• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சிறகு - 8

அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
277
445
63
Madurai
சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே...

சிறகு - 8

"ஹலோ... ரைசு பேசுறேன் கிருசு..." கோபமான குரலில் பேசினார் அன்னம்மாள் பாட்டி.

"என்ன பேபிமா? என்ன கோபம்?" என்றான் கிருஷ்ணா.

" எல்லாம் நீங்க சேர்த்து விட்ட புது கிளாசினால்தான்"

" உங்கள் நேர்முகத் தேர்வு சொதப்பியதால் தான் இந்த பொது அறிவு வகுப்பிற்கு ஏற்பாடு செய்தோம். இந்த வகுப்பில் உங்களுக்கு எல்லாவற்றையும் எளிமையாய் சொல்லிக் கொடுப்பார்களே?

" அந்த கம்ப்யூட்டர் டீச்சர், எல்லாமே தப்பு தப்பா சொல்லித் தராங்க. நாம வேற டீச்சர் கிட்ட கத்துக்கலாம் கிருசு. ரைஸா ரொம்ப பீலிங்கு. பீலிங்கோ பீலிங்கு"

" தப்பு தப்பா சொல்லித் தருகிறார்களா? வாய்ப்பே இல்லை. என்ன நடந்தது என்று கொஞ்சம் தெளிவாக சொல்லுங்க பேபிமா.

அந்த ஆன்லைன் கோர்ஸ் பெஸ்ட் கோர்ஸ். அந்த டீச்சர் ரொம்ப பெஸ்ட் டீச்சர். நாங்க ஒரு மாசமா தேடி அந்த ஆன்லைன் கிளாசை உங்களுக்காக கண்டுபிடித்து கொடுத்தோம்"


"ஹான்... பொல்லாத கிளாசு. பொல்லாத டீச்சர். உலகத்துல இல்லாத டீச்சர். எந்த சந்தேகம் கேட்டாலும் தெரியாத மாதிரி பேய் முழி முழிக்கிறா. ஆடத் தெரியாத அந்த சிலுக்கு காலுல சுளுக்குன்னு சொல்றா " என்றார் அன்னம்மாள் வெடுக்கென்று.

' அப்படி என்ன கேள்வி பேபிமா கேட்டீங்க? "

" எப்படி இருக்கிறீங்க? என்ற தமிழ் கேள்விக்கு இங்கிலீஷில், ஹவ் ஆர் யூ? அப்படின்னு சொன்னா"

"ஓ.... சரியாத்தானே சொல்லி இருக்காங்க"

" கிருசு.. இங்கிலீஷில் ஹவ் ஆர் யூ என்றால் மேக்ஸில் எப்படி சொல்லணும்? சயின்ஸில் எப்படி சொல்லணும் என்று கேட்டேன். அவ்வளவுதான் கேட்டேன்.

கோவிச்சுக்கிட்டு கிளாஸ்ச கட் பண்ணிருச்சு அந்த பொண்ணு" என்றார் வருத்தம் கலந்த கோபத்துடன்.


இங்கு திருதிருவென பேய்முழி முழித்தான் கிருஷ்ணா.

" நீங்க ரொம்ப அறிவாளி பேபிமா... " என்று வார்த்தைகளை மென்று விழுங்கினான் கிருஷ்ணா.

" அப்படி சொல்லு கிருசு. இதை எங்க வீட்ல இருக்க லூசு கிட்ட சொன்னா, என்னை லூசுன்னு திட்டிட்டு போறா. உனக்காவது என்னுடைய அறிவு புரிஞ்சிருச்சே.

ம்... சோக கதை இதோடு முடியல இன்னும் நிறைய இருக்கு கிருசு"


"இன்னுமா...?" கண்களை அகல விரித்தவன், "சொல்லுங்க பேபிமா" என்றான் பயந்த குரலில்.

" ஒரு நாள் பைவ் பிளஸ் பைவ் , டென்னு, அப்படின்னு சொல்லுச்சு. அடுத்த நாளு போர் பிளஸ் சிக்ஸ் டென்னு, அப்படின்னு சொல்லுச்சு.


சரி சின்ன புள்ள தப்பு தப்பா சொல்லித்தருது. நாம பெரியவங்க அப்படின்னு பொறுத்துக்கிட்டு பொறுமையா போனா, அடுத்த நாளு, டூ பிளஸ் எயிட் டென்னு அப்படின்னு சொல்லுது.

நீ சொல்லு கிருசு. இப்படி மாத்தி மாத்தி சொல்லி கொடுத்தா எனக்கு கோபம் வருமா? வராதா? அதனால இனிமே அந்த கிளாஸ் வேணாம் அப்படின்னு நான் முடிவு எடுத்துட்டேன்" என்றார் அன்னம்மாள்.

'அப்பாடா தப்பிச்சுட்டான்டா சேகரு' என்று மனதிற்குள் சந்தோஷப்பட்டான் கிருஷ்ணா.

" நீங்க எடுத்த முடிவு ரொம்ப சரி பேபிமா. நானும் உங்களோட முடிவை ஆதரிக்கிறேன்" என்றான் கிருஷ்ணா நிம்மதியான குரலில்.

"பேய்... கிருசு பேய்..." என்றார் அன்னம்மாள்.

"ஏதேய்... பேயா?"

" அட போ! கிருசு... பாய்... சொல்லுறத கொஞ்சம் ஸ்டைலா சொன்னேன் உனக்கு புரியவே இல்லை. நீ ரொம்ப சின்ன குழந்தை" என்று சிரித்தபடி போனை கட் செய்தார் அன்னம்மாள்.

கிருஷ்ணாவின் காதை சுற்றி, "அமுக்கு டுமுக்கு அமால் டுமால்..." என இசை மழை பொழிந்தது.


ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்...

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் போட்டி என்பது உயர்கல்வி மாணவர்களுக்காக மென்பொருள் மற்றும் வன்பொருள் பதிப்புகள் என இரண்டு வடிவங்களில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் நடத்தப்படுகிறது.

நமது அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சில அழுத்தமான பிரச்சனைகளைத் தீர்க்க, புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க மாணவர்களுக்கு ஒரு தளத்தை வழங்குவதற்கான ஒரு நாடு தழுவிய முயற்சியாகும். இதன் மூலம் மாணவர்கள் கண்டுபிடிக்கும் கண்டுபிடிப்புகள், பல சிக்கல்களுக்கு தீர்வுகளை கண்டுபிடிக்க உதவுகிறது. புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறது.

நாடு எதிர்நோக்கும் சவால்களைக் களைவதற்கான, டிஜிட்டல் தொழில்நுட்ப புதுமைகளை அடையாளம் காண்பதற்கான ஒரு தனித்தன்மை வாய்ந்த முன்முயற்சியாக கருதப்படுகிறது. மாணவர்களின் சிந்திக்கும் திறனை அவர்களின் எல்லைக்கு அப்பாற்பட்டு சிந்திக்க தூண்டுகிறது.
இது உலகின் மிகப்பெரிய மாணவர்களுக்கான கண்டுபிடிப்பு தளமாகும்.

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானில் மாணவர்களின் சிந்தனைகளைத் தேர்வு செய்வதற்காக, கல்லூரிகள் அளவிலான முதற்கட்டப் பணி நடத்தப்பட்டு, கல்லூரி அளவில் வெற்றிபெற்ற அணிகள் மட்டுமே, தேசிய அளவிலான ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் சுற்றுக்கு தகுதி பெரும்.

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் ஒரு ஒரு தொழில்நுட்ப மாரத்தான். இடைவிடாது 48 மணி நேரம் பணியாற்றி, அவர்களின் திட்டத்தை செயலாற்றி முடித்திருக்க வேண்டும்.

ஒரு குழுவிற்கு அதிகபட்சம் நான்கு நபர்கள் வரை அனுமதிக்கப்படுவர்.

பங்கேற்கும் அணிகளுக்கான அடையாள டிஷர்ட்டுகள், அடையாள அட்டைகள், இடையிடையே உண்பதற்கான சிற்றுண்டிகள், உணவுப் பதார்த்தங்கள், அனைத்தும் அந்த மைய வளாகத்திலேயே கிடைக்கும். போட்டி ஆரம்பித்த பிறகு மாணவர்கள் வெளியே செல்ல அனுமதி கிடையாது.

48 மணி நேரமும் இடைவிடாது அவர்கள் வேலை செய்யும் போது களைப்பு அவர்களை அண்டாமல் இருக்க இடையிடையே அவர்களுக்கு நடனம் , கலை நிகழ்ச்சி என ஒரு தனிப்பட்ட குழுவினர் வந்து போட்டியாளர்களை உற்சாகப்படுத்துவார்கள்.

ஐந்து குழுக்கள் இறுதிச்சுற்றுக்கு தேர்வு செய்யப்படுவர். போட்டியில் வெற்றி பெறும் குழுவுக்கு மத்திய அரசின் சார்பாக ஒரு லட்சம் வரையிலான பணப்பரிசு வழங்கப்படும். அவர்களது கண்டுபிடிப்புகளின் உரிமம் அவர்களது பெயரில் பதிவு செய்யப்படும்.

போட்டிக்காக நாடு முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 70 மையங்களில் கலந்து கொண்டனர். அதில் பொறியியல் இறுதியாண்டு படிக்கும் நமது சங்கி மங்கி டீமும் அடக்கம். கல்லூரி அளவிலான போட்டியில் அவர்களது திட்டம் அங்கீகரிக்கப்பட்டு, அடுத்த கட்ட போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

"சாட்போட் பாடல் பரிந்துரை அமைப்பு" என்ற செயலியை அவர்கள் உருவாக்க முனைந்தனர். இந்தத் செயலியில், நம் உரையாடல்கள், செயல்பாடுகள், தேடல்கள் ஆகியவற்றின் உணர்ச்சிப் பகுப்பாய்வின் அடிப்படையில் பாடல்களை தானாகவே பரிந்துரைக்கும்.

நாம் சோகமாக இருக்கும் நேரத்தில் மன ஆறுதல் தரும் பாடல்களையும், சந்தோஷமாக இருக்கும் தருணங்களில் ஆர்ப்பரிக்கும் பாடல்களையும் நாம் சொல்லாமலேயே, நம் செல்போன் செயல்பாடுகள் மூலம், தானாகவே கணித்து நம் மன உணர்வுக்குத் தகுந்த பாடலை ஒலிக்கச் செய்யும்.


யாதவ் அலைபேசியில் அவர்களது செயலியை பதிவிறக்கம் செய்து, சோதனை முயற்சி செய்தனர்.

"பாசம் வைக்க நேசம் வைக்க

தோழன் உண்டு வாழ வைக்க
அவனைத் தவிர உறவுக்காரன்
யாரும் இங்கில்லே...

உள்ள மட்டும் நானே
உசிரைக் கூடத்தானே
என் நண்பன் கேட்டால்
வாங்கிக்கன்னு சொல்லுவேன்
என் நண்பன் போட்ட சோறு
நிதமும் தின்னேன் பாரு

நட்பைக் கூட கற்பைப்போல எண்ணுவேன்..."

என்று செயலியால் பரிந்துரை செய்யப்பட்ட பாடல் பாட, யாதவின் நட்பை நினைத்து கண்கள் பெருமையுடன் கசிய, அவனை அன்பாய் அணைத்துக் கொண்டது அவனது நண்பர்கள் பட்டாளம்.

அடுத்ததாக கிருஷ்ணாவின் அலைபேசியை கேட்க, அவன் தர மறுக்க, அங்கு ஒரு போராட்டமே நிகழ்ந்தது. மதுசூதனன் லாவகமாக கிருஷ்ணாவின் அலைபேசியை பறித்து, செயலியை பதிவிறக்கம் செய்தான்.

"ஹேய் ரஞ்சிதமே .. ரஞ்சிதமே

மனச கலைக்கும் மந்திரமே
ரஞ்சிதமே ரஞ்சிதமே

உன்ன உதடு வலிக்க கொஞ்சணுமே... "

என்று அலைபேசி பாட அனைவரும் அவனை முறைத்தனர்.

" என்னடா எல்லாரும் இப்படி பாக்குறீங்க? அது... அது.... சும்மா பேக் (fake) ஐடியில் சாட் செய்யும் போது, பேச்சில் லேசா மசாலா வாடை தூக்கலா இருக்கும். அதுக்குப் போயி இந்த செயலி இந்தப் பாட்டை பாடுது.

ஒருவேளை நம்ம கண்டுபிடிப்பு தப்பா இருக்குமோ? " என்று அவன் கேட்க அவன் நண்பர்கள் அவன் தலையில் நறுக்கென்று என்று கொட்டினர் ஒரே நேரத்தில்.

இறை நம்பிக்கை அதிகமாக இருந்த மதுசூதனுக்கு பக்தி பாடல்கள் பாடியது.

ஜேபியின் அலைபேசியோ,

"தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்…

தந்தை அன்பின் முன்னே…
தாலாட்டு பாடும் தாயின் அன்பும்…

தந்தை அன்பின் பின்னே…"
என்று பாடியது.

சங்கி மங்கி டீம் 48 மணி நேரம் இடைவிடாது போராடி தங்களது திட்டத்தை வெற்றிகரமாக செயலாக்கம் செய்தனர்.

சங்கி மங்கி டீமின் கண்டுபிடிப்பு அவர்களை இறுதிச்சுற்றுக்கு அழைத்துச் சென்றது. தேர்வு செய்யப்பட்ட ஐந்து குழுவும் தங்களது திட்டத்தை விளக்க மேடையில் காத்திருந்தனர்.

மேடையில் அவர்கள் நிற்க, கீழே நடுவர்கள் வரிசையில், மிடுக்கான தோற்றத்துடன் வசீகரன் அமர்ந்திருந்தான்.

சிறுவயதிலேயே தன் கடின உழைப்பால், தொழில்நுட்பத்தில் தனக்கென ஓர் இடம் பிடித்து, "கரன் சொல்யூஷன்ஸ்" என்ற நிறுவனத்தை நிறுவி, நூற்றுக்கணக்கான பணியாளர்களுடன், உலகத் தரம் வாய்ந்த ப்ராஜெக்ட்களை செய்து கொடுத்துக் கொண்டிருந்தான்.

இளம் வயது சாதனையாளனான வசீகரனை, நடுவரில் ஒருவராக, ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் குழுமம் நிர்ணயித்திருந்தது.

கருப்பு நிற பேண்ட் கருப்பு நிற ஓவர் கோட், வெண்மை சட்டையுடன் மிடுக்காக மேடை ஏறி, தங்களுடைய செயலியை விவரித்த ஜேபியின் அழகில் தடுமாறும் தன்னை சமன் செய்ய, வலது கை பெருவிரல் கொண்டு நாடியில் குற்றி, கண் சிமிட்டாமல் அவள் அசைவுகளை பதிவு செய்து கொண்டான் தன் இதயப் பெட்டகத்தில்.

செயலியின் கட்டமைப்பு செயலாக்கம் ஆகியவற்றை விவரிக்கும் போது, இந்தத் திட்டத்தின் சூத்திரதாரி ஜேபி என்பது தெள்ளத் தெளிவாகியது அனைவருக்கும்.

இறுதிப் போட்டிக்கான முடிவுகளை நடுவர்கள் ஆராயும் போது ஜேபியின் அறிவுக்கூர்மை வியந்து பேசப்பட்டது. அவர்கள் கண்டுபிடித்த செயலி ஒலிக்கும் பாடல்கள் தத்ரூபமாக அனைவரின் உணர்வுகளை துல்லிதமாய் பறைசாற்றியது.

இறுதிச்சுற்றின் முடிவை அறிவிக்கும்படி, வசீகரனை அழைத்தனர்.

அலைபாயும் கேசம் காற்றில் புரள, அவன் பாதங்களின் பாதுகைகள் படிகளில் சத்தம் இன்றி முத்தம் வைத்து ஏற, மென்மையான அந்த முகத்தில் மென் நகை பூக்க, அணிந்திருந்த ஓவர் கோட்டை இரு கைகளாலும் இறக்கி சரி செய்தபடி, மேடையை நோக்கி அதிராமல் நடந்து, அனைவரையும் அதிரச் செய்தான்.

" அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். இந்த ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தானின் இறுதிச்சுற்று முடிவை அறிவிப்பதில் பெருமைகிழ்ச்சி கொள்கிறேன். இந்த போட்டியின் வெற்றியாளர், மிஸ் ஜெயலட்சுமி அவர்களையும், அவர்களது குழுவினரையும் மேடைக்கு அழைக்கிறேன்" என்றான்.

நண்பர்கள் எவ்வளவு தடுத்தும், அவர்களது கையினை தட்டி விட்டு, படிகள் அதிர சத்தத்துடன் மேடை ஏறினாள் ஜேபி சினம் கொண்ட முகத்துடன்.


வசீகரன் அருகில் வந்து, "எக்ஸ்கியூஸ் மீ சார்" என்றாள்.

"எஸ்..." என்று திரும்பிய வசீகரனின் கைகளில் இருந்த ஒலிபெருக்கியை வாங்கி, "அனைவரும் மன்னிக்கவும். நான் ஜெயலட்சுமி இல்லை" என்றாள் உஷ்ணம் கொண்ட மூச்சுடன்.

அனைவரும் கேள்வியாய் அவளை நோக்க, "ஐ ஆம் மிஸ். ஜெயலட்சுமி பெருமாள்" என்று கம்பீரத்துடன் கூறிவிட்டு வசீகரனின் கையில் ஒலிபெருக்கியை ஒப்படைத்து விட்டு, சினமடங்கிய காளி அவதாரம் போல் நண்பர்களுடன் நின்று கொண்டாள் பாந்தமாக.

" பெருமாளே! உன் தொல்லை தாங்க முடியல!" என்ற கிருஷ்ணாவின் மெதுவான முணுமுணுப்பிற்கு பிறர் அறியாமல் காலை நகற்றுவது போல் அவன் காலை மிதித்தாள் ஜேபி.

வலித்தாலும் வலிக்காதது போல் சிரித்தான் கிருஷ்ணா.

எப்பொழுதும் போல் தன் ஆளுமையால் வசீகரிக்கும் தன் தேவியை ரசித்துக்கொண்டே, தலையசைத்தான் அவளின் பேச்சுக்கு ஒப்புமை தந்து.

தன் குரலை செறுமிக் கொண்டு, "தி ப்ரைஸ் கோஸ் டூ, மிஸ் ஜெயலட்சுமி பெருமாள் அண்ட் டீம்" என்றான்.

பரிசுக்கான ரொக்கத் தொகையை ஹேக்கத்தான் குழுமம் வழங்க, உழைப்பிற்கான வெற்றியை மகிழ்வுடன் பெற்றுக் கொண்டது சங்கி மங்கி டீம்.


பரிசுத்தொகையினை பெற்றுக்கொண்டு அவர்கள் மேடையை விட்டு கீழிறங்கும் போது, "எக்ஸ்கியூஸ் மீ... " என்ற வசீகரனின் குரல் அவர்களைத் தடுத்தது.

சங்கி மங்கி டீம் திரும்பி அவனை யோசனையுடன் பார்க்க, "உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் என் ஐடி கம்பெனியில் பணியாற்றலாம். இது உங்கள் திறமைக்கான அழைப்பு மட்டுமே..." என்று வசீகரன் கூறியவுடன், அரங்கம் அதிர கைத்தட்டல் ஒலி ஒலித்தது.

மங்கி பிரதர்ஸ் வாயைப் பிளக்க, "நன்றி! விரைவில் உங்களுக்கான பதிலுடன் வருகிறோம் " என்று வசீகரனிடம் கம்பீரமாக கூறிவிட்டு கீழே இறங்கினாள் ஜேபி தன் நண்பர்களுடன்.

அவளின் நிமிர்வால் பொங்கி எழுந்த உணர்வுகளை உதட்டின் ஓரம் கடித்து மடித்து அடக்கினான் வசீகரன்.

' என் சாம்ராஜ்யத்தின் எதிர்கால ராணிக்கு இந்த தைரியம், ஆளுமை கூட இல்லை என்றால் எப்படி? உங்கள் தைரியம் தானே என்னை காந்தமாய் கவர்கிறது. அசத்துறீங்க அம்மணி! விரைவில் என்னிடம் வந்து விடுங்கள் அம்மணி! உங்கள் வசீகரன் வருடக்கணக்காக காதலை சுமந்து கொண்டிருக்கிறான்" என்று தன் மனதிற்குள் செல்லம் கொண்டாடினான் தன் ஜேபியை.


சிறகுகள் நீளும்...
 
Last edited:

Shimoni

Vaigai - Avid Readers (Novel Explorer)
May 17, 2022
180
111
43
Germany
வசிகரனின் வசியக்காரி அவனிடம் மயங்கும் நாள் எப்போதோ😜😜😜

சார் ரொம்ப போராட வேண்டும் போல 🤣🤣🤣