அத்தியாயம்-6
‘என்ன இப்படி தனியாக எக்சாம் எழுதற மாதிரி உட்கார வச்சுட்டாங்க? ஆர்ட் கிளாஸ் முடிஞ்சுருச்சே. இங்க எதுக்கு ஸ்கெட்ச் பாக்கெட்? என்னவாக இருக்கும்?’
கேதரீன் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்த போது ஒலிபெருக்கியில் ஒரு பெண் குரல் ஒலித்தது.
‘இவங்க வேற ஆவுனா பள்ளிக்கூடத்தில் பிரேயர் மாதிரி ஸ்பீக்கரில் பேசறாங்க.’
“உங்களுக்கு முன் இருக்கும் டைரியை எடுத்து அதில் ஸ்கெட்ச்பென்னில் தங்களுக்கு மனதில் தோன்றிய அனைத்தையும் எழுதவும். இந்த டைரி எப்போதும் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். இதை யாரும் படிக்கப் போவதில்லை. உங்களுடைய எண்ணப் போக்கை நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.”
கேதரீன் நேற்று இரவு சூர்யாவிடம் பேசியதில் இருந்து ஒரு முடிவு செய்திருந்தாள். அவள் அமைதியான குணமுடையவள் என்றாலும் ரீனாவுடன் ஹாஸ்டலில் இருக்கும் போது பெண்கள் செய்யும் அனைத்துச் சேட்டையிலும் பங்கு பெறுவாள். ஆனால் இவள் குணத்தில் அமைதி என்பதால் யாரும் அவளைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஊமைக் குசும்பி என்ற ரீதியில் எடுத்துக் கொள்ளலாம்.
அப்பா, அம்மா என்று வந்தால் மட்டும் உருகி விடுவாள். அவளுடைய உறவினர்கள். தந்தை, தாய் வகையில் நண்பர்கள் அனைவரும் கேதரீன் மாதிரி அன்பான, அமைதியான, அழகாக பெண் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.
பெற்றோர் என்ன சொன்னாலும் செய்வாள். பொது இடங்களில் சேட்டை எல்லாம் செய்தது இல்லை. அதனாலேயே இவளைப் போன்ற பெண் வேண்டும் என்று கூறுவார்கள்.
முதுகலை முடித்ததும் தந்தையின் நண்பரின் மகனான ஜோசப்புடன் நிச்சயம் செய்யப்பட்டது. ஜோசப் வெளிநாடு செல்வதால் திருமணம் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.
ஜோசப்பை சிறுவயதில் இருந்தே கேதரீனுக்குத் தெரியும். பெற்றோர் அவளுக்கு எப்போதும் சிறப்பான ஒன்றைக் கொடுக்க, ஜோசப்பை தேர்வு செய்த போது, அவளுக்குக் குறை கூறும்படி எதுவும் இல்லை. சாதாரண பெண்ணுக்குரிய திருமணக் கனவுகள் அவளுக்கும் இருந்தது.
ஜோசப்புடன் கைப்பேசியிலும் நேரம் கிடைக்கும் போது பேசுவாள். ஆனால் ஜோசப் சில மாதங்களுக்கு முன் திரும்பி வந்த போதுதான் அவன் கேதரீனை நடத்துவதில் கொஞ்சம் கொஞ்சம் வேறுபாடு இருந்தது. இருந்தாலும் பெரிதாக கேதரீன் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஜோசப் இப்படி செய்வான் என்று நினைத்தும் பார்க்கவில்லை.
சூர்யாவிடம் பேசிய பின்பு ஓரளவு தெளிவு வந்திருந்தது. செய்த பின்னர் யோசித்து என்ன உபயோகம்? பத்து நாட்கள் இந்தப் பயிற்சிகளில் கலந்து கொண்டு தன்னைப் பற்றி யோசிக்கலாம்.
தன் வாழ்க்கையைப் புதிதாக வாழலாம் என்று முடிவெடுத்திருந்தாள். திருமணத்தை நிறுத்திய பெண் என்ன என்ன சொற்கள் கேட்க வேண்டும் என அவளுக்கும் தெரியும்.
திருமணத்தால் வேலையையும் விட்டிருந்தாள்.
பத்து நாட்கள் எந்தக் கவலையும் இன்றி, புதிய நட்புகளோடு வாழ முடிவெடுத்திருந்தாள். முடிவெடுக்கலாம். ஆனால் நடந்தவற்றை லேசில் மறந்திட முடியாதல்லவா? இங்கு புதிய நண்பர்களோடு சிரித்தாலும், அடி மனதில் இன்னும் துக்கம் கனன்றுதான் கொண்டிருந்தது.
டைரியை எடுத்தவள் ஸ்கெட்ச் பென்னின் மூடியைத் திறந்து முதல் பக்கத்தில் புள்ளியை வைத்தாள். ஸ்பிக்கரில் சோகமான செல்லோ மற்றும் பியானோ இசை ஒலிக்க ஆரம்பித்தது. கேட்க மனம் தானாக சோகத்தில் ஆழ்ந்தது கேதரீனுக்கு. டைரியை எடுத்தவள் எழுத ஆரம்பித்தாள்.
‘எனக்கு இந்த நிமிஷம் என்ன செய்யறதுனு தெரியலை. இப்படி நான் செய்வேனு நானே எதிர்பார்க்கலை. எனக்குத் தெரியலை. ஜீசஸ் நான் செஞ்ச தப்பை மன்னிச்சுருவாருனு நம்புறேன். என்னோட அம்மாவும், அப்பாவும் மன்னிச்சருனும். வெளிய சிரிச்சாலும் நான் சந்தோஷமாக இல்லை….’
முற்றுப் பெறாத புள்ளிகளுடன் அந்த டைரியின் முதல் பக்கத்தில் எழுதி இருந்தாள்.
முக்கால் மணி நேரத்தில் அனைவரும் எழுதி முடித்து வெளியே வந்தவுடன் நண்பர்கள் மூவரும் சேர்ந்து கொண்டனர்.
“கேத்தி, நீல்ஸ் எழுதிட்டீங்களா?”
“இப்படி தீடிர்னு எழுத சொன்ன எழுத நான் என்ன ரைட்டரா? போடா.” கேத்தி கூறினாள்.
“நான் கலர் ஸ்கெட்சில் அழகாக படம் வரஞ்சு வச்சேன். நீ என்ன செஞ்ச?” நீலா கேட்டார்.
“செமஸ்டர் எக்ஸாமா கதை எழுதி வைக்க? சும்மா டைம் பாஸ் பண்ணிட்டு வந்தேன்.” என சிரித்தான் சாய். மற்ற இருவரும் அவனுடன் இணைந்து கொண்டனர்.
“அடுத்து எங்கடா?”
“லைப்பரரி அங்கிருந்து எம்டி சேர் ரூம்.”
“என்னடா? பேரே வித்தியாசமாக இருக்கு.” கேத்தி புரியாமல் கேட்டாள்.
மூவரும் தண்ணீர் குடித்தப்படி பேசியவர்கள் நூலகத்தை நோக்கி நடைபோட்டனர்.
அங்கிருக்கும் பதினாறு பேரிலேயே இந்த மூவர் மட்டும்தான் குழுவாக சென்று கொண்டிருந்தனர். அதுமட்டுமின்றி ஒரே நாளில் மூவரும் ஆர்ட் கிளாஸ் சம்பவத்தில் அங்குள்ள பணியாளர்களிடம் பிரபலமடைந்திருக்க, அவர்கள் இவர்களை அதிகமாகக் கண்காணித்தனர்.
“கேத்தி இங்கேயும் சைலண்டா இருக்கனும். நான் எல்லாம் மழை பேஞ்சா கூட லைப்ரரி பக்கம் ஒதுங்குனது இல்லை. என்னைப் போய் இங்க வரவச்சுட்டாங்க?”
“எதாவது ஒரு நல்ல பழக்கம் இருக்கா சாய் உனக்கு?” நீல்ஸ் புத்தக பிரியை என்பதால் சாயை கேலியாகக் கேட்டார்.
“தோ பார்ரா. படிப்ஸ். நீல்ஸ் இதெல்லாம் அநியாயம் பார்த்துக்கோ.”
‘நல்ல வேளைடா பூமர்னு சொல்லுவீனு நினைச்சேன்.”
“கரக்ட்தான். ஆனால் நீ எங்கூட சேர்ந்திட்டியே நீல்ஸ். அதனால் அப்படி சொல்ல முடியாது.”
மூவரும் நூலகத்தில் ஆளுக்கொரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு அருகருகே அமர்ந்தனர். படிப்பவர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட அவர்கள் டைரியுடன் சென்றனர்.
நண்பர்கள் மூவரும் கண்களாலும், டைரியின் கடைசி பக்கத்தில் எழுதியும் பேசிக் கொண்டிருந்தனர். கேதரீன் அழைக்கப்பட அவளும் சென்றாள்.
பணியாளர் அவளை நூலகத்தை ஒட்டி அமைந்துள்ள இன்னொரு கட்டிடத்திற்குச் சென்றாள். ஒரு அறையின் முன்னே நிற்க அதன் கதவில் எந்தப் பெயரும் இல்லை. திறந்து உள்ளே செல்ல வெண்ணிற கோட் அணிந்து ஒரு சிவப்பு நிற சோபாவில் அமர்ந்து கொண்டிருந்தான் சூர்யா.
அருகில் உள்ள மேசையில், ‘சூர்யபிரகாஷ் வி.ஆர்’ என்ற பெயருக்கு அருகில் மருத்துவப்பட்டத்துடன் மனநலவியலில் எம்.டி வாங்கியதற்கான பட்டமும் பெயர்ப்பலகை இருந்தது.
“நீங்க டாக்டரா?” கேதரீன் கேட்ட முதல் கேள்வி அதுதான்.
“யெஸ். உட்காருங்க.”
கேதரீன் ஆச்சரியத்துடன் அமர்ந்தாள்.
“நான் நீங்க டாக்டருனு நினைக்கவே இல்லை. இங்க வொர்க் பண்ணற ஸ்டாப்னு நினைச்சேன்.”
புன்னகைத்தவன், “நானும் என்னைப் பத்தி சொல்லலை. சரி இப்ப எப்படி பீல் பண்ணற கேதரீன்?” என்றான்.
“ரொம்ப நல்லா பீல் பண்றேன். ஜாலியாக இருக்கு.”
அவன் முகத்தில் அதே புன்னகை.
“பொய் அழகாக சொல்ற கேதரீன்.” என்று அவன் கூறியதும் கேதரீன் அவனைத் திகைப்புடன் நோக்கினாள். அவன் ஆழ்ந்த குரல் அவள் மனதை ஊடுருவியது.
“கேதரீன் நிறைய நேரம் நாம உண்மையாக சந்தோஷமாக இருக்க மாட்டோம். ஆனால் வெளியில் அப்படி காட்டிப்போம்.”
தானாக அவள் தலை அசைந்தது.
“எப்படி உங்களால் கரக்டா சொல்ல முடியுது.”
“அது அப்படித்தான். சரி கேதரீன் இந்த பக்கம் இருக்கற ரூமுக்குள்ள ஒரு இரண்டு சேர் இருக்கும். அதில் நீ ஒன்னுல உட்கார்ந்து எதிரில் இருக்கற சேரில் நீ யார்கிட்ட பேசனும்னு நினைக்கிறியோ அவங்க இருக்காங்கனு நினைச்சுகிட்டு நீ பேசு. உன் மனசுல இருக்கறது எல்லாம் பேசு.”
“தனியாவா சூர்யா?”
“ஆமா.”
கேதரீனுக்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் அந்த அறையில் சென்று அமர்ந்தாள். முதலில் எதுவும் பேசத் தோன்றவில்லை. சூர்யா மைக்கில் வெளியில் இருந்து அவளைப் பேச ஊக்கப்படுத்த மெல்ல அப்படியே பேச ஆரம்பித்தாள். ஒரு கட்டத்திற்கு மேல் பேசிவிட்டு அழுதவள் எழுந்து வர சூர்யா அவளுக்கு டிஸ்யூவைத் தந்தான்.
டிஸ்யூவை வாங்கியவள் அவனை கழுத்தோடு அணைத்துக் கொண்டாள்.
“தேங்க்ஸ். எனக்கு கொஞ்சம் பெட்டரா இருக்கு.” சூர்யா அவள் இப்படி செய்வாள் என்று எதிர்ப்பார்க்கவில்லை.
“இட்ஸ் ஓகே.” அவள் முதுகைத் மெதுவாகத் தட்ட அவனை விடுவித்து மீண்டும் சில டிஸ்யூக்களை எடுத்து முகத்தைத் துடைத்தாள். சூர்யாவுடன் எப்போதும் இருக்கும் நர்சுகள் இருவரும் கண்ணாடிக்கு வெளியே அதைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஒருவர் ஆண், இன்னொருவர் பெண்.
ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தனர்.
இவற்றை அறியாமல் கேதரீன் அறையை விட்டு வெளியே வந்தாள். சூர்யாதான் அப்படியே உறைந்து நின்றான். வெளியே வந்த கேதரீன் ஒரு புதுவிதமாக உணர்ந்தாள். அவள் மனம் சரியாக நாட்கள் எடுக்கும். ஆனால் தவறுதலாக சரியான இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம் என்ற எண்ணம் எழுந்தது. இதே நேரம் சென்னையில் இருந்திருந்தால் தன் நிலையை யோசித்துப் பார்த்தாள். மனதில் லேசாக பாரம் குறைந்த உணர்வு.
அடுத்தடுத்து சாயும், நீல்ஸூம் சூர்யாவைப் பார்க்கச் செல்ல, கேதரீன் ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தாள். மதிய உணவும் புது நண்பர்களுக்குக் கலகலப்பாகச் சென்றது.
மதிய ஓய்வு நேரம் இருக்க, நண்பர்கள் மூவரும் அங்கு அறைக்குச் செல்வதை விடுத்து உலாத்த ஆரம்பித்தனர்.
சூர்யாவும், வாசீமும் எதிர் எதிரே அமர்ந்து உணவை உண்டு கொண்டிருந்தனர்.
“என்ன சூர்யா கேதரீன் உன்னை ஹக் பண்ணிட்டாங்களாம். என் ஹார்ட் உடைஞ்சு போச்சு தெரியுமா?”
பெருமூச்சு விட்ட சூர்யா, “இதெல்லாம் எப்படிடா உனக்குத் தெரியுது?” என்றான்.
“நீதானே கேதரீன் ரொம்ப சென்ஸ்டிவ். மானிட்டர் பண்ண எல்லார்கிட்டேயும் சொல்லியிருக்க. அப்புறம் எனக்கெப்படி தெரியாமல் போகும்?”
“கேதரீன் உன்னை மட்டும் பிடிக்குதுனு சொல்லிட்டால் நான் என்ன செய்யறது?”
“டேய் சும்மாவே இருக்க மாட்டியா நீ?”
“சரி சொல்லு. என் டார்லிங்கை நீதான் குதிரையில் அதுவும் வெட்டிங்க் டிரஸ்ஸில் கூட்டிட்டு வந்தியாம். என்ன பிரச்சினை அவங்களுக்கு?”
சாப்பிட்டுக் கொண்டிருந்த சப்பாத்தியை எடுத்து அவன் வாயில் திணித்தான் சூர்யா. மென்று கொண்டே சூர்யாவைத் திட்டிவன் விழுங்கி விட்டு தன் நண்பனை முறைத்தான்.
“நீ சொல்லலைனா என் டார்லிங்க்கிட்ட பாக்ஸிங்க் கிளாஸில் கேட்டுக்குவேன்.”
அவனை புருவத்தை மேலேற்றி சூர்யா கோணலாக புன்னகைத்தான். முடிந்தால் கேட்டுக் கொள் என்ற செய்தி அதில் இருந்தது.
“சூர்யா நீ செய்யறது சரியில்லை. நீ வித்தியாசமாக பிகேவ் செய்யற.”
“போடா போய் பாக்ஸிங்க் கிளாஸ்க்கு ரெடியாகு.” கூறிவிட்டு தட்டை எடுத்துக் கொண்டு சூர்யா கை கழுவச் சென்றான்.
இங்கு மூவர் படை தங்களுடைய அறைக்குச் சென்று ஸ்போர்ட்ஸ் வியர் அணிந்து கொண்டு வந்தனர். பாக்ஸிங்க் ஹால் நடுவில் சதுர வடிவ ரிங்க் மட்டும் வெளியில் மேட் போடப்பட்டும் இருந்தது. வாசீமும் ஜெர்க்கின் அணிந்து கம்பீரமாக நின்று கொண்டிருந்தான்.
“அக்கா வாசீம் அண்ணாவைப் பாருங்க அக்கா. எவ்வளவு கெத்தா இருக்காரு. சிக்ஸ்பேக் வச்சுருப்பாருனு நினைக்கறேன். அந்த பைசெப்ஸ் பாருங்க. எனக்கும் இப்படி எல்லாம் வர வைக்கனும் ஆசை. பத்தாததுக்கு எவ்ளோ ஹேண்ட்சம். இல்லை பியூட்டிபுல்னு சொல்லலாம். இவரு எல்லாம் எங்க காலேஜில் இருந்தால் பொண்ணுங்க மத்த பசங்களை எல்லாம் பார்க்கக் கூட மாட்டாங்க.”
அவன் தலையில் கொட்டிய நீல்ஸ், “அதுக்கு எக்ஸ்ர்சைஸ் டயட் எல்லாம் ஃபாலோ பண்ணனும். வாசீம் புட்ஃபால் ஏதோ பிளேயர்னு கேள்விபட்டேன். அதனால் கண்டிப்பாக இருக்கும். அப்ப இந்த பாடியில் படிக்கட்டு எல்லாம் வைக்கிறது பொண்ணுங்களை இம்பிரஸ் பண்ணவா?”
“அப்படி பொதுவாக சொல்லிட முடியாது. தோராயமாக சொல்லலாம். கேத்தி நீ சொல்லு. வாசீம் சூப்பர்ல.”
“ம்ம்ம்.. பத்து எட்டு மார்க் போடலாம்.” கேத்தி கூறுவதைக் கேட்ட நீல்ஸ், “டென்னுக்கு டென்.” என்றார்.
சாய் இருவரையும் பார்த்து புருவத்தை உயர்த்தியவன் முன்னே நடந்தான். கேதரீனுக்காகக் காத்திருந்த வாசீம் அடுத்து அவள் செய்யப் போவதை அறியாமல் ஆர்வமாகக் காத்திருந்தான்.