பேருந்தில் இருந்து இறங்கித் தனது வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டுத், தன்னுடைய கழுகுக் கண்களால் சுற்று வட்டாரத்தைக் கூர்மையான பார்வையால் அளக்கத் தொடங்கினான் வீரபத்திரன்.
அவனைக் கண்டதும் அவ்விடத்தில் இருந்த அந்த ஊர் மக்களோ,”இவன் வீரபத்திரன் தான? பக்கத்து ஊர்க்காரனுக்கு இங்கே என்ன வேலை?”என்றும்,
“ஆமாம். இவன் நம்ம ஊருக்கு வந்தே ரொம்ப நாளாச்சு தானே? இப்போ என்ன வேலையாக வந்திருக்கானாம்?”என்றும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்த சமயத்தில்,
“டேய் வீரா! எப்புட்றா இருக்கே?”என்று அங்கு வந்து சேர்ந்தான் அவனது நண்பன்.
“டேய் மாப்பிள்ளை! நான் நல்லா இருக்கேன்டா!”என்று அவனைக் கட்டித் தழுவி விடுவித்தான் வீரபத்திரன்.
“வீட்டுக்கு வா. அங்கே போய் ஆற, அமர உட்கார்ந்து பேசுவோம்”என்று அவனை அழைத்துக் கொண்டுச் சென்றவனோ, தன்னுடைய வீட்டை அடைந்ததும்,”ம்மோவ்! வீரா வந்திருக்கான்!”என்று தாயிடம் கூறினான் சித்தன்.
உடனே வெளியே வந்த கற்பகமோ,”உள்ளே வாப்பா வீரபத்திரா!”என்று அவனை வீட்டினுள் அனுமதித்து அவனுக்குக் குடிக்க நீர் மோர் கொடுத்தார்.
அதை வாங்கிக் குடித்து விட்டு,”நல்லா இருக்கீங்களாம்மா? ஐயா எங்கே?”என்று அவரது கணவரைப் பற்றி விசாரித்தான் வீரபத்திரன்.
“அவுக வயல் வேலையாகப் போயிருக்காங்க. நீ என்ன சாப்புட்ற?”என்று அவனிடம் கேட்டார் கற்பகம்.
“நீங்க என்ன சமைச்சு வச்சிருக்கீங்களோ அதையே கொடுங்க!”என்று கூறிப் புன்னகை செய்ய,
“இவனோட அப்பாரு வெள்ளனவே சாப்பாடு எடுத்துட்டுப் போய்ட்டாக. எனக்கும், இவனுக்கும் பெருசா எதுவும் சமைச்சு வைக்கலை. அதனால் உனக்குப் பிடிச்சதைச் சொல்லுய்யா! சமைப்போம்”என்று ஆதூரத்துடன் வினவினார்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்மா”என்றவனிடம்,
“சும்மா சொல்லுடா”என்று அவனை உசுப்பினான் சித்தன்.
உடனே தனக்குப் பிடித்த அசைவ உணவைக் கூறினான் வீரபத்திரன்.
“அம்புட்டுத்தான்! இதைச் சொல்லப் போய்த் தயங்கிட்டு இருக்கிற!”என்ற கற்பகமோ,
“டேய் சித்தா! கடைக்குப் போய்ப் பொருளை எல்லாம் வாங்கியாந்து கொடு”என்று அவனை அனுப்பி வைத்தார்.
“ஏய்யா, நீ இவ்வளவு தூரம் வந்திருக்கேன்னா கண்டிப்பாக ஏதாவது காரணம் இருக்குமே! அது என்னன்னு ஆத்தாவுக்குச் சொல்லேன்?”என்று வீரபத்திரனிடம் கனிவுடன் கேட்டார்.
“இந்த ஊரில் நிலம் எதுவும் விலைக்குக் கிடைக்குதான்னுப் பார்த்து வாங்க வந்தேன்ம்மா”என்றுரைத்தான் வீரபத்திரன்.
“ஓஹோ சரிப்பா”என்றவரோ அவனது வீட்டு ஆட்களைப் பற்றி விசாரித்து முடித்த சமயத்தில் கடையில் இருந்து வந்து விட்டிருந்தான் சித்தன்.
அவனிடமிருந்து பொருட்களை வாங்கிச் சமைக்கத் தொடங்கினார் கற்பகம்.
“இங்கே யாராவது அவங்க நிலத்தை விக்க விருப்பப்பட்றாங்களா?”என நண்பனிடம் கேட்டான் வீரபத்திரன்.
“நிறைய பேர் இருக்காங்கடா. நீ இன்னைக்கே ஊருக்குக் கிளம்பப் போறியா?”என்றான் சித்தன்.
“இல்லடா. மனசு ஒரு மாதிரி இருக்கு. அதனால் ஒரு மூனு நாள் தங்கிட்டுப் போகலாம்னு இருக்கேன். அதில் உங்களுக்கு விருப்பம் இல்லைன்னா சொல்லிடுங்க”என்றவனிடம்,
“என்னடா இப்படி சொல்ற? நீ இங்கே எத்தனை நாள் வேணும்னாலும் தங்கிக்கலாம்”என்றுரைத்தான்.
இதே சமயம், தன்னுடைய வயலில் நின்று கொண்டிருந்த ராஜனிடம் வந்த அந்த ஊர்க்காரர் ஒருவர்,”ஏன்ப்பா ராஜா! விஷயத்தைக் கேள்விப்பட்டியா?”என்று வினவ,
“என்ன விஷயம்? என் காதுக்கு எதுவுமே வரலையே?”எனக் கேட்டவனிடம்,
“அந்தப் பக்கத்து ஊரு சண்டியரு வீரபத்திரன் இங்க வந்துருக்காப்டி!”என்று கூறினார்.
அதைக் கேட்டவனுக்குத் தலையில் சுர்ரென்று ஏறியது.
“அவனா? அந்த நாய் எதுக்குத் திடீர்னு இங்க வந்திருக்கியான்? என்ன சோலியா வந்திருக்கானாம்?”என்று ஆத்திரத்துடன் வினவினான் ராஜன்.
“அவன் நண்பன் சித்தனைப் பார்க்க வந்திருக்கான் போலிருக்கு. மத்தபடி வேறெந்த நோக்கத்துடனும் வரலை போல”என்றார் ஊர்க்காரர்.
“அப்படியாண்ணே! ஆனால் அவன் ஒரு எமகாதகனாச்சே! ஏதாவது விஷயம் இல்லாமல் வர மாட்டான். எவ்வளவு நாள் இங்கே இருப்பான்னுப் பார்ப்போம்”என்று அவரிடம் கூறி அனுப்பி வைத்து விட்டு நடைபாதையில் குறுக்கும், நெருக்கமாக நடக்கலானான் ராஜன்.
அவனுக்கு வீரபத்திரனைச் சுத்தமாகப் பிடிக்காது. ஏனெனில் அவனுக்கும், தங்கபுஷ்பத்திற்கும் திருமணம் நடப்பதற்கு முன்பு தன் மனைவியைப் பெண் கேட்டு வந்தான் என்பதைக் கேட்ட நாளிலிருந்தே அவன் மீது வன்மத்தை வளர்த்துக் கொள்ளத் தொடங்கி விட்டான்.
அது இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதே சமயம், கற்பகத்தின் சமையலை ரசித்து உண்டு விட்டு நண்பனுடன் அளவளாவிக் கொண்டிருந்த வீரபத்திரனோ,”அவ எப்படி இருக்காடா?”என்றான்.
“யாருடா?”எனக் கேட்டான் சித்தன்.
“அதான். அந்த தங்கபுஷ்பம்”என்றவனது குரல் இறுகிப் போயிருந்தது.
அதைக் கேட்டதும் அவனது முகம் மாறி விட்டது.
“அந்தப் பொண்ணைப் பத்தி இப்போ ஏன் கேட்கிற?”என்றான் சித்தன்.
“ஹ்ம்ம். சும்மா தெரிஞ்சிக்கத் தான் கேட்கிறேன்”என்று அவனுக்குப் பதிலளித்தான் வீரபத்திரன்.
“அப்போ நீ அந்தப் பொண்ணைப் பார்க்கத் தான் இங்கே வந்திருக்கியா?”எனக் கேட்டவனிடம்,
“ஆமாம்டா”என்று தீர்க்கமாக உரைக்க,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்டா. நீ வந்த வேலையை மட்டும் பார்த்துட்டுப் போ”என்று அவனுக்கு அறிவுறுத்தினான் வீரபத்திரன்.
“ஏன்டா? உங்க ஊர்க்காரங்க என்னை ஏதாவது பண்ணிடுவாங்கன்னுப் பயமா?”என்று அவனிடம் வினவினான் சித்தன்.
“ஆமா. அப்படியே உன்னை ஏதாவது செய்றதுக்கு இவனுங்களுக்குத் தைரியம் இருந்துட்டாலும்! நான் அதுக்காக சொல்லலை! அந்த தங்கபுஷ்பத்தோட குடும்பம் ஒரு பிராடு குடும்பம்! அதே மாதிரி அந்த ராஜன் எல்லாம் மனுஷ செம்மத்துல சேர்த்தியே இல்லை! அவன் பண்றதை எல்லாம் பார்த்தால் எனக்குக் கடுப்பாகும்! வெளியவே இப்படி இருக்கானே? வீட்டில் எப்படியெல்லாம் இருப்பான்? அந்தப் பொண்ணை என்னவெல்லாம் கொடுமைப்படுத்துறானோ தெரியலை. அதுக்குத் தான் சொல்றேன். அந்தப் பொண்ணைப் பத்தி யோசிக்காதே!”என்றவனின் வார்த்தைகளைக் கேட்டுத் தனது முஷ்டியை மடக்கிக் கோபத்தைக் கட்டுப்படுத்த முயன்றான்.
“அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணி சீர்ன்னு அவளோட முக்கால்வாசி சொத்தை எல்லாம் வாங்கிட்டாங்க! அவ்வளவு காசு இருந்தும் அந்த வீட்டில் ஒரு வேலைக்காரன் கூட வைக்காமல் அவளையே எல்லா வேலையையும் பார்க்க வைக்கிறாங்கன்னுக் கேள்விப்பட்டேன்!”என்றுரைத்த நண்பனிடம்,
“அவங்க அவளோட சொந்த அத்தை வீட்டாளுங்க தான? அப்பறம் ஏன் அவளை இப்படி நடத்துறாங்க?”எனக் கேட்டான் வீரபத்திரன்.
சித்தன்,“ஆமாம். ஆனால் அவங்களுக்கு அவளோட சொத்து மட்டும் போதும்ன்னு இருக்கிறப்போ அவளை எப்படி மதிச்சு நடத்துவாக? அதான் சம்பளம் இல்லாத வேலைக்காரியாக நடத்துறாக!”
“ப்ச்!” என்று தலையை உலுக்கித் தன்னைச் சமன்படுத்திக் கொள்ள முயல,
“அதனால் தான் சொல்றேன். அந்தப் பொண்ணைப் பத்திப் பார்க்கனும்னு நினைக்காதே! அப்பறம் உன்னால் அந்தப் பொண்ணைத் தான் கொடுமைப்படுத்துவாக!”என்க,
“அவுக குடும்ப விவகாரம் உனக்கு எப்படி தெரியும்?”என்ற வீரபத்திரனிடம்,
“எல்லாம் காத்துவாக்குல வர்றது தான்! பின்னே, நான் அங்கே போயா விசாரிச்சுட்டு வர முடியும்?”என்றான் சித்தன்.
“ம்ஹ்ம். சரி. நான் இனிமேல் அவளைப் பார்க்க முயற்சி பண்ணலை”என்று அவனிடம் உறுதி அளித்தவனுக்கோ, அவன் முயற்சி செய்யாவிட்டாலும் ராஜனின் மூலமாகவே தங்கபுஷ்பத்தைக் காணப் போகிறான் என்பதை அறியவில்லை வீரபத்திரன்.
அதே சமயம், வயலில் இருந்து வீட்டிற்கு வந்து,”ஏய் புஷ்பா!”என்று கர்ண கொடூரமாக கத்தி மனைவியை அழைத்தான் ராஜன்.
“டேய்! இந்த நேரம் நீ வயலில் தானே இருக்கனும்? ஏன் வீட்டுக்கு வந்து இப்படி கத்திட்டு இருக்கிற?”என்று மகனிடம் அதட்டிக் கேட்டார் சற்குணம்.
அதற்கு அவனோ,”அந்த வீரபத்திரன் இங்கே வந்திருக்கான்ம்மா!”என்று அவரிடம் தெரிவித்தான்.
அதே வேளையில், அவனது அழைப்பில் அரக்கப்பரக்க அங்கே வந்து சேர்ந்தாள் தங்கபுஷ்பம்.
அதற்குள்ளாக,“அவன் எதுக்கு நம்மூருக்கு வந்திருக்கான்? சரி, அப்படியே வந்துட்டுப் போகட்டும். அதில் உனக்கு என்னடா பிரச்சினை?”என்றார் வளையாபதி.
“ப்பா! என்னப் பேசுறீங்க? அவன் செஞ்சதை மறந்துட்டீங்களா? எம் பொண்டாட்டியைப் பொண்ணுக் கேட்டான் தானே? அது உங்களுக்கு ஞாபகம் இல்லையா?”என்றவனிடம்,
“ஆமாடா. அது எதுக்கு இப்போ? அவன் உங்கிட்ட ஏதாவது பிரச்சினை பண்ணானா?”என்று வினவினார் சற்குணம்.
“இல்லம்மா. நான் அவனைப் பார்க்கவே இல்லை”என்றவன், இது சம்பந்தமாக நடந்த உரையாடலை அவர்களிடம் விவரித்தான் ராஜன்.
‘இவர்கள் மூவரும் யாரைப் பற்றிப் பேசுகிறார்கள்?'என்ற குழப்பத்துடன் அங்கே நின்றிருந்தாள் தங்கபுஷ்பம்.
“முதல்ல அவன் எதுக்கு வந்திருக்கான்னுத் தெரிஞ்சிக்கிட்டு வா. அதுக்கப்புறம் பார்த்துக்கலாம்”என்று மகனுக்கு அறிவுரை வழங்கினார் சற்குணம்.
“சரிம்மா”என்றவனுக்குத் தங்கபுஷ்பத்தைப் பார்த்தவுடன் ஆத்திரம் அதிகமாகியது.
“இவளைக் கொஞ்சம் மிரட்டி வச்சிட்டு வர்றேன்ம்மா”என்று கூறி விட்டு,
மனைவியைப் பார்த்து,”ரூம்புக்கு வா”என்று கூறிச் சென்றவனைப் பின் தொடர்ந்து போனாள்.
கதவைப் படாரென்று சாற்றி விட்டு,”நம்மக் கல்யாணத்துக்கு முன்னாடி ஒருத்தன் வந்து உன்னைப் பொண்ணுக் கேட்டு வந்தானே நினைவு இருக்கா?”என்று அவளிடம் கேட்டான் ராஜன்.
அதில் தனது உடல் தூக்கி வாரிப் போட,”ம்ம்”என்று மட்டும் சொன்னாள் தங்கபுஷ்பம்.
“அவன் இப்போ இந்த ஊரில் தான் இருக்கான்!”என்று அறிவித்தான்.
அதைக் கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்தாள் பெண்ணவள்.
“அவன் என்ன நோக்கமாக வந்திருக்கான்னு எனக்குத் தெரியாது! ஆனால் அவன் உன்னைப் பார்க்கிறதுக்காக வந்திருந்தால் நானே உன்னைக் கொண்டு போய் அவன் முன்னாடி நிப்பாட்டுவேன்!”என்று தடாலடியாக கூறினான் ராஜன்.
அதில் திகைத்து விழித்த மனைவியிடம்,”என்னப் பார்க்கிற? அவன் என்ன தான் உன்னைக் கல்யாணம் செஞ்சிக்க விருப்பப்பட்டாலும் உனக்குத் தாலி கட்டி இருக்கிறது நான் தான்! நீ எனக்கு மட்டும் தான் சொந்தம்ன்னு அவன்கிட்ட கெத்தாக காட்ட வேண்டாமா? அதுக்குத் தான்!”என்றவனுக்குப் பதிலளிக்க வழியின்றி மௌனமாக இருந்தாள் தங்கபுஷ்பம்.
“என்ன அமைதியா இருக்க?”என்று அவளை அதட்ட,
“இதில் நான் என்ன சொல்றதுக்கு இருக்குங்க? உங்க இஷ்டம்”என்றுரைக்கவும்,
“ஓஹ்! அப்போ அவம் மேலே உனக்கு எந்த விருப்பமும் இல்லை! அப்படித் தான?”என்றான் எகத்தாளமாக,
“ஆமாங்க. நீங்க எங்கழுத்தில் எப்போ தாலி கட்டுனீங்களோ, அப்போ இருந்து உங்களைத் தவிர வேற யாரும் என் மனசில் இல்லை!”என்றவளைக் கர்வத்துடன் பார்த்தவனோ,
“அப்போ அதை இப்போவே நிரூபிச்சுக் காட்டு!” என்று குரூரத்துடன் சொன்னான் ராஜன்.
- தொடரும்