சின்னஞ்சிறு கண்களில் சிறை எடுப்பேன்...
சிறை - 12
"ஆரா வெட்ஸ் சாரா" என்ற நினைவுகள், ஆராவின் மனதில் எழுவதற்கான சாத்தியக் கூறுகளை, சாரா தன் நடவடிக்கையால் தடுத்து நிறுத்தி இருந்தாள். வைரம் என்று நினைத்து அருகில் நெருங்க, அது கண்ணாடிக் கல்லாய் மாறி பல்லை இளித்ததில் ஆராவுடைய காதலின்(?) இதமும், கர்வமும் தொலைந்த இடம் தெரியவில்லை. அவன் மதியை முழுவதுமாய், அவனுடைய திருமதியே ஆக்கிரமித்து இருந்தாள்.
சங்கமித்ராவின் சவால் அவனை சீண்டி இருக்க, அவளுடைய ரகசியங்களை அவளிடமிருந்து எப்படி வரவழைப்பது என்று தன் மூளைக்கு வேலை கொடுத்துக் கொண்டிருந்தான்.
அலைபேசி அழைத்த உடன் தன் நினைவில் இருந்து விடுபட்டு, "ஹாய் ஹனி.." என்றான் உற்சாகமாய்.
" அட போடா... நீயாக இந்த பாட்டிக்கு போன் செய்ய மாட்டாய். நானே போன் செய்தாலும் பல அழைப்புகளுக்குப் பிறகு எடுப்பாய். படவா! ஒரு நாள் நானும் இதை போல் உன் அழைப்புகளை எடுக்க மாட்டேன்" என்று பேரனுடன் செல்லம் கொஞ்சினார் தேனம்மா.
"ஓ... ஹனி... தன் உயிருக்காக துடிக்காத இதயம் என்று ஒன்று இருக்குமா?" என்று வார்த்தையில் அவரை வளைத்தான்.
"ஆரா! உன்னை உன் அம்மா தன் வயிற்றில் சுமந்தால் என்றால்... நான் உன்னை என் உயிரில் சுமக்கிறேன் கண்ணா. உன்னை பார்க்க முடியாத ஏக்கத்தை பேசியாவது தீர்த்துக் கொள்ளலாம் என்று நினைப்பேன். அதற்கும் தடை வரும்போது என் உள்ளம் உடைந்து விடுகிறது" என்றவரின் குரல் தழுதழுத்தது.
"தேனம்மா... நீங்கள் எனக்கு செய்த எல்லா செயல்களிலும், என் நலனே முதன்மை பெற்றிருப்பதை என்பதை நான் அறிவேன். இருந்தாலும் ஒரு விஷயம் இடிக்குதே..." என்றான் கண்களில் சிறு சுருக்கத்துடன், உதட்டை கடித்த படி.
"என்ன ஆரா? என் செயல் எதுவும் உன்னை பாதித்து விட்டதா?" பதட்டம் தொற்றிக் கொண்டது தேனம்மாவின் குரலில்.
அது ஒரு வளர்த்த அன்னையின் பாசப்பிணைப்பின் அடையாளமாய் தெரிந்தது அவனுக்கு.
இருந்த போதும் தன் உள்ளத்தில் உதித்த எண்ணம் வலுக்க, லேசாக தன் தொண்டையை செருமிக் கொண்டு, "அதான்... என் அம்மாவின் பொருளை வேறு ஒருவருக்கு என்னை கேட்காமல் சொந்தமாக்கி விட்டீர்களே!" என்றான் ஆழம் பார்க்கும் குரலில்.
" உன் அம்மாவின் பொருளை நான் யாருக்கும் கொடுக்கவில்லை ஆரா. அதையெல்லாம் உன் அறையில் நீ பத்திரமாக வைத்திருக்கிறாய் அல்லவா!" என்றார் தேனம்மா தன்னை நிரூபிக்கும் பொருட்டு.
" மீண்டும் மீண்டும் பொய் உரைக்கிறீர்கள் ஹனி. என் அம்மாவின் கழுத்தில் இருந்தது, இப்பொழுது வேறு ஒரு கழுத்தில்... " என்று சற்றே இழுத்தான் வார்த்தைகளை.
"அப்பாடி... நம் சங்கமித்ராவை சொல்கிறாயா? அது அவளுக்கு சேர வேண்டியதுதானே. உடையவர் பொருள் உடையவருக்கு. மாமியாருடையது மருமகளுக்கு " என்றார் சற்று நிம்மதியான குரலில்.
தன் தாய்க்கு இணையாக அவளைப் பேசியதும் கோபம் மூண்டது ஆராவிற்கு.
"பாட்டி! என் அம்மாவும், அவளும் ஒன்றா?" என்றான் சினத்தில் சிவந்த கண்களுடன்.
" அவள் ஒரு தேவதை ஆரா" என்றார் ரசனையான குரலுடன்.
" என் அம்மா தானே" என்றான் பெருமையுடன்.
" உன் அம்மா தெய்வம். சங்கமித்ரா ஒரு தேவதை" என்றார் அழுத்தி.
காரியக்காரனாய், தன்னுள் எழுந்த கோபப் பெருமூச்சுக்களை அடக்கிக் கொண்டு, சங்கமித்ராவின் சவாலையும் நினைவில் வைத்துக்கொண்டு, "தேவதை என்று புகழும் அளவிற்கு அவளைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு?" என்று நக்கல் போல் கேட்டுவிட்டு தன் காதை தீட்டிக் கொண்டான்.
' எதற்காக அவளை தேர்ந்தெடுத்தீர்கள்?' என்ற கேள்வியை நேரடியாக கேட்க முடியாமல் சுற்றி வளைத்து விடையறிய காத்திருந்தான்.
"அது..." என்று ஆரம்பித்தவர், " போகப் போக உனக்கே புரியும். புரிந்த பின் நன்கு தெரியும்" என்றார் பூடகமாக.
"பாட்டி.." என்று பல்லை கடித்தவன், "பை..." என்று கூறிவிட்டு அலைபேசியின் அழைப்பை துண்டித்தான்.
இருவரின் வாழ்வும் சிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார் தேனம்மா.
அலுவலகத்திற்கு வந்த ஒரு வாரத்தில் சங்கமித்ராவின் முழு திறமைகளையும் கண்டு அதிசயத்தான் ஆரா. அனைவரின் கண்களும் அவளை ஒரு மரியாதை உடன் பார்ப்பதைக் கண்டு யோசனையை தத்தெடுத்தான்.
சங்கமித்ரா யாருடனும் சிரித்துப் பேசவில்லை. அதற்காக விலகிச் செல்லவும் இல்லை.
இடது கையில் இருந்த காயமும் ஆறி இருக்க கட்டுக்களை அகற்றிவிட்டு, அலுவலக கேபில் வந்து சென்று கொண்டிருந்தாள்.
அலுவலகத்தில் தன் வேலை நிமித்தம், தகவல்களை சேகரித்து, பட்டியலிட்டு அதனை கோப்புகளாக மாற்றி, ஆவணங்களை எல்லாம் கணிப்பொறியில் சேமித்து செய்பவற்றை திருந்தச் செய்தாள் சங்கமித்ரா. ஒரு 'சூப்பர் பாஸ்ட் கம்ப்யூட்டர்' போல் அவள் செய்யும் வேலைகளை பார்த்து அந்த அலுவலகமே அதிர்ந்தது.
ஆனால் ஆராவிற்கோ, "மிஸஸ் ஆராவமுதன்" என்று நிமிர்வுடன் பேசும் அவள் திமிரை அழிக்க வேண்டும் என்ற ஆணவமே மித மிஞ்சி இருந்தது. அதனுடன் அவள் கடந்த காலத்தையும் அவள் வாயால் வர வைக்க வேண்டும் என்ற சவாலும் இருந்தது. ஓரடி கீழ் இறக்குவதற்குள், ஆறடி உயர்ந்து நிற்பவளை எதிர் நின்று தாக்கும் ஆயுதம் எது? எது? என்று யோசித்தான்.
இரும்பை வளைக்க நெருப்பு. பாவையை வளைக்க அவன் எடுத்துக் கொண்ட பூ 'அன்பு'. ஆனால் ஆரா உணராத ஒன்று. என்றும் அன்பில் மட்டுமே தப்பாகும் கணக்கு. ஒன்றை கொடுத்தால், பதிலுக்கு ஒன்றாய் நிற்காமல் பத்தாய் திரும்பி வரும் என்று.
உறுதியாய் இருப்பதில் தன்னை இரும்பு என்று அவன் நினைத்தான். சங்கமித்ராவோ வளைந்து நெளிந்து சென்றாலும் உருகிய திரவ நிலையில் நிற்கும் உலோகமாய், பாதரசமாய் அவனுக்கு குறையாத உறுதியோடு இருந்தாள்.
அலுவலகத்திற்கு தன் காரில் வந்து கொண்டிருந்தவன், அந்தக் கடையை பார்த்ததும் காரின் வேகத்தை குறைத்து விட்டு, எடுத்த முடிவை செயலாக்க கடையனுள் நுழைந்தான். தன் கையில் மிதந்த அந்தப் பொருளைப் பார்த்து இதழில் மர்மப் புன்னகை ஏளனமாய் மலர்ந்தது.
அலுவலகத்திற்குள் நுழைந்தவன் சங்கமித்ராவை தன்னறைக்கு வரும்படி அழைத்தான். கதவை நாசூக்காக தட்டி விட்டு அவன் அனுமதி கிடைத்ததும் உள்ளே நுழைந்தாள். அவளை மேலிருந்து கீழாக உற்று நோக்கினான். தன்னைக் கவரும் எந்த அம்சமும் அவளிடம் இருப்பதாக அவனுக்கு தெரியவில்லை.
அந்தோ பரிதாபம்! ஜவுளிக்கடை பொம்மை பார்ப்பதற்கு கவர்ச்சியாக இருக்கும். ஆனால் கர்ப்பக் கிரகத்தில் இருக்கும் சிலையோ கருங்கல்லாக இருந்தாலும், கையெடுத்து வணங்கத் தோன்றும்.
தான் வாங்கிய பொருளை மேஜை மீது வைத்தான். அவனது கட்டளைக்காக காத்திருந்தவள், அவன் எதுவும் பேசாமல் இருக்கவும், "கிளம்பலாமா?" என்றாள்.
"இது உனக்குத்தான்" என்றான்.
" தேவைப்படாது... "
" பாட்டி அழைப்பார்களே... அதற்காகவாவது இந்த அலைபேசியை எடுத்துக் கொள் "
" பாட்டியை நான் சமாளித்துக் கொள்கிறேன் "
" பாட்டியின் பேரன் நானும் அழைப்பேனே! எப்படி சமாளிப்பாய்? " என்றான் தன் பெருவிரலை தாடையில் தேய்த்துக்கொண்டு.
பேசியவனை கூர்மையாய் பதில் பார்வை பார்த்தாள் சங்கமித்ரா.
"இல்லை அலுவலக ரீதியாக எந்த நேரம் வேண்டுமென்றாலும், உன்னிடம் பேச வேண்டும் என்று நினைப்பேனே! அலைபேசி இல்லாமல் உன்னை எவ்வாறு உடனே தொடர்பு கொள்ள முடியும்? அந்த நிலைமையை எப்படி சமாளிப்பாய்? என்று கேட்டேன்" என்றவன் மேஜை மீது இருந்த புது அலைபேசியை அவள் கையில் ஒப்படைத்தான்.
" மும்பையில் இருக்கும் உன் உறவினர்களிடம் நீ எப்பொழுது வேண்டுமானாலும் பேசிக்கொள்ளலாம்" என்றான் அர்த்தம் பொதிந்த பார்வையுடன்.
"நான் யாரிடமிருந்தும், எந்த பொருளையும் இலவசமாக வாங்குவதில்லை"
" உன் வேலைக்கான சம்பளத்திலிருந்து பிடித்துக் கொள்ளப்படும்.எடுத்துக்கொள்!" அவன் குரலில் நீ எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டளையே இருந்தது.
"ம்... " என்று அலைபேசியை கையில் எடுத்தவளின் விரல்கள் தொடுத்திறையில் வளைந்து நெளிய, எதிரே இருந்தவனின் உள்ளமோ பரபரத்தாலும் வெளியே அமைதியாக இருப்பது போல் காட்டிக் கொண்டது.
சங்கமித்ராவோ யாருக்கும் அழைப்பு எடுக்காமல், " நன்றாக இருக்கிறது " என்ற சொல்லோடு முடித்துவிட்டு தன்னிடத்திற்கு நகர்ந்தாள்.
அன்று இரவு, அளவோடு பேசும் சங்கமித்ராவை அளவில்லாமல் பேசி தேனம்மா கதறவிட்டார். தன் பேரன் அப்படி, இப்படி என்று அவர் புகழ்ந்த புகழ்ச்சியில் தலை வலிக்க ஆரம்பித்தது சங்கமித்ராவிற்கு.
அறையை விட்டு வெளியேறி பின்பக்க வாசலைத் திறந்து, அங்கிருந்த, அழகாக செதுக்கப்பட்ட கல் இருக்கையில் அமர்ந்தாள்.
இருளில் காற்று தழுவத் தொடங்கியதும், சற்றே தன் தலைபாரம் குறைந்தது போல் உணர்ந்தாள். இலகுவாக கால்களை தொங்க விட்டிருந்தவள், மெல்ல தன் கால்களைத் தூக்கி கல் இருக்கையின் மேல் வைத்து, கைகளால் காலினை கட்டிக் கொண்டு முழங்காலில் தன் நாடியை குற்றி மோனநிலையில் ஆழ்ந்தாள்.
கிசுகிசுப்பான சத்தம் கேட்டதும், எச்சரிக்கை உணர்வு மேலோங்க, தலையைக் கூட திருப்பாமல் கண்களைத் திறந்து விழிகளை உருட்டினாள்.
அவள் அமர்ந்திருந்த திசையில் சற்று தொலைவில், ஏகாந்த இருளில், யாருமற்ற தனிமையில் நல்லான் தன் மனைவி நாயகியுடன் பேசிக் கொண்டிருந்தான்.
அரை நிலவானது ஒளியை லேசாக கசிந்தபடி இருக்க, நாயகியின் கரம் பிடித்த நல்லான், "பாத்திரம் தேய்த்து தேய்த்து உன் கைகள் இப்படி கரடு முரடாகப் போய்விட்டதே" என்று உண்மையான மன வருத்தத்துடன் பேசி அவள் கைகளில் தன் இதழ் பதித்தான்.
"ஓ... ஐயாவுக்கு நினைப்பு அப்படி போகுதா? கரடு முரடான உன் மீசை குத்தி குத்திதான் இப்படி போச்சு" என்று நாயகி செல்லமாக சலித்துக் கொண்டாள்.
" அடிக்கள்ளி! அப்புறம் எப்படி மத்த இடமெல்லாம் மென்மையாய் இருக்கு? " என்றான் விஷமப் புன்னகையுடன்.
"என்னை வேராய் காக்கும் புருஷன் இருக்கும் வரைக்கும், நான் பூவாய் மலர்வேன்" என்றாள் வெட்கப்பட்டுக் கொண்டே.
அவளின் வெட்கம் கண்டு சிரித்த நல்லான் அவள் நெற்றியில் தன் இதழ் பதித்து நிமிரும் போது, அவள் நெற்றியில் திலகம் இல்லாததைக் கண்டு கோபம் கொண்டான்.
" நாயகி உன்னை எத்தனை முறை கண்டித்து இருக்கிறேன். உன் நெற்றியின் குங்குமம் எந்தன் அடையாளம். உன்னிலிருந்து என்னை பிரிக்காதே" என்றான் குரல் உயர்த்தி.
" ஐயோ! வேலை முடிந்து விட்டது என்று முகம் கழுவும் போது அழிந்துவிட்டது. அதற்கு இத்தனை பாடா?" என்று முறைத்தாள்.
" உன் குங்குமம் கலைந்தால் அதற்கு என் இதழும், மார்பும் மட்டுமே காரணமாய் இருக்க வேண்டும்" என்று கூறியவன் நாயகியை இழுத்து அணைத்து நெற்றியில் மீண்டும் முத்தமிட்டான் தன் உரிமையை நிலைநாட்டி.
மன்னவனின் அன்பில் சிலிர்த்தவள், அவன் மார்போடு ஒன்றினாள். அடைக்கலமானவளை தன் கைகளில் அள்ளிக் கொண்டு தங்கள் வீட்டிற்குள் நுழைந்தான்.
முழங்காலை பற்றி இருந்த சங்கமித்ராவின் கை விரல்கள் தாளமிட ஆரம்பித்தது. பின் மெது மெதுவாய் மேல் எழுந்து அவள் நெற்றியை வருடியது. இதழ் சுமந்த சோகப் புன்னகையுடன், தன் கழுத்தினை வருடிக் கொண்டாள். வாழ்வை ரசிக்க வேண்டும் என்பவளின் வாழ்வை, விதி பசித்துப் புசித்ததை எண்ணி சோகம் மீறிச் சிரித்தாள்.
அவள் இழந்தவை எல்லாம் வானில் இடியாய் மாறி இடிக்க ஆரம்பித்தது. அரை நிலவும் மேகத்திற்குள் மறைந்து, ஒளிந்து ஓடியே போனது. செம்மேகங்கள் ஒன்று கூடி தூறல் போட்டது.
மின்னல் வெட்ட வெட்ட, காதில் கேட்ட இடியின் ஒலியோடு, "மித்திரை... மித்திரை..." என்று அவள் காதில் ஒரு குரல் கதற சட்டென்று உடல் விறைக்க எழுந்து நின்றாள்.
சட சடவென மழை பொழிய, உடல் நனைந்து நின்றாள். அந்தக் குரல் அவளை விடாது துரத்த, "இதோ இதோ..." என்று ஓடினாள்.
மாடியில் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்த ஆரா, ஈரம் சொட்டச் சொட்ட சங்கமித்ரா கீழே அவளறைக்குள் ஓடுவதைக் கண்டான்.
" அப்புறம் பேசுகிறேன்" என்று கூறிவிட்டு, மறுபுறம் பதில் வரும் முன், அலைபேசியின் அழைப்பை துண்டித்தான்.
தன் அறைக்குள் ஓடிய சங்கமித்ராவோ, சுவற்றோடு பதிக்கப்பட்டு இருந்த அலமாரியின் கதவைத் திறந்து பரபரவென அந்தப் பொருளை தேடினாள். அவளிடம் இருந்த சொற்ப உடைகளும் திசைக்கு ஒன்றாய் சிதறின.
" ப்ளீஸ் மித்திரை... " என்ற குரல் பல நாட்களுக்குப் பிறகு தன் காதில் கேட்க, தன் தேடலின் வேகத்தை அதிகப்படுத்தினாள். அந்த சாயம் போன பை அவள் கைகளில் அகப்பட்டது.
அதனைப் பிரித்து அதனுள் இருந்த பொருளை எடுத்து, விழிகள் தெறிக்க பார்த்தாள். எப்பொழுதும் ஆசையாய் தடவிக் கொடுக்கும் அந்த பொருளை, ஆவேசமாய் எடுத்து தன் கால்களில் அணிந்தாள்.
அவள் கைகள் பட்டதும் உயிர் பெற்ற அந்த நாட்டியச் சலங்கை ஜல் ஜல் என்று ஆரவார ஒலி எழுப்பி தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தது. தன் அறையில் இருந்து, மறுபடியும் மழையை நோக்கி ஓடினாள்.
அவளின் நடவடிக்கைகளை கவனித்தவன், நிதானமாக ஒவ்வொரு படியாக இறங்கினான்.
பேரிறைச்சலுடன் மழை பொழிய, கால்களில் கட்டிய சலங்கையுடன், உடுத்திய புடவையை இழுத்து சொருகியவாறு நின்றாள். இன்றுவரை உணர்ச்சிகளைத் தொலைத்த அந்த கண்களில் ஒரு பரவசத்துடன் வானம் பார்த்து சிரிக்க ஆரம்பித்தாள்.
கண்களை மூடி கைகளில் அபிநயம் பிடித்தபடி நின்றாள். வானில் இருந்து சிந்திய அமுத மழை, அவளின் உச்சி முதல் பாதம் தொட்டு வழிந்தோடியது. இருளில் பளீரிட்ட மின்னலின் ஒளியில், அவள் நின்ற நிலையில் ஆராவின் மனது தத்தித் தாவ ஆரம்பித்தது.
சில்லிட்ட உடலில், இருக்கமாய் மூடி இருந்த அவளின் இதழ்கள் மெல்ல அசைய ஆரம்பித்தது. அடிவயிற்றிலிருந்து ஏக்கம், பாசம், துக்கம் கலந்த அவளின் உயிர்க் காற்று இசையாய் வெளிவந்து காற்றில் கரைய ஆரம்பித்தது.
"தத்தித்தோம்.வித்தைகள் கற்றிட
தத்தைகள் சொன்னது தத்தித்தோம்...
தித்தித்தோம்தத்தைகள் சொன்னது
முத்தமிழ் என்றுளம் தித்தித்தோம்...
சிந்தித்தால் தாளம் தானே வருகிறது.
தாளம் ஒரு சுகம்! ராகம் ஒரு சுகம்!
ரெண்டும் இனைகிறது.
கண்ணில் பேசும் சங்கீத மொழியது
கண்ணன் அறிய ஒன்னானதா...
உன்னைத் தேடும் ஏக்கத்தில் இரவினில்
கண்ணுக்கு இமைகள் முள்ளாவதா?
குழலினில் வராத ராகம் யாவுமே
குரலினில் வராதாதா?
எந்தன் மனமிது எந்தன் நினைவிது
என்றே புரிகிறதா.."
அதுவரை கைகளைக் கட்டிக்கொண்டு கதவினில் சாய்ந்த படி அவளை பார்த்துக் கொண்டிருந்தவன், அவள் குரலில், அவள் ஆடிய நடன அசைவில், அவன் அனுமதி இன்றி, அவன் கால்கள் அவளை நோக்கி நகர ஆரம்பித்தது.
பாவையோ தரையில் தேங்கிய மழைத்துளிகளை நாற்புறமும் சிதறச் செய்தாள் தன் நாட்டிய அசைவுகளால். காற்றின் சுழற்சியோடு அவள் நாட்டியத்தின் வேகச்சுழற்சியும் சேர்ந்து கொண்டு தன் மனதின் வலிகளை மழை நீரில் கரைத்துக் கொண்டிருந்தாள்.
"வண்ணத் தோகை எண்ணங்களிவையென
மின்னும் விழிகள் சொல்லாததா?
கண்ணன் மார்பில் பொன்னூசலாடிட
எண்ணும் இளமை பொல்லாததா?
யமுனையில் வராத வெள்ளமுந்தனின்
கருணையில் வராததா?
காதலொருவித யாகம்
என் குரல் காதில் விழுகிறதா?"
என்று பாடியவள் தன் கைகளை முன்னே நீட்டி இருக்க, அந்த உள்ளங்கைக் குழியில் மழைநீர் தேங்கி இருக்க, சிலையென நின்றாள்.
அவள் பால் எழும் புதுவித உணர்ச்சிகளை அடக்கப்படாத பாடுபட்டவன், பெருவிரல் நகத்தினை கடித்து தன் உணர்வை அடக்க முயன்றான். விரல்களில் உவர்ப்புச் சுவை தோன்ற, துளிர்த்த உதிரத்தை "ச்சை..." என்று உதறிக் கொண்டே அவளை நோக்கி நகர்ந்தான்.
அவள் கையேந்திய மழை நீரை தன் கை கொண்டு தட்டி விட, மழை நீர் அவள் முகத்தில் பட்டுத் தெறித்தது.
தன் தலையைச் சிலுப்பி நீரை சிதறச் செய்தாள் மோகனமாய். பாடிய வேகத்தில், ஆடிய தேகத்தில் அழுத்தம் அறுபட்டு ஓட, நீண்ட பெருமூச்சுடன் அவனைப் பார்த்தாள்.
"என்ன? பாட்டுப் பாடி, ஆட்டமாடி மயக்குகிறாய்!" என்றான் தன்னிலையை மீட்டுக் கொண்டவன்.
" மயக்குவதற்கு நான் இருளில் ஆட வேண்டிய அவசியம் என்ன? தெருவில் ஆடினாலே போதுமே? " என்றாள் உணர்வற்ற குரலில்.
"இஸ் இட்? சரி இருளில் ஆட வேண்டிய அவசியம் தான் என்ன?"
" அது உங்களுக்கு அவசியம் இல்லாதது" என்றாள் தீர்க்கமாக.
"என் வீட்டில் என்றும் என் விருப்பமே. என்னை மறுத்து பேசினால்..." என்றான்.
"பேசினால்..." என்றாள் தன் நெஞ்சினை அச்சம் இல்லாமல் நிமிர்த்தி.
மழை நீரோடு ஒட்டிக்கொண்ட அவள் முன் நெற்றிக் கூந்தலை தன்விரல் கொண்டு விலக்கினான்.
அவன் விரலோடு கசந்து இருந்த உதிரத் துளிகள், அவள் நெற்றியில் மங்களக் குங்குமமாய் ஒட்டிக்கொண்டது. அவள் ஏங்கியது, அவள் அறியாமலேயே அவள் கை சேர்ந்தது.
ஆடிய வேகத்தில் வெளியே வந்த திருமாங்கல்யம் தகதகவென மழை நீரில் பட்டு, மின்னல் ஒளியில் ஜொலிக்க, அதனைக் கண்ட ஆராவின் கண்கள் மின்னியது.
அடுத்த நொடி அவளை அணைத்திருந்தான் இதழ் சுமந்த வெற்றிப் புன்னகையுடன்.
சிறை எடுப்பாள்...