• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சன்பிஃளவர் இன்-1

MK4

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
66
63
18
Tamil nadu
அத்தியாயம்-1

காலை நேரம் ஆறுமணி பதினைந்து நிமிடத்தில் அந்த மலைச்சரிவில் கார் நின்றது.

“பாப்பா.. எழுந்திரு. இந்தா பாப்பா எழுந்திரும்மா.”
மகிழுந்து ஓட்டுநர் சத்தமிட விழிகளைத் திறந்தாள் அவள்.

“இதாம்மா நீ கேட்ட இடம். இப்படி நேரா கொஞ்ச தூரம் நடந்தால் மேல ஒரு வழி போகும். அதில் ஏறினால் சன்ஃபிளவர் இன் வரும். ஐநூறுவா எடுமா.”

கண்களில் இருக்கும் கருப்புக் கண்ணாடியைக் கழற்றாமல், பர்சை பேக்கில் தேடி பணத்தை எடுத்து நீட்ட வாங்கிக் கொண்ட டிரைவர் அவள் டிராலியை எடுத்து வைக்க இறங்க, இவளும் பர்சை அப்படியே சிறிய கைப்பையில் போடும் போது அதிலிருந்து கற்றை நோட்டுகள் கிழே விழுந்ததைக் கவனிக்கவில்லை.


கவனிக்கவில்லை என்பதை விட அதைக் கவனிக்கும் நிலையில் அவள் மனம் இல்லை என்பதே உண்மை.

இத்தாலிய நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட நாலு லட்சம் மதிப்புடைய சாட்டின் சில்க் மற்றும் லேஸ் வேலைப்பாடுகள் கொண்ட கிறிஸ்துவர்களின் திருமண உடையான அந்த வெண்ணிற கவுனின் முழு அழகையும் காணவிடாமல் அதன் மேல் அணிந்திருந்த மஞ்சள் நிற பிளேசர் மறைத்தது.


அணிந்திருக்கும் வெண்ணிற கிளாஸ் ஹீல்ஸ் ஸ்லிப்பர்கள் தட்டிவிடாமல் இருக்க குடை போன்று விரிந்த உடையைத் தூக்கிக் கொண்டு மகிழுந்தின் கதவை மகிழ்ச்சியற்று திறந்தாள் அவள்.


டிரைவர் அவள் உடைமையை எடுத்துக் கீழே வைத்திருக்க, அந்தப் பெட்டியை நுங்கு வண்டி போல் இழுத்துக் கொண்டு ஒரு கையில் உடையைத் தூக்கிப் பிடித்தப்படி நடக்க ஆரம்பித்தாள். சுற்றி கொட்டிக் கிடக்கும் அந்த மலையின் இயற்கை அழகை ரசிக்கும் நிலையில் அவள் இல்லை.
டிராலியை இழுத்தப்படி அந்த மலைச் சரிவில் ஏற ஆரம்பித்தாள்.

1000143552.jpg

நடந்தவளின் முன்னே அருகில் இருக்கும் புதரில் இருந்து குதித்தது அந்த நாய். குதித்ததிலேயே அதிர்ச்சியானவளுக்கு டாபர் மேன் வகையைச் சேர்ந்த அது நாக்கைத் தொங்கப் போட்டு பார்த்த பார்வையில் இதுவரை எந்த உணர்வும் அற்றிருந்தவளுக்கு கூட அடி வயிற்றில் பயப்பந்து உருண்டது.

அது மேலும் முன்னோக்கி அடிகள் எடுத்து வைக்க அவள் அப்படியே பின்னோக்கி நகர டிராலியையும் உடையையும் விட்டவள் இரண்டடி வைத்ததும் அவளுடைய அழகிய உடை அப்போது பார்த்து தட்டி விட கீழே அப்படியே கத்திக் கொண்டு அமர்ந்தப்படியே விழுந்தாள்.
டாபர்மேன் மேலும் நெருங்க பயத்தில் உறைந்திருந்தாள்.

1000143553.jpg

“டாபர்மேனும் அவளும் அண்ணலும் நோக்கினாள், அவளும் நோக்கினாள் போல் பார்த்துக் கொண்டிருந்தனர்.


இப்படி அவள் நாயிடம் மாட்டிக் கொள்வதற்கு பதினான்கு மணி நேரத்திற்கு முன்.


சென்னையில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அவளுடைய தோழியும், அழகுக்கலை நிபுணரும் அவள் உடையை அணிய உதவிக் கொண்டிருந்தனர்.

“இன்னும் கொஞ்சம் டைட்டாக் கட்டு ரீனா.”

“அவ்வளவுதான் கேட்.”

உடையைப் போட்டு முடித்ததும் திருப்திகரமாகக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டாள். அந்த உடையின் விலைக்கு ஏற்ப அதன் வடிவமைப்பு அருமையாக இருந்தது. டைமண்ட் நெக், முழு நீள ஆர்கான்சாவில் செய்யப்பட்ட கைப்பகுதி மணப்பெண்ணின் உடலுக்குக் கச்சிதமாகப் பொருத்தமாக இருந்தது. அவளுடைய தாயும் தந்தையும் தேவலாயத்திற்கு விருந்தினர்களை வரவேற்கச் சென்றிருக்க, சில உறவுப் பெண்கள், ரீனா மற்றும் அழகுக்கலை நிபுணருடன் தயாராகிக் கொண்டிருந்தாள்.

அவளுடையை நீள முடியை இரு பக்கத்தில் குட்டிப் பின்னலாகப் பின்னி பின்னால் பன் போன்று போட்டுவிட்டு தலையில் அழகாகக் குட்டியாக மின்னும் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க கீரிடத்தைப் அணிவித்து, அத்தோடு ஒரு வைர கழுத்தணியையும் பூட்ட, வெள்ளுடை தேவதை போல் மிளிர்ந்தாள் அவள்.


அழகுக்கலை நிபுணர் முகப்பூச்சை செய்து முடித்து விழிகளில் லென்ஸ் அணிவித்து விட கண்ணாடியில் திருப்திகரமாகப் பார்த்துக் கொண்டாள் கேதரீன். கொஞ்சம் முன்பே தயாராகி விட்டதால் அவளுக்கு நேரம் இருந்தது. கொஞ்சம் பதட்டம், மகிழ்ச்சி, ஆர்வம், வீட்டை விட்டுச் செல்லும் வருத்தம் என அனைத்தும் கலந்து அமர்ந்திருந்தாள் அவள். இதயம் கொஞ்சம் படபடவென அடித்துத்தான் கொண்டது.


அப்போது மெத்தையில் கிடந்த கைப்பேசியில் தொடர்ந்து அறிவிப்பு வந்ததற்காக ஒலி எழுப்ப அதை எடுத்துப் பார்த்தாள் கேட்.

பார்த்தவளின் விழிகள் அதிர்ச்சியுடன் விரிந்து கொண்டது. விரல்கள் நடுங்க கைப்பேசியைக் கீழே விட்டாள். பழரசம் ஒன்றைப் பருகிக் கொண்டிருந்த ரீனா கீழே விழுந்த கைப்பேசியை உடனே எடுத்துப் பார்க்க, அந்த ஐபோனின் திரையில் ஜோசப்பும், தன் தோழிக்குத் தங்கை முறை வரும் பெண்ணும் பப்பில் முத்தமிடுவது போன்று இருந்தது.

அடுத்ததாக இன்னொரு பெண்ணை ஜோசப் முத்தமிடுவது போல் இருந்தது.

“வாட் தி ஹெல்? இது இரண்டு நாளைக்கு முன்னாடி எடுத்த போட்டோ கேட். உன்னோட கசின் ஸ்வீட்டி.. நாம கொடுத்த பேச்சுலரிட்டி பார்ட்டிக்கு ஏதோ காரணம் சொல்லி வரலைதானே.”
ரீனாவின் முகத்தில் கோபம் வெளிப்படையாகத் தெரிந்தது.

அந்நேரம் பார்த்து அவளுடையை உறவினப் பெண்கள் கார் வருவதில் ஏதோ பிரச்சினை என்பதால் அதைச் சரி செய்யச் சென்றிருந்தனர்.


அழகுக்கலை நிபுணரும் சென்று விட அறையில் இருவர் மட்டுமே இருந்தனர்.
ஆனால் மணப்பெண்ணுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது.

“ரீ..னா.. எனக்கு இந்தக் கல்யாணம் வேண்டாம். என்னை எங்காவது கூட்டிட்டுப் போ.”
தன் தோழியை அணைத்துக் கொண்டாள் ரீனா.

“கேட் கல்யாணம்.. இந்த சீட்டர் உனக்குத் தேவையே இல்லை. கொஞ்ச நாளாவே உன்னோட முகத்தில் சிரிப்பில்லை. வேண்டாம் உனக்கு.”

அப்போது சரியாக அழைப்பு மணி ஒலித்தது. வேகமாகக் கதவைத் திறந்தவளின் எதிரே பழரசத்துடன் நின்று கொண்டிருந்தாள் ஹோட்டலில் பணிபுரியும் பெண் ஒருவர்.

“மேம் ஜூஸ் கேட்டிருந்தீங்க.”

“ஜூஸை விடுங்க அக்கா. இந்த ஹோட்டலில் இருந்து யாருக்கும் தெரியாமல் வெளிய போகனும். எங்களுக்கு ஹெல்ஃப் பண்ணுங்க.”

பணியாளப் பெண் அவர்களை வியப்புடன் ஏறிட்டாள். இங்கிருப்பது திருமணப் பெண் என்று தெரியும்.

“இவங்களுக்கு இன்னிக்கு கல்யாணம்..”

“ஆமாக்கா. ஆனால் அவளோட பியான்சி அவளை ஏமாத்திட்டான். வேற ஒரு பொண்ணு கூட. ஹெல்ஃப் அஸ்.”

“சரி.. உங்க பொருள் எடுத்துக்குங்க. நான் சர்வீஸ் லிப்ட் வழியாக உங்களை பேக் டோருக்கு கூட்டிட்டுப் போறேன்.”


உடனே ரீனா தன் தோழி தேனிலவு செல்ல பேக் செய்த சில உடைகள் அடங்கிய டிராலியை எடுத்துக் கொண்டாள், அவளுடைய கைப்பேசி, சிறிய பர்ஸ் என அனைத்தையும் எடுத்து தன் ஷோல்டர் ஸிலிங்க் பேக்கில் இட்டாள்.

“கேட் வா.” அவள் கையைப் பிடிக்க, தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டாள்.

“ரீனா.. அம்மா.. அப்பா.. என்னடி செய்யறது? அப்ப என்னோட கல்யாணத்துக்கு எவ்வளவு செலவு செஞ்சுருக்காரு தெரியுமா? ஒரே பொண்ணு கல்யாணம் கிராண்டா இருக்கனும். அதெல்லாத்தையும் விட எல்லார் முன்னாடியும் அவங்க அவமானப்படுவாங்களே? என்னடி செய்யறது? அம்மாவை நினைச்சுப் பார்த்தால் முடியலைடி..”

தன் தோழியின் அருகே மண்டியிட்டு அமர்ந்த ரீனா, “கேட் நான் சொல்றதைக் கேளு. உன்னோட கசின் கூட சேர்ந்து கல்யாணத்துக்கு முன்னாடியே சீட் பண்ணியிருக்கான். ஒன்ஸ் ஏ சீட்டர் ஆல்வேய்ஸ் சீட்டர். பாரீன்ல இருக்கும் போது சொல்லவே தேவையில்லை. இவனை மாதிரி ஆளுங்களுக்கு சொசைட்டியில் தன்னை நல்லவனாகக் காட்டி பொண்டாட்டி, லீகலா ஒரு குழந்தை. அதைத் தாண்டி வேற ஒன்னும் இல்லை. கல்யாணத்துக்குப் அப்புறம் சீட் பண்ணால் நீ தாங்குவியா? இப்பவே தப்பிச்சேனு நினைச்சுக்கோ. இல்லை உன்னோட அப்பா, அம்மாதான் தாங்குவாங்களா? அவன் கூட நீ ஹேப்பியா இருப்பியானு மட்டும் திங்க் பண்ணு.”

மணப்பெண்ணின் தயக்கத்தைப் பார்த்த அந்தப் பணிப்பெண் உள்ளே வந்தார்.

“பாப்பா இங்க பாருமா. வாழ்க்கையை அவசரப்பட்டுத் தொலைக்காத. உன் அப்பா, அம்மா இப்ப கஷ்டப்பட்டாலும் நீ பின்னாடி சந்தோஷமாக இருக்கறதப் பார்த்து, சந்தோஷப்படுவாங்க. எந்தப் பொண்ணுக்குமே அவளை ஏமாத்தற புருஷன் தேவையில்லை.”

“இந்தா பாப்பா. இந்த ஹோட்டல் போங்க. இது மன மாற்றத்திற்கு ரொம்ப நல்லதுனு இந்த ஹோட்டலுக்கு வர ஹிந்திக்காரர் சொல்லி இருக்கார். அவரு இப்ப அங்க போக வேண்டியது, ஆனால் சொந்தக்காரர் யாரோ இறந்துட்டாங்கனு குஜராத் கிளம்பிட்டார். என்னைக் கேன்சல் பண்ண சொல்லி விசிட்டிங்க் கார்ட் கொடுத்தார். இந்தப் பொண்ணை அங்க அனுப்பி விடுமா.”

சூரியகாந்திப் பூக்களின் நடுவே, ‘சன்ஃபிளவர் இன்’ என்ற எழுத்துகள் ஆங்கிலத்தில் ரோஜா நிறத்தில் மின்னிக் கொண்டிருந்தது. அதை வாங்கிய ரீனா, தன் தோழியைக் கைப்பிடித்து இழுக்க, உடனே எழுந்தாள் அவள்.

“போலாம். நான் மனசு மாறதுக்குள்ள என்னை இங்கிருந்து அனுப்பு ரீனா. நான் தனியாக இருக்கனும். என்னைச் சென்னையை விட்டு அனுப்பி விடு.”

உடை மாற்ற நேரமில்லை. பணிப்பெண் அவர்கள் பெட்டியை எடுத்துக் கொள்ள, ரீனா அவளை இழுத்துக் கொண்டு மெதுவாக ஓட ஆரம்பித்தாள்.

1000142939.jpg


பின் பக்கம் வந்தவர்களுக்கு, ஹோட்டலில் இருக்கும் கார் ஒன்று காத்துக் கொண்டிருந்தது.
இருவரும் ஏறி அமர்ந்து கொண்டிருந்தனர்.

“அண்ணா ஆம்னி பஸ் ஸ்டாண்ட்டுக்கு போகனும்.”

“தேங்க்ஸ் அக்கா.”

“பார்த்துப் போங்கம்மா. மறக்காமல் அவங்க கையில் கேஷ் எடுத்துக் கொடுத்துடுங்க.”

போகும் வழியிலேயே ரீனா ,
சன்ஃபிளவர் இன்னின் எண்ணின் வெப்சைட்டைத் ஸ்கேன் செய்து திறந்தவளுக்கு பத்து நாள் தங்குமளவுக்கு ஒரு அறை இருந்தது. அங்கு இருக்கும் செயல்பாடுகள் திருப்தி அளிக்கவே உடனே அரிதினும், அரிதாகக் கிடைக்கும் அந்த இடத்தைப் புக் செய்தாள். தன் தோழியின் வாழ்க்கையே மாற்றப் போகும் பயணத்தினை ரீனா தன் ஆள்காட்டி விரலில் அழுத்தி உறுதி செய்தாள்.


ரீனாவின் தலையில் சாய்ந்திருந்தாள் கேட். அவள் திருமண உடையை மறைக்க, தன்னுடைய மஞ்சள் நிற பிளேசரையும், கூலிங்க் கிளாசையும் மாட்டி விட்டிருந்தாள்.

தன் தோழியை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தாள்.
“உனக்கு எதுவும் ஆகாது கேட்டி. இங்க எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். நீ வருத்தப்படாத. அந்த ஜோசப்பை ஒரு வழி செய்யப் போறேன் பாரு.”
ரீனா தன் தோழிக்கு எதிரான குணமுடையவள், தைரியமான பெண். கேட் ரொம்பவும் அமைதியான பெண். சாந்தமான குணம், அதோடு உதவு செய்யும் மனப்பான்மை நிறைந்தவள். ரீனா அவளுக்குக் கேடயம் போன்றவள். யாரும் அவளை ஏமாற்ற விட மாட்டாள். பள்ளி, கல்லூரி இரண்டிலும் ஒன்றாகப் படித்தவர்கள்.


இருவருக்குள்ளும் பிரிக்க முடியாத பந்தம் உள்ளது. இங்கிருந்தால் பெற்றவர்களின் கண்ணீரைப் பார்த்து மனம் மாறி திருமணம் செய்து கொண்டாள் என்ன செய்வது? தன் தோழியை ஜோசப்பிடம் சிக்க வைக்க விடவே மாட்டாள் ரீனா.

பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள மினி ஏடிஎம்மில் கார்டைப் போட்டு பணத்தை எடுத்த ரீனா தோழியின் பர்சில் பத்திரப் படுத்தினாள்.

மூணாருக்குச் செல்லும் பேருந்து ஒன்று வெளியே வர அதை நிறுத்தி தோழியை ஏற்றியவள் முன் நின்று கொண்டிருந்த நடத்துனரிடம்,“அண்ணா என்னோட பிரண்ட் இப்ப ரொம்ப சிக்கலான சூழலில் இருக்காள். அவளைப் பத்திரமான மூணாறு போய் சேர்த்திடுங்க. சாப்பாடு, தண்ணீர் எது வேணாலும் வாங்கிக் கொடுங்க. அங்கிருந்து சன்ஃபிளவர் இன்னுக்கு காரில் ஏத்தி விட்ருங்க. பிளீஸ் இது என்னோட விசிட்டிங்க் கார்ட்.”

கார்டுடன் பணம் மூவாயிரத்தையும் நீட்டினாள்.

“இது டிக்கெட், அப்புறம் செலவுக்கு மிச்சம் உங்களுக்கு. அவளைக் காரில் ஏத்திட்டு எனக்கு கால் பண்ணி சொல்லுங்க. பிளீஸ். இதை உங்க வீட்டுக்குப் பொண்ணுக்கு செய்யறதாக நினைச்சுக்குங்க.”


பேருந்தில் ஏறிய பெண்ணின் உடையைப் பார்த்ததும் ஏதோ பிரச்சினை என்று உணர்ந்த நடத்துனர், “கண்டிப்பா செய்யறேன் மா. நான் பார்த்துக்கிறேன்” என்றார். அதற்குள் ஓட்டுநர் ஹாரன் ஒலித்தார்.

பேருந்துக்கு நேரம் ஆனதால் அதை விட்டு இறங்கிய ரீனா பேருந்தின் எண்ணைப் புகைப்படம் எடுத்துக் கொண்டாள். நடத்துனர் கூறியபடியே கேட்டைப் பத்திரமாக சன்பிஃளவர் இன் வரை அனுப்பி வைத்திருந்தார். நீரைத் தவிர எந்த உணவையும் அந்தப் பெண் உண்ணவில்லை என்ற தகவலையும் தோழியை அழைத்துக் கூறி இருந்தார்.


ஒரு வழியாக சன்ஃபிளவர் இன்னுக்கு வந்திருந்த கேட் நாயிடம் மாட்டிக் கொண்டிருந்தாள்.

அப்போது குதிரையின் டக், டக் என்ற குளம்பொலிகள் கேட்க அந்த டாபர்மேன் காதுகளைக் கூர்மையாக்கித் திரும்பிப் பார்த்தது.

கருப்பு குதிரையில் யாரோ ஒருவன் வந்து கொண்டிருந்தான்.


-நாளை சந்திப்போம் by
பால் பவுடர் மிட்டாய் 🍬 🍬
மறக்காமல் லைக் பண்ணுங்க, கமென்ட் பண்ணுங்க. ஷேர் நான் பண்ணிக்கிறேன்.😁😁😁 Have a good day.
 
Last edited:

MK13

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 3, 2023
78
54
43
Tamilnadu
Very very nice👌🏻👌🏻👌🏻👌🏻😍
Kadhalan kuthiraiyila vandhuttan😍
Kate ku nalla vazhkkai kedaikka than andha sambandham ninnu pochu.
Jesus nalladhu panni irukkar.
Eppodhum naan unnnadane irukiren enbadhai kate ku sollamal solgirar.
 
  • Love
Reactions: MK4

MK4

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
66
63
18
Tamil nadu
Very very nice👌🏻👌🏻👌🏻👌🏻😍
Kadhalan kuthiraiyila vandhuttan😍
Kate ku nalla vazhkkai kedaikka than andha sambandham ninnu pochu.
Jesus nalladhu panni irukkar.
Eppodhum naan unnnadane irukiren enbadhai kate ku sollamal solgirar.
Thank you so much for commenting ☺️ ☺️ ☺️ Avar endrum kaividuvadhu illai.
 
  • Love
Reactions: Vathani

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
375
181
43
Tirupur
ரீனா ஒரு நல்ல தோழி 👌
அது தான் கேத்தரீனை தப்பிக்க வெச்சிருக்கா. இந்த பயணம் அவளுக்கான வாழ்க்கையை குடுக்கத்தான் போல 🤩

ஹீரோ வேற குதிரையில வரான் 😍
அவளையும் தன்னோட குதிரை மேல ஏத்தி கூட்டிட்டு போவானோ?
 
  • Love
Reactions: MK4

MK3

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
131
106
43
Tamil nadu
கேட்டோட வாழ்க்கை தப்பிச்சது. ரீனா போல்டா இருந்து தோழியை அனுப்பி வச்சுட்டா. கல்யாணத்துல இருந்து தப்பிச்சு இந்த டாபர்மேன் கிட்டயா மாட்டனும். ஹீரோ குதிரைல வர்றாரா? 🤔 நல்ல ஆரம்பம் சிஸ்
 
  • Love
Reactions: MK4

MK4

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
66
63
18
Tamil nadu

கேட்டோட வாழ்க்கை தப்பிச்சது. ரீனா போல்டா இருந்து தோழியை அனுப்பி வச்சுட்டா. கல்யாணத்துல இருந்து தப்பிச்சு இந்த டாபர்மேன் கிட்டயா மாட்டனும். ஹீரோ குதிரைல வர்றாரா? 🤔 நல்ல ஆரம்பம் சிஸ்
நன்றிகள் பல😍😍 அவருதான் ஹீரோ.
 

பாரதிசிவக்குமார்

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 18, 2021
2,330
552
113
44
Ariyalur
சூப்பர் சூப்பர் சகி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️கேட் எடுத்த முடிவு சரிதான் தனக்கு தகுதி இல்லாதவணை மணந்து வாழ்நாள் முழுதும் வருத்தப்பட இந்த முடிவு ஏற்றது இருந்தாலும் காரில் விழுந்த பணம் திரும்ப கேட் கைக்கு வருமா 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔ரீனாவை தோழியாக கிடைக்க கேட் கொடுத்துவைத்தவளா 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
 

MK4

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
66
63
18
Tamil nadu
சூப்பர் சூப்பர் சகி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️கேட் எடுத்த முடிவு சரிதான் தனக்கு தகுதி இல்லாதவணை மணந்து வாழ்நாள் முழுதும் வருத்தப்பட இந்த முடிவு ஏற்றது இருந்தாலும் காரில் விழுந்த பணம் திரும்ப கேட் கைக்கு வருமா 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔ரீனாவை தோழியாக கிடைக்க கேட் கொடுத்துவைத்தவளா 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
நன்றிகள் பல 🙏 🙏 🙏 ரீனா என்ன செஞ்சாலும் கேதரீனுக்கு எது பெஸ்ட்னு பார்த்துதான் செய்வாள். ஆனால் எல்லா முடிவுகளும் எப்போதும் சரியாக இருக்கும்னு சொல்ல முடியாது.