அத்தியாயம்-3
சூர்யா கேதரீனைத் துளைப்பது போல் பார்த்தான். அவள் விழியில் இருந்து தன் விழிப் பார்வையை மாற்றவில்லை. அதில் கோபம் தெரிந்தது போல் இருந்தது.
“கிஸ் மி.”
இதை சற்றும் கேதரீனிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை.
“என்ன?”
“கிஸ் மி.”
“ஓகே அதுக்கு அப்புறம் என்ன செய்யறது கேதரீன்?” புருவத்தை உயர்த்தியபடி அவன் கேட்ட கேள்வியில் கேதரீனின் விழிகள் விரிந்தது.
அவளை இழுத்து சுவரோரம் சாய்த்தவன் கழுத்தில் கையை வைத்தான். இப்போதும் அதே உயிரை ஊடுருவும் பார்வை அவனிடமிருந்து. கேதரீன் அவன் இப்படி செய்வான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
மூச்சுக் காற்று மோதிக் கொள்ள, “கிஸ்ஸோட நிக்கும் எதிர்பார்க்க முடியாது லிட்டில் ரோஸ்” என்றான். அவன் முகம் நோக்கிக் குனிய கேதரீன் அவன் வாயை உடனே தன் கையால் பொத்தித் தடுத்து விட்டு விலகி நின்றாள். அவள் இதயத் துடிப்பு அவள் காதுக்கே கேட்டது.
அவளை நோக்கி கோணலாகப் புன்னகைத்தவனின் விழியில் இருந்த செய்தியில் கேதரீன் இதயத்தில் குளிர் பரவியது. பயத்தில் உடலெல்லாம் வியர்த்துக் கொட்ட ஆரம்பித்தது.
“லிட்டில் ரோஸ் ஹார்ட் பாஸ். உனக்கு சூட் ஆகாத, பின்னாடி நினைச்சு வருத்தப்படற விஷயங்களை டிரை பண்ண வேண்டாம். அப்புறம் எங்கிட்ட கேட்டதைப் போய் வேற யாருகிட்டேயும் கேட்டுட்டு இருக்காத. அப்புறம் இங்க இருக்கற மென் யாருகிட்டேயும் பேசக் கூடாதுனு ரூல் போட வேண்டி இருக்கும். உன்னோட பியான்சிக்கு இங்க இருக்கற யாரும் சப்ஸ்டியூட் கிடையாது. ரிபவுண்ட் ரிலேஷன்ஷிப்புக்காகவும் வரலை நீ .( ஒரு காதல் முறிந்தவுடன், உடனே அடுத்தவரை மன ஆறுதலுக்காக காதலித்தல். பெரும்பாலும் இது பிரிவில் முடியும்.} உன்னோட மன வலிக்காக இன்னொருத்தரை யூஸ் பண்ணறது ரொம்ப தப்பு. இனி இப்படி கேட்பியா லிட்டில் ரோஸ்?”
அழுத்தம் நிரம்பிய அமைதியான குரலில் அவன் கேட்டான். ஆனால் முகத்திலும், குரலிலும் கோபம் இருப்பது போல் தோன்றினாலும் அது வெளிப்படவில்லை.
“ம்கூம் கேட்க மாட்டேன். நான் இதுவரைக்கும் யாரையும் யூஸ் பண்ணது இல்லை. என்ன கேட்கனும் தெரியாமல் கேட்டுட்டேன். சாரி.”
மெல்லிய குரலில் வார்த்தைகள் வெளிவந்தது.
அவள் முகத்தில் முத்தம் வேண்டும் என அவனிடம் கேட்டதுமே குற்ற உணர்வு, குழப்பம், பயம் வந்து போனது. அவளை மேலும் சற்று மிரட்ட சூர்யா இப்படி செய்திருந்தான்.
அவளுடைய வெண்ணிற முகத்திலும், கூந்தலிலும் இருந்து நீர்த் திவலைகள் சொட்டிக் கொண்டிருக்க, அவள் தலையைக் கோதி விட்டவன், “நீயும் இதை மறந்திரு. நானும் இதை நீ கேட்கலைனு நினைச்சுக்கிறேன்.”
அவள் தலையாட்டினாள்.
“குட் கேர்ள். குளிச்சிட்டு போய் சாப்பிடு. உனக்கு தனியா புட் எடுத்து வைக்க சொல்லி இருக்கேன்.”
அவள் தலையில் ஒரு துண்டை எடுத்துப் போட்டுவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டேன். முன், பின் தெரியாத ஆணிடம் தான் கேட்ட விஷயத்தை நினைத்து கேதரீன் மனதில் வெட்கினாள்.
வெளிய வந்திருந்த சூர்யா தன் கைப்பேசியை எடுத்தவன், அங்கு இருக்கும் ஸ்டாப் குரூப்பில், ‘கிளையண்ட் கேதரீன் ரோஸ்மேரி அன்ஸ்டேபிள், ஹைலி சென்சிட்டிவ். கேர்ஃபுல் எவரிஒன். மானிட்டர் ஹெர்’ என்ற செய்தியை அனுப்பி விட்டான்.
அப்படியே சில நிமிடங்கள் நின்றவள் பிறகு சூர்யா கூறியபடி வெளியே சென்று உணவை உண்டுவிட்டு மேலும் நடக்க ஆரம்பித்தாள். புதிய நபர்கள் தங்கள் உடைமைகளுடன் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருக்க, அதைக் கவனித்தப்படி மீண்டும் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டாள்.
மேலும் இரவு உணவு வரை படுக்கையிலே செலவளித்தவள் மாலை மீண்டும் இண்டர்காமில் செய்தி வரவும் உணவு உண்ணச் சென்றாள்.
‘இந்த நிலையிலும் உன்னால் சாப்பிட முடியுது கேதரீன். நான் ஏன் சாப்பிடாமல் இருக்கனும்? என்னை ஏமாத்துவனை நினைச்சு நான் எதுக்கு சாப்பிடமால் இருக்கனும். நல்லா சாப்பிடனும்’ என மனதில் தானே வாதிட்டுக் கொண்டாள்.
சாப்பிட்ட பிறகு சன்பிஃளவர் ஹாலின் வழியைக் கண்டுபிடித்து மெல்ல நடக்க ஆரம்பித்தாள்.
சுற்றிலும் கோள வடிவில் பாதையில் உள்ள விளக்குகள் அலங்கரித்திருக்க பாதைகளில் நடக்கத் தேவையான வெளிச்சம் இருந்தது. அந்த இடம் பகலை விட, இரவு இன்னும் உயிரோட்டத்துடன் இருப்பது போல் காணப்பட்டது. அப்போது ஏதோ பறவையின் சத்தம் கேட்க, ஒலியின் திசையைப் பார்த்தப்படி நடந்தவள் சரியாக காலைக் வைக்காமல் போக, தடுமாறி விழப் போனாள். அவளை விழாமல் கைகளைப் பற்றி பிடித்திருந்தன இரு வலுவான கரங்கள்.
விழுந்து விடவில்லை என நிம்மதியில் எதிரில் இருந்தவனை நோக்கினான்.
“ஹாய் பியூட்டி. பிளசண்ட் வெல்கம்.”
எதிரில் வெண்ணிற சட்டையில் பட்டன்கள் மார்பு தெரியும்படி கழற்றிவிட்டிருக்க, நீல நிற பேகி ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தவன் பெரிய அறுங்கோண பிரேமிட்ட கண்ணாடியின் வழியாக கேதரீனைப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த அழகனின் முகத்தில் இதமளிக்கும் புன்னகை ஒன்று பூத்திருக்க, கேதரீனை அதே கனிவுடன் பார்த்தான்.
கேதரீன் விழிகள் அவன் சட்டையை விழாமல் இருக்க கெட்டியாகப் பிடித்திருக்க, சட்டென்று அவன் பேசியதைக் கேட்டு விட்டாள்.
“ஹாய்.. நான் வாசீம் ஷேக் அகமதுல்லா.”
“ஹலோ.. தேங்க்ஸ்.. என் பேரு கேதரீன் ரோஸ்மேரி வில்லியம்ஸ்.”
“இன்ட்ரஸ்டிங்க் பியூட்டி.”
“வாட்?”
“நத்திங்க். நாளைக்கு பார்க்கலாம்.”
அவள் மேலும் கேட்பதற்குள் பின்னால் பார்வை வட்டத்தில் சூர்ய பிரகாஷ் தெரிந்தான். அவன் விழிகள் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தன.
சட்டென்று வாசீமை விட்டு விலகி நின்றாள் கேதரீன்.
அவன் அறையில் கூறியது அனைத்தும் நினைவுக்கு வர மனம் வெட்கியது. கன்னங்கள் அவமானத்தில் சிவக்க ஆரம்பித்தது.
“குட் நைட்.” வாசீம் நடந்து கொண்டே சொன்னான்.
கேதரீன் தொடர்ந்து முன்னேறி சூர்யாவின் அருகில் வந்தவள், “நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லை. நான் விழுந்திருப்பேன். அவர் காப்பாத்தினாரு” என்றாள். ஏனோ அவனிடம் விளக்கம் கூற வேண்டும் என்று தோன்றியது.
“எங்கிட்ட நீ விளக்கம் கொடுக்க வேண்டியது இல்லை கேதரீன். நான் நடந்ததைப் பார்த்துட்டேன். வா டைம் ஆச்சு.”
இருவரும் இரயில் தண்டவாளங்கள் போல் இடைவெளியுடன் நடக்க ஆரம்பிக்க, அமைதி மட்டும் நிலவியது. காதல் ரயில் ஓடுமா என்பதைக் காலம் தான் கூற வேண்டும்.
முகப்பில் சூரிய காந்தி மலர் போல் வடிவமைக்கப்பட்ட கட்டிடத்திற்கு வந்து சேரவும், சூர்யாவை யாரோ அழைத்தார்கள்.
“உள்ள போ கேதரீன்.”
அவள் தலையசைக்க சூர்யா நகர்ந்தான். அமைதியாக முன்புறம் ஒரு நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டாள். அருகில் ஆட்கள் இருந்தாலும், யாரிடமும் பேசும் மனநிலையில் அவள் இல்லை. சிறிது நேரத்தில் சூர்யா கீழே இருந்து மேலே ஏறினான். வையர்லஸ் மைக் அவன் காதில் மாட்டப்பட்டிருந்தது. ஆங்கிலத்தில் சரளமாகப் பேச ஆரம்பித்தான்.
“உங்கள் அனைவரையும் சன்ஃபிளவர் இன்னுக்கு வரவேற்கிறேன். நான் சூர்ய பிரகாஷ். இங்க இருக்க எல்லாருமே வாழ்க்கையில் எதையோ இழந்திருக்கலாம். இல்லை பழைய வாழ்க்கை பிடிக்காமல் புதுசாக உருவாக்க வந்திருக்கலாம். நமக்கு கிடைச்சிருக்க வாழ்க்கை ஒரு விலைமதிப்பற்றது.
யாராலும் அதை மறுக்க முடியாது. குறைக்கவும் முடியாது. நீங்க அனுமதிச்சால் மட்டுமே அது நடக்கும். தத்துவத்தை விட்டுருவோம். இங்க இருக்கற நாட்களில் யோகா, கவுன்சிலிங்க் இதை எல்லாம் தவிர நீங்க பொழுது போக்காக ஒன்று அல்லது இரண்டு விஷயத்தை தேர்வு செய்ய வேண்டும்.
இதுக்கு முன்னாடி உங்களுக்கு ரீடிங்க், கார்டனிங்க் இப்படி பொழுது போக்கு பழக்கம் இருந்தால் இங்க குதிரை ஏற்றம், பாக்ஸிங்க், புட் ஃபால் மாதிரி ஆப்போசிட்டாக சூஸ் பண்ணுங்க. உங்க கம்பர்ட் ஜோனை விட்டு இது வெளிய வரதுக்கு இது ரொம்ப உதவியாக இருக்கும்.
அது மட்டுமில்லாமல் புதுசு புதுசாக் கத்துக்கும் போது, நம்ம மூளையும் பிரஷ்ஷா இருக்கும். இங்க ET(Existential therapy), GT(Gestalt therapy), ACT (Acceptance Commitment Therapy) இந்த தெரபிகள் அடிப்படையாகக் கொண்டு செயல்பாடுகள் இருக்கும்.
இங்க இருக்கும் போது ரூல்சை பிரேக் பண்ண வேண்டாம். உங்களுக்கு என்ன சப்போர்ட் வேணுமோ அதை இங்க இருக்கற ஸ்டாப்ஸ் கொடுப்பாங்க. ஆக்டிவிட்டீஸில் ஜாலியாக பார்ட்சிபேட் செய்யுங்க. நாம எல்லாம் அடல்ட்ஸ். மெட்சூர்டான வழியில் நம்மளோட உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். இந்த பத்து நாள் உங்க வாழ்க்கையில் ஒரு பத்து சதவீதம் மாற்றம் கொண்டு வந்தாலும் எனக்குச் சந்தோஷம். வெளியில் இருக்கற ஸ்டாப்கிட்ட பார்ம் பில் பண்ணிக் கொடுத்துட்டு நாளைக்கு மார்னிங்க் யோகா கிளாசுக்கு வந்துருங்க. மறுபடியும் உங்களை சன்ஃபிளவர் இன்னுக்கு வரவேற்கிறேன். ரீடிஸ்கவர் யுவர் லைஃப். குட் நைட்.”
சூர்யா நடந்து கொண்டே பேசியவனின் பார்வை அங்கிருந்த பதினாறு பேரைச் சுற்றி வந்து கேதரீன் மீது சில நொடிகள் விழித்தது. கேதரீனும் அவனைத்தான் இலேசாக இதழ்கள் விரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளைப் பார்த்து புருவத்தை உயர்த்தியதும், உடனே கேதரீன் விழிகளை வேறுபுறம் திருப்ப, சூர்யா இறங்கி மேடையின் பின் புறம் சென்றுவிட்டான்.
கேதரீன் மீண்டும் விழிகளைத் திருப்ப சூர்யா அங்கில்லை. அதற்குள் பணியாளர்கள் வந்து அங்கிருப்பவர்களை அழைத்துச் செல்ல கேதரீன் படிவத்தை எழுதிக் கொடுத்தாள்.
அப்போதுதான் அவள் கொடுத்த குதிரை ஏற்றத்திற்கும், பாக்ஸிங்க் இரண்டிற்கும் உடைகள் இல்லை. உடனே அங்கிருந்த பணியாளரிடம் உடை எடுக்கும் கடை பற்றி விசாரித்தாள்.
“கிழக்குப் பக்கம், ராகா கன்வீனியன்ஸ் ஸ்டோர் இருக்கு மேம். காஸ்மெட்டிக்ஸ், டிரஸ்சஸ் எல்லாமே கிடைக்கும்.” என அந்தப் பெண் கூறவும், தன்னுடைய அறைக்குச் சென்று பர்சை எடுத்துக் கொண்டு அந்த திசையில் நடக்க ஆரம்பித்தாள். ஆங்காங்கு வரைபடத்துடன் அறிவிப்புப் பலகை இருப்பதால் எந்தத் பிரச்சினையும்.
இரவு மணி எட்டைத் தாண்டி இருந்தது. அந்தக் கடையும் அழகாக இருந்தது.
“வெல்கம் மேம். வாட் டூ யூ நீட்?”
கேதரீனை வெளிநாட்டுப் பெண் என நினைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் அவன் பேச, “எனக்கு ஹோர்ஸ் ரைடிங்க், யோகா , பாக்ஸிங்க் இந்த மூணுக்கும் ஸ்போர்ட்ஸ் வியர் வேணும்” என அவள் பதில் கொடுக்கவும், புருவத்தை உயர்த்திய கடைக்காரன் அவள் கேட்டவற்றை எடுத்துப் போட்டான்.
“டிரையல் ரூம் இருக்கா?”
அவன் வழியைக் காட்ட, உடைகளைப் போட்டுப் பார்த்தவள் பில் போட வந்தாள். பில் வரவும், தன் டெபிட் கார்டை எடுத்து கடைக்காரனிடம் கொடுத்தாள்.
“கேஷ் இல்லை யூபிஐ மட்டும் தான் மேம். கார்ட் அலவுட் இல்லை.”
பர்சைத் துழாவ அதில் பணம் இல்லை. தன் தோழி பணம் கொடுத்தது நினைவிருந்தது. ஆனால் பர்சில் அது இல்லை. பணம் இல்லை என்றதும் பயம் பரவியது.
கேதரீன் ஜோசப்பைத் தள்ளிவிட்ட அந்த வாரத்தில் பெற்றோர்கள் அவர்களை டின்னருக்கு செல்லும்படி கூறி இருக்க அவளும் ஜோசப்புடன் சென்றிருந்தாள். அங்கு தெரியாமல் மேசையில் உணவைக் கொட்டிவிட, ஜோசப் அதற்கு திட்டிவிட்டான்.
“என்னதான் நீ எல்லாம் டீச்சரோ? நீ இப்படி இண்டிசண்டா பிகேவ் செஞ்சால் எப்படி குழந்தைகள் கத்துக்குவாங்க?”
கேதரீனின் மனம் வருத்தத்தில் ஆழ்ந்தது.
“என்னோட பிரபசனை இழுக்க வேண்டாம் ஜோசப்.”
“என்ன பெரிய பிரபசன்? உன்னை எல்லாம் கல்யாணம் செஞ்சுகிட்டு நான் என்ன செய்யப் போறேனு தெரியலை. பார்க்கறதுக்குத்தான் நீ பாரீன் பொண்ணு மாதிரி. சுத்த தர்த்தி. உன்னோட பியூட்சர் ஹஸ்பண்ட் கேட்டால் எதுவும் செய்யத் தெரியலை. சாப்பிடத் தெரியலை.”
அவன் பற்களைக் கடித்தபடி அவளைத் திட்டவும், கேதரீனுக்கு விழிகளில் நீர் சுரந்து விட்டது. கேதரீன் மிகவும் மென்மையான பெண். அவளை யாரும் இப்படி எல்லாம் திட்டியது கிடையாது. ஜோசப் கோபமடையும் அளவு என்ன செய்தோம் என அவளுக்குப் புரியவில்லை.
“ஆவுனா இப்படி அழுதா மட்டும் போதாது.”
கோபத்துடன் எழுந்து சென்றவன் அவளை அப்படியே விட்டு சென்று விட்டான். கேதரீன், ஜோசப் அழைத்துச் செல்ல வரும் போது பர்சை விட்டு வந்திருக்க ஹோட்டலில் வழி தெரியாமல் நின்றாள். கைப்பேசியும் இல்லை.
அவள் விழிப்பதைப் பார்த்த ஹோட்டல் பணியாளர் பாவப்பட்டு, தன்னுடைய கைப்பேசியைக் கொடுத்து வேண்டியவர்களை அழைக்கச் சொன்னார்.
கேதரீன் ரீனாவை அழைக்க, அவள் வந்து பணம் செலுத்தி அழைத்துச் சென்றாள். ரீனாவிடம் ஜோசப் அவரச வேலையாகச் சென்று விட்டதாகக் கூறி சமாளித்து வைத்தாள். ரீனாவுக்கு தெரிந்தால் அவ்வளவுதான். ரீனா ஜோசப்பை ஒரு வழி செய்து விட்டிருப்பாள். கேதரீனின் அப்பாவி குணத்திற்கு நேர் எதிர் ரீனாவின் குணம். கேதரீனுக்கு ரீனா இருப்பதாலேயே பல பிரச்சினைகள் வருவதில்லை. அவள் நல்ல குணத்தைப் பார்த்து அவளிடம் பணம் வாங்கிக் கொண்டு தராதவர்கள் கூட ஏராளம். அவள் வெளிநாட்டுப் பெண் போல் இருப்பதால், அவள் வேறு மாதிரி என நினைத்து நெருங்கும் ஆட்கள் எவரும் ரீனா இருந்தால் நெருங்க முடியாது.
இப்போது மீண்டும் பணமற்று நிற்கிறாள். அங்கு ஜோசப் விட்டுச் சென்ற போது உணர்ந்த அவமானம் மீண்டும் மனதில் உருவானது.
“கார்ட்ல எடுத்துக்குங்க. எங்கிட்ட கேஷ் இல்லை பிளிஸ்.”
“இல்லை மேம். எனக்கு அது செட் ஆகாது. கேஷ் இல்லை, ஜிபே செய்யுங்க.”
“ஏன்?”
“சில பேமெண்ட்ஸ் ஏமாந்து போயிருக்கேன். சோ?”
“என்னைப் பார்த்தால் ஏமாத்தற மாதிரி இருக்கா? பணம் கொடுக்காத மாதிரி இருக்கா?”
வழக்கமாக யாரையும் எதிர்த்துக் கூட கேள்வி கேட்காத கேதரீன், ஜோசப் செய்தது நினைவு வந்திருக்க, பணம் தொலைத்த பயம் எல்லாம் சேர்ந்திருக்க அது அவள் கோபத்தைத் தூண்டி விட்டிருந்தது. கோபமே வராது என பள்ளியில் அவளைக் கூறுவார்கள்.
அப்படிப்பட்டவள் கடைக்காரனின் டீசர்ட்டைப் பிடித்திருந்தாள்.
“என்னைப் பார்த்தால் ஏமாத்தற மாதிரி இருக்கா?”
“மேம் இப்படி இண்டிசண்டா பிகேவ் பண்ணாதீங்க.” கடைக்காரன் சட்டையை விடுவிக்க முயல அவன் கூறிய வார்த்தை கேதரீனை மேலும் தூண்டி விட்டது.
“ஜோசப் என்னை எப்படி நீ பேசலாம்?”
கேதரீன் உச்சகட்ட கோபத்தில் சத்தமாகக் கத்தி இருந்தாள்.
-மலரும்..