தினேஷும் ருத்ரனும் பேசி கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் முடிவடைந்து இருந்தன.
இந்த மூன்று மாதத்தில் தினேஷ் மித்ராவை எந்த விதத்திலும் அணுகவே இல்லை. அவன் செய்து வைத்திருந்த அக்கப்போருக்கு இப்போது காதல் கல்யாணம் என்று அவளிடம் சென்றால் செருப்படி உறுதி என்பது அவனுக்கு தெரியும். அதனால் விஷயத்தை ஆற போட்டான்.
ருத்ரன் என்ன சொல்லி விட்டு சென்றானோ மித்ரா அதற்கு மேல் ஒப்பந்த முறிவு பற்றி பேசவில்லை. ஆனால் தினேஷுடன் இணக்கமாகவும் பேசவில்லை.ஒதுங்கியே இருந்தாள். தொழிலுக்கும் அதி முக்கியமாக தேவை என்றால் மட்டும் தான் தினேஷை அணுகினாள். இல்லை என்றால் ஜீவா மூலமாகவே தேவையானதை நடத்திக் கொண்டாள்.
தொழில் பன்மடங்கு வளர்ந்து இருந்தது. அவள் கை பக்குவத்தில் இருந்த பொருட்களின் சுவை மக்களை மீண்டும் மீண்டும் அந்த உணவகத்திற்கு வரவழைத்தது. இதையே பின் பற்றி மற்ற கிளைகளில் உணவகங்கள் திறக்கும் பணியில் இரு தரப்பினரும் ஈடுபட்டனர்.
மித்ராவிற்கு இது பெரிய வளர்ச்சியே ஹோம் பேக்கர் என்ற நிலையில் ஆரம்பித்தவள் இப்போது ஒரு கிளை என்று இல்லாமல் 5 கிளைகளுடன் தமிழகம் முழுவதும் இருப்பது பெரிய சாதனையே.
ஆனால் இந்த சாதனையை செய்ததற்கான எந்த வித பெருமையும் இன்றி அமைதியாகவே வலம் வந்தாள் மித்ரா. அவள் மனம் பக்குவப்பட்டிருந்தது. வெற்றிகளோ தோல்வியோ எதுவுமே நிரந்தரம் இல்லை. அவள் அன்று தினேஷிடம் சொன்னது போல இதுவும் கடந்து போகும். இந்த மனநிலையை அடைய அவள் எத்தனை எத்தனை துன்பங்களை பார்க்க வேண்டியிருந்தது! எத்தனை எத்தனை நிலைகளை கடக்க வேண்டி இருந்தது! ஆனால் எல்லாவற்றையும் கடந்து ஒரு பக்குவப்பட்ட மனநிலையில் தான் மித்ராவை சந்தித்தான் தினேஷ்.
இந்தப் பக்குவப்பட்ட மித்ரா தினேஷை மிகவும் கவர்ந்தாள். தான் விரும்பும் பெண்ணாக மட்டுமல்லாமல் ஒரு சக மனுசியாக அவள் செய்தது செய்து கொண்டிருப்பது அனைத்தும் தினேஷிற்கு பிரமிப்பாகவே இருந்தன. எல்லா விவரங்களையும் சீதாவிடமும் பகிர்ந்து கொண்டான்.
சொல்லி பெருமைப்பட்டுக் கொண்டிருந்த மகனை பார்த்தார் சீதா. "எல்லாம் சரிதான் தினேஷ். நீ ஒன்றை யோசித்தாயா? மித்ராவை நீ மணந்து கொண்டால் உனக்கென்று ஒரு வாரிசு இருக்காது."
" அம்மா என்ன பேச்சு?" என்று கோபப்பட்டான் தினேஷ்.
" இல்லை கண்ணா! தாயாக உனக்கு இதை எடுத்துச் சொல்ல வேண்டியது என் கடமை. இப்போது இருக்கும் பிரம்மிப்பில் நீ ஏதாவது செய்து கொண்டு பின்னர் அதற்கு வருத்தப்படக் கூடாது அல்லவா."
"இப்போது என்ன சொல்ல வருகிறீர்கள்?" கட்டுப்படுத்திய கோபத்துடன் கேட்டான் தினேஷ்.
" ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்துக் கொள் என்றுதான் சொல்கிறேன். மித்ராவை தான் மணக்கப் போகிறேன் என்று சொன்னால் அதில் எனக்கு எந்த விதமான ஆட்சேபனையும் இல்லை. இந்த குடும்பத்திற்கு வாரிசாக ஆதவன் இருக்கிறான் அது போதும் எனக்கு. அதற்கு மேல் எனக்கு உன் சந்தோஷம் தான் முக்கியம். நான் என்றுமே உனக்கோ விஜய்க்கோ உங்கள் சந்தோஷத்திற்கு இடையில் வந்ததே இல்லை. நீங்கள் விரும்பியபடி வாழத்தான் வழி செய்து கொடுக்க முயன்றேன். இனியும் அப்படித்தான் இருப்பேன். ஆனால் இப்போது இருக்கும் ஆசையில் நடந்து கொண்டு பின்னால் நீ வருத்தப்பட்டு அவளை வாட்டி விடக்கூடாது. எத்தனையோ கஷ்டங்களை சந்தித்து வந்தவள் மித்ரா. உன்னை திருமணம் செய்த பின் அவள் ஒரு நாள் வருந்தினாள் என்று இருக்கவே கூடாது. சில ஆண்டுகளே வாழ்ந்தார்கள் என்றாலும் திவ்யாவும் விஜயனும் வாழ்ந்த வாழ்க்கையில் விஜயால் திவ்யா துன்பப்பட்டாள் வருத்தப்பட்டாள் என்ற சொல் என்றுமே இருந்ததில்லை. என் மகனால் அவனது மனைவி வருத்தப்பட்டாள் என்று என்றுமே இருக்கக் கூடாது. அது என் வளர்ப்பிற்கு களங்கம் வைக்கும் ஒன்றாகும். அதை நீ என்றுமே செய்து விடாதே. அதனால் தான் சொல்கிறேன். அவளிடம் பேசும் முன் பலமுறை யோசித்து விடு. ஆனால் யோசித்து அவளிடம் பேசிவிட்டால் பின்னர் ஒரு கணம் இதை பற்றி யோசிக்க கூடாது." என்று தன்னிலை விளக்கம் அளித்தார் சீதா.
" அம்மா நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இதையெல்லாம் யோசிக்காமல் நான் உங்களிடம் வந்து இதைப் பற்றி பேசுவேனா? இல்லை அம்மா எனக்கு ருத்ரன் மித்ராவின் இந்த பிரச்சனை பற்றி சொன்னபோது மிகவும் கஷ்டமாகத்தான் இருந்தது. அது எனக்கு ஒரு வாரிசு இருக்காது என்பதாக இல்லை. பாவம் மித்ரா தனியாக இத்தனை கஷ்டங்களை அனுபவித்திருக்கிறாள் என்று தான் மனம் எண்ணியது. உண்மையை சொல்லப்போனால் எனக்கு என்றுமே திருமணம் குழந்தைகள் என்ற ஆர்வம் இருந்ததில்லை. உங்களுக்கு எப்படியும் தெரிந்திருக்கும் நான் குழந்தைகளை தூக்க கூட மாட்டேன். நம் ஆதவன் குட்டி தனி. இல்லையென்று நான் சொல்ல முடியாது. ஆனால் அந்த விதமான வாழ்க்கையில் எனக்கு பெரிதாக நாட்டமிருந்ததில்லை. மித்ராவை சந்தித்த போது தான் முதன்முதலில் சலனப்பட்டேன். மனைவி காதல் என்பதற்கு மித்ரா குழந்தை பாசம் என்பதற்கு ஆதவன். இதற்கு மேல் எனக்கு என்ன வேண்டும் அம்மா? எனக்கு இதுவே திருப்தி தான் சந்தோஷம்தான். அதனால் நீங்கள் அதைப்பற்றி எதுவும் கவலைப்படாமல் நிம்மதியாக இருங்கள். இப்போது நம் முன் இருக்கும் மிகப்பெரிய போராட்டமே மித்ராவை சம்மதிக்க வைப்பது தான். அவள் என் மீது கொலை காண்டில் இருக்கிறாள். அதை மாற்றி சாதாரண நட்பாகி பின்னர் காதலாகி கல்யாணம் ஹா ஹா நினைத்தாலே கண்ணை கட்டுகிறது அம்மா."
" பின்னே நீ செய்து வைத்திருக்கும் வேலைக்கு கொஞ்சம் நிதானம் வேண்டும் என்றால் என் பேச்சை கேட்டாயா? நேராக சென்று ருத்தரனை அடித்து விட்டு வந்திருக்கிறாய். இதற்கு அவள் உன் மேல் கோபப்படாமல் உன்னை அழைத்து வைத்து கொஞ்சுவாள் என்றா நினைத்தாய்? என்ன வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும். ருத்திரன் அவளுக்கு கணவன் என்ற நிலையில் இருப்பவன். அவனை போய் அடித்தாயே தினேஷ். உன்னை என்னவென்று சொல்வது சரி உப்பை தின்றால் தண்ணி குடித்து தான் ஆக வேண்டும். போய் என் மருமகளை சமாதானப்படுத்தி இந்த வீட்டிற்கு சீக்கிரம் விளக்கு ஏற்ற அழைத்து வா" என்று ஆசீர்வாதம் செய்து அனுப்பினார் சீதா.
மாதங்கள் உருண்டு ஓடின. ஆனால் தினேஷிற்கு மித்ராவை அணுகும் விதமே தெரியவில்ல எப்படி அவளிடம் சென்று பேசுவது என்னவென்று ஆரம்பிப்பது? சாதாரண நிலையில் இருக்கும் மனிதனுக்கே காதலியிடம் காதலை சொல்வது சுலபமில்லை.
ஆனால் இவர்கள் நிலையில் பல வினோதங்கள். அண்ணன் மகனின் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் தினேஷ். ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகியிருக்கும் மித்ரா. அதிலும் அவளுக்கு குழந்தை பேறு என்பது இல்லை என்பது நிச்சயம். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் இந்த பேச்சை என்னவென்று ஆரம்பிப்பது? தனக்கு மித்ராவின் நிலை பற்றி தெரியும் என்று கூட சொல்ல முடியாது. அப்படி சொன்னால் ருத்ரனை காட்டிக் கொடுப்பது போல ஆகிவிடும். இந்த மாதங்களில் ருத்ரனும் தினேஷை லண்டனில் இருந்து நச்சரிக்க ஆரம்பித்து இருந்தான். பேசினீர்களா மித்ரா என்ன சொன்னாள் என்று வாரத்திற்கு ஒரு முறையாகவது கேட்டு விடுவான். இல்லை என்று தான் தினேஷ் பதில் உரைத்து கொண்டு இருந்தான்.
இந்த நிலையில் தினேஷ் காத்திருந்த நாளும் வந்தது. ருத்ரன் மித்ராவின் விவாகரத்து கோர்ட்டில் முடிவு செய்யப்பட்டு தீர்ப்பு வந்துவிட்டது. தீர்ப்பு வந்தவுடன் மித்ரா ருத்திரனிடம் சொல்ல ருத்ரன் நேரே தினேஷை தான் அழைத்தான்.
" தினேஷ் எங்கள் விவாகரத்திற்கான தீர்ப்பு வந்துவிட்டது. இப்போதாவது போய் மித்ராவிடம் பேசுங்கள். இல்லை உங்களுக்கு அவளை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றாலும் சொல்லிவிடுங்கள். இதற்கு மேல் நான் உங்களை நச்சரிக்க மாட்டேன்"
" ஐயோ என்ன ருத்ரன் நீங்கள்? நானே உங்களை அடித்துவிட்டு மித்ராவிடம் எந்த முகத்துடன் போய் காதலிக்கிறேன் என்று சொல்வது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் வேறு ஏன் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்?"
" பேசத் தெரியவில்லையா உங்களுக்கு? தொழிலில் எத்தனையோ சாதனைகளை படைத்தவர் நீங்கள். உங்களுக்கு பேச தெரியவில்லை என்றால் என்ன தினேஷ்?"
"தொழில் வேறு. சொந்த விஷயம் வேறு ருத்ரன். அது எப்படி தொழிலில் பேசுவது போல் இங்கே பேச முடியும்? அங்கானால் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசி விடுவேன். நடந்தால் லாபம் நடக்காவிட்டாலும் பெரிதாக நஷ்டம் இல்லை என்று ஒதுங்கி விடுவேன். இது அப்படியா? கரணம் தப்பினால் மரணம் என்பது போல ஏதேனும் ஒன்றை தவறாக செய்துவிட்டால் என் எதிர்காலம் என்ன ஆவது? ஏற்கனவே செய்திருக்கும் தவறுகள் பத்தாதா?" என்று புலம்பினான் தினேஷ்.
" அட தினேஷ் புலம்பாமல் நீரே போய் தைரியமாக அவளிடம் பேசுங்கள். இப்படி எத்தனை நாட்கள் தான் இருப்பீர்கள்? பேசினால் தானே அவள் மனதில் இருப்பது தெரியும். தெரிந்தால் அடுத்து அதை வைத்து எப்படி காய் நகர்த்தி அவளை சம்மதிக்க வைக்கலாம் என்று யோசிக்கலாமே. போங்கள் போய் பேசித்தான் பாருங்கள்." என்று ஊக்குவித்து அனுப்பினான் ருத்ரன்.
அன்று மாலை தனியாக அவளை சந்திக்க வேண்டும் என்று மித்ராவிற்கு குறுஞ்செய்தி அனுப்பினான் தினேஷ். குறுஞ்செய்தியை பார்த்து புருவம் சுருக்கி யோசித்தாள் மித்ரா.
இவன் எதற்கு இப்போது என்னை சந்திக்க வேண்டும்? சரி என்னவாக இருந்தாலும் தொழிலில் ஒப்பந்ததாரர். பேசி தான் பார்ப்போம் என்று சரி என்று பதில் அளித்து அவன் சொன்ன இடத்திற்கு சென்று காத்திருந்தாள் மித்ரா.
ஓரிரு நிமிடங்களிலேயே வந்தான் தினேஷ் இருவரும் புன்னகை பரிமாறிக் கொண்ட பின் ஆளுக்கு ஒரு கோப்பை மில்க் ஷேக் ஆர்டர் செய்தனர்.
சிப்பந்தி விலகவும் தயக்கத்துடன் மித்ராவை பார்த்த தினேஷ் "மித்ரா நான் சொல்லப்போவது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இதை எதையும் சொல்லாமல் என்னால் இருக்க முடியாது."
"தினேஷ் மீண்டும் ருத்ரனை பற்றி ஆரம்பிக்காதீர்கள்."
" இல்லை அதைப்பற்றி இது எதுவுமே இல்லை. உங்கள் ருத்ரன் உத்தமன் மிகவும் நல்லவர் அப்படியே இருக்கட்டும். விட்டுவிடுங்கள். நான் பேச வந்தது வேறு. இன்று உங்களுக்கும் ஒரு ருத்ரனுக்கும் விவாகரத்திற்கான தீர்ப்பு வந்தது என்று கேள்விப்பட்டேன்."
"யார் சொன்னது?" என்று கூர்மையுடன் கேட்டாள் மித்ரா.
"எப்படியோ தெரிந்தது என்று வைத்துக் கொள்ளுங்கள்!" என்று சமாளித்தான் தினேஷ். "சரி இப்போது அதற்கென்ன அதனால் தொழிலில் ஏதாவது பிரச்சனையா?" என்று சிடுசிடுத்தாள் மித்ரா.
" எந்நேரமும் தொழிலா? தொழிலிற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான்.... மித்ரா
.... வந்து.... நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா?"
" என்னது?" அதிர்ந்து போய் தினேஷை பார்த்தாள் மித்ரா.
" என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என்று புரிந்து தான் பேசுகிறீர்களா தினேஷ். நீங்கள் யார் நான் யார்? எப்படி இது சாத்தியம்? எதை மனதில் வைத்துக் கொண்டு இப்படி பேசுகிறீர்கள்? சேசே தினேஷ் உங்களிடம் இருந்து நான் இதை எதிர்பார்க்கவே இல்லை."
" மித்ரா தயவு செய்து இந்த முறையாவது என்னை பேச விடுங்கள். சென்ற முறை நான் செய்தது மிகப்பெரிய தவறாக இருந்தாலும் நீங்கள் என்னை பேசவே விடவில்லை. இந்த ஒரு முறை நான் பேசுவதை கேட்டு விடுங்கள். அதற்கு பின் உங்களை எந்த விதத்திலும் நான் தொந்தரவு செய்ய மாட்டேன்."
சொல்லுங்கள் கேட்கிறேன் என்பது போல ஒரு பாவத்துடன் நாற்காலியில் சாய்நது அமர்ந்தாள் மித்ரா.
" மித்ரா வாழ்க்கையில் நான் எந்த பெண்ணின் மீதும் இதுனாள் வரை ஆசைப்பட்டதில்லை. அதற்கான முதல் விதிவிலக்கு நீங்கள் தான். அன்று விமானத்தில் நாம் பேசிய போது என் கையை பற்றி நீங்கள் ஆறுதல் சொன்னீர்களே அந்த க்ஷனம் அப்பா.... என்ன சுகம். அந்த நிலையிலும் உங்கள் கைகளை பற்றிய படியே இந்த வாழ் நாளை கழித்து விடலாமா என்று தோன்றியது. என்ன அந்த நிலையில் இப்படி ஒரு எண்ணம் என்று என்னை பற்றியே எனக்கு அசிங்கமாகவும் ஆச்சரியமாகவும் ஒரே நேரத்தில் இருந்தது. ஆனால் மனம் ஒரு குரங்கு என்று கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா. அப்படித்தான் இருந்தது என் மனம். அப்போதிலிருந்து எனக்கு உங்கள் நினைவுதான். ஒப்பந்தத்திற்கு உங்கள் விண்ணப்பத்தை பார்த்தபோது முதலில் மிகவும் சந்தோஷமாக இருந்தாலும் உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று பார்த்தவுடன் என் மனதை சமாதானப்படுத்திக் கொண்டேன். எனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான். ஆனால் எனக்கு உங்களையும் ருத்ரனையும் பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒன்று சரியாக இல்லாதது போல் தோன்றிக் கொண்டே இருந்தது. உங்கள் இருவருக்குள்ளும் ஒரு அன்னியோன்யம் இல்லாத ஒட்டுதல் இல்லாத தன்மை இருந்தது போல இருந்தது. இது ஆசை கொண்ட மனதின் என்னமா இல்லை உண்மையா என்று தெரிந்து கொள்ளத்தான் ருத்திரனை பற்றி லண்டனில் உள்ளவர்களிடம் விசாரிக்க சொன்னேன். விசாரித்ததில் தெரிந்ததுதான் அவருக்கும் ரேச்சலுக்குமான உறவு. அதிர்ந்து விட்டேன். நேரே அவரிடம் விசாரிக்க சென்ற போது அவர் சற்றே திமிராக பதில் சொல்லவும் கோபத்தில் கையை நீட்டி விட்டேன். என்ன செய்வது கொஞ்சம் முன் கோபக்காரன் தான் நான். அம்மா எப்போதுமே சொல்வார்கள் யோசித்து விட்டு செயல்படு என்று இதுவரை செய்யவில்லை இனிமேலும் செய்வேனா என்று தெரியவில்லை. அது மிகவும் பெரிய பிரச்சனையாகி நீங்கள் என்னை மொத்தமாக வெறுத்து ஒதுக்கி விட்டீர்கள். ஆனால் மித்ரா அதற்குப் பின் தான் தெரிந்தது ருத்ரன் உங்களை விவாகரத்து செய்யத்தான் இந்தியா வந்திருந்தார் என்று. சரி மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பு என்று எண்ணிக் கொண்டேன். ஆனால் நான் ஏற்கனவே செய்த தவறினால் நீங்கள் என்னிடம் பேசவே மறுத்துக் கொண்டிருக்கிறீர்கள். எனக்கும் உங்களை நெருங்குவது எப்படி என்று புரியாத நிலை. இன்று விவாகரத்து தீர்ப்பு வந்தது என்று தெரிந்தவுடன் உங்களுடன் பேச வேண்டும் என்று முடிவு செய்து ஒரு முடிவோடு தான் வந்திருக்கிறேன். சரியோ தப்போ நல்லதோ கெட்டதோ எனக்கு கிட்டத்தட்ட இந்த ஓராண்டின் தவிப்புக்கான பதில் வேண்டும் மித்ரா." என்று நீளமாக பேசி முடித்தான் தினேஷ்
அமைதியாக அவனை வெரித்துப் பார்த்த மித்ரா" இவ்வளவு தெரிந்த உங்களுக்கு நான் ஏன் ருத்ரனை திருமணம் செய்து கொண்டேன் என்பதும் தெரிந்திருக்கும் தானே? அதற்கு மேலும் மா திருமண பேச்சோடு வந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டாள் ஒரு வெறுமையான குரலில்.
" மித்ரா" என்றான் தினேஷ்.
"நீங்கள் சொல்லாமல் விட்டாலும் உங்களுக்கு ரேச்சல் பற்றிய தெளிவு ருத்திரனிடமிருந்து தான் வந்திருக்க வேண்டும்.அந்த தெளிவு இல்லாமல் நீங்கள் அடுத்து எதிலும் என் சம்பந்தமான விஷயத்தில் தலையிட்டு இருக்க மாட்டீர்கள்அவர் உங்களிடம் எல்லா விவரங்களையும் சொல்லிவிட்டார் என்பது இப்போது எனக்கு நன்றாக புரிகிறது
அது தெரிந்தும் ஏன் தினேஷ் என்னுடன் உங்கள் வாழ்க்கை? சந்தோஷம் என்பதற்கான வாய்ப்பே இல்லை . அப்படி இருந்தும் ஏன்?" என்று நேரடியாக கேள்வி கேட்டாள் மித்ரா.
" மித்ரா அன்று அந்த பிரைமரி ஓவரி என் சபீசியன்சி பற்றி ருத்ரன் சொல்லும் முன் இப்படி ஒன்று இருக்கிறது என்று எனக்குத் தெரிந்ததில்லை. ஆனால் அதற்குப் பின் அதைப்பற்றி நான் நிறைய படித்து தெரிந்து கொண்டேன்.
விசாரித்தும் தெரிந்து கொண்டேன். எனக்கு ஒன்று சொல்லுங்கள் மித்ரா. உடலுறவு மட்டும்தான் ஒரு கணவன் மனைவிக்குள் சந்தோஷத்தை தருவதா? கண்டிப்பாக இல்லை அன்று உங்கள் கைகள் நான் உணர்ந்த கதகதப்பு பாதுகாப்பு அமைதி இது எதுவுமே உடலுறவு ஏன் எந்த விதத்திலும் உடல் சார்ந்தது அல்ல. முழுக்க முழுக்க மனம் சார்ந்தது. மனதார ஒரு கணவனும் மனைவியும் ஒருவருக்காக ஒருவர் என்று வாழ்ந்தால் அந்த ஆத்மார்த்தமான வாழ்க்கையே சந்தோஷம் என்பது என் எண்ணம். உடலுறவு என்பது அதில் ஒரு பகுதி தான். நான் இல்லை என்று சொல்லவில்லை ஆனால் அது மட்டுமே சந்தோஷம் இல்லை. எனக்கு உங்களுடனான வாழ்க்கையில் மற்ற விதங்களில் கிடைக்கப் போகும் சந்தோஷம் உடலுறவுடன் கூடிய ஒரு பெண்ணுடன் நான் வாழும் வாழ்க்கையில் கிடைக்கும் சந்தோஷத்தை விட நூறு ஆயிரம் கோடி மடங்கு பெரிது. இதை எப்படி உங்களுக்கு சொல்லி புரிய வைப்பேன் என்று எனக்கு தெரியவில்லை மித்ரா. என்னால் இன்னொரு பெண்ணை ஏறெடுத்தும் பார்க்க முடியாது. எனக்கு மனைவி என்று ஒருத்தி வந்தால் அது நீங்கள் மட்டும் தான். என் பக்கமும் குறைகள் இருக்கின்றன தான்."
" குறைகளா என்ன குறைகள் உங்கள் முன்கோபத்தை சொல்கிறீர்களா?"
" முன் கோபமா? அதை வெறும் குறை என்று சொல்ல முடியாது மித்ரா அது பெரிய பிரச்சனை. அதை ஒரு பக்கம் வைத்து விடுங்கள். நான் அதைப் பற்றி சொல்லவில்லை ஆதவனை சொன்னேன்."
" ஆதவனை குறை என்பீர்களா? என்று அதிர்ந்து கேட்டாள் மித்ரா.
" இல்லையா பின்னே? நான் வேறொரு பெண்ணை மணக்க சென்றால் அவர்கள் வீட்டில் கேட்கும் முதல் கேள்வியே ஆதவனின் பொறுப்பு யாருடையது என்பது தானே. சொல்லுங்க நம் நாட்டில் அதுதான் நிதர்சனம்."
" இருக்கலாம் தினேஷ் ஆனால் உங்களை உங்களுக்காக விரும்பும் ஒரு பெண்ணிற்கு ஆதவன் ஒரு பாரமாக இருக்க மாட்டான்."
"என்னை எனக்காக விரும்பும் பெண்ணா மித்ரா? அப்படி ஒரு பெண்ணிடம் அவள் மனதை நான் கவரும் விதத்தில் நான் நடந்து கொள்வேன் என்று நினைத்தீர்களா? என்னால் என்றுமே முடியாது. என் மனம் கவர்ந்த உங்களின் மனம் கவர்வே என்னால் முடியவில்லை. இதில் யாரோ ஒரு பெண்ணின் மனதை நான் எப்படி கவர்வேன். வாய்ப்பே இல்லை நான் கடைசிவரை சன்னியாசி தான்
வேண்டுமானால் பீஷ்ம பி தாமதர் போல ஆதவனை வளர்த்து விடுகிறேன்."
" சேச்சே அப்படி சொல்லாதீர்கள் தினேஷ் எனக்கு மகாபாரதத்தில் பிடிக்காத ஒரு கதாபாத்திரம் என்றால் அது பீஷ்ம பிதா மகர்தான்,". என்றாள் மித்ரா.
புரியாமல் அதிர்ந்து பார்த்தான் தினேஷ். "என்னது பீஷ்மரை உனக்கு பிடிக்காதா ஏன்? அவர்தான் பிதாமகர் என்கிற அளவில் அங்கே இருந்த அனைவருக்கும் வழிகாட்டியாக விளங்கினார்?"
" இல்லை தினேஷ். நீங்கள் யோசித்துப் பாருங்கள் அவர் சத்தியவதிக்காக அந்த வார்த்தை கொடுக்காமல் இருந்திருந்தால் அடுத்து வந்த அழிவுகள் அனைத்தையும் தடுத்திருக்கலாம். அவர் தந்தை ஏதோ ஒரு பெண் மீது ஆசை கொண்டார் என்பதற்காக அடுத்தடுத்து என்று எத்தனை பிரச்சனைகள்? எத்தனை பாவங்கள் இயற்கைக்கு புறம்பாக ஒருவர் பிரம்மச்சாரி விரதம் கொண்டது தான் என்னை பொறுத்தவரையில் மகாபாரதத்திற்கான காரணம்."
இப்படியும் ஒரு கண்ணோட்டம் இருக்கிறதா என்று பார்த்தான் தினேஷ். "சரி நான் அப்படி சொல்லவில்லை. நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள். நீங்கள் எப்படி எல்லாம் சொல்கிறீர்கள் அப்படி எல்லாம் மட்டுமே நான் பேசுவேன்"
' என்ன தினேஷ் இது ஏன் இதையே திரும்பத் திரும்ப சொல்கிறீர்கள்?"
" நான் வேறு எதை சொல்வது மித்ரா? எனக்கு தேவை நம் திருமணம் அது நடந்தால் போதும்."
" தினேஷ் புரிந்து கொள்ளுங்கள் நான் யாரையுமே திருமணம் செய்து கொள்ளும் மனநிலையில் இல்லை. எனக்கு அந்த பிரச்சனை 18 வயதில் தெரிந்த போது அதை எதிர்கொள்ளும் பக்குவம் சற்றும் இல்லை. இருப்பினும் எதிர்கொள்ள வேண்டிய நிலை. இந்த எட்டு ஆண்டுகளில் அதற்கும் மேலே பலதையும் சந்தித்து விட்டேன். மனம் மிகவும் கடினப்பட்டு விட்டது தினேஷ் குழந்தைகளின் என்றால் எனக்கு மிக மிக ஆசை நீங்களே பார்த்திருப்பீர்கள் ஆதவனுடன் நான் எப்படி இருந்தேன் என்று. ஆனால் எனக்கே எனக்கான குழந்தை என்பது என்றுமே எனக்கு இல்லை என்பதை 18வது வயதிலேயே நான் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை. யாரை போய் நொந்து கொள்வேன் யார் தோள் மீது சாயந்து ஆறுதல் தேடுவேன்?எதுவுமே இல்லாத நிலை. எனக்கு நானே நான் மட்டும்தான் என்று எனது மனதை பக்குவப்படுத்திக் கொண்டு வாழ்க்கையை எதிர்நோக்க கற்றுக் கொண்டேன். இப்போது வந்து நான் உன்னோடு வாழ்கிறேன் உனக்கு துணையாக வருகிறேன் என்று ஒருவர் வந்தால் அதை நான் எப்படி உடனே ஏற்றுக் கொள்ள முடியும்? இல்லை தினேஷ் என் மனம் இதை ஒப்பவில்லை."
" இல்லை மித்ரா வேண்டாம் உடனே நீங்கள் அதை ஒப்புக் கொள்ள வேண்டாம். பொறுமையாகவே சில ஆண்டு காலமானாலும் பரவாயில்லை. நாம் தொழில் ஒப்பந்ததாரர்களாக மட்டுமல்லாமல் நண்பர்களாகவும் பழகுவோம். ஒருவேளை என்றாவது ஒரு நாள் நான் உங்கள் வாழ்க்கைக்கு சரியான துணை என்று உங்களுக்கு தோன்றினல் சொல்லுங்கள். அதுவரை நான் காத்திருக்க தயார்."
" இல்லை தினேஷ் எனக்கு உங்களை அப்படி காத்திருக்க வைக்க மனமில்லை நீங்கள் வேறு ஒருத்தியை...."
" போதும் நிறுத்துங்கள் மித்ரா. என்னவோ என்னை திருமணம் செய்து கொள்ள அதுவும் அந்த காபி ஷாப்பில் வெளியே இருக்கும் அனைத்து பெண்களும் வரிசை கட்டி நிற்பது போல பேசாதீர்கள். கட்டை பிரம்மச்சாரி நான் . இதுவரை ஒரு பெண்ணும் என்னிடம் வந்து ப்ரபோஸ் செய்ததும் இல்லை நானும் யாருக்கும் செய்ததில்லை. இப்போது நாம் பேசிக் கொண்டிருப்பது கூட ப்ரொபோசலா இல்லையா என்றே தெரியாத முரட்டு சிங்கிள் நான். அதனால் இதை இப்படியே விட்டு விடுவோம் நாம் நண்பர்களாகவே இருப்போம். என்றைக்காவது உங்கள் மனம் மாறும் மாறினால் உங்களுக்காக நான் இருப்பேன். அதை மட்டும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்." என்ற புன்னகை முகமாக சொல்லி மித்ராவிடமிருந்து விடை பெற்றான் தினேஷ்
முடிவுரை - இந்தக் கதை இதற்கு மேல் எப்படி செல்ல வேண்டும் என்ற முடிவு உங்கள் கையில் தான் இருக்கிறது. ஒரு பக்கம் என் மனம் தினேஷையும் மித்ராவும் சேர்த்து வைத்து எப்போதும் போல் ஒரு ஹேப்பி என்டிங் கதை எழுத வேண்டும் என்று இருந்தால் மறுபக்கம் ஒரு பெண்ணின் சந்தோஷம் திருமணத்தில் மட்டும்தானா தொழிலில் இல்லையா? என்ற கேள்வியும் வருகிறது. மித்ரா தினேஷை ஏற்றுக்கொண்டாளா இல்லையா தினேஷ்மித்ராவும் திருமணம் செய்து கொண்டார்களா இல்லையா என்பது அவரவர் கற்பனைக்கு நான் விட்டு விடுகிறேன். மக்களே உங்களுக்கு எது சரி என்று தோன்றுகிறது அதுவே இந்த கதையின் முடிவு உங்களுக்கு சரி என்று தோன்றுவதை கமெண்டில் பதிவிடவும் அதற்கு தக்க இன்னும் ஒரு வாரம் கழித்து நான் கதைக்கு எப்பிலாக் எழுதி பதிவிடுகிறேன்.