• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சமூகம் பற்றிய ஓர் பார்வை (02/08/21)

V

Viba visha

Guest
சமூகம் என்பது என்ன? நீ, நான் என்பது நாமாகி.. அதில் உருப்பெற்றது தானே சமூகம்? எனவே ஒவ்வொரு தனிமனிதனும் சமூகத்தின் அங்கம் தான்.

நெடுவானத்தின் நட்சத்திரங்களாய் தனித்தனியே இருந்தாலும், மனிதன் ஒரு சமூக விலங்கு தான். ஆம்.. மனிதனால் தனது கூட்டத்துடன் இணைந்தே செயல்பட இயலும். அவனால் தனித்து இயங்க இயலாது. அப்படி தனித்திருப்பது அவனது இயல்பாகாது.

"இந்த சமூகம் இன்று எப்படிப்பட்ட பாதையில் சென்று கொண்டிருக்கிறது?" என்றொரு கேள்வியை நாம் முன்வைக்கலாம். ஆனால் இது.. காலம் காலமாக முந்தைய தலைமுறையினரால், இளம் தலைமுறையினரைப் பார்த்து கூறிக் கூறி சலித்துவிட்ட வசவு தான்.

இருந்தாலும், இந்த வசவில் ஒரு நிதர்சனம் இருக்கத் தானே செய்கிறது? இப்போதைய சமூகம், அதில் அங்கம் வகிக்கும் நம்மையும் சேர்த்தே கணக்கிடலாம். நாளுக்கு நாள்.. பொழுதுக்கு பொழுது.. நம்மை சுற்றி நாம் கட்டமைக்கும் சமூகம் எப்படியானதாய் இருக்கிறது?

எங்கும் எதிலும் கலப்படமே. நமது சிரிப்பும், நம்மை பற்றி பிறருக்கு காண்பிக்கும் வாழ்வுமே கலப்படமானதாய் தானே இருக்கிறது? அதிலும் நம்மை சுற்றி வளரும் குழந்தைகள் இப்பொழுது வெளி உலகே காணாது வளர்கிறார்கள்.

அத்தனையும் அவர்களது கைக்கே வந்துவிடுகிறது. நாமும் தான்.. எல்லாமுமே நமக்கு வேகமாய் நடக்க வேண்டும். ஏன் அப்படி? மெதுவாகவே நடை பழகுவோம்.

எட்டி நடை பயின்று, அந்த விண்மீனையும் தொட்டு விடுவோமே? எனவே இந்த சமூகத்தை பற்றிய பார்வையானது, நம் ஒவ்வொருவருக்கும் நம்மை நாமே கண்ணாடியில் நமது விம்பத்தை பார்த்து எடை போடுவதாய் அமையட்டும். இந்த சமூகம்.. செழிப்பானதாய் மாறட்டும்.
 
  • Like
Reactions: Dharani