அத்தியாயம்-2
நாய் மேலும் நெருங்க விழிகளை இறுக்க மூடிக் கொண்டிருந்தவள்,
“ரோஸி கெட் பேக்.”
என்ற ஆழ்ந்த, மனிதக் குரலில் பேஸ் என்று அழைக்கப்படும் குறைந்த வரையறையைக் கொண்ட ஆண் குரல் கேட்டது. நடிகர் அர்ஜூன் தாஸ் குரல் போல் இருக்கும்.
விழிகளைத் திறக்க கருப்பான குதிரையும், அதன் மேல் ஒரு ஆணும் தெரிந்தார்கள்.
நாய் பின் வாங்க, தன் கருப்புக் கண்ணாடியைக் கழற்றியவள் பயந்த விழிகளுடன் அவனையும் ஏறிட்டாள். சிவப்பு நிற போலோ டீசர்ட், கருப்பு நிற பேண்ட், ஷூக்களுடன் தாடியுடன். கம்பீரமாக குதிரையின் மீது அமர்ந்திருந்தான். சூரியன் அவனுக்குப் பின் உதயமாகிக் கொண்டிருந்தான்.
“ரோஸி கெட் பேக்.”
அந்த டாபர்மேன் அவன் காலடியில் சென்று பத்திரமாக நின்று கொண்டது.
உடனே எழுந்து நின்றவள்,
“தேங்க் யூ வெரி மச்.”
“ஆர் யூ கோயிங்க் டூ சன்ஃபிளவர் இன்?”
“ஆமா. அங்கதான் போறேன்.”
அவள் வாயிலிருந்து அச்சுப் பிசறாமல் வெளி வந்த தமிழ் வார்த்தையில் எதிரில் இருந்தவன் முகத்தில் குழப்பம் வந்தது.
“தமிழ் பேசத் தெரியுமா? எந்த நாட்டில் இருந்து வந்துருக்கீங்க?”
“நானும் தமிழ் நாடுதான். தமிழ்ப்பொண்ணுதான்.”
“ஓ.. ஒகே.” அவன் முகத்தில் இன்னும் நம்பாத பாவனை நிலவியது.
“பச்சைத் தமிழ் பொண்ணு. எனக்கு அல்பினோ.” அவள் அரிதாக நிறைக்குறைப்பாட்டுடன் பிறந்தவள். பார்ப்பதற்கு வெள்ளைக்காரப் பெண் நிறமிருக்கும் தமிழ்ப்பெண். ஆனால் கூந்தல் கருகருவென்று நிறமிருக்கும். அதனால் அவளை வெளிநாட்டுப் பெண் என பல நினைத்துக் கொள்வர்.
இப்போது குதிரையில் இருந்து குதித்து இறங்கினான் அவன்.
“ஈசி. இட்ஸ் ஒகே. பேரென்ன?
“கேதரீன் ரோஸ்மேரி வில்லியம்ஸ்.”
பெயரைக் கேட்டதும் அவன் பார்வையை உணர்ந்தவள், “தமிழ் கிறிஸ்டியன் ஓகேவா?” என்றாள்.
“அது டிரஸ்சைப் பார்த்தாவே தெரியுது?”
“எதுக்கு சன்ஃபிளவர் இன் போறீங்க?”
“முன்ன பின்ன தெரியாதவங்ககிட்ட எதையும் நான் சொல்றது இல்லை. பாய்.”
கண்ணாடியை மீண்டும் அணிந்து தன் பெட்டியை இழுத்துக் கொண்டு மேலே செல்ல ஆரம்பித்தாள் கேதரீன்.
சிரித்தப்படி குதிரையில் ஏறி அமர்ந்தான் அவன்.
கீழே விழுந்ததில் கால் வலித்தது. அந்த உடையில் இன்னும் தடுமாற சுருட்டிப் பிடித்துக் கொண்டாள்.
“நான் அங்கதான் வொர்க் பண்றேன் கேதரீன் . வாங்க, நான் டிராப் பண்றேன்.”
“எதில்? இந்த குதிரையிலா?”
“ம்ம்ம்..”
“என்னோட லக்கேஜ்? அதை எப்படி ஏத்தறது?”
“ரோசி பார்த்துக்குவா.”
“ரோசியா.. காட்டேறி மாதிரி பல்லை வச்சுருக்கு இது ரோசியா?”
அவள் பேசியதில் மீண்டும் சிரிப்பு வந்து விட்டது அவனுக்கு.
“எப்படி ஏறது?”
குதிரையை அவள் அருகில் கொண்டு சென்றவன், குனிந்து ஒரே கையில் அவளைத் தூக்கி குதிரையில் தனக்கு முன்னே, பக்கவாட்டில் அமர வைத்தான்.
நொடிகளில் காற்றில் மேலேறி குதிரையில் அமர்ந்தப்பட்டிருந்தாள். இதுவரை குதிரையில் பயணம் செய்யாதவளுக்குப் பயம் மேலும் அதிகமாகியது.
பயத்தில் அவன் டீசர்ட்டை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
“பயப்பட வேண்டாம் லிட்டில் ரோஸ்.” அவள் காதருகே முனுமுனுக்க, அந்தக் குரலில் தேகம் சிலிர்த்தது அவளுக்கு.
குதிரை நகர மேலும் அவனை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
“ரோஸி கார்ட் இட்.”
அவனுடைய நாய் சமத்தாக நின்று கொள்ள குதிரை செல்ல ஆரம்பித்தது.
“ரிலாக்ஸ். நீ பீல் பண்ணறது குதிரைக்கும் தெரியும்.”
விழிகளைத் திறந்தவள் கண்ணாடி வழியே அவன் விழிகளை நோக்கினாள். அவன் முன்னோக்கி பார்த்த வண்ணம் குதிரையைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
அவளை வெள்ளைக் குதிரையில் வந்து திருமணம் செய்ய வேண்டியவன் ஏமாற்றிவிட்டிருக்க, கேதரீனின் பயணம் வழி மாதிரி கருப்புக் குதிரையில் இருப்பவனுடன் சென்று கொண்டிருக்கிறது.
ஐந்து நிமிட பயணத்தில் ஒரு அழகிய கட்டிடத்தின் முன் குதிரை நிற்க, அவன் இறங்கி கேதரீன் இறங்க கை கொடுத்தான்.
கேதரீன் இன்னும் சிறிது பயத்துடன் தடுமாறி கால் வைத்து மீண்டும் கவுனில் கால் வைக்க அவன் மீது மோதினாள்.
கை கொடுத்தவன் இடையைப் பிடித்து அவளைத் தாங்கிக் கொண்டான். அவளைத் தரையில் விட்டுவிட்டு, “இதுதான் ஆபிஸ். செக் இன் பண்ணிக்கோங்க. லக்கேஜ் இன்னும் டென் மினிட்ஸில் வந்துரும்.” என்றான்.
கேதரீன் அதற்குத் தலையாட்ட அவன் குதிரையில் ஏறி மீண்டும் பறந்துவிட்டான்.
கண்ணாடிக் கதவை நீக்கிக் கொண்டு உள்ளே நுழைய, வரவேற்பில் இருக்கும் கேபினிலிருந்து ஒரு தலை எட்டிப் பார்த்தது.
கருப்பு நிற வுட்டிங்க் பினிசில் பேக்ரவுண்டில் மஞ்சள் நிறத்தில் சூரிய காந்தி மலரும், இந்த விடுதியின் பெயரும் தங்க நிறத்தில் இருந்தது. அந்த இடத்தில் புத்தர் சிலையின் கையிலிருந்து நீர் கொட்டிக் கொண்டிருந்தது.
கண்ணைக் கவரும் தோற்றம் அது. ஆனால் அதெல்லாம் கேதரீன் கண்டுகொள்ளவில்லை.
குரல் கேட்டு நிமிர்ந்த பணியாளன், அவள் இருந்த கோலத்தைப் பார்த்து ஆச்சரியமடைந்தாலும்,
“ஹலோ.. மேம். வெல்கம். வாட் டூ நீட் மேம்?” என்று கேட்டான் அவன்.
“செக் இன் செய்யனும். பேரு கேதரீன் ரோஸ்மேரி வில்லியம்ஸ்.”
“எந்த நாட்டில் இருந்து வந்துருக்கீங்க மேம்? தமிழ் நல்லா பேசறீங்க?”
“தமிழ்நாடு.”
“ஓ..” கணினியில் அவள் பெயரைத் தட்ட தகவல்கள் அனைத்தும் வந்தது.
அவள் கூறியபடி தமிழ் நாடு என வந்ததால் அவனும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
“நார்த் சைட். லில்லி விங்க், ரூம் நம்பர் 404 மேம்.”
“ஓகே.”
“இப்படியே டூ மினிட்ஸ் நடந்தால் ‘லீப் ஹியர்’ ஒரு பில்டிங் இதே மாதிரி இருக்கும். அங்க உங்க மொபைல் போன் சப்மிட் பண்ணிடுங்க.”
“மொபைல் சப்மிட் செய்யனுமா?”
“யெஸ் மேம். இங்க இருக்கற பத்து நாளும் உங்களுக்கு மொபைல் போன் அலவுட் இல்லை. அப்படியே எதாவது கால் பேசனும்னா சூர்யா சார் இல்லை வாசீம் சார் அலவுட் செய்யனும். எல்லாமே புக் பண்ணும் போது ரூல்சில் இருக்கு மேம்.”
அவள் தான் இன்னும் அதை படிக்கவில்லையே.
“என்னோட லக்கேஜ் இன்னும் வரலை. நான் இங்க வெயிட் பண்ணலாமா?”
“கண்டிப்பா மேம். வெல்கம் டூ சன்ஃபிளவர் இன். ஹேஃவ் ஏ நைஸ் ஸ்டே.” அவளுடைய கீ கார்டை கொடுக்க கேதரீன் அதைப் பெற்றுக் கொண்டு அமர்ந்தாள்.
அங்குள்ள சோபாவில் அமர்ந்தவள் கைப்பேசியை எடுத்து ரீனா அனுப்பி இருந்த ஃபைலில் இருந்தவற்றைப் படித்துவிட்டு நிமிர்ந்தாள்.
கைப்பேசியில் நிறைய மிசிட் கால்கள் இருந்தன. அதையெல்லாம் அவள் எடுக்கவில்லை. மியூட்டில் போட்டுவிட்டிருந்தாள். ரீனா கூறியது போல் எந்த அழைப்பையும் ஏற்கவில்லை.
கைப்பேசியை ஹேண்ட்பேக்கில் போட்டுக் கொண்டவள் தலையைக் குனிந்து அமர்ந்தாள். ஒரு பணியாளர் அவளுடைய பெட்டிகளைக் கொண்டு வந்து கொடுத்து வழிகாட்டவும், காலை லேசாகத் தாங்கியபடி நடந்து அந்தக் கட்டிடத்தை அடைந்தாள்.
அங்கு பெண்ணும், ஆணும் இருக்க அவளிடம் பெட்டியை வாங்கி வைத்து விமான நிலையத்தில் சோதனை போடுவது போல் போட்டனர்.
கைப்பேசியையும் ஒப்படைத்து விட்டாள்.
அங்குள்ள பெண் பெட்டியைத் திறக்கச் சொன்னதும் திறந்தாள் கேதரீன். அதிலிருந்து தூக்க மாத்திரைகள் அடங்கிய டப்பாவை வெளியில் எடுத்தார் அவர்.
“பிரிஸ்கிரிப்சன் சப்மிட் செஞ்சுருக்கனும் மேம். இல்லைனா இது இங்க அலவுட் இல்லை.”
“நோ.. பிளீஸ். எனக்கு அது கண்டிப்பாக வேணும். என் பிரண்ட்தான் அப்ளை பண்ணாள். நான் செய்யலை. நேத்து நைட்டும் நான் தூங்கலை. இன்னிக்குத் தூங்க இது கண்டிப்பாக வேணும்.”
“நோ மேம். ரூல்ஸ்படி கண்டிப்பாக அனுமதிக்க முடியாது சாரி.”
“நிச்சயம் எனக்கு வேணும்.” கேதரீன் டப்பாவை எடுத்துக் கொள்ள அவளிடம் இருந்து அதை வாங்க வந்தார் அந்தப் பெண். கேதரீன் பின்னே நகர்ந்தாள்.
“கேதரீன் என்ன செஞ்சுட்டு இருக்க?”
மீண்டும் அவன் குரல். இங்கு வரும் போதுதான் அவன் பெயரைக் கேட்காமல் வந்துவிட்டதை நினைத்தாள்.
“எனக்கு டேப்லெட்ஸ் போடனும். எனக்குத் தூங்கனும் இந்த மாத்திரை வேணும்.”
“மாத்திரை எங்கிட்ட இருக்கும். உனக்கு ரொம்ப முடியலைனா தினமும் எங்கிட்ட வந்து நீ வாங்கிக்கலாம். மொத்தமாகத் தர முடியாது.”
“பிளீஸ்.”
“கேதரீன் ரூல்ஸ் இதுதான். நான் தரேன்.
வேற என்ன வேணும்?”
“டிரஸ் மாத்தனும். இதோட நடக்க கொஞ்ச கஷ்டமாக இருக்கு. ஹெல்ப் வேணும்.”
“அக்கா ஹெல்ஃப் பண்ணுங்க.”
அந்தப் பெண் உதவ, மஞ்சள் நிறத்தில் சிவப்பு பூக்கள் போட்ட மேக்ஸி டிரஸ்ஸை அணிந்து கொண்டு வந்தாள் கேதரீன். எந்த உடையிலும் கேதரீன் அழகிதான்.
அவளுடைய கிளாஸ் கட் ஷூ கீழே விழும் போது காலில் இருந்து கழன்று விழுந்திருக்க, காலில் காயம் இருந்தது. அதோடு முழங்கையிலும் சிராய்ப்புகள் இருந்தது.
தன் பெட்டியை அவள் எடுக்க, “கேதரீன் நான் வரேன்” என்றான்.
“உங்க பேரு என்ன?”
“சூர்யபிரகாஷ்.”
“தேங்க்ஸ்”
“வெல்கம்” எனப் புன்னகைத்தவன் அவளை தங்குமிடம் வரை அழைத்துச் சென்றான்.
செருப்பை வெளியே விட்டவள் அங்குள்ள அறைக்குள் அணியும் மென்மையான காலணியை அணிய அவள் விரலில் இருந்த காயம் அப்போதுதான் தெரிந்தது.
உள்ளே செல்ல முயல்பவளை முழங்கையைப் பிடித்தான். வலியில் முகத்தைச் சுருக்கினாள் கேதரீன்.
“கேதரீன் எங்கெல்லாம் அடிபட்டிருக்கு?”
“தெரியலை.”
“ரூமைத் திறந்து வெயிட் பண்ணு. வந்தறேன்.”
அவன் கூறியபடி அறையைத் திறந்த கேதரீன் அவளுடைய கிளாஸ் ஷூக்களைக் கழற்றி விட்டு குளியலறை சென்று பாதங்களை நீரால் கழுவி சுத்தம் செய்தாள்.
வெண்ணிற பாதத்தில் சிவப்பு நிறக் காயம் தனியாகத் தெரிந்தது. முகத்தைக் கழுவியவள் கண்ணாடியில் தன் முகத்தை நோக்கினாள். நேற்றைய நாளின் மிச்சங்கள் இன்னும் அவள் கூந்தலில் இருந்தது. எப்படி இருக்க வேண்டிய நாள் இது என யோசனை எழத் தவறவில்லை.
மனதில் மீண்டும் பாரம் ஏறவில்லை. இறங்கினால் தானே குறைவதற்கு? சோபாவில் வந்து, கால்களை மடக்கி அமர்ந்து கொண்டாள். சில நிமிடங்கள் கழிய கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தான் சூர்யா.
சோகமான கவிதை போன்று அமர்ந்திருந்தவளின் அருகில் வந்தவன் காலை நீட்டும் படி சொன்னான்.
காலைக் கீழே வைக்க, சுத்தம் செய்து மருந்தைத் போட்டுவிட்டவன், முழங்கையிலும் மருந்திட்டான். கேதரீனிடம் இருந்து எந்த எதிர் வினையும் இல்லை.
“கேதரீன் கேதரீன்..”
அவள் தோளைப் பிடித்து உலுக்கினான் சூர்யா.
“கேதரீன் வெளியில் நடந்து சுத்திப்பாரு. டைனிங்க் ஹாலுக்குப் போ சாப்பிட்டு வந்து ரெஸ்ட் எடு. நைட் ஒரியண்டேசனுக்கு வரனும்.”
“ம்ம்ம்..”
சூர்யா வெளியில் சென்று விட கேதரீன் அறையில் சிறிது நேரம் இருந்தவளுக்கு காலை உணவுக்கு வரும்படி அறையில் உள்ள இண்டர்காமில் கேட்டதும் அதன்படி டைனிங்க் ஹாலுக்கு செல்ல நடக்க ஆரம்பித்தாள். நடந்து கொண்டே இருந்தவள் ஒரு பென்ச்சைப் பார்க்கவும் அதில் அமர்ந்தவள் கால்களை மடக்கி முகத்தை அதில் புதைத்துக் கொண்டாள்.
நேரம் பத்தைத் தொட்டுக் கொண்டிருக்க அந்தப் பக்கம் வந்த பணியாளர் ஒருவர் அவளை அழைத்தார்.
“மேம் இன்னும் நீங்க சாப்பிடலை. வாங்க சாப்பிடலாம்.”
அவளிடம் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை. அதனால் தோளைத் தொட கேதரீன் நிமிர்ந்து பார்த்தாள்.
“சாப்பிடப் போலாம் மேம் வாங்க.”
எழுந்து அவர் பின்னே நடக்க ஆரம்பித்தவள், டைனிங்க் ஹாலில் எதை உண்டோம் எனத் தெரியாமல் உண்டு கொண்டிருந்தாள்.
அவளை மீண்டும் அதே பணியாளர் அவளுடைய அறையில் கொண்டு வந்து விட, படுக்கையில் வந்து விழுந்தாள் கேதரீன்.
விழுந்தவளுக்கு பழையது நினைவு வர, விழிகள் நீரைச் சுரக்க ஆரம்பித்தது. போர்வைக்குள் தன்னைப் புதைத்துக் கொண்டவள் எப்படியோ உறங்கிப் போனாள். இரவு முழுவதும் உறங்கவில்லை.
காலையில் காரில் வரும் போது சில நிமிடங்கள் உறங்கி இருக்க, அதுவும் கார் ஒட்டுநர் எழுப்பி விட கெட்டிருந்தது. மனம் கவலையில் இருக்கும் போது சிலருக்கு உறக்கம் வராது. சிலர் உறங்கிக் கொண்டே இருப்பர்.
இரண்டு மாதங்களுக்கு முன் இரவு ஒரு பார்ட்டிக்கு சென்றிருந்தனர் ஜோசப்பும், கேதரீனும். ஜோசப் மது அருந்த ஆரம்பித்தான். கேதரீன் மாக்டெயிலோடு நிறுத்திக் கொண்டாள். பார்ட்டி முடிந்து கிளம்பியதும், பார்க்கிங்க் சென்றனர் இருவரும். அங்குள்ள தூணில் கேதரீனைப் பிடித்துச் சாய்த்தான்.
“கேட் நீ எவ்ளோ அழகு தெரியுமா?”
“ஜோசப் விடு பப்ளிக் பிளேஸ்.. யாராவது பார்த்தால்..”
“என்னோட பியான்சி.. யாரு கேட்க முடியும்?”
அவள் விலகிச் செல்ல முயற்சிக்க போதையில் மேலும் நெருங்கினான் ஜோசப். மதுவாடை அவளுக்கு மூச்சு முட்டியது. பொறுக்க முடியாமல் மார்பில் கையை வைத்து அவனைப் பிடித்து தள்ள போதையில் கீழே விழுந்தான். அதோடு சில பல ஆங்கில வசவுச் சொற்களும் அவனிடம் இருந்து வெளிப்பட்டது.
ஜோசப்புக்கு அவள் கை கொடுக்க முயற்சிக்க அதைத் தட்டிவிட்டவன், தன்னுடைய டிரைவரிடம் காரை வரச் சொல்லிவிட்டு அவளை விட்டுச் சென்றுவிட்டான்.
பட்டென்று கண் விழித்தாள் கேதரீன். அவள் அறைக்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது.
“இருங்க மாஸ்டர் கீ கார்ட் போடலாம்.”
சூர்யா கதவைத் திறந்து கொண்டு அவசரமாக உள்ளே நுழைந்தான். கேதரீன் விழிகளைத் தேய்த்தப்படி படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள்.
சூர்யா குழப்பத்துடன் எழுந்து அமர்ந்திருப்பவளைக் கண்டதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அந்தப் பெண் பணியாளர் கேதரீன் அருகே சென்று அவளை நன்றாக ஆராய்ந்தார்.
“நீங்க லஞ்சுக்கும் வரலை. கதவைத் தட்டியும் எந்த பதிலும் இல்லை. அதனால் இப்படி வர வேண்டியதாகிடுச்சு மேம்?”
“ஏன் எதாவது செஞ்சுப்பனு நினைச்சீங்களா? அப்படின்னா நேத்தே செஞ்சுருப்பேன்.”
“சிஸ்டர் போங்க. நான் பேசிட்டு வரேன்.”
உறங்கியதில் கேதரீன் உடல் முழுக்க வியர்த்திருந்தது. கெட்ட கனவுகள் கண்டது போல் அவள் முகம் இருந்தது.
“யூ லுக் மெஸ். போய் குளிச்சுட்டு வா கேதரீன்.”
படுக்கையில் இருந்து எழுந்தவள் அவன் அருகில் வந்தாள்.
“நீ சொல்றதை அப்படியே நான் செய்ய முடியாது சூர்யா.”
“உனக்கு வேற வழியில்லை கேதரீன். இங்க நீ ரூல்ஸ் ஃபாலோ செஞ்சுதான் ஆகனும். இல்லனா இங்க இருந்து கிளம்பிட்டே இருக்கலாம்.”
அமைதியான குரலில் கூறினான் அவன். கேதரீனுக்கு சட்டென்று கோபம் வந்து விட அவன் சட்டையைப் பற்றிவிட்டாள்.
“நீ சொல்ற எதையும் கேட்க மாட்டேன்.”
“கேதரீன் பிகேவ்.”
கேதரீன் அவனை முறைத்தாள். சூர்யா அவளை அப்படியே தூக்கியவன் குளியலறை வரை தூக்கிச் சென்று அவளை அப்படியே ஜக்கூசி தொட்டியில் இறக்கிவிட்டு நீர்க்குழாயைத் திறந்து விட நீர் கொட்ட ஆரம்பித்தது.
சட்டென்று நீர் கொட்டியதில் ஆவென்று வாயைத் திறந்து மூச்சு விட்டாள்.
“ஐஞ்சு நிமிஷத்தில் குளிச்சுட்டு கிளம்பி டைனிங்க் ஹால் வரனும். நான் வெளிய வெயிட் செய்யறேன்”
தன்னைத் தண்ணீரில் போட்டுவிட்டுச் சென்றவனை சும்மா விட விரும்பவில்லை கேதரீன். அருகில் ஒரு மக் இருக்க அதில் நீரை மோந்து கொண்டு சூர்யாவின் மீது இறைக்க வேகமான நீர் சொட்ட எழுந்து வந்தாள்.
“சூர்யா..”
அவன் வேகமாகத் திரும்ப, அதற்குள் நீர் வழுக்கி தானாக கீழே விழுந்தாள் கேதரீன். சூர்யாவுக்கு சிரிப்பு வந்தாலும் உதடுகளைக் கடித்து அதை அடக்கியவள் கேதரீனைத் தூக்கி விட்டான். விழுந்த அவமானத்தில் கேதரீனின் கன்னங்கள் சிவப்பு நிறத்தில் சிவக்க ஆரம்பித்திருந்தன.
“என்னை மேன் ஹேண்டில் செய்யாத சூர்யா. எனக்குப் பிடிக்காது.”
“மேன் ஹேண்டிலிங்க் இல்லை. உனக்கு ஒரு ஷாக் கொடுத்தால் கொஞ்சம் தெளியலாம். அதுக்குத்தான்.”
கேதரீன் அடுத்துக் கேட்ட வார்த்தையில் சூர்யா அதிர்ந்தான்.
--மலரும்.
கருத்துகளை தெரிவித்தவர்களுக்கு நன்றிகள்

Last edited: