சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே...
சிறகு - 4
கோபத்துடன் நறுக்கென்று ஜேபியின் தலையில் ஒரு கொட்டு வைத்தான் கிருஷ்.
"ஆ..." என்று தலையை தடவிக் கொண்டே அலறியவளை, "பெருமாள் பெத்த எருமாட்டியே...." என்ற கிருஷை முறைத்தாள் ஜேபி.
தன் தொண்டையை செருமிக் கொண்டே, "பெருமாள் பெத்த பெருமாட்டியே" என்று வழிந்தான் கிருஷ்.
"அது!" என்று தலையை சிலுப்பி மிதப்பாய் பார்த்தாள் ஜேபி.
" பொம்பள பிள்ளை என்றால் அன்பாய் அடக்கமாய் இருக்கும் என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன். டேய் அப்படித்தானே டா... " என்று தன் நண்பர்களையும் துணைக்கழைத்தான்.
அவர்களோ இவர்கள் இருவரையும் பார்த்துவிட்டு எல்லா திசைகளிலும் தலையை ஆட்டி சமாளித்தனர்.
" நீ என்னடானா எங்களை அடக்கம் பண்ற மாதிரி நடந்துக்கிறியே... உன்னைப் பார்த்து பயப்பட நீ என்ன காஞ்சனா பேயா? இல்ல அரண்மனை பேயா?
இனிமேல் பெண்களின் இலக்கணத்தை பின்பற்றி, எங்கள் மூவருக்கும் மரியாதை கொடுத்து பழகு" என்றான் கிருஷ் தோரணையாக
ஆத்திரத்தில் கண்கள் சிவக்க கோபம் கொண்டவள், " பெண் என்பவள் ஆணுக்கு நிகர் அல்ல. ஆணுக்கும் மேலே பல படி. ஆனால் அந்த பெண்களை இந்த சமுதாயம் எப்படி மாற்றி இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் காட்டவா? " என்றாள்.
" காட்டும்... காட்டித் தொலையும்... என்றனர் ஏளனமாய் மங்கி பிரதர்ஸ்.
தன் கண்களை உருட்டி உருட்டி அக்கம் பக்கம் பார்த்தவள், கோயில் பிரகாரத்தை சுற்றி வந்து கொண்டிருந்த ஒரு மாமியை அருகில் அழைத்தாள்.
"என்ன பாப்பா?" என்றார் அந்த மாமி சாதாரணமாக.
" மாமி உங்ககிட்ட ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கலாமா? ரொம்ப சின்ன கேள்வி" என்றாள் குழந்தை முகத்தில் கண்களைச் சுருக்கி.
தன்னோடு வந்திருந்த தன் கணவனை கேள்வியாக பார்த்தார் மாமி. "ம்..." என்ற உறுமல் சத்தம் கணவனிடம் இருந்து வந்ததும், "கேளுடா குழந்தை" என்றார்.
" பெண் என்பவள் தனித்து வாழ்பவளா? இல்லை சார்ந்து வாழ்பவளா? " என்றாள் ஜேபி.
சங்கடமாக தன் கணவனை மாமி பார்க்க, அவரும் மிகவும் இளக்காரமாக மாமியைப் பார்த்தார்.
தன் குரலை தழைத்துக் கொண்டு, "பொம்மனாட்டி என்றாலே ஆண்களுக்கு அடிபணிந்து தானே இருக்க முடியும். தகப்பனுக்கு, கணவனுக்கு, மகனுக்கு என்று வழி வழியாக அதுதானே வழக்கம். இதில் பெண் என்பவள் தனித்து இயங்குகிறாள் என்றால் எப்படி? பிறந்ததிலிருந்து புதையும் வரை அவள் யாரையோ சார்ந்து தானே இருக்க வேண்டும்" என்றார் மாமி நாட்டாமை போல் தீர்ப்பு வழங்கி.
மாமியின் கணவரும் சரியாகச் சொன்னாய் என்பது போல் தன் பாராட்டை கண்களால் தெரிவித்தார்.
மங்கி பிரதர்ஸ் அவளைப் பார்த்து, "இது உனக்குத் தேவையா? " என்பது போல் பார்த்தனர்.
"கதை இன்னும் முடியவில்லை மங்கி பிரதர்ஸ். இனிமேல்தான் களை கட்டப் போகிறது பாருங்கள்!" என்ற ஜேபி மாமியைப் பார்த்து, "ஏன் மாமி காலையில் எழுந்ததும் அனைவரும் உண்ணும் உணவிற்காக யார் யாரை சார்ந்து இருக்கிறார்கள்? மாமா ஆபீஸ் கிளம்பும் வரை அவருடைய தேவைகளை எல்லாம் செய்து கொடுப்பதற்கு யார் யாரை சார்ந்து இருக்கிறார்கள்? வீட்டு நிர்வாகம் யாரைச் சார்ந்து இருக்கிறது?
தாய், சமையல்காரி, வேலைக்காரி, வீட்டுக்காரி, பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் என்று பல பரிமாணங்களை எடுக்கும் பெண்ணா சார்ந்து நிற்கிறாள்?
பொருளாதாரம் என்ற ஒரு கேள்வியில் இன்று பெண்களும் முன்னேறிக் கொண்டு தானே இருக்கிறார்கள்.
பொறுப்புணர்ந்து செயல்படும் பெண்ணா அடுத்தவரை சார்ந்து இருக்கிறாள்?
சிறு வயதில் இருந்தே ஆண் குழந்தைகளை விட, பெண் குழந்தைகள் தங்கள் தேவைகளை தாங்களே கவனித்துக் கொள்கிறார்கள்.
இத்தனை வருட வாழ்க்கையில் பெண்ணான உங்களையே இப்படி சொல்ல வைத்து விட்டதே இந்த சமுதாயம்!" என்று போலி ஆச்சரியத்துடன் முடித்தாள் ஜேபி.
முதலில் சாதாரணமாக தலை குனிந்து கொண்டிருந்த மாமி, ஜேபியின் பேச்சில் சட்டென்று தலை நிமிர்ந்து விழி விரித்து நின்றார்.
இனி நின்றிருந்தால் தனக்கு அதிக ஆபத்து என்று உணர்ந்த மாமியின் கணவரும், " சரியான வாயாடி! நீ வாடி" என்று முணுமுணுத்து விட்டு மாமியின் கைகளைப் பற்றி தரதரவென இழுத்துக் கொண்டு கோயிலை விட்டு விரைந்து வெளியேறினார்.
பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்ற மாமி, ஜேபிக்கு வெற்றிக் குறிகாட்டி ஆசீர்வாதம் செய்தார்.
" அடிப்பாவி கொஞ்ச நேரத்துல மாமியவே இப்படி மாத்திட்டியே... அந்த மாமா பயந்து அலறி அடித்துக் கொண்டு ஓடுகிறார். பலே கில்லாடி தான் நீ" என்றனர் மங்கி பிரதர்ஸ்.
இவர்களின் சம்பாஷனைகளை சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்த இரு செவிகளை சுமந்திருந்த ஒருவனின் முகமும் மலர்ந்தது அவளின் கூர்மையான பேச்சில்.
" பெண்களுடைய பலத்தை அவர்களை அறிய விடாமல் செய்து, அவர்களின் பலவீனத்தை மட்டுமே கோடிட்டு காட்டுவது மிகவும் வருந்தக்கூடிய செயல் தானே" என்றாள் ஜேபி வருத்தமான குரலில்.
" புதிய புவியியல் படைத்த ஜே பி வாழ்க!" என்றான் யாதவ் அவளின் மனநிலையை மாற்றும் பொருட்டு.
" எதே... புவியியலா?" என்றான் மது.
" அட ஆமாப்பா எவ்வளவு காலத்து தான் நாமளும் வரலாறு பற்றியே பேசுறது? மாறுதலா இருக்கட்டும்" என்று இளித்து வைத்தான் யாதவ்.
" அச்சச்சோ மங்கி பிரதர்ஸ் உங்க ரைஸா! இன்னைக்கு கண்டிப்பா விளக்கு போடணும்னு சொன்னாங்க. விளக்கு மட்டும் எடுத்துட்டு வந்தேன். எண்ணெய் வாங்கிட்டு வரல. வாங்கடா போய் வாங்கிட்டு வரலாம்" என்றவளைத் தொடர்ந்து அனைவரும் கோவிலை ஒட்டி இருந்த கடைக்குச் சென்றனர்.
அனைவரையும் முந்திக்கொண்டு கிருஷ், "எண்ணெய் இருக்கிறதா?" என்று கேட்டான்.
கடைக்காரரும் ஒரு பெரிய எண்ணெய் பாட்டிலை எடுத்து முன்னே வைக்க, " லூசுக்கு தந்தீங்கன்னா எவ்வளவு? " என்றான்.
கடைக்காரர் அவனை ஒரு மார்க்கமாக பார்த்துவிட்டு, " நீங்க தெளிவா இருந்தாலும், லூசா இருந்தாலும் ஒரே விலை தான்" என்றார் வெடுக்கென்று.
அதிர்ந்து நின்ற கிருஷ்ணைப் பார்த்து, அவன் நண்பர்கள் கைத்தட்டி சிரித்தனர்.
கோபம் கொண்ட கிருஷ்ணனும், "விக்காத பைய எல்லாம் கடையில வச்சிருக்கீங்க போல? " என்றான் அவரை மேலிருந்து கீழாக பார்த்தபடி.
" எந்த பை? " என்றார் கடைக்காரர் எரிச்சலாக.
" உங்க தொப்பை தானுங்க அண்ணாச்சி" என்று கூறிவிட்டு, அவர் திட்டுவதற்குள் நண்பர்களை இழுத்துக் கொண்டு ஓடி வந்து மூச்சு வாங்கினான்.
சங்கி மங்கி டீமின் குறும்புகளை ரசித்துக் கொண்டே வந்த வசீகரனும் செருப்பை அணிந்து விட்டு சிரிப்புடனே நகர்ந்து சென்றான்.
மறுநாள் பரீட்சை என சங்கி மங்கி டீம் மும்மரமாக படிப்பில் இறங்கியது.
காலையில் அனைவரும் தேர்வறைக்குள் நுழைவதற்கு முன், முக்கிய வினாக்களை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டனர்.
யாதவ் அனைத்து வினாக்களுக்கும், முகத்திற்கு நேரே உள்ளங்கையை சுருக்கி விரித்து பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
அவனின் செயலில் சந்தேகம் கொண்ட நண்பர்கள் அவன் கையைப் பிடித்து இழுத்து உள்ளங்கையை விரித்துப் பார்த்தனர்.
முக்கிய விடைகளை நுனி விரலில் எழுதி வைத்திருந்தவனைப் பார்த்து, " என்னடா நடக்குது இங்க?" என்று யாதவை அரட்டினர்.
"அது ஒன்னும் இல்லடா. சார் நடத்துனது எல்லாத்தையும் பிங்கர் டிப்ல வைக்க சொன்னாரு என்னால முடிஞ்சத வச்சிருக்கேன். ஹி... ஹி..." என்றவனை தரதரவனை இழுத்துச் சென்று தண்ணீர் குழாயில் கைகளை நன்றாக கழுவி விட்டனர்.
" வடை போச்சே..." என்று தலையில் கைகளை வைத்து அமர்ந்தான் யாதவ்.
செய்முறை பயிற்சி அறையில் அனைவரும் மும்முறமாக எழுதிக் கொண்டிருக்க, "ஜிங்க் டைஆக்சைட்டை என்ன செய்ய வேண்டும்? " என்று மெதுவான குரலில் யாதவ் ஜேபியிடம் கேட்க, "உருக்கி உன் தலையில் ஊத்திக்கோ... " என்றாள் கோபமாக.
"ஜேபி... என் கேர்ள் ஃப்ரெண்ட் ரைஸாவை வைத்து உன்னை ஒரு வழி ஆக்குகிறேன்" என்று சபதம் எடுத்தான்.
செய்முறை தேர்வு முடிந்ததும், ஜேபியோடு மங்கி பிரதர்ஸ் அவள் வீட்டிற்கு சென்றனர்.
கையில் பட்டன் ஃபோனை வைத்துக் கொண்டு, அன்னம்மாள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே இருந்தார்.
" மை டியர் ரைஸா பேபி, எனி பிராப்ளம்? " என்று அன்னம்மாளின் தோளில் கையை போட்டுக் கொண்டு கேட்டான் கிருஷ்.
" அது ஒன்னும் இல்லடா. நான் அப்பொழுது இருந்து இந்த நம்பரை போட்டுக் கொண்டே இருக்கிறேன். செத்த நம்பர். செத்த நம்பர் என்று சொல்லுகிறது. போன் நம்பர் கூட செத்துப் போகுமா என்ன?" என்று முகவாயில் கையை வைத்து ஆச்சரியமாக கேட்டார் அன்னம்மாள்.
"என்னது செத்த நம்பரா?" என்ற மது, " குடுங்க டார்லிங் பாக்கலாம் " என்று அந்த நம்பரை மீண்டும் டயல் செய்தான்.
" ப்ளீஸ் செக் த நம்பர் யூ ஹாவ் டையல்டு... " என்று சொன்னதும் அனைவரும் அடக்க மாட்டாமல் குபீரென்று சிரித்து விட்டனர்.
"ரைஸா பேபி... உங்களைப் போல ஒருத்தர் சான்சே இல்ல" என்று கண்களில் நீர் வழியச் சிரித்தனர் மங்கி பிரதர்ஸ்.
" என்னைப்போல எங்க வீட்ல யாரும் இல்லை, எங்க ஐயன், ஆத்தாளுக்கு நான் ஒரே பொம்பள புள்ள தெரியுமா? " என்றார் பெருமையுடன் அன்னம்மாள்.
பின் அனைவருக்கும் சிற்றுண்டி ஏற்பாடு செய்வதற்காக சமையலறைக்குள் நுழைந்தார்.
நண்பர்கள் அனைவரும் அமர்ந்து, அடுத்த வாரத்தில் நடைபெற இருக்கும் பள்ளி ஆண்டு விழாவில் நாட்டிய நாடகம் ஒன்றை அரங்கேற்றுவதற்காக கலந்தாலோசனை செய்தனர்.
திரௌபதி துகிலுரியப்படும் காட்சியை நாட்டிய நாடகமாக அரங்கேற்றலாம் என்று அனைவரும் ஒன்று கூடி முடிவு செய்தனர்.
ஜே பி காட்சியை நாட்டியத்தின் மூலம் விளக்குவதாக ஒத்துக்கொண்டாள். மங்கி பிரதர்ஸ் மூவரும் திரௌபதி, துரியோதனன் தருமன் என பாத்திரப் படைப்புகளை ஏற்றுக் கொண்டனர்.
அந்த வாரம் முழுவதும் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டனர்.
ஆண்டு விழா மேடையில் அவர்களுக்கான நாட்டிய நாடகம் அரங்கேறப் போவதாக அறிவிப்பு வந்தது.
காட்சியை வார்த்தைகளிலும், நாட்டியத்திலும், இசையிலும் சேர்த்து அழகாக வெளிப்படுத்தினாள் ஜேபி.
தர்மனும், துரியோதனமாக யாதவ் மற்றும் மதுசூதனன் சிறப்பாக தங்கள் நடிப்பை வெளிப்படுத்தினர்.
திரௌபதி வேடமிட்ட கிருஷ், மேடையில் தோன்ற அவனது ஆடையைப் பற்றி இழுப்பது போல் மதுசூதனன் முயற்சி செய்ய, அவன் தந்த அதீத வேகத்தில் கிருஷ் கிறுகிறுவென சுற்றி, அவன் உடம்பில் சுற்றி இருந்த சேலை முழுவதும் மது கையோடு வந்துவிட்டது.
பனியன் மற்றும் டவுசருடன் மேடையில் நின்ற கிருஷ்ணனை அனைவரும் பார்த்து கைத்தட்டி கேலி செய்து சிரிக்க, தன் நண்பனின் நிலையை உணர்ந்து கொண்ட ஜேபி நாட்டியமாடி சுற்றிக்கொண்டே, "ஹே கிருஷ்ணா... உன் பக்தை திரௌபதியை நீ ஆணாகவே மாற்றி விட்டாயா! உன் லீலையே லீலை..." என்று சமாளித்து அதனை நவீன நாட்டிய நாடகமாக்கிவிட்டாள்.
நண்பர்களின் விடாமுயற்சியையும் புத்திசாதுரியத்தையும் அனைவரும் மனதாரப் பாராட்டினர்.
பன்னிரெண்டாம் வகுப்பில் அடி எடுத்து வைத்தனர் நண்பர்கள். அவர்களின் வகுப்பிற்கு புதியதாக ஸ்டெல்லா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டார். நளினமாக உடையணிந்து, விரித்த கூந்தலுடன் வரும் ஸ்டெல்லாவிற்கு ஒரு ரசிக்கப்பட்டாளமே வகுப்பறையில் உருவாகியது.
ஸ்டெல்லாவின் அலட்டல் தன்மை நண்பர்களுக்கு ஒரு வித ஒவ்வாமையை தந்தது. வகுப்பறையே அந்த ஆசிரியரை தலையில் வைத்து கொண்டாடினாலும், சங்கி மங்கி டீமிற்கு ஒப்பவில்லை.
வாரத்தின் முதல் நாள், முதல் வகுப்பு ஸ்டெல்லா மிஸ் வகுப்பறைக்குள் நுழைந்ததும் அவரது மேஜை மீது ஒரு அழகிய பரிசுப் பொருள் இருந்தது.
" ஓ மை ஸ்டூடண்ட்ஸ். எனக்கு ஆச்சரியம் தர பரிசு பொருளை வாங்கி வைத்திருக்கிறீர்களா?" என்று அந்தப் பரிசு பொருளை பார்த்துக்கொண்டே பேசிய ஸ்டெல்லா மிஸ்ஸை மங்கி பிரதர்ஸ் சிரிப்பை அடக்கிக் கொண்டு உதட்டோரம் துடித்தபடி பார்த்தது.
" இதை வீட்டில் சென்று பிரித்துப் பார்க்கும் சுவாரசியத்தை விட, இங்கே இப்பொழுதே பிரிப்பது அனைவருக்கும் சந்தோஷத்தை தரும் " என்று கூறிவிட்டு நளினமாக பரிசு பொருளின் ரிப்பனை பிரித்தார்.
சரிகைத்தாளை கழட்டி விட்டு, ஒய்யாரமாக அனைவரையும் பார்த்துவிட்டு, பரிசுப் பொருளை பிரித்துப் பார்த்தவளின் முகம் அஷ்ட கோணலாகியது.
வகுப்பறையே, "ஆ" என்று பார்த்திருக்க, அந்தப் பரிசுப் பெட்டிக்குள், தேங்காய் எண்ணெய் பாட்டிலும் ஒரு சீப்பும் இருந்தது. ஸ்டெல்லாவின் முகம் அவமானத்தில் சிறுத்துப் போனது.
இவை அனைத்துக்கும் சூத்திரதாரியான கிருஷ் எழுந்து நின்று, " என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? ஒழுங்கா தலை சீவிட்டு வாங்கன்னு சொன்னா வரப் போறாங்க. அதுக்காக இப்படியா செய்வீங்க? ஒரு நியாயம் தர்மம் வேண்டாம் " என்று சிரிக்காமல் பேசிவிட்டு அமர்ந்தான்.
" என்னதான் ஆத்துல வெள்ளம் வந்தாலும் அதை வைத்து சர்க்கரை பொங்கலா செய்ய முடியும்? எனக்கு உங்க நிலைமை நல்லாவே புரியுது மேம்" என்று சோகமாய் பேசிய யாதவைப் பார்த்து, இமைகள் மூடித் திறந்து கோபத்தை அடக்கிக் கொண்டார்.
மாணவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரியர் தன் நடை, உடை, அலங்காரம் அனைத்திலும் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டார் ஸ்டெல்லா. சுதந்திரம் வேறு சுயமரியாதை வேறு என்பதை வேடிக்கையாய் புரிய வைத்தனர் மங்கி பிரதர்ஸ்.
சிறகுகள் நீளும்...

Last edited: