான் காப்பாற்றினாள்..

என்ன இவ்ளோ சொல்றேன்ன்னு பாக்குறீங்களா.. அவ செஞ்ச அட்டகாசம் அப்படி…

"அம்மா… ஐயோ... என்னை காப்பாத்துங்களேன்… நா செத்து போக போறேனே.. அம்மா பாத்துட்டே நிக்குறியே… நீயெல்லாம் அம்மாவா?

உண்மையாவே என்னை தவுட்டுக்கு தான் வாங்கிட்டு வந்தியா? அதான் என்னை இப்டி பாத்தும் அப்டியே நிக்குறீயா?

நீ காப்பாத்த வேணாம் நானே ஆஸ்பத்திரி போறேன்… ஐயோ நடக்க முடியலையே… ரத்தமா கொட்டுதே… வயித்த வலிக்குதே… ஒரு கலர் சோடாவாச்சும் வாங்கி தாம்மா… " குய்யோ மோரியோ என கத்தி கத்தி வராத கண்ணீரை வர வழித்து அழுது கொண்டு இருந்தாள் அம்முக்குட்டி…

"ஹே இதுக்கு மேல வாய தொறந்த மவள கொன்னுடுவேன் பாத்துக்க.. வாய் மேல கை வை.. போ போய் அந்த மூலைல உட்காரு… இந்திரா வர்ற நேரம் தான்.. அவ வர்ற வரை வாய தொறக்க கூடாது… புரிஞ்சிதா? '" அவருக்கு அவளை அடக்கும் வழி தெரியாமல் அதட்டி உருட்டி அமைதி ஆக்கினார் லட்சுமி

"அழுகையா வருது மா… பேசாம அழ மட்டும் செய்யவா? நா செத்து போனா நா எப்டி அழுவேன் அதான் இப்பவே அழுத்துக்கறேன்.. " அவளுக்கு தனக்கு ஏதோ ஆகி விட்டது தாம் சாக போகிறோம் என முடிவே செய்து விட்டாள்…

"அடியே நீ சாகலாம் மாட்ட...அமைதியா இரு வர்றேன்." கடவுளே முடியல கடைசில இவ கிட்ட தான் நா மாட்டிகிட்டு முழிக்கனும் போல லட்சுமி மனதுக்குள் புலம்பினார்..

இதற்கு முன் இரு பெண்களை பார்த்தவர் தான்.. இவளிடம் மட்டும் இவரின் நிலை ஐயோ பாவம் தான்…

"வா இந்து மா… உள்ள போய் அம்முவ பாரு.. என்னை படுத்தி எடுத்துட்டா… " லட்சுமி இனி அவள் பார்த்துக்கொள்வாள் எனும் திடம் வந்துவிட்டது…

"என்னம்மா ஆச்சு…

ஹாஹாஹா என்னடி இப்டி உட்கார்ந்து ட்டு இருக்க? " அம்மாவிடம் ஆரம்பித்து தங்கையிடம் முடித்தாள் இந்து..

மறுபடியும் அதே ஒப்பாரியை வைத்தாள் அம்முக்குட்டி..

இந்து அவளை அனைத்து கொண்டு காதில் சில சமாதானம் உடன்படிக்கை செய்து அமைதி படுத்தினாள்… அப்டி என்ன சீக்ரெட் என அங்கு நடந்த கூத்தை பாத்து லட்சுமி கேட்க…

"இதெல்லாம் சின்ன பசங்க விஷயம் உங்களுக்கு கிடையாது இல்ல அம்முக்குட்டி "என அவளை சந்தோஷமாக கேட்க…

அனைத்தையும் மறந்து அக்கா வின் அரவணைப்பில் மகிழ்ச்சி கொண்டாள்…

உங்களுக்கு மட்டும் அந்த சீக்ரெட் சொல்றேன்.. டெய்லி வடை, புட்டு, வெல்லம்ன்னு உனக்கு மட்டும் ஸ்பெஷல் ஹா தருவாங்க.. புது துணி போட்டு விடுவாங்க, முக்கியமா நீ வேலையே செய்ய வேண்டாம்.. இதான் அந்த இத்துப்போன சீக்ரெட்…ஹாஹாஹா…

வீட்டிலேயே மிகவும் சாதாரணமாக மஞ்சள் தண்ணி ஊத்தி வீட்டிற்கு அழைத்து கொண்டனர்.. (பெரும்பாலும் இதெல்லாம் வெளிய சொல்லி செய்ய மாட்டாங்க)

3 வது மாத தொடக்கத்தில் டில்லி பனப்பாக்கம் போய் ஆக வேண்டும் என அடம் பிடித்ததில் விசாலம் அம்மாவிற்கு அழைத்து.. வந்து கூட்டி செல்லும்படி கூறினார் லட்சுமி…

அதன் படி முத்து விசாலம் இருவர் வந்து கூட்டி சென்றனர்…

வீடு அன்று மிகவும் அசாத்திய அமைதி கொண்டு இருந்தது… வீடு மட்டும் இல்லை ஊரும் தான்..

சில நாட்களுக்கு முன் :

அனைத்து முதலாளிகள் ( மளிகை வைத்திருப்போர் ) கூட்டம்..

"இந்த தொழில தொடர்ந்து நடத்தணும்னா கூலிய குறைச்சே ஆகணும்… " ஒருவர்

"ஆமா இல்லனா நாம எல்லாம் தலைல துண்டை போட்டுட்டு போக வேண்டியது தான்… " இன்னொருவர்

"இத எப்படி கூலிக்காரவங்க ஏத்துப்பாங்க?" மற்றொருவர்

"ஏத்துக்கிட்டு தான் ஆகணும் வேற வழி இல்ல… அதுக்கு நாமளா நஷ்டம் அனுபவிக்க முடியும்… " சொட்டைத்தலை கொண்டவர்

"லுங்கி உற்பத்தி மட்டும் அதிகம் ஆகுது விற்பனை ரொம்ப கம்மியா ஆகிடுச்சு… இத சரி பண்ண என்ன செய்யணுமோ அத செய்யணும் அத விட்டு கூலி கொறச்சா பெரிய எதிர்ப்பு வரும்.." மொடா மீசை வைத்தவர்

"நீங்க சொல்றதும் சரி தான்.. போன மாசம் தான் 500ரூபாய் ஒரு பாவுக்கு கொறச்சோம்… இப்போ மறுபடியும்ன்னா கண்டிப்பா பிரச்னை வரும்… " குண்டு ஆசாமி

"நம்ம இனிமேலும் ஈரோடு வியாபாரம் மட்டும் நம்பி இல்லாம வேற ஏதாவது செய்யணும் " ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரர்

"கரெக்ட் தொழில விட முடியாது ஆனா அத எப்படி செய்யறது" பயந்தவர்

"அப்புறம் கதை அப்புறம் பாக்கலாம்.. இப்போ என்ன செய்ய போறோம் " சுயநலவாதி

"500 கொறச்சி தான் ஆகணும் " நாட்டாமை

"சரி தீர்மானம் போட்டு எல்லாரையும் கூப்டு சொல்லிடுங்க… " தலைவர்

கண்டிப்பா பிரச்னை செய்வாங்க என்ன பண்ண போறோம் என கூட்டம் களையும் போதும் புலம்பி கொண்டே சென்றனர்…

இதை ஏற்க முடியாது என கூறி தறியில் நெய்ததை கொடுக்காமல் அமைதியாய் எதிர்ப்பு தெரிவித்தனர் கூலிக்காரர்கள் …

இதற்கும் பலன் இல்லை எனவும், அனைவரும் ஊர் கூட்டம் ஒன்று கூட்டி வேலை நிறுத்தம் முடிவு செய்து அறிவித்தனர்…

இந்த சமயத்தில் தான் முத்து வீட்டிலும் சொத்து பிரச்சனை வெடித்தது… காரணம் பாட்டி தாத்தா என இருவரும் ஒன்றன் பின் ஒன்றாக இயற்கை எய்தியது தான்..

அவர்களின் உயிலில் பெரிய பேரனுக்கு அந்த பெரிய வீட்டையும், நடுவில் உள்ள மாட்டு கொட்டகை மூர்த்திக்கும், தறி உள்ள இடம் முத்துவுக்கும் எழுதி இருந்தனர்…

இது போதாதா பிரச்னைக்கு.. முத்து வேண்டும் என்றோ வேண்டாம் என்றோ எதற்கும் வாய் திறக்க வில்லை…

முத்து செய்த ஒரே தவறு டில்லிக்கு எதையும் சொல்லாதது.. விசாலம் தான் புள்ள பெத்த உடம்பு இதெல்லாம் சொல்லி கஷ்ட படுத்தாத என்று விட்டார்.

பெரியவர்கள் செய்த குளறு படியில் விசாலம் கட்டி காத்த ஒற்றுமை ஆட்டம் கண்டது… "மாட்டு கொட்டகையில் இருக்க நா என்ன இயேசு நாதரா இல்லை கிருஷ்ணன் ஹா?

என்னால இங்க ஒண்டு குடித்தனம் நடத்த முடியாது.. எனக்கு சேர வேண்டியதை பிரிச்சு குடுங்க நா காஞ்சிபுரம் போய் இருந்துக்கறேன்.. உங்களுக்காக தான் டெய்லி போய்ட்டு போய்ட்டு வந்தேன்.. இனிமே யாருக்காகவும் பாக்க மாட்டேன்… " மூர்த்தி பொங்கி பொங்கல் வைத்து விட்டான்…

கூறிய படி அனைத்தையும் பங்கு பிரித்து கொள்ள அனைவரும் சம்மதம் கூறி அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருந்தது…

இந்த சமயம் தான் டில்லி வைஷாலி வந்து இறங்கியது.. முத்து பொறுமையாக அவனின் ராணிக்கு புரியும் படி எடுத்துக்கூறினான்…

அவளுக்கு இதை எப்படி எடுப்பது கையாள்வது என எதுவும் புரியவில்லை…

முத்து தான் "எனக்கு யார் மேலயும் கோவம் இல்ல அதனால நீ பழைய படி எல்லார்கிட்டயும் பேசு "என கூறி இருந்தான்…

வீட்டையும் தொழிலையும் தனதாக ஏற்ற டில்லிக்கு இது பெரிய இடி தான்…

வேலை நிறுத்தம் தொடங்கி ஒரு வாரம் ஆகி இருந்தது… ஊர் அவ்வளவு அமைதியாக இருப்பது மாதத்தில் ஒரு நாள் மட்டுமே.. அம்மாவாசை அன்று தறி விட கூடாது என்பது ஊர் கட்டுப்பாடு.. மீறினால் அபராதம் விதிக்கப்படும்… ஆனால் இன்றோ அம்மாவாசை இல்லை கட்டுப்பாடு இல்லை ஆனாலும் ஊர் அமைதியாக இருந்தது…

போட்ட முதல் மொத்தமும் முடங்கிய கோவத்தில் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் விட்டனர் முதலாளிகள்..

இதனால் கை இருப்பு காலி ஆகி அடிப்படை தேவைக்கு கூட திண்டாடினர் மக்கள்…

போராட்டத்தின் அடுத்த கட்டமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து அங்கேயே போராட்டம் செய்தனர்…

இந்த நிலையில் தான் அனைவரும் பிரிந்து தனிக்குடித்தனம் சென்றனர் முத்து வீட்டில்…

கடினமான சூழ்நிலை இது…

ராணி நிலைமையை கையில் எடுத்து ஓரளவுக்கு சுமுகமாக அவரவர் தன்மைக்கு ஏற்ப பேசி மூர்த்திக்கும் அவ்வீட்டில் ஒரு தனி பகுதி ஒதுக்கும் படி செய்தாள்..

ஆனால் மூர்த்தி ஒரே வாரத்தில் காஞ்சிபுரத்தில் வீடு பார்த்து சென்று விட்டான்…

முத்துவும் தறிக்கு முன்னாடி இருந்த இவன் பாகத்தில் ஒரு சிறு வீடு போல் கட்டமைத்து குடி புகுந்தான்…

விசாலம் நிலை.. சொல்லில் வடிக்க முடியாத உணர்வுகள் அவை… இருந்தும் யாரையும் தடுக்க வில்லை… பெரும்பாலும் முத்து வீட்டில் உணவருந்தி கொள்வார்.. மயூரநாதர் எந்த மருமகள் கூப்பிட்டாலும் அங்கு சென்று சாப்பிட்டு விடுவார்…

போராட்டம் ஒரு மாதத்தை கடந்தது… ஊர் மக்கள் ஒன்று கூடி ஊர் மத்தியில் பெரிய அண்டாவில் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தை நடத்தினர்…

இந்த செய்தி அனைத்து ஊடகங்கள் செய்தித்தாள்கள் என அனைத்திலும் பேசப்பட்டது..

அதன் பிறகான பேச்சு வார்த்தையில் கூலி ஏற்றவும் மாட்டோம் குறைக்கவும் மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற பட்டது…

அதன் பிறகு சகஜமான சூழ்நிலை உருவானது ஊரில்… ஆனால் முத்து வீட்டில்?

அடுத்த ஒரு வருடம் மட்டுமே வாசுவுடன் சேர்ந்து தொழில் செய்தான் முத்து…

பின்பு அனைத்தையும் விட்டுவிட்டு சேலை வியாபாரம் செய்ய ஆரம்பித்து விட்டான்..

டில்லி வீட்டில் சும்மா இருக்க முடியாமல் தன் தகப்பனிடம் கேட்டு ஒரு ஜாக்கெட் பார்டர் போடும் தறி ஒன்றை வாங்கி வீட்டிலேயே போட்டாள்..

(அதுவும் கைத்தறி தான்.. பட்டு புடவைக்கு மேட்சிங் ஜாக்கெட் கிடைக்காத பட்சத்தில் வெறும் சரிகை கொண்டு நெய்த கரை வாங்கி சேர்த்து தைத்து கொள்வார்கள், இவள் செய்வது அந்த சரிகை கொண்ட கரை மட்டுமே )

இதை கைலாசம் மூலம் தானே உருவாக்கி செய்கிறாள்.. முத்து உன் விருப்பம் என விட்டுவிட்டான்..

தொழில் முற்றும்…

(ஆம் தொழில் முற்றும் எப்பொழுது நாம் லுங்கியில் இருந்து ட்ராக் பாண்ட்க்கு மாறினோமோ அப்பவே தொழில் முற்று பெற தொடங்கி விட்டது.. )

தற்போதைய நிலைமை (சுமார் 5 வருடங்கள் கழித்து ) ::

கைலாசம் தொழிலில் நன்கு கால் ஊன்றி அவரின் செல்வ நிலை நன்கு உயர்ந்தது…

இந்திராவிற்கு தேவனை மனம் முடித்தார்…

அம்முக்குட்டி காலேஜ் படிக்கிறாள்.. நல்ல முன்னேற்றம் அவளிடம்… பேசும் பேச்சில், மயக்கம் போட்டு விழுவதில் என அனைத்திலும்… ஹாஹாஹா நல்ல முன்னேற்றம் தான்…

லட்சுமி அம்மா இப்பொழுது நல்லா வெயிட் போட்டு பார்க்க அம்சமாக இருந்தார்…

முத்து.. சேலையுடன் ஜாக்கெட் பிட், பாவாடை என தொழிலை விரிவு படுத்தி இருந்தான்…

டில்லிக்கு தறி நெய்வது நேரம் கிடைத்தால் மட்டும் என்று ஆகியது… வைஷாலிக்கு அடுத்து ஒரு குட்டி பையன் இருக்கான்… பேர் பரதன்…

ஊரில் இன்றும் லுங்கி நெய்யும் தொழில் தான்… செய்யும் முறைகள் தான் மாறி உள்ளது…

ஆட்டோமேட்டிக் தறி, 100 மீட்டர் தறி என மாற்றம் கண்டது…

டில்லி கஷ்டபட்டு கற்றுக்கொண்ட நூல் இழைக்கும் பணி இப்பொழுது கிடையாது… அதற்கு பதில் பெரிய கோன் இல் பெரிய ஆலைகளில் சுற்றி வந்து விடுகிறது…

இப்பொழுது ஈரோட்டிற்கு வியாபாரம் செய்வது கிடையாது..

144, நண்டு பிராண்ட், சங்கு மார்க் போன்ற பெரிய நிறுவனங்கள் அனைத்து மூல பொருளையும் மொத்தமாக முதலாளிகளுக்கு அனுப்பி லுங்கியாக பெற்றுக்கொள்கிறது…

மாற்றம் ஒன்றே நிலையானது… இது இன்றைய நிலை மட்டுமே.. 80's கிட்ஸ் மற்றும் 90's கிட்ஸ் மட்டுமே நம்பி உள்ளது தொழில்…

அடுத்த தலைமுறைக்கு லுங்கி எப்படி கட்ட வேண்டும் என்பது கூட தெரியாது என்பது தான் இத்தொழிலின் அடுத்த நிலை…

தொழிலை என்னுடன் பிறந்த பிறப்பாக எண்ணியவள் நான்… அந்த சத்தம் இல்லை என்றால் தூக்கம் கூட வராது அப்பொழுது..

நூல் மெஷினில் தலை முடி சிக்கி உயிர் விட்டவர்கள், கை விரல் இழந்தவர்கள்… தறியின் பல்சக்கரத்தில் கை விட்டவர்கள் என நிறைய பார்த்து இருக்கேன்…

இடுப்புல பால் குடிக்கும் பையன வச்சிக்கிட்டு தார் போடும் அம்மாக்களை பார்த்து இருக்கேன்… ஆண்கள் மட்டுமே செய்ய கூடிய பாவு ஆலையில் பாவு சுத்துவதை பெண்கள் செய்வதையும் பார்த்து இருக்கேன்…

என் அக்காவே இதை அவ்வளவு நேர்த்தியாக செய்வாங்க… இன்னொரு அக்கா அப்பாவை விட தொழிலை நேர்த்தியாக நடத்துவார், அம்மா அனைத்தையும் கட்டி காத்த கடவுள்…

இந்த குலத்தொழில் எனும் என் முதல் கதையை என் குடும்பத்திற்கு அர்ப்பணிக்கிறேன்…

என்னுடன் இக்கதையில் பயணித்த, இந்த கதையை பொறுமையாக படித்த அனைவருக்கும் நன்றிகள்…🙏🙏🙏🙏🙏🙏

 
Top