சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே...
சிறகு - 11
'கரன் சொல்யூஷன்ஸ்' நிறுவனத்தில் குடும்ப நாள் கொண்டாடப்பட திட்டமிடப்பட்டது. அன்றைய நாளில் அலுவலகத்திற்கு தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வரலாம் என்று நிறுவனம் அவர்களுக்கு அறிவித்திருந்தது.
தன் தந்தையிடம் ஜேபி இதனைப் பற்றி விரிவாக கூறிக் கொண்டிருக்கும் போது, " சாரி கண்ணம்மா! அப்பாவிற்கு அன்றைக்கு முக்கியமான கொள்முதல் இருப்பதால் என்னால் கலந்து கொள்ள முடியாது. நீ வேண்டுமானால் உன் அப்பத்தாவை கூட்டிக் கொண்டு செல் " என்று முடித்துக் கொண்டார் பெருமாள்.
" அடுத்த தெரு பார்வதி வீட்டு விருந்தில் போட்டது போல் கறி குழம்பு வைப்பார்களா? சாம்பார் சோறு என்றால் நான் வரமாட்டேன் " என்று தன்னிடம் கேட்காமலேயே தன் முடிவை அறிவித்தார் அன்னம்மாள்.
"ஓஹோ... செட்டு பல்லுக்கு செட்டு புரோட்டா வேண்டுமோ?" கிண்டலடித்தாள் ஜேபி.
" இங்க பாரு! இந்த ரைஸாவோட மவுசு பற்றி தெரியாமல் பேசாதே. அங்கே வந்து என்னை அசிங்கமாக அப்பத்தா என்று கூப்பிட்டு விடாதே! கால் மீ ரைஸா, அப்படி இல்லைனா டாடிமா என்று கூப்பிடு " என்றார் அன்னம்மாள் பாட்டி கெத்தாக.
"எதே! டாடி... மாவா? அது என்ன அரிசி மாவா? கேப்பை மாவா?"
"அடியே! உங்க அப்பன் உனக்கு டாடி. உன் டாடியை பெத்த மம்மி நானு. அதனால உன் டாடியோட அம்மா உனக்கு டாடிமா. புரிஞ்சுதா?"
"கர்.... கர்...." என்று தன் மூக்கை சுருக்கி உஷ்ண காற்றை வெளியேற்றினாள் ஜேபி.
" பார்ட்டியோட டிரஸ்... " என்று அன்னம்மாள் பாட்டி ஆரம்பிப்பதற்குள், " பாட்டிக்கு எல்லாம் தனியா ட்ரஸ் எதுவும் கிடையாது. உங்க கண்டாங்கி சேலையை கட்டிட்டு வாங்க" என்றாள்.
" அடிப்போடி! நேற்று என் பிரெண்ட்ஸ் எனக்கு போன் செய்து சொல்லிவிட்டார்கள். பார்ட்டியோட டிரஸ் கோடு கலர் மஞ்சள் என்று. என் கிருஷ் பேபி, ஆன்லைன்ல டிரஸ் ஆர்டர் பண்ணி, பியூட்டி பார்லர்ல அப்பாயிண்ட் வாங்கி வச்சிருக்கு. நீயும் வருகிறாயா? என்று கேட்கலாம் என்று நினைத்தேன். ஆபீஸ் பார்ட்டிக்கு கண்டாங்கி சேலை கட்டிக்கொண்டு வரச் சொல்லும் உன்னுடைய ரசனை... அப்பப்பா ஒன்றும் சொல்வதற்கில்லை" என்றார் அன்னம்மாள்.
" அடேய் மங்கி பிரதர்ஸ்... " என்று கைகளை காதருகே இறுக்க மூடிக் கொண்டு கத்தினாள் ஜேபி.
"ஓ! டென்ஷனா இருக்கியா! டென்ஷனை குறைப்பதற்கு நேற்று யூடியூப்பில் ஒரு ஆலோசனை கேட்டேன் சொல்லவா?" என்றவரை வெட்டவா? குத்தவா? என்பது போல் பார்த்தாள்.
வீட்டின் கதவருகே நின்று கொண்டு, மூச்சை நன்றாக உள்ளிழுத்துக் கொண்ட அன்னம்மாள், வாசல் தாண்டி வெளியே சென்று அடக்கி இருந்த மூச்சை வெளியேற்றினார்.
மீண்டும் மீண்டும் இதையே இரண்டு முறை செய்து காட்ட, அவரின் செய்கை புரியாமல் புருவங்கள் இடுங்க, "இது என்ன?" என்றாள் ஜேபி.
"ஹான்... இது என்னவா? நம்முடைய மூச்சை நன்றாக உள்ளே இழுத்துக் கொண்டு வெளியே வெளியேற்றினால் டென்ஷன் எல்லாம் குறையுமாம்" என்றார்.
" வீட்டுக்குள்ளே மூச்சை இழுத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே வெளியேற்றும் படி சொன்னார்களா? ஐயோ! கடவுளே என் வாழ்க்கையில் இன்னும் நான் என்னவெல்லாம் பார்க்க வேண்டி வருமோ? " என்று தொப்பென்று சோபாவில் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்து விட்டாள் ஜேபி.
" அந்த காலத்தில் நான் மஞ்ச கலரு சேலை கட்டிக்கொண்டு வந்தால், உன் தாத்தா என் மஞ்சகுருவி, மஞ்சகுருவி என்று என் பின்னாலேயே சுற்றுவார். ம்... அது ஒரு காலம் " என்று ஏக்கப் பெருமூச்சு விட்டார் அன்னம்மாள்.
" ஹலோ ரைஸா மேடம் உங்களை நான் என் அலுவலகத்திற்கு கூட்டிக்கொண்டு செல்வதாக சொல்லவே இல்லையே "
" ஏன் நீ மட்டும் தான் அந்த அலுவலகத்தில் வேலை செய்கிறாயா? என் ஃப்ரெண்ட்ஸும் அங்கு தான் வேலை பார்க்கிறார்கள் ஞாபகம் இருக்கட்டும் "
"அப்பத்தா... உங்களால் அவங்க கெட்டுப் போறாங்களா? இல்லை அவர்களால் நீங்கள் கெட்டு போறீங்களா? ஒன்றும் புரியவில்லை"
"நோ...." என்று கத்தினார் அன்னம்மாள்.
"ஏன்?" என்று புரியாமல் முழித்த ஜேபியிடம், " மீ அப்பத்தா நோ. டாடிமா... " என்றார் அன்னம்மாள்.
"மிடியல... நான் கிளம்புறேன் " என்று நகர்ந்து விட்டாள் ஜேபி.
அலுவலகத்தின் குடும்ப கொண்டாட்ட நாளும் வந்தது. வசீகரன் தன் வீட்டில் தன் அன்னையின் பின்னால் சுற்றிக் கொண்டிருந்தான்.
"அம்மா... ப்ளீஸ் மா..."
" முடியாது. முடியாது. என் மருமகளிடம் நான் கேள்வி கேட்பேன் " என்றார் வசுமதி.
" அம்மா இன்று என் அலுவலகத்திற்கு அவளுடைய குடும்பத்தினரும் வருவார்கள். அவர்களிடம் நீங்கள் எப்படியாவது பேசி திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும். நீங்கள் உங்கள் மருமகளிடம் கேள்வி கேட்டால், உங்கள் கேள்வியிலேயே அனைத்தையும் கிரகித்துக் கொள்வாள் அந்த புத்திசாலி"
"ஓ... மருமகள் புத்திசாலி என்றால் மாமியாருக்கு பெருமை தானே"
"மிஸஸ் தினகரன் நீங்கள் விளையாடுவதற்கு என் வாழ்க்கை தான் கிடைத்ததா? நோ"
" சரிடா. நான் எதுவும் கேட்கவில்லை. பெண்ணைப் பற்றிய விவரங்கள் நீ இன்னும் சொல்லவில்லையே"
வசீகரனின் முகத்தில் அரும்பாய் வெட்கப் புன்னகை மலர்ந்தது.
"அம்மா... அவள் பெயர் ஜேபி. ஜெயலட்சுமி பெருமாள்"
" வீட்டிற்கு வரும் மகாலட்சுமியின் பெயர் ஜெயலட்சுமியா? பலே!"
" ஜேபியின் அப்பா பெயர் பெருமாள். சொந்தமாக சோப்பு ஃபேக்டரி வைத்திருக்கிறார். சிறுவயதிலேயே அவளுடைய அன்னை தவறி விட்டார். அவர்களுடன் அவள் பாட்டி ஒருவர் இருக்கிறார். இதுதான் அவளுடைய குடும்பம்.
இதைத் தாண்டி அவளுக்கு மூன்று நண்பர்கள் இருக்கிறார்கள். மது, கிருஷ் மற்றும் யாதவ். பள்ளிப் பருவத்திலிருந்தே அவளுக்கு பாதுகாப்பு தரும் படைத் தளபதிகள். என் அலுவலகத்தில் தான் அவர்களும் வேலை பார்க்கிறார்கள்" என்று ஜேபியை பற்றி கூறி முடித்தான் வசீகரன்.
"சரிடா... உன்னை கேலி செய்து பார்த்தேன். மாரியம்மன் கோவிலுக்கு கூழ் ஊத்துவது போல் மஞ்சள் சேலை கட்டிக்கொண்டா வரவேண்டும்?" என்று வசீகரனை பாவம் போல் பார்த்தார் வசுமதி.
" சூரியனின் கதிர்கள் போல், மஞ்சள் நிறம் மகிழ்ச்சியை வாரி இறைக்க கூடிய நிறம். நட்பை குறிக்கும் நிறமும் கூட. என் காதலுக்கு முன் அவளின் நட்பு வேண்டும் எனக்கு. அதற்காகத்தான் தீம் கலரை மஞ்சளாக தேர்வு செய்தேன்.
திருமண விஷயம் பேசும் போது மங்களகரமாகவும் இருக்கட்டுமே. அம்மா போதும் இதற்கு மேல் உங்கள் பையன் தாங்க மாட்டான் " என்று வசுமதியின் காலில் சரணடைந்தான் வசீகரன்.
"சரிடா! உன் அப்பாவை கிளப்பிக் கொண்டு வருகிறேன். நீ சீக்கிரம் தயாராகு" என்றார் வசுமதி.
காலையில் மங்கி பிரதர்ஸ் ஜேபியின் வீட்டிற்கு வந்து அன்னம்மாள் பாட்டியை மட்டும் அழைத்துக் கொண்டு சென்றனர்.
" ஜேபி நீ அலுவலகத்திற்கு நேரடியாக வந்திடு. ரைஸா பேபியை நாங்கள் அழைத்து வருகிறோம் " என்று கோரசாக சொல்லிவிட்டு அவளின் பதிலை எதிர்பாராமல் கிளம்பி விட்டனர்.
இளம் மஞ்சள் சல்வாரில் எந்தவித அலட்டலுமின்றி இயல்பான தோற்றத்துடன் அலுவலகத்திற்கு கிளம்பினாள் ஜேபி.
வெள்ளை நிற பேண்ட் மற்றும் இளம் மஞ்சள் நிற வெஸ்ட்டுமாக அட்டகாசமாக தயாராகி தன் பெற்றோருடன் அலுவலகத்திற்கு கிளம்பினான் வசீகரன் மஞ்சள் நிற பூங்கொத்துடன்.
வெள்ளை நிறத்தில் சிறு சிறு மஞ்சள் நிற பூக்கள் போட்ட காட்டன் புடவையை நேர்த்தியாகக் கட்டி, திருத்தமாக போடப்பட்ட அழகிய கொண்டையுடன் கம்பீரமாக அழகு நிலையத்திலிருந்து வெளியேறி வந்தார் அன்னம்மாள்.
நால்வரும் சேர்ந்து செல்பி எடுத்துக்கொண்டு அந்த இடத்தையே ரணகளப் படுத்திக் கொண்டிருந்தனர்.
அலுவலகத்தில் குடும்ப விழா களை கட்டியது. தங்களின் மன அழுத்தங்கள், சோர்வுகள் எல்லாவற்றையும் மறந்து தங்களுடன் வேலை பார்க்கும் சக குடும்ப உறுப்பினர்களுடன் சிரித்துப் பேசி மகிழ்ந்தனர் ஒவ்வொருவரும்.
நடனங்கள் மூலமும், பாடல்கள் மூலமும் தங்களது திறமைகளையும் வெளிப்படுத்தினர். அந்த விழாவின் நாயகன் வசீகரன் மேடை ஏறினான்.
மலர்ந்த சூரியகாந்தி போல் நாற்காலியில் அமர்ந்து தன்னை சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகளை ரசித்து கொண்டிருக்கும் ஜேபியை கண்டதும் அவள் அருகே அமர்ந்து பேசும் ஆவல் மிகுந்தது வசீகரனுக்கு. ஏக்க பெருமூச்சுடன் தன் கையில் இருந்த அலைபேசியில் இருந்து குறுஞ்செய்தியை அனுப்பி வைத்தான் குறும்புடன்.
அலைபேசியில் வந்த குறுஞ்செய்தியை பார்த்ததும், சுற்றிலும் தன் கண் பார்வையை அலைய விட்டவள் மேடையில் நின்ற வசீகரனை கவனிக்கத் தவறினாள்.
அனைவரும் அவரவர் வேலையில் கவனமாய் இருக்க மீண்டும் அலைபேசியில் வந்த குறுஞ்செய்தியை வாசிக்க ஆரம்பித்தாள்.
" உன்னை பார்க்க வேண்டும் ஒரு நொடி.
உன்னிடம் பேச வேண்டும்
ஒரு நொடி.
என் ஆசை சொல்ல வேண்டும்
ஒரு நொடி.
நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் ஒரு நொடி.
நம்மைக் கடந்த இந்த நொடிகள் எல்லாம் வடிந்த பின்
ஆயுள் முழுதும் காதலிப்போமா கண்மணி?"
-ஜேகே
குறுஞ்செய்தியை வாசித்து முடித்ததும் விரல்களை சொடுக்கிட்டு தன்னைக் கடக்கும் நொடிகளை எண்ணினாள் சிரித்துக் கொண்டே ஜேபி.
அவளின் செயலில் அலைபாய்ந்த தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டு ஒலிபெருக்கியை கையில் பிடித்து, " பிரண்ட்ஸ்! இந்தக் குடும்ப விழாவில் எனது பெற்றோர்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன் " என்று கூறிவிட்டு தன் பெற்றோர்களை அறிமுகப்படுத்தினான்.
" இந்த நொடி உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்!" என்று வசீகரன் கூறியதும் சிலர் ஆர்ப்பரித்து மகிழ்ந்தனர். சிலர் தங்கள் குழந்தைகளுக்கு முத்தமிட்டனர். சிலர் தங்கள் இணையை அணைத்து சிரித்தனர்.
மங்கி பிரதர்ஸோ, "ஒன், டூ, த்ரீ " என்று கத்திக்கொண்டே அன்னம்மாள் பாட்டியின் கன்னத்தில் முத்தமிட்டனர் மூவரும் ஒரு சேர.
அவர்களின் பேரன்பில் அன்னம்மாள் பாட்டியின் கண்களில் கண்ணீர் கசிந்தது.
அவர்களின் அன்பை பெருமை பொங்க பார்த்துக் கொண்டிருந்த ஜேபியின் அருகில் அமர்ந்தனர் தினகரனும், வசுமதியும்.
"ஹலோ!" என்று கூறி தங்களை ஜேபியிடம் அறிமுகப்படுத்திக் கொண்டனர் இருவரும்.
"வணக்கம்" என்று அவர்களுக்கு கை கூப்பி மரியாதை செய்தாள் ஜேபி.
அவர்களுடைய பேச்சு மேலோட்டமாக இருவரின் குடும்பம், படிப்பு பற்றியே இருந்தது.
மரியாதை நிமித்தம் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பணிவாக பதில் சொன்னாள் ஜேபி. போலியான நாணம், குழைவு எதுவும் இன்றி கண்களை நேராகப் பார்த்து பேசும் ஜேபியின் ஆளுமையை பிரமிப்பாய் பார்த்தனர் இருவரும். மகனுடைய தேர்வில் இருவரும் திருப்தி அடைந்தனர்.
தன் பேத்தியிடம் பேசும் இருவரின் அருகில் வந்தார் அன்னம்மாள்.
" இவங்க என்னுடைய அப்... " என்று ஆரம்பித்த ஜேபி அன்னம்மாளின் முறைப்பில், சிரித்துக் கொண்டே இவர்கள் என்னுடைய அப்பா வழிப்பாட்டி அன்னம்மாள்" என்றாள்.
பேத்தி மேல் எழுந்த சிறு ஊடலில், அன்னம்மாள் மேஜையை சிறிது அவள்புறமாய் தள்ளிவிட, ஜேபியின் கைப்பை கீழே விழுந்தது.
அதனைக் குனிந்து அவள் எடுத்து நிமிர்வதற்குள், மேஜையின் ஓரம் அவள் தலையை இடிக்கும் முன், வசீகரனின் கரம் வந்து மேஜையின் கூர் முனையை மறைத்து தாங்கிக் கொண்டது.
அனைவரும் அவனை ஆச்சரியமாய் பார்க்க, ஆச்சரியமாய் பார்க்க வேண்டிய ஜேபியோ மிகவும் சாதாரணமாக பார்த்தாள்.
"மாம்... இவர்கள் அனைவரும் நமது கம்பெனிக்கு வந்த பிரஷ்ஷர்ஸ். அவர்களை நமது கம்பெனியின் சார்பாக நீங்கள் வரவேற்க வேண்டும்" என்றவன் கண்ணசைவில் மஞ்சள் நிற பூங்கொத்து வந்து கொடுக்கப்பட, வசீகரனோடு சேர்ந்து வசுமதி அதனை ஆனந்தமாய் அவர்களுக்கு பரிசளித்தார்.
மஞ்சள் நிற பூங்கொத்தை மென்மையாக வருடி, "தேங்க்ஸ்" என்றாள் ஜேபி.
" இன்று முதல் நாம் அனைவரும் நட்பாய் இருப்போமா? " என்று சங்கி மங்கி குழுவினரோடு கைகுலுக்கினான் வசீகரன்.
' ஆயுள் முழுவதும் காதலிப்போமா?' என்ற வரிகள் நினைவிற்கு வர தன் கையில் அணிந்த கடிகாரத்தின் நொடி முள்ளை வருடினாள் ஜேபி.
கண்ணிற்கு புலப்படாத காற்று, இதம் தருவது போல், உருவம் இல்லாதவன் உரைத்த காதல் ஏனோ அவள் உயிருக்குள் சென்று இனிக்க ஆரம்பித்தது. ஏனோ அவளின் உலகம் தனியாக சூழல ஆரம்பித்தது.
அன்னம்மாள் பாட்டியுடன் அனைவரும் கலந்துரையாட அந்த இடமே மிகவும் கலகலப்பாக மாறிப்போனது.
" எங்கள் வீட்டிற்கு நீங்கள் அனைவரும் வரவேண்டும்" என்று அன்னம்மாள் பாட்டி அன்புடன் வரவேற்க, தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டு, "வருகிறோம்" என்று உரைத்தார் தினகரன்.
அவர்கள் அந்தப்பக்கம் சென்றதும் தன் பாட்டியிடம் வந்த ஜேபி, " அவர்கள் எதற்கு நம் வீட்டிற்கு வர வேண்டும்?" என்றாள் சற்றே கோபமாக.
"என் மகன் வீட்டுக்கு நான் கூப்பிடுகிறேன். உனக்கு என்ன? சரி அதை விடு. ஒரு பெரிய மனுஷி இத்தனை நேர்த்தியாக அலங்காரம் செய்து கொண்டு வந்திருக்கிறேனே ஒரு வார்த்தை என்னை பாராட்ட வேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையே?. உன்னை விட நான் அழகு என்ற பொறாமை உனக்கு"
"வாட்?"
"ம். நான் எப்படி இருக்கிறேன் என்று இங்கிலீஷில் நாலு வார்த்தை சொல்லு"
" ஐ ஹேட் யூ பாட்டி!. உங்களையும் சேர்த்து தான் மங்கி பிரதர்ஸ் " என்று படபடத்து விட்டு தனிமை தேடி பால்கனி பக்கம் சென்றாள்.
அவள் மனதின் கட்டளையையும் மீறி விரல்கள் அலைபேசியில் இருந்த குறுஞ்செய்திகளை திறக்க அவளின் கண்களோ மௌனமாக வாசித்துக் கொண்டே இருந்தது.
' வார்த்தைகள் பிடிக்கிறதா? வார்த்தைகள் அனுப்பிய உருவம் இல்லா அருவத்தை பிடிக்கிறதா? பிடித்தும் பிடிக்காதது போல் மனது நடிக்கிறதா? சரியா? தவறா?' அலை கடல் போல் அவள் மனம் அலைபாய உள்ளத்தின் தவிப்பை அடக்க கண்கள் மூடி சுவற்றில் சாய்ந்தாள்.
மூடிய இமைக்குள் மஞ்சள் நிற பூங்கொத்து சிரிக்க, 'என் வானம்! என் சிறகு! எல்லை மீறாத வரை எல்லாம் அழகுதான்' என்ற உள்ளத்தில் தெளிவில் கண்கள் திறந்து சிரித்தபடி பார்ட்டி ஹாலுக்குள் வந்தவள் தன் பாட்டியையும், நண்பர்களையும் காணாமல் தேடினாள்.
அலைபேசியில் மதுவுக்கு அழைப்பு எடுக்க, அனைவரும் அலுவலக கேட்டின் அருகே காத்திருப்பதாகக் கூறினான்.
அலுவலகத்திற்கு வெளியில் வந்தவள், "ஏன் வரவேற்பு அறையில் அமர்ந்திருக்கலாமே" என்று கேட்டாள்.
" அடிப்பாவி நீ தானே எங்க ரைஸா பேபி கிட்ட கேட்டில் காத்திருக்கச் சொன்னாய்? பேபி நீங்கள் எங்களிடம் அப்படித்தானே சொன்னீர்கள்?"
" அப்பத்தா நான் எப்பொழுது உங்களை கேட் அருகே காத்திருக்கச் சொன்னேன்?"
ரைஸா பேபி தன் சுண்டு விரலில் கொசுவத்திச் சுருளை சுற்றிக்கொண்டு, " கொஞ்சம் நீ சொன்னதை யோசித்துப் பார்! ஐ ஹேட் யூ! என்று சொன்னாய் தானே? நீ இங்கிலீஷில் என்னை கேட் அருகே காத்திருக்கச் சொன்னதை நான் சரியாகப் புரிந்து கொண்டு என் நண்பர்களிடம் சொன்னேன். என்னை ஏமாற்ற முடியாது பாப்பா " என்று அன்னம்மாள் பாட்டி கூற சங்கி மங்கி டீம் தங்கள் தலைகளில் கையை வைத்துக் கொண்டு நின்றது.
சிறகுகள் நீளும்...