சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே...
சிறகு - 7
வெற்றிகரமாக பள்ளிப் படிப்பை முடித்து, அதிக மதிப்பெண்களுடன் ஒரே பொறியியல் கல்லூரியில், ஒரே வகுப்பில் அடி எடுத்து வைத்தது சங்கி மங்கி டீம்.
கல்லூரியில் ராகிங் செய்வதை குற்றமாக அரசு அறிவித்திருந்தாலும், மறைமுகமாக இந்த குற்றங்கள், கேலி, கிண்டல், நகைச்சுவை, வழமை என்ற பெயரில் இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.
மதிய உணவு இடைவேளையில் ஜேபி மற்றும் மங்கி பிரதர்ஸ் கல்லூரியை சுற்றிப் பார்ப்பதற்காக கிளம்பினர். நடக்கும்போது , கிருஷ்ணாவிற்கு தாகம் எடுக்கவே, வாட்டர் பாட்டிலை எடுத்துப் பார்த்தவன், அதில் தண்ணீர் இல்லாமல் இருப்பதைக் கண்டு குடிதண்ணீர் குழாயில் தண்ணீர் நிரப்பச் சென்றான்.
தண்ணீரை நிரப்பியவனிடமிருந்து வாட்டர் பாட்டிலை பிடுங்கிக் கொண்ட யாதவ், தண்ணீர் பாட்டிலை அவனுக்கு கொடுக்காமல் அதிலிருந்த நீரை சிறிது சிறிதாக அவன் மீது தெளித்தான்.
யாதவிடமிருந்து வாட்டர் பாட்டிலை பெற்றுக் கொண்ட மது, யாதவை போலவே தண்ணீரை கிருஷ்ணாவின் மீது தெளித்தான்.
மதுவிடம் இருந்து வாட்டர் பாட்டிலை பறித்த ஜேபி, " தாகத்தில் இருப்பவனிடம் என்ன விளையாட்டு?" என்றாள்.
" அப்படிக் கேளு என் தங்கம்!" என்ற கிருஷ் வாயை மூடுவதற்குள் மொத்த பாட்டிலில் இருந்த நீரையும் கிருஷ்ணாவின் மீது கவிழ்த்தாள்.
" சதிகாரி... அடங்காப்பிடாரி... உனக்கு அவங்க எவ்வளவோ மேல்" என்று கூறிக் கொண்டே தன் முகத்தில் வழிந்த நீரைத் துடைத்தான் கிருஷ்.
நண்பர்களின் சேட்டைகளை கவனித்துக் கொண்டிருந்த சீனியர் மாணவர்கள் கூட்டத்தில் இருந்த ஒருவன் , "ஹலோ... மேடம்... அவன மட்டும் தான் குளிக்க வைப்பீங்களா? எங்களை எல்லாம் குளிக்க வைக்க மாட்டீங்களா?" என்றான் சத்தமாக.
' ஐயோ பாவம்! இன்னைக்கு யாரு முகத்துல முழிச்சானோ? இன்னைக்கு நம்ம ஜேபி அடிக்கப் போற விபூதில துண்ட காணோம், துணிய காணோம் ஓடப் போறான்... " கொஞ்சம் கவலையாய் அவனைப் பார்த்தது மங்கி பிரதர்ஸ் டீம்.
ஜேபியை வருமாறு சைகை செய்து அழைத்தனர் சீனியர் மாணவர்கள்.
ஜேபியோடு மங்கி பிரதர்ஸ் டீமும் சென்றது. வெள்ளை நிற கைவேலைப்பாடுகள் நிறைந்த, சுடிதாரில் வண்ண மயமான ராஜஸ்தானி துப்பட்டா அணிந்திருந்தாள் ஜேபி.
"என்ன அங்க ஒரே சிரிப்பு?" என்றான் சீனியர் மாணவன்.
பதில் ஏதும் சொல்லாமல் கைகளைக் கட்டிக் கொண்டு அவனை தீவிரமாய் பார்த்தாள் ஜேபி.
"செம லுக்! ம்... பியூட்டிஃபுல். அங்கே சிரித்து விளையாடியது போல், எங்கள் முன்னே அழுது காட்டு" என்றான் அந்த சீனியர்.
"முடியாது..." அழுத்தம் திருத்தமாய் வந்தது ஜேபியின் வார்த்தைகள்.
' நீயாக வந்து அழுதுவிடு. இல்லை நாங்கள் அழ வைத்து விடுவோம்" என்றவனின் குரலில் தீவிரம் குடி புகுந்தது.
"பாஸ்... இது எல்லாம் வேண்டாமே..." என்றான் மது தன்மையாக.
"அப்போ நீ வந்து பொம்பள மாதிரி அழு. அழு..... அழு..... " என்று ராகமாய் இழுத்து நக்கல் செய்தனர்.
நிமிர்வாய் நின்ற ஜேபியை இழுத்துக் கொண்டு மங்கி பிரதர்ஸ் விலக முயன்றனர்.
அவர்கள் எதிர்ப்பின் பலனாக மொத்த சீனியர் கூட்டமும் அவர்களை சூழ்ந்து கொண்டது.
' முடிந்தால் என்னை அழ வைத்து பார்! விலைமதிப்பில்லாத என் கண்ணீரை வீணாக்குவேனோ?' தன் முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றாள் ஜேபி.
பெண்களை அழ வைக்க அவர்கள் எடுக்கும் ஆயுதம் அவர்களின் பெண்மையை கேவலப் படுத்துவது தானே...
அந்த சீனியர் மாணவன் ஜேபியின் ராஜஸ்தானி துப்பட்டாவை உருவி தரையில் போட்டான்.
ஜேபி தங்கள் முன் கூனிக்குறுகி நிற்பாள், அழுவாள், தவிப்பாள் என்று அவர்கள் போட்ட கணக்கு தப்பாய் முடிந்தது.
ஜேபி திடமாய் நின்று அனைவரின் கண்களையும் நேருக்கு நேர் சந்தித்தாள்.
அந்த சீனியர் மாணவன் ஆரம்பிக்க, மொத்த கூட்டமும் கைத்தட்டி ராகமாக பாட்டு பாட ஆரம்பித்தது.
"அந்த அரபிக்கடலோரம்
ஓர் அழகைக் கண்டேனே!
அந்தக் கன்னித் தென்றல்
ஆடை கலைக்க கண்கள் கண்டேனே!
ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா...
ஏ பள்ளித் தாமரையே! உன்
பாதம் கண்டேனே
உன் பட்டுத் தாவணி சரிய
சரிய மீதம் கண்டேனே... "
மங்கி பிரதர்ஸ் அவர்களை அடிப்பதற்கு பாய, தன் கைகளை நீட்டி அவர்களைத் தடுத்தாள் ஜேபி.
"என்னை அழச் சொன்னாயே. உன்னை பெற்றதற்கு உன் அன்னை தான் அழ வேண்டும். பாட்டா பாடுறீங்க... நாளை உங்களுக்கு மகள் பிறந்தால், அவளையும் ஆடை கலைக்க சொல்வீர்களோ?" வார்த்தையில் அனல் வீசியது ஜேபிக்கு.
"ஏய்! என்னடி? நாங்கள் அழச் சொல்லும்போது அழுது இருந்தால் இந்த பிரச்சனை எல்லாம் இல்லை தானே. ஒழுங்கா பொம்பள பிள்ளையா சொன்ன பேச்சைக் கேட்டு இருந்தா, இந்த அவமானம் உனக்கு நேர்ந்திருக்காது. பஜாரி மாதிரி ஆம்பளைகளை எதிர்த்து நின்றால் இப்படித்தான் நிற்க வேண்டும்" என்று அவளை நோக்கி சுட்டிக் காட்டி ஏளனமாய் சிரித்தான்.
" குரல் உயர்த்தி நியாயம் கேட்கும் பெண்கள் எல்லாம் பஜாரி. அமைதியாய் சொன்ன சொல்லை மறுப்பில்லாமல் கேட்கும் பெண்கள் எல்லாம் குடும்ப குத்து விளக்கு. உனது கேடுகெட்ட பெண்கள் இலக்கணத்தை நீயே படித்து கட்டிக்கொண்டு அழு" என்றாள் அவனுக்கு சளைக்காத ஏளனமான குரலில்.
ஜேபி அனைவருக்கும் காட்சிப் பொருளாய் இருப்பதை கண்ட மது கீழே குனிந்து அவளது துப்பட்டாவை எடுத்தான்.
அவனது கையிலிருந்த துப்பட்டாவை மீண்டும் கீழே எறிந்தவள், அனைவரையும் துச்சமாக பார்த்துவிட்டு தன் நண்பர்களுடன் முன்னே நடந்தாள்.
இரண்டடி முன்னே நடந்தவள் , தன் நண்பர்களை விட்டு பின்னால் வந்து, கீழே கிடந்த தனது துப்பட்டாவை கையில் எடுத்து, "அது என்ன, 'டி' போட்டு பேசுற? பெண்மையை மதிக்கத் தெரியாத போதே, உனது ஆண்மை தரம் இறங்கி விட்டது" என்று கூறி தன் கையில் இருந்த துப்பட்டாவை அவன் கைகளில் தந்து விட்டு, " இந்தத் துணி தான் என் மானம் என்று நீ நினைத்தால், இப்பொழுது போனது உன் மானம்தான். இதை வைத்து நீயே உன் மானத்தை காப்பாற்றிக்கொள் " என்று கூறி நண்பர்களுடன் நடந்து சென்றாள் துளியும் கலக்கமின்றி.
சீனியர் கூட்டத்தில், பலருக்கு அவளின் உண்மை சுட்டதால், சத்தம் இன்றி நகர்ந்து சென்றனர்.
நான்கு வருட பொறியியல் படிப்பு முடிந்ததும், தன்னுடைய மாற்றுச் சான்றிதழ் வாங்குவதற்காக கல்லூரிக்கு வந்த வசீகரன், நடந்த நிகழ்வுகளை தூரத்திலிருந்து கண்டான். ஜேபியின் ஒவ்வொரு பரிமாணமும் அவனுள் ஆழமாய் இறங்கியது.
அவமானத்தில் நின்ற அந்த சீனியர் மாணவன், ஆத்திரத்தில் கையில் இருந்த துப்பட்டாவை தூர எறிந்தான்.
காற்றின் வேகத்தில் பறந்த துப்பட்டா, வசீகரனின் முகத்தில் மோதி இதமாய் அவனை தழுவியது. வலக்கையை முறுக்கி, துப்பட்டாவை தன் கைகளில் சுற்றிக் கொண்டவன் கன்னத்தில் அதனை தேய்த்து புன்முறுவல் பூத்தான்.
"அம்மணி... உங்களை ரொம்ப தேட வைக்கிறீங்க" என்று கூறி பின்னங்கழுத்தை தடவி தன்னை சமன்படுத்திக் கொண்டான்.
" ஆத்தா மகமாயி! இன்னைக்கு தான் இந்த காலேஜுக்குள்ள அடி எடுத்து வச்சோம். வந்த உடனே உன்னுடைய வீர தீர பராக்கிரம செயல்களை காட்டி, ஒரே நாளில் ஒபாமா ஆகி விட்டாய்!" என்றவளை வம்புக்கு இழுத்தான் கிருஷ்.
" உன்னுடைய பாதுகாப்பு எங்களுக்கு ரொம்ப முக்கியம் ஜேபி. அவனுங்க முழியே சரியில்ல" என்றான் யாதவ்.
" ஜேபி! நாங்கள் அவனை அடித்திருப்போம் நீ ஏன் தடுத்தாய்? " என்று கோபமாய் கேட்டான் மது.
" தண்டனை என்றுமே தவறை சரி செய்து விடாது மது. வார்த்தைகள் என்றுமே வலிமை மிகுந்தது. அவன் திருந்துவதற்கு இதை ஒரு வாய்ப்பாய் எடுத்துக் கொள்ளட்டும். சரி! பாட்டி உங்களை எல்லாம் இன்று கண்டிப்பாக வீட்டிற்கு வரச் சொன்னார்" என்றாள்.
'பாட்டி' என்று சொன்னதும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டனர் மங்கி பிரதர்ஸ்.
"என்ன பண்ணி வச்சிருக்கீங்க?" குரல் உயர்ந்தது ஜேபிக்கு.
" ரைசு டாலு... " என்று கிருஷ் தயங்கினான்.
' சோறு பருப்பு... ம்... எங்க பாட்டிய உங்கள மாதிரியே குட்டிச்சுவரா மாத்தி வச்சிருக்கீங்க. ம்... சொல்லு" என்று அவனை ஊக்கினாள் ஜேபி.
யாதவும், மதுவும் கண்ணை காட்ட, வார்த்தைகளை மென்று விழுங்கிய கிருஷ், " எங்க சங்கத் தலைவியைப் பத்தி தப்பாக பேசாதே... ரைஸ் பேபி என்னைக்கும் எங்களுக்கு மாஸ் தான்" என்றான்.
" ஒரு நாள் வைக்கிறேன் உங்க கூட்டணிக்கு ஆப்பு " என்றாள் ஜேபி.
சங்கி மங்கி டீம் ஆரவாரமாக வீட்டிற்குள் நுழைய, பாட்டியின் வரவேற்பு அமர்க்களமாக இருந்தது.
"ரைஸா... டியர்! நீங்க தயாரா?" என்றான் யாதவ்.
"ம்..." கட்டை விரலை உயர்த்தி வெற்றிக்குறியை காட்டினார்.
நடக்கும் கூத்தை தள்ளி நின்று பார்த்தாள் ஜேபி.
டேபிளில் லேப்டாப்பை திறந்து வைத்தான் கிருஷ். "பாட்டி ஆன்லைன்ல எல்லாம் தயாரா இருக்கு. நீங்க வாங்க" என்றான்.
"என்ன கிருசு... ஆன்லைன் மட்டும் தான் தயாராக இருக்கா? பெண் லைன் எப்போ தயாராகும்?" என்றவரின் கேள்வியில் ஜேபி தன் சிரிப்பை அடக்க சிரமப்பட்டாள்.
"ரைசு... எல்லாருக்கும் ஒரு லைன் தான். போய் லைன்ல உக்காருங்க"
தன் குலதெய்வத்தை நினைத்து கும்பிட்டு விட்டு, லேப்டாப்பின் தொடுதிரை முன் அமர்ந்தார் அன்னம்மாள் பாட்டி.
'என்ன இது?' என்று கண்களால் மங்கி பிரதர்ஸிடம் கேட்டாள் ஜேபி.
"அது... அது... ஆன்லைன் தொலைதூரக் கல்வி படிப்பதற்கு இன்று ரைஸா பேபிக்கு நேர்முகத் தேர்வு. நம்மைப் போலவே படிக்க வேண்டும் என்று பேபிக்கு ரொம்ப ஆசை. சிறுவயதில் அவர்கள் அப்பா படிக்க வைக்காமல் போனதால், அவருடைய டாக்டர் கனவு பாழாய் போய்விட்டதாம். உன் தாத்தா, அப்பா என யாரும் அவர்கள் கனவை நிறைவேற்றவில்லையாம். அதுதான் எங்களிடம் உதவி கேட்டார்கள். நாங்களும்..." என்று இழுத்தான் யாதவ்.
"எதே... டாக்டரா? பகல்லையே பசு மாடு தெரியாது. இரவிலா எருமை மாடு தெரியப்போகிறது. ம்... நடத்துங்கள். நடத்துங்கள்' என்று வரவேற்பு அறையின் நாற்காலியில் அமர்ந்து, நடக்கும் கூத்தை ரசனை உடன் பார்க்க ஆரம்பித்தாள்.
அன்னம்மாளின் முன்னால் மங்கி பிரதர்ஸ் மூவரும் அமர்ந்து கொண்டனர்.
தொடு திரையில் ஒரு அழகான இளம் பெண் தோன்றி, "கேன் ஐ ஸ்டார்ட்?" என்றாள் அன்னம்மாளிடம்.
" யாரைப் பார்த்து கேனைனு சொல்ற? உரிச்சு உப்பு கண்டம் போட்டு விடுவேன் ஜாக்கிரதை" என்று கோபப்பட்டார் பாட்டி.
" ரைஸா.. பேபி... தொடங்கலாமா? என்று கேட்கிறார்கள்" லேசாக முணுமுணுத்தான் மது.
"ஓ.... தாராளமாக" என்று பதில் அளித்தார் பாட்டி.
" வாட் இஸ் யுவர் நேம்? "
" மீ ரைஸா"
"எஸ். குட் "
"எஸ். எஸ். குட் நைட்" என்று பாட்டி தன் ஆங்கில அறிவை கடை பரப்பினார்.
பாட்டியை பார்த்து, கைகள் இரண்டையும் ஆட்டிய யாதவ், எதுவும் சொல்ல வேண்டாம் என்று ஒரு கதக்களியே ஆடிக்கொண்டிருந்தான்.
" ஓகே. லெட்ஸ் ஸ்டார்ட் வித் சிம்பிள் டெஸ்ட்"
" ஓ... சுகர் டெஸ்ட் பார்க்கணுமா?" என்று லேப்டாப் திரையில் தெரிந்த பெண்ணுடன் உரையாடினார் பாட்டி.
"ஓ காட்..." நேர்முகம் காணும் பெண் தன் எரிச்சலை அடக்கப் பாடுபட்டாள்.
மங்கி பிரதர்ஸ் மூவரும் ஒரு சேர தங்கள் வாயில் கையை வைத்து, பாட்டியை பேச வேண்டாம் என்று சொன்னதும் சற்று அமைதியானார் பாட்டி.
" உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்" என்று கஷ்டப்பட்டு தமிழில் பேசினாள் அந்தப் பெண்.
"மீ நேம் ரைஸா! மை சன் நேம் பிக்மால் (பெருமாள்). மை மண்டு வாட்டர்...." மங்கி பிரதர்ஸ் சிரித்து, ஜேபி முறைத்துப் பார்த்ததும், சற்று யோசித்து விட்டு, "நோ... மீ கிராண்டு டாட்டர் ஜேபி. ஆல் பேமிலி ஓவர்..." என்றார்.
"ஓவர் தான்... ரொம்ப ஓவர் தான் " ஜேபி உதடு சுழித்து பழிப்பு காட்டினாள்.
நேர்முகத் தேர்வாளர், "டெல் மீ த ஆன்சர் , போர் பிளஸ் த்ரீ" என்ற கேள்வியைத் தொடங்கினாள்.
பாட்டி முழித்ததும் விரல்களில் ஏழு என்று அபிநயம் காட்டினர் மங்கி பிரதர்ஸ்.
மனதிற்குள் ஆங்கிலத்தில் எண்களை ஒப்பித்து பார்த்தார் பாட்டி.
' ஒன், டூ, த்ரீ...... ம்... '
மங்கி பிரதர்ஸ் டீம், "செவன்" என்று உதட்டை அசைத்துக் காட்டியது.
'ஆஹான்... ' என்று மனதிற்குள் விடையை கண்டுபிடித்த மகிழ்ச்சியில், " பவன். சரவணபவன்" என்றார்.
அவ்வளவுதான் ஒட்டுமொத்த சங்கி மங்கி டீமும், விழுந்து விழுந்து சிரித்தது, செவன் சரவணபவனாய் மாறியதைக் கண்டு.
"வாட்?" அதிர்ந்தாள் நேர்முகத் தேர்வாளர் பெண்.
"சுமால்... டென்ஷன். யூ டெல் பிக் கேள்வி " என்றார் பாட்டி நிமிர்ந்து அமர்ந்து கொண்டு.
"நோ! அடுத்த முறை பயிற்சி எடுத்து விட்டு வாருங்கள். நன்றி. வணக்கம்" என்று கூறி முடித்துவிட்டாள் அந்த நேர்முகத் தேர்வாளர்.
"பாய்..." என்று படு ஸ்டைலாக கையசைத்து விட்டு திரும்பிய அன்னம்மாளை முறைத்துப் பார்த்தனர் மங்கி பிரதர்ஸ்.
" ஒய் திஸ் கொலவெறி... கொலவெறி... " என்று ஆனந்தமாகவே பாடிவிட்டு அவர்களைக் கடந்து சென்றார் அன்னம்மாள் குளிர் கண்ணாடியை அணிந்தபடி.
சிறகுகள் நீளும்...